டிஸ்கி 1:இவையனைத்தும் எனது சுய புரிதல்களே! சாத்தியகூறுகளின் அதிகபட்ச தன்மையை அறிந்து கொள்ள விவாத பொருளாக உங்கள் முன் வைக்கிறேன்!, தினந்தோறும் பரிணாமத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருக்க முடியாததால் குறிப்புகள் எடுத்து வைத்து அவ்வபோது தொடர்கிறேன்!
டிஸ்கி 2:பட்டாபட்டி, மங்குணி அமைச்சர், கரிசல்காரன் பின்னூட்டம் இடும் முன் எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்! arunero@gmail.com
*************************
தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!
பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!
ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!
குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!
கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன் என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!
இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!
மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!
முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!
தொடரும்!
250 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 1 – 200 of 250 Newer› Newest»ஏலே,இப்பவும் நான் தான் லே மொதோ வெட்டு....
ஹையோ ஹையோ ....
மரபணு குறைபாடு பற்றி விரிவா சொல்ல முடியுமா வால்?
வால்பையன் இப்போ ஒழுங்கா உருப்படியா எழுதுனதால அவருக்கு 100 துக்கு 110 மார்க்.
/பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!/
வாலுக்கு மட்டும் பரிணாமமோ, வளர்ச்சியோ தேவைப் படவில்லை போல!
கிருஷ்ணமூர்த்தி said...
/பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!/
வாலுக்கு மட்டும் பரிணாமமோ, வளர்ச்சியோ தேவைப் படவில்லை போல!//
பழசை மறக்க கூடாதுல்ல சார்!
அருண் போட்டோலாம் சூப்பர் சூப்பர் அஹ போட்டு இருகேங்கலே.படம் போட்டு நல்லா எல்லாருக்கும் புரிய வச்சுடேங்க.
ம்ம்.... நல்ல பதிவு....
//அருண் போட்டோலாம் சூப்பர் சூப்பர் அஹ போட்டு இருகேங்கலே.படம் போட்டு நல்லா எல்லாருக்கும் புரிய வச்சுடேங்க.
ம்ம்.... நல்ல பதிவு....//
நன்றி மதுரைபொண்ணு!
மரபணு பற்றிய விளக்க கட்டுரை விரைவில் வெளியிடுகிறேன்!, மரபணுவின் முக்கியதுவம் ஒன்னு சொல்லட்டுமா, மீண்டும் டைனோசர் வரப்போகுது!
மரபணு பற்றிய விளக்க கட்டுரை விரைவில் வெளியிடுகிறேன்!, மரபணுவின் முக்கியதுவம் ஒன்னு சொல்லட்டுமா, மீண்டும் டைனோசர் வரப்போகுது!
//
நிசமாவா சொல்றீங்க.. ஏற்கனவே, அரசியல்வாதி உடம்புல பூந்து ஆடிக்கிட்டு இருக்குனு நினைச்சேன்...
//
நிசமாவா சொல்றீங்க.. ஏற்கனவே, அரசியல்வாதி உடம்புல பூந்து ஆடிக்கிட்டு இருக்குனு நினைச்சேன்... //
மெயில் பண்ண சொல்லியிருக்கேன் பாருங்க பட்டாபட்டி!
// பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்!//
நன்றாக இருக்கின்றது...
//மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்!//
நன்றாக இருக்கின்றது... //
மனுசன் பாம்பாகுறது நல்லாயிருக்கா!?
அது மிக வேகமா பரிணாம வளர்ச்சியின் பின்னோக்கி செல்வது!, மனிதன் இனி அறிவு ரீதியாகவே முன்னேறனும், உடல் தேவையான அளவு மாற்றம் பெற்றுவிட்டது!
ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா?
ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?
source: http://ethirkkural.blogspot.com/2010/04/blog-post_3238.html
சமீபத்தில் ஒருவர் கேட்டக் கேள்வி அதற்கு நம்ம அணிப் பக்கம் ஒரு பலமான பதிலைக் கொடுங்கள்.
நானும் யோசிக்கிறேன் {நான் பரிணாமக் கொள்கையை ஒப்புக் கொள்கிறேன் அதற்காக இந்து வெறியர் எனச் சொல்லவேண்டாம்}
நல்ல தகவல்கள். மனிதன் மனம் பர்மாண வளர்ச்சி அடைந்தால் மட்டும் நீங்கள் தரும் தகவல்கள் புரியும். வாழ்த்துக்கள்
பரிணாம வளர்ச்சி உண்மையா பொய்யா என்பது குறித்து என்னால் முடிவுக்கு வர இயலவில்லை என்றாலும், மதவாதிகளுக்கு என்னால் உண்மை என்றே பதில் சொல்ல முடியும், காரணம்,
ஆதாம் ஏவாள் என்ற இரண்டே மனிதர்களிடமிருந்து தான் ஆப்ரிக்க கருப்பர்களும், ஐரோப்பிய வெள்ளையர்களும், ஆசிய மஞ்சள் நிறத்தினரும், இந்திய மரத்தூள் நிறத்தினரும் தோன்றினார்கள் என்று நம்பினால், நிற வேறுபாடுகள் கூட பரிணாமத்தின் கூறுகளே, பிறகு அவரவர் உடல் அமைப்பு, முகம் உள்ளிட்ட உறுப்பு அமைப்புகள், இவை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் மனித வளர்ச்சிக்குள்ளேயான பரிணாமத்தை மதவாதிகள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
:)
குரங்கு குட்டைப் பாவாடை ஏன் போடவில்லை என்பது போலவே ஆதாம் ஏவாளுக்கு பிறந்தவங்க ஏன் பல்வேறு நிறத்தில் மாறினார்கள் என்று கேட்கவும் செய்யலாம் இல்லையா ?
//ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா?
ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?//
அம்மாதிரி ஒருவன் ஆரோக்கியமாக இருப்பதற்கு சாத்தியகூறுகள் அதிகம்! வம்சாவழியாக விவசாயிகள் உடலில் பலமாகும்,சிலர் சாம்பார்சாதமாகவும் இருப்பது ஒரு உதாரணம்! அறிவு ரீதியாக இதுவரை எந்த மனிதனும் முழு அளவு மூளையை பயன்படுத்தியதில்லை, ஆகையால் ஒருவன் பலசாலியாக இருக்கிறான் என்பதால் புத்திசாலி இல்லை என்றும், சாம்பார்சாதங்கள்(ஐரோய்யியாவிலும் சாம்பார் இருக்கும்) எல்லாம் புத்திசாலிகள் என்றும் ஏற்றுகொள்ளமுடியாது!
ஸ்மார்ட் பரிணாம வளர்ச்சி உடல் ரீதியானது, நீங்க கலருக்கும், அறிவுக்கும் முடிச்சு போடுறிங்க!
//சமீபத்தில் ஒருவர் கேட்டக் கேள்வி அதற்கு நம்ம அணிப் பக்கம் ஒரு பலமான பதிலைக் கொடுங்கள்.
நானும் யோசிக்கிறேன் {நான் பரிணாமக் கொள்கையை ஒப்புக் கொள்கிறேன் அதற்காக இந்து வெறியர் எனச் சொல்லவேண்டாம்} //
இங்கே மற்றொன்றையும் சொல்ல வேண்டும், பரிணாம கொள்கை, படைப்பு வாத கொள்கைக்கு எதிரானதே தவிர கடவுளுக்கு அல்ல! கடவுள் பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும், அதனால் பரிணாம மாற்றத்தின் ரோமத்தை கூட புடுங்கமுடியாது!
'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்' (Bio-technology regulatory act of India) என்ற சட்டத்தை நிறைவேற்ற மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளார் நம் பிரதமர்.
தல நாம எவ்வளவு சத்தம் போட்டாலும், அவனுங்க சட்டம் போட்டுருவானுங்க,
இந்த சட்டம் வந்தால் மரபணு மாற்ற விதைகளை நாம் எதிர்த்தால் நம்மை உள்ளே வைக்க முடியும் ,
//குரங்கு குட்டைப் பாவாடை ஏன் போடவில்லை என்பது போலவே ஆதாம் ஏவாளுக்கு பிறந்தவங்க ஏன் பல்வேறு நிறத்தில் மாறினார்கள் என்று கேட்கவும் செய்யலாம் இல்லையா ? //
நிறம், மொழி, கலாசாரம் அனைத்துமே சேர்த்து கொள்ளலாம்!,
ஒரு பெற்றோருக்கு பிறந்த இரண்டு மகன்களில் ஒருவன் செத்தும் எப்படியப்பா 700 கோடியாச்சு, அதுவும் இமுட்டு மொழி வித்தியாசங்களுடன்!
/மனிதன் இனி அறிவு ரீதியாகவே முன்னேறனும், உடல் தேவையான அளவு மாற்றம் பெற்றுவிட்டது!/
ஒரு அளவுக்கு மட்டுமே சரி!
டார்வின் கருத்தில் survival of the fittest என்பது முக்கியமானது. இன்றைக்கும் பொருந்தக் கூடியது.
மனித உடல் முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்வதிலும் உண்மை இல்லை.இப்போதிருக்கும் உடல் அமைப்பு வாழும் சூழ்நிலையைப் பொறுத்தது மட்டுமே. இதுவும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்.
மூளையின் தொண்ணூறு சதவீதத்தை எந்த மனிதனும் பயன்படுத்துவது இல்லை. மாற்றிச் சொல்வது என்றால், அறிவுத் திறன் என்பது இப்போது சொல்லப் படும் அர்த்தத்தில் இல்லாமல், வேறு விதமாகக் கூட இருக்கலாம்!
அதற்கும், உயிர்வாழ அத்தியாவசியமான தேவை என்ற முதல் நிபந்தனை வந்து விடுகிறது!
//மனித உடல் முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்வதிலும் உண்மை இல்லை.இப்போதிருக்கும் உடல் அமைப்பு வாழும் சூழ்நிலையைப் பொறுத்தது மட்டுமே. இதுவும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்.//
குளிர் நாடுகளில் வாழும் மனிதர்கள் உடல் சூழல் இன்னும் மாறவில்லை, கம்பளி ஆடை இல்லாமல் அங்கெல்லாம் மனிதனால் வாழ முடிவதில்லை. விலங்குகளுக்கு உடல் சூழல் மாறி இருக்கிறது. அவை நன்றாகவே அந்த குளிரை தாங்குகின்றன.
//மூளையின் தொண்ணூறு சதவீதத்தை எந்த மனிதனும் பயன்படுத்துவது இல்லை. //
அது முடியாது என்பதால் தான் பிறர் மூளைகளை மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் போன்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
:)
@ கிருஷ்ணமூர்த்தி சார்
எதிர்காலத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மண்டையில் முடி இருக்காதுன்னு பயமுறுத்தியிருக்காங்க, அதுக்கு சும்மா சமாதானம் பண்ண சொல்லியது, உலகில் மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது என்பதை அறிவேன்! அறிவில் கூட நாம் பயனிக்க வேண்டிய தூரம், ஆம் தூரமே அதிகமாயிருக்கிறது! நிச்சயமாக பூமி போன்று ஒரு கிரகத்தில் கால் வைப்பான் மனிதன் என கருதுகிறேன்!
//குளிர் நாடுகளில் வாழும் மனிதர்கள் உடல் சூழல் இன்னும் மாறவில்லை, கம்பளி ஆடை இல்லாமல் அங்கெல்லாம் மனிதனால் வாழ முடிவதில்லை. விலங்குகளுக்கு உடல் சூழல் மாறி இருக்கிறது. அவை நன்றாகவே அந்த குளிரை தாங்குகின்றன.//
நிச்சயமாக ஏற்று கொள்ள வேண்டிய விசயம்! வளர்ச்சியில் ரோமம் அனைத்தையும் இழந்த போது, மீண்டும் அடையவும் வாய்ப்புண்டு! பருவகாலம் மாதிரி மனுசனுக்கும் மாறும் போல1
//அது முடியாது என்பதால் தான் பிறர் மூளைகளை மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் போன்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.//
இந்தியாவுல மட்டும் என்ன வாழுதாம்!, வலியது பிழைக்கும் என்பது தற்பொழுது ஏமாற்றுவது பிழைக்கும் என்று மாறிவிட்டதே!
//ஒருவன் பலசாலியாக இருக்கிறான் என்பதால் புத்திசாலி இல்லை என்றும், சாம்பார்சாதங்கள்(ஐரோய்யியாவிலும் சாம்பார் இருக்கும்) எல்லாம் புத்திசாலிகள் என்றும் ஏற்றுகொள்ளமுடியாது!//
சரிண்ணே அப்படியே வச்சுகிட்டாலும் பரிணாமத்தில் எதோறொரு சதவிகிதத்தில் ஒருவன் விட ஒருவன் அதிகம் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பான் (உதாரணமாக நம்மைப்போன்ற பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொண்டவர்கள்) அப்படிஎன்றால் எப்படி எல்லாரும் சமம் என்று சொல்லமுடியும். அப்ப நாம பரிணாம வளர்ச்சியைக் காட்டி மனிதனை மட்டம் தட்டலாமா?
எப்படியும் வளர்ச்சிப்படி எல்லாரும் சமமான வளர்ச்சி பெற்றிருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்
பொருத்துக் கொள்ள மாட்டாமல் குரங்கு பரிணாமம் அடைஞ்சிருக்கு:
________________________________
இதைப்பாருங்க,
பசில் ராஜபக்சேவை அறைந்த குரங்கு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்சேவை இன்று தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள குரங்கு ஒன்று கன்னத்தில் அறைந்துள்ளது.
மிருக காட்சிச்சாலைக்கு இன்று சென்றிருந்த பசில் ராஜபக்சே குரங்கின் கையை குலுக்க முற்பட்ட வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பசில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். குரங்கினை அவருக்கு அருகில் கொண்டு வந்த வேளையிலேயே அது அவரது கன்னத்தில் தாக்கியுள்ளது. அதன் பின்னர் குரங்கு அங்கிருந்து உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.
