சர்தார்ஜி ஜோக்ஸ்!!

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல!
திட்டவதாக இருந்தால் இதை மெயிலில் எனக்கு அனுப்பிய மாதேஷ் அவர்களை திட்டுங்கள்

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி....

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?


----------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப்
பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.."
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

--------------------------------------------------------------------------------------------------

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்...!


நன்றி மாதேஷ் த கிரேட்

49 வாங்கிகட்டி கொண்டது:

அதிரை ஜமால் said...

\\"சர்தார்ஜி ஜோக்ஸ்!!"\\

பாவம் மக்கா ...

அ.மு.செய்யது said...

இருங்க படிச்சிட்டு வரேன் !!!!!!

அதிரை ஜமால் said...

\\" அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு \\

நிறைய சிரித்தேன் ...

புதியவன் said...

ஹா...ஹா...ஹா...நல்ல சிரிப்பு வெடிகள்...

மதிபாலா said...

ப்ரசண்ட் சார்.

M Poovannan said...

சோனி தொலைக்காட்சியில் 'பூகி வூகி' எனும் நாட்டிய நிகழ்ச்சி ரொம்ப வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒரு மும்பைக்காரன் 'அப்படிப் போடு போடு ' பாடலுக்கு நடனமாடினான். அப்போது அவனுக்கு கிடைத்த பட்டம் 'சாலா மத்ராஸி'
நமக்கு சர்தர்ஜி அவர்களூக்கு மத்ராசி

Raj said...

//( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
//

இது extreme.

தமிழ்நெஞ்சம் said...

வணக்கம், வந்தனம்,நமோஸ்கார் : சிரிப்பு வெடிகளைத் தீபாவளிக்கு வெளியிட்டு இருந்தீர்கள் என்றால் - வெடிச்செலவாவது மிச்சம்? (!)

அலும்பு

அதிரை ஜமால் said...

\\அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?\\

ஹா ஹா ஹா ...

மங்களூர் சிவா said...

கலக்கல்!

ssk said...

ஹா...ஹா...ஹா...

அ.மு.செய்யது said...

நல்லா இருந்துச்சுங்க !! நல்ல காமெடி...

கொசுறு தகவல்: ( எங்கோ படித்தாக நினைவு )

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை வீரத்துடன் எதிர்த்து போரிட்டவர்களில் சர்தார்ஜிகள் தான் அதிகம்.இதனால் வெள்ளையர்களுக்கு இவர்கள் மீது செம காண்டு.
என்ன செய்வது என்று தெரியாமல் உக்காந்து யோசித்து,சர்தார்ஜிக்களை முட்டாள்களாக சித்தரித்து ஜோக்குகள் எழுதி அதை இந்தியாவிலே ப‌ர‌ப்ப ஆர‌ம்பித்த‌ன‌ர்.இது தெரியாத ந‌ம் சக குடிமக்கள், தாமாகவே சர்தார்ஜி ஜோக்குக்குகளை எழுத ஆரம்பித்து விட்டனர்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கலாச ஆரம்பித்து விட்டோம்.
உண்மையைச் சொல்ல போனால் சர்தார்ஜிகள்தான் மிகப்பெரிய அறிவாளிகள்.முக்கால்வாசி சர்தார்ஜி ஜோக்குக்குகளை எழுதியதே அவர்கள் தானே !!!

ஆயில்யன் said...

எல்லா ஜோக்ஸும் கலக்கல் சிரிப்பு அடங்க நேரம் பிடிக்கும் :)))))))))))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:) :)

கணினி தேசம் said...

ஹா.ஹா.ஹா.!!
ஹி..ஹி..ஹி..!!


ஐயோ..ஐயோ..ஒரே தமாசு..!!

Ravee (இரவீ ) said...

அத்தனையும் அருமை ...
சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துடுச்சு ....
(திரும்ப இன்னும் ௨-௩ முறை படிப்பேன்) எனக்கு ஏதாவது ஆச்சுன்னா வால் பையன் தான் காரணம்.

அமுதா said...

:-))
அபியும் நானும் படத்தில் சர்தார்ஜி பற்றி வருவதையும் நினைவு கூர்ந்து கொண்டேன் (சர்தார்ஜி எல்லாரும் உழைக்கும் மக்கள், சோம்பிக் கிடப்பவர்கள் அல்ல என்று...)

இளைய கவி said...

கலக்கல் வெடிகள் பச்சி சார் மச்சி

தாமிரா said...

ஒன்றைத்தவிர அனைத்தையும் ரசித்துச்சிரித்தேன்.

ராம்.CM said...

நல்ல சிரிப்பு வெடிகள்...

அனுஜன்யா said...

அட்டகாசம் குரு. பெரும்பாலும் கேள்விப்படாதது. சூபர்.

அனுஜன்யா

Mahesh said...

:D :D :D :D D

கணேஷ் said...

பட்டாசு.... கலக்கிட்ட தல... நல்லா சிரிச்சோம்....

LOSHAN said...

சிரி சிரி சிரித்தேன்.. :) அநேகமானவை புதியவை.. அதிலும் முதலாவது கலக்கல்..

வைகரைதென்றல் said...

எல்லா ஜோக்ஸும் கலக்கல்
:):)) =))
=D>

கும்க்கி said...

