பின்நவீனத்தை கண்டு பயம் ஏன்? தொடர்ச்சி!!!

இதன் முந்தய பாகம்
படித்து விட்டு வந்தால் கொஞ்சம் புரியும்!

தமிழில் சிவாஜி நடித்த அந்தநாள் பின்நவீனத்தை சேர்ந்த படம்!
இதில் சிவாஜியை கொன்ற கொலைகாரன் யாரென்று கடைசிடில் தான் தெரியும். அதைவரை நாமே இவராயிருக்குமோ, அவரையிருக்குமோ என்றோ குழம்பி கொண்டிருப்போம்.

விருமாண்டி இந்த வகையில் எடுக்கபட்டாலும் இதில் பசுபதி விளிம்பு நிலை மனிதராகவே காட்சி தருகிறார், ஆகவே கமல் மையவாதியாகிறார்.

சரி இது என்ன விளிம்பு, மைய நிலை

சட்டம் இயற்றுபவர்கள் மையவாதிகள்,
உரிமைக்காக போராடுபவர்கள் விளிம்புநிலை மனிதர்கள்.

பின்நவீனதுக்கு முன் உருவான மதங்கள், நம்மை சுதந்திரத்துக்கு அழைத்து செல்லுவது போல் தத்துவங்களை கொண்டது, அதாவது நாமெல்லாம் எதோ சிறையில் இருப்பது போலவும், இந்த மதத்தை பின்பற்றினால் நம்மை சொர்க்கத்து அழைத்து செல்வது போலவும்

சிறையில் இருப்பதாக நம்புவோர் அதாவது விளிம்பு நிலை மனிதர்கள். யாரையாவது நம்பி தான் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அங்கே அவர்களை அழைத்து செல்ல எதாவது அதிசியம் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

சுததிரமாக தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள். மைய வாதிகள்.
உண்மையான பின்நவீனத்துவவாதிகள் விளிம்பு நிலை மனிதர்களை மனிதர்களாக தான் பார்க்கிறார்கள்(மனிதநேயத்துடன்) அவர்களை அடக்கி ஆள அவர்கள் நினைப்பதில்லை.

பின்நவீனம் என்பது ஒரு எளிமையான கோட்பாடு
நடிகரின் சினிமாவை பார்
நடிகரின் ரசிகனாய் இருக்காதே!

கட்சிக்கு ஓட்டு போடு.
கட்சியின் தொண்டனாய் இருக்காதே!

அதாவது நீ யாருக்காவது அடிமையாக தான் இருக்கவேண்டும் என்பது தேவையில்லாதது என்கிறது பின்நவீனம்.

விளிம்புநிலை மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை உண்மை என்று நம்புகிறார்கள்.
புதுமைகள் தங்கள் நம்பிக்கையை பொய்யாக்குவதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

அப்படியே புதுமைகளை உபயோகபடுத்தினாலும், அவைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்கிறார்கள். சரி அப்படியென்றால் அடுத்தது என்ன என்று தீர்மானிக்கபட்டிருக்கும் அல்லவா அதை சொல்லவேண்டியது தானே!!!!

1 வாங்கிகட்டி கொண்டது:

tamizh said...

//அடுத்தது என்ன என்று தீர்மானிக்கபட்டிருக்கும் அல்லவா அதை சொல்லவேண்டியது தானே!!!!//

தீர்மானித்வனைத்தவிர வேறொருவருக்கும் அது தெரியாது!
(this is my unprooved guess)

மதம் என்பது வேறு, இறை நம்பிக்கை என்பது வேறு. மதங்களுக்கு அப்பாற்பட்டதுதான் ஆன்மீகம். அதனால் தான் விவேகானந்தரும் மதத்தை போற்றியதில்லை.

//நடிகரின் ரசிகனாய் இருக்காதே! //
ரசிகனாய் இருக்கலாம், ஆனால் அதன் பேரில் காலத்தையும் கடமைகளையும் விட்டு ஆநாவசிய வேலைகளில் ஈடுபடதான் கூடாது!
(this is just my opinion)
ரசனை என்பது ஒரு உணர்வு, அதனை இல்லாமல் ஆக்குவதுதான் பின்நவீனமோ?

!

Blog Widget by LinkWithin