இன்று குடியரசு தினம்!

சென்ற வருடம் குடியரசு தினத்தன்று நான் எழுதிய பதிவு இது!



வெள்ளைக்காரனிடம் விடுதலை வாங்கி கொள்ளைக்காரங்க கையில் நாட்டை கொடுத்துட்டோம்னு பெரியவங்க அடிக்கடி சொல்வாங்க, கொள்ளைக்காரன் இப்ப கொலைகாரனே ஆகிட்டான். காலணி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வாங்கினாலும் இது ஜனநாயக நாடு என அறிவிக்கும் பட்சத்திலே குடியரசு அறிவிக்கபட்டு மக்களால் தேர்த்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்கள் பிரதிநிதியாக மக்களுக்காக உழைப்பார்கள் என அறிவிக்கபட்டது, அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதியை போலவே அதுவும் காற்றில் விடப்பட்டது போல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடியரசு தலைவர் இரண்டு முறைக்கு மேல் அந்தே பதவிக்கு வரமுடியாது தெரியுமா? இங்கே அப்படியா நடக்குது, நேரு குடும்பம் மட்டுமே இந்த சுதந்திர இந்தியாவை அதன் பாதி வாழ்நாளை அபகரித்து கொண்டது, இன்று வரை அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது, மக்களுக்கு சேவை செய்யன்னு நேரு குடும்பத்தை நேர்ந்து விட்டாங்களா என்ன, இருங்க ”முட்டாமில் விட்டாகர் கலைஞ்சர் மூக்கறுணாநிதி” பத்தி பின்னாடி வரும்!.

மன்னராட்சியே பரவாயில்லை போலன்னு நினைக்கும் அளவுக்கு ஜனநாயகம் நீர்த்து போனது இந்தியாவில், அப்பவே அரிஸ்டாட்டிலும் அவரது பிரதான சீடர் ப்ளேட்டேவும் சொன்னாங்க, முட்டாள்கள் ஓட்டு போட்டு ஒரு புத்திசாலியை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லைன்னு, ஆனா அது பாதி தப்புன்னு இப்ப தெரிஞ்சிருக்கு, மக்களை முட்டாள்னு சொன்னது சரி தான், ஆனா அரசியல்வாதிகள் முட்டாள்கள் இல்லை. எத்தனை சைபருன்னு கேட்டு காமெடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பும் அளவுக்கு கடைந்தெடுத்த புத்திசாலிகள்!, மக்களிடம் ஒரே ஆறுதல் எவ்ளோ அடிச்சாலும் தாங்கி கொள்வது தான்!

தனது உறவினருக்காக பரிந்து சிபாரிசு செய்தார் என அமைச்சர் பூங்கோதை ராஜினமா செய்ய நிர்பந்திக்கபட்டார், அடுத்த மூன்றே மாதத்தில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி, நாம் அவமானபடுத்தப்படுவது நம்மால் உணர முடியவில்லை என்றால் நாம் முட்டாள் மட்டுமல்ல, ஆறு அறிவு மடைத்த மனிதர்கள் என்று சொல்லி கொள்ளவே அருகதை அற்றவர்கள். இன்னும் சில மாதங்களே இருக்கின்றன அடுத்த தேர்தலுக்கு, என்ன செய்ய போகிறோம்!

பணபலம் எளியவனை குரல் கொடுக்க விட மறுக்கிறது, துணிச்சல் இருப்பவர்கள் நல்ல உறுதுணை இல்லாமல் மனதளவில் பொறுமி கொண்டு இருக்கிறார்கள், வைகோ சத்தமா பேசுறார்ப்பான்னு பார்த்தா கொடநாட்டில் தரிசனத்துக்கு கைகட்டி, வாய் பொத்தி நிக்கிறாராம், விஜயகாந்த் கடைசி வரை திட்டம் இருக்கு ஆனா வெளியே சொல்ல மாட்டேன்னு சஸ்பென்ஸ் படம் காட்டுறார், திடிரென்று முளைத்த காளான் சாக்கடையில் ஐய்க்கியமாக போகிறேன் என்று அறிக்கை விட்டு விட்டது. முட்டாமில் அறிஞரோ கட்டுமரமாவேன்னு உதார் விட்டுகினே இருக்கார், கட்டையில போற உயிர்களை பற்றி எந்த கவலையும் படாமல் வாரிசுக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்பதிலேயே நேரம் சரியா இருக்கு!

சரி புலம்பியது போதும், விழித்து கொள்ல வேண்டிய நேரமிது, என்ன பண்ணலாம் சொல்லுங்க!

16 வாங்கிகட்டி கொண்டது:

கொல்லான் said...

//காலணி ஆதிக்கத்திலிருந்து//

ஆட்சேபிக்கிறேன்....

(காலனி)

கொல்லான் said...

நீங்க என்ன தான் காட்டுக் கத்து கத்தினாலும் இந்த ...... களை ஒன்னும் புடுங்க முடியாது.

கொல்லான் said...

/விழித்து கொள்ல வேண்டிய நேரமிது,//
தவறு...