மங்களூர் சிவா said...
கலக்கல்!

எதுக்கும் ஒரு ரிப்பீட் அடிச்சுக்கறேன்.

வேலன். said...

மாமியார் மருமகள் ஜோக் நன்றாக இருந்தது.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Maximum India said...

நல்ல புத்தாண்டு பரிசுகள்.

சென்ற ஆண்டு சர்தார்களின் ஆண்டாக இருந்தது குறிப்பிடத் தக்கது. சிங்க் இஸ் கிங். மன்மோகன் சிங், ஹர்பாஜன் சிங், அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங் (யுவராஜ் சிங், அமர் சிங் ஆகியோரைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்)

நன்றி.

கிரி said...

//அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!//

ஹா ஹா ஹா ஹா ஹா

cheena (சீனா) said...

மாமனாரின் பரிசு - தேர்தலில் ஓட்டு - சூப்பர் சூப்பர்

கூடுதுறை said...

கடைசி ஜோக்தான் சூப்பர்...

நன்றி...

ஜிம்ஷா said...

ஹா.ஹா.ஹா.!!
ஹி..ஹி..ஹி..!!


ஐயோ..ஐயோ..ஒரே தமாசு..!!

தாரணி பிரியா said...

கடைசி ஜோக் சூப்பர் :)

வால்பையன் said...

நன்றி அதிரை ஜமால்
ஆமாம் பாவம் தான்

நன்றி அ.மு.செய்யது

நன்றி புதியவன்

நன்றி மதிபாலா

நன்றி பூவண்ணன்
புரியுது, அவுங்களுக்கு நாம காமெடியன்

நன்றி ராஜ்

நன்றி தமிழ் நெஞ்சம்
தீபாவளிக்கும் ஒண்ணு போட்டுடலாம்

நன்றி மங்களூர் சிவா!

வால்பையன் said...

நன்றி SSk

செய்யது சர்தார்ஜிக்கள் முட்டாள்கள்ள என்பது எப்போதே தெரிந்த உண்மை! ஜோக்குகள் புதிதாக இருந்தன அதனால் பகிர்ந்து கொண்டேன், உங்களின் பகிர்தலுக்கும் நன்றி

நன்றி ஆயில்யன்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி கணிணி தேசம்

நன்றி ரவீ
எதாச்சும் ஆச்சுன்னா
மாதேஷ் செலவை பார்த்துப்பார்

நன்றி அமுதா
உண்மை தான்

நன்றி இளைய கவி

வால்பையன் said...

நன்றி தாமிரா
அந்த ஒன்றை எடுத்துவிட்டேன்.

நன்றி ராம்
நீங்க முன்னாடி பைலட்டா இருந்திங்களா!

நன்றி அனுஜன்யா
ஆமாம் எல்லாமே நானும் முதன் முதலாக படிப்பது

நன்றி மகேஷ்

நன்றி லோஷன்

நன்றி வைகரை தென்றல்

நன்றி கும்க்கி
இது என்ன சம்பிருதாயமா?

நன்றி வேலன்

நன்றி மோகன்பிரபு
ஆமாம் உண்மை தான்

நன்றி கிரி

நன்றி சீனா ஐயா

நன்றி கூடுதுறை

நன்றி ஜிம்ஷா

நன்றி தாரணிபிரியா!

Vijay said...

வால் பையன்,
நீண்ண்ன்ண்ட நாட்களூக்குப் பின் மனம் விட்டு சிரித்தேன்.
நன்றி :)

shabi said...

எல்லா ஜோக்ஸ்ம் நல்லா இருந்தது/அசைவம் ஒண்ணும் இல்லையா?

பழையபேட்டை சிவா said...

சிரிப்பு வெடிகள்...

ஹா ஹா ஹா ...

நன்றி வால்...

Sharepoint the Great said...

மாதேஷ் த கிரேட் க்கு ஷேர்பாய்ண்ட் த் க்ரேட்டின் வாழ்த்துக்கள்

by


Sharepoint The Great

R.Gopi said...

All Sardarji jokes published here are fantastic.

Enna inga naama solradhu Sardarji, anga avanga solradhu Madarasi, avlo thaan.......

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

babu said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சிருக்கிரேன்

fazrul said...

கலகிடிங்க! புதிய ஜோக்ஸ் .

Fazrul Ali- Sri lanka

vaitheetheboss said...

nice information
http://tuttudu.blogspot.com/

jeni said...

nice jokes All the best
by jeni

amaresan said...

arumaiyo arumai
amaresh

kannan said...

sorry ennakka taamil teriyaadhu this is the usual dialogue from the tamil heroine.Aanal ennakku tamil teriyum.naan tamiyan.Ella jokes um wonderful without non veg,good i appreciate it vaal paiyya unakku vaal romba perisu.irru irru sardhaji mamma kitta sollaren.
kannan.R

kannan said...

ENNAKKU TAAMIL TERIYADHU NU NAAN SOLLA MATTAN ENNA NAAN ORU TAMILAN.ELLA JOKESUM NALLA IRUINDHUDHU IRU IRU SARDHAJI MAMAAKITTA SOLLAREN VAAL PAIYYA UN VAALAI OTTA ARUKKU SOLLAREN.
KANNAN.R

!

Blog Widget by LinkWithin