பரிணாமம் - தொடர்சி

டிஸ்கி: இந்த தொடரில் வரும் அனைத்தும் எனது புரிதல்களே! எனது புரிதலை இங்கே விவாத பொருளாக வைக்கிறேன்! அவற்றில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய வேண்டுமென்பதே எனது அவா!

*************

பலதரபட்ட உயிரனங்கள் கண் முன் இருந்தாலும் அவைகளின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து அவற்றை ஒரு குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகிறார்கள்! உதாரணமாக புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை பூனை குடும்பத்தை சேர்ந்தது!, அவைகளுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமை, முக்கியமாக தலை அமைப்பு, எழும்புகூட்டின் ஒற்றுமை, வேட்டையாடும் தன்மை இவற்றை உறுதி படுத்துகிறது! இந்த குடும்பத்தில் உடல் வலிமை வாய்ந்தது சிங்கம் என்றாலும் புத்திசாலி விலங்கு எதுவென்றால் அது சிறிய இனமான பூனை தான் எனலாம்!, ஒரு விலங்கு தான் உயிர்வாழ தேவையான உணவை எப்படி பெறுகிறது, அதற்காக அது வகுக்கும் வியூகம் என்ன என்பதிலேயே அதன் புத்திசாலி தனம் தெரிந்துவிடும்!, காட்டில் பூனைகுடும்பத்தில் புத்திசாலி சிறுத்தை!


பூனையாகட்டும், நாயாக்கட்டும் நமக்கு செல்லபிராணிகளாக இருப்பது இன்று தான்! என்னுடய கணிப்பில் மனித உணவின் எச்சங்களை சாப்பிட ஊர் எல்லையில் குழுமியிருந்த நாய் மற்றும் பூனை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் வந்தன, அதிக ஆபத்தில்லாத விலங்குகளாக மனிதர்களுக்கு தோன்றியதால் அவர்கள் அதை விரட்டவில்லை, ஆம் என்னுடய கணிப்பில் ஆரம்பத்தில் அதை வளர்க்க அவர்கள் ஆசை பட்டிருக்க முடியாது, அதே நேரம் தொரத்தவும் மனமில்லாமல் விட்டதால் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு பின் அந்த விலங்குகள் அவர்கள் குடும்பத்தோடு ஒட்டியிருக்க வேண்டும்!, இன்னொரு விசயம் எந்த விலங்காக இருந்தாலும் குட்டியாக இருக்கும் போது அதை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றும்!


ஏற்கனவே சொன்னது போல் விலங்கின் முக அமைப்பை கொண்டு இது இன்ன குடும்பம் என வகைபடுத்துகிறார்கள்!, குடும்பம் என்றால் படைப்புவாத கொள்கையின் படி குடும்பம் குடும்பமாக படைப்பட்டதல்ல, ஊர்வன, பறப்பன போல் பாலூட்டிகளில் ஏற்பட்ட கிளைகளை ஒரு குடும்பம் என்கிறோம்!, ஒரு குடும்பத்திற்கும், மற்றொரு குடும்பத்திற்கும் இருக்கும் இணைப்பே பரிணாமத்தின் ஆதாரபுள்ளிகள்!, அதே நேரம் ஒரே குடும்பத்தில் இருந்து அதன் பழக்கவழக்கங்களை மாற்றி புதிய குடும்பமாக அல்லது மேம்படுத்தபட்ட உயிரினமாக மாறுவது சமகாலத்தில் கண் முன் இருக்கும் பரிணாமத்தின் பேராதாரங்கள்.