//ரிண்ணே அப்படியே வச்சுகிட்டாலும் பரிணாமத்தில் எதோறொரு சதவிகிதத்தில் ஒருவன் விட ஒருவன் அதிகம் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பான் (உதாரணமாக நம்மைப்போன்ற பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொண்டவர்கள்) அப்படிஎன்றால் எப்படி எல்லாரும் சமம் என்று சொல்லமுடியும். அப்ப நாம பரிணாம வளர்ச்சியைக் காட்டி மனிதனை மட்டம் தட்டலாமா?//
இது என்ன அறிவு அடிப்படையில் பிராமணன் - சூத்திரன் உண்மை என்று ஞாயப்படுத்தும் கருத்தா ?
அப்படி என்றால் கடுமையான கண்டனம்.
//பரிணாமத்தில் எதோறொரு சதவிகிதத்தில் ஒருவன் விட ஒருவன் அதிகம் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பான்//
நியாயமா மனிதனை விட பலசாலி, சிங்கம், புலி, முதலை, அதையெல்லாம் வச்சி மனிதனை மட்டம் தட்டுறோமா என்ன!? பரிணாம வளர்ச்சி என்பது உயிரின தோற்றத்தையும், அதன் தன்மையையும் ஆராய்வது, மனிதனை மட்டம் தட்டுவதல்ல!
//எப்படியும் வளர்ச்சிப்படி எல்லாரும் சமமான வளர்ச்சி பெற்றிருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் //
ஜப்பானியர்கள் மற்ற உலக மனிதர்களை விட வளர்ச்சியில் குள்ளமானவர்கள் என்ப்தால் அவர்கள் அறிவிலும் குறைவானவர்கள் என்பீர்கள் போலயே!, சுற்றுசூழக்கு ஏற்ப தான் உடல் தோற்றம், சக மனிதனை மட்டம் தட்டுவதற்கு அல்ல!
//ஜப்பானியர்கள் மற்ற உலக மனிதர்களை விட வளர்ச்சியில் குள்ளமானவர்கள் என்ப்தால் அவர்கள் அறிவிலும் குறைவானவர்கள் என்பீர்கள் போலயே!, சுற்றுசூழக்கு ஏற்ப தான் உடல் தோற்றம், சக மனிதனை மட்டம்
தட்டுவதற்கு அல்ல//
இங்கே விவாதமே உடல் வளர்ச்சியல்ல அறிவு வளர்ச்சித்தான். மற்றவனை விட நான் அதிகம் அறிவில் பரிணாம வளர்ச்சி பெற்றவன் என்று ஒருவன் கட்டாயம் இருக்கவேண்டும். அந்த இனத்தவன் மற்றவரை விட உயர்ந்தவன் ஆகமுடியும்? ஆகமுடியுமா என்பதைவிட அவன் உயர்ந்தவந்தனே?
//இது என்ன அறிவு அடிப்படையில் பிராமணன் - சூத்திரன் உண்மை என்று ஞாயப்படுத்தும் கருத்தா ?
அப்படி என்றால் கடுமையான கண்டனம். //
சாம்பார் சாதமெல்லாம் பிறப்பாலேயே அறிவாளிகள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது!, சிறந்த கல்வியும், சிரிய அனுபவமும் இருந்தால் யாவரும் சமமாக தான் இருந்திருப்பார்கள்! அப்போ தான் யாரையும் படிக்க விடலயே! இப்பவாவது படிக்க இடம் கேட்டா இடஒதுக்கீட்டில் பின் பக்கமா வர்றான்னு அழுவாச்சி வேற!
\\சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது \\
ஏதாவது உள்குத்து இருக்கா..இதுல..!
//இது என்ன அறிவு அடிப்படையில் பிராமணன் - சூத்திரன் உண்மை என்று ஞாயப்படுத்தும் கருத்தா ?//
நீங்க சொல்றத பார்த்த எல்லா வர்ணாஸ்ரமம் கருத்துக்கு சப்போட்டு செய்றேங்களா?
அததெல்லாம் ஒத்துக்க மாட்டோம்
பரிணாம வளர்ச்சியில் நமக்கு தேவை இல்லாத அதிகம் உபயோகபடாத உறுப்புக்கள் சிறிது சிறிதாக மறைந்து விடுகிறது , முக்கிய உதாரணம் "வால்" நன்றாக கவனித்தோம் என்றால் நமது கால் சுண்டு விரல்கள் நமக்கு இப்போது உபயோகம் குறைவு ...... அனால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்
//இங்கே விவாதமே உடல் வளர்ச்சியல்ல அறிவு வளர்ச்சித்தான். மற்றவனை விட நான் அதிகம் அறிவில் பரிணாம வளர்ச்சி பெற்றவன் என்று ஒருவன் கட்டாயம் இருக்கவேண்டும். அந்த இனத்தவன் மற்றவரை விட உயர்ந்தவன் ஆகமுடியும்? ஆகமுடியுமா என்பதைவிட அவன் உயர்ந்தவந்தனே? //
இருக்க முடியும் என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கும் பட்சத்தில் நான் சொன்னா கேட்கவா போறிங்க!, அறிவு என்பதே தனிமனிதனுக்கு சொந்தமானதல்ல! மொழியும், சிறந்த தகவல் தொடர்புமே, ஆரம்பகட்டத்திருரிந்து இன்று வரை வளர்ச்சிக்கு காரணம், மற்ற விலங்குகள் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதற்கும் இதுவே காரணம்!
நீங்க சொல்ற அந்த அறிவு வளர்ச்சி பெற்றவன் யாருங்கோ!?
பூனையை தூக்கி வெளியே விடுங்கோ!
//நீங்க சொல்றத பார்த்த எல்லா வர்ணாஸ்ரமம் கருத்துக்கு சப்போட்டு செய்றேங்களா?
அததெல்லாம் ஒத்துக்க மாட்டோம் //
கோவிஜி! இப்பெல்லாம் ரெண்டே வர்ணம் தான், ஒன்னு பிராமணன், மத்ததெல்லாம் அதுக்கு கீழே, இப்போ தான் ராஜாக்கள் கிடையாதே சத்ரியன் எதுக்கு!? அவுங்க அப்டேட் ஆகிட்டாங்க, நீங்க தான் இன்னும் ஆவல!
//சாம்பார் சாதமெல்லாம் பிறப்பாலேயே அறிவாளிகள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது!, சிறந்த கல்வியும், சிரிய அனுபவமும் இருந்தால் யாவரும் சமமாக தான் இருந்திருப்பார்கள்! //
அண்ணே வால் அண்ணே இந்த கருத்தை ஒத்துக்கொண்டால் பரிணாம வளர்ச்சியை மறுக்க வேண்டிவரும். பரிணாமக் கொள்கையை ஒத்துக் கொண்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சாதிப் பிரிவுகள் வருமே ஒரே குழப்பமாயிருக்கு.
//நமது கால் சுண்டு விரல்கள் நமக்கு இப்போது உபயோகம் குறைவு ...... அனால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம் //
ரொம்ப தூரம் போக வேணாம்னே! கைவிரல்களை விட கால் விரல்கள் சிறிதாக இருக்க காரனமே பயன்பாடு குறைந்து போனதால் தான்! பல ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கும் அதுக்கே!
/// //இது என்ன அறிவு அடிப்படையில் பிராமணன் - சூத்திரன் உண்மை என்று ஞாயப்படுத்தும் கருத்தா ?
அப்படி என்றால் கடுமையான கண்டனம். //
/////
இல்லை , பிராமணர்களில் நிறைய முட்டாள்கள் இருக்கிறார்கள் , அதே போல் பிற இனத்தில் அம்பேத்கார் , அப்துல் கலாம் போன்றவர்களும் இருக்கிறார்கள்
//அண்ணே வால் அண்ணே இந்த கருத்தை ஒத்துக்கொண்டால் பரிணாம வளர்ச்சியை மறுக்க வேண்டிவரும். பரிணாமக் கொள்கையை ஒத்துக் கொண்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சாதிப் பிரிவுகள் வருமே ஒரே குழப்பமாயிருக்கு. //
பலருக்கு இருக்குன்னா அது உண்மையாயிருமா!? கடவுல் இருக்குன்னு சொல்லி சொல்லி வளர்க்குறதால தானே கோவிலுக்கு போறிங்க, அது மாதிரி சாம்பார்சாதம்னு சொல்லி சொல்லி சிலர் அப்படி இருக்காங்க!, ஆனால் இனிமேலும் அப்படி இருக்க விடமாட்டோம்ல!, நாங்க தெளிவா தான் இருக்கோம் நீங்க ஏன் குழம்புறிங்க!
//அறிவு என்பதே தனிமனிதனுக்கு சொந்தமானதல்ல! மொழியும், சிறந்த தகவல் தொடர்புமே, ஆரம்பகட்டத்திருரிந்து இன்று வரை வளர்ச்சிக்கு காரணம், மற்ற விலங்குகள் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதற்கும் இதுவே காரணம்!//
அப்ப பரிணாமக் கொள்கையில் அறிவு பரிணாமம் அடையவில்லை என்கிறீர்களா?
அப்படி அறிவு பரிணாமம் அடைந்தால் உலகத்தில் நம்லவிட முடால்கள் இருப்பார்கள் என்கிறீர்களா?
\\சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது \\
ஏதாவது உள்குத்து இருக்கா..இதுல..! //
பாவிகளா! சினிமா அரசியல் பண்ற நேரமா இது!
//சாம்பார் சாதமெல்லாம் பிறப்பாலேயே அறிவாளிகள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது!, சிறந்த கல்வியும், சிரிய அனுபவமும் இருந்தால் யாவரும் சமமாக தான் இருந்திருப்பார்கள்!///
உணவு முறைக்கும் , அறிவு வளசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , எல்லா விஞ்ஞானிகளும் அசைவம் சாப்பிடுபவர்கள் , இந்தியாவில்(சில நாடுகளில் ) மட்டும் தான் சைவம் உள்ளது
//கடவுல் இருக்குன்னு சொல்லி சொல்லி வளர்க்குறதால தானே கோவிலுக்கு போறிங்க, அது மாதிரி சாம்பார்சாதம்னு சொல்லி சொல்லி சிலர் அப்படி இருக்காங்க!, ஆனால் இனிமேலும் அப்படி இருக்க விடமாட்டோம்ல!, நாங்க தெளிவா தான் இருக்கோம் நீங்க ஏன் குழம்புறிங்க//
வால் அண்ணே, நீங்க யாரையோ இங்க இழுக்குறீங்க. பூனை உங்க கிட்ட தான் இருக்கு
//அப்ப பரிணாமக் கொள்கையில் அறிவு பரிணாமம் அடையவில்லை என்கிறீர்களா?
அப்படி அறிவு பரிணாமம் அடைந்தால் உலகத்தில் நம்லவிட முடால்கள் இருப்பார்கள் என்கிறீர்களா? //
அமெரிக்கா நம்மை விட இருபது வருடங்களுக்கு மேல் அட்வான்ஸாக இருப்பதால் அது அறிவாளி நாடு என்றாகிவிடாது! அவுன்களுக்கு நல்ல தகவல் தொடர்பும், முற்போக்கு சிந்தனையும் இருந்துச்சு, நமக்கு மாவிழுக்கு ஏத்தவும், மண்டையை உடைக்கவுமே நேரம் சரியாயிருந்தது, அறிவு தனிமனிதனுக்கு சொந்தமானதல்ல என ஏற்கனவே சொல்லிவிட்டேன்! ஒரு கண்டுபிடிப்பு ஏற்கனவே இருக்கும் மற்றொரு கண்டுபிடிப்பின் நீட்சி!, யார் வேண்டுமானாலும் தொடரமுடியும், அதாவது அப்கிரேடு செய்ய முடியும்!
அறிவில உயர்ந்தவன் இருக்கான்னு நிறுபிக்க எவ்ளோ கஷ்டபடுறிங்க, வாழ்த்துக்கள் ஸ்மார்ட், ஆனா இங்கே யாரும் முட்டாள் இல்லையே அதான் உங்களுக்கு சறுக்கல்!
Question repeat..(spelling mistake)
அப்ப பரிணாமக் கொள்கையில் அறிவு பரிணாமம் அடையவில்லை என்கிறீர்களா?
அப்படி அறிவு பரிணாமம் அடைந்தால் உலகத்தில் நம்லவிட முட்டாள் இருப்பார்கள் என்கிறீர்களா?
//உணவு முறைக்கும் , அறிவு வளசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , எல்லா விஞ்ஞானிகளும் அசைவம் சாப்பிடுபவர்கள் , இந்தியாவில்(சில நாடுகளில் ) மட்டும் தான் சைவம் உள்ளது //
உண்மையில் மங்குணி அமைச்சர் தானய்யா நீர், சாம்பார்சாதம் என்பது ஒரு அடையாளமே, இங்கே மாட்டுகறி சாப்பிடும் ஆட்களும் உண்டு!
//வால் அண்ணே, நீங்க யாரையோ இங்க இழுக்குறீங்க. பூனை உங்க கிட்ட தான் இருக்கு//
நீங்க அறிவில் சிறந்தவர்கள் உண்டுன்னு யாரை சொல்றிங்க!?
//வால்பையன் said...
//உணவு முறைக்கும் , அறிவு வளசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , எல்லா விஞ்ஞானிகளும் அசைவம் சாப்பிடுபவர்கள் , இந்தியாவில்(சில நாடுகளில் ) மட்டும் தான் சைவம் உள்ளது //
உண்மையில் மங்குணி அமைச்சர் தானய்யா நீர், சாம்பார்சாதம் என்பது ஒரு அடையாளமே, இங்கே மாட்டுகறி சாப்பிடும் ஆட்களும் உண்டு!///
ஆமா வாலு, அத தான் நானும் சொல்றேன்
//Question repeat..(spelling mistake)
அப்ப பரிணாமக் கொள்கையில் அறிவு பரிணாமம் அடையவில்லை என்கிறீர்களா?
