குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல!?

பரிணாமம் குறித்தான புரிதல் இல்லாதவர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” குரங்கிலிருந்து மனுசன் வந்த மாதிரி ஒரு படத்தை காட்டி, மேலும் படிக்கும் போது எங்களுக்கு அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கன்னு சொல்லி. இப்ப இருக்குற குரங்கு ஏன் இன்னும் மனுசனாகல, அல்லது எப்ப மனுசன் ஆகும்னு கேக்குறாங்க.



அறிவியல் வகுப்பில் சொல்லி கொடுக்கும் ஏன் பரிணாமம் குறித்தான புரிதல் பரவலா போய் சேரலன்னு யோசிச்சேன். பள்ளி முடிந்ததும் யாரும் யாரிடமும் பரிணாமம் குறித்தோ, அறிவியல் குறித்தோ பேசுறதில்ல. அதில் பெரும்பாலோனோர்க்கு ஆர்வமும் இல்ல. தினம் அவர்கள் சந்திக்கும் வார்த்தைகள். சாமி கும்பிட்டியா?, இன்னைக்கு புரட்டாசி விரதம், இன்னைக்கு சஷ்டின்னு எல்லாமே ஆன்மீகம் சம்பந்தமா தான். அம்மணகட்டையா சுத்துற ஊருல நாம மட்டும் எப்படி துணி உடுத்தி சுத்துறதுன்னு அறிவியல் படிச்ச பயபுள்ளைங்கலும் பெரும்பான்மை பொதுபுத்தியில் பக்தி பழமா சுத்திகிட்டு இருக்காங்க. இது தான் மத வெறியா மாறுது.

பரிணாமம் என்பது நம் கண்களால் பார்த்து உணர கூடிய மாற்றமல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும். அவைகள் விட்டுசென்ற சுவடுகள் தான் பரிணாமத்திற்கான ஆதாரம். அவைகளை கூட அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். விவாதித்து அதில் இருக்கும் அதிக பட்ச சாத்தியகூறுகளை ஆராய்ந்தால் போதும். பரிணாமம் எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும்.

குரங்கிலிருந்து மனிதன் என்பதில் உள்ள குரங்கு ஒரு பொது பெயர். குரங்கிற்கும் நமக்கும் மூதாதையர் ஒன்றே என்பதன் சுருக்கம் அது. அந்த இனத்திலிருந்து வேவ்வேறு பாதையில் பிரிந்த உயிர்கள் தங்கள் வாழும் சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்து கொண்டன. அதனால் குரங்கில் கூட இத்தனை வகையில் உள்ளன. அத்தனை வகை குரங்குகளும் பரிணாமம் குறித்து நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடும். மாற்றம் என்பது என் தேவையை பொறுத்து என்பதே.

காங்கோ ஏரியாக இருந்து நதியாக மாறியபொழுது இரு பக்கமும் பிரிந்த சிம்பன்சி வகையில் ஒன்று இன்று போனோபோ வகை சின்பன்சியாக மாற்றம் அடைந்துள்ளது. கற்றலில் சின்பன்சியை விட வேகமாக உள்ளது. குரங்குகள் குரல்,,முக பாவனை,, உடல்மொழி மூலம் தகவல் தொடர்பு கொள்கிறன்றது. மனிதனின் இவ்வளவு வேக வளர்ச்சிக்கு காரணம் நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு புரியவைக்க மொழியை கண்டுபிடித்ததே. மொழி இல்லையென்றால் நாம் இன்னும் கற்கால மனிதர்களாக தான் இருந்திருப்போம்.

