எனக்கு ஏன் கவிதை பிடிப்பதில்லை!!!

கவிதைகளை அல்ல, கொலை செய்யப்பட்ட கவிதைகளும் அதை கொலை செய்பவர்களையும் தான் எனக்கு பிடிப்பதில்லை.

எங்கள் ஊரில் எல்லாம் ஒருவன் கவிதை எழுதினால் அவன் காதலிக்கிறான் என்கிறார்கள்.
சோக கவிதையா காதாலில் தோல்வியாம்.

"நேற்று நகரத்துக்கு சென்று ஒரு விளக்கு வாங்கினேன்."

நேற்று
நகரத்துக்கு
சென்று
ஒரு
விளக்கு
வாங்கினேன்

மேலே இருப்பது வாக்கியம்
அதன் கிழே இருப்பது கவிதை

இதில் சிக்கி தான் இன்று தமிழ் கவிதைகள் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு என்னிடம் புலம்புகிறது.

கவிதைகள் சிலவரிகளில் பெரும் வாழ்வை சுட்டி காட்ட வேண்டும்.
வலிகளை உணர்த்த வேண்டும்
குறைந்த பட்சம் நமக்கு கவிதை படிக்கிறோம் என்ற உணர்வையாவது தரவேண்டும்.

"தன் பின்னலைத் தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது"

அய்யனார் கவிஞர் அகிலனை பற்றிய பதிவு போட்டிருக்கிறார்.
அது கவிதை அந்த வரிகள் நமக்கு எவ்வளவு செய்திகளை சொல்கிறது.

இது போல் கவிதை எழுத தெரிந்தால் எழுதுங்கள் இல்லையென்றால்
கவிதையை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று வழக்கு போடுவேன்

9 வாங்கிகட்டி கொண்டது:

தமிழச்சி said...

என் மீது நீங்கள் வழக்கு போட முடியாது. ஏனெனில் நான்
எழுதுவது "தமிழச்சியின்
கிறுக்கல்கள்" தான் கவிதை இல்லை என்பதை "தெனாவட்டாக" தெரிவித்துக் கொள்கின்றேன் தோழர்!

http://thamizachikirukkalkal.blogspot.com/

manjoorraja said...

சுக (சுத்தக் கழுத்தறுப்பு கவிதைகள்!?) அல்லது கவுஜைகள் என தற்காலத்தில் கூறப்படும் ஒரே பத்தியை மடித்து எழுதி கவிதை என சொல்லப்படுபவை காலத்தால் அழிந்துவிடும்.

நல்லக் கவிதைகளே நிற்கும்.

tamizh said...

இப்படி பொதுவாக திட்டாமல் நேரிடையாக சொல்லிப்பாருங்கள், அப்படியும் நிறுத்தவில்லையென்றால்
வழக்கு போடுங்கள். (ஏதோ ஆர்வத்தில் சில எழுத்துகளை கோத்து கவிதை என்று உளறிக்கொண்டிருக்கும் சிலர்(சிலர்), சில காலம் எழுதிவிட்டுதான் போகட்டுமே, பாவம்....)

வால்பையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி!!

நல்ல கவிதைகளை எதிர்பார்த்து தான் இந்த மொக்கை பதிவு
ரோசம் வந்து எழுதி தள்ளட்டும்

வால்பையன்

இறக்குவானை நிர்ஷன் said...

எங்கே செல்லும் இந்தப் பாதை...
யாரோ யாரோ அறிவாரோ?

Tech Shankar said...

எல்லோராலும் எப்போதும் கவிதை எழுத முடியாது
அடிக்கடி கிறுக்கல்களை வெளியிட்டும்
எப்போதாவது அதுவாகவே நல்ல கவிதையும் வெளிப்படும்.


உங்கள் கருத்தைப் பிறர் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட ஒரு விதத்தில் கவிதைதான்.

கவிதையை ரசிக்க மட்டுமே செய்யுங்கள்.
அதை ஆராயமுற்பட வேண்டாம்

வால்பையன் said...

தமிழ்நெஞ்சம் said...
//எல்லோராலும் எப்போதும் கவிதை எழுத முடியாது
அடிக்கடி கிறுக்கல்களை வெளியிட்டும்
எப்போதாவது அதுவாகவே நல்ல கவிதையும் வெளிப்படும்.//

எல்லோரும் எப்போதும் என்பதையே கவிதையின் தொடக்க வாக்கியனாக கொண்டு கவிதை எழுதலாம், கவிதை எழுதுவதற்கு தனி தகுதி ஏதும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

கவிதையில் வார்த்தைகள் குறியீடுகளாக பயன்படுத்த படவேண்டும், அதுவே பல அர்த்தங்களை கொடுத்துவிடும். அது இல்லாமல் முழு கதையையும் கவிதையாக சொல்வது சிறுகதையின் வேறெரு வடிவமாக தான் எனக்கு தோன்றுகிறது.

//உங்கள் கருத்தைப் பிறர் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட ஒரு விதத்தில் கவிதைதான்.//

இதை சொல்லி என்மேலே வழக்கு போட வைக்கிறீர்களா! :)))


//கவிதையை ரசிக்க மட்டுமே செய்யுங்கள்.
அதை ஆராயமுற்பட வேண்டாம்//

அப்படியே ஆகட்டும்.

வால்பையன்

வால்பையன் said...

//நான்
எழுதுவது "தமிழச்சியின்
கிறுக்கல்கள்" தான் கவிதை இல்லை என்பதை "தெனாவட்டாக" தெரிவித்துக் கொள்கின்றேன் தோழர்!//

தோழர் தமிழ்நெஞ்சம் கூற்று படி உங்கள் கிறுக்கல்லிருந்தும் நல்ல கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

வால்பையன்

தென்றல்sankar said...

vow nalla vaakkuvaatham vaal paiyan yeanpathu sariyaakathaan yirukkirathu

!

Blog Widget by LinkWithin