திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!
எனக்கு தொழில் முறையில் ஒரு வலைபூவும் உண்டு.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களும் அதை எப்போது வாங்கலாம்.
விற்கலாம் என்பதை அவர்கள் கைபேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்புவதை நான்கு வருடமாக செய்து வருகிறேன்.
சென்ற வருடம் வரை எந்த குறையுமில்லை!
குறைந்த லாபமே என்றாலும் நஷ்டம் இல்லாமல் எனது வாடிக்கையாளர்களை வைத்திருந்தேன்.
சென்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் ஏற்ப்பட்ட அசாத்திய விலையேற்றம்.
கடுமையாக பாதித்தது. சிலர் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.
போன வாரம் அதைவிட கொடுமை ஒரே வாரத்தில் தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் குறைந்தது. அதாவது ஒரு கிலோவுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம்.
எத்தனை தங்க வியாபாரிகள் காணாமல் போனார்களோ தெரியவில்லை.
அதில் அதிர்ஷ்ட வசமாக ஒரே ஒரு வியாபாரி மட்டும் லாபம் அடைந்தார்.
அந்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு கைபேசி பரிசளிப்பதாக கூறினார்.
அவர் ஆசை பட்டு கொடுக்கிறார், சரி என்று சொல்லி விட்டேன்.
french express கூரியரில் நேற்று அனுப்பியிருக்கிறார்.
இன்று காலை வந்தடைந்தது. என்ன மாடலாக இருக்கும் என்று ஆவலோடு பார்சலை பிரித்தால், வெறும் charger மட்டும் உள்ளே இருக்கிறது.
பார்சல் பக்காவாக இருக்கிறது. பிரித்தது போலே தெரியவில்லை.
அவ்வளவு தொழில் நேர்த்தி.
போனது பொய் விட்டது . எதற்கும் விசாரித்து வைப்போம் என்று தெரிந்த நண்பனிடம் கேட்டால், இதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறதாம். வரும் பார்சலில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து பார்சல் கலையாமல் திருடுவது இவர்களின் வேலை, டேலிவிரி பாய் இவர்களுடன் கூட்டு.
நீதி: விலை உயந்த பொருள்களை கூரியரில் அனுப்பாதிர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 வாங்கிகட்டி கொண்டது:
தீபாவளி சமயத்தில் துணிகள் அனுப்பி காணாமல் போன பார்சலுக்கு சண்டை போட்டு அதே மதிப்பிற்குரிய பணத்தைப் பெற்றேன்.
முயலவும். தளராமல் முருங்கை மரம் ஏறவும்.
உனக்கு செல்போன் பரிசளித்த நபர், வெறும் சார்ஜரை மட்டுமே அனுப்பியிருக்கலாம் இல்லையா? அப்படி இல்லையென்றால் அந்த கூரியர் கம்பெனி மீது ஒரு வழக்கு போட்டு வையும்.
Never trust this franch express courier. 4 yrs back, my hostel friend asked me to courier 2 sarees and few books to her sister. But one saree was missing when it was delivered. They are total cheaters. Do send thru some real good couriers like Professional...
Thanks anony
vaalpaiyan
ask him to sleep that courier service.very bad service
//ask him to sleep that courier service.very bad சர்வீஸ்//
அவனுங்க நம்மள தூங்க வச்சுருவானுக்க பாஸ்
வால்பையன்
Post a Comment