என்று தனியும் இந்த பிராந்தி தாகம் மற்றும் தமிழக அரசின் ஆணாதிக்கத்தை பற்றி!!


வியாழன் இரவு பெங்களூர் செல்லலாம் என்று நானும் என்னுடைய முதலாளி கார்த்திக்கும் கிளம்பினோம். அதன் முன்னர் ஒரு குவாட்டர் போடாலாம் என்று எனக்கு தோன்றியது, எனது ஆபிஸ் அருகில் இருக்கும் டாஸ்மார்க் கடையில் M.C கேட்டால் இல்லை. ஆனால் கார்டினால் இருக்கிறது என்று பதில், வெகு நாளாக இதை பற்றி சண்டை போட வேண்டும் என்று நினைத்த நான் அன்று பிடித்து கொண்டேன்.

எந்த பிராந்தி யார் கேட்டாலும் இல்லை என்றால் அவர்கள் பதில் அதற்கு மாற்றாக கார்டினால் இருக்கிறது என்பது தான். ஈரோடு பிராந்தியத்தின் டாஸ்மார்க் மேலாளராக இருப்பவர் ஏற்கனவே கார்டினால் கம்பெனியில் வேலை செய்திருக்கிறார். அவரை வேலைக்கு அமர்த்தவும் அவர் கார்டினல் மற்றும் அந்த கம்பெனி தொடர்புடைய சரக்குகள் விற்கவும் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார், அவருக்கு இதற்காக அந்த கம்பெனி குடுக்கும் கூலி 47 கோடி ரூபாயில் ஒரு வீடு கோவையில்.
*************************************************
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 20,000 ரூபாய் தருவதாக அறிவிப்பு.
திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து செலவு செய்யும் ஒரு நிகழ்ச்சி.
அதில் பெண்களுக்கு மட்டும் உதவி தொகை, வரதட்சினை ஊக்கபடுத்தும் ஒரு செயலாகவே எனக்கு தோன்றுகிறது.
ஆணும் பெண்ணும் சமம் என்ற பொழுது பெண்ணுக்கு மட்டும் ஏன் உதவி தொகை.
ஏழை ஆண்கள் இல்லையா, இல்லை இது ஓட்டுக்காக மட்டும் செயல் படுத்தும் ஒரு அறிவிப்பா?.
பெண் குழந்தை பெற்றவர்கள் தெரியாதனம்மா பெற்றிடோம் என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் பெண் உரிமை இருக்கிறது.

எவ்வளவோ விசயங்களுக்கு உதவி தேவைப்படும் இந்த தமிழகத்தில், திருமணம் என்பது ஒரு டுபாக்கூர் என்று சொல்லிய பெரியாரின் சீடர்கள் செய்யும் இந்த ஆணாதிக்கத்தை கண்மூடி தனமாக எத்தனை பகுத்தறிவு(!?) சீடர்கள் ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை

9 வாங்கிகட்டி கொண்டது:

தமிழன் said...

ஒருவரை பற்றி எழுதினால் உடனே அவருடைய ரசிகன் என்று கூறுவது தமிழன் பண்பாடு அதை மீறாமல் கடைபிடித்த வால்பைய நன்றி, எனினும் தயவு செய்து ஈழ விவகாரத்தில் ஆதரவு கொடுபவன் கிறுகனாக என்னால் ஒதுக்க முடியவில்லை. வால்பைய 29 மற்றும் ஏப்ரல் 5 தேதி அவருக்கு கூடும் கூட்டத்தை பார் அந்த கிறுக்கன் உடைய பழம் உனக்கு புரியும்.

கண்ட பதிவுகளை போடாமல் ஈழத்தை பற்றி நிறைய எழுதுங்கள் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

http://dilipan-orupuratchi.blogspot.com

Irai Adimai said...

மப்பு ஓவரா !சரி அது போகட்டும் தலைப்பு தணியும் அல்லது தனியும் எது சரி

g said...

உனக்கு குடிமகன்கள் மீது தான் எவ்வளவு பாசம. எம்.சி. கேட்டா, கார்டினல் தான் எடுத்து கொடுக்கறாணுக. என்ன செய்ய டாஸ்மாக் கடை சூப்பர்வைசருங்க அந்த அல்ப காசுக்கு ஆசைப்பட்டுகிணு குடிமகன்களை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டானுங்க. அவனுங்கள சும்மா விடக்கூடாது. நமக்கு ஒரு சங்கம் ஆரம்ச்சி போராட்டம் பண்ணனும். அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரூ. என்ன நைனா, நான் சொல்றது கரிகீட்டா.

KARTHIK said...

// இந்த ஆணாதிக்கத்தை கண்மூடி தனமாக எத்தனை பகுத்தறிவு(!?) சீடர்கள் ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை. //

இதுக்கு பதில் நீங்க தான் சொல்லணும்.
கழககண்மணிகள் படத்த நீங்க தான் உங்க வண்டி number plate ஒட்டிவெச்சுருக்கிங்க.அதனால நீங்கதான் பதில் சொல்லணும்.

வால்பையன் said...

//ஈழ விவகாரத்தில் ஆதரவு கொடுபவன் கிறுகனாக என்னால் ஒதுக்க முடியவில்லை//

எல்லோரையும் சொல்லவில்லை நண்பா!
சில அரசியல் கோமாளிகளை மட்டும் தானே சொல்கிறேன்.
நல்லது நடந்தால் யார் வேண்டாமென்று சொல்லபோகிறார்கள்.

//கண்ட பதிவுகளை போடாமல் ஈழத்தை பற்றி நிறைய எழுதுங்கள் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.//

கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//தலைப்பு தணியும் அல்லது தனியும் எது சரி//

கொஞ்சம் மப்புன்னா சின்ன னி நிறைய மப்புன்னா பெரிய ணி
நம்ம இஷ்டம் தான்.

வால்பையன்

வால்பையன் said...

//அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரூ. என்ன நைனா, நான் சொல்றது கரிகீட்டா.//

வாங்க ஜெய் உங்க ஊர்லயும் இதே பிரச்சனை தானா!!
தலைவர் பதவிக்கு எல்லாம் இன்னும் நிறைய அனுபவம் வேணும்.
என்னைவிட பெரிய பெரிய குடிமகன்கள் எல்லாம் இருக்கிற இடத்துல
வால் ஆடக்கூடாது. அதெல்லாம் பெரிய தலைங்க பார்த்துகுவாங்க

வால்பையன்

g said...

உங்க மெயில் ஐ.டி. கொடுங்க மிஸ்டர் வால்!

வால்பையன் said...

//வல்பையன் 29 மற்றும் ஏப்ரல் 5 தேதி அவருக்கு கூடும் கூட்டத்தை பார் அந்த கிறுக்கன் உடைய பலம் உனக்கு புரியும்.//

முடிந்து ஒரு வாரம் ஆகிறது. அதனால் தான் சொன்னேன்,
யாரை வேண்டுமானாலும் நம்பலாம், இந்த கிறுக்கனை மட்டும் நம்பக்கூடாது என்று!
இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
நண்பர் தீலிபன் அவர்களே

வால்பையன்

!

Blog Widget by LinkWithin