ஜனநாயகம் vs பணநாயகம்

டோல்கேட்ல எதுக்கு பணம் வாங்குறாங்கன்னு வர்ஷா கேட்டா.
நிறைய பேருக்கு உண்மையிலயே தெரியல போல. கேக்குறாங்க, கொடுத்துட்டு போறோம்.

பாஜக அரசின் வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கர சாலை திட்டம் உருவானது. காஷ்மீர் டு கன்னியாகுமரி நான்கு வழி சாலை. அதே போல் கிழக்கு மேற்கா குறுக்கா ஒரு சாலை. அந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. கார்ப்ரேட் கம்பெனிகள் இவ்வளவு செலவில் நாங்கள் ரோடு போட்டு தர்றோம் என்று டெண்டர் குறிப்பிடுவார்கள். அந்த பணத்தை வசூல் செய்ய சில வருட காலங்கள் அரசு கொடுக்கும். கூடவே அந்த காலம் வரை சாலையை பராமரிக்கும் பணியும் அந்த நிறுவனம் சார்ந்தது.

எதாவது ஆச்சுன்னா நமக்கு தான் ரெண்டாவது வேலைன்னு தரமா போடுறான் ரோட்டை. அதனால் தான் அது பல வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கு. உள்ளாட்சி சார்ப்பில் போடப்படும் ரோடுகள் சில நாட்களில் பல்லிளிக்குது.

தனியார் ரோடு போட்டா நம்மிடம் வாங்கும் வரி பணம் எங்கே என்று கேள்வி தானே எல்லாருக்கும் தோன்றும்...

ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் மத்திய அரசுக்கான வரி பணத்தில் 42% பணத்தை மாநில அரசுக்கு கொடுத்து விடும் மத்திய அரசு. மீதி பெரும்பகுதி எம்.பிக்கள் சம்பளம். ஊர் சுற்ற அலவன்ஸ். சும்மா உட்காந்து சீட்டை தேய்க்கும் அதிகாரிகள் சம்பளம்.



இதுவல்லாது மிக முக்கிய அடிப்படை தேவையான கல்வி, உணவு, சுகாதாரம் இவற்றிற்கு தனியாக பணம் ஒதுக்கும். காங்கிரஸ் ஆட்சியில் போடபட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தில் வரும் பணம் கொண்டு தான் அதிமுக அரசு அம்மா உணவகம் அமைத்தது. தற்போதைய பாஜக அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தில் மாற்றம் செய்து ஆப்பு வைக்கிறது கேட்டால் கள்ள சந்தையில் விற்பனையாகிறது என்று பதில்.



காங்கிரஸ் காலத்தில் ரைட் டு எஜிகேட் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% வசதியில்லாத குழந்தைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசு பீஸ் கட்டும். இப்படி ஒரு திட்டம் இருப்பதே எனக்கு இந்த வருசம் தான் தெரியும். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதால் பக்தாஸ் வாயை மூடிகிட்டு அவங்க குழந்தைகளை மட்டும் சேர்த்துவிட்டாங்க. இந்த வருசம் அரசு அந்த குழந்தைகளுக்கான தேர்வை ஆன்லைன் மூலம் அப்ளை செய்ய சொல்லியிருக்கிறது.



சுகாதாரத்தில் முக்கியானது அரசு மருத்துவமனைகள். ஆனால் அங்கே கழுத்து வெட்டபட்டு ரத்தம் சொட்ட சொட்ட போனாலும் முதலில் பாராசெட்டாமல் மாத்திரை தான் கொடுப்பார்கள். அதில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ சுஜ் பாரத் என்று இன்னும் வரி வாங்கி கங்கையை சுத்த படுத்தவும், மாட்டுக்கு குண்டி கழவி விடவும் செலவு செய்கிறது. கழிப்பிடம் அமைத்தல் மட்டுமே அதில் நல்ல திட்டம். அரசு தரும் மானியம் பெற அதை விட அதிகமா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். போன வருசம் இந்த திட்டத்தை கபாலி இலவச டிக்கெட் கொடுத்து கவர்ச்சி திட்டமாக மாற்றினார்கள்

இது போக இந்தியாவின் கடனுக்கு வட்டி கட்டனும். பெரிய பிஸ்தான்னு சீன் போட பக்கத்துக்கு நாட்டுக்கு நிவாரணம் கொடுக்கனும். பேரிடர் நிவாரண நிதி, நீர் வளம் பாதுகாப்பு நிதி. பசுமை பாரதம் நிதி என்று மத்திய அரசு பொறுப்பில் நிறைய இருக்கிறது, அதை பல மாநிலங்கள் சரியாக பயன்படுத்தி தங்கள் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது.



2011 - 2016 அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொடுத்த பல திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தாமல் அதை மத்திய அரசு திரும்ப பெற்றது. அப்பவே அப்படினா இப்ப சொல்லவே வேணாம். அப்பவே பல முறை எழுதினேன். அந்த சமயத்தில் தமிழக காங்கிரஸ் தான் அதிமுகவின் செயலற்ற தன்மையையும், ஊழலையும் பேசியது. திமுக மப்பு தெளியாமல் சுற்றிக்கொண்டு இருந்தது.

திமுக தோற்க முக்கிய காரணங்கள்.
5 வருசத்திற்கு ஒரு முறை ஆட்சி மாறுது., அடுத்து நாம தான் என்ற மமதை. கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொள்ளாமல் விசிக போன்ற கட்சிகளை புறம் தள்ளியது, உட்கட்சி பூசல், ஏற்கனவே வட்டம், மாவட்டத்திடம் மக்கள் வாங்கிய வடுகள் மறையாமல் இருந்தது. ஜெயலலிதா மேல் பெண்களுக்கு இருந்த மாஸ் கிரேஸ். பணநாயகம்.

ஜனத்தின் நாயகனை ஜனநாயகம் தான் தேர்தெடுக்கனும், பணநாயகம் தேர்தெடுத்தால் அவன் பணத்தின் நாயகனா தான் இருப்பான். கூவந்தூர் சிறந்த உதாரணம் அதற்கு.. நீங்கள் நடக்கும் சாலை, தெருவில் எரியும் விளக்கு, மருத்துவமனையில் போடும் ஊசி, வாங்கிய இலவச பொருட்கள் எல்லாமே உங்க காசு தான். இன்னார் மூலமாக வந்ததுன்னு சொல்லலாமே தவிர அன்னாரின் சொந்த காசில்ல அது. அன்னார் அந்த திட்டத்தில் ஆட்டைய போட்டது தான் நிறைய. அதில் ஒரு வழக்கு முடிவுக்கு வந்து உடன் பிறவா சகோதரி ஊதிபத்தி உருட்டுறாங்க. கழகத்திற்கு அடுத்த மாதம் தீர்ப்பாம்

இவ்ளோ விளக்கமா சொல்லியும் புரட்சி தலைவி, புரட்டாசி தலைவலின்னு கூவுறவங்களை பார்த்தா, நான் கடைசி வரைக்கும் அடிமையா தான் இருப்பேன்னு சபதம் போட்டு பிறந்த மாதிரி தெரியுது. இது திமுக அடிமைகளுக்கும் பொருந்தும்

#வால்பையன்
#அரசியல்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin