மைக்ரோ பைனான்ஸ் = கந்துவட்டி!

சில வருடங்களுக்கு முன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் போது நான் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறேன், அப்பொழுதெல்லாம் 1000 ருபாய்க்கு 100 தான் எடுத்து கொள்வார்கள், மீதி 900த்தை வாரம் 100 அல்லது தினம் 10 என்ற கணக்கில் மீண்டும் ஆயிரமாக கொடுக்க வேண்டும்! மாதம் 30 வட்டி என்றாலும் 3% தொடர்வட்டியாக தோன்றும், பின்னாளில் ஆயிரத்துக்கு 150 என்று மாறி, தற்பொழுது 250 எடுத்து கொள்வதாக கேள்விபட்டேன். 150 இருக்கும் பொழுது நானும் ஒரு பத்தாயிரத்துடன் களம் இறங்கினேன், அதில் 5000 கூட ஒழுங்காக வசூல் செய்திருக்க மாட்டேன், யாராவது ரொம்ப கஷ்டம்னு புலம்பினால் இருக்கும் போது கொடுங்கன்னு வந்துருவேன். ஒரு படத்தில் கரண், வடிவேலுவை பார்த்து சொல்வது போல் எனக்கு பிஞ்சுமூஞ்சின்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு!

ஈரோடு சுத்துவட்டாரத்தில் விசைத்தறி தொழில் தான் பிரசித்தம், தொழில் கற்று கொண்ட ஒருவர் 10000 முன்பணமாக பெற்று ஒரு பட்டறையில் வேலைக்கு சேருவார். வேறு இடம் மாற வேண்டுமென்றால் அந்த முன்பணத்தை திரும்பத் தர வேண்டும், அதை வேறொரு பட்டறை 20000 ஆக கொடுத்து அவரை அங்கே அழைத்துக்கொள்ளும், ஒருவருடம் கழித்து மற்றொரு பட்டறை 30000 கொடுத்து கிட்டதட்ட கொத்தடிமை ஆக்கும், அப்படியே 50000 அவரை அவர்களுக்குத் தரப்படும். அவர்களால் பணம் தரமுடியாமல் போய் அவர்களது உடமைகள் பிடுக்கபட்டு கடைசியில் அவர்களது கிட்னி வரை களவாடபட்டது தமிழகம் அறியும்!

அமெரிக்காவில் இருந்து ஒரு நண்பர் தொடர்பு கொண்டு கல்கத்தாவில் இருந்த கிராமவிடியல் போன்று ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கலாம் என்றார். சனி,ஞாயிறு விடுமுறை மற்றும் ஏராளமான நண்பர்கள் இருந்த நம்பிக்கையில் நானும் ஒப்பு கொண்டேன், வெளிநாட்டு பணம் இந்தியா வர இருந்த சட்டச்சிக்கலை தீர்க்க பார்த்த ஆடிட்டர் ஒருவரும் எனக்கு சரியாக அமையவில்லை என்பதால் என் தோல்வியை ஒப்பு கொண்டேன், தற்சமயம் அந்த நண்பர் வடமாநிலங்களில் முதலில் ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார், உதவி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அம்மாதிரியான மைக்ரோ பைனான்ஸ்கள் நிச்சயம் நலிவடைந்த மக்களுக்கு தேவை, ஆனால் வெறும் வியாபார நோக்கில் மக்கள் பணத்தை உறிஞ்சும் சக்திகள் பற்றி கேள்விபட்ட போது மனம் பதறிவிட்டது.



முதலில் அவர்கள் அணுகுவது மகளிர் குழுவினரை, அவர்கள் ஏற்கனவே பணம் சேர்ந்து வங்கியில் கட்டி அதன் மூலம் ஒவ்வொருவராக கணிசமான தொகையை கடனாக பெற்று பிறகு மாதாமாதம் அடைக்கலாம், வங்கியில் வட்டி மிகவும் குறைவு! ஆனால் வியாபார நோக்கில் வரும் மைக்ரோ பைனான்ஸ்கள் முதலில் முன்பணமாக ஆயிரம் பெறுகிறது, பின் பத்தாயிரம் வழங்க டாக்குமெண்ட்!? சார்ஜ் என்று ஒரு ஐநூறு, வாரம் 300 வீதம் 48 வாரத்திற்கு கட்ட வேண்டும், கொடுமையை பாருங்கள் அதுவே 14400 ஆகிவிட்டது, முன்பணம் திரும்ப வருவதற்கு உத்திரவாதம் இல்லை, டாக்குமெண்ட் சார்ஜ் எதுக்குன்னு தெரியல.