ஒநாய், நரி என்ன குடும்பம் என்றால் பெரும்பாலோர் பட்டென்று சொல்லிவிடுவார்கள் அது நாய் குடும்பத்தை சேர்ந்தது என்று, ஆனால் கரடி என்ன குடும்பம் என்றால் பலர் யோசிக்க நான் பார்த்திருக்கேன்!, அதன் தலை அமைப்பு, மற்றும் எலும்பு உள்கட்டமைப்பு சொல்லிவிடும் அதுவும் நாய் குடும்பம் தான் என்று, ஆனால் பெரும்பாலோர் யோசிக்க காரணம் கரடி தன் குடும்ப உணவு பழக்க முறையிலிருந்து மாறி கொண்டிருப்பது தான்!, நாய் இன்று அனைத்துண்ணியாக தெரிந்தாலும் உண்மையில் அவை அசைவ பட்சினிகளே!, நாய்களால் பச்சை/வேகவைத்த காய்கறிகளை சாப்பிடமுடியாது! அசைவபட்சிணிகளுக்கு கோரை பற்கள் உண்டு என்பது நாய் ஒரு அசைவ பட்சிணி தான் என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விசயம்!




கரடி இனங்களில் தற்பொழுது பல வகைகள் காணபட்டாலும் முழுமையான அசைவபட்சிணிகளாக வாழ்வது துருவ கரடிகளே! மேலும் அங்கு காய்கறிகளுக்கு வழியில்லை என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்று!, கரடிகளில் பல அனைத்துண்ணிகளாக மாறி சில நாட்கள் மூங்கில் குருத்து மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் என சாப்பிட்டு, சில நேரங்களில் சா(ல)மன் மீன்களை சாப்பிட கூட்டமாக வேட்டைக்கு கிளம்பும்!, இது வரை அனைத்துண்ணிகளக அறிய பட்டவைகள் என்னவென்று அறிந்தால் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கும்! ஆம் குரங்கு/மனித இனங்களே இதுவரை முழுமையாக அறியபட்ட அணைத்துண்ணிகள்!, மனிதன் அசைவபட்சிணியாக இருந்து தற்பொழது மாறியிருக்கிறான் என்பதற்கு நம்பிடம் பல உதாரணங்கள் இருக்கிறது, முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி! இரண்டாவதாக முப்பரிணாம தோற்றத்தில் உணவு விலங்கை பார்க்க வேட்டையாடும் மிருகங்களுக்கு இருப்பது போல் கண் அமைப்பு!,(சொன்னா நம்பவா போறாங்க) கரடி இனங்கள் கடைசி பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வருடத்திற்குள் உணவு முறை மாற்றத்தை ஏற்படித்தி கொண்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்து!

இந்த பதிவில் நான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஒன்று மிச்சம் இருக்கு!, ஒரு விலங்கு தேவையின் பொறுத்து அனைத்துண்ணியாக மாறுவது ஆச்சர்ய பட ஒன்றுமில்லை, கண் முன்னே நாயையும், பூனையும் இதன் இயல்பு வாழ்விலிருந்து விலக்கி கெடுத்து வைத்திருக்கிறோம், அதனால் அவைகளின் வாழ்நாளில் குறைவும், மரபணு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! ஆனால் இயற்கையாகவே ஒரு விலங்கு, அசைவ பட்சிணியாக இருந்து முழுக்க முழுக்க சைவ பட்சிணியாக மாறியிருக்கிறது! எதிரிகளிடமிருந்து தப்பிக்க மூங்கில் மரமேறிய பாண்டா கரடி இன்று முழுக்க முழுக்க அதை மட்டுமே உணவாக எடுத்து கொள்கிறது!, அவைகளில் பழைய வாழ்க்கையின் சாட்சியாக கோரைபற்றுகளும், தாவரபட்சிணிக்கு இருப்பது போல் வலுவான கடவாய் பற்கள் இல்லாமல் வலுவான தாடைகளும், வலுவற்ற கடவாய் பற்களும் உள்ளன!, இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உடலமைப்பு மாறி அவைகள் வேறு வடிவமான உடலமைப்பு பெறலாம்! ஏற்கனவே குரங்கிற்கு அடுத்து கரடிகள் தான் புத்திசாலி விலங்குகள் என கண்டறிந்துள்ளார்கள்!


