பெரிய படங்களுடன் புதிய திரட்டி!!
புதிய பதிவர்கள் வருவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதே அளவுக்கு புதிய திரட்டிகள் வரும்போதும் மகிழ்ச்சியடைய வேண்டும், ஒவ்வொரு புதிய திரட்டியும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு மேம்பட்ட வசதிகளுடன் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அவ்வகையில் புதிதாக வந்திருக்கும் நெல்லைதமிழ்.காம் நன்றாக இருக்கிறது.
இது தான் முகப்பு பக்கம், கிட்டதட்ட தமிலீஷ் மாதிரியே தான் இணைப்பதெல்லாம் அதற்கு முன் நீங்கள் அதில் மெம்பர் ஆகவேண்டும், இன்னும் பல மேம்பட்ட வசதிகள் அதில் இணைக்கபோவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
பாருங்கள் படங்கள் எவ்வளவு பெரிதாகவும், தெளிவாகவும் தெரிகிறது.
வெறும் படங்கள் மட்டும் பதிவிடும் பதிவர்களுக்கு இந்த திரட்டி ஒரு வரப்பிரசாதம்
அந்த திரட்டிக்கு செல்ல இதை சொடுக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
20 வாங்கிகட்டி கொண்டது:
தங்கச்சிய வெறுக்கும் சரண்யா
இந்த படம் தாங்க சூப்பரு...
//இது உங்க திரட்டியா ???
http://blogspot.nellaitamil.com/in/?p=34
ethuggu nellaitamil.com tamilmanam pera use panraanga?
சின்குச்சா! சின்குச்சா! பச்சை கலரு சின்குச்சா... மஞ கலரு சின்குச்சா!!
நெசமா சொல்லுங்க..இது உங்களோட சொந்த திரட்டிதானே?
மோகன் ராஜை உங்களுக்கும் பரிச்சயமா?
புதுப் புதுத் திரட்டிகளாக வரட்டும்.
வாழ்க வளமுடன்
http://www.tamilnenjam.org
இதுக்கு ஓனர் நீங்களா?
http://blogspot.nellaitamil.com/in/?p=34
எதுக்கு நெல்லைதமிழ்.காம் தமிழ்மனம் பெரை யூச் பண்ணறாங்க. மேல லிங்கில பாருங்க
அட யாராயிருந்தா என்னப்பா ...
சேவை நல்லாயிருக்கா பார்ப்போம்...
ethuggu nellaitamil.com tamilmanam pera use panraanga?
ஒரு விளக்கம்.
தமிழ்மணம் என்பது தூய தமிழ் வார்த்தை. நாங்கள் ஒன்றும் தமிழ்மணம்.co.in>>>>> வரிசையில் போலியாக டொமைன் வாங்கி பதிவிடவில்லையே... அப்புறம் ஏன்? எங்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் என்று தெரியவில்லை. இது தொடர்பாக குறிப்பிட்ட தளத்திலேயே இப்போது அனானி பெயரில் பதிவிட்ட தாங்கள் கேட்டிருந்தீர்கள். கொஞ்சம் வேலைப்பளு காரணமாக தங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது.
நான் துவங்கிய அந்த சப்.டொமைனில் நினைத்திருந்தால் தமிழ்மணம்.நெல்லைத்தமிழ்.காம் என்றே பெயர் வைத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. சாதாரணமாக ஒரு தலைப்பிற்காக வைக்கப்பட்ட அந்த பெயரில் எந்த உள்நோக்கமும் இல்லை.
உப்புக்கு பெறாத இதை வைத்து பிரச்சனையை மேற்கொள்ளாதீர்கள்.
விரைவில் அத்தளத்தை பராமரிப்பு செய்யும் போது இதை சரிசெய்து விடுகிறோம்.
தமிழ்மணம் என்பது தூயதமிழ்வார்த்தை என்பதைத் தாங்கள் அறிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியே. பேசாமல் நெல்லைத்தளம் என்பதையும் சுத்தமானதமிழ்ச்சொல்லாகக் கருதி யாரும் எடுத்து ஒரு தளம் அமைத்துக்கொள்ளலாமே.
தமிழ்மணம் என்ற சொல் திரட்டி ஒன்றுக்கு இல்லாமலிருந்த இடத்திலே நீங்கள் அதைப் பயன்படுத்தியிருப்பீர்களா? எதற்குக் கொலைவெறி என்று உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? ஒருவரும் கொலைவெறி கொள்ளவில்லையே. ஒரு நடைமுறை நியாயத்தைத்தானே சொன்னேன். தமிழ்மணத்துக்கு ஓர் இணைப்பினைக் கூட நெல்லைக்காமத்திலே இடதுபக்கத்திலே கொடுக்கமுடியவில்லை என்றா சொன்னேன்?
