கனவுகள் நிறைந்த தூக்கமும் மற்றும் மேட்ரிக்ஸ் படத்தை பற்றி!!

என்னிலிருந்து பிரிக்க முடியாத விசயங்கள் நிறைய இருக்கின்றன.
என் குரல், என் திமிர், என் கோபம் போன்று.
ஆனால் என் கனவுகளை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை.
அது என்னை போன்று இன்னொரு நானாகவே எனக்கு தெரிகிறது.

என் கனவில் நான் தான் ஹீரோ, ஒவ்வொரு கனவிலும் எதாவது ஒரு வில்லனால் நான் துரத்தபடுவேன்.கனவில் நான் பலகீனமானவனாக தான் இருக்கிறேன், எந்த கனவிலும் நான் வில்லனை ஜெயித்ததில்லை.என் உடல் கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு நான் கொல்ல பட்டாலும், மறு நாள் என் கனவில் நான் தான் ஹீரோ.

கனவுகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாதது.
பலகீனம் மற்றும் இயலாமை.

எதிரிகள் துரத்தும் போது நான் எவ்வளவு வேகம் தான் ஓடினாலும் நான் இருந்த இடத்தை விட்டு நகர்ந்ததில்லை, பின்னால் வரும் எதிரிகள் கையில் அகப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் சைக்கிள் பின்னால் எல்லாம் ஒளிந்திருக்கிறேன்.
அங்கே ஒளிந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவர்கள் என்னை தாண்டி செல்வது ஆச்சர்யமாய் இருக்கும்.

என் கனவுலகம் என்பது வேறா. அங்கே வேறொரு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா.
சில நேரங்களில் வரும் கனவுகள் என் வாழ்வில் நடந்தது போல் இருக்கும், ஆனால் நடந்திருக்காது. சில நேரங்களில் சில அதிசிய விலங்குகள் வரும் ஆனால் அப்படியொன்று எங்கேயும் இருக்காது.

ஆனாலும் என் கனவுகள் எனக்கு ஒரு குறியீடாக தான் தெரிகின்றது.
என்னிலிருந்து நான் நிறைய கற்று கொள்வது போல் என் கனவிலிருந்தும் நிறைய கற்று கொண்டு தான் இருக்கிறேன்.

*********************************************

அப்பொழுது நான் சென்னையில் இருந்தேன். எந்த தியேட்டர் என்று ஞாபகம் இல்லை.
ஆனால் என் பக்கத்திலிருந்தவன் கேட்ட கேள்வி என்னால் மறக்க முடியாது.
"மேட்ரிக்ஸ் என்றால் என்ன?"
வடிவேலு ஒரு படத்தில சொல்லுவான் "என்னையும் மதிச்சி ஐந்நூறு ரூபா கேட்டியே" ன்னு!!!
அப்படி தான் என் நிலைமை அப்போ.


படத்திற்கு வருவோம்
நாம் அனைவரும் தூக்கத்தில் இருக்கிறோம், நம் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக ஒரு மென்பொருள் உள்ளது, இயந்திரங்களின் உதவியுடன் அவைகள் மூலம் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். அதையே உண்மையான வாழ்க்கை என்று நம்பி கொண்டிருக்கிறோம்.

ஹீரோ ஒருவனால் மட்டுமே! இயந்திரத்தை ஜெயிக்க முடியும்.
ஆனால் அவன் கனவு வாழ்க்கையையே உண்மையென்று நம்பி கொண்டிருக்கிறான்,
அவனை அது உண்மையில்லை என்று நம்ப வைக்கவேண்டும். உன்னால் இயந்திரத்தை ஜெயிக்க முடியும் என்று நம்பவைக்க வேண்டும்,
இதெல்லாம் நம்ப வைக்க முடியும் என்று கூட இருப்பவர்கள் நம்புவார்கள்.

ஒருவழியாக ஹீரோவை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுவார்கள்.
அவனுக்கு கராத்தே மற்றும் பல சித்து வேலைகள் பின் மண்டையில் ஒரு ராடு சொருகி மென்பொருள் மூலம் ஏற்றப்படும்.

இருப்பினும் கனவில் கூட என்னால் முடியும் என்று நம்பும் போது தான் ஹீரோவால் கூட பல விசயங்கள் சாத்தியமாகிறது, பறக்கிறான், பல மீட்டர் மேலிருந்து குதிக்கிறான்.
ஒரே நேரத்தில் பல நூறுபேருடன் சண்டை போடுகிறான்.
கடைசி பாகத்தில் கனவில் அல்ல நினைவிலும் முடியும் என்று நம்பி இயந்திரத்தை கட்டுபடுத்துகிறான்.

நீதி:கனவில் மட்டுமல்ல நினைவிலும் முடியும் என்று நம்பினால் வெற்றி நமக்கே!!
(கடைசியில் ஏன் ஹீரோ செத்தான் என்று கேட்க கூடாது)

13 வாங்கிகட்டி கொண்டது:

cherankrish said...

hi,
very good.i thing you'v written your real life activity as a dream. catchy :)

சென்ஷி said...

நேத்துத்தான் மேட்ரிக்ஸ் தொகுப்பு டிவிடி வாங்கினேன். முன்னாடி அர்த்தம் புரியாம படம் பார்த்ததுக்கும் சப் டைட்டிலோட படம் பார்த்தா கொஞ்சம் புரியும்ன்னு நெனைக்குறேன்.. பார்ப்போம் :))

Anonymous said...

//சில நேரங்களில் வரும் கனவுகள் என் வாழ்வில் நடந்தது போல் இருக்கும், ஆனால் நடந்திருக்காது.//

Deja vu.
http://en.wikipedia.org/wiki/Deja_vu

வால் பையன்,
கனவுடன் தூக்கம் தற்காலிக மரணம்.
கனவில்லாத தூக்கம் நிரந்தர மரணம்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நனவுலகமே வேரொருவரின் கனவாகக்கூட இருக்கலாம்.

கனவில் ஒருவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அவரும் சரியான பதில் சொல்கிறார். ஆனால் அந்த பதில் அவர் சொல்லும் வரை கனவில் வரும் எனக்கு தெரியாது. உண்மையில் கேள்வியும் நானே, பதிலும் நானே.

எனக்கும் அடிக்கடி பறப்பதை போன்ற கனவுகள் வருகின்றன.

என் கனவில் சில நேரம் என்னை பிரதி எடுத்தது போல் ஒருவரை பார்க்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கிறது. அவர் மீது ஆழ்ந்த அன்பு தோன்றுகிறது. அந்த அவர் நான்தான். ஆனால் அது நான் இல்லை!!. இந்த வகைக்கனவுகள் எனக்கு இனம் புரியாத ஆனந்தத்தை கொடுக்கின்றன.

சுஜாதா நாவலோ பாலகுமாரன் நாவலோ படித்து விட்டு தூங்கினால் அவர்களை போலவே அச்சு அசல் நடையில் கனவில் கதை எழுதுகிறேன்.

மனித மனத்தின் பரிமாணங்கள் சுவையானவை. விசித்திரமானவையும் கூட.

மற்றபடி உங்களின் எழுத்து நடையை ரசித்தேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

அனானி முன்னா
anony munna (aka) tamilkannan

வால்பையன் said...

//cherankrish said...
hi,
very good.i thing you'v written your real life activity as a dream. catchy :)//

நன்றி வருகைக்கு!
வாழ்வில் நடப்பதும், நாம் செய்ய நினைப்பதும் தான் கனவின் வெளிப்பாடு என்று விஞ்ஞானம் சொல்கிறது, என் செயல் என் கனவு வேறென்ன நீங்கள் சொல்வது சரி தான்.

வால்பையன்

வால்பையன் said...

//சென்ஷி said...
நேத்துத்தான் மேட்ரிக்ஸ் தொகுப்பு டிவிடி வாங்கினேன். முன்னாடி அர்த்தம் புரியாம படம் பார்த்ததுக்கும் சப் டைட்டிலோட படம் பார்த்தா கொஞ்சம் புரியும்ன்னு நெனைக்குறேன்.. பார்ப்போம் :))//

புரிதல் முக்கியமல்ல, அதை பார்த்து விட்டு என்னால் முடியும் என்று மாடியில் இருந்து குதித்து விடாதிர்கள், மற்றபடி சப் டைட்டில் மேலும் குழப்பத்தை தரும் பாருங்கள்.

வால்பையன்

வால்பையன் said...

tamilkannan said:
வாருங்கள் அண்ணா, உங்கள் பின்னூட்டத்தை பார்த்து ரொம்ப சந்தோசம்,

//கனவில் ஒருவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அவரும் சரியான பதில் சொல்கிறார். ஆனால் அந்த பதில் அவர் சொல்லும் வரை கனவில் வரும் எனக்கு தெரியாது. உண்மையில் கேள்வியும் நானே, பதிலும் நானே. //

இதை தான் கனவு ஒரு குறியீடு என்று சொல்லியுள்ளேன், உங்களை போலவே நிறைய கேள்விகளுக்கு பதில் கண்டுள்ளேன் .

//சுஜாதா நாவலோ பாலகுமாரன் நாவலோ படித்து விட்டு தூங்கினால் அவர்களை போலவே அச்சு அசல் நடையில் கனவில் கதை எழுதுகிறேன்.//

என்ன ஆச்சர்யம் பாருங்கள் இதே போல் எனக்கும் நடந்திருக்கிறது.