கந்துவட்டிக்கு சமமாக ஏழை மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அந்த நிறுவனங்கள் ஒன்றும் சாதாரணமானதல்ல. உதாரணமாக எங்கள் ஏரியாவில் எல்&டி நிறுவனம் மைக்ரோ பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறது, அவர்களுக்கு சம்பாரிக்க வேறு வழியே தெரியவில்லையா என்ன? என் அப்பா ஓட்டும் ஒரு ஓட்டை ஆட்டோவை ரிப்பேர் செய்ய என் அம்மா மூலம் அங்கே பணம் வாங்கி இப்போ தவிடு தின்னு கொண்டிருக்கிறார். எனக்கு தெரியாமல் என் மனைவி பணம் வாங்கி வாராவாரம் என் பாக்கெட்டில் ஆட்டைய போட்டு கொண்டிருக்கிறாள், எதுக்குன்னு விசாரிக்க போய் எனக்கு இந்த விசயமெல்லாம் தெரிந்தது! வீட்டில் இருக்கும் பெண்கள் பணத்தை கையாளுவதில் மிகவும் திறமைசாலிகள் தான், ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லா நேரமும் சரியா அமைவதில்லை என்பதற்கு இந்த மைக்ரோ பைனான்ஸின் அபரித வளர்ச்சி ஒரு உதாரணம், உங்கள் அருகில் அப்படி எதுவும் இருந்தால் முதலில் அதிலுள்ள சிக்கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நான் சென்ற வாரமே ஆரம்பித்துவிட்டேன்!

63 வாங்கிகட்டி கொண்டது:

Rajan said...

கவிதை சூப்பர் தல!

Rajan said...

//சில வருடங்களுக்கு//


சி இல்ல தல ப போடணும்!

கார்மேகராஜா said...

திருமணத்திற்க்கு பிறகு யோசிக்கிறேன் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவு..

பகிர்வுக்கு நன்றி..

Rajan said...

//முதலில் அவர்கள் அணுகுவது மகளிர் குழுவினரை, //



என்னா வில்லத்தனம்!

Rajan said...

//என் மனைவி பணம் வாங்கி வாராவாரம் என் பாக்கெட்டில் ஆட்டைய போட்டு கொண்டிருக்கிறாள், //


மப்புலயே இருந்தா ஆட்டய போடரது எப்பிடி தெரியும்!

அகல்விளக்கு said...

:-)

அதுல நானும் ஒரு கடங்காரன்தான்

prince said...

விழிப்புணர்வூட்டும் பதிவு நண்பா!

கல்வெட்டு said...

.

எல்லா திட்டங்களும் அல்லது வழிமுறை அல்லது கண்டுபிடிப்புகளும் அதை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது. இந்த மைக்ரோ கிரடிட் என்பது மிகவும் உன்னதமான ஒரு திட்டம். தமிழ்நாட்டில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல. இதற்காக நோபல் பரிசு வாங்கிய யூனுஸ் அவர்கள் சொன்னது...

"நீங்கள் இலாபம் சம்பாரிக்க நினைத்தீர்களானால் நீங்களும் கடன் கொடுத்து இலாபம் ஈட்டும் பெரு வங்கிகளின் வழிமுறைக்கே போகிறீர்கள். "


"If you are making profits you are moving into the same mental mind-set as loan sharks," Nobel Peace Prize winner Muhammad Yunus

http://www.boston.com/business/articles/2008/07/28/nobel_winner_slams_microloans_for_profit/

நல்ல திட்டம் இப்படி கந்து வட்டி மீட்டர் வட்டியாக மக்களிடம் அறிமுகமாகிவிட்டது இதனைச் செயல்படுத்துபவர்களின் பிசாசுத்தனங்களால்.

:-((((

.

தேவன் மாயம் said...

இப்படியெல்லாம் நடக்கிறதா?

tsekar said...

