உங்கள் மேல் என்றும் மாறாத அன்பு வைத்திருக்கும் வால்பையன் எழுதும் மடல்,
தங்களின் கடைசி பதிவில் பாலா,அமீர் மற்றும் சசியின் படங்களை பற்றி சிலாகித்து எழுதியிருந்தீர்கள், நானும் பின்னூட்டம் இட்டிருந்தேன், அடி மனதின் வன்மங்களை நினைவுக்கு கொண்டு வரும் படங்கள் அவை என்று, என் மீது உள்ள அன்பின் காரணமாக முதலில் என்னுடன் ஒத்து போகிறேன் என்று சொன்னாலும், பின்னாள் ஒரு பின்னூட்டதில் நாம் இந்த இயக்குனர்களை பாராட்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
எதை பாராட்டவேண்டும், பாராட்ட அதிலிருந்து நாம் எதை எடுத்து கொள்வது,
பழிவாங்குதலையா, துரோகத்தையா, காதலுக்காக உயிர்விடுவதையா?
உண்மையில் இது தான் தமிழ் சமூகதின் நிலை என்றால் இதற்காக நாம் வெட்கம் தானே படவேண்டும். ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா?
**************
ஒரு குடும்பம், கணவன், மனைவி மூன்று பெண் குழந்தைகள்.
குடும்ப தலைவன் புட்பால் விளையாட்டு வீரன். ஒரு விபத்தில் அவன் கோமா நிலைக்கு செல்கிறான். 6 மாத சிகிச்சைக்கு பின் அவனுக்கு நினைவு திரும்புகிறது, ஆனால் அவன் யார் என்பதை மறந்து விடுகிறான். அவன் உடனிருந்து பார்த்து கொண்ட மனைவியோ, அவனுக்கு நினைவு வரும் நான் பார்த்து கொள்கிறேன் என்று வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.
வீட்டில் அவனால் எதையும் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை,
அவனது மகள்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறான். அவனது மனைவியோ குழந்தைகளை சமாதானப்படுத்தி வைக்கிறாள். தினம் பிரச்சனை, ஒருநாள் அது முற்றி ஒரு மகளை அடித்து விடுகிறான். அவனது மனைவி மருத்துவமனையில் பேசி மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பி விடுகிறாள்.
சிறிது நாட்களுக்கு பின் வீடு திரும்புகிறான் கணவன், குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொஞ்சுகிறான், மனையிடம் அன்பாக நடந்து கொள்கிறான். இன்றிரவு மனைவி அவனது உடைகளை தற்செயலாக சோதனையிடும் பொழுது அவன் அனைத்தையும் எழுதி வைத்து செய்கிறான் என்பதை அறிகிறாள். முழுமையாக குணமடையாத கணவனுடன் தான் குடும்பம் நடத்துகிறோம் என்பதை அறிகிறாள்.
ஒருமுறை வீட்டில் யாருமில்லாத சமயம் அவனது மூத்த மகளின் காதலன் வருகிறான்.
அவனிடம் பேசுவதை அவன் மூத்த மகள் மறைந்திருந்து பார்க்கிறாள். தந்தையின் அணுகுமுறை அவளுக்கு பிடித்திருக்கிறது, தன் தந்தை மீண்டும் கிடைத்து விட்டதாக நம்புகிறாள். அவளின் பள்ளியிலிருந்து ”கோமாவிலிருந்து தன்நம்பிக்கையுடன் திரும்பிய மனிதர்” என்னும் தலைப்பில் பேச அழைப்பு வருகிறது. மனைவிக்கோ இவனால் பேச முடியும் என நம்பிக்கை இல்லை. அவனும் எழுதி வைத்து கொண்டு தான் பேசுகிறான்.
ஒரு இடத்தில் பேப்பர்கள் சிதற, எங்கே பேச்சை நிறுத்தினோம் என அவனுக்கு மறக்கிறது. பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறான்.
மனைவிக்கோ மனபுழக்கம் அதிகமாகிறது, குழந்தைகள் அவனை நம்புகிறார்கள்,
அவனுடய பழைய புட்பால் டீமிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் விளையாடும் விளையாட்டுக்கு இவனுக்கு அழைப்பு வருகிறது. மனைவி வேண்டாம் என்கிறாள், குழந்தைகள் அவனுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கிறார்கள்,
விளையாட்டு மைதானம், முதலில் சிறிது சொதப்பினாலும், விளையாட்டின் விதிமுறைகளை அறிந்து கொண்டு, தனது ஆழ்மனதில் இருக்கும் விளையாட்டு திறமைகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறான். குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மனைவி அப்போதும் நம்ப மறுக்கிறாள்.
தனது நிலையை கணவன் உணர்த்த முயற்சிக்கிறான்.
”அவன் இறந்து விட்டான், என்னில் அவனை தேடாதே, என்னை நானாக வாழவிடு”
என்கிறான்.
மனைவியோ தான் மற்றோரு ஆணுடன் வாழ்வது போல் உணர்வதாக சொல்கிறாள்.
கணவன் வீட்டை விட்டு செல்கிறான், எங்களை விட்டு தனியாக வாழ முடியாது என்று சொல்கிறாளே தவிர அவனை தடுக்கவில்லை மனைவி. அவன் சென்ற பிறகு பாத்ரூமில் தண்ணீரை திறந்து விட்டு வாய் விட்டு அழுகிறாள்.
மூத்த மகளின் நிச்சியம் வருகிறது, மகள் தந்தையையும் அழைக்கிறாள்,
வருகிறான் , எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொள்கிறான், அவனது நிலையை தெரிந்து கொள்ள விரும்பிய மனைவி நாம் டேட்டிங் போகலாம் என்கிறாள்.
போகிறார்கள், தனது கடந்த காலதை முழுவதும் மறந்த அவன் தனது மனையிடமே அதை கேட்கிறான். இரவு வீட்டிற்கு வந்து விட்டு செல்கிறான்.
மகளின் திருமணம் வருகிறது, இவனும் வருகிறான். திருமணம் முடிந்து பார்டியில் பேசுகிறான்.
“சிறுது நாட்களுக்கு முன் எனது மகளை எனக்கு யாரென்று தெரியாது, ஏன் உங்களை கூட தெரியாது, இருந்த போதிலும் என் மீது அன்பு செலுத்தி என்னை பராமரித்தது என் அன்பு மனைவி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றாள், அதே போல் எனது மகளும் அவளது கணவனிடம் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்”
இரவு கிளம்புகிறான். மனையிடம் இன்னொரு நாள் எனக்கு டேட்டிங் தருவாயா என்று கேட்கிறான்.