அப்படி அறிவு பரிணாமம் அடைந்தால் உலகத்தில் நம்லவிட முட்டாள் இருப்பார்கள் என்கிறீர்களா? //
நான் சொல்ல வருவது உண்மையில் உங்களுக்கு புரியவில்லை! குரங்குக்கும், மனிதனுக்குமே மூல ஆதாரன உயிரினம் ஒன்று உண்டு! உங்களை விட குரங்கு அறிவில் சிறந்தது இல்லை தான், அதற்காக அதை அடிமையாக வைத்திருப்பீர்களா!?
மனிதனும் சக உயிரினம் தான், செஸ் விளையாடும் ஆனந்தால் நரேன் மாதிரி கார் ஓட்ட முடியாது! நீங்க அறிவு என்று எதை சொல்கிறீர்கள்!?
//அறிவு தனிமனிதனுக்கு சொந்தமானதல்ல என ஏற்கனவே சொல்லிவிட்டேன்! ஒரு கண்டுபிடிப்பு ஏற்கனவே இருக்கும் மற்றொரு கண்டுபிடிப்பின் நீட்சி!, யார் வேண்டுமானாலும் தொடரமுடியும், அதாவது அப்கிரேடு செய்ய முடியும்!//
எல்லாம் போச்சு நீங்க சரியா பரிணாமவியலைப் படிக்கலை. நீங்க சொல்றதப் பார்த்தா குரங்குக்கு அறிவு அப்கிரேடு செஞ்சா அந்த பிறவியிலேயே மனித அறிவை பிடிக்கும் என்று சொல்றேங்க?
எப்படியிருந்தாலும் அப்கிரேடு செய்து அறிவு பெற பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்கவேன்டாமா (நமது பரிணாமக் கொள்கை படி)
//நீங்க அறிவில் சிறந்தவர்கள் உண்டுன்னு யாரை சொல்றிங்க!?//
பகுத்தறிவாளிகள், பெரியாரிஸ்ட், முற்போக்காளர்கள், மூடநம்பிக்காயிலாதவர்கள்.. யாரச்சொன்னா என்னங்க உண்மையா பரிணாமப் படி உண்டா? யில்லையா?
//நீங்க சொல்றதப் பார்த்தா குரங்குக்கு அறிவு அப்கிரேடு செஞ்சா அந்த பிறவியிலேயே மனித அறிவை பிடிக்கும் என்று சொல்றேங்க?
எப்படியிருந்தாலும் அப்கிரேடு செய்து அறிவு பெற பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்கவேன்டாமா (நமது பரிணாமக் கொள்கை படி) //
அது கற்று கொள்ளும் அறிவை பொருத்து! நான்கு வயது சிம்பன்சி நான்கு வயது குழந்தையை விட வேகமாக சிந்திக்கிறது! ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை! ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது! யார் கண்டா நீங்கள் சாவதற்குள் ஒரு சிம்பன்சி உங்களுக்கு நண்பனாகலாம்!
\\வால்பையன் said...
சத்ரியன் எதுக்கு!? \\
பார்த்து வால்..! சிங்கைப் பதிவர்கள் அடிக்க வருவாங்க..!
:-)
\\வால்பையன் said...
சத்ரியன் எதுக்கு!? \\
பார்த்து வால்..! சிங்கைப் பதிவர்கள் அடிக்க வருவாங்க..!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நான் இந்த அரசியலுக்கு வரல!
//பகுத்தறிவாளிகள், பெரியாரிஸ்ட், முற்போக்காளர்கள், மூடநம்பிக்காயிலாதவர்கள்.. யாரச்சொன்னா என்னங்க உண்மையா பரிணாமப் படி உண்டா? யில்லையா? //
அவர்கள் மாற்று சிந்தனையாளர்கள், அதில் கூட பெரியாரிஷ்டுகளை இதில் சேர்த்து முற்போக்கு சிந்தனையுள்ளவர்களுக்கு ஆப்பு வைக்க வேண்டாம், பெரியாரிஷ்டுகளுக்கு பெரியாரை தவிர வேற சிந்திக்க தெரியாது! பெரியாரிஷ்டுகளும் ஒருவகையில் மதவாதிகளே!
யாரச்சொன்னா என்னங்க உண்மையா பரிணாமப் படி சில விஷயத்தில் சில மனித இனங்கள் அறிவாளியாக உண்டா? யில்லையா?
//இங்கே மற்றொன்றையும் சொல்ல வேண்டும், பரிணாம கொள்கை, படைப்பு வாத கொள்கைக்கு எதிரானதே தவிர கடவுளுக்கு அல்ல! கடவுள் பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும், அதனால் பரிணாம மாற்றத்தின் ரோமத்தை கூட புடுங்கமுடியாது!"// கடவுள் என்ற கருத்தே படைத்தல்,காத்தல். அழித்தல், என்பதன் மீதே கட்டப்பட்டுள்ளது.படைத்தல் என்ற வேலை கடவுளுக்கு அல்ல பரிணாமத்திற்குதான் என்றால் கடவுள் என்ற கருத்தே பொய்யாகிவிடும் அதனால்தான் மதவாதிகள் அந்த காலத்திலிருந்தே பரிணாமத்தை எதிர்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் வெவ்வேறு விஷயத்தில் வெவ்வேறு மனித இனங்கள் அறிவாளி யாக இருக்கிறார்கள் என்று நாம் இந்த விவாத்தத்தை தற்காலிகமாக நிறைவு செய்வோம். {எனக்கு டூட்டி முடிந்தது நாளை பாப்போம்}
//யாரச்சொன்னா என்னங்க உண்மையா பரிணாமப் படி சில விஷயத்தில் சில மனித இனங்கள் அறிவாளியாக உண்டா? யில்லையா? //
அறிவிலும் அனைவரும் சமம் தான்! சிந்திக்காமல் இருப்பது உங்கள் விருப்பம் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்!, சிந்திக்கவும் தனிதனியா அவரவர்க்கு உரிமையுண்டு!
//கடவுள் என்ற கருத்தே படைத்தல்,காத்தல். அழித்தல், என்பதன் மீதே கட்டப்பட்டுள்ளது.படைத்தல் என்ற வேலை கடவுளுக்கு அல்ல பரிணாமத்திற்குதான் என்றால் கடவுள் என்ற கருத்தே பொய்யாகிவிடும் அதனால்தான் மதவாதிகள் அந்த காலத்திலிருந்தே பரிணாமத்தை எதிர்கிறார்கள். //
தனியா கடவுள்கள் டவுசரை கிழித்து கொண்டிருப்பதால் இங்கே வேணாமேன்னு ஒதுக்குகினேன் தல!, படைப்புவாத கொள்கையை நம்புகிறவர்கள் பரிணாம வளர்ச்சியை ஏற்றுகொள்லமாட்டார்கள், ஆபிரஹாம மதம் அனைத்தும் படைப்புவாத கொள்கைக்கு ஆதரவானது!
//ஆக மொத்தத்தில் வெவ்வேறு விஷயத்தில் வெவ்வேறு மனித இனங்கள் அறிவாளி யாக இருக்கிறார்கள் என்று நாம் இந்த விவாத்தத்தை தற்காலிகமாக நிறைவு செய்வோம். {எனக்கு டூட்டி முடிந்தது நாளை பாப்போம்} //
நீங்க இப்போ தான் முடிக்கிறிங்க, நான் ஆரம்பத்துலருந்து அதை தான் சொல்லிகிட்டு இருக்கேன்!
//பரிணாம வளர்ச்சி உண்மையா பொய்யா என்பது குறித்து என்னால் முடிவுக்கு வர இயலவில்லை என்றாலும், மதவாதிகளுக்கு என்னால் உண்மை என்றே பதில் சொல்ல முடியும், காரணம்,
ஆதாம் ஏவாள் என்ற இரண்டே மனிதர்களிடமிருந்து தான் ஆப்ரிக்க கருப்பர்களும், ஐரோப்பிய வெள்ளையர்களும், ஆசிய மஞ்சள் நிறத்தினரும், இந்திய மரத்தூள் நிறத்தினரும் தோன்றினார்கள் என்று நம்பினால், நிற வேறுபாடுகள் கூட பரிணாமத்தின் கூறுகளே, பிறகு அவரவர் உடல் அமைப்பு, முகம் உள்ளிட்ட உறுப்பு அமைப்புகள், இவை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் மனித வளர்ச்சிக்குள்ளேயான பரிணாமத்தை மதவாதிகள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். //
வண்க்கம் கோவி அண்ணா பரிணாமம் உண்மை என்பதற்கு மதவாதிகளுக்கு தாங்கள் கூறிய கருத்து ஏற்று கொள்ளதக்கதே,
பரிணாமத்தை நம்ப முடியாமல் இருக்க என்ன காரணம் என்பதை கூற இயலுமா?
//பரிணாமத்தை நம்ப முடியாமல் இருக்க என்ன காரணம் என்பதை கூற இயலுமா? //
குரங்குகுட்டி நம்ம சொந்தகாரர்னு சொல்றது தான்! மதவாதிகளுக்கும் தெரியும் பரிணாமம் உண்மையென்று, மறுமையில் எண்னைய் சட்டி என்று போட்டிருப்பதால் பேச பயப்படுறாங்க!, மறுமையில மட்டுமல்ல இப்போ எண்னைய் சட்டின்னு சொன்னாலும் உண்மையை பேசுறவன் தான் மனுசன்!
பரிணாமம் ஆரம்பமா? நடக்கட்டும் நடக்கட்டும்
//இப்போ எண்னைய் சட்டின்னு சொன்னாலும் உண்மையை பேசுறவன் தான் மனுசன்!//
எண்னெய் சட்டியா ? ஜட்டியா தல ! அந்த டவுட்டுதான் போல
//பரிணாமம் ஆரம்பமா? நடக்கட்டும் நடக்கட்டும் //
நடக்குறதா! அது பிச்சிகிட்டு ஓடுது ஒருபக்கம்!
//நடக்குறதா! அது பிச்சிகிட்டு ஓடுது ஒருபக்கம்!
//
அந்த அட்ரஸ கொடுங்க தல மொதல்ல
//அந்த அட்ரஸ கொடுங்க தல மொதல்ல //
http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_28.html
இந்த அட்ரஸ் தான் தல!
//கடவுள் என்ற கருத்தே படைத்தல்,காத்தல். அழித்தல், என்பதன் மீதே கட்டப்பட்டுள்ளது.படைத்தல் என்ற வேலை கடவுளுக்கு அல்ல பரிணாமத்திற்குதான் என்றால் கடவுள் என்ற கருத்தே பொய்யாகிவிடும் அதனால்தான் மதவாதிகள் அந்த காலத்திலிருந்தே பரிணாமத்தை எதிர்கிறார்கள்.//
முற்றிலும் தவறான புரிதல். தமிழ் மரபின் படி படைக்கும் சக்தி (பிரம்மா), காக்கும் சக்தி (திருமால்), மறு உருவாக்கும் சக்தி (சிவம்) ஆகிய யாவும் பரிணாமத்தின் ஒரு பகுதியே.
பரிணாமமும், தமிழும்
மேலும் ஆதாரங்கள் உள்ளன தேவைப்படில் தர இயலும்
பரிணாமமும் தமிழும் -3
பரிணாமமும் தமிழும் -2
[தொடர்வதற்காக]
//முற்றிலும் தவறான புரிதல். தமிழ் மரபின் படி படைக்கும் சக்தி (பிரம்மா), காக்கும் சக்தி (திருமால்), மறு உருவாக்கும் சக்தி (சிவம்) ஆகிய யாவும் பரிணாமத்தின் ஒரு பகுதியே.
பரிணாமமும், தமிழும்
மேலும் ஆதாரங்கள் உள்ளன தேவைப்படில் தர இயலும் //
பிரம்மா, திருமால், சிவன் கற்பனை பாத்திரமல்ல என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்க மொதல்ல!
//டிஸ்கி 2:பட்டாபட்டி, மங்குணி அமைச்சர், கரிசல்காரன் பின்னூட்டம் இடும் முன் எனக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்!//
எனக்கும் இந்த டிஸ்கி பொருந்துமா?
ஆமா எல்லோரும் பேசி வச்சிக்கிட்டு ஒண்ணா பரிணாமம் பத்தி பதிவு போடுறீங்களா? எதிர்க்குரல் தளத்தில் ஒரு பதிவுக்கு பதில் போட்டு முடிக்கிறதுக்குள்ள, பரிணாமம் பத்தி இவ்வளவு பதிவுகளா?
//முற்றிலும் தவறான புரிதல். தமிழ் மரபின் படி படைக்கும் சக்தி (பிரம்மா), காக்கும் சக்தி (திருமால்), மறு உருவாக்கும் சக்தி (சிவம்) ஆகிய யாவும் பரிணாமத்தின் ஒரு பகுதியே.//
எனில் எந்த உயிரியின் பரிணாமப் பகுதிகள் இக் கடவுளர் கற்பிதங்கள் என்றும் சொன்னீர்களாயின் நலம்
//எதிர்க்குரல் தளத்தில் ஒரு பதிவுக்கு பதில் போட்டு முடிக்கிறதுக்குள்ள, பரிணாமம் பத்தி இவ்வளவு பதிவுகளா? //
நானும் பார்த்தேன், சுலபமாக சொல்ல வேண்டிய விசயத்தை நீட்டி இழுப்பது போல் தெரிந்தது அதான் இந்த பதிவு! இதற்கு டார்வீனும் தேவையில்லை, ரிச்சர்டும் தேவையில்லை இல்லையா!
அன்பின் சகோதரர சகோதரிகளுக்கு,
ஏக இறைவனின் அமைதி நம்மீது என்றென்றும் நிலவட்டுமாக..
பரினாமவியலைப் பற்றி வெறுமனே கதையளந்து கொண்டிருக்காமல் அறிவியல் ஆதாரங்களோடு நிரூபிக்க முன்வர வேண்டும். Micro Evloution and Macro Evloution பற்றியெல்லாம் விளக்க முன்வர வேண்டும். பரினாமவியலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள சகோதரர் ஆஷிக் அஹமதுவின் தளத்திற்கு வரலாமே.
http://ethirkkural.blogspot.com/
/ஏக இறைவனின் அமைதி நம்மீது என்றென்றும் நிலவட்டுமாக..//
ஆமென் !