வால்பையன்

நல்ல பதிவு .ஆனால் ,அவசரமான சூழ்நிலைல் கடன் வாங்கும் பொழுது ,வட்டி நம் கண்ணனுக்கு தெரிவதில்லை


-த சேகர்

Jey said...

ஆரம்பத்துல இந்த திட்டம் சேவை மனப்பாண்மையோட,நல்லா உதவியா இருந்ததா கேள்விபட்டேன், இவங்களும் வியாபாரநோக்கோட வறுமைல இருக்குரவங்கள பிழிய ஆரம்பிச்சிட்டாங்களா....என்னத்தச் சொல்ல.

ஆமா, சட்டையில பனம் எடுத்துட்டா, கணக்கு தெரியாத அளவுக்கு சம்ம்பாதிக்கிரீங்களா, தல:). நல்லா கேட்டுப்பாருங்க தங்கமணிக தனியா ஒரு உண்டியல் வச்சி சேத்து வச்சிருப்பாக, நம்மள சுலுவா ஏமாத்திருவாக.

பின்னோக்கி said...

ஜெயலலிதா ஆட்சியில் கந்து வட்டி ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினார்களே ?.

ஏழை மக்களை, கடன் தொல்லையில் சிக்க வைக்கும் இது :(

Arul said...

/*மைக்ரோ பைனான்ஸ் விழிப்புணர்வு*/ நல்ல முயற்சி - வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு இடுக்கை

மேவி... said...

தல காசுன்னு வந்துட்டா எந்த சிஸ்டமும் யோகியம் இல்லை ....

நல்ல எழுதிருக்கீங்க . இன்னும் நிறைய விஷயங்களை கேட்டுகிட்டு எழுதிருக்கலாம் .....

இந்த மாதிரியான சூழ்நிலையில் பெண்கள் தங்களோட கற்பையும் சில நேரங்களில் இழக்க வேண்டி வரும் ....திருச்சி ல இந்த மாதிரியான கொடுமையை எல்லாம் பார்த்து இருக்கிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு வால்

அ.முத்து பிரகாஷ் said...

// 150 இருக்கும் பொழுது நானும் ஒரு பத்தாயிரத்துடன் களம் இறங்கினேன் //
ம்ம்ம்ம் ....
// டாக்குமெண்ட் சார்ஜ் //
??!!
// பைனான்ஸின் அபரித வளர்ச்சி //
அவர்களை தவிர யாருக்கும் நல்லதல்ல ...
// அதிலுள்ள சிக்கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் //
சரி தல ...
// நான் சென்ற வாரமே ஆரம்பித்துவிட்டேன்! //
பிரச்சாரம் பண்றதுக்கு முன்னாடியே பதிவு போடுறது தான் நம்ம வழக்கம் .. ஒரு வாரம் பண்ணிட்டு அதுக்கப்புறமா சொல்றீங்க ... ம்ம்ம் .. good ...

தமிழ் பொண்ணு said...

இதுபோல் தமிழகத்தில் நடக்கின்றது என்று எனக்கு இப்போது தான் தெரியும்.மாக்ரோ பைனான்ஸ் பத்தி கேள்வி பட்டு இருக்கேன்.இதை அதன் அவசியத்துடன் எடுத்துரைத்து உள்ளீர்கள்.என்னால் முடிந்த வரை விழிப்புணர்வு ஏற்படுத்து கின்றேன்.அருமையான பதிவு.

cheena (சீனா) said...

அன்பின் வால்

நல்ல சிந்தனையில் எழுதப்பட்ட நல்லதொரு இடுகை - வங்கிகள் வாரி (??) வழங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் மக்கள் இன்னும் இவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள் தெரியவில்லை.

விழிப்புணர்ச்சி தேவை

நல்வாழ்த்துகள் வால்
நட்புடன் சீனா

தமிழ் பொண்ணு said...

தல, அடுத்த பதிவுல கிரெடிட் கார்டு பத்தி பதிவு எழுதுனா நல்ல இருக்கும்.அதை பற்றி அறிந்தும் கிரெடிட் கார்ட் வாங்கி கொண்டு தான் இருகின்றனர்.அவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு பாடமாக அமையும்.

geethappriyan said...