கதை முடிவடைகிறது
the stranger, i married the movie
*************************
இந்த கதையில் எங்கேயேனும் வன்முறை வருகிறதா?
துப்பாக்கி சத்தம் கேட்கிறதா? இரத்தவாடை அடிக்கிறதா?
பொறுக்கி போட்டாலும் பத்தே கேரக்டர்கள் தான்!
மற்றவர்கள் எல்லாம் சில வினாடிகளே வருபவர்கள்!
ஒரு போஸ்ட்கார்டில் எழுதிவிடலாம் மொத்த வசனதையும், உணர்வுகளே பேசுகிறது,
யாரும் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை, யாரிடமும் யாருக்கும் கோபம் இல்லை,
மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள், ஹீரோயிசம் இல்லை, காமெடி இடைசொருகல் இல்லை, சோகத்தை காட்ட பாடல்கள் இல்லை, நம் கண்முண்ணே வாழ்வது போன்ற காட்சியமைப்புகள். இவை மற்ற மொழிகளுக்கும் சாத்தியமற்ற தன்மை இல்லையே!
தவறு எங்கே நடக்கிறது, கோமா ஸ்டேஜில் இருக்கிறான் என்பது கரு,
அந்த புள்ளியை மட்டும் வைத்து ஃப்ரெண்ட்ஸ் என்னும் ஒரு குப்பை வந்தது,
இன்னும் நிறைய குப்பைகள் வந்திருக்கலாம். இந்த குப்பைகளை கொட்டும் இயக்குனர்களை நாம் பாராட்டவேண்டுமா, மன்னிக்கவேண்டும் கடுமையான சொல்லுக்கு குப்பை பொறுக்கிகள் தான் அவர்களை பாராட்ட வேண்டும்,
ஒரு ஆங்கில படத்தை சிலாகித்து சொல்கிறேன் என நினைக்க வேண்டாம்,
நமது பாராட்டுகளுக்கு உண்மையில் அவர்கள் தகுதியானவர்களா என யோசிக்க மட்டும் சொல்கிறேன். இயக்குனர்களை ஊக்கப்படுத்துவோம் நல்ல சினிமா தருவதற்காக, அரைத்தமாவையே அரைப்பதற்கு வேண்டாம்
வயதுக்கு மூத்தவ்ர் என்ற முறையில் இந்த சிறுவன் எதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
86 வாங்கிகட்டி கொண்டது:
வந்துட்டேன்..படிச்சிட்டு வந்து வச்சிகறேன்.. கச்சேரிய.
ம்... நடக்கட்டும், நடக்கட்டும்...
வாலு, நீங்க தமிழ்நாட்டுல இருக்க வேண்டியவரே இல்ல. என்ன ஒரு விசய ஞானம், என்ன ஒரு உலக சினிமா பத்தின அறிவு.... கலக்குப்பா கலக்கு.
வாலு, இது தான் ஆரம்பமா?
நல்ல கதை. இந்த மாதிரி நம் இயக்குநர்களும் படம் எடுப்பார்களா?
அருண் said...
வாலு, நீங்க தமிழ்நாட்டுல இருக்க வேண்டியவரே இல்ல. என்ன ஒரு விசய ஞானம், என்ன ஒரு உலக சினிமா பத்தின அறிவு.... கலக்குப்பா கலக்கு.
ஆமா அருன்..அப்படியே தூக்கிட்டு போய் தான்சானியா பக்கத்துல போட்டுட்டு வந்துட்டோம்னா...அந்த நாடும் உருப்படும்.நாமளும் நிம்மதியா இருக்கலாம்..
வணக்கம் வால் பையன்
எல்லாம் சரி நர்சிம்-ன் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருந்தால் என்னைப்பொன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்
அப்புறம் பாலா,அமீர் மற்றும் சசியின் எந்த படங்களைப்பற்றி எழுதி இருந்தீர்கள்
நன்றி
இராஜராஜன் (ஞாபகம் இருக்கும் என நிணைக்கின்றேன்)
தினமும் இப்படியே ஒரு மூணு படத்தோட கதையை சொன்னிங்கனா எங்களுக்கு dvd வாங்கும் பணம் மிச்சம்.
நன்றி...................
அருண் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை, கருத்துக்கள், நியாயம், வழிமுறைகள்.
நமக்கு சரி என்று படுவது ஒருவருக்கு தவறாக படலாம், நாம் சரி என்று நினைத்து செய்வது மற்றவருக்கு தவறாக படலாம்.
கற்பழிப்பு செய்தவனை கண்ட துண்டமாக வெட்டி போட வேண்டும் கூறுபவர்களும் இருக்கிறார்கள், அவ்வாறு செய்வது தவறு அவருக்கு சிறு தண்டனை கொடுத்து மன்னிப்பு அளிக்கலாம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இருவருக்கும் அவரவர் பார்வையில் நியாயம்.
அவரவர் எண்ணங்கள் அவரவர் நியாயங்கள். அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்க முடியாதல்லவா! அப்படி இருக்கிறது என்றால் நாட்டில் தீவிரவாதம் ஏன்? கொடுஞ்செயல்கள் ஏன்?
நம் ஊரிலும் "மொழி" "பூ" போன்ற அமைதியான படங்களை எடுக்கிறார்கள், அனைவருமே ஒரே மாதிரி எடுத்தால் பார்ப்பவர் எவர்.. அனைவருமே நல்லவிதமாக அமைதியான முறையில் சிந்தித்தால் வன்முறை, தீவிரவாதம் என்ற சொல்லே தேவையில்லையே! பிறகு இவர்களும் இதை போல வன்முறை படங்களை ஏன் எடுக்க போகிறார்கள். அதை பார்க்க ரசிகர்கள் ஏன் இருக்க போகிறார்கள்.
அனைத்தும் கலந்து இருக்க வேண்டும், அதன் வரைமுறை தாண்டாமல் என்பது என் தனிப்பட்ட கருத்து.
அன்புடன்
கிரி
ஏம் பிரதர்..தமிழ் நாட்டுலதான் இருகிங்களா..இல்ல..?