உணர்ச்சி வசப்படாதீர்கள். இன்றைக்கு அல்ல முதலாவது தடவையாக உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது. சிலவாரங்களுக்கு முன்னரே தங்கராஜா ஜீவன், லோஷன் பதிவுகளின் இணைப்புகளிலே நெல்லைகாமத்திலே பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன்.
கோதாவுல இறங்குங்க :-)
1.எனக்கு புதிய தகவல், நன்றி
2. சரண்யா போட்டோ சூப்பருங்க
சின்குச்சா! சின்குச்சா! பச்சை கலரு சின்குச்சா... மஞ கலரு சின்குச்சா!!
விமர்சனத்திற்கு நன்றி.
//சின்குச்சா//
தமிழ் சினிமா @ நீங்க ஏதோ சிக்குன்குன்னியா மாதிரி வியாதி பேரு சொல்றீங்கன்னு முதல்ல நினைச்சிட்டேன், நிசமாலும்
உணர்ச்சி வசப்படாதீர்கள். இன்றைக்கு அல்ல முதலாவது தடவையாக உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது. ?????
நண்பரே நான் உணர்ச்சி வசப்படவில்லை. தமிழ்மணம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாதா?
அப்புறம் இன்னொரு விஷயம் தமிழ்மணம் என்ற சொல் திரட்டி ஒன்றுக்கு இல்லாமலிருந்த இடத்திலே நீங்கள் அதைப் பயன்படுத்தியிருப்பீர்களா? என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த சொல்லை நான் யோசித்து இருந்தால் கண்டிப்பாக செய்திருப்பேன்.
மேலும் ஒரு தளத்திற்கு தமிழ்மலர் என்று பெயர்வைத்திருந்தேன். அந்த பெயரில் எந்த பிரபல தளம் இருக்கிறது சொல்லுங்கள். சப்.டொமைனில் அந்த பெயர் கிடையாது. சாதாரணமாக ஒரு தளத்தினுள் வரும் வார்த்தைகளை வைத்து வாசகர்கள் வருவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டு சொன்னபடி தமிழ்மணத்திற்கு தொடர்புடைய வகையில் பல வலைத்தளங்கள் இருக்கின்றன. இணைய சிற்றிதழ்கள் இருக்கின்றன. அவைகளுக்கும் தாங்கள் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறீர்களா?
நண்பரே... கைத்தடி வைத்திருக்கிறவன் எல்லாம் காந்தியாக முடியாது. காந்திக்குரிய டிரேட் மார்க் அழியாது. அதற்காக கைத்தடியை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது போல் இருக்கிறது தங்கள் கருத்து. தமிழ்மணம் என்பது பதிவர்கள் மற்றும் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திரட்டி... அதற்குண்டான வாசகர்களையோ, பதிவர்களையோ, அதன் தொடர்புடைய பெயரை வைத்து ஈர்த்துக்கொள்ள முடியாது.
தாங்கள் இது பற்றி மேலும் விவாதிக்க விரும்பினால் என் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாகவே சாட் செய்யலாம்.
infonellaitamil@gmail.com
என்ன எழவுடா இது? இந்தாளு புரிஞ்சு பேசறாரா புரிஞ்சும் புரியாம நடிக்கிறாரா?
அண்ணே நான் வணங்கும் எம்பெருமான முருகன் மேல சத்தியமா குட்டைய குழப்பாதீங்க அண்ணே. நான் விகடன் பேரை வெச்சு குமுதம் பேரை வெச்சு திரட்டி நடத்தலாம் அப்படீங்கிறீங்களா? தெரியாம பேச வந்துட்டேன் அண்ணே. விட்டுருங்க. நீங்க தமிழ்மணம் பேரை வெச்சு அதுக்கு இந்த சைட்டுல நெல்லைகாமம் தொடுப்பு கொடுத்தா எனக்கு என்ன? தமிலிசுக்கு நேரடியாக அடுத்த சைட்டுல லிங்கு கொடுத்தா என்ன? நீங்க ஆச்சு. அவுங்க ஆச்சு. எதுக்கு நான் நடுவுல மொட்டைப் பனைமரமாட்டம். தமிழ்மணம் ஓனருங்களே ஓவுன்னு விட்டிருக்க நான் எதுக்கு ஓணானை புடிச்சி சட்டைப்பையி உள்ளே வெச்சுக்கிட்டு குத்துது குடையுதுன்னு சொல்ல.
ரெண்டுபேரும் இப்ப நிறுத்த போறீங்களா? இல்லையா?
தமிலிசுக்கு நேரடியாக அடுத்த சைட்டுல லிங்கு கொடுத்தா என்ன? நீங்க ஆச்சு. அவுங்க ஆச்சு.
மிக்க மகிழ்ச்சி அனாணி.
டிசைன் நல்லா இருக்கு. புது திரட்டி பிரபலமாக வாழ்த்துக்கள்
Post a Comment