அன்பின் சேக் தாவூத்!
கேட்டிருக்கும் சுலபமான கேள்விகளுக்கு மறுப்பு சொல்லிவிட்டு, பீட்டர் விடுங்கள், ஒன்பதாவது படிச்ச எனக்கே இம்புட்டு தெரியுதுன்னா நிறைய படிச்ச உங்களுக்கு எம்புட்டு தெரியனும், இருந்தும் இப்படி இருக்கிங்களே!
மரபணு மாற்றம் பரிணாம வளர்ச்சியின் ஆதாரம் என்பது என் வாதம், உங்கள் மறுப்பு என்ன?
//சுலபமாக சொல்ல வேண்டிய விசயத்தை நீட்டி இழுப்பது போல் தெரிந்தது அதான் இந்த பதிவு! //
ஆதாரங்கள் இல்லையென்றார் அவர். ஆதாரங்கள் குறித்து, அறிவியல் ஆய்வு முறைகள் குறித்தும் நிறைய எழுதியதால் நீண்டுவிட்டது.
இன்னொரு பதிவும் இட்டிருக்கின்றார். இங்கே ஆணிகள் அதிகம். பார்ப்போம், நாளையாவது பதிலளிக்கவேண்டும்.
சிவனை சிலுக்கின் பரிணாம வளர்ச்சி எனக் கொள்ளலாமா! தகுதியுள்ளவை வாழும் எனும் கருத்திற்கிணங்க தகவமைந்துவிட்டாரா சிவன் சிலுக்காக!
சபரிநாதன் சொன்னது!
/தவறான புரிதல்!/
தப்பாப் புரிஞ்சுகிட்டதாலதான் இங்கே பரிணாமம் எண்ணெய்ச் ச(ஜ)ட்டியோட பிச்சுகிட்டு ஓடுது!
நீங்க வேற படிப்பாங்கன்னு நம்பி லிங்கெல்லாம் கொடுக்கறீங்க! படிக்கிற பரிணாம வளர்ச்சி வந்துட்டா, வால் காணாமப் போயிடுமே!
@பி.ஏ.ஷேக் தாவூத்
//பரினாமவியலைப் பற்றி வெறுமனே கதையளந்து கொண்டிருக்காமல் அறிவியல் ஆதாரங்களோடு நிரூபிக்க முன்வர வேண்டும்//
நாம் கொடுத்த ஆதாரங்கள் குறித்து நீங்கள் ஏதும் பேசவில்லையே. உங்களுக்கு நான் முன்வைத்த கேள்விகள் அங்கே அப்படியே இருக்கின்றன. பதிலளிக்க முன்வருவீர்கள் என்று நம்புகிறேன்.
//ஆதாரங்கள் இல்லையென்றார் அவர். ஆதாரங்கள் குறித்து, அறிவியல் ஆய்வு முறைகள் குறித்தும் நிறைய எழுதியதால் நீண்டுவிட்டது. //
ஆயிரகணக்கான வருடங்கள் பரிணமிக்கும் ஒரு விசயத்தை ஆதாரம் கேட்டு நிராகரிப்பதை பார்த்தால் சிரிப்பு தான் வருது! நரகத்தை மட்டும் எப்படி பார்க்காமலேயே நம்புறாங்களாம்!
மனிதர்களின் தோற்ற வித்தியாசம், மொழி வித்தியாசம் என ஒவ்வொன்றிற்கும் இருக்கும் தொடர்பை இவ்வளவு எளிமையாக விளக்கியாச்சு! இதுக்கு மேல டைம்மிஷின் செஞ்சு பின்னாடி தான் கூட்டிகிட்டு போகனும்!
//பிரம்மா, திருமால், சிவன் கற்பனை பாத்திரமல்ல என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்க மொதல்ல! //
ஏங்க எங்கிட்ட ஆதாரம் கேட்கறிங்க?! பின்னூட்டத்தை படிங்க சாமி முதல்ல ;)
பிரம்மா, திருமால், சிவன் புராணத்தில் சொல்வது போல தேவர்கள்/மனிதர்கள் போன்ற உயிரிகள் அல்ல. தத்துவங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
தத்துவத்தை விளக்க கதை சொல்ல ஆரம்பித்து தத்துவம் போய் கதை தான் நம் கண் முன் நிற்கிறது.
இப்ப இருக்கிற நிலையில் கதையை மறக்கடிக்கிற வேலை தான் முக்கியம் போல.
//நீங்க வேற படிப்பாங்கன்னு நம்பி லிங்கெல்லாம் கொடுக்கறீங்க! படிக்கிற பரிணாம வளர்ச்சி வந்துட்டா, வால் காணாமப் போயிடுமே! //
படைத்தல், காத்தல், அழித்தல் வேலையை பிரித்து கொடுத்தது யார்!?
அதற்கும் பரிணாமத்துக்கும் என்ன சம்பந்தம்!?
@ smart
//சமீபத்தில் ஒருவர் கேட்டக் கேள்வி அதற்கு நம்ம அணிப் பக்கம் ஒரு பலமான பதிலைக் கொடுங்கள்.//
நாளைக்குள் அங்கே பதிலிடுகின்றேன்.
//பிரம்மா, திருமால், சிவன் புராணத்தில் சொல்வது போல தேவர்கள்/மனிதர்கள் போன்ற உயிரிகள் அல்ல. தத்துவங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.//
தத்துவங்களுக்கு ஏன் உருவம் கொடுத்து வணங்கனும்!?, ஐப்படி வணங்குவதால் என்ன பயன்! காத்தலிலிருந்து அழைத்தல் வரை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதை நீங்கள் எவ்வாறு மாற்ற முயற்சிக்கிறீர்கள்! அழித்தலில் சுனாமி என்ன தத்துவத்தில் வருது?
@ smart
//சமீபத்தில் ஒருவர் கேட்டக் கேள்வி அதற்கு நம்ம அணிப் பக்கம் ஒரு பலமான பதிலைக் கொடுங்கள்.//
நாளைக்குள் அங்கே பதிலிடுகின்றேன். //
இங்கேயே மாஞ்சு மாஞ்சு பதில் சொல்லியிருக்கேன் தல!
//படைத்தல், காத்தல், அழித்தல் வேலையை பிரித்து கொடுத்தது யார்!?
அதற்கும் பரிணாமத்துக்கும் என்ன சம்பந்தம்!? //
யாரும் பிரித்து கொடுக்க தேவையில்லை. படைத்தல், காத்தல், மறு உருவாக்கம் [அழித்தல் அல்ல] அவை பிரபஞ்சத்தின் அடிப்படை வேலைகள்.
இவற்றை பிரபஞ்சம்[பழைய மொழி வழக்கில் பிரம்மம்] தானாகவே செய்யும். அதன் வெவ்வேறு கூறுகளுக்கு வெவ்வேறு பெயர் அவ்வளவு தான்.
படைத்தல், காத்தல், மறு உருவாக்கம் என்பது உயிர்/பொருள் மற்றும் எல்லாவற்றின் சுழற்சிக்கும் அடிப்படை வேலைகள் என்பதால் இவை இல்லாமல் பரிணாமம் என்பதே இல்லை.
//யாரும் பிரித்து கொடுக்க தேவையில்லை. படைத்தல், காத்தல், மறு உருவாக்கம் [அழித்தல் அல்ல] அவை பிரபஞ்சத்தின் அடிப்படை வேலைகள்.//
இவ்விடத்தில் முரண்படுகிறேன்!
முதல் உயிரியே ஒரு விபத்து தான்! ஆர்கானிக் மூலகூறுகள் ஒன்று கூடிய சம்பவம் தான் அதிசியமாக சொல்லலாம், மற்ற அனைத்தும் கோடி கணக்கான வருடங்களாக பின் தொடர்பவை, காத்தலுக்கும், அழித்தலுக்கும் அங்கே தத்துவம் என்று ஒன்று இல்லை!, ஒரு விசயம் புரியவில்லை என்றால் அதை கண்டுபிக்க முனைவது அறிவியல், கடவுள், தத்துவம்னு கதையை மூடி வச்சிகிட்டு போறது சோம்பேறியியல்!
அந்த காலத்துல தெரியாம செஞ்சிட்டு போயிட்டாங்க, இன்னும் அதை கட்ட் அழனுமா?!
//தத்துவங்களுக்கு ஏன் உருவம் கொடுத்து வணங்கனும்!?, //
இது பரிணாமத்திற்கும் & என்னுடைய பதிலுக்கும் சம்பந்தம் இல்லாத கேள்வி இப்போது பதில் சொன்னால் பதிவின் போக்கு மாறிவிடும்.
தனியாக விவாதிக்கலாம் நண்பா
//இவற்றை பிரபஞ்சம்[பழைய மொழி வழக்கில் பிரம்மம்] தானாகவே செய்யும். அதன் வெவ்வேறு கூறுகளுக்கு வெவ்வேறு பெயர் அவ்வளவு தான்.//
உயிரினம்லாம் தோன்றுவதற்கு முன்னாடி பிரபஞ்சம் என்ற வார்த்தை இருந்ததுன்னு சொல்ற மாதிரி இருக்கு!, தானாக செய்ய முடிந்தால் ஏன் பூமியில் மட்டும் உயிரினம் உள்ளது! பூமியின் சுற்றுசூழல் தகவமைப்பு 400 கோடி ஆண்டுகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை!, பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனில் அம்புட்டு இடம் இருக்கு, பிரம்மன் அங்கே ஏன் உயிர்களை படைக்கவில்லை!
//இங்கேயே மாஞ்சு மாஞ்சு பதில் சொல்லியிருக்கேன் தல! //
நான் அவ்வளவு ஆதாரம் கொடுத்தும், Macro Evolution மட்டுமே பரிணாமம் என்பது போல் அவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் சொன்ன விஷயங்கள் தவிர இன்னும் சில விஷயங்கள் அங்கே பேசப்படவேண்டியுள்ளன.
//முதல் உயிரியே ஒரு விபத்து தான்! ஆர்கானிக் மூலகூறுகள் ஒன்று கூடிய சம்பவம் தான்//
இந்த ஆர்கானிக் மூலகூறுகள் சேர்வது ”படைப்பு” என்ற சொல்லால் குறிக்க முடியாதா ?!
இந்த படைப்பை உரு குலையாமல் நடத்திய சக்தி ”காப்பது” ஆகாதா ?!
இந்த படைப்பை அழித்து புதிதாக இன்னொரு படைப்பை செய்வது “மறு உருவாக்கம்” ஆகாதா ?!
பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரியிலிருந்து ஆரம்பித்து இன்று மனிதன் வரை வந்துவிட்டு அதனால் கிடைத்த அறிவியல்ரீதியான நவநாகரீக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே அப்படியெல்லாம் இல்லை எல்லாம் ஆண்டவன் போட்ட பிச்சை என்று யூனிகோடில் எழுதும் மேதைகளுக்கு என்று ஒரு காட்டை ஒதுக்கி அங்கே ஆதாம், ஏவாள் போல வாழ ஏற்பாடு செய்தால் போவதற்கு அவர்கள் தயாரா?
//படைத்தல், காத்தல், மறு உருவாக்கம் என்பது உயிர்/பொருள் மற்றும் எல்லாவற்றின் சுழற்சிக்கும் அடிப்படை வேலைகள் என்பதால் இவை இல்லாமல் பரிணாமம் என்பதே இல்லை. //
படைத்தல் என்பதே தற்செயலாக உருவான செயலாக இருப்பதால், பின்வரும் சுழற்சிக்கு இங்கே வேலையில்லை!, பரிணாமம் என்பது உள்ளது சிறத்தல், மறூஉருவாக்கம் என்பது பிரதி எடுத்தல்!
//பிரம்மன் அங்கே ஏன் உயிர்களை படைக்கவில்லை!
//
சரசுவதிக்கு சைட் ரிசர்வ் பண்ணியாச்சு தல .... டபுல் பெட் ரூம் ... சுவிம்மிங்க் பூல்னு ஒரே அமர்க்களமாம்
//Macro Evolution மட்டுமே பரிணாமம் என்பது போல் அவர் பதிவிட்டுள்ளார். //
இந்த ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழாக்கம் என்ன? அவர் என்ன எதிர்பார்க்கிறார், அதையும் கொடுத்துருவோம்!
//அங்கே ஆதாம், ஏவாள் போல வாழ ஏற்பாடு செய்தால் போவதற்கு அவர்கள் தயாரா?//
தன் மனைவியுடன் போக எவந்தான் பிரியப் படுவான் ! வேற எதுனா நல்ல பிகரா இருந்தா காட்டுக்கு என்ன குருவிக் கூட்டுல கூட குடியிருக்க தயார் தான்
//தானாக செய்ய முடிந்தால் ஏன் பூமியில் மட்டும் உயிரினம் உள்ளது//
தவறான கருத்து. மற்ற உயிரினங்களை மனிதர்களால் இன்னும் கண்டறிய படவில்லை.
http://beforeitsnews.com/news/36926/Stephen_Hawking_Says_Aliens_Are_Dangerous.html
http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking
ஆதாமாக நான் தயார் ஏவாளாக மதுரைப் பொண்ணு தயாரா? என பகிரங்க சவால் விடுகிறேன்
//இந்த ஆர்கானிக் மூலகூறுகள் சேர்வது ”படைப்பு” என்ற சொல்லால் குறிக்க முடியாதா ?!//
பிரபஞ்சம் தோன்றி பலநூறு கோடி ஆண்டுகள் கழித்து அது ஆவதேன், அதுவரை பிரம்மா(என்ற தத்துவம்) தூங்கிகிட்டு இருந்தாரா!?
//இந்த படைப்பை உரு குலையாமல் நடத்திய சக்தி ”காப்பது” ஆகாதா ?!//
உயிரற்ற கல், மண் கூட உருமாறுகிறது, அதன் சூழல் தன்மையை பொறுத்து! அதனை காக்க எந்த தத்துவமும் தேவையில்லை! அவைகளை, அவைகளே தேர்தெடுத்து கொள்கிறன!