மரமேறுவது, திறமையாக வேட்டையாடுவது என அனைத்து துறைகளிலும் திறையை வெளிபடுத்தும் கரடிகள் கூட்டுகுடும்ப வாழ்க்கையில் தற்சயமம் அதிக கவனம் செலுத்துவதாக கண்டறித்துள்ளார்கள், ஒரு இனம் தழைக்க இனபெருக்கம் மிக முக்கியம், அதை விட முக்கியம் அதன் குட்டிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி முழுமையாக வளர்ப்பது!, குரங்குகளை விட கரடிகள் இவ்விசயத்தில் மிகுந்த திறமையுடன் நடத்து கொள்வதாக ஆராய்ச்சி சொல்கிறது, வலுவான உடலமைப்பு, மரம் ஏறும் திறமை கைகொடுத்தாலும், எதிரிகளை பயமுறுத்த மிக முக்கியமாக முன்னங்கால்களை தூக்கி எழுந்து நிற்கும் திறமையையே வெகுவாக விஞ்ஞானிகள் சிலாகிக்கிறார்கள்! ஆம் மனித நாகரிகம் அவன் எழுந்து நின்ற பிறகே ஆரம்பித்தது!

46 வாங்கிகட்டி கொண்டது:

Mythees said...

ரெண்டாவது வெட்டு என்னோடது ...........

Ashok D said...

fulla படிச்சிட்டேன் வால்... எனக்கு interest இல்லா சப்ஜக்டா இருப்பினும்....

ISR Selvakumar said...

கடினமான சப்ஜெக்டை மிக எளிமையா எழுதியிருக்கீங்க. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் நடுப்பக்கத்தை குறைத்து உங்க பக்கம் வந்தால் நிறைய பேர் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

வாழ்த்துகள்!

Unknown said...

//மரமேறுவது, திறமையாக வேட்டையாடுவது என அனைத்து துறைகளிலும் திறையை வெளிபடுத்தும் கரடிகள் கூட்டுகுடும்ப வாழ்க்கையில் தற்சயமம் அதிக கவனம் செலுத்துவதாக கண்டறித்துள்ளார்கள்,//

அப்ப நாம குரங்கு வம்சம் இல்லையா தல.

நேசமித்ரன் said...

நல்லா எழுதி இருக்கீங்க வால் இதற்கு பின்னால் இருக்கும் உழைப்புக்கு வாழ்த்துகள்

வால்பையன் said...

// D.R.Ashok said...

fulla படிச்சிட்டேன் வால்... எனக்கு interest இல்லா சப்ஜக்டா இருப்பினும்....//


கமாக்கதைகள் எழுதுனா இண்ட்ரஸ்டா படிப்பிங்களோ!?

வால்பையன் said...

// r.selvakkumar said...

கடினமான சப்ஜெக்டை மிக எளிமையா எழுதியிருக்கீங்க. ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகள் நடுப்பக்கத்தை குறைத்து உங்க பக்கம் வந்தால் நிறைய பேர் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.///


உங்கள் ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது தல!

வால்பையன் said...

//நேசமித்ரன் said...

நல்லா எழுதி இருக்கீங்க வால் இதற்கு பின்னால் இருக்கும் உழைப்புக்கு வாழ்த்துகள்//


பெருசா ஒன்னுமில்ல ஜி!
படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடய, அறிவியலில் ஆர்வமுடய நண்பர்களுடன் இதை பற்றி ரெண்டு/மூணு நாட்கள் விவாதிப்பேன், எனக்குள் ஒரு தெளிவு வந்ததும் பதிவாக எழுதிடுவேன்!

அப்பப்ப நோட்ஸ் எடுத்துகுவேன், சிலநேரம் நடுரோட்டில், பாக்குறவன் மெண்டல்னு நினைச்சிகுவான்னு நினைக்கிறேன்!

வால்பையன் said...

