சிட்டுகுருவியும், செல்போன் டவரும்....

பறவைகளும், கடல் ஆமை இனங்களும் எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸ் என்றழைக்கப்படும் மின்காந்த அலைகள் மூலமாக திசையையும், தான் செல்ல வேண்டிய பாதையையும் அறியும்

அதனால் தான் பல ஆண்டுகள் கழித்தும் ஆஸ்திரிலேயாவில் இருந்து வேடந்தாங்கலுக்கு பறவைகளால் வரமுடிகிறது, தான் பிறந்த இடத்திற்கே முட்டை இட ஆமைகளால் வரமுடிகிறது

அமெரிக்காவில் வானுர்ந்த கட்டிடங்களின் கண்ணாடியில் மோதி ஆண்டு தோறும் ஆயிரங்கணக்கில் பறவைகள் இறக்கின்றன, ஆனால் செல்போன் டவரால் இறந்ததாக எந்த குறிப்பும் இல்லை

நகர பகுதியில் காகங்கள் மட்டும் இருக்கும், அவைகளை கேவஞ்சர்ஸ் என அழைப்போம் அதாவது துப்புரவாளர்கள், தெருவில் கிடக்கும் செத்த எலி, பழைய உணவு ஆகியவற்றை உண்டு அவை வாழுவதால் அவைகள் நகரத்தை விட்டு செல்லாமல் இருக்கிறது



சிறு பறவைகள் தங்க போதிய ,மரங்கள் இல்லாமல் இடம் பெயர்ந்து விட்டன, நகரமயாக்கலின் தாக்கமே நம்மால் பறவைகளை பார்க்கமுடியவில்லையே தவிர செல்போன் டவருக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை, உதாரணம் சிட்டுகுருவிகள் ராம்ராடு பகுதியில் பரவலாக காணப்படும்

செல்போன் டவரில் இருந்து வரும் சிக்னல் என்பது தன்னிச்சையாக இயக்குவது அல்ல, அவைகள் ஏற்கனவே இருக்கும் மின்காந்த அலைகள் மீது சவாரி செய்பவை. எங்கே அதை உள்வாங்கிக்கொள்ளும் ரிசீவர் இருக்கிறதே அங்கே தஞ்சம் அடையும்.



காக்கா கரைந்தால் சொந்தகாரங்க வருவாங்க, காகம் நமது முன்னோர்களின் ஆத்மா போன்ற மூடநம்பிக்கை போன்று பிற்போக்குவாதி எவனோ கிளப்பி விட்டது தான் செல்போன் டவரால் பறவை இனங்கள் அழிக்கின்றன என்பதும்

இப்பூமியில் ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் எதேனும் தடை ஏற்படுத்தினால் இயற்கையின் துணையோடு அது தன்னை தகவமைத்துக்கொள்ளும். அது பரிணாமத்தின் முக்கிய அம்சம். பறவைகள் நம்மை விட வாழும் அறிவை அதிகம் பெற்றவை,

அதனால் சினிமாவை சினிமாவா பாருங்க, செல்போனை போட்டு உடைக்காதிங்க

பின்குறிப்பு:நான் இன்னும் படம் பார்க்கல

பரிமாணங்கள்.....

பூமியில் வாழும் மனிதர்களாகிய நாம் உணர்ந்தது அல்லது உணர்ந்ததாக நம்புவது மூன்று பரிமாணங்கள். ஒரு கனசதுரத்தில் இருக்கும் நீளமும், அகலமும் இரண்டு பரிமாணங்கள் என்றால் அதன் உயரம் தான் மூன்றாம் பரிமாணம். 3டி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் திரைபடங்கள் அவ்வாறு அழைக்க காரணம், மற்ற படங்களில் காட்சிகள் முன்னே வராது, அதை உயரமாக கொள்ளலாம்

இங்கே நாம் பேசப்போவது பரிமாணம் பற்றி தான், ஆனால் ஒருவேளை நம்மை விட உயரிய உயிரினங்கள் வேறு எதோ ஒரு கிரகத்தில் இருந்தால், அவைகள் மூன்று பரிமாணங்களையும் தாண்டி அதை உணர்ந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற சிலர் அறிவியலர்கள் கூற்று சாத்தியமா என்பதை பற்றி



நாம் அறிந்த மூன்று பரிமாணங்கள் தவிர்த்து நான்காம் பரிமாணமாய் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது காலம். நம்மால் இப்படி நீள, அகலத்தை உணரமுடிகிறதோ அதே போல் காலத்தை முழுமையாக உணர்ந்தால் அதை வளைக்கமுடியும் என்கிறது ஒரு தியரி, லூசி என்ற ஆங்கிலப்படம் பார்த்தவர்களுக்கு இது புரியலாம், இருத்தல் என்பது காலத்தை வைத்தே தீர்மானிக்கபடுகிறது என்பதே அந்த தியரி, அதை நம்மால் வளைக்கமுடிந்தால் ஐன்ஸ்டீன் தியரி இல்லாமல் நம்மால் இறந்தகாலத்திற்கும், எதிர்காலத்திற்கும் போய் வர முடியும் எங்கிறது தியரி(எனக்கு மாற்று கருத்து உண்டு)

அதை தாண்டிய பரிமாணமாக எது இருக்கலாம், அது நம்மை விட மேம்ப்பட்ட உயிரினம் இருந்தால் அவற்றால் வேறு எது சாத்தியப்படலாம் என நான் யோசித்ததில் அவர்களால் தங்கள் முன் இருக்கும் பொருட்களின் அணுக்களை உடைந்து முன்னேற முடியும் என கணித்தேன். அது சாத்தியமா?