//இந்த படைப்பை அழித்து புதிதாக இன்னொரு படைப்பை செய்வது “மறு உருவாக்கம்” ஆகாதா ?! //
மறு உருவாக்கம் என்பதௌ என்னவாக அர்த்த படுத்துகிறீர்கள், ஆக்சிசன் மீண்டும் ஆக்சிசனாக மாறுவது, அல்லது கரியமில வாயுவாக மாறுவதா!?, செய்வது என்றால் அதை செய்ய ஒரு ஆள் இருக்கிறார்கள் என்பதை நம்புகிறீர்கள் என்று தான் அர்த்தம் ஆகிறது!?, ஆகாதா என்பதை விட அதன் தேவை என்னவாக இருக்கிறது என்று தெளிவாக சொல்லுங்கள்!
@வால்
நான் படைப்பவர் பிரமன் என்று சொல்லவில்ல. படைக்கும் சக்தி எதுவாயினும் அதற்கு பெயர் பிரமன் என்கிறேன்.
நீங்கள் வேண்டுமானால் வால் என்ற உங்கள் பெயர் கூட வைத்து அழைத்து கொள்ளுங்கள் ;)
இல்லாவிடில் இங்கு கருத்து பரிமாற்றம் இருக்காது. கும்மி தான் இருக்கும்
//இந்த ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழாக்கம் என்ன? அவர் என்ன எதிர்பார்க்கிறார், அதையும் கொடுத்துருவோம்! //
Micro Evolution - ஒரு உயிரினம் தன் தன்மையை மாற்றி, அதே உயிரினமாக வேறுபட்ட தன்மைகளுடன் நீடிப்பது. உதாரணம்: அலகு மாறிய பறவைகள்.
Macro Evolution - ஒரு உயிரினம் தன் தன்மைகளை மாற்றி இன்னொரு உயிரினமாக மாறுவது. வேறு ஒரு மூதாதையரிடம் இருந்தே மனிதன் மாற்றமடைந்துள்ளான் என்பது Macro Evolution.
//நான் படைப்பவர் பிரமன் என்று சொல்லவில்ல. படைக்கும் சக்தி எதுவாயினும் அதற்கு பெயர் பிரமன் என்கிறேன். //
ஹா ஹா ஹா ! சுப்பிரமணியம் சுவாமி தோத்தாரு உங்க கிட்ட
//தவறான கருத்து. மற்ற உயிரினங்களை மனிதர்களால் இன்னும் கண்டறிய படவில்லை.
http://beforeitsnews.com/news/36926/Stephen_Hawking_Says_Aliens_Are_Dangerous.html
http://en.wikipedia.org/wiki/Stephen_Hawking //
வேறு எங்கும் இல்லை என்று சொல்லவில்லை, ஏன் பூமிக்கு அருகில் இருக்கும் கோள்களில் இல்லை என்று கேட்கிறேன்!
பூமியின் மேல் நேர்ந்த அதிபயங்கர மோதலின் காரணமாக புகை மண்டலம் பூமியை மூடி, சூரிய ஒளி வராமல் செய்தது, எரிமலை வாயில்களால் நிரம்பியிருந்த பூமி குளிர்ந்து இருக்கியது, புகைமூட்டத்தில் ஆக்சிசன், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ஒன்றினைந்து முதல் நீர் உருவாகியது, பல மூலகூறுகள் சேர்ந்து பெருமழை உருவாகியது, புகை மூட்டம் அடங்கிய பின், மீண்டும் ஒளியின் துணையுடன் முதல் நீர் தாவரம் உருவாகியது!
இது நடக்க சாத்தியகூறுகள் இருக்கிற எந்த கிரகத்திலும் உயிர் இருக்கும்! நமக்கு அட்வான்ஸா, பேக்வேர்ட்ஸா என்பது தான் தெரியாது!
@ராஜன்,
எனக்கு கூட லல்லு பிரசாத் யாதவ் தான் ராஜனோ என்று சந்தேகம் வெகு நாட்களாக உண்டு.
[நகைசுவையை விட்டு விட்டால், நான் கூறியதை நிரூபிக்க எத்தணை ஆதாரங்கள் வேண்டும் ராஜன் ?]
//நான் படைப்பவர் பிரமன் என்று சொல்லவில்ல. படைக்கும் சக்தி எதுவாயினும் அதற்கு பெயர் பிரமன் என்கிறேன். //
சக்தி என்று ஒன்று நிச்சயமாக தேவைப்படுகிறது இல்லையா உங்களுக்கு, அது இல்லாமலேயே தான் அந்த விபத்து நட்ந்தது என்கிறேன் நான்! சக்தி என்ர ஒன்று இருக்கு என்றால், அதற்கு முன் அது என்ன செய்து கொண்டிருந்தது, தற்போது யாரை, சீ சீ இல்ல, என்ன செய்து கொண்டிருக்கிறது!
//Micro Evolution - ஒரு உயிரினம் தன் தன்மையை மாற்றி, அதே உயிரினமாக வேறுபட்ட தன்மைகளுடன் நீடிப்பது. உதாரணம்: அலகு மாறிய பறவைகள்.//
ஏன் அம்புட்டு தூரம், கோழியின் கருமுட்டையில் ஆராய்ச்சி செய்த போது முதல் வார கருவில் அதற்கு 17 முதுகெழும்பு நீட்சிகள் இருந்தன!, படிப்படியாக மறைந்து கோழி உருவம் அடைந்தது, அதன் வால் பகுதியில் மரபனு மாற்றம் ஏற்படாமல் இருக்கு மாற்றம் செய்த போது அவை டைனோசரின் உருவம் உள்ள உயிரினமாக வளர்ந்தது!
//Macro Evolution - ஒரு உயிரினம் தன் தன்மைகளை மாற்றி இன்னொரு உயிரினமாக மாறுவது. வேறு ஒரு மூதாதையரிடம் இருந்தே மனிதன் மாற்றமடைந்துள்ளான் என்பது Macro Evolution. //
கண் முன் நமக்கு பரிணாமம் தெரியாததால், இவர்கள் இந்த பிட்டை போடுகிறார்கள், நியாண்டர்தால், ஹோமோஎரக்ட்ஸ் போன்ற பாசில்களையும் அவர்கள் நம்புவதில்லை!, சாத்தியகூறுகளை சிந்தக்க மாட்டேன் என்பவர்களை என்ன தான் சொல்வது!
[நகைசுவையை விட்டு விட்டால், நான் கூறியதை நிரூபிக்க எத்தணை ஆதாரங்கள் வேண்டும் ராஜன் ?] //
கொடுங்க நான் காத்துகிட்டு இருக்கேன்!, ஒரு சக்தியில்லாமல் வர வாய்ப்பில்லை என்பது உங்கள் வாதம், அதை நிறுபிக்க ஆதாரம் கொடுங்க!
//எந்த விதமான சக்தியும் இல்லாமல் சூன்யத்தில் இருந்து பிரபஞ்சம் வந்ததா வால்பையன்?
சற்று நேரத்திற்கு முன் ”முதல் உயிரியே ஒரு விபத்து தான்! ஆர்கானிக் மூலகூறுகள் ஒன்று கூடிய சம்பவம் தான்” என்று வால்பையன் என்ற நண்பர் எனக்கு சொல்லி தந்தார். அவர் சொல்லியது சரியா தவறா ? ;)
அந்த ஆர்கானிக் மூலகூறுகள் தற்போது யாரை, சீ சீ இல்ல, என்ன செய்து கொண்டிருக்கிறது! :))
நான் சக்தி என இங்கே குறிப்பிட்டது பிரபஞ்சத்திற்கு வெளியேயான (supernatural force) சக்தியை குறிப்பிடவில்லை.
பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான தன்மையை தான் குறிப்பிடுகிறேன்.
வால்ஸ்!
தெரிந்தோ தெரியாமலோ உண்மைக்குக் கொஞ்சம் பக்கத்தில் வந்துவிட்டீர்கள்!
உயிர் தோன்றியதே ஒரு விபத்து! தற்செயல் என்று தான் இன்றைய அறிவியலாளர்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள்.
உயிர் என்பதே ஒருவகை ரசாயனக் கூட்டு, அது ஒரு விபத்தாக/தற்செயலாக உருவானது என்பது அவர்களுடைய வாதம்!
தற்செயல் அல்லது விபத்து என்பது நிரந்தரமானது எப்படி? ஒன்றில் இருந்து ஒன்றாக ஒரு தொடர்நிகழ்வாக மேலே மேலே ஏறிச் செல்லும் செயலாக ஆனது எப்படி?
இந்தக் கேள்வியில் இருந்து தான், இரண்டு நேரெதிரான கருத்துக்கள் உண்டாயின!
உண்டு என்று ஒரு தரப்பும் இல்லை என்று ஒரு தரப்பும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Supernatural
//அந்த ஆர்கானிக் மூலகூறுகள் தற்போது யாரை, சீ சீ இல்ல, என்ன செய்து கொண்டிருக்கிறது! :)) //
நேர்மின்னோட்டமும், எதிமின்னோட்டமும் கூடிய மூலகூறுகள் ஒன்றினைந்து ஒரு நியூட்ரானும் சேரும் போது தனிமமாகிறது!, அதுவே நியுக்கிலிஸுடன் சேரும் போது உயிராகிறது!, காந்தவிசையில் புலப்படும் போது டார்க்மேட்டர் மின்னோட்டம் பெருகிறது என தற்போதைய தகவல், போன வருடம் வரை டார்க் எனர்ஜி என்றால் என்னவென்று தெரியாது, மீண்டும் மீண்டும் ஆராயும் போது கண்டுபிடிக்க முடிகிறது! சக்தி, பிரம்மம் என்றால் கடலக்கா தான் விக்கனும்!
என்ன செய்யலாம் ஆராய்ச்சியை தொடரலாமா, இல்ல சக்தி கையில கொடுத்துட்டு நாமளும் புடிச்சிக்கிட்டு தூங்கலாமா!?
//பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான தன்மையை தான் குறிப்பிடுகிறேன். //
அது ஒரு பொருள், மேட்டர் அவற்றின் மேல், கீழ் ஒன்றும் இல்லை! அவைகளை தூக்கி வச்சி கொண்டாடினாலும், மகிழபோவதில்லை, இல்லையென்றால் கவலைப்பட போவதில்லை!, ஆனால் அப்த்தோடு தேடலை நிறுத்தினால் அதற்கு மேல் பிரபஞ்ச அறிவு வளரப்போவதில்லை!
//உண்டு என்று ஒரு தரப்பும் இல்லை என்று ஒரு தரப்பும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருக்கின்றன.//
உண்டு என்பதால் உயிர் தோற்றத்தின் மூலத்தையும், பிரபஞ்ச ரகசியங்களையும் நம்மால் இதற்கு மேல் ஆராய முடியாது என்பது என் கருத்து!
//எனக்கு கூட லல்லு பிரசாத் யாதவ் தான் ராஜனோ என்று சந்தேகம் வெகு நாட்களாக உண்டு.//
அவனது பரிணாமத் தகவமைவு தான் நான் !
//http://en.wikipedia.org/wiki/Supernatural //
http://en.wikipedia.org/wiki/Timemachine
இதுக்கு கூட தான் ஒரு பக்கம் இருக்கு!
இன்னும் ghost, sprit ன்னு அடிச்சு படிச்சிகிட்டே போகலாம்! அவையெல்லாம் சுவராஸ்யம் கூட்டகூடிய கற்பனை கதைகளாக பார்த்தால் தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்! அங்கேயே நின்று கொண்டிருந்தால் என்னாவது!?
//சக்தி, பிரம்மம் என்றால் கடலக்கா தான் விக்கனும்!//
இங்கு அதிகமாக அறிவியலாளர்களின் சைட் ரெபரண்ஸ் செய்திருப்பது யார். ;)
//என்ன செய்யலாம் ஆராய்ச்சியை தொடரலாமா, இல்ல சக்தி கையில கொடுத்துட்டு நாமளும் புடிச்சிக்கிட்டு தூங்கலாமா!? //
இங்கு நான் பின்னூடமிட்டதற்கு காரணம் படைத்தல்,காத்தல், அழித்தல் என்பவறை தவறாக் புரிந்து கொண்டு ஒருவர் பின்னூட்டமிட்டதாலேயே :(
சக்தி பிரமம் என்பது நூற்று கணக்கான வருடங்களுக்கு முன் கண்டறிந்தது. ஒழுங்கான பாதையில் போயிருந்தால் பரிணாமத்தை முன்னரே கண்டறிந்து இருக்கலாம்.
1. கையில கொடுத்துட்டு நாமளும் புடிச்சிக்கிட்டு தூங்கயதாலும்,
2. கண்ணை மூடி கொண்டு இந்த நூல்களுக்கு முன் தோப்புகரணம் போட்டதாலும்,
3. அப்புறம் பகுத்தறிவு கோஷ்டி என்று ஒன்று சேர்ந்து இவற்றை குப்பையில் போட்டதாலும் தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.
மற்றபடி நவீன கண்டுபிடிப்புகளை யார் குறை சொன்னது ?
ஒட்டு மொத்தமாக கும்மி அடித்தால் சத்தம் தான் இருக்கும். சரக்கு இருக்காது :)
//ஒட்டு மொத்தமாக கும்மி அடித்தால் சத்தம் தான் இருக்கும். சரக்கு இருக்காது :)//
தனித் தனியாக அடித்தால் சத்தம் சரக்கு சைட் டிஷ் அனைத்தும் இருக்கும் அல்லவா சகா !
//இரண்டாம் முறை சொல்கிறேன் பின்னூட்டத்தை ஒழுங்காக படிங்க ;)
நான் லிங்க் கொடுத்தது super natural force ஆதரிக்கவில்லை என்பதற்காக
மரண மொக்கை போடாதீங்கப்பா! பைனலா பேசி முடிக்கலாம் ..... நண்பர் சபரி நாதன் நீங்க உயிரின் உருவாக்கம் எப்பிடின்னு சொல்ல வரீங்க .... இயற்க்கை அதன் பேர் சிவன் , பிரம்மன் அப்பிடின்னு மறுபடியும் குச்சி விட்டு நோண்டாதீங்க பிளீஸ் ....