//அப்ப நாம குரங்கு வம்சம் இல்லையா தல.//


குரங்கிற்கும், நமக்கும் பொதுவான மூதாதையர் உண்டு! ஆனால் பாருங்க நம்ம அளவுக்கு குரங்கால் வேகமாக பரிணாமம் அடைய முடியல! ஆனால் குரங்கின் மூதாதையருக்கும், நாயின் மூதாதயருக்கும் பொதுவான ஒரு உயிரினம் உண்டு! அதன் பலனே கரடியின் அபார வளர்ச்சி! விரையில் குரங்கை புறந்தள்ளி கரடி, மனிதனுடன் வியாபாரம் ஆரம்பிக்கலாம்!

:)

மோனி said...

அளவிடமுடியாத அளவிற்கு ஆணிகள் அதிகமகா இருப்பதால் ... மீண்டும் பிறகு வந்து கலந்து கொள்கிறேன்..

நிற்க.. (அட ஒக்காந்தே படிங்கப்பா)

..//வால்பையன் said...

அதன் பலனே கரடியின் அபார வளர்ச்சி! விரையில் குரங்கை புறந்தள்ளி கரடி, மனிதனுடன் வியாபாரம் ஆரம்பிக்கலாம்//..

கரடி ஏற்கனவே படம் எடுத்து பாடல் இயற்றி இசை அமைத்து மனிதனை விட நல்ல்படியாய் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது என்பதை வால் பையனிடம் கண்டனத்துடன் சொல்லிக் கொண்டு கிளம்புகிறேன்..

கையேடு said...

எளிமையா அதே சமயம் ஆர்வமூட்டும் தொகுப்பா வருதுங்க.
கரடி பற்றி பல புதிய செய்திகள் அறிந்துகொண்டேன்.

தொடருங்கள்.

அனு said...

நீங்க எந்த போஸ்ட் போட்டாலும், எனக்கு ஏன் அதுல ஒரு உள்குத்து இருக்குற மாதிரியே தோணுது??

வால்பையன் said...

//நீங்க எந்த போஸ்ட் போட்டாலும், எனக்கு ஏன் அதுல ஒரு உள்குத்து இருக்குற மாதிரியே தோணுது??//


ஆஹா!

சங்கம் இங்க கூடியிருச்சா!
கைபுள்ள இன்னுமா முழிச்சிருக்க! தூங்குர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

வால்பையன் said...

கையேடு has left a new comment on your post "பரிணாமம் - தொடர்சி":

எளிமையா அதே சமயம் ஆர்வமூட்டும் தொகுப்பா வருதுங்க.
கரடி பற்றி பல புதிய செய்திகள் அறிந்துகொண்டேன்.

தொடருங்கள்.//


உங்க பின்னூட்டம் காணாம், என்னான்னு தெரியல!

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி தல!

Ashok D said...

//கமாக்கதைகள் எழுதுனா இண்ட்ரஸ்டா படிப்பிங்களோ!?//

ம்ஹும்... கமாநிஜக்கதைகள நானே உருவாக்குனா தான் புடிக்கும் :)

Ashok D said...

ரொம்ப போர் அடிக்குதே என்ன செய்யலாம்.... அடிக்கற வெய்யில்ல கும்மி அடிக்க கூட தெம்பில்ல... தில் மாங்கே நீர் மோர்...

வால்பையன் said...

//ரொம்ப போர் அடிக்குதே என்ன செய்யலாம்.... அடிக்கற வெய்யில்ல கும்மி அடிக்க கூட தெம்பில்ல... தில் மாங்கே நீர் மோர்...//


பீர் அடிக்கிற நேரத்துல மோரை குடிச்சா உடம்பு என்னாத்துக்கு ஆவுதுறது!
மறு பரிசீலனை செய்யுங்க!

அகல்விளக்கு said...

//கரடி ஏற்கனவே படம் எடுத்து பாடல் இயற்றி இசை அமைத்து மனிதனை விட நல்ல்படியாய் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது என்பதை வால் பையனிடம் கண்டனத்துடன் சொல்லிக் கொண்டு கிளம்புகிறேன்.//

சொல்ல நினைச்சேன்... முந்திக்கிட்டாரு...

Unknown said...