\
காற்றும் மூலக்கூறு அணுக்கள் தான், அவற்றை மனிதனால் உடைந்து முன்னேற முடிகிறது, நீர் காற்றை விட ஒற்றினைந்த காற்றை விட கடினமான மூலக்கூறு அணு, அதையும் மனிதனால் உடைத்து முன்னேற முடிகிறது, அப்படியானல் நம்மால் உடைக்கமுடியாத கல், உலோகம் போன்ற கடின மூலக்கூறு கட்டமைப்பை உடைக்கக்கூடியது சாத்தியமில்லாத ஒன்றா

நம்மால் கடினமாக உணரப்படும் கல்லும், இரும்பும் உண்மையில் கடினமாக அணு கட்டமைப்பா என்றால் ஆம் ஆனால் அதை விட பலகோடி மடங்கு கடின அணு கட்டமைப்பும் உள்ளது எங்கிறது அறிவியல்., நமது சூரியன் தினம் கோடிக்கணக்கான அணுக்களை இழந்து அதன் நிறையை சேர்த்து இழந்துக்கொண்டிருக்கிறது, ஒரு கட்டத்தில் சிகப்பு ராட்ச்சன்(red giant) என்ற நிலையை அடையும்

அந்த சமயத்தில் இண்டர்செல்லர்(சூரிய மண்டலத்தின் எல்லை) வரை உள்ள பொருட்கள் அனைத்தையும் விழுங்கி சாம்பலாக்கி தன்னுள் அடக்கிக்கொள்ளும், மேலும் மேலும் அழுத்தம் அடையும் சூரியன் நியூட்ரான் ஸ்டார் என அழைக்கப்படும் whitedwarft ஆகும், அதாவது வெள்ளைகுள்ளன்,



அதை புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்த பூமியின் அளவு உங்களுக்கு தெரியும், அதை கோலிகுண்டு அளவுக்கு சுருக்கினால் எப்படி இருக்கும், பூமியின் இதே எடை ஆனால் கோலிகுண்டின் அளவே, அப்படியே தான் நியூட்ரான் ஸ்டாரின் ஒரு ஸ்டியூஸ்பூன் அளவு சூரியன் ஒரு பூமியின் எடை இருக்கும். இப்போது சொல்லுங்கள் நாம் பார்க்கும் கற்களும், இரும்பும் கடினமான மூலக்கூறு அணு கட்டமைப்பா?

இதில் இன்னொரு விசயம் இருக்கிறது, ஒரு சூரியன் அதன் இண்டர்ஸ்டெல்லரை விழுங்கும் பொழுது அந்த இடமும் விழுக்கப்படும் என்பது என் தியரி, ஏன்னா இங்கே இடம் என்று எதுவும் இல்லை, அனைத்தும் டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜியால் ஆனது, சூரியன் அதையும் சேர்த்து தான் விழுங்கும் அதை பற்றி மற்றொரு பதிவில் விபரமா எழுதுறேன்.

2019 தேர்தல் முன்னோட்டம் - அதிமுக, பாஜக

இருவருமே தற்சமயம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும் தென் பகுதியில் அவர்களால் காலூன்ற முடியவில்லை, மோடி அலை இந்த பக்கம் வீசவேயில்லை, மோடியா, லேடியா என்பதில் மக்கள் லேடி பக்கம் நின்றார்கள்

ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது, இரட்டை இலை என்னும் முத்திரையும் உதவி செய்தது, பெரும் கூட்டணியுடன் களம் இறங்கினாலும் பாஜக ஒரே ஒரு சீட்டு மட்டுமே பெற முடிந்தது, அந்த பகுதியில் கிறிஸ்தவர்களும், இந்துகளும் சரிசமமாக இருந்தாலும் காங்கிரஸ் மேல் இருந்த வெறுப்பும், கூட்டணி கட்சிகளின் ஓட்டும் அந்த ஒரு சீட்டை வாங்கி கொடுத்தது.



வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சொல்லிக்கொள்ளும்படியான கட்சிகள் கூட்டணி சேராது என்பது என் கணிப்பு ஆனால் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி அமைக்கும், நோட்டோவுடன் போட்டியிட்ட அவர்களை விட அதிக ஓட்டு வாங்கி மானத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவிற்கு நிச்சயம் பலமான கூட்டணி தேவை

கிருஷ்ணசாமி நிச்சயம் பாஜகவுடன் இருப்பார், இன்னபிற ரெய்டு பயந்தாகோழிகள் வேறு வழியின்று ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள், பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இடதுசாரிகள் அந்த பக்கம் போகமாட்டார்கள், ஆனால் மதிமுக நேரத்திற்கு தகுந்தாற்போல் வர்ணம் மாறும் கட்சி, அவர்களை நம்ப முடியாது.



அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா என்ற ஒற்றை பெண்மணி தான் மொத்தகட்சியையும் நடந்தியது, டி.ராஜேந்தர் போல் நடிப்பதில் இருந்து. கதை, திரைகதை, வசனம், இயக்கம், சொல்லப்போனால் போஸ்டர் ஒட்டும் வேலை மட்டுமே அமைச்சர்களில் இருந்து தொண்டர்கள் வரை, அந்த கட்சியின் அமைச்சர்கள் லட்சணம் தெரிந்தே ஜெயலலிதா அவர்கள் யாரையும் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை, எல்லாமே 110 அறிக்கைகள் தான்

வரப்போவது நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் கவனிப்பார்கள், ஊடக செய்திகள் என்னை பொறுத்தவரை 20% மக்களை மட்டுமே சென்றுடைகிறது, பெரும்பான்மை சீரியல் பைத்தியங்கள். அவர்கள் 200 ரூபாய்க்கு ஓட்டை விற்க மாட்டார்கள் என சொல்லமுடியாது. போக அதிமுக அடிமட்ட தொண்டர்களின் களப்பணியும் முக்கியமானது



ஆயினும் ஜெயலலிதா மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு, அவர்களால் இனி பெரும்பான்மை பெண்கள் ஆதரவை பெற முடியாது. அதிகபட்சமாக அதிமுக 30 தொகுதிகளுக்கு மேல் டெபாசிட் இழக்க வேண்டும், ஓபிஸ்ஸும், ஈபிஸ்ஸும் பாஜகவின் தயவால் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார்களே தவிர அவர்கள் திறமையான நிர்வாகிகள் இல்லை என்பது அனைத்து தரப்பு அரசியல் கவனிப்பார்களின் கணிப்பு

-அடுத்து திமுக

ஈழமும், கார்ப்ரேட் அரசியலும்....