////சக்தி, பிரம்மம் என்றால் கடலக்கா தான் விக்கனும்!//
இங்கு அதிகமாக அறிவியலாளர்களின் சைட் ரெபரண்ஸ் செய்திருப்பது யார். ;)//
நிச்சயமாக நானாக இருக்காது! நான் சுட்டி எல்லாம் கொடுக்க மாட்டேன்!, என் புரிதல் தான் என் பதிவு என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்!
//இங்கு நான் பின்னூடமிட்டதற்கு காரணம் படைத்தல்,காத்தல், அழித்தல் என்பவறை தவறாக் புரிந்து கொண்டு ஒருவர் பின்னூட்டமிட்டதாலேயே :(//
யாருடய புரிதல் தவறென்று விவாதத்தின் முடிவில் தான் தெரியும்! நீங்கள் உங்கள் புரிதலை பகிர்ந்துள்ளீர்கள் அவ்வளவே!
//சக்தி பிரமம் என்பது நூற்று கணக்கான வருடங்களுக்கு முன் கண்டறிந்தது. ஒழுங்கான பாதையில் போயிருந்தால் பரிணாமத்தை முன்னரே கண்டறிந்து இருக்கலாம்.//
எல்லாம் மேலருக்குறவ் பார்த்துகுவான் என்றதும், கீழேயும் ஒருத்தன் இருக்கான் அவனுக்கும் பாதி கொடுன்னு சொன்ன ஜோக் ஞாபகம் வருது! ஆயிரகணக்கான வருடங்களாக புரியாதவைகளை, தன் கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியாததுமான நெருப்பு, மின்னல் போன்றவற்றை பார்த்து மனிதன் பயந்தான், அதற்கு அவன் வைத்த பெயர் சக்தி! பின் வந்த கற்பனாவாதிகள், கடவுள்னு பேர் வச்சி அவருக்கு வேலையெல்லாம் கொடுத்துட்டாங்க! இன்னும் வரைக்கும் அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருந்துக்க வேண்டியது தான்!
//கண்ணை மூடி கொண்டு இந்த நூல்களுக்கு முன் தோப்புகரணம் போட்டதாலும்,//
வேதங்களை தீவிரமாக நம்புகிறீர்கள் போல் உள்ளது, அந்த குரூப் பொழப்பு நடந்த இன்னும் நிறைய சொல்லியிருக்கு, அதுக்கு சேர்த்து தான் அறிவியல் வைக்குது ஆப்பு!
//அப்புறம் பகுத்தறிவு கோஷ்டி என்று ஒன்று சேர்ந்து இவற்றை குப்பையில் போட்டதாலும் தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்//
இல்லையென்றால் மணியடிப்பவன் மற்றவர்கள் மண்டையில் அடிப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! எவனும் அந்த வேதத்தை வைத்து ஆராய்ச்சி செய்யவில்லை! ஆசிரமத்திலும், காஞ்சிபுர கோவிலிலும் பெண்களை வைத்து தான் ஆராய்ச்சி பண்ணினான், சக்தி என்றால் பெண்பால் என்பதால் இருக்கும் போல!
//மற்றபடி நவீன கண்டுபிடிப்புகளை யார் குறை சொன்னது ?//
கண்டுபிடிக்க தான் முடியாது, குறை வேறு சொல்லனுமாக்கும்!
//இரண்டாம் முறை சொல்கிறேன் பின்னூட்டத்தை ஒழுங்காக படிங்க ;)
நான் லிங்க் கொடுத்தது super natural force ஆதரிக்கவில்லை என்பதற்காக //
வெறும் லிங்க் மட்டும் தான் எனக்கு வந்தது! வேறு யாரும் கொடுத்ததா? பின்னூட்டத்தை மிஸ் பண்ணிட்டேனா!
//வெறும் லிங்க் மட்டும் தான் எனக்கு வந்தது! வேறு யாரும் கொடுத்ததா? பின்னூட்டத்தை மிஸ் பண்ணிட்டேனா! //
அதற்கு மேலே நான் இட்ட பின்னூட்டத்தையும் கொஞ்சம் பாருங்க வால்பையன்
//அதற்கு மேலே நான் இட்ட பின்னூட்டத்தையும் கொஞ்சம் பாருங்க வால்பையன்
//
இத்தன பிரச்சனைக்கு இன்னொரு தடவ நீங்களே சொல்லிருங்க
//Sabarinathan Arthanari said...
நான் சக்தி என இங்கே குறிப்பிட்டது பிரபஞ்சத்திற்கு வெளியேயான (supernatural force) சக்தியை குறிப்பிடவில்லை.
பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான தன்மையை தான் குறிப்பிடுகிறேன்.//
பிரபஞ்சத்திற்கு வெளியே வேற ஒன்னு இருக்காக்கும்!
இவையெல்லாம் கடவுளின் கற்பனை பரிணாம வளர்ச்சிகள்!
சக்தி, பிரம்மம், சிவன், கர்த்தர், இயேசு, அல்லா என்று வரிசையாக பொழுப்பு நடந்த தேவைபட்ட பெயர்களின் அதுவும் ஒன்னு!, அவைகள் எவற்றாலும் இதுவரை புமியில் எந்த மாற்றம் நடந்ததற்காக ஆதாரம் இல்லை! சூப்பர்மேன் மாதிரி பறந்து பறந்து அடிப்பதும், ஸ்பைடர்மேன் மாதிரி நூல் விடுவதும் சினிமாவில் தான் முடியும்! அந்த கால சினிமாக்கள் தான் வேத(மத)நூல்கள்!
ராஜன் சொன்னது:
/மரண மொக்கை போடாதீங்கப்பா! பைனலாப் பேசி முடிக்கலாம்!/
இது ஒரு ஆப் அல்லது ஃபுல் மாதிரி அவ்வளவு சுலபமாக முடிக்கிற விஷயமில்லையே!
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நேற்றுச் சொன்னதை இல்லை என்றும், படித்து முடிக்கிற நேரத்தில் ஆமாமென்றும் மாறி மாறி முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது எப்படி ஃபைனலா முடிக்கறதாம்?
என்னுடைய மூத்த சகோதரர்களில் இரண்டாமவர், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அண்ணன் தம்பிகள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தான் தூங்கப் போவோம். ஒரு அண்ணன் என்று மட்டும் இல்லாமல், ஒரு ஆசானாகவும் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில், ஒரு பிரெஞ்சு உயிரியல் பேராசிரியர் எழுதிய ஒரு ஆய்வுப் புத்தகம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது phénomène of man என்பது புத்தகத்தின் பெயர் என்பது நினைவுக்கு வருகிறது.
இந்த நூலில், எப்படி உயிர் தோன்றியது என்பதை மிக ஆழமாகச் சொல்லியிருப்பார். ஒரு செல் என்பதாகத் தொடங்கி அது தன்னைத் தானே இரண்டாகப் பகுத்துக் கொள்வதில் இருந்து பரிணாம வளர்ச்சி எப்படி விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் சொல்லியிருந்தாலும், புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு ஆன்மீகச் சிந்தனையோட்டமே வெளிப்படுவதாக இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.
ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.
சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதன் இந்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். எத்தனையோ விடைகளைப் பார்த்தாயிற்று, ஆனாலும் இந்தக் கேள்விக்கு உண்மையான விடை இன்னமும் கிடைக்கவில்லை. கேள்விகள் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த உலகமும், உயிரும் படைக்கப் பட்டது ஒரு தற்செயலான விபத்து இல்லை. இவைகளைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்தப் படைப்புகளுக்குள்ளும், வெளியிலுமாக பரந்து விரிந்திருக்கிறான். படைக்கப் பட்ட அனைத்திலும் அவனிருக்கிறான்; அது போலவே படைக்கப் பட்ட எல்லாமும் அவனது சரீரமாகவும் இருக்கின்றன. இதை உள்ளே உணர்ந்து ஆன்மீக நெறியாக, கால காலமாக மனிதனுக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.
அறிவியல் ஒரு எல்லைக்குட்பட்ட அளவீடுகளை பயன் படுத்துகிறது,வெளிப்படையாக தெரிபவை மட்டுமே உண்மை என்று சொல்கிறது, நேற்று சரியாக இருந்த அளவீடுகள் இன்று ஏற்புடையதாக இல்லாமல் போய், மறுபடி வேறு ஒரு அளவீடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு புதிய முடிவைச் சொல்கிறது.
http://consenttobenothing.blogspot.com/2009/01/blog-post_20.html
பிரபஞ்சத்தில் எல்லாமே ஏதோ ஒரு விதியின் படிதான் இயங்குகின்றன. அந்த விதிகள் எல்லாம் எப்படி வந்தன?. இயற்கை என்பது என்ன? எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் என்ன?
//படைக்கப் பட்ட எல்லாமும் அவனது சரீரமாகவும் இருக்கின்றன. இதை உள்ளே உணர்ந்து ஆன்மீக நெறியாக, கால காலமாக மனிதனுக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.//
வயசானா அப்படி தான் உணர்த்தப்பட்டது போல தோன்றுமாம்! எல்லாமாவும் இருக்குறவன் யார்? அவன் பேர் என்ன? அவனுக்கு என்ன தான் வேலை? அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான்!?, எந்த கேள்விக்கும் பதில் இருக்காது ஆனா ஒருத்தன் இருக்கான் என்பதை மட்டும் நம்பனும் இல்லையா!?
//பிரபஞ்சத்தில் எல்லாமே ஏதோ ஒரு விதியின் படிதான் இயங்குகின்றன. அந்த விதிகள் எல்லாம் எப்படி வந்தன?. இயற்கை என்பது என்ன? எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் என்ன?
//
அது தான் எம்பெருமானின் திருவிளையாடல் !
//வயசானா அப்படி தான் உணர்த்தப்பட்டது போல தோன்றுமாம்! //
அவ்வ்வ்வ்வ்வ்
//அது தான் எம்பெருமானின் திருவிளையாடல் ! //
சிவாஜி நடிச்ச படம் தானே அது?
ஆரம்பம் என்று ஒன்று இல்லாமல் இல்லை, அதை தெரிந்துகொள்வதை விட்டுவிட்டு ஒருத்தன் இருக்கான், சக்தி இருக்குன்னு சொல்லிகிட்டே இருந்தா அந்த ஒருத்தன் வந்து தீர்க்க போறானுக்கும் பிரச்சனையை!
சரி பிரபஞ்சம் உருவாக அந்த ஒருத்தன் காரணமென்றால் அந்த ஒருத்தன் உருவாக யார் காரணம், அந்த ஒருத்தன் சுயம்புவாக இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த பிரபஞ்சம் சுயம்புவாக இருக்கக்கூடாது!?
//எல்லாமாவும் இருக்குறவன் யார்?//
ஹா ஹா ஹா
//அவன் பேர் என்ன?//
பிலால் !
// அவனுக்கு என்ன தான் வேலை?//
பைக் ஓட்டுவது , ஊட்டி விடுவது
/ அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான்!?,//
சரக்குதான்
// எந்த கேள்விக்கும் பதில் இருக்காது ஆனா ஒருத்தன் இருக்கான் என்பதை மட்டும் நம்பனும் இல்லையா!? //
வாழ்க்கைங்கற சரக்கே நம்பிக்கைங் கர சைட் டிஷ நம்பித்தான் தல இருக்குது !
//சிவாஜி நடிச்ச படம் தானே அது?//
ஆமா தல ! செம ரவுசா இருக்கும்
/எல்லாமாவும் இருக்குறவன் யார்?//
ஹா ஹா ஹா
//அவன் பேர் என்ன?//
பிலால் !
// அவனுக்கு என்ன தான் வேலை?//
பைக் ஓட்டுவது , ஊட்டி விடுவது
/ அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான்!?,//
சரக்குதான்//
பாவம் தல பிலால், பார்த்தா ரத்தகண்ணீர் விடுவான்!
ராஜன் சொன்னது:
///வயசானா அப்படி தான் உணர்த்தப்பட்டது போல தோன்றுமாம்! //
அவ்வ்வ்வ்வ்வ்
இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
@வால், @ராஜன்,
//என் புரிதல் தான் என் பதிவு என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்//
என் சொந்த புரிதல் வைத்தெல்லாம் நான் கருத்து சொல்வதில்லை. அறிஞர்களின் நூலை படித்து தான் சொல்வேன்.
//மனிதன் பயந்தான், அதற்கு அவன் வைத்த பெயர் சக்தி! பின் வந்த கற்பனாவாதிகள், கடவுள்னு பேர் வச்சி அவருக்கு வேலையெல்லாம் கொடுத்துட்டாங்க! //
ஏங்க லிங்க் கொடுத்தாலும் படிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி? நீங்க சொன்ன விளக்கம் 2000 வருடங்களுக்கு முன்னாடி.
புத்தர் வந்து கடவுள் என்று தனியாக இல்லைன்னு விளக்கியது எப்ப தெரியுமா ?
இந்த அடிப்படையில் ஏற்பட்ட சித்தாந்தம் தான் படைத்தல்.. முதலான விளக்கங்கள்.
//வேதங்களை தீவிரமாக நம்புகிறீர்கள் போல் உள்ளது//
புராணங்கள் கதைகள் தான் என்று சொல்லியதற்கு பின்னும் இப்படி ஒரு சந்தேகமா ? அட கொடுமையே.
எந்த கருத்திற்கும் பின்னாலான சரியான உண்மையை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.