//.. நீங்க எந்த போஸ்ட் போட்டாலும், எனக்கு ஏன் அதுல ஒரு உள்குத்து இருக்குற மாதிரியே தோணுது?? ..//

:-))

Chitra said...

simple and nice..... very interesting to read.... :-)

தமிழ் பொண்ணு said...

அருண் அந்த கடைசி படம் உங்கள நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.

தமிழ் பொண்ணு said...

//அப்பப்ப நோட்ஸ் எடுத்துகுவேன், சிலநேரம் நடுரோட்டில், பாக்குறவன் மெண்டல்னு நினைச்சிகுவான்னு நினைக்கிறேன்// இன்று தான் நீ உன்னை அறிந்து உள்ளாய் அருண் ;)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பெரிய சப்ஜெட்டா இருக்கும் போல..
ஆகா.. வால்.. இதை புரிஞ்சுக்க எனக்கு 1 நாள் ஆகும் போல..

Ashok D said...

//பீர் அடிக்கிற நேரத்துல மோரை குடிச்சா உடம்பு என்னாத்துக்கு ஆவுதுறது!
மறு பரிசீலனை செய்யுங்க!//

பர்ஸுக்கு பீர் நல்லதா மோர் நல்லதா மறுபரிசீலனை செய்யவும்

மங்குனி அமைச்சர் said...

வால்ஸ் ஒரு சின்ன டவுட் , யானை , கரடி ரெண்டுல எது புத்திசாலி ?

Ashok D said...

//வால்ஸ் ஒரு சின்ன டவுட் , யானை , கரடி ரெண்டுல எது புத்திசாலி ?//

இதுல என்ன டவுட் வால் உடைய இரண்டும் புத்திசாலி இல்லை.. அதனை அடக்கி ஆள தெரிந்த மனிதனே புத்திசாலி

டிராகன் said...

Thozhar val ,

Excellent !!!!!!!!

அன்புடன் நான் said...

முக அமைப்பு...
கோரைப்பல்... இதை வைத்து விலங்கின் தன்மையை அறிய முடிகிறது....

(”வாலை” வைத்து அதன் தன்மையை அறிய முடியுமா?)

கட்டுரையின் அலசல் அருமை.

Unknown said...

என்ன! குதிரைக்கு நாமமா?( மூக்கு புடைத்ததால் எழுந்த கேள்வி! )

ஹேமா said...

நிறைவான தேடல்.
வாழ்த்துகள் வாலு!

smart said...

நல்ல தொகுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்.
//முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி! இரண்டாவதாக முப்பரிணாம தோற்றத்தில் உணவு விலங்கை பார்க்க வேட்டையாடும் மிருகங்களுக்கு இருப்பது போல் கண் அமைப்பு!//

முன்றாவது அசைவ விலங்குகளுக்கிருக்கும் கைகால் விரல்களின் நகம்.

மனிதன் இன்னும் விலங்காக இருப்பதற்கு இவை இன்னமும் எஞ்சியிருப்பதே ஆதாரம்.

CINEMA GALLARY said...

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

நாடோடி said...

சில‌ தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளை தெரிந்து கொண்டேன்.... ப‌டிக்க‌ எளிமையாக‌ இருக்கு.

hiuhiuw said...

//குட்டியாக இருக்கும் போது அதை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றும்!//


எண்ட ஓமணக் குட்டீ!

hiuhiuw said...

//ஆனால் இயற்கையாகவே ஒரு விலங்கு, அசைவ பட்சிணியாக இருந்து முழுக்க முழுக்க சைவ பட்சிணியாக மாறியிருக்கிறது! எ//



இப்ப எதுக்கு தல அய்யர்,அய்யங்காரயெல்லாம் தேவ இல்லாம உள்ளார இழுக்கறீங்க!

hiuhiuw said...

//ஆம் மனித நாகரிகம் அவன் எழுந்து நின்ற பிறகே ஆரம்பித்தது!///



ஆமா தல எழுந்து நின்ன பின்னாடிதான் எல்லாமே ஆரமிச்சுது!

கோவி.கண்ணன் said...