ஈழம் பற்றி படிக்கும் பொழுது உணர்ச்சி பெருக்கெடுத்து துரோககதைகளையும், வீர மரணங்களையும் மட்டுமே பேசுறோம், மறைக்கப்பட்ட கார்ப்ரேட் வரலாறு யாருக்குமே புரியாமல் போகிறது



உள்நாட்டு பிரச்சனை உலகில் உள்ள பாதி நாடுகளில் உள்ளது, இந்தியாவில் காஷ்மீர் கூட உள்நாட்டு பிரச்சனை தான், இந்திய ராணுவம் காஷ்மீரில் செய்து கொண்டிருப்பதை தான் இலங்கை ராணுவம் செய்தது, இன்னும் நாடு நாடாக அகதிகள் அலைந்துக்கொண்டிருப்பதை படித்துக்கொண்டு தான் இருக்கிறோம்

கியூபாவில் நடந்த புரட்சியின் போது இருந்த காலம் வேறு. அங்கே அதிகாரத்தை விட மறுக்கும் பிடிவாதமும், அடக்கி ஆளவேண்டும் என்ற சர்வாதிகார பாஸிசமும் காரணமாக இருந்தது. இன்று ஒவ்வொரு நாடும் சந்தை, ஆம், கார்ப்ரேட்கள் தங்கள் பொருட்களை கடை விரிக்கும் சந்தை

ஈழப்பிரச்சனையில் ஏன் இந்தியா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். அது அவர்கள் உள்நாட்டு பிரச்சனை தானே. இது சாமானர்களின் கேள்வி, ஒருவேளை இந்தியா உதவி செய்யாமல் இருந்தால் சீனா உதவி செய்திருக்கும், இந்திய கார்ப்ரேட்களான டாடா டீயும், அசோக் லேலாண்டும், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கும் இலங்கை சந்தை படுத்த முடியாது, ஆம் இலங்கை நண்பர்களை கேட்டு பாருங்கள், இந்திய பொருள்களுக்கு அங்க உள்ள சந்தையை பற்றி.



இந்த சந்தை அரசியல் போல் தான், உள்நாட்டு கட்டுமான பணிக்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் பெறுவதும், ரஷ்யாகாரன் இந்தியாவில் அணு உலையை நிறுவுவது போலவே அங்கே ரோடு போட இங்கிருந்து எல்&டி நிறுவனம் போகும், இந்தியாவில் சினிமா எடுக்க இலங்கையில் இருந்து லைக்கா நிறுவனம் வரும், இவையெல்லாம் நடக்கவேண்டுமென்றால், கார்ப்ரேட்கள் வாழ வேண்டுமென்றால், அரசு அங்கிருக்கும் ஆதிக்க சக்திக்கு மேலும் வலுவுட்ட உதவி செய்தே ஆக வேண்டும்



இன்னொரு சர்வதேச அரசியலும் இதில் இருக்கிறது. ஏற்கனவே கூறியது போல உள்நாட்டு போர் உலகில் பாதி நாடுகளுக்கு மேல் நடக்கிறது. அதை சமாதனம் செய்ய சில நாடுகள் முயலுமே தவிர புரட்சிகளுக்கு நேரடியாக ஆதரவு அளிக்காது, இங்கே நேரடியான என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியும் என நம்புகிறேன், புரிட்சியாளர்கள் வெற்றி பெற்று ஒரு வேளை தனி ஈழம் கிடைந்திருந்தால் உலகுக்கே அது ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கும்

ஒவ்வொரு நாட்டிலும் ஒடுக்கப்படும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்த தொடங்குவார்கள். ஒவ்வொரு நாட்டில் உள்ள புரட்சிபடையும் இன்னொரு நாட்டில் உள்ள புரட்சிபடைக்கு உதவி செய்யும், உலகம் முழுவதும் அமைதி குலையும், கார்ப்ரேட்கள் வாழ முடியாது, அதனால் புரட்சியாளர்கள் வெற்றி பெற அரசின் மூலமாக கார்ப்ரேட் அனுமதிக்காது

5 மாநில தேர்தல்....

டிசம்பர் 7ஆம் தேதி
சட்டீஸ்கர், மிசோராம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம்
ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது

அதன் முடிவு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படுகிறது

மறைந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தவரையில் வோட்டிங் மிசினில் எந்த தில்லுமுல்லுகளும் செய்யமுடியாது என்றார், அவர் அப்படி சொல்வதற்கு காரணம் அதை வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர்

அந்த நாட்களில் தில்லுமுல்லு செய்யமுடியாமல் இருக்கலாம், இன்னுமா அதற்கு சாஃப்ட்வேர் இருந்தாமல் இருப்பார்கள், இத்தனைக்கும் அப்பப்ப பேப்பரில் எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரையில் லைட் எரியுதுன்னு படிச்சிகிட்டு தான் இருக்கோம்

இவனுங்க நேர்மையும் நமக்கு தெரியும், ஏண்டா லலித்மோடியை தப்ப விட்டிங்கன்னு கேட்டா அவனுக்கு ஆண்டர்சனை தப்ப விட்டார்கள்னு சொல்வானுங்களே தவிர லலித்மோடி பத்தி வாய் திறக்க மாட்டானுங்க



ஒருவேளை இவனுங்க எதாவது தில்லுமுல்லு ஓரளவு இடங்களை பிடித்தால் எதிர் அணியில் இருக்கும் கூட்டணியை உடைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கு

அப்படி ஒருவேளை அமைந்தால், ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டு போட்டேன் என பெருமை புண்ணாக்கு பேசும் பொதுபுத்தி மனிதர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஓட்டளிக்க வாய்ப்பிருக்கு,

மீண்டும் ஒருமுறை பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு நிச்சயாக ஆபத்து, நீட் தேர்வு மாதிரி இந்த சாதி தான் படிக்கனும்னு கூட சொல்வானுங்க. மாற்று மத வழிபாட்டு தளங்களை இடித்து மதகலவரத்தை உண்டு பண்ணுவார்கள், மதசார்பற்ற தன்மையில் இருந்து இந்தியா இந்து நாடு என்ற லேபிள் குத்தவே முனைவார்கள்

பாஜக இந்தியாவின் வைரஸ். எப்படியாவது அழித்தே ஆக வேண்டும்

சிங்கிள் பேரண்டிங்....

சிங்கிள் பேரண்டிங் அவ்ளோ ஒரு கடினமான கரியமா எனக்கு தெரியல.