மனிதர்களில் சீனா பகுதிகளில் குளிர் அதிகம் என்பதால் வேர்வையில் இருந்து கண்ணை பாதுகாக்க வேண்டிய புருவ அடர்த்தி தேவையில்லாமல் போயிற்று, ஆப்பிரிக்க பகுதிகள் அதிக வெயில் காரணமான தோலில் மெலனின் அதிகமானது. நான் குத்தும் பச்சை என்னோடு அழிந்து போனால் முடிந்து போனது. அது என் சந்ததினர்கும் தொடர்ந்தால் அது தான் ஜெனடிக்கல் மியூட்டேசன். பலர் ஜெனடிக்கல் மியூட்டேசனை ஏற்றுக்கொள்வதில்லை. அது செயற்கையாக நடப்பதாக அவர்கள் வாதம். அணு கதிர் வீச்சும், ஜி.டிநாயுடுவின் ஊசி போட்டு பழசுவையும் மாற்றும் கடந்த நூறு ஆண்டுகளில் நடந்தது. ஆனால் ஜெனிடிக்கல் மியூட்டேசன் காலம் காலமாக உள்ளது. அது பரிணாமத்தின் ஒரு அங்கம்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை சுவையிலும் உருவத்திலும் மாற காரணம் ஜெனிடிக்கல் மியூட்டேசன்.  ஒரு உறுப்பின் பயன்பாடும் பரிணாமத்தில் முக்கியமானது. குரங்குகள் முன்னங்காலை, காலாகவும் பயன்படுத்துகிறது, கையாகவும் பயன்படுத்துகிறது. மனிதனுக்கு அடுத்து குரங்கு, குரங்குக்கு அடுத்து முன்னங்காலை கையாகவும் பயன்படுத்தும் விலங்கு கரடி. இந்த பயன்பாடு அவற்றின் தோற்றத்தையும், வாழ்க்கை முறையையும் மாற்றும். அதுவே பரிணாம மாற்றம்.

உருவம் சிறுத்தல் அல்லது பெருத்தல், உறுப்பு இழத்தல் அல்லது பெறுதல் என்று நிகழும் மாற்றங்கள் நம்மால் உணர முடியாது.  அந்த மாற்றங்களுக்கு அவை பல நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்/. அதே நேரம் அந்த மாற்றம் கண்டாயமல்ல என்பதையும் உணருங்கள். இந்த மாற்றங்கள் உடல் மற்றும் உயிர் வாழ தேவையை பொறுத்து அமைகிறது. எந்த மெனக்கெடுலும் இல்லாமல் இந்த அமைப்பிலேயே எல்லாம் கிடைக்கும் போது மாற்றத்திற்கான அவசியம் இல்லாமல் போயிகிறது. பல லட்சம் வருடங்களாக ஜெல்லி மீன் அப்படியே தான் இருக்கு. சுறா மீன் அளவில் மட்டும் சுருங்கியுள்ளது.

கூர்ந்து கவனித்தால் நம் கண் முன் காணப்படும் பரிணாம சுவடுகளை பலவற்றை காணலாம். முட்டையிட்டு பால் கொடுக்கும் ப்ளாட்டிபஸ் ஒரு பரிணாம எச்சம். பார்வை இழந்த வெளவால். கால்களை இழந்த சாலமெண்டர்கள் எல்லாமே பரிணாமத்தின் எச்சம் தான்.

மனிதனிம் அடுத்த பரிணாம மாற்றம் என்ன என்பதும் பலரின் கேள்வியாக இருக்கு. முன்னரே சொன்னேன். பரிணாம மாற்றம் என்பது கட்டாயமல்ல. அது தேவையை பொறுத்து அமையும். அறிவியலை புரிந்துகொள்ள அறிவியலை பேசுங்கள், படியுங்கள், விவாதியுங்கள் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அறிவியலை பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக்கொள்வேன் என்பது அந்த கண்டுபிடிப்பாளருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

அறிவியல் ஒன்றே மனிதம் வளர்க்கும். அறிவியல் ஒன்றே பிரிவினை போக்கும், அறிவியல் ஒன்றே மனிதத்தை மேம்படுத்தும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

மெளனம் said...

அந்த அறியாத ஒன்றுதான் கடவுள் :)

!

Blog Widget by LinkWithin