நல்ல பதிவுங்க வால்,
எல்லா ப்ரைவேட் பேங்குமே இப்படி பகல் கொள்ளையை நீண்ட வருடங்களாக நடத்தி வருகின்றனர்,மக்கள் விழிப்போடு இருக்கனும், நீங்க சொன்னா மாதிரி எல் & டி க்கு வேற தொழிலே இல்லையா?
கேவலம்.
==
லோனை ஃபோர்க்லோஸிங் செய்ய ஐசிஐசியை போன்ற வங்கிகள் போடும் அநியாய தொகை இருக்கே?,அவர்களுக்கு முதலும் வோணும்,வட்டியும் வோணும்,கடன்வாங்கிய கடனாளி மேலும் கடன் வாங்கிக்கிட்டே இருக்கனும் என்னும் எண்ணம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு

Unknown said...

மேலும் ஒரு தகவல்!
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் , கந்து வட்டித் தொழிலை , நாடு முழுவதும் சென்று விரிவாக நடத்தி வருகின்றனர்!
நம்முடைய ஆடம்பர மோகமும், சோம்பேறித் தனமும் , வீன்செலவுகலுமே , கந்து வட்டி செழிக்ககாரணம்!

குறும்பன் said...

வால், 1000க்கு 200, 250 என்பது மீட்டர் வட்டி அது கந்து வட்டி அல்ல.

4 ரூபா மொதல போட்டு 5 ரூ சம்பாதிக்கனும் (உடனே) .25 வட்டி .75 லாபம் என்ற முறையில் இருப்பவர்களால் மீட்டர் வட்டி வியாபாரம் நடக்குது. காய்கறி சந்தை பக்கம் எட்டி பாருங்க இது அமோகமா நடக்கும்.

அ.வெற்றிவேல் said...

அன்பு அருண்!
நல்ல பதிவு..வங்காளதேசத்தில் டாக்டர்.முகமுது யூனுஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த மைக்ரோ பைனான்ஸ் ..அவர் அதை உண்மையிலே பாடுப்டும் ஏழைத் தொழிலாளிகளுக்க்காக ஆரம்பித்து அதை பெரிய அளவில் கொண்டு சென்றதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது தங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்..தெரியாதவ்ர்கள் தெரிந்து கொள்ள இதை எழுதிகிறேன்..மதுரையில் என் வீட்டுப் பக்கத்தில் மகாசேமம் என்ற பெயரில் மதுரை மீனாட்சி மிஷன் அதிபர் டாக்டர் சேதுராமன் இதையே செய்கிறார்..ஆனால் இதில் உள்ள லாபம் பார்த்துவிட்டு மருத்துவமனை, மூ.மு.கழகம்,இதை எல்லாம் விட்டு விட்டு இதில் மும்முரமாக இறங்கி விட்டதாக அறிந்தேன்.. இப்ப இது ஒரு தொழிலாகப் போய்விட்டது.
எப்படி கல்விக்காக தனது வீட்டை கொடுத்த அழகப்பா செட்டியார் பிறந்த அதே மண்ணில் தான் கல்வியைக் காசாக்கும் தொழிலும் அமோகமாக நடக்குது..உங்களை மாதிரி அடுத்த தலமுறை பற்றி கவலை கொள்பவர்கள் இதன் அநியாயத்தை வெளியில் கொண்டு வரவேண்டும்.. பெரிசா மாற்றம் பண்ணமுடியாது.. இருந்தாலும் சில பேர்கள் இந்தச் சகதியில் சிக்காமல் பார்க்கலாம்..நன்றி வால்பையன் இந்தப் பதிவுக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள பதிவு தல..மக்கள் ஏமாறும் வரை?:-(((

ஜில்தண்ணி said...

இதை பற்றிய விழிப்புனர்வு கண்டிப்பாக தேவை நம் தமிழக மக்களுக்கு

திடீர் பணத்தேவைக்கு மக்கள் வட்டிக்கு வாங்குகின்றனர்,பின்னால் வட்டி கட்ட முடியாமல் அம்பேல்

கொல்லான் said...

//எப்படி கல்விக்காக தனது வீட்டை கொடுத்த அழகப்பா செட்டியார் பிறந்த அதே மண்ணில் தான் கல்வியைக் காசாக்கும் தொழிலும் அமோகமாக நடக்குது..//

புரிஞ்சுக்கோங்க மக்களே.

உமர் | Umar said...

நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று சீரழிந்து போனதற்கு முக்கிய காரணம் அரசு கொண்டு வந்த ஒரு சிறப்பு சட்டம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடனுக்கான வட்டி விகிதம் 12 லிருந்து 15 சதத்திற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அரசு, மைக்ரோ பைனான்ஸ் துறையில் அதிகபட்ச வரம்பு ஏதும் விதிக்கவில்லை.

பிடிமானம் இல்லாத கடனாக அவை வழங்கப்படுவதால், அவற்றுக்கு வரம்பு விதிக்க முடியாது என்று கூறிவிட்டது. அதனை பயன்படுத்தி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், அவர்கள் விருப்பம்போல் வட்டிகளை நிர்ணயித்துக்கொள்கின்றனர்.

வங்கிகளின் திரும்ப செலுத்தப்படும் கடன் விகிதத்தை விட, மைக்ரோ பைனான்ஸ் துறையில் திரும்ப செலுத்தப்படும் கடன் விகிதம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, பல வங்கிகளும் தனிப் பிரிவுகள் தொடங்கி உள்ளன.

தோழர் அ.வெற்றிவேல் கூறிய, மகாசேமம் அலுவலக வாசலுக்கு காலையிலும், மாலையிலும் சென்று பார்த்தால் அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிடும். ஆயிரக்கணக்கான மக்கள், அன்று காலையில் பணம் வாங்கி, மாலையில் திரும்ப செலுத்த வருவார்கள், என்ன வட்டி விகிதம் என்பதை அறியாமலே.

இவர்களுக்கான ஒரு open source software - mifos என்னும் பெயரில் உள்ளது. அதனை, customise செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் மாதம் பத்து லட்சம் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றனர். அதில் வரும் வருமானம் அப்படி; அனைத்தும் அப்பாவி ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பணம்.

vinthaimanithan said...

எப்படியெல்லாம் ஆட்டைய போடுறானுங்க! யாத்தாடி!

உமர் | Umar said...

@ சீனா அய்யா
//வங்கிகள் வாரி (??) வழங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் மக்கள் இன்னும் இவர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள் தெரியவில்லை.//

வங்கிகள் பிடிமானம் இல்லாத கடன்கள் கொடுப்பதில்லை. இந்தத் திட்டம்கூட சேமிக்கும் பழக்கத்தை வளர்த்து அதற்கு பின்பு, கடன் வழங்கும் திட்டமாகத்தான் தொடங்கியது. ஆனால், இன்று அதன் அடிப்படைத் தன்மையை தொலைத்து விட்டு, கந்து வட்டியாக மாறிப்போய் விட்டது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லா நேரமும் சரியா அமைவதில்லை
//

இதுக்குத்தான் என்னைமாறி நல்லவன்(?) கிட்ட..காசை கொடுத்து வைக்கனுமுனு சொல்வாங்க..

ஹி.ஹி

யாசவி said...

தல,

விழிப்புணர்வு ஊட்டும் பதிவு.

தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடக்குதா?


எந்த ஒரு நல்ல திட்டத்தையும் தவறாக உபயோகப்படுத்துவதில் நம்ம ஆட்களுக்கு நிகர் நாமேதான்

GEETHA ACHAL said...

ஒ...இப்படி எல்லாம் நடக்குதா.இப்படி எல்லாமா வட்டி இருக்கின்றது..ரொம்பும் அவசியமான பதிவு...பகிர்வுக்கு நன்றி...

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு வால்.......

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Ganesan said...

well said wirte up.

நாடோடி said...

ந‌ல்ல‌ விழிப்புண்ர்வு ஊட்டும் ப‌திவு... நானும் இதை ப‌ற்றி அறிந்திருக்கிறேன்..

செல்வா said...

மைக்ரோ பைனான்ஸ் பற்றித் தெரிந்து கொண்டேன் ..
///அவர்கள் ஏற்கனவே பணம் சேர்ந்து வங்கியில் கட்டி அதன் மூலம் ஒவ்வொருவராக கணிசமான தொகையை கடனாக பெற்று பிறகு மாதாமாதம் அடைக்கலாம், வங்கியில் வட்டி மிகவும் குறைவு! ///
உண்மையிலேயே மகளிர் குழுக்கள் அதிக பயனளிக்கின்றன ..!!
பதிவிற்கு நன்றி அண்ணா ..!!