இந்தியாவில் பல லோயர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் கணவன் குடிப்பதையே தொழிலாக வைத்துக்கொண்டு தன் வருமானத்தை முழுவதும் அதற்கே செலவு செய்கிறான், மனைவி கார்மெண்டில் தைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள், மனைவி அரசு வேலை செய்யும் குடும்பத்தில் கணவன் வேலைக்கு போகாமல் மனைவியிடம் குடிப்பதற்கு பாக்கெட்மணி வாங்கிக்கொண்டு, நான் எப்படி வாழ்ந்த ஆள் தெரியுமா, என்னை சும்மா சும்மா திட்டிகிட்டே இருக்கான்னு மனைவியை குறை சொல்லிகிட்டு இருக்கான், இந்த குடும்பங்கள் கூட சிங்கிள் பேரண்டிங் தான் என்னை பொறுத்தவரை

குழந்தைகளின் முதல் ரோல்மாடலே நாம் தாம். அதை புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும், நாம் பார்த்தது, கேட்டது, பாராட்டு வாங்கியது, அடி வாங்கியது என எல்லாத்தையும் ஃபேஸ்புக்கில் அனத்திட்டு போறோம், செய்யாத தப்புக்கு டீச்சரிடம் திட்டு வாங்கிட்டு, நண்பர்களிடம் சண்டையிட்டு யாரிடம் சொல்வது, யார் தான் நம்மை புரிந்துக்கொள்வார்கள் என குழந்தைகள் ஏங்குவார்கள்

ஹவ் வாஸ் யுவர் டே? என்ற ஒற்றை வார்த்தை கதவை திறந்து விடும். அதனால் அவர்கள் எந்த மாதிரி சூழலில் இருக்கிறார்கள்., அவர்களுக்கு எது பிடித்துள்ளது, எது பிடிக்கவில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடியும், மேலும் உளவியல் ரீதியாக என்ன விதமாக அவர்களை அணுகினால் அவர்களுக்கு சரியான பாதையை காட்டமுடியும் எனபதையும் கண்டுபிடிக்கலாம். இல்லைனா சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி எனக்கு எது நல்லாயிருக்கும்னு பார்த்திங்க, எது பிடிச்சிருக்குன்னு பார்த்திங்களா கதையாகிரும்

குழந்தைகள் என்ன ஆடிகார் வாங்கிக்கொடு, தங்க ஒட்டியானம் வாங்கிக்கொடுன்னா கேட்கப்போறாங்க. அதிகபட்சமா ஜீன்ஸ் பேண்டோ, சூவோ அல்லது என்னை ஓவிய வகுப்பில் சேருங்கள் என்றோ, டான்ஸ் கிளாஸில் சேருங்கள் என்றோ கேட்கப்போறோங்க., பட்ஜெட் போடும் போது அருகில் வைத்துக்கொண்டால் போதும், எது நமக்கு தகுதியானது என்பதை அவர்கள் உணர்வார்கள்

டைரி எழுதும் பழக்கம் வைத்துக்கொள்ளலாம். இன்று என் மகள்/மகன் செய்தது எனக்கு பெரிய மன வருத்ததை தந்தது, இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, அவள்/அவன் தான் என் உலகமே. என்னை தூக்கி எறிந்து பேசிட்டான்/ள் என எழுதி அவர்கள் கண்ணில் படும் படி வைத்து விட்டால் போதும்., அது வரை தன்பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் கூட. அடடே நம்ம அம்மாவை/அப்பாவை கஷ்டபடுத்திடமேன்னு வருந்துவார்கள்

அதிக நேரம் கண்ணாடி முன் நிற்பது, அழகாக உடை அணிய நினைப்பது, பாத்ரூமில் அதிக நேரம் செலவழிப்பது, நண்பர்களும் அரட்டை அடிக்க நினைப்பது எல்லாமே அவர்கள் வயதில் நாம் செய்தது தான், இயல்பிலே அந்த வயதில் தோன்றக்கூடிய உணர்வுகள் தான், அந்த யாதர்த்தை புரிந்துக்கொண்டால் போதும்., குழந்தைகள் நம் அடிமைகள் அல்ல, அவர்களுக்கும் கண்கள் உண்டு, அவர்கள் கண் வழியே பார்க்கும் உலகம் வேறாக இருக்கலாம், அவர்கள் வாழ்வை அவர்களை வாழ விட வேண்டும்

இதனால் தான் என்னால் ஒரு நல்ல அப்பாவாக இருக்க முடிகிறது

ஏழைதாயின் மகன் ஏழைகளுக்காக உழைத்த லிஸ்ட்..

Modi's Russia Visit

Reliance signs pact with Russian arms firm as Modi visits Moscow - Reuters

https://in.reuters.com/article/india-reliance/reliance-signs-pact-with-russian-arms-firm-as-modi-visits-moscow-idINKBN0U70LP20151224

 Modi's France Visit

Anil Ambani's Reliance Group ties up with Dassault after Rafale fighter jet deal - Firstpost

https://www.firstpost.com/business/anil-ambanis-reliance-group-ties-up-with-dassault-after-rafale-fighter-jet-deal-3031950.html

 Modi's Australia Visit

Adani’s Australia coal mine project gets final approval - LiveMint

https://www.livemint.com/Companies/hxfjNJjJO9wzkffSC5NdeK/Adani-gives-final-approval-for-4-billion-Australia-coal-min.html

 Modi's Bangladesh Visit

NTPC, Adani, RPower, Petronet sign pacts for projects in Bangladesh - Hindustantimes

https://m.hindustantimes.com/business-news/ntpc-adani-rpower-petronet-sign-pacts-for-projects-in-bangladesh/story-m9PCksAslRx6Ub0vxfPaoL.html

 Modi's United States' Visit

Reliance Defence signs warship repair pact with US Navy - Live Mint
The deal may generate Rs15,000 crore revenue for Reliance Defence over next three to five years

https://www.livemint.com/Industry/VZqdl90t3NiQZHl7ccylwK/Reliance-Defence-signs-warship-repair-pact-with-US-Navy.html

 Modi's Israel Visit

Adani & Israel's Elbit form JV for unmanned aerial vehicles - Business Standard

https://wap.business-standard.com/content/b2b-manufacturing-industry/adani-israel-s-elbit-form-jv-for-unmanned-aerial-vehicles-116110800721_1.html

Are all these sheer coincidences???

Is Modijee, Prime Minister of India or Business Development Manager for Adani and Ambani???

Have all the Corporates got back their Return on Investment after sponsoring Modijee's election campaigns???

Have we ever heard of Modijee bringing back anything from these foreign trips for Farmers and Middle Class people???

