சமத்துவம் ஏற்பட சாதி ஒழியனும்!

பொதுவா ஒரு கருத்தில் உள்ள நல்ல விசயங்களை முதலில் பார்க்கக்கூடிய நேர்மறையான ஆள் நான். அவ்ளோ ஏன் கடவுள் விசயத்தில்(மதம் இல்லை) கூட சில நல்ல விசயங்களை என்னால் காட்ட முடியும். ஆனால் இந்த சாதியில் மட்டும் எவ்ளோ தேடினாலும் நல்ல விசயம் என்பது துளிக்கூட இல்லை.

என் தாத்தா சுதந்திர போராட்ட வீரர் என்றால் அது அவரது உழைப்பு, அவரது பங்களிப்பு. அதை ஒரு அடையாளமா நான் பயன்படுத்துவதே அவரை கேவலபடுத்துவது என்பேன். இந்த சாதியவாதிகளும் அப்படி தான் பண்றாங்க. என்னடா பண்ணுச்சு உனக்கு சாதி என்றால் நாடார் காமராஜரை காட்றான். பிள்ளை வ.உசியை காட்றான். தேவன் முத்துராமலிங்கத்தை காட்றான். அவை எல்லாமே அவர்கள் நாட்டிற்கு செய்த சேவையை கேவலபடுத்தும் செயல் தான்.

நேற்றைய விவாதத்தில் ஒருவர் //இங்கே சமூகம்இயங்குவது
சாதியால் மட்டுமே...சாதிதவிர்த்தோ மறுத்தோ இங்கு நாம் வாழ்கிறோம் எனில் அது உண்மையில்லை//  
என்ற கருத்தை முன்வைக்கிறார். இவர் சமூகம் என்று எதை குறிப்பிடுறார் என எனக்கு புரியவில்லை. சமூகம் என்பது மக்கள். இந்த மக்கள் அனைவரும் இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுபட்டவர்கள். அந்த சட்டம் ஒரு குற்றத்திற்கு இன்ன சாதிக்கு ஒரு தண்டனை. அந்த சாதிக்கு ஒரு தண்டனை என்று பிரித்து கொடுப்பதில்லை.

ஆக சட்டம் சாதி பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாக மதிக்கின்றது. ஆனால் மனுதர்மம் என்ற பார்பன ஆகமவிதி சாதியை ஆதரிக்கிறது. குற்றங்களில் பாப்பானுக்கு குறைந்த தண்டனையும், பிறருக்கு அதிக தண்டனையும் வழங்குகின்றது. அதை விட மோசம் பாப்பானை தவிர பிற சாதியினரை தேவிடியாபசங்க எங்கிறது. நீங்கள் சாதியை ஏற்றுக்கொள்வீர்கலேயானல், சாதியை தோற்றுவித்த மனுதர்மத்தை ஏற்றுகொள்கிறீர்கள் என்று அர்த்தம். மனுதர்மத்தை ஏற்றுக்கொண்டால் ஆமா நான் தேவிடியாபையன்னு ஒத்துகிட்டதா அர்த்தம். உங்க சாதி அபிமானம் கடைசியில் உங்கம்மாவை இழுத்து தெருவில் விடுது.//சாதிமத எதிர்ப்பில் உங்க நம்பிக்கை..நேர்மை ஏற்கிறேன்..99%உங்க நம்பிக்கைக்கு எதிராகத்தான் உலகம் இருக்கு என்பது ஏற்பீர? என்ற. கருத்தையும் முன்வைக்கிறார். இவர் உலகம் என்பது எவ்ளோ பெரிதாக இருக்கும் என்பதை என்னால் இப்பொழுது உணர முடிகிறது. பார்பன மனுதர்மத்தை விட சாதியை தூக்கிபிடிக்கும் எந்த ஆதாரத்தையும் உங்களால் காட்ட முடியாது. தமிழ் சங்க இலக்கியத்தில் கூட சாதிய வேற்றுமை சட்டம் இருக்காது. ஆக இவரது உலகம் என்பது சாதிய சங்கங்களும் அதன் ஆதரவாளர்களும் என்பது தெளிவாக தெரிகிறது

அதற்கு //இனக்குழு அ தனித்தகுடும்பஅடையாளபெயர் மத்தியகிழக்கு நாடுகளில்
உண்டு..
குவைத் வாழ் தமிழர்களில் 

சங்கள்கூட சாதிரீதியாக செயல்படுது..நான் குண்டுசட்டியில் இருந்தாலும்
சாதியை நான் திமிராக பாக்கல..குலமரபாக ஏற்கிறேன்//  
ஆக குண்டுசட்டியில் தான் இருக்கேன்னு ஒத்துகிறார்.  மேலை நாடுகளில் குடும்பபெயர்கள் சாதியமாக பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டுமே மேனன், ராய், சர்மா போன்ற சாக்கடை ஓடுது. குவைத் வாழ் தமிழர்களின் சாதி சங்கங்களில் பெருமை பட என்ன இருக்குன்னு தெரியல. இன்னும் கங்கூஸ்ல பேளாம மரத்துக்கு பின்னால் ஒளிந்து போக பழகின தமிழன் குவைத் போயும் அதையே தான் செய்யுறான். அதுக்கு நியாயமா நாம வெட்கப்படனும். மனிதர்களில் வேற்றுமை பார்க்கப்பார்வது மாபெரும் கேவலம்.இது பேசியவரை நான் அவர் பர்சனல் பத்தி எதுவும் கேட்கல. அவரா கடைசியா #ராஜாபடையாச்சின்னு போட்டார். அப்ப ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது. அதற்காக தான் இந்த பதிவே.

சில வருடங்களுக்கு முன்னால் தம்பி ஒருவன் காதல் விசயத்திற்காக அவன் சார்பா பேச போயிருந்தேன். அப்ப நடந்த விவாதம் ஒன்னு
நாங்க யார் தெரியுமா? படையாச்சி. படையை ஆண்டவங்க. எங்களுக்கு கீழ தான் நாட்டில் இருக்குற மத்த ஆட்கள் எல்லாம். அவுங்க என்ன தொழில் பண்ணி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் எங்களுக்கு சமமா ஆகமுடியாது.

அப்ப உங்களுக்கு கீழ தான் மத்த சாதின்னு சொல்றிங்க. அவுங்களை சமமா ஏத்துக்க முடியாது. அவுங்க மேல தான் நீங்க. அப்படி தானே.

ஆமா.

சரி, நீங்க படை வீரர்கள். உங்களுக்கு மேல தளபதின்னு ஒருத்தர் உங்க வலது காதில் செஞ்சுகிட்டு இருக்கார். மந்திரின்னு ஒருத்தர்  இடதுகாதில் செஞ்சுகிட்டு இருக்கார். பத்தாதுக்கு அரசர்ன்னு ஒருத்தர் வாயில் சரி வேணாம் விடுங்க.
உங்களுக்கு கீழ நாலு பேர் இருப்பதா பெருமை படுற நீங்க உங்க தோள்ல ஏறி ரெண்டு காதுல செய்றதை வலிக்கலையே மாதிரியே ஆக்ட் கொடுத்துகிட்டு இருக்கிங்க. படை வீரரா இருந்ததும் ஒரு தொழில் தான். அந்த வேலைக்கு சம்பளம் வாங்குனிங்க. அந்த வகையில் ஒரு துப்புரவு தொழிலாளியும் நீங்களும் ஒன்னு தான். பெருமை புன்னகைக்கு ஒன்னும் வேலையில்லன்னு சொன்னேன்.

அதன் பிறகு அவர் படையாச்சி, பருப்பாச்சின்னு எதும் பேசல. தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு பையன் ஒரு பொண்ணு. ஸ்ரீபெரும்புதூரில் சூப்பரா வாழுறான்.முன்னாடியே சமமா நீதி கிடைக்காம பெரும்பதவிகள் பாப்பானுங்களெ போச்சு. அது மாறி அனைருக்கும் சம பிரதிநிதிதுவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எனது இடஒதுக்கீடு ஆதரவு. அது எப்போதும் சாதிய ஆதரவாகாது. உங்களுக்கு பிரதிநிதிதுவம் கிடைக்க உங்கள் சாதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதை வைத்து பெருமை பீத்தியோ, அரசியல் செய்யவோ வந்திங்கன்னா நான் இப்படி தான் டார்டாரா கிழிப்பேன்

1 வாங்கிகட்டி கொண்டது:

இறை அடிமை said...

இந்தியாவில் சாதியை பார்ப்பனீயத்தை வென்ற ஒரே மார்க்கம்/மதம் இஸ்லாம் மட்டுமே!கிறித்தவம் கூட பார்ப்பனீய பாதிப்புகளில் சிக்கி சீரழிந்துவிட்டது!அல்லாஹ்வின் அருளால் என்றும் இஸ்லாத்தை பார்ப்பனீய காவி சக்திகள் வெல்லவே முடியாது!

!

Blog Widget by LinkWithin