பரிணாமம் - சான்றுகள்

குறிப்பு - பரிணாமம் பற்றிய தொடர் முழுக்க முழுக்க எனது புரிதல் மட்டுமே, நான் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன், அதிலுள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை நமது உரையாடல் தீர்மானம் செய்யும்!

பரிணாமம் என்பது ஒரு உயிர் தன்னை சூழலுக்கு தகுந்தாற்போல் மேம்படுத்திக்கொள்ளும் தன்மை. அவற்றின் சான்றுகள் நம் கண்முன் ஆயிரம் காணகிடைத்தாலும் படைப்புவாத கொள்கையுடைவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை

எலும்மிச்சை, கொழுமிச்சை, சாத்துகுடி, ஆரஞ்ச் அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பது நமக்கு தெரியும். ஒரே குடும்பமாக இருந்தாலும் அதன் தன்மையும் சுவையும் மாறுபடும். அதே போல் தான் உயிரனங்கள் இருக்கும் சூழலுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் பொழுது அதன் தன்மை மற்றும் உருவம் மாறுபடும். அவற்றில் இருக்கும் ஒற்றுமைகளை கொண்டு நம்மால் அவைகளின் மூலத்தை அறிய முடியும்


எலி வகைகள் பெரும்பாலும் மணலுக்கடியில் வாழும், தரையில் கிடைக்கும் உணவு பற்றாக்குறையால் அவைகள் மரம் ஏறதொடங்கின. அப்படி பிரிந்தது ஒரு வகை

அவைகளுக்கு மேல் இருக்கும் உயிர்களை உதாரணமாக சொல்லலாம்



தரையில் சிறப்பாக கற்றுக்கொண்டவை பெரிய உருவம் பெற்றது. அதற்கு உதாரணம் மேல் இருக்கும் குனியாபிக் மற்றும் எலி வகைகளில் பெரிதான கேத்திபாரா


டியர்மெளஸ் என்ற உயிரினம் எலி போன்ற சிறிய உருவம் கொண்டது ஆனால் தோற்றத்தில் மான் போல இருக்கும். இவைகள் எலிகளுக்கும், மான்களுக்கும் இடையில் இருக்கும் உயிரினங்கள்


இவைகள் பெரிதாக வளர்ந்த மான்கள். பரிணாமமத்தில் எலியிலிருந்து மாற்றம் பெற்ற உயிரினங்களின் படங்கள் மூலம் உங்களால் உணர முடியும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

loga said...

மிகவும் பயனுள்ள பதிவு .

!

Blog Widget by LinkWithin