இலவசத்துக்கும், மானியத்துக்கும் படித்த அறிவிஜீவிகளே குழப்பிக் கொள்ளுதல் நகைமுரண்
அரசு பள்ளிகளில் கட்டணம் பெறுவதில்லை, அப்படியே பெற்றாலும் அது மிக சொற்பமாகவே இருக்கும், ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவ/மாணவியர் படிப்பு உபகரணங்களுக்கும் அரசே பணம் கொடுக்கிறது. அது இலவசமா?
மத்திய, மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம், மனித வள மேம்பாடு என சில முக்கிய துறைகளுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து கணிசமான தொகையை ஒதுக்குகிறது. அதிலிருந்து தான் கல்விக்கும், அரசு மருத்துவமனைக்கும் மேலும் ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்களும் கொடுக்கப்படுகிறது
ஃபேன், மிக்ஸிக்கு பதில் வேற வழியில் மனிதவள மேம்பாட்டை யோசிக்கலாம் என்பது என் கருத்தாக இருந்தாலும் அதுவும் மக்கள் வரிபணம் தான், எந்த கட்சிகாரனும் சொந்த காசில் அதெல்லாம் கொடுப்பதில்லை, கொடுக்கும் அரசு அதில் தனக்கான விளம்பரத்தை தேடிக்கொள்வதால் தான் சினிமா வரை பேசப்படும் உறுத்தலாகி விட்டது
அரசு பள்ளியில் படித்து, இட ஒதுக்கீட்டில் வேலை பெற்ற ஒருவரின் பிள்ளை இட ஒதுக்கீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என பேசிக்கொண்டு திரியிறான். இட ஒதுக்கீடு சமத்துவதை அழிக்கிறது என்று பார்ப்பனியத்தின் விசதிணிப்பு இது.
இலவச அரிசி மற்றும் இலவச பொருட்களால் ஒரு அரசு பெறும் விளம்பரத்தை விட அதிக அளவில் கொள்ளையடிக்கிறது, நமக்கு கொடுக்கப்பட்டது நம்மிடம் இருந்து வாங்கிய வரி பணம் தான் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவற்றால் தான் நாடு நாசமா போச்சுன்னு பேசுறது சிறிதும் புரிதலற்ற மேட்டுகுடிதனம்
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment