நெடுவாசலும், அரசியலும்!

ஜல்லிகட்டுக்கான தடை நீதிமன்ற தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பை மீறி தன்னிச்சையாக செயல்படுதல் சட்டவிரோதம். காளையை காட்சிபடுத்தக்கூடாது என்பது நாடாளுமன்ற சட்ட வரைவு. அப்படி காட்சி படுத்தினால் அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்கும். மக்கள் போராட்டத்தின் போது தமிழக பாஜக மத்தியில் அழுத்தம் கொடுத்தது. தமிழகத்தில் காலூன்ற இது ஒரு சந்தர்ப்பம் என்று. அன்றைய பிஜேபி ஆதரவு முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று ஒரே நாளில் சட்ட திருத்தம் கொண்டு வந்து அதை ஜனாபதி ஒப்புதல் பெற்று ஜல்லிகட்டு நடைபெற்றது. ஆனால் இன்னும் நீதிமன்ற தீர்ப்பு அப்படியே தான் இருக்கு. நாடாளுமன்றம் நிறைவேற்றிய காளையை காட்சி படுத்தக்கூடாது என்ற சட்டவரைவும் அப்படியே தான் இருக்கு. ஆனாலும் ஜல்லிகட்டு நடுத்தவன் மூலம் மக்கள் அரசு என காட்டிக்கொள்ள நினைத்த மத்திய, மாநிலம். இறுதி நாளில் மொத்தமாக மைனஸ் மார்க் வாங்கி புறக்கணிக்கப்பட்டது.

சட்டவரைவை மாற்றும் போது, நீதிமன்ற தீர்ப்பை புறம் தள்ளும் போது. சாதாரன ஒப்பத்தம் நெடுவாசல் பிரச்சனை. அதை ரத்து செய்ய அரசுக்கு எவ்வளவு நேரம் ஆகும். அங்கே தான் ஒளிந்துள்ளது இந்த டீலிங் அரசியல். அதற்கு பின்னால் நடராஜனா அல்லது சசிகலாவான்னு எனக்கு தெரியாது. ஆனா டீலிங் இருக்கு.  நெடுவாசல் திட்டம் இனி நிறைவேற்றப்படமாட்டாது. ஜல்லிகட்டு போலயே நெடுவாசலும் சர்வதேச பிரச்சனையா மாறிருச்சு. நாளை ஃப்ரான்சில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் அடையாள போராட்டம் நடத்துறாங்க. ஆனால் அரசு மக்களை போராட்டத்தை கைவிடுங்கள் சொல்வது ஜல்லிகட்டு போலயே இதுவும் மக்கள் வெற்றியா போயிறக்கூடாது. அந்த கிரிடிட் அரசுக்கு வரனும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னான தொய்வை மீட்டெடுத்து இது மக்கள் அரசு என முத்திரை பெற வேண்டூம் என விரும்புகிறது.  ஒரு பேப்பரை கிழிச்சு போட்டு எல்லாம் முடிச்சு போச்சு போய் வேலை பாருங்கன்னு சொல்லாமல் இழுக்க வேற காரணம் எதாவது உங்களிடம் இருக்கா?சுமந்த் சி ராமன் பேசுவது மறைமுகமா பாஜகவிற்கு ஆதரவா இருக்கு என்ற கருத்தையும் பரவலா பார்க்கிறேன். உண்மையில் பாஜகவிற்கு தலைவலியே சுமந்த் தான். சுமந்த் வாதம் இங்கே இதை தான் எடுக்கப்போறோம்னு பொது பெயர் இட்டு சொல்லாமல் தனியாக உறுதி அளிக்கமுடியுமா? அப்படி செய்வதன் மூலம் நெடுவாசல் மக்களை அனுமதி அளிக்க கோருவதாக பரவலாக நினைக்கின்றனர். ஆனால் சுமந்த் கேட்பது போல் அரசு கெஜட்டில் அப்படி வெளியீடு வந்தால் அது இந்தியா முழுவதும் பொருந்தும். வேறு எங்கேயும் கூட இதை எடுக்குறேன்னு சொல்லி அதை எடுக்கமுடியாது.

அடுத்த பாயின்ட். நெடுவாசல் மட்டும் மக்களா? நாகபட்டிணத்தில் இதே திட்டம் நடக்குதே அதை பற்றி அரசின் நிலைப்பாடு என்ன? அரசு சொல்வது மாசு கட்டுபாட்டு வாரியம் சுற்று சூழலில் எந்த பாதிப்பும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துள்ளது. மாசுகட்டுபாட்டு வாரிய சான்றிதழ் பத்தாது. இந்தியா முழுக்க இம்மாதிரி திட்டம் நிறைவேறும் இடத்தில் நிலத்தடி நீர் நிலை. உயிர்களில்(மனிதன் மட்டுமல்ல) உள்ள மாற்றம், நோய் கூறு என அனைத்தையும் ஆராய வேண்டும் என்பது. இதனால் பாதிப்பென்றால் அனைத்து திட்டங்களையும் கைவிட்டு வேறு வழியின்றி அரசு மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு வர வேண்டும். பாதிப்பு இல்லையென்றால் மக்கள் அச்சம் போக்கி நிம்மதியாக வாழவைக்க முடியும். ஆனால் அரசு அதற்கு பயப்படுகிறது.

புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி, நரிமன் பகுதியில் புற்றுநோய் பரவுகிறது என்ற குற்றசாட்டை வதந்தி பரப்புவதாக சொல்றார். அது வதந்தி தான் என்பதை நிரூபிப்பதும் அரசு கடமை தானே. அங்கே சுகாதார ரீதியாக எந்த அளவு பாதிப்பு என்று இதுவரை இந்தியாவில் எந்த இடத்திலும் பரிசோதனை நடத்தப்படவில்லை..

மக்களை அழித்துவிட்டு என்ன வளர்ச்சி?
எந்த அரசும் கார்ப்ரேட்கள் தான்டி மக்கள் நலன் சிந்திக்க மறுக்குதே

1 வாங்கிகட்டி கொண்டது:

Data Tech said...

இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

!

Blog Widget by LinkWithin