நான் ஏன் நாத்திகனானேன்! - தொடர்ச்சி




கேள்வி கேட்பது தான் எல்லா பதில்களுக்கும் ஆரம்பம்!. தெரியாதது, புரியாதது என பலவகை விசயங்கள் முடிவில் அனைத்தும் கடவுள் செயல் என கைவிடப்படுகின்றன! மனித நாகரிகம் ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது, சிந்து சமவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம், மாயன், இன்கா என அனைத்தும் ஆறாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதே! ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் படிமங்கள் லட்சகணக்கான வருடங்களாக மனிதனின் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது, ஆனால் இவைகள் இல்லாமல் இன்று மனிதனை பற்றி அறிவியல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!



ஒவியகலை, கட்டிடக்கலைக்கு முன்னோடி போர்கலை அதை மனிதன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதே பழகிவிட்டான், கூட்டம் கூட்டமாக வாழப்பழகிய மனிதன் தனக்கென ஒரு நகரத்தை உருவாக்கினான், கிடைத்திருக்கும் நாகரிக படிமங்கள் அவனது காலனி வாழ்க்கைக்கு ஆதாரம், அவைகளின் வளர்ச்சி கட்டிடகலை வளர்ச்சியாக முன்னேறியது, பிரமிக்கவைக்கும் பிரமீடுகள், ஒவ்வொரு நாகரிகத்திற்கும் தனிபட்ட அடையாள கட்டிடங்கள் என மனித நாகரிகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் கி.பி 1600 வரை மனிதன் அறிவியலில் பல விசயங்கள் புரியாமல் தான் இருந்தான். 2000 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டையானது, பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!



ஆனால் அறிவியல் தாகம் நின்றுவிடவில்லை, எதையும் கேள்வி கேட்டு கொண்டே தான் இருந்தது, முயற்சியில் மனம் தளராத சிலரால் சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு, சூரியனின் ஆற்றலில் பிரமித்து பூமியிலும் ஆற்றலை உருவாக்க நினைத்தார்கள், யோசித்து பாருங்கள் 5000 வருட மனித நாகரிகத்தில் மின்சாரம், கடைசி 400 வருடங்களுக்குள் தான் கண்டுபிடிக்கப்பட்டது, ஏதேன் தோட்டத்தில் மனிதனை படைத்த கடவுள் அப்போதே ஏன் அவனுக்கு அனைத்து அறிவுகளையும் கொடுக்கவில்லை, ”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!


இந்த உலகில் இருக்கும் அதிகாரமுள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, சீக்கியம், பெளத்தம், சமணம் மதங்களிடயே கொள்கை முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் பல உண்டு, ஆனால் அனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா!? இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!


பூமியில் உயிரினத்தின் பரிணாமத்திற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன, மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து பின் பிரிந்து சென்றான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது, மனித இனத்திற்குள்ளாகவே தோற்ற பிரிவு! ஒரு தாய்மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகள் அதை நிருபிக்கும். கடவுளின் இருப்பு எங்கேயும் இல்லை, கடவுள் என்ற ஒன்று உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையும் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலிருந்தே தெரிகிறது, ஆனாலும் மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது, ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!, 4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்! அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!

ஆகையால் நான் நாத்தியகானவே இருக்கிறேன்!

135 வாங்கிகட்டி கொண்டது:

Rajan said...

தும் ததா!

செல்வா said...

”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!

செல்வா said...

//”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!///

கடவுள் எப்பங்க அடிமையா இருக்கணும்னு சொன்னார் ..
உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க அடிமையா ...??

Rajan said...

//ஏதேன் தோட்டத்தில் மனிதனை படைத்த கடவுள் அப்போதே ஏன் அவனுக்கு அனைத்து அறிவுகளையும் கொடுக்கவில்லை,//


ஒன்ன கொடுத்ததுக்கே என்னன்னமோ வெளிய வந்துச்சாம்!

அனைத்தையும் கொடுத்தா அவ்வளவுதான்!

Rajan said...

இத நான் டிஸ்கவரில பாத்ததா நியாபகமே இல்லயே தல! இப்பல்லாம் சுயமாவும் சிந்திக்க ஆரமிச்சுட்டீங்க்களா! அவ்வ்வ்வ்வ்

தமிழ் பொண்ணு said...

:( நான் வந்து நான் வந்து முணாவது வெட்டு.

தமிழ் பொண்ணு said...

அருண் படம் படமா போட்டு பதிவ முடிச்சாச்சு..

அகல்விளக்கு said...

நல்ல பதிவு....

அகல்விளக்கு said...

//மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது,//

சரியாச் சொன்னீங்க...

+Ve Anthony Muthu said...

அடுத்த வினாடி என்ன நிகழுமென்று அனுமானிக்க இயலாத Uncertainity.

(எதுவும் நிகழலாம்.) இந்த நிச்சயமற்ற நிரந்தரத்தை கடவுள் எனலாமா நண்பா?

எனக்குக் கடவுள் உண்டு. ஆனால் அதற்கு பெயர் கிடையாது. அது வெறும் அதுவென்றே அழைக்கப்படட்டுமே.!!!

இந்தக் கடைசிப் பாராவை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நான் சொன்ன காரணத்திற்காகவே என்னுடன் தொடர்பை முறித்துக் கொண்டார் ஒரு ஆன்மீகவாதி. :-)

Rajan said...

//:( நான் வந்து நான் வந்து முணாவது வெட்டு./


அழக்கூடாது பாப்பா! வா உனக்கு முட்டாய் வாங்கித்தரேன்!

தமிழ் பொண்ணு said...

நான் ஏன் லூசு பையன் ஆனேன் சொல்லீட்டு ஒரு பதிவ போடு லே .

Rajaraman said...

ரொம்ப முக்கியம், மல சாக்கடையில் புரளும் குடிகார சொறி நாய் வலம் போனா என்ன எடம் போனா என்ன, மேல விழுந்து புடுங்காம இருந்தா சரிதான்.

Rajan said...

//ரொம்ப முக்கியம், மல சாக்கடையில் புரளும் குடிகார சொறி நாய் வலம் போனா என்ன எடம் போனா என்ன, மேல விழுந்து புடுங்காம இருந்தா சரிதான். //

இதான் லூஸுக்......ங்கிறது!;’


நாய் இருக்கும் இடத்தில் இந்த நல்ல குடி நாச்சியப்பனுக்கென்ன வேலை ? உம்ம ஆண்டவன் ரெண்டு கைய கொடுத்திருக்காரே மேல் வாயயும் கீழ்வாயயும் மூடிகிட்டு போவ வேண்டியது தானே!

தமிழ் பொண்ணு said...

இங்கே கமெண்ட் போடலன்னு யாரு உக்காந்து அழுததாம்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாய் இருக்கும் இடத்தில் இந்த நல்ல குடி நாச்சியப்பனுக்கென்ன வேலை ? உம்ம ஆண்டவன் ரெண்டு கைய கொடுத்திருக்காரே மேல் வாயயும் கீழ்வாயயும் மூடிகிட்டு போவ வேண்டியது தானே!
//

மொத்தம் ஒன்பது ஓட்டை இருக்கே...

ரெண்டு அடச்சாச்சி.. மீதிய எப்படி அடைக்கனுமுனு தெரியல போல..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எது எழுதினாலும், சண்டைக்கு வரனுமுனு ஒரு கூட்டமே அலையுது போல தல...

Rajan said...

//ரெண்டு அடச்சாச்சி.. மீதிய எப்படி அடைக்கனுமுனு தெரியல போல..

//

அப்ப அண்னாத்த கரெக்ட்டான எடத்துக்குதான் வந்துருக்காரு!

ஆங்.... இப்பிடி குப்பறக்கா படுங்க அடச்சிடலாம்!

Rajan said...

//எது எழுதினாலும், சண்டைக்கு வரனுமுனு ஒரு கூட்டமே அலையுது போல தல...
//

வாண்ட்டடா வந்த ரவுடிக தல!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகையால் நான் நாத்தியகானவே இருக்கிறேன்!
//

ரைட்டு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!
//

ஓ..அதுதான் சூர்யக் கடவுளா?..
இப்ப மேட்டர் கரெக்டா புரிஞ்சுடுச்சு...

vasu said...

மிக அருமையான பதிவு...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!///

இது சரியான வாதம் அல்ல! 1610 -இல தான் கலீலியோ பூமி சூரியனை சுத்துகிறது என்று சொன்னார். அது வரை பூமியைத்தான் சூரியன் சுத்துகிறது என்று என்னினோம்.

உங்கள் வாதம படி 1610 க்கு முன்னாள் எது கடவுள்?

ஒன்று புரிகிறது. எது எல்லாம் நம்ம மண்டைக்கு புரியவில்லையோ அது எல்லாம் கடவுள். கேட்டால் அதற்கு ஒரு ready made பதில். இப்படி சொன்னாதான் உனக்கு புரியும். அப்படி சொன்ன புரியாது. சரி சொல்பவன். அவனுக்கு நாலு மந்திரத்தை தவிர ஒன்னும் தெரியாது! ஆனால் நாம் அதை நம்புவம். ஏன் கடவுள் = பயம்.

ஆனால் தெரிந்தும் இன்றும் சூரியன் ஒரு கிரகம் (planet) என்றும் அதை ஜாதகத்தில் வைத்து கணிகிறோம்.

astronomy க்கும் astrology யும் ஒன்று என்று சொல்லும கண்மணிகள் தமிழக்கத்தில் பல கோடி!

dheva said...

அருமை பாஸ்...

ஓரணுக்கான.. காரணம் என்ன என்பதுதான்......தேடலின் மையம்....!

Jey said...

///ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!//

இது நச். ஆனா இந்த ஓரணுனு சொல்ரது அசெம்ப்ஸன் தான தல, அறிவியல் ரீதியா அந்த ஓரணுவை நல்ல தெரிஞ்சிக்கவே இன்னும் பல நூற்றாண்ண்டுகள் ஆகும் என்பதுதான், என் தாழ்மையான கருத்து. எப்படியோ நம்மால முடிஞ்ச வரை தெடுதலை தொடர்ந்துட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுட்டு போகலாம், அவங்களும் தேடுதலை ஆரம்பிக்கட்டும்.

Anonymous said...

எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்...

Unknown said...

:)

vasu said...

//இது சரியான வாதம் அல்ல! 1610 -இல தான் கலீலியோ பூமி சூரியனை சுத்துகிறது என்று சொன்னார். அது வரை பூமியைத்தான் சூரியன் சுத்துகிறது என்று என்னினோம்.//

ஐரோப்பியர்களுக்குத்தான் அதற்க்கு முன்பு தெரியாது. இந்தியர்கள் முன்பே அறிந்திருந்தார்கள்

VELU.G said...

மிக அருமையான பதிவு

//
ப.செல்வக்குமார் said...
//”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!///
கடவுள் எப்பங்க அடிமையா இருக்கணும்னு சொன்னார் ..
உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க அடிமையா ...??
//

பின் எதற்கு எந்த நேரமும் கடவுளை கும்பிடுங்கள்,தொழுங்கள்,பிரார்த்தியுங்கள் என்று சொல்கிறார்கள். கடவுளை மனிதன் பணிந்து வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அவர் என்ன கடவுள்?

தருமி said...

நியாயமான பாய்ண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாய் .

இது கட்டுரை.

மகிழ்ச்சி.

வளர்க.

நன்றி

Unknown said...

<<<
இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!
>>>

நல்ல கேள்வி,

ஆமா வால், அறிவியல் முறையில் எடுத்துக்கொண்டாலும் அல்லது ஆன்மிக முறையிலோ... மனிதன் தோன்றியது ஆசியா/ஆப்ரிக்கா பகுதிகளில்தான் இல்லையா? பிறகுதானே மற்ற பகுதிகளுக்கு சென்றார்கள்? கேள்வி தப்பாருக்கே... ம்ம்ம்ம்....

Unknown said...

கடவுள் ஏதோ ஒரு வகையில் தன் சுய தீர்மானங்களுக்கு துணையாக அல்லது தான் எதிர்பார்க்கும் வாழ்விற்கு இட்டுச்செல்லும் வழிகாட்டியாக கற்பனை உருவங்கள் தேவைபடுகிறது.. கடவுள் பற்றி மட்டும் ஏன் ஆராயக் கூடாது என பெரும்பான்மை மக்களுக்கு தோன்றாதது அடிப்படை வாழ்வியல் பயமே. இதனை சரியாக பயன்படுத்தி, மக்களை பயபடுத்தி சம்பாதிக்கும் எத்தர்கள்.. அவர்களை இன்னொரு தளத்திற்கு இட்டுசெல்வதாக கூறிக்கொண்டு தமது அடிமையாக மாற்றி விடுகிறார்கள்..

அடிமை வாழ்க்கை நமக்கும் பழகிவிட்டதாலேயே மக்களும் வெளிவர மறுக்கிறார்கள்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///ஐரோப்பியர்களுக்குத்தான் அதற்க்கு முன்பு தெரியாது. இந்தியர்கள் முன்பே அறிந்திருந்தார்கள்///




இது மாதிர் வேற ரீல் உடரான்களா? இது எவ்வளு நாலா இது மாதிரி எதனை பேர் கிளம்பி இருக்காங்க?

தயவு செய்து "science" படியுங்கள.

ஆதாரம்:
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei

உலகத்தில் எதை கண்டு பிடித்தாலும் அது இந்தியனுக்கு முன்னாலே தெரியும் என்று சொல்வது நமது தேசிய நோய்?

Radhakrishnan said...

தல, சிக்கனமா அருமையா சொல்லிட்டீங்க.

அப்படியே நான் ஏன் மனிதனானேன் அப்படின்னு ஒரு தொடர் வந்தா நல்லா இருக்கும். இது மதுரை பொண்ணோட ரிக்வெஸ்ட்.

Unknown said...

எப்பபபா

கடவுளை திட்டுறதுன்னா, இவ்வளவு பேரா??? ம்ம்ம்ம்....

Radhakrishnan said...

//எப்பபபா

கடவுளை திட்டுறதுன்னா, இவ்வளவு பேரா??? ம்ம்ம்ம்....//

ஹா ஹா! கடவுளை திட்டுகிறேனு சொல்லிட்டு எல்லாரும் திட்டுறது மனிதர்களைத்தான்.

இந்த உண்மை தெரியாமல் கடவுளை எதிர்க்கிறேன் என சக மனிதர்களை அவமதிக்கிறார்கள்.

ஜோதிஜி said...

அடிமை வாழ்க்கை நமக்கும் பழகிவிட்டதாலேயே மக்களும் வெளிவர மறுக்கிறார்கள்..

உண்மையும் கூட..........

உள்ளம் கவர் கள்வனாகி விட்டீர்?

தருமி said...

//பிறகுதானே மற்ற பகுதிகளுக்கு சென்றார்கள்? கேள்வி தப்பாருக்கே//

ஆப்ரஹாமிய மதங்களில் முதலாவது மதத்தின் காலம் (எனக்கு) தெரியாது. அடுத்த இரண்டும் இரண்டாயிரம் ஆண்டுகள், ஆயிரத்தி அறுநூத்திச் சில்லறை ஆண்டுகள்தானே.

கேள்வி தப்பாயில்லையே ...

Unknown said...

<<<
ஆப்ரஹாமிய மதங்களில் முதலாவது மதத்தின் காலம்
>>>

இந்த ஆப்ரஹாமிய மதங்களை விடமாட்டிங்களா??? :(

தருமி said...

//இந்த ஆப்ரஹாமிய மதங்களை விடமாட்டிங்களா??? //

எதுக்கு விடணும்? நீங்க ரெண்டுபேரும்தானே நாங்க உலக ஜனத்தொகையில அஞ்சில ஒண்ணு; நாலுல்ல ஒண்ணுன்னு சொல்லி, பெருமை கொண்டாடுறீங்க

:( - ஏன் இவ்வளவு சோகம்?!!

தர்ஷன் said...

அருமை வால்
மிகத் தெளிவாக கேள்விகளை முன் வைத்திருக்கிறீர்கள் ஆனால் எத்தனை சொன்னாலும் சில பேருக்கு புரியப்போவதில்லை. இப்பிரபஞ்சமும் உயிர் தோற்றமும் எதேச்சையானது என்று ஒப்புக் கொள்வதில் விருப்பம் இல்லை. பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும் என்றே நம்புகிறார்கள்.

Unknown said...

<<<
இப்பிரபஞ்சமும் உயிர் தோற்றமும் எதேச்சையானது என்று ஒப்புக் கொள்வதில் விருப்பம் இல்லை. பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும் என்றே நம்புகிறார்கள்.
>>>

ஆமா, ஆமா... கண்டிப்பா ஒரு நோக்கம் இருக்கும், நான் நம்புறப்பா... :)

Unknown said...

<<<
எதுக்கு விடணும்? நீங்க ரெண்டுபேரும்தானே நாங்க உலக ஜனத்தொகையில அஞ்சில ஒண்ணு; நாலுல்ல ஒண்ணுன்னு சொல்லி, பெருமை கொண்டாடுறீங்க

:( - ஏன் இவ்வளவு சோகம்?!!
>>>

அப்படியா சொல்றாங்கா??? ம்ம்ம்... வேன்னா ஒன்னுல ஒன்னுன்னு வச்சுபோம்மா??? ஹிஹி... பெருமை ஒன்னும் கொண்டாடல.

Unknown said...

அப்பறம் தருமி சார் நான் சொல்ல வந்ததே வேற, நம்ம அருண் சொன்னது

<<<
இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!
>>>

அதாவது ஆசியா கண்டத்தை தவிற மற்றவர் மேல் கடவுளுக்கு அக்கறை இல்லையா என்பதுதான் இல்லையா??? மற்ற பகுதிகளுக்கு சென்றது கொஞ்ச காலாத்திற்கு (1000) முன்னாடி இருக்குமா? எனக்கு இந்த எழவு ஹிஸ்டரிலாம் தெரியாது, ஆனாலும் வற்புறுத்தி படிக்கபட்டது, இப்ப உதவுது :)

தருமி said...

//எனக்கு இந்த எழவு ஹிஸ்டரிலாம் தெரியாது, ஆனாலும் வற்புறுத்தி படிக்கபட்டது, இப்ப உதவுது :)//

உதவுறமாதிரி தெரியலையே!

//மற்ற பகுதிகளுக்கு சென்றது கொஞ்ச காலாத்திற்கு (1000) முன்னாடி இருக்குமா? //

அது எப்போ? எங்கே? கொஞ்சம் சொல்லுங்களேன்.

முடிந்தால் இதையும் வாசித்துப் பாருங்களேன்.

vasu said...

@ஆட்டையாம்பட்டி அம்பி

மன்னிக்கவும், இந்தியர்கள் உலகம் உருண்டை என்பதை தான் அறிந்திருந்தார்கள் தவறுதலாக பூமி சூரியனை சுற்றுவதை அறிந்திருந்ததாக மறுமொழி இட்டுவிட்டேன்.
மேலும், நீங்கள் குறிப்பிடும் category இல் நான் இல்லை.

smart said...

வால் அண்ணே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்
சில பதிவுலக சண்டியருக்கு ஆப்பு வைக்கணும் மேலதிக தகவலுக்கு இங்க வாங்கண்ணே

smart said...

ராஜன் அண்ணே நீங்களாவது எனக்கு உதவி செய்யுங்கள்.
சில பதிவுலக சண்டியருக்கு ஆப்பு வைக்கணும் மேலதிக தகவலுக்கு இங்க வாங்கண்ணே

Ganesan said...

அன்பின் வால்,

வேலுபிரபாகரன் இயக்கிய புரட்சிகாரன் படம் மீண்டும் பார்த்த உணர்வு உங்கள் இந்த பதிவின் மூலம் உணர்ந்தேன்..

சாமக்கோடங்கி said...

அனைத்துக் கேள்விகளும் ஞ்யாயமானவை..

இந்த பூமியில் எத்தனையோ அநியாயங்கள் நடக்கின்றன.. அதையெல்லாம் கண்டும் காணாமலும் இருப்பானேயானால் அப்படி ஒரு கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன..? ஒரு கண்ணுக்கு மையும் இன்னொரு கண்ணனுக்கு சுண்ணாம்பும் தடவுபவன் எப்படி நமக்கு கடவுளாக இருக்க முடியும்..? பிரபஞ்சத்தின் தோற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் பரவா இல்லை.. அதுவரை இந்த நம்பிக்கைகள் தொடரும்...

நீங்கள் நாத்திகராக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு இன்னும் நிறைய நல்ல தகவல்கள் கிடைக்கும்..

ஹேமா said...

வாலு...பாராட்டலாம் மனதில் உள்ளதை ஒளிக்காமல் நடிக்காமல் வெளிப்படுத்தலுக்கு.அதனாலேயே எனக்கும் பிடித்த மனிதர் நீங்கள் !

no-nononsense said...

வால்பையன், அருமையான விளக்கங்கள். நாத்திகம் என்பது ஒரு தெளிவு. அதை அடைய வேண்டுமென்றால் முதலில் மனதை திறந்து வைத்திருக்க வேண்டும். எல்லா மாற்று கருத்துக்களையும் பரிசீலிக்க முன்வரவேண்டும். அது பலரிடம் இல்லை என்பதுதான் விவாதங்களின் போது நாம் காணக் கிடைப்பது.

முதல் முறையாக உங்களுக்கு பின்னூட்டமிடத் தோன்றியது.

Ramesh said...

அருமை

smart said...

//வாலு...பாராட்டலாம் மனதில் உள்ளதை ஒளிக்காமல் நடிக்காமல் வெளிப்படுத்தலுக்கு //
சகோதரி,
வால் அண்ணே ஒளிக்காமல் மட்டும் சொல்லியிருந்தால் பாராட்டலாம். ஆனால் ஆலின் ஆல் என்ற பதிவின் வாயிலாக செய்துவிட்டு இந்த மாதிரி பதிவின் வாயிலாக நடிப்பது எவ்விதத்தில் பாராட்டுக் கூறியது?

knowledgevillage.webs.com said...

**மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது,**

எந்த மதம் மறுக்கிறது, அதற்கான அதாரம் இருக்கிறதா?

**4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்!**

4000 வருடங்களாக புதிய நுணுக்கங்களை கற்று புதிய கண்டுபுடிப்புகளை உருவக்கினானே தவிர, கடவுள் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதுவரையில் எதுவும் அழிக்கப்படவில்லை.

Unknown said...

// தர்ஷன் said...

....பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும் என்றே நம்புகிறார்கள்.//

இதை கூறுபவர்கள், எதற்காக இவ்வுலகம் இயங்குகிறது என்பதையும் கூறலாமே!!

School of Energy Sciences, MKU said...

சிந்தனை நன்றாகத்தான் இருக்கு ஆனால் தீர்க்கமாக இல்லை அன்பரே. எனது பதிவில் தங்களுக்கு சில விளக்கங்கள் கிடைக்கலாம். http://tamilthalaimagan.blogspot.com/2010/07/blog-post_14.html

Kannan said...

ஆத்திகர்கள் எப்படி முழு முட்டாளாக இருக்கமுடியுமோ அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் நாத்திகர்கள் இருகிறார்கள். உதாரணமாக, நான் வால்பையன் ப்ளாக் படித்ததில்லை என்று வைச்சு கொள்வோம், என் நண்பர் என்னிடம் இந்த ப்ளாக் பற்றி கூறும் பொழுது - நான் தீர்மானமாக நான் அதை படித்ததில்லை அல்லது பார்த்ததில்லை அதனால் அது இல்லை என்று என் நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்தால் அதுவும் உண்மை தான். ஏனென்றால் என் நம்பிக்கை என்னை அது பற்றி தேட கூட அனுமதிக்காது. ஆத்திகர்கள் போல நாத்திகர்களும் அதை ஒரு உருவமாக மட்டுமே பார்க்க முயற்சி செய்வதால் அதில் இருவருக்கும் வெற்றி கிட்ட போவதில்லை. அதை ஒரு தன்மையாக பார்க்கும் பட்சத்தில், அறிவியலே ஒரு கடவுள் தன்மை தான் அல்லது கடவுள் தான்.

கும்பிடுவதும், தொழுவதும் அடிமை தனமாக பார்த்தால், அறிவியலில் அடைந்த வெற்றிகளுக்கு பின்னால் அவ்விஷயத்தை பற்றிய சதா சிந்தனையும், உழைப்பும் இருந்திருக்கிறது. அந்த சிந்தனையையும், உழைப்பையும் அடிமைத்தனம் என்று கூற முடியுமா?

பிறகு ஏன் கடவுள் (அ) தன்மை அழித்தலை செய்கிறது என்று ஒரு முட்டாள் தனமான கேள்வி வரலாம். நீங்கள் ஒரு மாம்பழம் சாப்பிடீர்கள் என்றல் அதை அழித்தலாக பார்ப்பீர்களா அல்லது ஒரு படைத்தலாக பார்ப்பீர்களா என்பது மாறுபடும். ஏனென்றால் அதை சாப்பிடுவது என்பது அந்த மாம்பழத்தை பொறுத்த வரை அழித்தல், சாப்பிடுவரை பொறுத்தவரை தன்னை காத்தல், படைத்தலை பொறுத்தவரை அந்த விதை (அ) கொட்டை இன்னும் பல நூறு மாம்பழங்களை கொண்டு வரலாம்.

நீங்கள் கடவுளை கண்டிப்பாக நம்ப வேண்டிய அவசியம் இல்லை, அதே போல இல்லை என்ற நம்பிக்கையும் விட்டு விட்டால் தான் 'உண்மை' எது என்று தெரிய வரும். அது வரையில், மதவாதிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒன்றை பற்றி கொண்டு அது தான் உண்மை என நம்பி கொண்டு இருக்கிறீர்கள், நிஜ அனுபவம் எதுவும் இல்லாமல்.

என்னை பொறுத்த வரை, நான் ஆத்திகனையும் படிப்பேன், நாத்திகனையும் படிப்பேன் ஆனால் எதையும் இதுதான் என்று உறுதியாக கூறமாட்டேன், உண்மையை உணரும் வரையில்.

Kannan said...

ஆத்திகர்கள் எப்படி முழு முட்டாளாக இருக்கமுடியுமோ அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் நாத்திகர்கள் இருகிறார்கள். உதாரணமாக, நான் வால்பையன் ப்ளாக் படித்ததில்லை என்று வைச்சு கொள்வோம், என் நண்பர் என்னிடம் இந்த ப்ளாக் பற்றி கூறும் பொழுது - நான் தீர்மானமாக நான் அதை படித்ததில்லை அல்லது பார்த்ததில்லை அதனால் அது இல்லை என்று என் நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்தால் அதுவும் உண்மை தான். ஏனென்றால் என் நம்பிக்கை என்னை அது பற்றி தேட கூட அனுமதிக்காது. ஆத்திகர்கள் போல நாத்திகர்களும் அதை ஒரு உருவமாக மட்டுமே பார்க்க முயற்சி செய்வதால் அதில் இருவருக்கும் வெற்றி கிட்ட போவதில்லை. அதை ஒரு தன்மையாக பார்க்கும் பட்சத்தில், அறிவியலே ஒரு கடவுள் தன்மை தான் அல்லது கடவுள் தான்.

கும்பிடுவதும், தொழுவதும் அடிமை தனமாக பார்த்தால், அறிவியலில் அடைந்த வெற்றிகளுக்கு பின்னால் அவ்விஷயத்தை பற்றிய சதா சிந்தனையும், உழைப்பும் இருந்திருக்கிறது. அந்த சிந்தனையையும், உழைப்பையும் அடிமைத்தனம் என்று கூற முடியுமா?

பிறகு ஏன் கடவுள் (அ) தன்மை அழித்தலை செய்கிறது என்று ஒரு முட்டாள் தனமான கேள்வி வரலாம். நீங்கள் ஒரு மாம்பழம் சாப்பிடீர்கள் என்றல் அதை அழித்தலாக பார்ப்பீர்களா அல்லது ஒரு படைத்தலாக பார்ப்பீர்களா என்பது மாறுபடும். ஏனென்றால் அதை சாப்பிடுவது என்பது அந்த மாம்பழத்தை பொறுத்த வரை அழித்தல், சாப்பிடுவரை பொறுத்தவரை தன்னை காத்தல், படைத்தலை பொறுத்தவரை அந்த விதை (அ) கொட்டை இன்னும் பல நூறு மாம்பழங்களை கொண்டு வரலாம்.

நீங்கள் கடவுளை கண்டிப்பாக நம்ப வேண்டிய அவசியம் இல்லை, அதே போல இல்லை என்ற நம்பிக்கையும் விட்டு விட்டால் தான் 'உண்மை' எது என்று தெரிய வரும். அது வரையில், மதவாதிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒன்றை பற்றி கொண்டு அது தான் உண்மை என நம்பி கொண்டு இருக்கிறீர்கள், நிஜ அனுபவம் எதுவும் இல்லாமல்.

Kannan said...

ஆத்திகர்கள் எப்படி முழு முட்டாளாக இருக்கமுடியுமோ அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் நாத்திகர்கள் இருகிறார்கள். உதாரணமாக, நான் வால்பையன் ப்ளாக் படித்ததில்லை என்று வைச்சு கொள்வோம், என் நண்பர் என்னிடம் இந்த ப்ளாக் பற்றி கூறும் பொழுது - நான் தீர்மானமாக நான் அதை படித்ததில்லை அல்லது பார்த்ததில்லை அதனால் அது இல்லை என்று என் நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்தால் அதுவும் உண்மை தான். ஏனென்றால் என் நம்பிக்கை என்னை அது பற்றி தேட கூட அனுமதிக்காது. ஆத்திகர்கள் போல நாத்திகர்களும் அதை ஒரு உருவமாக மட்டுமே பார்க்க முயற்சி செய்வதால் அதில் இருவருக்கும் வெற்றி கிட்ட போவதில்லை. அதை ஒரு தன்மையாக பார்க்கும் பட்சத்தில், அறிவியலே ஒரு கடவுள் தன்மை தான் அல்லது கடவுள் தான்.

கும்பிடுவதும், தொழுவதும் அடிமை தனமாக பார்த்தால், அறிவியலில் அடைந்த வெற்றிகளுக்கு பின்னால் அவ்விஷயத்தை பற்றிய சதா சிந்தனையும், உழைப்பும் இருந்திருக்கிறது. அந்த சிந்தனையையும், உழைப்பையும் அடிமைத்தனம் என்று கூற முடியுமா?

Kannan said...

பிறகு ஏன் கடவுள் (அ) தன்மை அழித்தலை செய்கிறது என்று ஒரு முட்டாள் தனமான கேள்வி வரலாம். நீங்கள் ஒரு மாம்பழம் சாப்பிடீர்கள் என்றல் அதை அழித்தலாக பார்ப்பீர்களா அல்லது ஒரு படைத்தலாக பார்ப்பீர்களா என்பது மாறுபடும். ஏனென்றால் அதை சாப்பிடுவது என்பது அந்த மாம்பழத்தை பொறுத்த வரை அழித்தல், சாப்பிடுவரை பொறுத்தவரை தன்னை காத்தல், படைத்தலை பொறுத்தவரை அந்த விதை (அ) கொட்டை இன்னும் பல நூறு மாம்பழங்களை கொண்டு வரலாம்.

நீங்கள் கடவுளை கண்டிப்பாக நம்ப வேண்டிய அவசியம் இல்லை, அதே போல இல்லை என்ற நம்பிக்கையும் விட்டு விட்டால் தான் 'உண்மை' எது என்று தெரிய வரும். அது வரையில், மதவாதிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒன்றை பற்றி கொண்டு அது தான் உண்மை என நம்பி கொண்டு இருக்கிறீர்கள், நிஜ அனுபவம் எதுவும் இல்லாமல்.

என்னை பொறுத்த வரை, நான் ஆத்திகனையும் படிப்பேன், நாத்திகனையும் படிப்பேன் ஆனால் எதையும் இதுதான் என்று உறுதியாக கூறமாட்டேன், உண்மையை உணரும் வரையில்.

Kannan said...

வால், கூகிள் மக்கர் செய்ததால் திருப்பி திருப்பி போஸ்ட் அடிக்க வேண்டியதாயிற்று வக்காலி அதனால் மூன்று முறை வந்து விட்டது. நிற்க: இது போதையில் செய்தது அல்ல. எந்த போதை என்பதை உங்கள் தீர்மானத்திற்கு விட்டு விடுகிறேன். நன்றி.

Kannan said...