பரிணாமம் ஒப்புக் கொள்ள மறுக்கும் மதவாதிகள் ஆதாம் ஏவாளில் இருந்து ஆப்ரிக்கன் (கருப்பினம்), சீனன்(மஞ்சள் நிற ஆசியன் ), ஐரோப்பியன் (வெள்ளையன்), இந்தியன் (மா நிறம்) மற்றும் பல்வேறு முக அமைப்புள்ள மனிதர்கள் உருவானார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுவதில்லை

Marimuthu Murugan said...

அருமையான கட்டுரை...இன்னும் தொடரவும்..

வால்பையன் said...

@ கோவி கண்ணன்!


இந்த பதிவில் மிக தெளிவாக விளக்கியுள்ளேன்! அப்பொழுது நடந்த பரிணாமம் பற்றிய விவாதத்திற்கு எதிர்குரல் ப்ளாக்கில் அதை முன் வைத்தேன்! ஆனால் பதிலை தான் காணோம்!

மதன்செந்தில் said...

எல்லோரும் தனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கு பகிரும் போதுதான் அந்த கருத்து முழுமை அடைகிறது.. உங்கள் பகிர்வுக்கு நன்றி..

தொடர வாழ்த்துக்கள்
www.narumugai.com

Romeoboy said...

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது போய் கரடியில் இருந்து மனிதன் வந்தான் கதையா இருக்கே .. அடுத்த பகுதியை படித்தால் தான் புரியும் போல

Marimuthu Murugan said...

தலைப்பில் மறந்துடாம தொடர்சியை தொடர்ச்சின்னு மாத்திடுங்க..

ஜில்தண்ணி said...

சில டவுட்டு இருக்கு

குரங்கிலிருந்து பரினமித்த நாம் மேலும் சூப்பர் மனிதனாக வாய்ப்பு இருக்கா

சில விலங்குகள் பரிணமித்ததில் மனிதனின் பங்கு அதிகம் இருக்குது போல,உதாரணத்திற்க்கு ஓநாயை புல் டாக்காக மாற்றியது மனிதன் தாணே

தொடருங்கள்

வால்பையன் said...

//ஜில்தண்ணி said...

சில டவுட்டு இருக்கு

குரங்கிலிருந்து பரினமித்த நாம் மேலும் சூப்பர் மனிதனாக வாய்ப்பு இருக்கா//


சிக்கிமுக்கி கல்லில் நெருப்பை கண்டுபிடித்து, அதே கல்லை ஆயுதமாக பயன்படுத்தினால் என்றால் ஆச்சர்யமாக இருக்கும், படைப்புவாத கொள்கையுடயவர்கள் அவசரமாக மறுப்பார்கள்!

சமகாலத்தில் சொல்கிறேன்!

500 வருடங்களுக்கு முன் மின்சாரம் என்ரால் யாருக்காவது தெரியுமா!?, மோட்டார் வாகனம் என்றால்? சினிமா என்றால்? விமானம் என்றால்,ராக்கெட் என்றால்?

இவையெல்லாம் மனிதன் அறிவு ரீதியாக வளர்ந்த பரிணாம வளர்ச்சியில் கண்டுபிடித்தது, மனிதன் ஏற்கனவே சூப்பர் மனிதன் ஆகிவிட்டான்!

உமர் | Umar said...

// மனிதன் அசைவபட்சிணியாக இருந்து தற்பொழது மாறியிருக்கிறான் என்பதற்கு நம்பிடம் பல உதாரணங்கள் இருக்கிறது, முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி!//

படைப்புவாதக் கொள்கை ஆதரவாளர்கள், மனிதன் அசைவம் சாப்பிடலாமா என்று பேசும்போது மறக்காமல் குறிப்பிடுவது கோரை பற்கள்; ஆனால் மனிதத் தோற்றம் பற்றி பேசும்போது மட்டும் உருவ ஒற்றுமையைப் பற்றி மறந்தும் பேசிவிட மாட்டார்கள்.

Radhakrishnan said...

மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை.

!

Blog Widget by LinkWithin