நமது கலாச்சாரம் என்ன..வாழ்க்கை முறைகள் என்ன..வசதி வாய்ப்புக்கள் மற்றும் வறுமைகோடும் அப்படி ஒன்று இருந்தால் அதற்க்கு கீழும் வாழ்கின்ற மக்களின் அறியாமை எவ்வளவு..அவர்களின் ரசனை என்ன....
இது எதுவுமே கணக்கில் எடுத்துக்கொள்லாமல் சினிமா மட்டும் பாரின் ரேஞ்சுக்கு எடுக்கனும்னு சொன்னா....
சினிமாக்காரன் எல்லாம் போண்டியாய்டுவாங்க.
சினிமா ரசிகர்களில் யாரை கணக்கில் எடுத்துக்கொண்டு படம் எடுக்கிறார்கள் என்று பார்த்தாலே உங்களுக்கு புரியுமே..அது ஒரு வியாபாரம்.மேலும் அதில் மக்களினுடைய கலை.. ரசனை..தன்னிடமில்லாத., தனக்கு கிடைக்காத வசதி வாய்ப்புக்களை சினிமா ஹீரோ மூலமாக கொஞ்ச நேரமாகிலும் அனுபவித்துவிட்டு போகவே செலவு செய்து வருகிறார்கள்.
வருகின்றவர்களை திருப்தி படுத்தி காசு பார்ப்ப்தே இங்கே அனேகரின் நோக்கம்.
சம்பாரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை..ஒரு குறிப்பிட்ட மக்களினுடைய வாழ்வனுபவத்தை படமாக எடுத்தேதீரவேண்டுமெண்ற உத்வேகத்துடன் செயல்படும் ஒரு சிலரையும் கொச்சை படுத்தக்கூடாது எனபதுதான் என் எண்ணம்.
வண்முறை எங்குதான் இல்லை..?
இந்த உலகம் முழுதும் மலர்களாலும் வண்ணங்களாலும் இனிய இசையாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ..?
எல்லோரும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இனிமையாக வாழ்ந்து வருவதாக என்னமா...?
//ஆமா அருன்..அப்படியே தூக்கிட்டு போய் தான்சானியா பக்கத்துல போட்டுட்டு வந்துட்டோம்னா...அந்த நாடும் உருப்படும்.நாமளும் நிம்மதியா இருக்கலாம்..//
கும்க்கி அண்ணே, நமக்கு பொழுது போக வேணாமா?
அடுத்த சீசன் தொடங்கி வக்கிறீங்க போல :))
சரியா சொல்லியிருக்கீங்க அண்ணே...
நாமளும் இதே கருத்துல உள்ளவங்க தான்...
வாழ்த்துகள் !
நல்ல பதிவு தான்...குப்பைகளை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பாருங்கள்..
இங்கேயும் நிறைய பாலசந்தர்கள் உண்டு..
//ஏம் பிரதர்..தமிழ் நாட்டுலதான் இருகிங்களா..இல்ல..?
நமது கலாச்சாரம் என்ன..வாழ்க்கை முறைகள் என்ன..வசதி வாய்ப்புக்கள் மற்றும் வறுமைகோடும் அப்படி ஒன்று இருந்தால் அதற்க்கு கீழும் வாழ்கின்ற மக்களின் அறியாமை எவ்வளவு..அவர்களின் ரசனை என்ன....
இது எதுவுமே கணக்கில் எடுத்துக்கொள்லாமல் சினிமா மட்டும் பாரின் ரேஞ்சுக்கு எடுக்கனும்னு சொன்னா....
சினிமாக்காரன் எல்லாம் போண்டியாய்டுவாங்க//
ஓஓ அப்ப ஈரான் நாட்டு மக்கள் எல்லாம் வசதி வாய்ப்புகளோடும் வறுமை கோட்டுக்கு மேலையும் தான் இருக்கிறாங்களா கும்க்கி சார்...
தொலைக்காட்சி - மெகா தொடர திருத்த ஏதாவது வழி.... யாருக்காவது கடிதம் கிடையாதா ...
//கும்க்கி said...
வந்துட்டேன்..படிச்சிட்டு வந்து வச்சிகறேன்.. கச்சேரிய.//
கச்சேரி களை கட்டனும்
//ஜோதிபாரதி said...
வாலு, இது தான் ஆரம்பமா?//
கண்டிப்பாக நீங்கள் கூட யாராவது நண்பருக்கு கடிதம் எழுதலாம்
//அருண் said...
வாலு, நீங்க தமிழ்நாட்டுல இருக்க வேண்டியவரே இல்ல. என்ன ஒரு விசய ஞானம், என்ன ஒரு உலக சினிமா பத்தின அறிவு.... கலக்குப்பா கலக்கு.//
இதுக்கு நீங்க என்னை நேரடியாகவே திட்டியிருக்கலாம்
//சுல்தான் said...
நல்ல கதை. இந்த மாதிரி நம் இயக்குநர்களும் படம் எடுப்பார்களா?//
அத்தி பூத்தாற்போல் எப்போதாவது எடுக்கிறார்கள்
//வனம் said...
வணக்கம் வால் பையன்
எல்லாம் சரி நர்சிம்-ன் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருந்தால் என்னைப்பொன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்//
வணக்கம் தொடுப்பு கொடுத்துவிட்டேன்.
//அப்புறம் பாலா,அமீர் மற்றும் சசியின் எந்த படங்களைப்பற்றி எழுதி இருந்தீர்கள்//
அவர்கள் எடுத்த படங்களில் எந்த படங்களில் வன்முறையும், துரோகமும் இல்லையோ அதை தவிர்த்து,
தேடி பாருங்கள் கிடைக்காவிட்டால் நான் பொறுப்பல்ல
//இராஜராஜன் (ஞாபகம் இருக்கும் என நிணைக்கின்றேன்)//
மன்னிக்கவும் மிகவும் கேவலமான ஞாபகசக்தி கொண்டவன் நான், நீங்களே சொல்லிவிடுங்களேன்
//மதுரைநண்பன் said...
தினமும் இப்படியே ஒரு மூணு படத்தோட கதையை சொன்னிங்கனா எங்களுக்கு dvd வாங்கும் பணம் மிச்சம்.
நன்றி...................//
எனக்கும் ஆசை தான்,
நேரம் கிடைக்கனுமே!
வணக்கம் வால் பையன்..
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்.
எனக்கு தெரிந்த சினிமா பற்றி சொல்லியுள்ளேன்.