On the contrary we are paying more and more Taxes, suffering regular disruptions and standing in endless Bank Queues

Can we expect media houses to cover this news because, now that huge deals have been signed, they can be rest assured of their hefty pay packets for another decade???


சாதி என்னும் சாக்கடை.....

என்னோட 40 வருட அனுபவத்தில் சாதியை ஒழிக்க அதிக சாத்தியகூறுகள் உள்ள வாய்ப்பா நான் பார்த்தது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பில் இருந்து விடுபடனும், காதல் திருமணத்தை ஆதரித்தாலே சாதி கலப்பு ஏற்பட்டு சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறையும்

அப்படியும் சலுகை கிடைக்கும் சாதி அல்லது ஆதிக்க சாதியை தன் குழந்தைகளுக்கு அடையாள படுத்துவாங்க என்ற வாதம் நான் பார்த்த வரை சொற்பம் தான், அதை விதிவிலக்கு லிஸ்டில் தான் வைக்க முடியும்

சாதி மறுப்பு திருமணங்களுக்கு கேரள அரசு சலுகைகள் கொடுத்தது போல் இந்தியா முழுக்க கொடுக்கனும். கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு அரசு தனி ஒதுக்கீடு கொடுத்தால் 40 வயசுக்கு மேலயும் மொட்டபசங்களா திரியும் சாதி வெறியர்கள் இறங்கி வர வாய்ப்புருக்கும்னு நம்புறேன்



வெளிநாட்டில் சாதி இல்லையான்னு குடும்ப பெயர்களை தூக்கிட்டு வர்றது தான் அவங்க சாதிய பற்றும், வெறியும் தான் பூனைகுட்டி மாதிரி எட்டி பார்க்குமே தவிர, அது சாதியத்தை நியாயப்படுத்தாது

சமுத்துவபுரம் மாதிரி திமுக முன்னெடுத்த விசயங்களை இந்தியா முழுக்க அமுல் படுத்தலாம். பொதுவா ஆதிக்கசாதியினருக்கு இருக்கும் நிலைப்பாடு, ஒடுக்கப்பட்டவர்கள் அந்த சாதி அடையாளத்தால் சலுகை பெறுகிறார்கள் என்பதே.

இங்கே ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தையை நம்மால் விலக்கமுடியவில்லை, இன்றும் ஒடுக்கப்படுவது தான் அவர்கள் சலுகையை மறுக்காமல் இருக்க காரணம், அவர்களும் சக மனிதர்களாக மதிக்கப்பட்டால் அவர்களே சலுகையை தவிர்ப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்

ஒரு குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட பழக்குவது போல், நீச்சல் அடிக்க கற்றுகொடுப்பது போல் அவர்கள் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு கல்வி கொடுத்தாலே போதும், கடைசி வரைக்கும் என் கண்களால் தான் நீ உலகத்தை பார்க்கனும் என்பது அடிமை சமூகம் தான்

அங்கே பெண்ணரிமையும் இருக்காது. சமத்துவமும் இருக்காது


கேர்லெஸ் எக்கானமி....

இந்தியாவில் கேஸ்லெஸ் எக்கனாமி ஓரளவு நடைமுறைக்கு வரவே இன்னும் 50 வருசத்துக்கு மேலாகும் ஏன்னா இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அமைப்புசாரா தொழில்கள் அதிகம் இருக்கும், அந்த தொழிலுக்கு நிலையான வருவானத்துக்கு உத்தரவாதம் இல்லாததால் அதை அமைப்பில் சேர்க்கவும் முடியாது உதாரணத்துக்கு ஒரு ஹோட்டல் தொழிலை நீங்கள் அமைப்பில் சேர்க்கலாம், ஆனா கல்யாணத்துக்கு காலம் காலமா சமைக்கும் தொழிலை அமைப்பில் சேர்க்க முடியாது. அவர்களுக்கு ஒரு மாசம் வரும், ஒரு மாசம் வராது அரசியல்வாதிகள் பழக்கமெல்லாம் மேல்மட்ட லெவலில் தான் இருக்கும், 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு குடிப்பது. கூவத்தூரில் கூத்தடிப்பது. 10 லட்சத்துக்கு கோட் போடுவது என இருப்பவர்களுக்கு பூக்காரம்மா பத்தியோ மீன்காரம்மா பத்தி அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை இந்தியாவில் வரி வருவாயில் மும்பை முதலிடத்தில் இருக்க காரணம், இந்திய சினிமாதுறையில் 80% மும்பையை நம்பியுள்ளது. விவசாயத்துக்கு வரி இல்லாததால் அமிதாப் பச்சன் கூட தன்னை ஒரு விவசாயி என அடையாள அட்டை வாங்கி வைத்துள்ளார் தமிழகம் முடிந்த வரை தற்சார்பு கொள்கையுடைவர்கள் உள்ள மாநிலம். திராவிட கட்சிகள் தொழில் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம் முடிந்த வரை வேலை வாய்ப்பை உருவாக்கியது, அதை சார்ந்து பல தொழில்கள் உருவானது. பூக்காரம்மா 20 ரூபாய்க்கு பூ விற்க கிரிடிட் கார்ட் வாங்க முடியாது. வீடி தேடி வந்து விற்கும் பழகாரம்மாவோ, கீரைகாரம்மாவோ டெபிட் கார்ட்டில் பணம் வாங்க முடியாது, அம்மாதிரி தற்சார்பு, அமைப்பு சாரா தொழிலில் இருப்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம் அவர்களை இந்திய குடிமக்களாக மதிக்காவர்கள் தான் இன்னும் பணமில்லா வர்த்தகம் பற்றி பேச முடியும், கருப்பு பணத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க, தீவிரவாதத்தை ஒழிக்க என என்னமோ சால்ஜாப்பு சொன்னாலும் பணமதிப்பு இழப்பு கடைந்தெடுத்த முட்டாள்தனமாக முடிந்தது தான் உண்மை முட்டு கொடுப்பவர்கள் கொடுத்துட்டு தான் இருப்பாங்க. அவர்கள் கவலையெல்லாம் வருமான வரியை அரசு குறைக்குமா என்பதில் மட்டுமே, கட்டிட தொழிலாளியும், டீ மாஸ்டரும் அவர்கள் கவலையில் சேராது



பிரபஞ்சவியல்......

