கேள்வி ஜெரால்டு ததேயு
1) ஆலங்கட்டி மழை பெய்யுதுள்ள... அந்த ஆலங்கட்டி வானில் எப்படி உருவாகிறது?
2) இவ்ளோ அகண்ட வெளில மேகம் திண்ம பொருளா மாறுற அளவுக்கு எங்கிருந்து குளிர தக்க வைக்கிற இடம் கிடைக்குது?
3)மேகம் குளிரயில மழையா பெய்யாம ஏன் ஐசா மாறுது.?
4)இந்த ஐஸ் படிவம் மேல விமானங்கள் மோதுன சம்பவங்கள் ஏதும் நடந்துருக்கா? அல்லது நடக்க வாய்ப்பிருக்கா?
பதில்:
1963 ஆம் ஆண்டு Erasto Batholomeo Mpemba ஒரு விதியை கண்டுபிடித்தார். அதுவே ஆலங்கட்டி மழை பெய்ய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது
அவர் கண்டுபிடித்த விதி, சாதாரண சூட்டில் இருக்கும் நீரை விட, கொதி நீர் விரைவில் பனிகட்டி ஆகும் என்பது. இதற்கு காரணம் நீர் வெப்பமாக இருக்கும் பொழுது அதன் மூலக்கூறுகள் விலகி எடை குறைந்த தன்மை பெற்றிருக்கும். சிறுது குளிர்ச்சியும் அதை மீண்டும் இணைக்கும் பொழுது அவை வேகமாக பனிகட்டி ஆக்குகின்றது
மேகம் உரசும் போது தோன்றும் மின்னல் ஏற்படுத்தும் வெப்பம் நீரை சூடாக்குவதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும். அந்த வெற்றிடம் ஒரு ஃபீரஷரை போல் செயல் படும். நீரின் அடர்ந்தி அவற்றை ஒன்றினைத்து பனிகட்டிகளாக மாற்றுகிறது.
இவை பொது விதி இதுவல்லாது "சூடோமோனாஸ் சிரஞ்சி" என்ற பாக்டீரியா நீரை பனிகட்டி ஆக்குகிறது என்பதை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள்.
விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டவனா என குறிப்புகள் கிடைக்கவில்லை. பெரு மழையில் பயணத்தை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் விபத்திற்கு வாய்ப்புள்ளது என்று தான் சாத்தியகூறுகள் சொல்றிகின்றன.
1 வாங்கிகட்டி கொண்டது:
நல்ல தகவல்கள்
Post a Comment