நிறை / குறை சொல்லவும்.
//
//ஜோதிபாரதி said...
வாலு, இது தான் ஆரம்பமா?//
கண்டிப்பாக நீங்கள் கூட யாராவது நண்பருக்கு கடிதம் எழுதலாம் //
நானும் கடிதம் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. நான் யாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களை அடிக்கடி சந்திக்கிறேன், தொலைபேசியில் பேசுகிறேன். அடிக்கடி சந்திப்பவருக்குக் பகிரங்கக் கடிதம் எழுதினால், ஏங்க ஜோதிபாரதி, இப்பதானே போன் பண்ணுனீங்க கேட்டிருக்கலாமே? நேற்றுதானே நாம காப்பிக் கடையில ஒன்னா டீ சாப்பிட்டோம் அப்பல்லாம் கேட்காமல் இப்படி பகிரங்கப் படுத்துகிறீர்களே என்று கேட்டால்......! கொஞ்சம் சங்கோஜமா இருக்குமல்லவா. அதேன்! வேறொன்றுமில்லை!!
நன்றி கிரி
உங்கள் கருத்துகளுடன் ஒத்து போகிறேன்,
ஆனால் இந்த பதிவின் காரணம் வேறு,
நண்பர் நர்சிம் அவர்களாஇ கொண்டாட சொல்கிறார், எனது கேள்வி ஏன் கொண்டாட வேண்டும்.
எல்லாம் கலந்து கட்டி வருவது சினிமா,
நீங்கள் சொன்னது போன்ற சில படங்கள் சினிமாவிலும் யதார்த்தம்
//சினிமா மட்டும் பாரின் ரேஞ்சுக்கு எடுக்கனும்னு சொன்னா....
சினிமாக்காரன் எல்லாம் போண்டியாய்டுவாங்க.//
அண்ணே பாரின் ரேஞ்சுன்னா என்ன?
அவன் வாழ்க்கையை படமாக எடுக்குறதா?
நான் சொல்ல வருவது பணபலம், தொழில்நுட்பம் எல்லாம் இருந்தும் அவனே இப்படி யதார்த்த சினிமா எடுக்கும் போது பாரின் ரேஞ்சுக்கு!? எடுக்குறேன்னு சொல்லி எல்லோர் கையிலும் துப்பாக்கி கொடுத்து நடிக்க வைப்பது தமிழ் சினிமா தான்!
நான் கேட்பது நல்ல சினிமா!
//தன்னிடமில்லாத., தனக்கு கிடைக்காத வசதி வாய்ப்புக்களை சினிமா ஹீரோ மூலமாக கொஞ்ச நேரமாகிலும் அனுபவித்துவிட்டு போகவே செலவு செய்து வருகிறார்கள்.//
இந்த போதை வாழ்க்கை தேவை என்கிறீர்களா?
//ஒரு குறிப்பிட்ட மக்களினுடைய வாழ்வனுபவத்தை படமாக எடுத்தேதீரவேண்டுமெண்ற உத்வேகத்துடன் செயல்படும் ஒரு சிலரையும் கொச்சை படுத்தக்கூடாது//
ஒன்பது ரூபாய் நோட்டு என்றொரு சினிமா வந்தது, அதை நான் குறை சொல்லவில்லையே! அதுவும் வாழ்வனுபவம் தான்!
சசியின் சினிமாவிற்கும், அதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?
//வண்முறை எங்குதான் இல்லை..?//
உங்களுக்குள்ளும் உண்டு, எனகுள்ளும் உண்டு, அதை அப்படியே சமாதி கட்டனுமே ஒழிய, இதே போல் தான் அவனும் நனக்கு துரோகம் செய்தான், இதே போல் நாமும் அவனை பழிவாங்க வேண்டும் என தூண்டக்கூடாது
//புதுகை.அப்துல்லா said...
அடுத்த சீசன் தொடங்கி வக்கிறீங்க போல//
அடுத்து உங்களுக்கும் ஒரு கடிதம் எழுதிருவோமா
//வேத்தியன் said...
சரியா சொல்லியிருக்கீங்க அண்ணே...
நாமளும் இதே கருத்துல உள்ளவங்க தான்...
வாழ்த்துகள் !//
ரொம்ப நன்றிங்க!
//அ.மு.செய்யது said...
நல்ல பதிவு தான்...குப்பைகளை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பாருங்கள்..
இங்கேயும் நிறைய பாலசந்தர்கள் உண்டு..//
கண்டிப்பாக உண்டு அது பற்றி அடுத்த பதிவில்!
//Ravee (இரவீ ) said...
தொலைக்காட்சி - மெகா தொடர திருத்த ஏதாவது வழி.... யாருக்காவது கடிதம் கிடையாதா ...//
அந்த பக்கம் நான் தலை வைத்து கூட படுப்பதில்லை
பருத்தி வீரன், சேது ,நந்தா, பிதாமகன், ராம், சுப்ரமணிய புரம் .. இந்த படங்களில் இருப்பது வன்முறை அல்ல .. தோல்வியின் வலி .. காதலின் வலி .. துரோகத்தின் வலி ...
இரண்டு குழந்தை பிறந்த பின் , கல்யாணத்தை பற்றி யோசிக்கும் வெளிநாட்டினர் பற்றி நீங்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணம் பாராட்ட பட வேண்டியது தான் .
தூரோகத்தை , ஏமாற்றத்தை நேரிடையாக சந்திக்கும் போது காந்தியும் நேதாஜியாக மாறுவார்..நாம் எல்லாம் எம்மாத்திரம் ?
இந்த மாதிரி படங்கள் தமிழில் வர சாத்தியம் உண்டு... ஆனால் இயக்குனர்கள் பிழைக்கனுமே... நம் மக்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி படங்கள் பிடிக்குமா?
வலைப்பூ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வால் பையன்... ரொம்ப வால் போல இருக்கு. இதற்கு கீழேதான் அந்த படம் பற்றி எழுதி இருக்கேன்.
பார்க்கவில்லையா..?? இது நல்ல காமெடி..
ஆணி கம்மியோ ...
நிறைய யோசிச்சிருக்கீங்க ...
அருமை நண்பா.
சமூகத்தில் நடக்கறதைத்தான் படமா எடுக்கறேன்பாங்க...
சினிமாவ பாத்துதான் மக்கள் கெட்டுப் போறான்பாங்க...