பிரபஞ்ச அறிவியல் குறித்து தவறான புரிதலோ அல்லது புரிதல் இல்லாமையோ இருக்கலாம், ஆனால் என்ன சொன்னாலும் நாம் சொல்வதெல்லாம் பொய் என்ற ஒற்றை வாதத்தில் மதவாதிகள் நிற்பது ஒரு பொழுதும் அவர்கள் மதத்தை காப்பாற்றாது.

மதவாதிகளின் கேள்வி ஒரு கோள் அல்லது நட்சத்திரம் இவ்வளவு தொலைவில் இருக்கிறது என எப்படி கணக்கிடுறார்கள், அது நம்பும் படியாக இல்லை, அறிவியல் ஆர்வலர்கள் பகிரும் படங்கள் அனைத்தும் கம்பியூட்டரில் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை, கடவுளை இருப்பை மறைக்க நீங்கள் செய்யும் தில்லாலக்கடி வேலை என்பது

ஒரு எளிமையான கணித ஃபார்முலா, ஒன்பதாவது வரை மட்டுமே படித்த எனக்கு ஞாபகம் இருக்கிறது, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க காரணம் அறியாமை என்று சொல்வதை விட அறிவிலிதனம்னே சொல்லலாம்

AB ஸ்கொயர் + BC ஸ்கொயர் = AC ஸ்கொயர் என்பது தான் அந்த ஃபார்முலா
பூமியின் ஒரு பகுதியில் இருந்து குறிப்பிட்ட கோளை படம் பிடிப்பார்கள், அதன் கோணத்தையும் குறித்து வைத்துக்கொள்வார்கள். அந்த இடம் A என கொள்க, பிறகு தொலைவில் வேறு ஒரு இடத்தில் இருந்து அதே கோளை படம் பிடிப்பார்கள், அதன் கோணத்தையும் குறித்துக்கொள்வார்கள். அதை B என கொள்க, இப்போது அந்த ஃபார்முலா மூலம் C யின் கோணத்தை அறிய முடியும்

இவ்வாறே கோள் அல்லது நட்சத்திரத்தின் தொலைவு அறியப்படுகிறது. கீழே படத்தில் குறிப்பிட்டதில் வெகு சின்ன புள்ளி நமது சூரியன். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை இவர்களுக்கு புரியவைக்கவே நமக்கு தாவூ தீருது. அடுத்து இருக்கும் சைரஸ் நம்மால் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்த பிரகாசமான நட்சத்திரம், காரணம் அது சூரியனுக்கு அருகில் இருப்பதால். சூரியனை விட பல நூறு மடங்கு பெரிய நட்சத்திரங்களும் நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடிந்ததே, தூரத்தில் இருந்தாலும் அளவின் காரணமாக நம்மால் பார்க்க முடியும்

கீழே கொடுக்கப்பட்ட தூர அட்டவணையில் குறிப்பிடாத ஒன்று நம் சூரியன், நம் சூரியன் நம்மை விட 8 ஒளி நிமிட தூரத்தில் இருக்கிறது, அதாவது சூரியனின் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு3 லட்சம் கிலோ மீட்டர், அப்படியென்றால் பூமிக்கும், சூரியனுக்கும் உண்டான தூரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்

SIRIUS 8.6 ஒளி ஆண்டுகள்
POLLUX 34 ஒளி ஆண்டுகள்
ARCTURUS 36.7 ஒளி ஆண்டுகள்
RIGEL 860 ஒளி ஆண்டுகள்
BETELGEUSE 640 ஒளி ஆண்டுகள்
ANTARES 550 ஒளி ஆண்டுகள்


முட்டாள்தனத்தின் இரண்டாம் ஆண்டு விழா....

டிகிரி படித்த இளைஞர்கள், மெடிக்கல் ரெப் போன்ற ஒயிட் காலர் வேலையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் பற்றி பத்து பைசாவுக்கு கூட தெரியவில்லை. பாஜகவின் முட்டாள்தனமான, அரைவேக்காட்டு தனமான பொருளாதார முடிவுகளால் நாட்டின் நிலை பற்றி சொன்னாலும் அவர்கள் காதில் எதுவுமே விழுவதில்லை, பாஜக பற்றி பேசினாலே அது இந்து மதத்துக்கு எதிரான வாதமாகவே பார்க்கிறார்கள்

நாடாளுமன்ற கூட்டுகுழுவே பண மதிப்பிழப்பு தோல்வி என வெள்ளை அறிக்கை கொடுத்தபின்பும் அருண் ஜெட்லி அதை வெற்றி என அறிக்கை விடுகிறார், பக்தாஸ் வழக்கம் போல் முட்டு கொடுத்துகிட்டு இருக்காங்க, அவர்கள் சொல்வது



கருப்பு பணம் ஒழிந்தது..

இதுவரை 99.4% அளவு பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டன, அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு சொல்கிறது, ஆனால் அவற்றை உடைக்க என்னால் கூட முடியும்,

அறிவிப்பு வரும் நாளன்று ஆந்திராவில் பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டில் 580 கோடி செலவில் ஒரு திருமணம் நடந்தது, சேகர் ரெட்டி மற்றும் முட்டை ஒப்பந்த நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணமும், தங்க கட்டிகளும் எடுக்கப்பட்டது, பக்தாஸ் விசாரணை நடக்கிறது என முட்டு கொடுப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது, அதிமுகவின் கொட்டை பாஜகவிற்கு தேவைபட்டதால் அந்த கருப்பு பணம் பெயிண்ட் அடித்து வெள்ளையாக்கப்பட்டது

கள்ள நோட்டு ஒழிந்தது

பழைய கள்ள நோட்டு ஒழிந்ததால் பிரிண்ட் அடிந்தவனுக்கு யாதொரு நட்டமும் இல்லை, சென்ற மாதம் கோவையிலும், சென்ற வாரம் மதுரையிலும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல் பிடிப்பட்டது, தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள் என்றால் இந்தியா முழுவதும் எவ்வளவு கள்ள நோட்டுகள் தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் என்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

வரி வருவாய் உயர்ந்தது..