Eswari said...

எனக்கு தெரிஞ்சி ஈரோடு ல பெரும்பாலும் கந்துவட்டிக்கு வாங்குவது ஆடம்பர செலவுக்கும்(கல்யாணம் போன்ற விஷேசங்களுக்கு கடனை வாங்கி செலவு செய்வாங்க), கடாகறி போடுவதுக்கும் தான். (எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கறி தின்பதை மட்டும் விட்டு கொடுக்க மாட்டங்க)
அந்த ஊர்காரங்க கறி தின்பதையும், ஆடம்பர செலவு செய்வதையும் குறைச்சாலே அவங்க பாதி கடன் தீரும்.

Anonymous said...

அறியாமை, அவரசரம், பொறுப்பின்மை
இவை தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்கள்.

a said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

Radhakrishnan said...

நல்ல பதிவு அருண். பணம் பெருக்கும் வழி தெரிந்தால் தைரியமாக எதையும் செய்யலாம். ஆனால் நாம் தான் ஏமாளிகள் ஆச்சே. என்ன செய்வது.

அன்பகன் said...

நல்ல பதிவு தல

Unknown said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள் வால்பையன்.

Unknown said...

அப்படியே கிரெடிட் கார்ட் பற்றிய ஒரு பதிவு போட்டால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

அமைதி அப்பா said...

கடன் வாங்குவதை ஒரு போதும் நான் விரும்புவதில்லை.இதை, என்னுடன் இருப்பவர்களிடமும் கடைப்பிடிக்கச் சொல்லிவருகிறேன்.
நல்ல பகிர்வு.

Anonymous said...

யோவு பஞ்சயத்து, உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் என்னய்யா பிரச்சனை. பிரச்சனைனா பேசித்தான் தீக்கணும்...தப்பான முடிவுக்கு போக கூடாது.

வால்பையன் said...

http://www.tamilhindu.com/2010/08/hindus-should-unite/

இந்த தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் வெளியிடப்படவுல்லை, அதை இங்கே வெளியிடுகிறேன், மற்றும் ஆல் இன் ஆலில் ஒரு பதிவையும் எழுதி கொண்டிருக்கிறேன்!

*****

ஆமா, நீங்க சொல்றது தான் சரி, பிரேமானந்தவெல்லாம் ரொம்ப நல்ல மனுசன், ஒரு கொலையும் பண்ணல, யாரையும் கற்பழிக்கல, அவ்வளவு ஏன், அந்தாளுக்கு லுல்லாவே கிடையாது, அவரை தூக்கி உள்ளே போட்டுட்டாங்க, இன்னொரு விசயமும் இருக்கு, இந்திய சிறையில் கணகெடுத்தால் இந்துக்கள் தான் அதிக குற்றவாளிகளாக இருக்காங்க!

என்ன தான் இது இந்து மெஜாரிட்டி நாடா இருந்தாலும் ஒரு இந்துவுக்கு சமமா இன்னொரு மதக்காரனை தூக்கி உள்ளே போடுவது தானே சரியாயிருக்கும், இல்லைனா இந்து மதத்தையும், இந்துமதக்காரர்களையும் யார் மதிப்பா! , உடனே கிளம்புவோம், காக்கி டவுசர் போட்டுகிட்டு, தெருவில் நாய் கடிக்க வந்தாலும் சரி, வீடு வீடா போய் எல்லாரையும் இந்து மதத்துக்கு மாற சொல்லுவோம்! மறக்காம இதுவரை சாமியார்கள் செஞ்சதெல்லாம் தெரியாம பண்ணிடாங்க, இனிமே வர்ற சாமியார்கள் எல்லாம் தெரிஞ்சே பண்ணுவாங்க! சொரணை கெட்ட மக்களாகிய எங்களை போலவே நீங்களும் நாசமா போங்கன்னு திட்டவட்டமா சொல்லிருவோம், சரியா!

நாடி நாடி நரசிங்கா! said...

Thank you!

Eswari said...