ஆக மொத்தம் ரெண்டுமே அளவுக்கு மிஞ்சி ஆபாசமாவோ, வன்முறையாகவோ இருக்கக்கூடாதுன்றது என்னோட தீர்ப்பு!!!
//என் மீது உள்ள அன்பின் காரணமாக முதலில் என்னுடன் ஒத்து போகிறேன் என்று சொன்னாலும், பின்னாள் ஒரு பின்னூட்டதில் நாம் இந்த இயக்குனர்களை பாராட்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
//
அன்பு நண்பர் வால்பையனுக்கு..
இந்த கடிதத்தின் ஆதார காரணமாக மேற்சொன்ன வரிகளை சொல்லி இருக்கிறீர்கள்..
உங்களுடன் ஒத்துப்போகிறேன் என்பதோடு முடித்துக்கொண்டேன்.. நீங்கள் குறிப்பிடும் அந்த இரண்டாவது பின்னூட்டம் என் கருத்து அல்ல.. (மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள் தல..)
என்றாலும்.. மிக நல்ல பதிவு.. அருமையான அறிமுகம்.. இன்னும் சில நல்ல படங்களை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்ப்பார்த்து..
அதே அன்புடன்.. நர்சிம்
மிகச் சிறந்த பதிவு. உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு இன்னும் கூடி இருக்கிறது. இன்னும் இது போல சமூக அக்கறையுள்ள பல பதிவுகள் இட வாழ்த்துக்கள். கதை சொல்ல இயல்பாக வருகிறது உங்களுக்கு.
//வாலு, நீங்க தமிழ்நாட்டுல இருக்க வேண்டியவரே இல்ல. என்ன ஒரு விசய ஞானம், என்ன ஒரு உலக சினிமா பத்தின அறிவு.... கலக்குப்பா கலக்கு.//
வழிமொழிகிறேன்.
எப்படி இது போன்ற படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு?
ஆனால் ஒரு விஷயம். உலக சினிமாவை ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவிற்கு சிறிய சந்தையே உள்ளது. அப்படி இருந்தாலும், தொழிற் நுட்ப விஷயங்கள் நன்கு முன்னேறி இருப்பது பாராட்டப் பட வேண்டியுள்ளது. பள்ளிக் கூடம், அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பாண்டவர் பூமி, ராமன் தேடிய சீதை போன்ற படங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதும் நல்ல விஷயம்தான்.
அதே சமயம் உண்மையை சொல்கிறேன் அல்லது கிராமப் புறங்களைப் பற்றி சொல்கிறேன் என்ற பெயரில் வரும் சிலப் படங்கள் வணிக நோக்கத்துடனும் வக்கிர புத்தியுடனுமே தயாரிக்க படுகிறவையாக இருக்கின்றனவே தவிர உண்மை நிலையை பிரதிபலிப்பதாக இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
வக்கிரங்களின் அடிப்படையிலும், வணிக நோக்கம் என்ற பெயரில் காசு கொடுத்து பார்க்கும் மக்களை முட்டாளாகவும் எண்ணி எடுக்கப் படும் படங்களை மக்கள் முழுமையாக புறக்கணிப்பதே நல்ல படங்கள் அதிகம் வருவதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
/ஜோதிபாரதி said...
//
//ஜோதிபாரதி said...
வாலு, இது தான் ஆரம்பமா?//
கண்டிப்பாக நீங்கள் கூட யாராவது நண்பருக்கு கடிதம் எழுதலாம் //
நானும் கடிதம் எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. நான் யாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களை அடிக்கடி சந்திக்கிறேன், தொலைபேசியில் பேசுகிறேன். அடிக்கடி சந்திப்பவருக்குக் பகிரங்கக் கடிதம் எழுதினால், ஏங்க ஜோதிபாரதி, இப்பதானே போன் பண்ணுனீங்க கேட்டிருக்கலாமே? நேற்றுதானே நாம காப்பிக் கடையில ஒன்னா டீ சாப்பிட்டோம் அப்பல்லாம் கேட்காமல் இப்படி பகிரங்கப் படுத்துகிறீர்களே என்று கேட்டால்......! கொஞ்சம் சங்கோஜமா இருக்குமல்லவா. அதேன்! வேறொன்றுமில்லை!!/
அட நீங்களும் பிரணாப் முகர்ஜியும் அடிக்கடி சந்திக்குறீங்களா.....சொல்லவே இல்லை....:)
/நட்புடன் ஜமால் said...
ஆணி கம்மியோ .../
ஆணியே இல்லாத ஆளு....கேள்வி கேக்குறாரு...:)
//மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள், ஹீரோயிசம் இல்லை, காமெடி இடைசொருகல் இல்லை, சோகத்தை காட்ட பாடல்கள் இல்லை, நம் கண்முண்ணே வாழ்வது போன்ற காட்சியமைப்புகள். //
அவசர பட்டுடீங்களே தல. இப்படி பட்ட படங்கள் இங்கே வருவதில்லைனு யார் சொன்னா? இன்னும் ஒரு வாரம் பொறுங்க. டாக்டரோட வில்லு பொங்கலுக்கு வருதுல மறந்துட்டீங்களா.
jokes apart, ரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க தல. இவர்கள் கொஞ்சம் திறமையுள்ள, யதார்த்தமா படம் எடுக்குற நல்ல இயக்குனர்கள்.அவ்வளவு தான். கொண்டாடுவதற்கெல்லாம் ஒன்னுமில்லை.
இங்க ஆபிஸ்ல வேற ஒரே தொந்தரவு, டெய்லி ஆபிஸ் வா, வேலை செய், டாக்குமெண்டேஷ்ன் பண்ணு, தூங்காத, மீட்டீங் அட்டெண்ட் பண்ணுன்னு. அதான் இந்த பக்கம் வர முடியல. கொஞ்சம் இருங்க மிச்ச பதிவையும் படிச்சிட்டு வந்துடரேன்
I think you are right. I appreciate this blog. Slum Dog millionaire is such a nice movie, which is more accustomed to our culture, taken by a Hollywood director.
Abhiyum Naanum is such an attempt, even there, it was about a upper class family, it could have been a nice experiment if the story had a normal middle class family. I understand the compromises to add some glamour and grandness it becomes necessary, atleast they made that attempt.
I strongly believe, that movies have contributed to the state of violence in our state. We absolutely do not have any freedom of expression, next day you will get "autos".
Another request I have for all the bloggers, please stop talking about movies, completely I mean. Talk about everything else, there are thousands of good things that are happening, please write about them. I have left lots of feedback in many blogs about so many things that are worth the attention. Lets use this powerful media, understand the audience and do something useful.
Hope I am being heard, my request kindles some minds.
My current project I am working on is, to create a model community, which aims at creating ways and means to help villages, to attain self sufficiency, prevent people from migrating to towns/cities.
Anyone interested in understanding this model willing to participate, please write to me.
சூப்பர்.
மிக நல்ல ஒரு பதிவு,
உங்கள் கருத்தோடு நான் ஒத்துபோகிறேன்
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
அன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com
//நான் கேட்பது நல்ல சினிமா!//
நீங்கள் சொல்லும் இதை நான் வழிமொழிகிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன இயக்குனர்களில் பாலா எனக்குப் பிடிக்கும் அவரது படங்களால்.
எல்லா வன்முறைகளும் சொல்லும் முறையால் வேறுபடும் என்பது என் எண்ணம்.
// எதை பாராட்டவேண்டும், பாராட்ட அதிலிருந்து நாம் எதை எடுத்து கொள்வது,
பழிவாங்குதலையா, துரோகத்தையா, காதலுக்காக உயிர்விடுவதையா?
உண்மையில் இது தான் தமிழ் சமூகதின் நிலை என்றால் இதற்காக நாம் வெட்கம் தானே படவேண்டும். ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா? //
பாடாதி பன்னாட .... தமிழ் சமூகத்த நெனச்சு நீ வெக்கபடுரியா ....? இது உனக்கே கோமாளித்தனமா இல்ல ..... பக்கி ...
டேய் வெங்காயம்... ' இப்படியும் ஒரு சம்பவம் எல்லா சமூகத்திலும் உள்ளது ' நு
சொல்ல வராங்க ... இடைக்கு .. இடைக்கு .. பாட்டும் , நகைச்சுவையும் எதற்கு என்றால் ... பார்கிரவங்களுக்கு ஒரு boostup ... அத ஒரு சினிமாவா பாக்கணும் ... உன்னமாதிரி மப்பு போட்டுக்கிட்டு .... மல்லாக்க படுத்திகிட்டு பார்க்ககூடாது...
நீ இங்க சொன்ன கதையும் நல்லா இருக்கு .... உனக்கு அந்த மாதிரி கதைகள் பிடிக்குமென்றால் மூடிகிட்டு அத பாரு ... உனக்கு மட்டும் இங்க படம் எடுக்கல ....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும் ....
உன்ன நெனச்சு யாரும் முகம் சுளிக்காம இருக்கிற மாதிரி நடந்துக்கோ.... அதுதான் உன் முகவரி.....
sorry நட்பு ... ரொம்ப திட்டியிருந்தா என்னை மன்னித்துவிடு.......
வலை உலக பிரம்மகளை பற்றிய ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் ..
நீங்க வந்து பார்த்து சில உண்மைகளை சொன்ன நல்லா இருக்கும்
கலக்கிட்டேள்.......போங்கோ.....
யம்மாடியோவ்... தலை சுத்துது. எப்படி எழுதிறீங்க இவ்வளவு தகவல்களை... பாராட்டுக்கள் வால்...
http://india.nellaitamil.com/
////tamil cinema said...
யம்மாடியோவ்... தலை சுத்துது. எப்படி எழுதிறீங்க இவ்வளவு தகவல்களை... பாராட்டுக்கள் வால்...
////
தலை வலிக்கு மாத்திரை வேனுமாங்க.
நான் ஒரு படம் பார்த்தேங்க.
சூப்பர் படம்ங்க. அந்த படம் பாக்க ரொம்ப..........அதாங்க வீராச்சாமி.
(t.r)
உங்களது கருத்துக்களை நான் ஏற்றுகொள்கிறேன் :)
உங்களை பார்க்கும்போது ஒரு நல்ல எழுச்சியாளராக தெரிகிறது
ஒரு நாட்டுக்கு இன்றியமைதவர்கள் உங்களை போன்றவர்கள்
மாறுபட்ட சிந்தனைகள் இல்லையெனில் மனிதர்களே இல்லை. எல்லாம் குரங்குகளாக இருந்திருப்போம் பின் இறந்திருப்போம்.
தமிழ் திரைப்படங்களும் மாறுபட்ட சிந்தனைகளை கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.
மாறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களே மின்சாரத்தையும், கணிப்பொறிகளையும், இன்டர்நெட்களையும், ப்லோக்குகளையும் கண்டறிந்தார்கள். நாம் என்ன செய்கிறோம் பயன்படுத்த கற்று கொண்டிருக்கிறோம் :)
ஆங்கில மொழி படங்களை போல், தமிழில் இல்லாதது மிகவும் துயர சம்பவம் ஆகும்
எப்போதும் ஆடல்கள், பாடல்கள், வெறித்தனமான நடிப்புகள் மற்றும் சண்டைகள், காதல்கள், மோதல்கள் என்ன சிந்தனை இருக்கிறது இங்கே ?
இன்னும் தமிழ் நாட்டில் வறுமை வாட்டி எடுப்பது ஏன் ? ஒரே பதில் மாறுபட்ட சிந்தனை இல்லை :(
மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல்லும் திறமைக்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வால். அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை பல மடங்கு அதிகரித்து விட்டீர்கள்.
இப்போதும் கூட கூலாக இருக்கும் தல நர்சிமுக்கும் ஒரு 'ஒ' போடுவோம்.
அனுஜன்யா
பேசுங்க பேசுங்க
பேசிக்கிட்டே இருங்க
///sorry நட்பு ... ரொம்ப திட்டியிருந்தா என்னை மன்னித்துவிடு.......
///
Anonymous said...
கொய்யால உன்னை எங்கிட்டு போய்டா தேடுறது
வாலு உனக்கு நிஜமாலுமே தலை இருக்குயா
but
பாலா, அமீர், சசியை வாலா நினைக்காதே
தருமி said
//எல்லா வன்முறைகளும் சொல்லும் முறையால் வேறுபடும் என்பது என் எண்ணம்.///
different tast மச்சி
///கும்க்கி said...
அருண் said...