வரி வருவாய் உயர்வுக்கு காரணம் ஜி.எஸ்.டி
தயாரிப்புக்கு உண்டான கச்சா பொருட்களில் இருந்து நுகர்வோர் கைக்கு வரும் வரை பல கட்டங்களில் வரி வசூலிக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது, அவை அனைத்தும் நுகர்வோர் தலையில் விடிந்தது தான் உண்மை, விலை அதிகரிக்கவில்லை என்பது பக்தாஸ் வாதம், 20 கிராம் பற்பசை 15 கிராம் டியூப்பாக குறைந்தது அவர்களின் ஞானக்கண்ணுக்கு தெரியாது

வேலை வாய்ப்பு உருவானது..

உண்மையில் பணபுழக்கம் இல்லாமல் கோவை மற்றும் திருப்பூரில் மட்டும் பல குறுந்தொழில்கள் முடங்கின, அதனால் ஆயிரக்கணக்கில் வேலை இழந்தனர்,

அரசு தரும் வேலை வாய்ப்பு புள்ளி விபரம் ஒரு மோசம், எம்பாளிஸ் ப்ராஃபிடண்ட் ஃபண்ட்(EPF) என்பது ஒரு நிறுவனத்தில் 20 நபர்கள் வேலை பார்த்தால் அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும், மோடி அரசு 10 நபர்கள் வேலை செய்தாலே அவர்களுக்கு EPF பிடித்தம் செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது, அதனால் சிறு நிறுவனங்கள் வேலையாட்களை கணக்கில் கொண்டு வர வேண்டி இருந்தது, புதிதாக கணக்கில் வந்த அந்த பழைய ஆட்களை அரசு உருவாக்கிய வேலை வாய்ப்பாக மோசடி கணக்கு காட்டியது பாஜக அரசு



எவ்வகையிலும் பலனில்லாத இந்த முட்டாள்தனமான முடிவை முட்டு கொடுப்பதால் மட்டும் நியாயப்படுத்தி விட முடியாது, அறியாமையில் இருக்கும் மக்களை இம்மாதிரி உண்மையை எடுத்து கொள்பவர்களை இந்து மத விரோதி என்ற போர்வையில் மடை மாற்றி கொண்டிருக்கிறது அரசு. உயர்ந்த விலைவாசி, பெட்ரோல் விலை போன்றவற்றை நாட்டு நலனுக்காக என நம்பிக் கொண்டிருக்கிறது பக்தாஸ் கூட்டம்

3000 கோடி பட்டேல் சிலையில் என்ன நாட்டு நலன் கண்டீர்கள் பக்தாஸ்

மானமும், மானியமும்...........

இலவசத்துக்கும், மானியத்துக்கும் படித்த அறிவிஜீவிகளே குழப்பிக் கொள்ளுதல் நகைமுரண்
அரசு பள்ளிகளில் கட்டணம் பெறுவதில்லை, அப்படியே பெற்றாலும் அது மிக சொற்பமாகவே இருக்கும், ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவ/மாணவியர் படிப்பு உபகரணங்களுக்கும் அரசே பணம் கொடுக்கிறது. அது இலவசமா?

மத்திய, மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம், மனித வள மேம்பாடு என சில முக்கிய துறைகளுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து கணிசமான தொகையை ஒதுக்குகிறது. அதிலிருந்து தான் கல்விக்கும், அரசு மருத்துவமனைக்கும் மேலும் ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்களும் கொடுக்கப்படுகிறது
ஃபேன், மிக்ஸிக்கு பதில் வேற வழியில் மனிதவள மேம்பாட்டை யோசிக்கலாம் என்பது என் கருத்தாக இருந்தாலும் அதுவும் மக்கள் வரிபணம் தான், எந்த கட்சிகாரனும் சொந்த காசில் அதெல்லாம் கொடுப்பதில்லை, கொடுக்கும் அரசு அதில் தனக்கான விளம்பரத்தை தேடிக்கொள்வதால் தான் சினிமா வரை பேசப்படும் உறுத்தலாகி விட்டது

அரசு பள்ளியில் படித்து, இட ஒதுக்கீட்டில் வேலை பெற்ற ஒருவரின் பிள்ளை இட ஒதுக்கீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என பேசிக்கொண்டு திரியிறான். இட ஒதுக்கீடு சமத்துவதை அழிக்கிறது என்று பார்ப்பனியத்தின் விசதிணிப்பு இது.
இலவச அரிசி மற்றும் இலவச பொருட்களால் ஒரு அரசு பெறும் விளம்பரத்தை விட அதிக அளவில் கொள்ளையடிக்கிறது, நமக்கு கொடுக்கப்பட்டது நம்மிடம் இருந்து வாங்கிய வரி பணம் தான் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவற்றால் தான் நாடு நாசமா போச்சுன்னு பேசுறது சிறிதும் புரிதலற்ற மேட்டுகுடிதனம்

பங்குசந்தை இன்றைய ஆலோசனை...

ஒரு ஸ்கிரிப்டில் 48000 ரூபாய் என பார்க்கும் பொழுது ஈடுபவர்களுக்கும்,  ஈடுபடநினைப்பவர்களும்  ஆசையாகவும் பணம் இல்லையே என்ற இயலாமையாகவும் தான் இருக்கும். இயற்கையானதும் கூடத்தான்

பங்கு சந்தை என்றில்லை, எந்த தொழிலாக இருந்தாலும் முதலீடுக்கு என்ற லாபம் தான் கிடைக்கும் என்பது அடிப்படை விதி. நம் திறமையால் தொழிலை வளப்படுத்தி லாபத்தை பெருக்கிக்கொள்கிறோம்.

10000 முதலீடு செய்து எனக்கு தினம் 10000 லாபம் வேண்டும் என்றால் அந்த முதலீடு 10000த்தை இழக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், எனக்கு தெரிந்த ஒருத்தர் அப்படி சம்பாரித்தார் என்பீர்களேயானல் அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என பாருங்கள். அனைத்தையும் இழத்து பங்கு சந்தையை சூதாட்டம் என்று அனைவரிடமும் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்

யெஸ் பேங்க் 96 ரூபாய்க்கு எதிர்கால ப்ங்கு வணிகத்தில் 1750 பங்கு லாபம் பார்த்தோம். ஆனால் அது சிலரால் மட்டுமே முடிந்தது. அவர்களிடம் அதற்கேற்ற முதலீடு இருந்தது. நம்மிடம் இல்லை அதை வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

அதனால் என்ன? எதிர்கால பங்கு வணிகத்தில் தான் ஈடபட வேண்டும் என ஏன் நினைக்கனும். உங்கள் முதலீடு 10000 மட்டுமே இருந்தால் நடப்பு பங்கு வணிகத்தில் 9600 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கலாமே.