விழித்து ... வேண்டிய நேரமிது,

உமர் | Umar said...

//என்ன பண்ணலாம் சொல்லுங்க//

ட்விட்டருக்கு வாங்க. தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் நடைபெறும் போராட்டம் IBN சேனலின் கதவை அசைத்துள்ளது. தற்பொழுது இந்திய Trends ல் முதலில் உள்ளது. தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

#TNFisherman

.

பொன் மாலை பொழுது said...

டுநிசியாவும் எகிப்தும் என்ன சொல்கின்றனவோ அது.
இனி வேறு வழி இல்லை இங்கு.

Philosophy Prabhakaran said...

// சரி புலம்பியது போதும், விழித்து கொள்ல வேண்டிய நேரமிது, என்ன பண்ணலாம் சொல்லுங்க! //

தெரியலையே மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்...

மாணவன் said...

ஒன்றும் சொல்வதற்கில்லை நண்பரே,

“எங்களை இங்கு ஆளுவது இந்தியனா??? அந்நியனா????
வயிறு எறியுதே... ரத்தம் கொதிக்குதே....

வழி பிறக்குமா??? விழி திறக்குமா???


என்று இசைஞானி பாடிய வரிகள்தான் இன்றைய நிலைமை...
என்ன செய்வது??? தமிழகத்தில் பிறந்துவிட்டோம் என்பதைத்தவிர ஒன்றும்.............

சி.பி.செந்தில்குமார் said...

தல... ம் ம் அசத்துங்க

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் ஒவ்வொரு பதிவிலும் சமூக அக்கறை சார்ந்த நையாண்டியை பார்க்கிறேன்..

தனி காட்டு ராஜா said...

//”முட்டாமில் விட்டாகர் கலைஞ்சர் மூக்கறுணாநிதி”//

:))

ஞாஞளஙலாழன் said...

>இன்னும் சில மாதங்களே >இருக்கின்றன அடுத்த தேர்தலுக்கு, >என்ன செய்ய போகிறோம்!

இப்போதும் இந்த கேள்வி பொருந்தும். பதிலும் பொருந்தி விடுமோ என்று தான் பயமாக உள்ளது.

ஞாஞளஙலாழன் said...

மன்னிக்கவும். மீள் பதிவோ என்று நினைத்து கருத்து தெரிவித்து விட்டேன். ஆனால் கடந்த வருடம் தேர்தலே நடக்க வில்லையே என்று எண்ணுகையில் தான் உண்மை விளங்கியது...

MANO நாஞ்சில் மனோ said...

//பணபலம் எளியவனை குரல் கொடுக்க விட மறுக்கிறது, துணிச்சல் இருப்பவர்கள் நல்ல உறுதுணை இல்லாமல் மனதளவில் பொறுமி கொண்டு இருக்கிறார்கள்,//

உண்மையான வார்த்தை....

MANO நாஞ்சில் மனோ said...

போற பொக்கை பார்த்தா துனீசியா, எகிப்தை தொடர்ந்து நம்ம நாட்லயும் புரட்சி வெடிக்கும் போலதான் தெரியுது.....

சேக்காளி said...

//என்ன பண்ணலாம் சொல்லுங்க//
தேர்தல் மூலமா பணம் பண்ணலாம் வாங்க.
இதை தவிர வேற என்னத்த சொல்ல முடியும்.

Ganpat said...

//என்ன பண்ணலாம் சொல்லுங்க//


நான் சொல்வது சற்று வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் இதுதான் தீர்வு! யோசித்து பார்த்தால் உண்மை விளங்கும்.
ஜனநாயகத்தில் நமக்கு இருக்கும் ஒரே சக்தி நம் ஒட்டு.இதை நாம் சரிவர பயன் படுத்த வேண்டும்.

1.எல்லாரும் தவறாமல் ஓட்டளிக்கவேண்டும்.
2 ஒட்டு போடுவதற்கு பணமோ மற்ற இலவச வெகுமதிகளோ வாங்கி கொள்ளக்கூடாது
3.தி.மு.க மற்றும் அதிமு.க ஏற்கனவே தங்களுக்கு தரப்பட்ட வாய்ப்பை பாழடித்து விட்டதால் அவர்களுக்கு மறந்துபோய கூட ஒட்டு போடக்கூடாது.மீதி உள்ள கட்சிகளில் உங்களுக்கு
பிடித்த யாராக இருந்தாலும் ஓட்டளியுங்கள்.
4.ஒருவேளை பா.ம.க. ஆட்சிக்கு வருகிறது என வைத்துக்கொண்டால்.அவர்களது 5 ஆண்டு ஆட்சியைப்பொருத்துதான் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டளிக்கவேண்டும் சரியாக இல்லையென்றால் அவர்களையும் தி.மு.க மற்றும் அதிமு.கவுடன் சேர்த்து ஓரங்கட்டவேண்டும்.
சுருக்கமாக சொன்னால் சரியாக ஆட்சி செய்யா விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என ஆட்சியாளர்களுக்கு தெள்ளதெளிய உணர்த்துவதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி
நன்றி

!

Blog Widget by LinkWithin