உண்மையில் அந்த பதிவை படிக்கும்போது எனக்கே சிரிப்பு தான் வருது. ஏதோ இந்து மதத்தை காப்பாற்ற பிறந்தவர் மாதிரி உளறி இருக்கிறார்.

இந்த மதம் எத்தனை கோடி வால்பையன்,ராஜன், டம்பி மேவீ வந்தாலும் அழியாதது அழிக்க முடியாதது, அதன் தனி தன்மை குறையாதது, குறைக்க முடியாதது ன்னு இன்னும் புரிஞ்சிக்கலை பாவம்.

நீங்க அதுக்காக இப்படி டென்ஷன்பட்டு உடம்பை கெடுத்துக்காதிங்க

மங்குனி அமைச்சர் said...

தல என்னா சொன்னாலும் கேட்கமாட்டாணுக , அடிபட்டு ஆப்பு வாங்கினபுரம் தான் தெரியும் , "அன்னைக்கே வால்பையன் சொன்னாப்புல நான்தான் கேட்கல" அப்படின்னு புலம்புவாணுக

stockmarket said...

நண்பா வால்

இந்தப்பதிவின் இடையில் தேவையில்லாமல் தறிபட்டறைகளை குறிப்பிட்டுள்ளிர் மிகவும் கண்டிக்கத்தக்கது இது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்கருத்தை தவறு என்றால் அதற்கான பதிலை தருகிறேன்

Anonymous said...

இப்படிதான் 1947-இல் நானும் என் தாத்தாவும் ரோடுல காலால நடந்து ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு நடக்கும் போதுதான் கந்து வட்டி பற்றி ஒரு அழகான கட்டுரை எழுதற பேனாவாலே எழுதி அத இரண்டா மடிச்சு காறி துப்பி உன் மூஞ்சி மேலே என் பீசான் கைய வைக்க.

வால்பையன் said...

//madurai ponnu said...
தல, அடுத்த பதிவுல கிரெடிட் கார்டு பத்தி பதிவு எழுதுனா நல்ல இருக்கும்.அதை பற்றி அறிந்தும் கிரெடிட் கார்ட் வாங்கி கொண்டு தான் இருகின்றனர்.அவர்களுக்கு உங்கள் பதிவு ஒரு பாடமாக அமையும்.
//


எங்கிட்ட கிரிடிட் கார்டே இல்ல, அதை பற்றி எதுவும் தெரியாத போது எப்படி எழுதுறது?

எஸ்.கே said...

இந்த பிரச்னையின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்...

கடன் வாங்கும் பலர் அதை திருப்பிக் கொடுக்காமல் எப்படியவது டபாய்க்க முயற்சிக்கிறார்கள் என்பதும் உண்மை. கிரெடிட் கார்டைத் தேயோ தேயென்று தேய்த்து ஏராளமாக பொருட்களை வாங்கிக் குவித்துவிட்டு, பில் வருவதற்குள் அட்ரசை மாற்றீ கார்டு கம்பெனிக் காரர்களை லோலோவென்று அலையவிடும் டுபாக்கூர்கள் ஒருபுறம். சம்பளத்தை வங்கி மூலம் பெற்று அதன் அடிப்படையில் பர்சனல் லோன் பல ஆயிரங்களை வாங்கிவிட்டு பிறகு வேறொரு வங்கிக்கு கணக்கை மாற்றி வங்கியருக்கு தண்ணி காண்பிக்கும் நாணயமற்றவர்கள் ஒரு புறம். எங்கள் ஊரில் "விவசாயிக்கு கடன் கொடுத்தாற்போல்" என்ற பழமொழியே உள்ளது. குறுவையின் போது திரும்பிக் கேட்டால் சம்பா அறுத்தப்பறம் என்பார்கள். அப்போது கேட்டால் பயறு, உளுந்து என்று சாக்கு. பிறகு லோன் கிடைச்சப்பறம், பிறகு அடுத்த மகசூலில்... இடையிடையே நாணயம் பற்றிய லெக்சர் வேறு!

‍‍ஆக எதையும் பிணைக்காமல் (collateral security) கொடுக்கப்படும் கடன் எதுவும் திரும்பும் என்று நம்ப இயலாது.

கடன் வாங்கிக் கெட்டவர்கள் போல் கொடுத்துக் கெட்டவர்களும் அநேகம்.

இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து கந்து வட்டி, மீட்டர் வட்டிக்காரர்கள் தான் கறாராக வசூல் செய்ய இயலுகிறது. அப்படியே டிமிக்கி கொடுத்தாலும் ஓரளவாவது திரும்பப் பெற்றுவிடுகிறார்கள்.

வால்பையன் said...

@ ஈஸ்வரி

அந்த ஊர்காரங்க கறி தின்பதையும், ஆடம்பர செலவு செய்வதையும் குறைச்சாலே அவங்க பாதி கடன் தீரும்.//


காய்கறி விக்கிற விலைக்கு நான்வெஜ்ஜே சாப்பிட்டு போயிரலாம்!

பத்து ருபாய்க்கு எழும்பு வாங்கு ரெண்டு தக்காளி வெங்காயம் போட்டு தண்ணியா(ரசம் மாதிரி) கொழும்பு வச்சு மூணு நாளைக்கு சாப்பிடுவேன்!

வால்பையன் said...

//stockmarket said...
நண்பா வால்

இந்தப்பதிவின் இடையில் தேவையில்லாமல் தறிபட்டறைகளை குறிப்பிட்டுள்ளிர் மிகவும் கண்டிக்கத்தக்கது இது பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்கருத்தை தவறு என்றால் அதற்கான பதிலை தருகிறேன்//


தறிபட்டறை சமூக விரோத செயல்னு எங்கேயாவது சொல்லியிருக்கேனா!, அங்கே பிரபலமான தொழிலே அதுதான்! ஆனால் தறிபட்டறை முதலாளிகள் செய்யும் கொடுமையை தான் சொல்லியிருக்கேன்!,

அவர்கள் அட்வான்ஸ் கொடுத்து மக்களை அடிமையாக வைத்து கொள்வதில்லை?

பணம் கட்ட முடியாதவர்களை கொடுமை படுத்தவில்லை?

கிட்னி திருட்டு நடக்கவில்லை?

பதில் தாங்க!

வால்பையன் said...

//சாரு புழிஞ்சதா said...
இப்படிதான் 1947-இல் நானும் என் தாத்தாவும் ரோடுல காலால நடந்து ஒவ்வொரு அடியா எடுத்து வைச்சு நடக்கும் போதுதான் கந்து வட்டி பற்றி ஒரு அழகான கட்டுரை எழுதற பேனாவாலே எழுதி அத இரண்டா மடிச்சு காறி துப்பி உன் மூஞ்சி மேலே என் பீசான் கைய வைக்க.//


ரொம்ப வெயில் அதிகமா இருந்தா தலையில தொப்பி போட்டுக்கோங்களேன், ஏன் இபடி கஷ்டப்படனும்!

வால்பையன் said...

//குமுதம் மாதிரி நங்கூரத்தை இழந்த கப்பல் மாதிரித் திசை மாறிப் போய் விடாமல் இருப்பது ஒன்றே விகடனுடைய அடித்தளம், தரத்தைக் காட்டுகிறது என்றே எனக்குப் படுகிறது. //


இன்னும் வாங்கி கொண்டிருப்பதற்கு இது ஒன்றே காரணம்!

மாவோயிஸ் பற்றிய கட்டுரையும், “ஆம் நான் ராஜதுரோகி தான்” கட்டுரையும் வெளியிட நிச்சயம் தைரியம் வேண்டும், குமுதத்திடம் அதை எதிர்பார்க்க முடியாது!

Unknown said...

இந்த என் சாட்சி நான் 3% ஒரு மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் மலேசிய பிளஸ் கடன் நிறுவனம் ஒரு கடனாகப் பெற்றது எப்படி பொது தெரிவிக்க உள்ளது.
• 100% உத்தரவாதம் மற்றும் நம்பகமான பரிமாற்ற
• முன் குற்றச்சாட்டுக்கள் இல்லை
• நெகிழ்வான கடன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை
• காலம் (1-20) ஆண்டுகள்
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:
riggitplus@gmail.com

george said...

உங்களுக்கு அவசர கடனுதவி வேண்டுமா? நாங்கள் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள் போன்றவற்றையும் கொடுக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: (dakany.endre@gmail.com)

அவசர கடன் வழங்குதல்.

!

Blog Widget by LinkWithin