உலக பணகாரர் வாரன் பஃபெட்டிம் கேட்டார்களாம், உங்களுக்கு பெரிய படிப்பு அறிவும் இல்லை, கணிணி அறிவும் இல்லை. ஆனால் உங்களை விட எல்லாம் திறமையும் இருக்கும் மற்றவர்களால் ஏன் உங்களை விட அதிகம் சம்பாரிக்க முடியவில்லை என்று, அதற்கு அவர் சொன்ன பதில்

அவர்களுக்கு பொறுமை இல்லை என்பது தான்

பங்குவணிகத்தில் திட்டமிடுதல் அவசியம், பொறுமை அவசியம், கூடாவே கூடாத விசயம் பேராசை. பேராசை இருந்தால் லட்சமே இருந்தாலும் ஒரே நாளில் இழக்கக்கூடும்

ஒரு நாளைக்கு 10 பரிந்திரைகள் செய்கிறேன் என்றால் பத்திலும் பத்து பத்தாக முதலீடு செய்யுங்கள், ஒரே பரிந்துரையில் முதலீடு செய்து மாற்றம் இல்லையே என கன்னத்தில் கை வைத்தால் அது யார் தவறு, அதை தான் திட்டமிடல் என்றேன்.

இனிவரும் வர்த்தக நாள்களில் உங்களிடம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். உங்களை சந்தேகங்களை கேளுங்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். சரியான பாதையில் சென்றால் சரியான இடத்திற்கு தான் செல்வோம்


எதிர்கால பங்குசந்தை...

பலருக்கு பங்கு சந்தை பற்றிய அடிப்படை புரிதல் இருந்தாலும் சிலருக்கு F&O என அழைக்கப்படும் future and options பற்றிய புரிதல் இல்லை. அதை பற்றிய விளக்க பதிவு இது.

நடப்பு பங்கு சந்தை என்பது நீங்கள் ஒரே ஒரு பங்கை கூட வாங்கலாம். அதை cash அல்லது equity என அழைப்பார்கள். ஃபியூச்சர் என்பது எதிர்கால பங்குன்னு சொல்லலாம், ஏன்னா நடப்பு பங்குக்கும் எதிர்கால பங்குக்கும் விலை வித்தியாசம் இருக்கும்

எதிர்கால பங்குக்கு உதாரணமா யெஸ் பேங்கை எடுத்துகிறேன். அதில் என்ன ஒரு சிறப்புன்னா அவை காண்ட்ராக்ட் முறையில் ட்ரேட் ஆகும், மேலும் வேவ்வேறு பங்குகளுக்கு லாட் சைஸ் இருக்கும், யெஸ் பேங்க் லாட் சைஸ் 1750.

நடப்பு பங்கை நீங்க 1750 யெஸ் பேங்க் பங்குகள் வாங்கினால் இன்றைய நான் வாங்க சொன்ன விலையான 196க்கு 343000 பணம் செலுத்த வேண்டும். அதுவே எதிர்கால யெஸ் பேங்க் பங்குகளை வாங்க அதே அளவு பங்குகளுக்கு அதில் 15% ஆன 51450 ரூபாய் செலுத்தினால் போதும்

இதில் என்ன ரிஸ்க் இருக்குனா இன்று என் பரிதுரை படி யெஸ் பேங்கில் லாபம் 14000. அதாவது நீங்கள் முதலீடு செய்த 51450 ரூபாய் லாபம் அவ்வளவு. அதுவே மார்கெட் உல்டா ஆகி கீழே இறங்கினா அதே அளவு நட்டத்தையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்(அதனால் பெரும்பாலோர் எக்ஸ்பெர்ட்கிட்ட ஐடியா வாங்குறாங்க)

யேஸ் பேங்க் என்பது உதாரணம் தான். அனைத்து பங்குகளுக்கும் எதிர்கால மார்கெட் இருக்கு. அதில் எவை நல்ல நிலையில் இருக்கு. அதன் மார்கெட் வேல்யூ, நம் கையிருப்பு பணம் மற்றும் நம்மால் எவ்வளவு இழப்பை தாங்க முடியும் என்பதை பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.



MCX என அழைக்கப்படும் கமாடிடி மார்க்கெட்டும் அப்படி தான், அதில் எதிர்கால சந்தை மட்டுமே உண்டு. அதில் ஒவ்வொரு ஸ்கிரிப்டுக்கும் மார்ஜின் வேறு படும், தங்கத்தில் 15% உங்கள் கையிருப்பு இருக்க வேண்டும், இன்றைய 24 கேரட் தங்கம் 10 கிராம் தங்கம் விலை 31800 என்றால் ஒரு கிலோ விலை 3180000. அதில் 15% 477000 உங்கள் கையிருப்பில் இருக்க வேண்டும்

இது பொது விதி, ட்ரேடிங் நிறுவனங்கள் உங்களுக்கு சலுகை கொடுக்கும், அதே 477000 பணத்துக்கு நீங்க 5 லாட் அதாவது 5 கிலோ வாங்கி கொள்ளலாம் என சலுகை கொடுக்கும், அப்படியானல் ஒரு லாட் அதாவது ஒரு கிலோ வாங்க அந்த தொகையில் ஐந்தில் ஒரு மடங்கான 95400 ரூபாய் இருந்தால் போதும்.

இதே சலுகை எதிர்கால பங்குகளுக்கும் உண்டு. இருந்தாலும் money management படி நம்மிடம் தேவையை விட கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வது நட்டம் அடைவதை தடுக்கும். கமாடிடியில் நிறைய ஆப்சன் இருக்கு. 100 கிராம் கூட வாங்கலாம், 5 கிலோ சில்வர், ஒரு கிலோ சில்வர் கூட வாங்கலாம். நம்மிடம் இருக்கும் பணம், நம்மால் தாங்க முடியும் இழப்பை பொறுத்து நாம் முதலீடு செய்தால் போதும்



எப்போதும் மார்க்கெடில் ஜெயிக்கலாம்

போட்டோவில் இருப்பது இன்று நான் கொடுத்த பரிந்துரையில் சின்ன சாம்பிள்

!

Blog Widget by LinkWithin