//மற்றபடி உங்களின் எழுத்து நடையை ரசித்தேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.//

உங்கள் ஊக்கமே என் பலம்.கண்டிப்பாக எழுதுகிறேன் அண்ணா

வால்பையன்

tamizh said...

//என் கனவுலகம் என்பது வேறா. அங்கே வேறொரு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா.//
இப்படித்தான் தேடல் துவங்கும்!! (இறுதியில் அது (இறையுணர்வு அல்லது) நம்மை மீறின ஒரு சக்தி என்று எங்கோ சென்று முடியலாம் (..லாம்).

உங்களைப் போல் இந்த தேடல் துவங்கியபோது, நானும் இறைவனைத் தொழுபவர்களை பார்த்து நகைத்தவள் தான்... இன்றும் இறைவன் பேர் சொல்லி மூடநம்பிக்கையில் காலம் தள்ளும் மூடர்களை பார்த்து
நகைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்..


நல்ல பதிவு!! எனக்கும் சிறுவயதிலிருந்தே ஒரு கனவு தோன்றும். விழிக்கும் வரை நடுங்கி போவேன். ஒருமுறை அர்த்தமுள்ள இந்துமதம் படித்தபோது, அந்த கனவின் காரணம், நான் விரும்பும் என் எதிர்காலத்தை உறுதிப்படித்தித்தியது.

நான் சொல்ல வந்ததில் பாதியை தமிழ்க்கன்ணன் கூறிவிட்டார். நாம் வாழும் இந்த வாழ்க்கை யாருடைய கனவோ? அவன்/அவள் கண்விழித்தால் நாம் (கனவு பாத்திரங்கள்) காணாமல் போவோம்...

வால்பையன் said...

tamizh said...
//இப்படித்தான் தேடல் துவங்கும்!! (இறுதியில் அது (இறையுணர்வு அல்லது) நம்மை மீறின ஒரு சக்தி என்று எங்கோ சென்று முடியலாம் (..லாம்).//

என்னை மீறிய சக்தி நீங்கள் உங்களை மீறிய சக்தி நான்!

நம்மை மீறிய சக்தி என்று ஒன்றும் இல்லை!
உங்கள் பதிவில் மொக்கை போட நிறைய இருக்கிறது வந்துகொண்டிருக்கிறேன்.

வால்பையன்

KARTHIK said...

island என்றொரு படம் குளோனிங் முறையில் உருவான மனிதர்களுக்கு சில கருவிகளின் மூலமாக கனவுகள் காட்டப்படும்.அது அவர்கள் சிறுவயதில் இருந்து வளர்ந்தது போல ஒரு மாயையை உருவாக்கும்.கடைசியில் கதாநாயகன் காணும் கனவின் பலனாக அவரும் அவரது சக குளோனிங் இனத்தவரும் விடுதலை பெறுவதாக படம் முடியும்.

என் கனவுகள் எதுவும் பளித்ததில்லை முதலாளி
என் கனவில் வந்த அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது
என்னைத்தவிர )):

வால்பையன் said...

//என் கனவுகள் எதுவும் பளித்ததில்லை முதலாளி
என் கனவில் வந்த அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது
என்னைத்தவிர ))://

ஏற்கனவே திருமணம் முடித்தவர் கனவில் வந்தால் மறுபடி திருமணம் ஆகுமா
ஹீ ஹீ ஹீ :)))

வால்பையன்

நிவிஷா..... said...

Thoughts in our subconcious mind is reflected in our dreams:)

nice post-:)

natpodu
Nivisha

Anonymous said...

கனவுகள் பற்றி நிறைய் ஆராச்சி நடந்துகொண்டிருக்கிறது. கனவுகளுக்கென்று தனியான அலைவரிகள் உண்டு. அதாவது ஒவ்வொரு கனவுக்கும் வேறு வேறான Frequencyகள் உண்டு என்று எங்கோ வாசித்தேன். அத்துடன், கனவுகளின் அலைவரிசையைக் கட்டுப்படுத்தக் கூடுமெனில் ஒருவருடைய கனவுக்குள் இன்னொருவர் நுழையலாம் என ஒரு கட்டுரையில் வாசித்தேன்.

இவை எவ்வளவு தூரம் உண்மை எனத்தெரியவில்லையாயினும் கனவுகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பது உண்மை. அதன் முடிவுகள் சுவாரசியமான விடயங்களாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்

வால்பையன் said...

நன்றி நிவிஷா

நன்றி கெளபாய் மது

!

Blog Widget by LinkWithin