திருந்தாத திமுக!

உத்திர பிரதேசத்தில் பாஜக பெற்றது 35% வாக்குகள் தான். 65% மக்கள் பாஜகவிற்கு எதிராக உள்ளனர். இது ஜனநாயகத்தின் தோல்வி என்று நீங்களோ நானோ சொன்னா பரவாயில்ல. திமுகவின் மனுஷ்யபுத்திரன் சொல்றார். திமுக 50 வருசமா இருக்கு. இதுவரை எத்தனை எம்.எல்,ஏ. மற்றும் எம்.பிக்கள் மொத்த வாக்கில் 51% பெற்று வெற்றி அடைந்துள்ளனர். அல்லது குறைவாய் வாங்கிட்டோம்னு எத்தனை பேர் ராஜினாமா பண்ணி ஜனநாயகத்தை நட்டு காப்பாத்தினர். கேட்க ஆள் இல்லைனா எது வேணும்னாலும் பேசிட்டு போலாம்னு போறதே இந்த உளந்தம் பருப்புகளுக்கு வேலையா போச்சு.

திராவிட கட்சிகளை அழிக்க முடியாது ஒகே, கருணாஸை கூட உங்களால் ஜெயிக்க முடியலன்னு சவுடால் வேற. அதிமுக கட்சி பேரில் திராவிடம் இருப்பதால் கூட்டு சேர்த்துகிட்டாங்க போல. அதிமுக திராவிட கட்சியே அல்ல எனபதற்கு சொல காரணங்கள் சொல்றேன்.

பொதுவா திராவிட நாட்டில் பார்பனர்களை தவிர எல்லாருக்கும் குல தெய்வம் இருக்கும்.(பார்பனர்களும் இருக்குன்னு ஒருத்தர் சொல்றார்) அந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு முறை தான் திராவிடர்களையது. அங்கே பார்பன பூசாரி இருக்க மாட்டார். வேண்டிதலில் அலகு குத்துதல், தீ மிதித்தல் இருக்கும். அதில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் அந்த பழக்கம் வட மாநிலங்களில் இல்லைன்னு சொல்வதற்காக சொல்றேன்.

இன்னொரு பொதுவான வேண்டுதல் மொட்டை அடித்தல். திருப்பதில் இருப்பது வைணவ கடவுள் பெருமாள் இல்ல. அது முருகன்னு சர்ச்சை எழுந்த பொழுதே அதை பத்தி ஆராய்ச்சி பண்ணேன். நாமளே கடவுள் மறுப்பாளன். நமக்கு எதுக்கு அதுன்னு விட்டுட்டேன். திருப்பதி தவிர வேறு பெருமாள் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா? சைவ கடவுள் சிவன் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா. அதே மாதிரி அந்த ஆரிய கடவுள்கள் கோவில்களில் ஆடு, கோழி வெட்டி பார்த்ததுண்டா?

ஜெயலலிதா கோவில்களில் பழி கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம் ஜீவ காருண்யம்னு நினைச்சிங்களா? அது முழுக்க முழுக்க ஆரிய திணிப்பு. ஜீவகாருண்யம் பேசுற எல்லாம் நல்லவங்கன்னு பார்ப்பான் சொல்லிட்டு திரிவான். ஹிட்லர் சுத்த சைவம். அந்தாள் பண்ண வேலைகள் எல்லாமே நமக்கு தெரியுமே

மக்கள் எதிர்ப்பின் பேரில் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த அறிக்கையின் மூலம் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை அழிக்க அதிமுக நினைத்தது அம்பலமானது. இது திமுகற்கு தெரியாதா? இல்ல தெரிந்தும் நடிக்கிறாங்களா?

ஜெயலலிதா முழுக்க மன்னார்குடி கைக்கு போன பின்னாடி தான் பரமகுடி துப்பாக்கி சூடு நடந்தது. அந்த தலித் விரோத போக்கு திராவிட கட்சிகளிடம் இருக்குமா? இருந்தா அது திராவிட கட்சியா? அதிமுக ஜெயலலிதா காலத்திலும் திராவிட கட்சியில்ல, சசிகலா காலத்தில் அது கட்சியே இல்ல

4 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

அப்படிப்போடுங்க! சசி கால அதிமுக ஒரு கட்சியல்ல! ஒரு கொள்ளைக்கூட்டம்!

Anonymous said...

பார்ப்பனர்களிலே(தமிழகத்தில்)ஐந்து வகை உண்டு! பண்டைக்காலம்தொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் பார்ப்பர்களுக்குக் குல தெய்வம் உண்டு! பார்ப்பனர்களில் பெண்கள்பெயர் "செல்லம்மா" என்றிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். கொங்கு வேளாளர்களிலே அதிகப்படியானன குலங்களுக்குக் குலதெய்வமாக விளங்குபள் செல்லம்மா, செல்லாண்டியம்மன், செல்லியம்மன் என்று பலவாறு அழைக்கப் பெறும் செல்லாண்டியம்மனே!பாரதியாரின் மனைவி பெயர் செல்லம்மா என்றிருந்தது காண்க.

மகேஷ் said...

பார்ப்பனர்களுக்கு குலதெய்வம் நிச்சயம் உண்டு. அவை அதிகம் அம்மன் வகையை சார்ந்தவை (பச்சையம்மன், ரேணுகாம்பாள்). திருத்தணி முருகணை குலதெய்வமாக கொண்ட பார்ப்பனர்கள் நிறைய. அதே போல் குலதெய்வம் கோவிலில் மொட்டை அடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு.

Kurukku Muttan said...

One information I want to share is that Vaishvas will have multiple headshaves apart from Thirupathi in their young age, even for girls. My son and daughter had headshave in Thirupathi, Sholingar and Baluchettichatiram (Thiruputkuzhi).

!

Blog Widget by LinkWithin