உங்களை போல் 'படைத்தலை' செய்பவர், duplicate comment என்ற 'அழித்தலை' செய்தால் தான் என்னை 'காப்பாற்ற' முடியும். ஆகவே அளித்து விடுங்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///மன்னிக்கவும், இந்தியர்கள் உலகம் உருண்டை என்பதை தான் அறிந்திருந்தார்கள் தவறுதலாக பூமி சூரியனை சுற்றுவதை அறிந்திருந்ததாக மறுமொழி இட்டுவிட்டேன்.
மேலும், நீங்கள் குறிப்பிடும் category இல் நான் இல்லை///


மறு படியும் மன்னிக்கவும்! இந்தியர்கள் மட்டுமல்ல எல்லோரும் உலகம் உருண்டை என்பதை தெரிந்து கொண்டது மேலும் படியுங்கள்:

http://en.wikipedia.org/wiki/Flat_Earth

இடைசெருகளில் நம்மள அடிக்க முடியாது. ஆதாரம் இல்லாமல் எழுதுவார்கள். கேட்டல் எதாவது புராணம் அப்படின்னு புளுகுவானுங்க> இந்தியர்கள் உலகத்தில் எதை கண்டு பிடித்தாலும் அது இந்தியனுக்கு முன்னாலே தெரியும் என்று சொல்வது நமது தேசிய நோய்?

tamil4true said...

திரு கண்ணன் சொல்வது முற்றிலும் சரி. என்னை பொருத்தவரை கடவுள் என்பது, இந்த பிரபஞ்சம்முழுவதையும் இயக்குகிற எதோ ஒரு சக்தி உள்ளது, அதற்கு, மனிதன் இட்ட இடைக்கால பெயர்தான் கடவுள். எப்படி, ஒரு அறிவியல் கோட்பாடு, புதிய அறிவியல் கோட்பாடு வரும் வரை நம்பப்படுகிறதோ அதைப்போன்றுதான். தந்தை இல்லாமல் தனையன் இல்லை. மனிதன் தன்னிடம் உள்ள நல்ல விசயங்கள், ஒழுக்கநெறிகள் இவைகளைக்கொண்டு கடவுளிற்கு உருவம் கொடுத்தான். கடவுள் என்பது ஒரு old science. அதன் துணையோடுதான் இன்று நாம் இந்த இடத்தை அடைந்துள்ளோம். வாழ்ந்து மறைந்த நாம் முன்னோர்கள் கண்டுபிடித்த அற, ஒழுக்க நெறிமுறைகளே கடவுள். நம்முன்னோர்கள் அனைவரும் முட்டால்கள், நாங்கள் மட்டுமே பகுத்தறிவாளிகள் என பீற்றிக்கொள்ளும் நாத்திகவாதிகளை என்னால் அறிவாளிகளாக எற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களின் தத்துவம் "சூன்யம்,அவநம்பிக்கை" மட்டுமே. இவர்களைப்பொருத்தவரை "கடவுள்" என்பது இவர்கள்தான். இவர்களுக்காக எதையும் செய்வார்கள். உதாரணமாக, கருணாநிதியை எடுத்துக்கொள்ளுங்கள்,50ஆயிரம் தமிழர்களின் உயிரா? அல்லது தனது பதவி நாற்காலியா? எதை தேர்வுசெய்தார் உங்களுக்கு தெரியும். நாத்திகவாதிகளின் உண்மை முகம் இதுதான்.

கார்மேகராஜா said...

யாருக்காக இந்த தன்னிலை விளக்கம்! பதிவும் படங்களும் அருமை, குறிப்பாக சிந்து சமவெளி மிருக முத்திரைப்படம் அருமை!

மேவி... said...
This comment has been removed by the author.
மேவி... said...
This comment has been removed by the author.
மேவி... said...
This comment has been removed by the author.
மேவி... said...

டம்பி மேவீ said...
"ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!"

வால்ஸ் நல்ல காமெடி ...கடவுள் இல்லை தான். ஆனால் கடவுள் / சக்தின்னு ஒரு விஷயத்தை நம்பி கொண்டு, அதனை வழிபடாத கூட்டம் இருந்ததில்லை .... ஒரு விதத்திலான வழிபாடு முறை எல்லா இடத்திலும் இருந்தது ..இப்பொழுதும் இருக்கிறது ....

வால்ஸ் இதையெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போது யோசித்தது..நீங்க இன்னுமும் பதிவாக போட்டு ஊர் மக்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கீங்க .... பேசாம எதாச்சு பிட் படத்தை பத்தி நீங்க எழுதினால் எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்

மேவி... said...

ரஷ்ய நாட்டு பிட் படங்கள் அருமையா இருக்கும் ...அதை பற்றி நீங்கள் இன்னும் எழுதவில்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கிறேன்


INDIA ON TELEVISION ன்னு ஒரு புஸ்தகம் இருக்கு ...அதை படிச்சு அல்லது கேட்டு தெரிஞ்சு நீங்க எழுதின சமுதாயத்துக்கு நல்லதா இருக்கும்

மேவி... said...

தல ..இந்த பதிவுல உங்களுக்கு ஏன் கடவுள் வேண்டாமுன்னு தானே சொல்லிருக்கீங்க ...

நீங்க ஏன் நாத்திகனானிங்கன்னு சொல்லவே இல்லையே ???

முதல் ஒன்னு எனக்கு சொல்லுங்க ... யார் நாத்திகன் .. கடவுள் எதிர்பவர்களா இல்லை கடவுளை நம்பாதவர்களா ...

எப்படி பார்த்தாலும் ..கடைசில கடவுள் ன்னு விஷயம் இருக்கு ஆனா அது தேவை இல்லை ன்னு தானே முடிச்சு இருக்கீங்க ....


நானெல்லாம் கடவுள், ஆன்மீகம் ...இதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை . எனக்கு கடவுள் இருந்தாலும் ஓன்று தான், இல்லாட்டியும் ஓன்று தான்.

கடவுளை விட எனக்கு பக்கத்து கடை டி-மாஸ்டர் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. அருமையா டி போடுவாரு ..

smart said...

//தல ..இந்த பதிவுல உங்களுக்கு ஏன் கடவுள் வேண்டாமுன்னு தானே சொல்லிருக்கீங்க ...

நீங்க ஏன் நாத்திகனானிங்கன்னு சொல்லவே இல்லையே ???//
Good question But,
அதுக்குள்ளையும் யாராவது ஆப்பு வச்சுருவாங்கனு தல வேற சில விஷயத்தில பிசியா இருக்குறாரு.
எல்லாப் பதிவையும் எடிட் பண்ணி மற்றும் டெலிட் பண்ணியும் முடிச்சதுக்கப்புறம் திரும்ப வருவாருன்னு நினைக்கிறேன்.

smart said...

///அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது///
எதோ எல்லார்கிட்டையும் வந்து நான்தான் கடவுள் என்னைக் கும்பிடு உனக்கு சொத்தும் சுகமும் தாரேன் அப்படின்னு சொல்லும் பண்டமாற்று முறைதான் கடவுள் அப்படின்னு நினைச்சுகிட்டுத் தெரியாம எழுதிட்டாரு. "அறியாமையைப் போக்கக் கூடியவர்தான் அந்த எல்லாம் வல்ல சக்தி. கடவுள் எதுவும் புதுசா தரதில்லை அவனிடத்திளிருப்பதை உணரவைக்கிறார் அவ்வளவே " அப்படின்னு யாராவது இவருக்கு புரியவையுங்களே!

கண்ணகி said...

தொடர்கிறேன்..

கோவி.கண்ணன் said...

//இது சரியான வாதம் அல்ல! 1610 -இல தான் கலீலியோ பூமி சூரியனை சுத்துகிறது என்று சொன்னார். அது வரை பூமியைத்தான் சூரியன் சுத்துகிறது என்று என்னினோம்.//

சுழன்றும் ஏர் பின்னது உலகம்
- திருவள்ளுவர்

ஆர்வா said...

//அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!//

ஃபைனல் டச்.. நச்..
ரொம்ப யோசிக்கிறீங்க போல.. Its Good

pinkyrose said...

வாலு...

உங்க கருத்து உங்க உரிமை...
பட் உங்க கருத்தை வெளியிட்ட விதம் அருமை.ஸோ ஹேட்ஸ் ஆஃப் யு!

மங்குனி அமைச்சர் said...

என்னப்பா இது, ஒன்னும் சரியா கலகட்டலையே ?

pinkyrose said...

தேடுங்க தேடல்களின் பாதையையும் விரிவாக்குங்கஒவ்வொரு கருத்தயும் உண்மயா இருந்தால்ங்ர வழிலயும் பாருங்க கண்டிப்பா தெளிவு கிடக்கும்

vasu said...

@ஆட்டையாம்பட்டி அம்பி

நீங்கள் கொடுத்த linkலேயே ஆரியபட்டர் உலகம் உருண்டை என அறிந்திருந்ததர்க்கு ஆதாரம் உள்ளது.... ஆரியபட்டர் கலிலியோ காலத்திற்கு முற்பட்டவரே.... மேலும் பிரம்ம குப்தரும் உலகம் உருண்டை என்று தான் கருதினார்.....
link கொடுப்பர்க்கு முன் முழுமையாகப் படித்துவிடுங்கள்....

Anbu said...

:-))

Romeoboy said...

ஹ்ம்ம் .. அப்படியா .. இப்படியா .. எப்படியா ??

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நான் ரொம்ப லேட்..2 நாளா முக புத்தகத்திலே இருந்த்தாலே இங்கே வரல படிச்சிட்டு வர்றேன்...

வினோத் பாபு இராமசுப்பு said...

அருமை நண்பரே !.......
கும்பகோணத்தில் அத்தனை குழந்தைகள் இறந்த போது கடவுள் எங்கு சென்றார் ?
சிலர் விளக்கம் சொன்னார்கள் ........
எல்லாம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினையின் பலன் .....
மனிப்பவர் தானே கடவுள் . அன்பு தானே சிவம் . .
அந்த குழந்தைகளையும் மன்னிக்க வேண்டியது தானே ...........
சிலர் வேறு விளக்கம் தருவார்கள் .........
படைப்பது தான் கடவுள் வேலை . நடப்பதை எல்லாம் நாம் தான் பார்க்க வேண்டும் . மிக்க நன்று அதைதான் நாங்களும்(நாத்திகர்கள் ) சொல்கிறோம் . நம்மைகண்டு கொள்ளாத கடவுளை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?
பல பேரின் பணத்தை ஒருவன் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறான் . அவன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு (சர்ச் , மசூதியாக கூட இருக்கலாம் )செல்கிறான் . அவன் நம்பும் கடவுளுக்கு கூட அவன் உண்மையாக இல்லை என்பது தானே அர்த்தம் . எனவே தோல்வியடைந்த சித்தாந்தம் தான் மதம் .

பல ஆயிரம் வருடங்களுக்கு முன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் . உலகத்தில் உள்ள ஒவ்வொரு கண்டத்திலும் மக்கள் வாழ்ந்தனர்.கடலில் கண்டமாகிப்போன லெமூரியா உட்பட . அவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்று தெரியாது . தன்னைப்போல் பிற கண்டங்களில் ஏன் அருகாமை இடங்களில் (உதாரணம்: மதுரை , சென்னை தூரம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) மக்கள் வசிப்பது கூட அவர்களுக்கு தெரியாது. காரணம் , போக்குவரத்து இல்லை . தான் வாழும் பகுதியில் உள்ள மிருகங்களுடன் போராடி தப்பிப் பிழைக்க வேண்டும் .தனக்கான உணவைத் தேட வேண்டும். எனவே காடுகளில் , குகைகளில் அப்படி அப்படியே வாழ்ந்து வந்தனர் . தன்னால் கட்டுப்படுத்த முடியாத விடயங்களை கண்ட மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாக கருதினான் . இதில் அற்புதமான ஒரு ஒற்றுமை என்னவென்றால் உலகில் வாழ்ந்த அனைத்து ஆதி மனிதனும் கிட்டத்தட்ட இதே மாதிரி யோசித்தது தான் . விளைவு 'கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்' என்ற எண்ணம் உருவானது . அவர்கள் கடவுளை உருவாக்கினர் . ஓரிடத்தில் சூரியனை வணங்கினர் . ஓரிடத்தில் மழையை வணங்கினர் . ஓரிடத்தில் நெருப்பை வணங்கினர் .ஓரிடத்தில் வீனஸை உருவாக்கினர் . ஓரிடத்தில் சிவனை உருவாக்கினர் . ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாகரீகம் வளர்ந்தது எகிப்து நாகரீகம் , கிரேக்க நாகரீகம் , பள்ளியில் நாம் படித்த ஹரப்பா , மொகஞ்சதாரோ போன்ற சிறிய நாகரீகங்கள்.

வினோத் பாபு இராமசுப்பு said...

அருமை நண்பரே !.......
கும்பகோணத்தில் அத்தனை குழந்தைகள் இறந்த போது கடவுள் எங்கு சென்றார் ?
சிலர் விளக்கம் சொன்னார்கள் ........
எல்லாம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினையின் பலன் .....
மனிப்பவர் தானே கடவுள் . அன்பு தானே சிவம் . .
அந்த குழந்தைகளையும் மன்னிக்க வேண்டியது தானே ...........
சிலர் வேறு விளக்கம் தருவார்கள் .........
படைப்பது தான் கடவுள் வேலை . நடப்பதை எல்லாம் நாம் தான் பார்க்க வேண்டும் . மிக்க நன்று அதைதான் நாங்களும்(நாத்திகர்கள் ) சொல்கிறோம் . நம்மைகண்டு கொள்ளாத கடவுளை நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் ?
பல பேரின் பணத்தை ஒருவன் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறான் . அவன் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு (சர்ச் , மசூதியாக கூட இருக்கலாம் )செல்கிறான் . அவன் நம்பும் கடவுளுக்கு கூட அவன் உண்மையாக இல்லை என்பது தானே அர்த்தம் . எனவே தோல்வியடைந்த சித்தாந்தம் தான் மதம் .

http://ramvinothbabu.blogspot.com/2010/04/blog-post.html

ரோஸ்விக் said...

இந்த நாகரீகமான எழுத்தையும் வாதத்தையும்தான் தல நிறைய நண்பர்கள் எதிர்பார்க்குறாங்க...

அருமையான தகவல்களுடன் சொல்லியிருக்கீங்க..
வணக்கமும் வாழ்த்துக்களும் தல.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

வணக்கம் நண்பரே!

எனது புதிய பதிவு:

கருணாநிதி ஹிந்தி படிக்க விட்டு இருந்தால் மூணு வேளை பிரியாணியும் ஒரு குவார்ட்டரும் ஒவ்வொரு தமிழனக்கும் தினமும் கிடைத்து இருக்கும்!

http://tamilkadu.blogspot.com/

or

http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html


என்றும் அன்புடன்,

ஆட்டையாம்பட்டி ஆம்பி!?

Anonymous said...

//நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!//


நறுக்................. நன்றி...

Chandru said...
This comment has been removed by the author.
Chandru said...

வால் பையன்,இது பற்றி என்னுடைய பதிவு பற்றியும் கருத்து கூறுங்கள்
http://chandroosblog.blogspot.com/2010/06/vs.html

webworld said...

மெய்!..எனினும் நம் சமுதாயம் இன்னும் லோக்கல் கடவுள்களை விடுவதாக இல்லை....இன்னும் ஓராயிரம் வருடம் கூட எடுக்கலாம், தம் எண்ணத்தை மாற்ற. அப்பொழுது வாழும் தன்மையும்,அறிவுத்திறனும் இன்னுமே சிறப்பாக இருக்கும் எனவும் தோனுகிறது. சில நேரங்களில் கொஞ்சம் லேட்டா உயிர் கிடைத்திருக்கலமோ என்றும் தோனுகிறது...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//கும்பகோணத்தில் அத்தனை குழந்தைகள் இறந்த போது கடவுள் எங்கு சென்றார் ?//--ஆதாம் ஏவாளை கொன்றபோது வராத கோபம், உங்கள் கொள்ளுப்பாட்டி, பாட்டியின் பாடி, கொள்ளு பாட்டியின் பாட்டி, கொள்ளுதாத்தாதா, தாத்தாவின் தாத்தா, கொள்ளு தாத்தாவின் கொள்ளுத்தாத்தா -இவ்ர்களிஎல்லாம் கொன்ற போது வராத கோபம், உங்களை, உங்கள் பெற்றோரை, உங்கள் குழந்தைகளை, உங்கள் குடும்பத்தை, ஏன்.. என்னை, என் குடும்பத்தை இந்த உலகத்தில் இப்போது வாழும் அனைவரையும் கொல்வார் என்று நன்கு தெரிந்தும் வராத கோபம் கடவுளின் மீது அப்போது மட்டும்தான் வந்ததா? சிந்தியுங்கள்.

//என்னை பொறுத்த வரை, நான் ஆத்திகனையும் படிப்பேன், நாத்திகனையும் படிப்பேன் ஆனால் எதையும் இதுதான் என்று உறுதியாக கூறமாட்டேன், உண்மையை உணரும் வரையில்.//-எப்போது உணர்வீர்கள் என்று நினைகிறீர்கள்?

நாத்திகம் என்பது ஒரு மதம். இது மற்ற ஆத்திக மதங்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானது. தீங்கானது. யாருக்கும் பயப்படாமல் தான்தொன்றித்தனாமாக மனிதனை எதுவும் செய்ய வைத்து விடும்.

உதாரணம்:
சவூதி அரேபியாவில் சாராயம் விற்பது - கெட்ட ஆத்திகன்.

பாண்டிச்சேரியில் சாராயம் விற்பது - நல்ல நாத்திகன்.

முன்னவன் கெட்டதை (சவூதியின் மரணதண்டனை சட்டம் என்ற கடவுளுக்கு)பயந்துபயந்து செய்வான்.

பின்னவன்(கடவுள் இல்லை என்ற அரசு லைசன்சு இருப்பதால்)தைரியமாக கூவி விற்க யாருக்கும் பயப்படவேண்டாதவன்.

கெட்டவை ஜகஜ்ஜோராய் எங்கு நடக்கும் என்று அறிந்து தெளிந்து கொள்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

எனக்கு முன்னால் இருக்கும் இந்த கம்புயூட்டர், இந்த கீபோர்ட், மவுஸ், ஸ்பீக்கர், வெப் கேமரா, ஹெட்செட், மேசை, நாற்காலி, ஜன்னல், கதவு, இந்த என் வீடு எல்லாமே தானாகவே ஒருநாள்... பல லட்சம் கோடியில் ஒன்று என்ற புரோபபிளிட்டியில் திடீரென்று தோன்றிக்கொண்டது என்று நம்புவது நாத்திகம்.

இல்லை இல்லை. அஃறினை பொருட்களான இவை தானாக இணைந்து உருவாகி இருக்கவே முடியாது. யாரோ உருவாக்கி இருக்கிறார்கள். உருவாக்கியவர் அவற்றை செய்யும்போது நான் பார்க்கவில்லை எனினும், அதை செய்யும்போது பார்த்த சாட்சி இல்லை எனினும் ஏதோவொரு அறிவு ஜீவி செய்திருப்பான் என்று பகுத்தறிந்து உணர்ந்து நம்புகிறேன். இந்த என் பகுத்தறிந்து நம்பும் நம்பிக்கைதான் ஆத்திகம்.

அவை எல்லாமே உருவாக்கியவர் எவரும் அற்ற தான்தொன்றிகள் என்று வாதிடுவோர் பகுத்தறிவாளர்கள் என்று என் அறிவுக்கு ஏற்க முடியவில்லை. சாரி. மன்னிக்கவும். இதனால், என்னை பகுத்தறிவற்றவன் என்று தூற்றுவார் தூற்றட்டும். எனக்கு கவலை இல்லை. நான் தான் உண்மையில் பகுத்தறிவாளன் என்று எனக்குத்தெரியும்.

Anonymous said...

mohamed ashik said...நாத்திகம் என்பது ஒரு மதம். இது மற்ற ஆத்திக மதங்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானது. தீங்கானது. யாருக்கும் பயப்படாமல் தான்தொன்றித்தனாமாக மனிதனை எதுவும் செய்ய வைத்து விடும்.///////////////

வன்மையாக கண்டிக்கிறேன். பகுத்தறிவு எந்த படுகொலைகளையும் நிகழ்த்தவில்லை. உலகில் புதுசாய் ஒரு மதம் தோன்றிய பொதெல்லாம், உலக ஜனத்தொகையில் கணிசமான அளவு குறைந்து போனது. காரணம் மத வெறி. இது mohamed ashik தெரியாதா.

webworld said...
This comment has been removed by the author.
webworld said...

கடவுள்களை மற்றும் எதிர்ப்பவன் முழுமையான நாத்திகன் அல்ல!!!....

முழுமையான நாத்திகர்களுக்கு மனிதன் உருவாக்கிய கடவுள்களை காணும் பொது மிகவும் நகைச்சுவையாக மற்றுமே தோன்றும். இங்கு வந்து போகும் மகா ஜனங்கள் உலகில் பரவிய மதங்களை மட்டுமே பேசுகிறது. ஆனால் இன்னும் நூற்று கணக்கான கடவுள்களும், வழிபாடு முறைகளும் ஆப்ரிக்கா, சவுத் அமெரிக்க, மற்றுமுள்ள பழங்குடி இனத்தவரிடமும் இன்னும் உள்ளன. ஒரு சமயம் அவர்களும் இங்கு வந்து நாம் விவாதிப்பதை அறிந்தால், இன்னும் நிறைய கடவுள்களை நாம் இணைக்கலாம்.

ஆயிரக்கணக்கான அறிவியல் மேதைகள் எல்லோரும் நல்ல நாத்திகர்களே !...அவர்களுக்கு நம்மைப்போல் நேரத்தை கூட வீணடிக்க நேரமில்லை...!!!!....

Karthick Chidambaram said...

கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டு போனால் கூட பரவா இல்லை. இந்த மதநம்பிக்கையில் நடக்கும் கலவரங்கள் சகிக்கலை.

NO said...

நண்பர் திரு முஹம்மது ஆஷிக்,

//நாத்திகம் என்பது ஒரு மதம்.//

ஐயோ சாமி, நாத்திகம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளவும்!!

நாத்தீகம் என்பது, கண்டிப்பாக இருக்கிறது என்று புலப்படாத ஒன்றை, ஒருவர், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வைத்து கூறுவதை, புலப்படவில்லையே ஆதலால் இல்லை என்று கூறுவதே!

புலப்படாத ஒன்றை இருக்கிறது என்பதன் நிலையை எடுப்பவர்கள்தான் out of normal mode! புலப்படாததை இல்லை என்று சொல்லுபவர் normal!

மேலும் "இல்லை" என்பதை ஒரு வழிமுறையாக ஒரு நாத்தீகன் என்பவர் சொல்லவில்லை! புலப்படாததை, இருப்பதற்கான ஆதாரமிலா ஒன்றை "இருக்கு" என்று ஒருவர் சொல்ல ஆரம்பித்த பிறகுதான் இல்லை என்று சொல்ல தொடங்குவார்கள்! "இருக்கு" என்பதுதான் வழிமுறை, அதாவது நீங்கள் சொல்லும் மதம்! அந்த "இருக்கு" என்பதை நீங்கள் சொன்னதால் அதை மறுத்து இல்லை என்பதற்கு பெயர் மதம் இல்லை!!

உங்களுக்கு புரியும்படி சொல்லுவதென்றால்,பொட்டக்காட்டில் கள்ளி மரத்தடியில் நிற்கும் ஒருவன், இங்கு மின் விசிறி இல்லை இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கமாட்டான், அது இருக்கிறது என்று சொல்லும் ஒரு ஆள் வர வரைக்கும்!!!!

[இதை நான் எழுதுவதால் திரு வால் பையனை ஆதரிப்பதாக அர்த்தம் கிடையாது, அவரின் மற்றும் அவரின் நண்பர்களின் கண்ணியமில்லா மத மற்றும் கடவுள் தூற்றல்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்பதை தெளிவு படுத்திகிறேன் :)))) ]

Anonymous said...

வால்பையங்கறது யாரு, அவன் குளம் என்ன? அவன் கடல் என்ன? என்ன ஜாதி? என்ன பொஞ்சாதி?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

எஸ்: ஆஹா! நன்றாக விவாதிகிரீர்களே மிஸ்டர்.நோ..!

நோ: என் மூளை ரொம்ப ஆழமாய் சிந்திக்கக்கூடியது.

எஸ்: அட! உங்களுக்கு மூல இருக்கிறதா? எங்கே? எடுத்துக்காட்டுங்களேன்.

நோ: அட அறிவு கெட்டவனே, அதை எப்படிடா எடுத்து வெளியே உன் கண்ணுக்கு எதிரா காட்ட முடியும்? என் அறிவுக்கொர்மையினை பொறுத்து மூளையின் இருப்பை உணரத்தான் முடியும். போடா, பேக்கு.

எஸ்: //கண்டிப்பாக இருக்கிறது என்று புலப்படாத ஒன்றை, ஒருவர், நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வைத்து கூறுவதை, புலப்படவில்லையே ஆதலால் இல்லை என்று கூறுவதே!

புலப்படாத ஒன்றை இருக்கிறது என்பதன் நிலையை எடுப்பவர்கள்தான் out of normal mode! புலப்படாததை இல்லை என்று சொல்லுபவர் normal! //

நோ: ?!?!?!?!?!?!?!?!?

Unknown said...

//நாத்திகம் என்பது ஒரு மதம். இது மற்ற ஆத்திக மதங்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானது. தீங்கானது. யாருக்கும் பயப்படாமல் தான்தொன்றித்தனாமாக மனிதனை எதுவும் செய்ய வைத்து விடும்.//

மதங்கள் மனிதனை பண்படுத்தவில்லை என்பதே அவர்கள் கூற்று, மனிதன் பயப்படும் விசயதினாலயே மனிதன் பண்பட வில்லையெனில், மதமே இல்லை என்பவரை யார் பண்படுத்துவது.

வால்பையன் said...

//ராஜன் said...

இத நான் டிஸ்கவரில பாத்ததா நியாபகமே இல்லயே தல! இப்பல்லாம் சுயமாவும் சிந்திக்க ஆரமிச்சுட்டீங்க்களா! அவ்வ்வ்வ்வ்//


டிஸ்கவரியில் பார்த்த விசயங்களை கூட அப்படியே எழுதுவதில்லையே! அதற்கான சாத்தியகூறுகளை ஆராயாமல் போஸ்ட் பண்ணினா கேள்விக்கு யார் பதில் சொல்வது!

வால்பையன் said...

@ +Ve Anthony Muthu

நீங்கள் நிச்சயமற்ற தன்மை தான் கடவுலாக பார்க்கபடுகிறது என பதிவிலேயே சொல்லியிருக்கேன்! பதிலில்லாத கேள்விகள் இன்று வரை கடவுள் செயலாக தான் பார்க்கபடுகிறது, கடவுளோடு நிறுத்தி கொண்டால் பதில் கிடைக்கவே கிடைக்காது!

வால்பையன் said...

//ஆமா வால், அறிவியல் முறையில் எடுத்துக்கொண்டாலும் அல்லது ஆன்மிக முறையிலோ... மனிதன் தோன்றியது ஆசியா/ஆப்ரிக்கா பகுதிகளில்தான் இல்லையா? பிறகுதானே மற்ற பகுதிகளுக்கு சென்றார்கள்? கேள்வி தப்பாருக்கே... ம்ம்ம்ம்....//


ஒன்றினைத்த கண்டமாக இருந்த பொழுது தோன்றியது அது! ஆனால் நாகரிகம் வளரும் போது தான் மதமும் தோன்றியது! குறிப்பாக கம்யூனிகேஷன் எனப்படும் மொழி இல்லையென்றால் ஏது கடவுள், ஏது மதம்!?

வால்பையன் said...

//..:: Mãstän ::.. said...
எப்பபபா
கடவுளை திட்டுறதுன்னா, இவ்வளவு பேரா??? ம்ம்ம்ம்....//


சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விசயம் தானே தோழர்!

வால்பையன் said...

//..:: Mãstän ::.. said...

<<<
ஆப்ரஹாமிய மதங்களில் முதலாவது மதத்தின் காலம்
>>>
இந்த ஆப்ரஹாமிய மதங்களை விடமாட்டிங்களா??? :( //


கேள்வின்னு வந்துட்டா எல்லா மதங்களும் ஒன்று தானே!

வால்பையன் said...

//smart said...

வால் அண்ணே எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்
சில பதிவுலக சண்டியருக்கு ஆப்பு வைக்கணும் மேலதிக தகவலுக்கு இங்க வாங்கண்ணே//


அங்கேயே பதில் சொல்லிட்டேனே!
ஆப்பு உங்களுக்கு தான்

தமிழ் பொண்ணு said...

எனக்கு மட்டும் பதில் சொல்லல :( மத்த எல்லாருக்கும் பதில் வருது.

வால்பையன் said...

//knowledgevillage.webs.com said...

**மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது,**

எந்த மதம் மறுக்கிறது, அதற்கான அதாரம் இருக்கிறதா? //


படைப்புவாத கொள்கையுடய அனைத்து மதங்களும் மறுக்கிறது, இதுக்கு ஆதாரம் வேற வேணுமாக்கும், சரி சொல்லுங்க, எந்த மதம் ஆதரிக்கிறது!


//4000 வருடங்களாக புதிய நுணுக்கங்களை கற்று புதிய கண்டுபுடிப்புகளை உருவக்கினானே தவிர, கடவுள் கொள்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதுவரையில் எதுவும் அழிக்கப்படவில்லை.//

4000 வருடங்களாக பழமையில் ஊறி போய் இருந்தார்கள், 400 வருடமாக தான் விஞ்ஞானத்தில் அபார வளர்ச்சி என்பது வரலாற்றை உற்றூ நோக்கும் அனைவருக்கும் தெரியுமே!
கடவுள் கொள்கை நீர்த்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது, கடவுள் இல்லையென்றால் நாம் என்னாவது என்று நினைக்கும் தன்னம்பிக்கை அற்றவர்களால் தான் கடவுள் இன்னும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது!

வால்பையன் said...

//கார்பன் கூட்டாளி said...

// தர்ஷன் said...

....பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும் என்றே நம்புகிறார்கள்.//

இதை கூறுபவர்கள், எதற்காக இவ்வுலகம் இயங்குகிறது என்பதையும் கூறலாமே!!//


அதை கண்டுபிடிப்பது தான் அறிவியல்! அப்படியெல்லாம் இல்லை என்று கண்மூடிதனமாக நம்புவது ஆன்மீகம்!

வால்பையன் said...

//வில்சன் said...

சிந்தனை நன்றாகத்தான் இருக்கு ஆனால் தீர்க்கமாக இல்லை அன்பரே. எனது பதிவில் தங்களுக்கு சில விளக்கங்கள் கிடைக்கலாம். http://tamilthalaimagan.blogspot.com/2010/07/blog-post_14.html//


விவாதத்தில் தெளிவு கிடைக்கலாம் அல்லவா!?

வால்பையன் said...

//நீங்கள் கடவுளை கண்டிப்பாக நம்ப வேண்டிய அவசியம் இல்லை, அதே போல இல்லை என்ற நம்பிக்கையும் விட்டு விட்டால் தான் 'உண்மை' எது என்று தெரிய வரும்.//


நான் சொன்னதை மாற்றி சொல்லியிருக்கிறீர்கள்!, கடவுளை தூக்கி போடுங்கள், உண்மை தெரியும்!

வால்பையன் said...

//வால்ஸ் இதையெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போது யோசித்தது..நீங்க இன்னுமும் பதிவாக போட்டு ஊர் மக்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கீங்க .... பேசாம எதாச்சு பிட் படத்தை பத்தி நீங்க எழுதினால் எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்//


உங்க அளவுக்கு நான் புத்திசாலி இல்லையே தல!

வால்பையன் said...

//அறியாமையைப் போக்கக் கூடியவர்தான் அந்த எல்லாம் வல்ல சக்தி. கடவுள் எதுவும் புதுசா தரதில்லை அவனிடத்திளிருப்பதை உணரவைக்கிறார் அவ்வளவே " அப்படின்னு யாராவது இவருக்கு புரியவையுங்களே!//


பெயருகேற்றவாறு நீங்கள் புத்திசாலியாகவே இருக்குங்கள் ஸ்மார்ட், ஆனால் கோழையாக இராதீர்கள்!, உங்கள் கடவுள் மேல் மரியாதை மேலும் குறைகிறது!

வால்பையன் said...

//பாண்டிச்சேரியில் சாராயம் விற்பது - நல்ல நாத்திகன்.//


நாத்திகன் என்றாலே அவன் கெட்டது தான் செய்வான் என நினைக்கும் நல்லவரே!

உலகில் உள்ள அனைத்து சிறைச்சாலைக்கும் சென்று பாருங்கள், தப்பு பண்ணிட்டு உள்லே இருக்குறவன் ஆத்திகன், புரட்சி பண்ணிட்டு உள்ளே இருக்குரவன் நாத்திகன்!

உங்க பொதுபுத்தி மாறும் வரை எங்கே மனிதம் உருப்படப்போவுது!


//கெட்டவை ஜகஜ்ஜோராய் எங்கு நடக்கும் என்று அறிந்து தெளிந்து கொள்க.//

இந்தியாவை விட அதிகமாய் குண்டு வெடிப்பது பாகிஸ்தானில் தான் தெரியுமுல்ல!

வால்பையன் said...

//சாரு புழிஞ்சதா said...

வால்பையங்கறது யாரு, அவன் குளம் என்ன? அவன் கடல் என்ன? என்ன ஜாதி? என்ன பொஞ்சாதி?//


:-)

வால்பையன் said...

//மதங்கள் மனிதனை பண்படுத்தவில்லை என்பதே அவர்கள் கூற்று, மனிதன் பயப்படும் விசயதினாலயே மனிதன் பண்பட வில்லையெனில், மதமே இல்லை என்பவரை யார் பண்படுத்துவது.//


பண்படுத்த மதம் தேவையெனில் மதமே தெரியாமல் இருக்கும் பழங்குடியினர் எல்லாம் பண்பில்லாத மனிதர்களா!?

உங்களால் மதம் இல்லாமல் பண்பட முடியாது என்பதற்காக மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என நினைப்பது என்ன வகையில் நியாயம்!

நாத்திகர்கள் பண்பில்லாமல் காட்டுவாசியாக திரிகிறார்கள் என உங்களுக்கு யார் சொன்னது!?, காட்டுங்கள் பார்ப்போம்

வால்பையன் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Unknown said...

//பண்படுத்த மதம் தேவையெனில் மதமே தெரியாமல் இருக்கும் பழங்குடியினர் எல்லாம் பண்பில்லாத மனிதர்களா!?//

பழங்குடியினரும் கடவுளுக்கு பயந்தே வாழ்க்கை நடத்துகிறார்கள்.

//நாத்திகர்கள் பண்பில்லாமல் காட்டுவாசியாக திரிகிறார்கள் என உங்களுக்கு யார் சொன்னது!?, காட்டுங்கள் பார்ப்போம்//

பண்பாடே தேவை இல்லை என்ற கொள்கைக்கு அவன் போக மாட்டான் என்று எப்படி உறுதியாக கூற முடியும்.

netmp said...

இதுவரை நான் உங்கள் ப்ளாக்-ல் பின்னூட்டம் இட்டதில்லை. வாசகன் மட்டுமே.

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -ன் The God Delution , The Greatest show on earth , இரண்டுமே அருமையான புத்தகங்கள்.
இயற்கை தெரிவு மற்றும் வல்லவன் வாழ்வான் , இரு கருத்துக்களும் எவ்வாறு இந்த உலகம் இன்று நாம் காணும் நிலையில் உள்ளது என்பதை அழகாக எடுத்துக்காட்டும் அருமையான புத்தகங்கள். உயிரியல் மற்றும் எவோல்யுஷன் எவ்வாறு கடவுள் இல்லாமலே இந்த உலகை ஆள்கிறது என்பதை அறியமுடியும் . அப்போதும் இந்த மத(ட)ஜென்மங்கள் கடவுள் படைப்பு என்றே உளறிக்கொட்டும் என்பதே என் எண்ணம்.
எனி வே , lenski's experiment என்று கூகுளில் தேடவும். உயிரியல் அதிசயங்கள் கணிப்பொறி அதிசயங்களை விடவும் ஆச்சரியமூட்டக்கூடியது .

நாம் இந்த பிரபஞ்சத்தின் சிறப்பான கால கட்டத்தில் வாழ்கிறோம் .எவ்வாறு இது தோன்றியதோ அவ்வாறே அழியும் . என்ன அது கண்டிப்பாக நம் வாழ்நாளில் நடக்கப்போவதில்லை.
இந்த மதவாதிகளின் அறிவும் வளரப்போவதில்லை .

NATARAJ said...

ஜார்ஜ் குருட்ஜீப் ஒருகதை சொல்வது வழக்கம் ; மலைகளால் சூழப்பட்ட ஒருவனத்தில் ஒரு மந்திரவாதி நிறையச் செம்மறி ஆடுகளை வைத்திருந்தான்.வேலைக்காரர்களைத் தவிர்க்கவும், ஆடுகள் மேய்ப்பதை த் தவிர்க்கவும், காட்டுக்குள் அவை காணாமல் போனால் தினமும் அவற்றை தேடி அலைவதைத் தவிர்க்கவும் வேண்டி , ஆடுகள் அனைத்தையும் அவன் வசியம் செய்துவிட்டான். ஒவ்வொன்றிடமும் ஒவ்வொரு விதமான் கதையைச் சொல்லி வைத்தான். ஒவ்வொரு ஆட்டுக்கும் வெவ்வேறு விதமான் மனதைக் கொடுத்தான்.

ஒன்றிடம் அவன் சொன்னான் ,” நீ ஆடல்ல .மனிதன்.எனவே ஒருநாள் மற்ற ஆடுகளைப் போல நீ கொல்லப்படுவாய் , பலியிடப்படுவாய் என்று பயப்பட வேண்டாம். அவை ஆடுகள். எனவே வீட்டுக்கு திரும்பிவருவது குறித்து நீ யோசிக்க தேவையில்லை “ வேறு சிலவற்றிடம் அவன் சொன்னான் , “ நீ ஆடல்ல, சிங்கம் “ இன்னும் சிலவற்றிடம் “ நீ ஒரு புலி “ என்றான். அன்றிலிருந்து அந்த மந்திரவாதி நிம்மதியாக இருந்தான் . செம்மறியாடுகள் தமக்கு வழங்கப்பட்ட மனதின்படி நடந்துகொள்ள தொடங்கின.

அவன் ஒவ்வொரு ஆடாக பிடித்துக் கொல்ல முடிந்தது . ஒவொரு நாளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உணவுக்காக ஆடுகளை க் கொல்வது அவன் வழக்கம். அதைபார்த்து , தன்னை ஒரு சிங்கம் அல்லது மனிதன் அல்லது புலி என நம்பிவந்த ஆடுகள் சிரித்துக்கொள்ளும் ;
“ஆடாயிருந்தால் இந்தக் கதிதான்”
ஆனால் எந்த ஆடும் தப்பி ஓடவில்லை, அவை புலிகள்,சிங்கங்கள், இப்படி , அவற்றில் ஆழப் பதிக்கப்பட்டிருந்த எல்லாவித மனங்களாகவும் அவை இருந்தன.-

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இந்தியாவை விட அதிகமாய் குண்டு வெடிப்பது பாகிஸ்தானில் தான் தெரியுமுல்ல!//---தெரியும்... இதற்கெல்லாம் என்ன காரணம் என்றுதான் நீங்கள் யாருமே யோசிப்பதில்லை.

எந்த நாட்டால்/எந்த மக்களால் இஸ்லாம் மிக மிக சரியாக புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வாழ்வில் நடைமுறைப்படுகிறதோ அங்கே இறைஅச்சம் அதிகமதிகம் இருக்கும். அங்கே குண்டே வெடிக்காது. குண்டுவெடிப்பை குறைக்க முஸ்லிம்கள் இஸ்லாமை குரான்/ஹதீஸ் வாயிலாக மட்டுமே தெரிந்துகொண்டு அதனை அடுத்தவருக்கு கற்பிக்க வேண்டும்.

'பிறர்' வாயின் வழியாக இஸ்லாத்தை தெரிந்து கொண்டால்... இப்படித்தான். அதற்குத்தான் 'அந்த' நாடு நல்ல உதாரணம். இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் மிக மிக குறைந்த சதவிதமாக மைனாரிட்டியாக இருக்கிறார்கள் அங்கே! ஆள்பவர்களும் மெஜாரிட்டி மக்களின் பிரதிநிதிகளே. அப்புறம் அந்நாடு இப்படியல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

யார் இவர்கள்?

பதவி ஆசை கொண்டு சொந்த நாட்டை விட்டு வீட்டை விட்டு ஊரைவிட்டு தனிநாடு என்று பதவி வெறிகொண்டு ஓடியவர்கள்தானே..! அப்புறம் எப்படி இருப்பார்கள்! உண்மையான முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள். இப்போது பாகிஸ்தானில் உள்ள நல்ல முஸ்லிம்கள் அங்கேயே பிறந்த பூர்வகுடிமக்கள்தான். இவர்கள் மைனாரிட்டி. என்ன செய்ய முடியும்? அதன் விளைவை நீங்களே பாருங்கள்.

நீங்க சொல்லுங்கள். நாத்திகத்திற்கு என்று தனி நாடு என்று ஒன்று உருவானால், உங்க சொந்த வீடு, தோட்டம், வயல் வரப்பு, டீக்கடை பெஞ்சு, வளர்ந்த தெரு, பார்த்து பார்த்து வாங்கிய சொத்து, பழகி வாழ்ந்த சொந்தவூர், அக்கம்பக்க பாசக்கார மக்கள், நண்பர்கள், மற்றும் அன்பான எங்களயெல்லாம் விட்டுவிட்டு(?) ஒன்றுமே அறிந்திராத முன்பின் பார்த்திராத நாட்டிற்கு/இடத்திற்கு பிச்சைக்காரர்போல பரதேசியாய் நாடோடியாய் யாராவது ஒடுவீர்களா?

அப்படித்தான் ஓடினார்கள் அவர்கள், எனில், எவ்வளவு வக்கிரம்-வெறி-குரூரம் கொண்ட நெஞ்சழுத்தக்காரர்கள்..! சுயனலவாதிகலான அவர்கள் இப்படி அல்லாமல் எப்படி இருப்பார்கள்?

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணம் இவர்கள்தானே! இவர்களை இந்திய முஸ்லிம்களால் மன்னிக்கவே முடியாது. ஹிந்துக்கள் அப்போது கழுத்தை பிடித்து தள்ளினாலும், செருப்பாலடித்து விரட்டினாலும், அவச்சொல் பேசி துன்புருத்தினாலும் மண்ணின் உரிமையை விட்டுக்கொடுத்து சுயநலமாக சிந்தித்துவிட்டு ஓடினார்களே!

இங்கே தங்கியவர்களை-முஸ்லிம்களை-இந்தியர்களை பற்றி கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்காமல் தப்பித்தால்போதும் என்று அப்படி புறமுதுகிட்டு அங்கே ஓடி போயிருக்கலாமா? ஜின்னாவையும் சும்மா சொல்லக்கூடாது. நயவஞ்சகமாக தனி நாட்டையும் உருவாக்கி அதன் பிரதமர் பதவியையும் உருவாக்கி தங்கத்தாம்பாலத்திலே வைத்து முதலில் கொடுக்கப்பட்டிர்ந்தாலும் எட்டி உதைத்திருக்க வேண்டாமா? 'ஈ' என இழித்துக்கொண்டு பெற்றுக்கொண்டிருக்கலாமா? பலிகடாவாக்கி விட்டாரே இந்த ஆள். இவர் மட்டுமா பலிகடா ஆனார். ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களையும் அல்லவா சேர்த்து பலிகடா ஆக்கிவிட்டார்! அப்படி என்ன ஆகஸ்டு பதினாலாம் தேதியே பிரதமர் ஆகனும்னு ஒரு பதவி வெறி? இதுவெல்லாம் ஒரு தேசத்தந்தையா? த்தூ... வெட்கக்கேடு.