வாலு, நீங்க தமிழ்நாட்டுல இருக்க வேண்டியவரே இல்ல. ///
எங்க இருக்க வேண்டியவருனு சொல்லாம போய்டிங்களே கும்க்கி
//மதுரைநண்பன் said...
தினமும் இப்படியே ஒரு மூணு படத்தோட கதையை சொன்னிங்கனா எங்களுக்கு dvd வாங்கும் பணம் மிச்சம்.
நன்றி...................
////
மதுரை நண்பா அழகரி அண்ணன் இலவசமாக கேபிளில் படம் காட்டுவதாக சொன்னார்களே
அங்குட்டும் ஒரு மனுவை போடுங்க
ம்... நடக்கட்டும், நடக்கட்டும்...
ர
மே
ஷ்
வை
த்
யா
இப்ப ரமேஷ் வைத்யா நடக்கிறார்
///அ.மு.செய்யது said...
நல்ல பதிவு தான்...குப்பைகளை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பாருங்கள்..
இங்கேயும் நிறைய பாலசந்தர்கள் உண்டு..
///
so ok for U
அப்பா மகளை காதலிப்பது
பையன் அம்மாவை காதலிப்பதை
சொல்ல வந்தேன்யா
////மந்திரன் said...
பருத்தி வீரன், சேது ,நந்தா, பிதாமகன், ராம், சுப்ரமணிய புரம் .. இந்த படங்களில் இருப்பது வன்முறை அல்ல .. தோல்வியின் வலி .. காதலின் வலி .. துரோகத்தின் வலி ...
///
அட இதுகூட நல்லாதான்யா இருக்கு
/// கும்க்கி said...
வந்துட்டேன்..படிச்சிட்டு வந்து வச்சிகறேன்.. கச்சேரிய.
///
முதலில் படிங்க கும்க்கி sir
அப்புறம் வாங்க
///
வனம் said...
அப்புறம் பாலா,அமீர் மற்றும் சசியின் எந்த படங்களைப்பற்றி எழுதி இருந்தீர்கள்
////
ம் சசி எடுத்த 10வது படமாக இருக்கும்னு
இப்ப
நி
னை
க்
கி
றே
ன்
///அனுஜன்யா said...
மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல்லும் திறமைக்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வால். அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை பல மடங்கு அதிகரித்து விட்டீர்கள்.
////
வீட்டில் உண்டியல் இருந்தா காசு போட்டுவைங்க
இப்படி வாலுsir-கு பின்னூட்டம் போட்டவர்கள் எல்லாம் செய்தீர்கள் என்றால்
இதுபோன்ற படங்களை எடுக்க
வேறயாரு
நம்ம
வாலுsir தான்
இதுபோன்ற படங்களை எடுக்க
Director Redy
வேறயாரு
நம்ம
வாலுsir தான்
நல்ல கதை.
நம்ம ஊரிலே இந்த மாதிரிப் படம் எடுத்தால் நாடகம் மாதிரி கீது மாமேன்னு சொல்லிட்டுப் படத்தை தியேட்டரை விட்டுத் தூக்கிடுறாங்க.
இன்னா நைனா நான் சொல்லுறதேய்..
//மந்திரன் said...
பருத்தி வீரன், சேது ,நந்தா, பிதாமகன், ராம், சுப்ரமணிய புரம் .. இந்த படங்களில் இருப்பது வன்முறை அல்ல .. தோல்வியின் வலி .. காதலின் வலி .. துரோகத்தின் வலி ...
இரண்டு குழந்தை பிறந்த பின் , கல்யாணத்தை பற்றி யோசிக்கும் வெளிநாட்டினர் பற்றி நீங்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணம் பாராட்ட பட வேண்டியது தான் .
தூரோகத்தை , ஏமாற்றத்தை நேரிடையாக சந்திக்கும் போது காந்தியும் நேதாஜியாக மாறுவார்..நாம் எல்லாம் எம்மாத்திரம் ?//
துரோகத்தின் வலி, காதலின் வலி, தோல்வியின் வலி யாருக்கு இல்லை.
அதை மிகைப்படுத்துதலே தவறு என்கிறேன்.
மேலை நாடுகள் என்றாலே செக்ஸ் விசயத்தில் மோசம் எனும் மனப்போக்கை மாற்றுங்கள். கள்ளகாதலில் இந்தியா அதைவிட மோசமாக இருக்கிறது. அதையெல்லாம் சினிமாவாக எடுக்கவேண்டுமா என்ன?
//VIKNESHWARAN said...
இந்த மாதிரி படங்கள் தமிழில் வர சாத்தியம் உண்டு... ஆனால் இயக்குனர்கள் பிழைக்கனுமே... நம் மக்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி படங்கள் பிடிக்குமா?//
அழகியதீயே, மொழி இந்த வகையை சார்ந்தவை தான், ஏற்றுகொண்டோமே!
//வண்ணத்துபூச்சியார் said...
வலைப்பூ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வால் பையன்... ரொம்ப வால் போல இருக்கு. இதற்கு கீழேதான் அந்த படம் பற்றி எழுதி இருக்கேன்.
பார்க்கவில்லையா..?? இது நல்ல காமெடி..//
இப்போழுது தான் பார்த்தேன்!
நேரமின்மை காரணமாக முழுவதுமாக பார்க்கமுடியவில்லை
//நட்புடன் ஜமால் said...
ஆணி கம்மியோ ...
நிறைய யோசிச்சிருக்கீங்க ...
அருமை நண்பா.//
ஆணி வழக்கம் போல தான்!
இது இடையிடையில் பத்து பத்து நிமிசமாக அடித்தது
//ச்சின்னப் பையன் said...
சமூகத்தில் நடக்கறதைத்தான் படமா எடுக்கறேன்பாங்க...
சினிமாவ பாத்துதான் மக்கள் கெட்டுப் போறான்பாங்க...
ஆக மொத்தம் ரெண்டுமே அளவுக்கு மிஞ்சி ஆபாசமாவோ, வன்முறையாகவோ இருக்கக்கூடாதுன்றது என்னோட தீர்ப்பு!!!//
அதே தான், அதே தான்
narsim said...
அன்பு நண்பர் வால்பையனுக்கு..
இந்த கடிதத்தின் ஆதார காரணமாக மேற்சொன்ன வரிகளை சொல்லி இருக்கிறீர்கள்..
