தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக என்று பல விசங்களில் சொல்ல கூடிய விதமாக எந்த படம் எடுக்கப்பட்டது.
நாயகன் - வாண்டு ரீக(வ)ன்
நாயகி - ஜெனிபார் லோபஸ்
கதை வசனம் இயக்கம் - வால்பையன்
கதை ஒரு கிராமத்தில் நடக்கிறது, அதிகம் மக்கள் தொகை இல்லாத இந்த கிராமத்தில், அதிகம் படித்தது நமது நாயகன் மட்டுமே.
வேறு யாரும் மூன்றாம் கிளாஸ் வரை படித்ததில்லை!?
நாயகனுக்கு வேலை மற்றவர்களுக்கு வரும் கடிதத்தை (அது எந்த மொழியில் இருந்தாலும்)படித்து காட்டுவது, இது வரை யாரும் தப்பு கண்டு பிடித்ததில்லை.(தெரிந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு)
இங்கே தான் வில்லன் வருகை, கிராமத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாண்டு ரீக(வ)ன் எடுப்பதை விரும்பாத வில்லன் வெளியூர் (வெளிநாடு இல்லப்பா) சென்று பல கெட்ட வார்த்தைகளை கற்று கொண்டு வருகிறான்.
முதலில் கதாநாயகனுடன் பழக கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்புகிறான். அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆத்திரம் அடைந்த வில்லன், அனைவருக்கும் வாண்டு ரீக(வ)ன் பெயரிலே ஆபாச கடிதம் எழுதுகிறான்,
அதிர்ச்சி அடைந்த நாயகன் ஓட்டு கேட்பது போல் எல்லார் வீட்டிற்கும் சென்று "நான் அவனில்லை" "நான் அவனில்லை' என்று புரிய வைக்கிறார்.
இதில் சஸ்பென்ஸ் என்னவென்றால் அந்த வில்லன் யாரென்றும் யாருக்கும் தெரியவில்லை. எல்லாரிடம் விசாரித்து பார்த்தாலும் அவர்கள் பதிலும் நான் அவனில்லை என்பது தான்,
நாளடைவில் பேரிங் போன fan சத்தம் பழகி போவது போல் யாரும் இந்த விசயத்தை சட்டை செய்யவில்லை,
சரி அப்பொழுதாவது வில்லனை காட்டுவார்கள் என்று பார்த்தால், கடைசியில் ஒரு மனநல மருத்துவமனையின் போர்டை மட்டும் காட்டி விட்டு படத்தை முடிக்கிறார்கள்,
இருந்தாலும் வில்லனை காட்டவில்லை என்பதால் எங்கே என்னொரு பாகம் தொடருமோ என்ற பயத்தோடு மக்கள் வெளியே வருவது அவர்கள் முகத்தில் தெரிகிறது.
நாயகி எங்கே என்று கேட்கிறீர்களா! ஒரே ஒரு காட்சியில் ஒரு புத்தகத்தின் அட்டை படத்தில் ஜெனிபார் லோபசை காட்டுகிறார்கள் அவ்வளவு தான்
தலைப்பின் அர்த்தம் புரியுமென்று நினைக்கிறேன், அது வேறு யாருக்குமல்ல எனக்கு தான்.
6 வாங்கிகட்டி கொண்டது:
//வேறு யாரும் மூன்றாம் கிளாஸ் வரை படித்ததில்லை!?//
Super.
//(தெரிந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு)//
ஏம்பா, இதுக்கென்னே ரூம் போட்டு யோசிப்பீங்களா? ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே.
//வில்லன் வெளியூர் (வெளிநாடு இல்லப்பா) சென்று பல கெட்ட வார்த்தைகளை கற்று கொண்டு வருகிறான்.//
இதுக்கெல்லாம் போயி வெளியூருக்கு போகணுமா, நம்மூரிலே இல்லாத கெட்ட வார்த்தைங்களா?
//நாயகி எங்கே என்று கேட்கிறீர்களா! ஒரே ஒரு காட்சியில் ஒரு புத்தகத்தின் அட்டை படத்தில் ஜெனிபார் லோபசை காட்டுகிறார்கள் அவ்வளவு தான்//
இல்லையே மச்சமச்சினியே நடனம் ஆடியபடி மும்தாஜ் வராங்களே.
பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html
ஆகவே நாயகி மும்தாஜ்னு போட்டீங்கன்னா சரியாத்தான் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'நேக்கு நாக்கு தள்ளிதே'வா. இந்த வார்த்தையே கேட்டவுடனே அனைவருக்கும் சிரிப்பு வரும்.
என்னது? நேக்கு நாக்கு தள்ளுதா? எனக்கு இரவானா நாக்கு கொழையுது.
//ஆகவே நாயகி மும்தாஜ்னு போட்டீங்கன்னா சரியாத்தான் இருக்கும்.//
மன்னிக்கணும், இந்த படத்தின் நாயகன் டோண்டு ராகவன் அல்ல,
வாண்டு ரீக(வ)ன், அந்த இளைஞருக்கு ஜெனிபார் லோபசை தான் பிடிக்குமாம்.
வருகைக்கு நன்றி
வால்பையன்
யாராவது ஏன் அந்த வ என்ற எழுத்துக்கு அடைப்பு குறி என்று கேட்பார்கள் என்று பார்த்தால் யாரும் கேட்கவில்லை
அதனால் நானே சொல்லி விடுகிறேன்
ஆங்கிலத்தில் சில எழுத்துக்கள் சைலன்ட்டாக வேலை செய்வது போல்
இந்த இடத்தில் வாண்டு ரீக(வ)ன் என்ற சொல்லில் வ சைலன்ட்
வால்பையன்
//'நேக்கு நாக்கு தள்ளிதே'வா. இந்த வார்த்தையே கேட்டவுடனே அனைவருக்கும் சிரிப்பு வரும்.//
இதிலேயே சிரிச்சதனால் பதிவ பத்தி ஒண்ணுமே எழுதலையா!!
வால்பையன்
Post a Comment