டில்லியில் நடந்த இந்த பதவிவெறி கூத்தில் எல்லாம் பங்கெடுக்காமல், வங்காளம் ஓடிப்போய் மக்களிடம் அமைதி நிலைநாட்ட வேண்டி உண்ணாவிரதம் இருந்தாரே நம் அண்ணல காந்தி அடிகள், அவர் தான் தேசத்தந்தை.

ஒருங்கிணைந்த இந்தியாவின் ஆளும் காங்கிரசின் எதிர்கட்சியாகவாவது திறன்பட செயல்பட்டு பின்னாளில் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாமே, இந்த ஜின்னா நல்லவராய் இருந்திருந்தால்... இவர்கள் எல்லாம் நிச்சயமாக வீரர் வேஷம் போட்ட கோழைகள்.

முதலில் இஸ்லாம் பற்றிய உங்கள் பொதுப்புத்தியை மாற்றிக்கொள்ளுங்கள். அதன் பிறகு பாகிஸ்தாநியர் பற்றியும்.

ரொம்ப நாளாக சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தது. இப்போது கொட்டி விட்டேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இந்நேரம்.காம் செய்தி:

/////பாகிஸ்தானா அல்லது போர்னிஸ்தானா – இணையத்தில் ஆபாச தேடலில் முதலிடத்தில் ?
வெள்ளி, 16 ஜூலை 2010 16:37 இனியவன் World

இஸ்லாமாபாத் : பரிசுத்தமான இடம் எனும் பெயர் கொண்ட பாகிஸ்தான் தற்போது இணையத்தில் ஆபாச தேடலில் முதலிடத்தில் இருப்பதாக கூகுள் தேடுபொறி முடிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



2004-லிருந்து இணையத்தில் குதிரை செக்ஸ் பற்றி தேடுவதில் முதலாவதாகவும் 2007-ல் இருந்து கழுதை உறவை பற்றிய தொடுப்புகளை தேடுவதிலும் 2004-லிருந்து வன்புணர்வு சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் உறவு சம்பந்தப்பட்ட தகவல்களை தேடுவதிலும் 2004 முதல் 2007 வரை குழந்தை உறவு குறித்தும் இன்னும் இது போல் பல செக்ஸ் தேடலில் தனி நபர்கள் அதிக நேரம் தேடுவது பாகிஸ்தானில் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



ஏற்கனவே பாகிஸ்தான் அரசாங்கம் 17 இணையதளங்களை ஆபாசமாக உள்ளாதக கூறி தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள், அமேசான், யாஹீ உள்ளிட்ட இணையதளங்களும் பாகிஸ்தான் அரசாங்க கண்காணிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது./////

ஹலோ வால்...!
இப்போதாவது புரிகிறதா பாக்கிஸ்தானிய முஸ்லிம்களின் யோக்கியம்...? அவர்களிடம் இஸ்லாம் சுத்தமாய் காணாமல் போய் கிடக்கிறது. இனிமேல் முஸ்லிம்கள் என்றால் பாகிஸ்தாநியரை எடுத்துகாட்ட வேண்டாம்.

Krishnan said...

Hi Valpaiyan,

I tracked your blog from Senkodi blog's comments. You are making valid points. Ignorance is the reason behind all these problems. I guess most people wanted to label themselves as a follower of a group . I too had earlier wanted to label my self as a Atheist. Now I changed my stand. I dont care about God's presence or absence.

One thing people forgot is that we all belong to religion only because we were born in a family that follows a certain Religion. There is no other reason.

The so called God can never have the trait to ask every human to obey him, asking not to question him, and asking every one to praise him and if we dont do that put us in a furnace. If there is some one controlling us this way, he can just be dictator and never a God. And all these days, Why can not he make the people get settled the right way? There are numerous other questions we can pose?


Any way keep continuing your service. All the best. Please enable open up openID Login...

அ.முத்து பிரகாஷ் said...

தல ...
மீ த லாஸ்ட்டு ...
ரொம்ப சீக்கிரமா வந்துட்டேனோ ...
உங்க பதிவுகளோட பாண்டுகள் படிக்க முடியாத படிக்கு இருக்கு தல ...
டெம்ப்ளட் மாத்துனிங்கனா ரொம்ப புண்ணியமா போகும் தல ...
கண்ணு வலிக்குது பாஸ் ...
ஒவ்வோர் முறையும் காப்பி பேஸ்ட் பண்ணி தான் படிக்க வேண்டியிருக்குது ...

அ.முத்து பிரகாஷ் said...

அப்புறம் ..
நம்ப கோவி கண்ணன் சார் பதிவுல ஒரு பின்னோட்டம் போட்டிருந்தேன் ...
நீங்களோ ராஜனோ பாத்தீங்களான்னு தெரியல ...
ஸோ... இங்கேயும் அதே பின்னூட்டம் ...உங்களோட பார்வைக்கா மறுபடியும் ...

"கோவி சார் ...

இப்போது தான் உடல் நலம் தேறி ஊரிலிருந்து திரும்பினேன்... ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த பதிவுகளையும் படிக்க முடியாமற் போனது ....

// மையக் கருத்து தவிர மொழியில் உடன் பாடு இல்லை ...தோழர் சென்சியே கொதிக்கிறார்... இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை... தயவு செய்து பிறர் மனம் புண்படும் பதிவுகளை எழுதாதீர்கள்...அது நீங்கள் சொந்தப் பெயரில் எழுதுவதால் கிடைக்கும் எதிர்வினை மட்டும் தான்...எச்சரிக்கைகளை, அன்பு வேண்டுகோள்களை நீங்கள் சந்திக்கத் தேவை இருக்காது...//

தோழர் ... நீங்களும் நமது அப்துல்லா (லேட்.பெரியார் தாசன்) செய்தார் போன்று புனித குரானை ஆய்வு செய்து வருகிறீர்களா...? எப்போது விமானம் ஏற உத்தேசம் ?

இஸ்லாமியத்தை விமர்சிக்க அனைவரும் தொடை நடுங்கும் சூழலில் வால் பையனையும் ராஜனையும் பாராட்ட ஒண்ணாமல் தடுக்கும் உங்கள் பகுத்தறிவை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை ...

பகுத்தறிவு வாதம் என்பது இந்து மற்றும் கிறித்துவ மதங்கள் சம்பந்தப் பட்டது ; இஸ்லாமியத்திற்கு பொருந்தாது என்பது வெறும் மஞ்சள் வாதம்!
4:17 AM, July 13, 2010"

என்னுடைய ஆதரவையும் தோழமையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சிகள் தோழர் !

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///சுழன்றும் ஏர் பின்னது உலகம்
- திருவள்ளுவர்///


என்ன சொல்ல வருகிறீர்கள் கோவி.கண்ணன் இதன் மூலம்?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

@vasu


இது நான் சொன்னது.

"மறு படியும் மன்னிக்கவும்! இந்தியர்கள் மட்டுமல்ல எல்லோரும் உலகம் உருண்டை என்பதை தெரிந்து கொண்டது மேலும் படியுங்கள்//

http://en.wikipedia.org/wiki/Flat_Earth

ஆமாம் எல்லோரும் உலகம் உருண்டை என்பதி எவ்வாறு அறிந்து கொண்டார்கள் என்பதைத்தான் உங்களை இங்கு படிக்க சொன்னேன்.

இங்கு மட்டுமல்ல உலகத்தில் ஏராளமான பேர்அது மாதிரி கருதினார்கள். Aristotle உம உலகம் உருண்டை என்று தான் கருதினார். ஆர்யாபட்டவும் சொன்னார். Aryabhatta was a great mathematician. No doubt about it. Many people believed that earth is spherical and several proposed theories. Propsoing theory is not science. MUST PROVE IT. Aryabatta விஷயத்தில் சில இடைச்செருகல்கள் பிர்க்காலத்தில் ஏற்பட்டது. இது உலகம் முழுக்க எல்லோரும் செய்யும் வேலை ஆனால் கணக்கில் அவர் கெட்டிக்காரர். ஆர்யாபட்டவும் சூரியன் பூமியை சுற்றுகிறது என்று நினைத்தார். World wide scientists have not approved his assumptions as why earth is a sphere, however, they have placed him in Ancient Times. World wide scientists have accepted that Galileo Galilei was one the who proved it. மறுபடியும் கணக்கில் அவர் கெட்டிக்காரர்.

அராகன் said...

இரண்டு வழிகளிலும் தேடுவோம், ஒரு வழியை அடைக்கவேண்டாமே. நீங்கள் நேர்கோட்டு சிந்தனையாளர்(vertical thinking) போல. பக்கவாட்டு சிந்தனைகளையும் (horizontal thinking) அனுமதிப்போம்.ஒன்று உண்டு என்றால், இல்லை என்பதும் வரவேற்கப்படலாம்.அது சரி அணு என்று ஒன்று உண்டா?

pinkyrose said...

வால் ஃபர்தா பத்திய உங்கள் பதிவு படித்தேன் எனக்குள்ளும் அதே கேள்வி எழும்பியது நானும் தேடலில் இறங்கினேன் ஒரு பதில் கிடைத்தது ஓரளவு தெளிவு கிடைத்தது உங்களுக்கும் அதை அனுப்பட்டுமா?

வால்பையன் said...

//உங்களுக்கும் அதை அனுப்பட்டுமா?//


தாராலமா அனுப்பலாம்!

arunero@gmail.com

சிந்திப்பவன் said...

திரு வாசு அவர்களே,

///மன்னிக்கவும், இந்தியர்கள் உலகம் உருண்டை என்பதை தான் அறிந்திருந்தார்கள் தவறுதலாக பூமி சூரியனை சுற்றுவதை அறிந்திருந்ததாக மறுமொழி இட்டுவிட்டேன்.///


நீங்கள் ஒன்றும் தவறுதலாக மறுமொழி இடவில்லை.சரியாகத்தான் கூறியிருக்கிறீர்கள்.

பூமியும் மற்ற கோள்களும் சூரியனை சுற்றுகின்றன என்று கலிலியோ, கொப்பெர்நிகஸ் மற்றும் அரஸ்டார்க்கஸ் போன்றோர் அறிவதற்கு முன்பே இந்திய ரிஷிகள் அறிந்த காரணத்தாலேயே நவகிரகங்களில் சூரியனை நடுவிலும் மற்ற கிரகங்களை அதைச் சுற்றலும் அமைத்துள்ளனர்.

supersubra said...

http://www.geetham.net/forums/showthread.php?15870

Mc karthy said...

http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!1816.entry

காட்டுமிராண்டித்தனத்தனத்தின் உச்சக் கட்டம்..

!

Blog Widget by LinkWithin