உங்களுடன் ஒத்துப்போகிறேன் என்பதோடு முடித்துக்கொண்டேன்.. நீங்கள் குறிப்பிடும் அந்த இரண்டாவது பின்னூட்டம் என் கருத்து அல்ல.. (மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள் தல..)//
உண்மை தான், அப்படி எழுதியது நண்பர் முரளிகண்ணன்.
நான் சொல்லவருவது இம்மாதிரியான படங்களை எடுக்கலாம், நாமும் பார்க்கலாம், விமர்சிக்கலாம் ஆனால் இதுவே உச்சநிலை என்று கொண்டாடினால் உண்மையிலேயெ நல்லசினிமா எடுப்பவர்கள் மீண்டும் நல்லபடம் எடுக்கமாட்டார்கள்,
நல்லசினிமா கண்டிப்பாக ஒரு நல்ல சமுதாயம் அமைய கருவியாக இருக்கும்.
நன்றி மோகன்பிரபு!
உங்கள் கருத்துகளுடன் முழுமையாக ஒத்து போகிறேன்
//Bleachingpowder said...
அவசர பட்டுடீங்களே தல. இப்படி பட்ட படங்கள் இங்கே வருவதில்லைனு யார் சொன்னா? இன்னும் ஒரு வாரம் பொறுங்க. டாக்டரோட வில்லு பொங்கலுக்கு வருதுல மறந்துட்டீங்களா.//
எப்படி மறப்பேன். குருவியில் அவர் ஸ்பைடர்மேன் மாதிரி கட்டிடங்கள் தாண்டுவாரே!
இவரல்லவா நமது சமூகத்தை மாற்ற வந்த மகாத்மா
//இங்க ஆபிஸ்ல வேற ஒரே தொந்தரவு, டெய்லி ஆபிஸ் வா, வேலை செய், டாக்குமெண்டேஷ்ன் பண்ணு, தூங்காத, மீட்டீங் அட்டெண்ட் பண்ணுன்னு. அதான் இந்த பக்கம் வர முடியல.//
நான் வேலை செஞ்சிகிட்டு இருக்கேன்,
நீங்க வெட்டியா இருக்கிங்கன்னு சொல்லாம சொல்றிங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி கோபிநாத் (Itsdifferent)
உங்கள் கருத்துகளுக்கு நன்றி,
முடிந்தவரை தமிழில் இடவும்,
எனக்கு புரிவதற்குள் தாவூ தீருகிற்து
//தமிழ்நெஞ்சம் said...
சூப்பர்.//
சூப்பர்மேனே சூப்பருன்னு சொல்லிட்டார்
//பாபு said...
மிக நல்ல ஒரு பதிவு,
உங்கள் கருத்தோடு நான் ஒத்துபோகிறேன்//
மிக்க நன்றி பாபு
//தருமி said...
//நான் கேட்பது நல்ல சினிமா!//
நீங்கள் சொல்லும் இதை நான் வழிமொழிகிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன இயக்குனர்களில் பாலா எனக்குப் பிடிக்கும் அவரது படங்களால்.
எல்லா வன்முறைகளும் சொல்லும் முறையால் வேறுபடும் என்பது என் எண்ணம்.//
உங்க மாணவரை விட்டு கொடுப்பிங்களா!
சொல்லும் விதத்தில் கண்டிப்பாக வேறுபடும்.
life is beautiful என்ற படம் வன்முறையே இல்லாமல் வன்முறையின் விளைவுகளை எடுத்து சொல்லும்
//பாடாதி பன்னாட .... தமிழ் சமூகத்த நெனச்சு நீ வெக்கபடுரியா ....? இது உனக்கே கோமாளித்தனமா இல்ல//
மாதேஷ், உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இடலாமே!
அனானியாக எதற்கு,
//நீ இங்க சொன்ன கதையும் நல்லா இருக்கு .... உனக்கு அந்த மாதிரி கதைகள் பிடிக்குமென்றால் மூடிகிட்டு அத பாரு ... உனக்கு மட்டும் இங்க படம் எடுக்கல ....//
நான் இல்லையென்று சொல்லவில்லை,
அமீர் மற்றும் சசியின் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன், பார்ஹ்தால் மட்டுமே விமர்சிக்கும் குறைந்த பட்ச உரிமையாவது வரும்.
நான் இந்தமாதிரி படங்களை எடுக்கவேண்டாம் என்றோ!
இவர்கள் சமூகத்தின் கிருமிகள் என்றோ சொல்லவில்லை!
நீங்கள் குறிப்பிட்டதை போல் நல்ல சினிமா எடுப்பவர்களை ஊக்கவிக்க வேண்டும் என்கிறேன், அதே போல் நல்ல சினிமாக்களை தர,
அது என்னவோ போங்க உங்க பின்னூடம் இல்லைனா என் பதிவு முழுமை அடைவதில்லை.
அடுத்த பதிவிலுலயும் கொஞ்சம் திட்டிட்டு போங்க!
ஸுப்பர்.
//தமிழ் தோழி said...
கலக்கிட்டேள்.......போங்கோ.....//
நன்றி தோழி!
//tamil cinema said...
யம்மாடியோவ்... தலை சுத்துது. எப்படி எழுதிறீங்க இவ்வளவு தகவல்களை... பாராட்டுக்கள் வால்...
http://india.nellaitamil.com///
தமிழ்சினிமான்னு பெயர் வச்சிருக்கிங்க,
நீங்க சொல்ல வேண்டிய மேட்டரையெல்லாம் நான் சொல்லிகிட்டு இருக்கேன்
//தமிழ் தோழி said...
நான் ஒரு படம் பார்த்தேங்க.
சூப்பர் படம்ங்க. அந்த படம் பாக்க ரொம்ப..........அதாங்க வீராச்சாமி.//
அந்த மகா காவியத்தின் விமர்சனம் எழுதியிருக்கிங்களா தோழி
Sathya Rock Star said...
உங்களின் முழு புகழுக்கும் தகுதியானவா என்று கூசுகிறேன்.
சிந்தனை ஒன்றும் பெரியவிசயமல்ல,
அனைவரும் தயாராகதான் இருக்கிறார்கள். ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் சிலருக்கு பப்பு வேகாதே!
//அனுஜன்யா said...
மிக அழகாக, கச்சிதமாகக் கதை சொல்லும் திறமைக்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும் வால். அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலை பல மடங்கு அதிகரித்து விட்டீர்கள். //
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!
Post a Comment