//எவனும் அந்த வேதத்தை வைத்து ஆராய்ச்சி செய்யவில்லை!//
அதான கொடுமையே. பிறகு திருமந்திரம், நாநாசீவவாத கட்டளை போன்றவை தூய தமிழ் நூல்கள் [ ஒரு தகவலுக்கு ;)) ]
இப்போது இருக்கும் பரிணாம கொள்கையை முன்னரே தமிழ் நூல்கள் விளக்குகின்றன என்பதே நான் கூற வருவது
//இப்போது இருக்கும் பரிணாம கொள்கையை முன்னரே தமிழ் நூல்கள் விளக்குகின்றன என்பதே நான் கூற வருவது//
“இப்போது இருக்கும் பரிணாம கொள்கையை ஒத்த கருத்தையே”
என புரிந்து கொள்ளுங்கள்
//சரி பிரபஞ்சம் உருவாக அந்த ஒருத்தன் காரணமென்றால் அந்த ஒருத்தன் உருவாக யார் காரணம், அந்த ஒருத்தன் சுயம்புவாக இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த பிரபஞ்சம் சுயம்புவாக இருக்கக்கூடாது!? //
பிரபஞ்சத்தின் ஆரம்ப புள்ளி என்பது சுயம்பு. அதனுள் சக்தி இருந்தது. அதனில் இருந்தே அனைத்தும் வெளிப்பட்டது என்பது தான் நான் கொடுத்த லிங்கில் இருப்பது. இடுகையை படிங்க சாமிகளா.
கண்ணை கட்டுது.
//என் சொந்த புரிதல் வைத்தெல்லாம் நான் கருத்து சொல்வதில்லை. அறிஞர்களின் நூலை படித்து தான் சொல்வேன்.//
அதிக பட்ச சாத்தியகூறுகள் இருக்கான்னு ஆராய நமக்கு கடமையும், உரிமையும் இருக்கு, மீண்டும் ஒரு பெருவெடிப்பு நிகழ்த்தி பார்க்க ஆசைபடுவது அதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக இருப்பதால் தான், உங்களுக்கும் நிறுபிக்க வாய்ப்பு உண்டு!
//ஏங்க லிங்க் கொடுத்தாலும் படிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி? நீங்க சொன்ன விளக்கம் 2000 வருடங்களுக்கு முன்னாடி.
புத்தர் வந்து கடவுள் என்று தனியாக இல்லைன்னு விளக்கியது எப்ப தெரியுமா ?
இந்த அடிப்படையில் ஏற்பட்ட சித்தாந்தம் தான் படைத்தல்.. முதலான விளக்கங்கள்.//
புத்தருடய காலமும் கிமு தான்! அதற்கு முன்னரே பலர் இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கு தோன்றாதது புத்தருக்கு தெரிந்ததன் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்!, அதற்கு முன்னர் இருக்கும் ஆரிய வேதத்திலே சக்தி ஒன்றே என்ற கிறுக்கல்களும் இருக்கின்றன, புத்தருக்கு பிறகு தான் புத்தமதம் என்றாலும் அவருக்கு நிச்சயமாக இந்துமதம் தெரிந்திருக்கும், கடவுள், படைப்புவாத கொள்கைகள் அதற்கு முன்பிருந்தே இருக்கின்றன, ஆபிரஹாம மதங்களீன் தோற்ற வரலாறு 5000 வருடங்கள் இருக்கும் என்கிறது வரலாறு!
//எந்த கருத்திற்கும் பின்னாலான சரியான உண்மையை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.//
உண்மை என்று உறுதிபடுத்தி கொள்ள சாத்தியகூறுகளை ஆராயுமாறு கேட்கிறேன்! செத்துபோயிருவோமோன்னு பயந்துகிட்டு சக்தியை வணங்குவாதால் நீங்கள் சாகாமல் இருக்கப்போவதில்லை, வேதத்தின் தேவை, அது நிலைகொள்ள இருந்த காரணங்களை ஆராயுங்கள்!
//அதான கொடுமையே. பிறகு திருமந்திரம், நாநாசீவவாத கட்டளை போன்றவை தூய தமிழ் நூல்கள் [ ஒரு தகவலுக்கு ;)) ]
இப்போது இருக்கும் பரிணாம கொள்கையை முன்னரே தமிழ் நூல்கள் விளக்குகின்றன என்பதே நான் கூற வருவது //
கல்லாகி, மண்ணாகின்னு எதுகை மோனஒ போட்டு பாட்டு எழுதுவது ஒரு மேட்டரா!?, பரிணாம கொள்கையை தமிழ்நூல்கள் சொல்லியுள்ளது என்பதற்கான குரைந்த பட்ச ஆதாரங்கள் கூட இல்லை, அதற்கு காரணம் சக்தி என்ற ஒன்று உண்டு என்பதற்கு!
சபரிநாதன்!
/“இப்போது இருக்கும் பரிணாம கொள்கையை ஒத்த கருத்தையே”
என புரிந்து கொள்ளுங்கள் /
ஆரம்பமுதலே இது தான் தகராறு!
டார்வினுடைய பரிணாமவியலை கிருத்தவத் திருச்சபை நிராகரித்தது என்றால், அதுபோலவே உலகம் முழுவதும் இருக்கும் என்ற நினைப்பிலேயே பேசிக் கொண்டிருப்பது தான் முதல் பிரச்சினையே!
இங்கே இந்தியத் தத்துவ மரபில் உயிர்கள் தோன்றிய விதத்தை, படிப்படியாக உணர்வு நிலைகள் அறிவு நிலைகளாகக் கூடிக் கொண்டே போய்ப் பரிணாம வளர்ச்சி சொல்லப் பட்டிருப்பதும், இதுவுமே முழுமையான நிலை அல்ல, இடைப்பட்ட நிலைதான் என்பதும் இங்கே பல இடங்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
மிருகவுணர்வுகளுடன் கூடிய மனித உடல், அறிவு என்ற நிலையிலேயே தற்காலத்திய மனிதனுடைய நிலை குறிக்கப் படுகிறது.
மிருகவுணர்வுகளில் இருந்து முழுமையாக விடுபட்டு, மேல்நிலைக்குச் செல்ல வேண்டிய இடைப்பட்ட நிலையில் இருக்கிறோம்!
தெய்வம் என்பது வேறெங்கோ இல்லை! வேறு எவரும் இல்லை!நம்மிடம் ஏற்படவேண்டிய பண்புமாற்றம் தான் அப்படி ஒரு விழுமியமாக சொல்லப் படுகிறது.
//பிரபஞ்சத்தின் ஆரம்ப புள்ளி என்பது சுயம்பு. அதனுள் சக்தி இருந்தது. அதனில் இருந்தே அனைத்தும் வெளிப்பட்டது என்பது தான் நான் கொடுத்த லிங்கில் இருப்பது. இடுகையை படிங்க சாமிகளா.//
அதான் இங்கேயே சொல்லிடிங்களே!
ஒளி என்பது பொருளா? அதை பொருளாக சமைக்க முடியுமா, சக்தி என்பதே ஒளியின் ஆரம்பம் தான் தெரியுமா!?
//தெய்வம் என்பது வேறெங்கோ இல்லை! வேறு எவரும் இல்லை!நம்மிடம் ஏற்படவேண்டிய பண்புமாற்றம் தான் அப்படி ஒரு விழுமியமாக சொல்லப் படுகிறது. //
இது கடவுளின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி!, ஆனால் பண்புமாற்றம் என்பது ஏற்புடய கருத்து, அதில் கடவுள் என்ற பெயர் இருப்பதால் உதைக்கிறது, அதை தான் நாங்கள் மனிதநேயம் காப்போம் என்கிறோம்!
//பரிணாம கொள்கையை தமிழ்நூல்கள் சொல்லியுள்ளது என்பதற்கான குரைந்த பட்ச ஆதாரங்கள் கூட இல்லை//
ஏங்க லிங்க படிச்சிங்களா இல்லையா?
அது தமிழ் நூல் இல்லையா ? /
அது பரிணாமத்தை சொல்ல வில்லையா ?
திருமந்திரம் ”சருவ சிருட்டி” எனும் பகுதியில் 30 செய்யுள்கள் இருக்கின்றன
சருவ சிருட்டி - பிரபஞ்ச உருவாக்கம்
//ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே. //
பொருள்: பிரபஞ்சம் தோற்றமும் முடிவும் இல்லாதது.
இதை போல சொன்ன நூல்கள்
1. திருமந்திரம் http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10209&padhi=%20&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
2. நாநாசீவவாத கட்டளை
http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post_17.html
[நான் 3 பகுதிகள் தான் வெளியிட்டு இருக்கிறேன் இன்னும் நிறைய இருக்கிறது]
3. நிஜானந்த போதம்
[கிடைக்கவில்லையெனில் மின்னாக்கம் செய்கிறேன்]
தயவு செய்து இப்பக்கங்களில் இருக்கும் அதன் மூல செய்யுள்களை படித்துவிட்டு பரிணாமம் இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள்.
இவை ஆயிரக்கணக்கான வருடங்களாக மரபில் இருக்கின்றன.
எளிமையான தமிழ் படுத்தியிருந்தால் சுட்டி கொடுங்கள், எனக்கு அம்புட்டு அறிவு கிடையாது!
//நாநாசீவவாத கட்டளை//
பிக் பேங்க் தியரியுடன் ஒத்ததாக அமையும் http://ssscott.tripod.com/BigBang.html
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு தத்துவம் இருந்தது. அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சி அதுவே (ஒன்றே ஒன்று இருந்ததால் ). இப்பிரமத்தின் உள்ளார்ந்த தன்மையாக சக்தி இருந்தது.
(உவமை:நெருப்பினுடைய சூடு போல) ஆரம்பத்தில் அதன் சக்தி வெளிப்படாமல் அடங்கி இருந்தது. அதன் பெயர் சுத்த பிரமம்.(1)
இரண்டாம் நிலையாக சக்தியானது ப்ரமத்தை முழுவதும் நிரம்பி இருக்கும் போது அப்பிரமத்தின் பெயர் பர பிரமம்.(2)
இது விரிந்து இன்றைய அனைத்து விதமான பொருள்களாகவும் வந்தது என்கிறது அந்நூல்.
அன்பான நண்பர் திரு வால்,
பரிணாமம் பற்றி மறுபடியும் எழுதுவதற்கு வாழ்த்துகள்!
இதை சரியாக புரிந்து கொள்ளாத பலர் கதை விட ஆரம்பித்து விடுவார்கள், அதாவது தசாவதாரம் பரிணாம கொள்கையை சொல்லுகிறது, பைபிள் படி நோவா காலத்திதான் மிருகங்கள் எல்லாம் அழிந்தன, குரானில் சொல்லுவது போல ஆறு நாட்களில் உலகம் கட்டப்பட்டது போன்றவைகளை! (இங்கே பின்னூட்டம் இடும் திரு சபரிநாதன் என்ற நண்பர் போல). இதை எல்லாம் பொருட்படுத்தாது (இதுல அண்ணன் திரு கோவி கண்ணன் வேறு வந்து தன திருவாய் மலர்ந்து விட்டு போய் இருக்கிறார்) பரிணாமம் என்பதை ஒரு controversy இல்லை, புவி ஈர்ப்பு போல உண்மையானது என்று யார் எழுதினாலும் அவர்களுக்கு எனது சப்போர்ட்!!
இருந்தாலும் சில விடயங்களை உங்களுக்கு சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது!
மறுபடியும் சொல்லுகின்றேன் Theodosius Dobzhansky சொல்லியது போல " Nothing in biology makes sense when not seen in the light of evolution"! இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், உங்கள் பரிணாம புரிதல் ஒரு முக்கிய பரிமாணத்திற்கு வர மறுக்கிறது! கடைசியில் அதற்க்கு வருவோம்!
முதலில், நீங்கள் எழுதியதில் சிலவற்றில் விமர்சனம்!
// ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!//
டார்வினை வைத்துதான் Evolution by Natural selection எனும் கோட்பாட்டையே விளக்கவேண்டும்! அதில் சிறு பிள்ளை தனம் ஒன்றும் இல்லை, நீங்கள் என்ன அர்த்தத்தில் அதை சொல்லி இருந்தாலும் ! கூடவே, Alfred Russel Wallace அவர்களையும் சேர்க்க வேண்டும்! நான் முன்னரே கூறியதுபோல பரிணாமம் என்பதை
உலகுக்கு முதலில் வலியுரித்தியவர் டார்வின் மற்றும் வாலேசு மட்டும் அன்று. Jean Baptiste Lamark போன்ற சிலரும் பரிணாமத்தை பற்றி டார்வினுக்கு சுமார் நூறு வருடங்கள் முன்னரே சொன்னார்கள்! டார்வினும் வாலேசும் சொன்னது "Natural selection" அதாவது "இயற்க்கை தேர்வு" என்ற பரிணாமத்தின் வழி முறையாகும்! சொல்லவருவது, டார்வினின் genious பாரிணாமம் பற்றி சொன்னதற்காக இல்லை! அது இயற்க்கை தேர்வு மூலமே நடை பெறுகிறது என்று
கண்டுபிடுத்த சொன்னதற்காகவே! இப்பொழுது நான் சொல்லவந்தது, அறிவியல் கண்டுபிடிப்பெல்லாம் இந்த அளவிற்கு வந்த பின்னர், இந்நாளில் பரிணாமத்தை, " The new Synthesis" என்று கூறுவார்கள்! அதாவது, டார்வினியன் பரிமாணம், கிரெகோர் மெண்டல் (Gregor Mendel) என்ற போலந்து பாதிரி
கண்டு பிடித்த genetic variation in single species ( கிரெகோர் மெண்டல் செடி விதைகளில் ஒவ்வொரு விதையும் வெவ்வேறு நிலைகளில் எப்படி மாறுகிறது
என்பது மூலம் இதை செய்து, விரிவாக எழுதி வைத்தார், ஆனால் இது நடந்தது டார்வினுக்கு தெரியாது, தெரிந்திருந்தால், அவரின் missing piece of the puzzle இற்கு அப்பொழுதே விடை கிடைத்திர்க்கும்) உடன் கலந்து இப்பொழுது நாம் எல்லோரும் புரிந்து கொள்ளும் மரபணு மாற்றங்களால் உண்டாகும் உருவ மருவுதல் அல்லது பரிணாமத்தில் வந்து முடிகின்றது! இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், நீங்கள் பரிணாமத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான்!
//பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!,//
என்னை பொறுத்தவரை இது சரியான சொல் இல்லை! இதில் சிறத்தல் (நீங்கள் சிறந்தது என்று பொருள் படுவதாக புரிந்து கொள்ளுகின்றேன்) என்பதே
கிடையாது! The Best adaptation to survive in the prevailing environment மற்றும் the best posture or built or attraction for sexual selection மட்டுமே வெல்லும்!
// தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை//
முழு விளக்கம் இல்லை இது! உருவ மாற்றம் மட்டும் இல்லை பரிணாமம் என்பது! இதை பிறகு விளக்குகின்றேன்.
//மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது!//
Completely wrong. You need to educate yourself more in genetics.
மேலும் பேசுவோம்!
நன்றி
@வால்,
இன்னும் நிறைய படிக்க ஆரம்ப முனையாக விவாதம் இருந்தது.
தற்போது படித்து கொண்டு இருப்பது.
http://ssscott.tripod.com/BigBang.html
http://articles.adsabs.harvard.edu/full/seri/ApJ../0142//0000418.000.html
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://www.hope-of-israel.org/relativi.htm
//Einstein, like many other powerful intellects through the centuries, ruled out the existence of a personal God. //
//This fanciful hypothesis provides the basis for Hawking's widely quoted statement, "The universe would not be created, not be destroyed; it would simply be. What place, then, for a Creator?" It is the basis, to, for New Agers' and atheists' claims that according to science a personal Creator-God need not be the agency for the origin of the universe.//
ஆச்சரியமான தகவல்கள். படித்தவுடன் பிறகு விவாதிக்கலாம்
நன்றி
ப்ரம்மம், ப்ரபரம்மம் என்பதை அனுமானமாக ஒதுக்காமல் அவைகளை விவாதத்தில் எடுத்து கொள்ளலாம், அவைகளுக்கு சூட்டிய பெயர்கள் தானே அது!, சூரியனே ஆதாரமாக இருப்பதால் முதலில் ஒளியற்ற வெளியும் பின் ஒளியுள்ள வெளியும் உருவாகியதாக அர்த்தம் கொள்ளலாம்!
நீர் ஆவியாகி, பின் மேகமாகி, மீண்டும் மழையாகி நடக்கும் சுழற்சியை பார்ப்பவர்களுக்கு அதன் மூலம் என்னவென்று யோசிக்கையில் இது தோன்றியிருக்கலாம், இவைகளையும் விவாதத்தில் எடுத்து கொள்ளலாமே தவிர இவற்றிக்க்கு இறுதி முடிவு கொடுக்க முடியாதே!
//ஆச்சரியமான தகவல்கள். படித்தவுடன் பிறகு விவாதிக்கலாம்//
எதாயிருந்தாலும் தமிழ்ல திட்டுங்க!
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நோ!
டார்வீனும், டாக்கின்ஸும் பரிணாமத்திற்கு வேண்டும் தான், ஆனால் ஒரு சாமான்யன் பார்வையிலேயே பரிணாம அப்பட்டமாக விளக்க முடிகிறது, அது பாமரனுக்கு புரியும் வகையில் தான் இருக்கு என்பதற்காக தான் எனது பார்வையில் பரிணாமம், பின்வரும் தொடர்களில் நிச்சயமாக அனைவருடய கருத்துகளும் மாற்று கருத்துகளும் அலசப்படும்!
//எதாயிருந்தாலும் தமிழ்ல திட்டுங்க! //
//Einstein, like many other powerful intellects through the centuries, ruled out the existence of a personal God. //
ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேடிவிடி கண்டுபிடித்தவுடன் பாதிரிகள் மக்களிடம் போய் கடவுளை ஐன்ஸ்டீன் கண்டு பிடித்து விட்டதாக பிரச்சாரம் செய்தனர்.
ஐன்ஸ்டீன் நான் கண்டுப்டித்த கடவுள் தேவனோ மனிதனோ அல்ல என்று அவர்களுக்கு ஆப்பு வைத்தார் :) [நான் மேலே பின்னூட்டமிட்டதும் அவ்வாறே]
//This fanciful hypothesis provides the basis for Hawking's widely quoted statement, "The universe would not be created, not be destroyed; it would simply be. What place, then, for a Creator?" It is the basis, to, for New Agers' and atheists' claims that according to science a personal Creator-God need not be the agency for the origin of the universe.
ஹாவ்கிங் பிரப்ஞ்சம் யாராலோ உண்டாக்க பட்டது அல்ல. அழிக்க படவும் முடியாது. அது இருந்து கொண்டே இருக்கும். உருவாக்குவருக்கு (மனிதனோ / தேவனோ) என்ன வேலை ? என்று கேட்டார். [திருமந்திரத்தின் முதல் செய்யுள்]
இவர்கள் மனித நாகரீகத்தின் சிறந்த மேதைகள்: [ஒரு தகவ்லுக்காக :))]
திட்டவெல்லாம் இல்லைங்க
முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன்.
//[திருமந்திரத்தின் முதல் செய்யுள்]//
ஆக திருமந்திரம் தான் கட்டிபோட்ருக்கு, சில விசயங்கள் விஞ்ஞானத்துடன் ஒத்து போவதால் அதை திரு போட்டு அழைக்க சொல்லுது, இதே கதை தான் குரானுக்கும்!, முதல் செய்யுள் என்னான்னு சொல்லுங்க!
////ஆதியோ டந்தம் இலாத பராபரம்//
பராபரம்-எங்கும் நிறைந்த பிரபஞ்சம்
//திருமந்திரம் தான் கட்டிபோட்ருக்கு, சில விசயங்கள் விஞ்ஞானத்துடன் ஒத்து போவதால் அதை திரு போட்டு அழைக்க சொல்லுது//
ஏங்க 10 வரி பின்னூட்டத்தில் 1 வரி மட்டும் உங்களுக்கு தனித்து தெரியுது ;)
நான் அதை கூறிப்பிட காரணம் அறிஞர்களின் கருத்துக்கள் தற்செயலாக முன்னர் நான் கூறிய கருத்துக்களுடன் ஒத்து போவதால் தான்.
//இதே கதை தான் குரானுக்கும்!, முதல் செய்யுள் என்னான்னு சொல்லுங்க!//
ஓரலு ஒன்னு அங்கிருக்கு ஒலக்க ஒன்னு இங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே
////ஆதியோ டந்தம் இலாத பராபரம்//
பராபரம்-எங்கும் நிறைந்த பிரபஞ்சம் //
அங்கே பலாபழம் என்று இருந்தாலும் நீங்க அதை பிரபஞ்சம் என்று தான் சொல்விங்கன்னு குழந்தைக்கும் தெரியும்!, தொடக்கும், முடிவும் இல்லாத பிரபஞ்சம் என்ற சொல் சரியானதல்ல, ஒவ்வொன்று தனிதினியாக ஆயுளை கொண்டுள்ளது கால அளவு மட்டும் மாறலாம்!, ஹாவ்கிங் சொன்னது அனைத்தும் சரியாக தான் இருக்க வேண்டும் என்பது சரியான வாதமல்ல!, தற்பொழுது பிரபஞ்சத்தில் நெபுலா மூலம் புது புது நட்சத்திரங்கள் உருவாகின்றன, அதே போல் சில லட்சம் கோடி வருடங்களில் அதற்கு முடிவும் உண்டு!, ஆக தொடக்க ஆதி ஒன்று நிச்சயம் உள்ளது, இப்போ தெரியல, அதுக்காக திருமந்திரத்தை துணைக்கு அழைக்க கூடாது!
//நான் அதை கூறிப்பிட காரணம் அறிஞர்களின் கருத்துக்கள் தற்செயலாக முன்னர் நான் கூறிய கருத்துக்களுடன் ஒத்து போவதால் தான்.//
உலகம் தோன்றிய தற்செயல் போலவே அதையும் பார்க்கலாம்னு சொல்றிங்களா?
//நெபுலா மூலம் புது புது நட்சத்திரங்கள் உருவாகின்றன, அதே போல் சில லட்சம் கோடி வருடங்களில் அதற்கு முடிவும் உண்டு//
ஏங்க மனிதர்கள் கூட தான் பிறந்து சாகிறோம் என்று சொல்லாமல் விட்டீர்களே :))
நட்சத்திரம், மனிதர்கள் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான். பிரபஞ்சம் அல்ல.
//ungala yarachum kutha poranga...
//
அஜ்ஜிமா ! செல்ல புஜ்ஜிமா
//நட்சத்திரம், மனிதர்கள் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான். பிரபஞ்சம் அல்ல. //
நானும் பிரபஞ்சம் என்பது வேண்டுமானல் காமெடியாக தெரியலாம், நான் சொன்னது நட்சத்திரங்களை தான் கோள்களை கூட அல்ல! சில நட்சத்திரங்கள் நூற்றுகணக்கில் கோள்கள் கொண்டுள்ள்ன, அவைகளின் பிறப்பும் இறப்பும் பிரபஞ்ச ஆராய்ச்சியில் மிக முக்கியமானது
//அஜ்ஜிமா ! செல்ல புஜ்ஜிமா //
யார்யா வந்து ரத்த பூமியில பஜ்ஜி விக்கிறது!
//அங்கே பலாபழம் என்று இருந்தாலும் நீங்க அதை பிரபஞ்சம் என்று தான் சொல்விங்கன்னு குழந்தைக்கும் தெரியும்!//
நீங்க வேண்டுமானால் நம்ப முனைவர் குணா கிட்ட கேட்டு பாருங்க, பராபரம் என்றால் நேரடி பொருள் என்ன என்று. இதற்கு மேல் நான என்ன சொல்வது :)
//யார்யா வந்து ரத்த பூமியில பஜ்ஜி விக்கிறது!//
யோவ் ! உண்ட்ட வந்து எதுனா பிரச்சன பன்னினமா நாங்க ! நீ பாட்டுக்கு மொக்கயப் போடு நாம்பாட்டுக்கு பொண்ணப் போடறேன்
//நாம்பாட்டுக்கு பொண்ணப் போடறேன்//
தன்னிலை விளக்கம்
( பாப்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க )
நான் பொன்னுகிட்ட மொக்கயப் போடறென்னு சொல்ல வந்தேன்
//நீங்க வேண்டுமானால் நம்ப முனைவர் குணா கிட்ட கேட்டு பாருங்க, பராபரம் என்றால் நேரடி பொருள் என்ன என்று. இதற்கு மேல் நான என்ன சொல்வது :) //
அது பிரபஞ்சம் என்றே இருக்கலாம்!
யாமறியோம் ”பராபரே” என்ற சொல்லும் அதே அர்த்தத்தை தான் தருதுன்னு மட்டும் சொல்லிறாதிங்க!
//அதே அர்த்தத்தை தான் தருதுன்னு மட்டும் சொல்லிறாதிங்க!
.//
ஹா ஹா ஹா ! அததான் கண்டிப்பா சொல்லுவாரு பாருங்க
//முனைவர் குணா கிட்ட கேட்டு பாருங்க//
” அபிராமி அபிராமி “ குணாவா !
//அதே அர்த்தத்தை தான் தருதுன்னு மட்டும் சொல்லிறாதிங்க!
.//
ஹா ஹா ஹா ! அததான் கண்டிப்பா சொல்லுவாரு பாருங்க //
எது தல பலாபழம்னா!
அவரு ஆளைகாணோமே, எனக்கும் தெரிஞ்சிக்க ஆர்வமா தான் இருக்கு
//முனைவர் குணா கிட்ட கேட்டு பாருங்க//
” அபிராமி அபிராமி “ குணாவா ! //
எதுக்கு தல ரெண்டு அபிராமி, அவரு பாவம் ஒண்ணுக்கே வழியில்லாம இருக்காரு!
எதிர் விவாதம் நடத்த நேரம் இல்ல இதுல நறைய சந்தேகம் இருக்கு...
//எதிர் விவாதம் நடத்த நேரம் இல்ல இதுல நறைய சந்தேகம் இருக்கு...//
நேரம் இருக்கும் போது வாங்க தல, விவாதிக்க ரெடியா இருக்கேன்!
//எதிர்க்குரல் தளத்தில் ஒரு பதிவுக்கு பதில் போட்டு முடிக்கிறதுக்குள்ள, பரிணாமம் பத்தி இவ்வளவு பதிவுகளா? //
//ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கோட்பாடு இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. //
என்ன கொடுமைங்க இது ? இப்ப தான் பார்த்தேன். ஆப்ரிக்க கருப்பினத்தவரை அடிமையாக்கிய ஐரோப்பியரும், அரபுக்களும், சாதி வளர்த்த இந்தியர்களும் டார்வின் கொள்கை படித்து தான் செய்தார்கள் போல ;)
ஆனால் அடிமைதனம் மட்டும் 1000 வருடங்களாக இருக்கிறது ;))
இப்படியெல்லாம் பதிவு போட்டா விளங்கிரும்.
மனுசனுக்கு அடுத்தவனை சுரண்டனும்னு வெறியெடுத்தா எதை வேணா சொல்லி செய்வாங்க. இதுல டார்வின் எங்க வந்தார் ?
//////ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! ///////
மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
////இங்கு நான் பின்னூடமிட்டதற்கு காரணம் படைத்தல்,காத்தல், அழித்தல் என்பவறை தவறாக் புரிந்து கொண்டு ஒருவர் பின்னூட்டமிட்டதாலேயே :(//
//கடவுள் என்ற கருத்தே படைத்தல்,காத்தல். அழித்தல், என்பதன் மீதே கட்டப்பட்டுள்ளது.படைத்தல் என்ற வேலை கடவுளுக்கு அல்ல பரிணாமத்திற்குதான் என்றால் கடவுள் என்ற கருத்தே பொய்யாகிவிடும் அதனால்தான் மதவாதிகள் அந்த காலத்திலிருந்தே பரிணாமத்தை எதிர்கிறார்கள்.//
இங்கு 4மணி நேரம் மின்சாரம் இல்லை அத்ற்குள் வண்டி எவ்வளவு தூரம் போயிடுச்சி..
படைத்தல் இயற்கையாக நடக்கிறது அதுதான் பரிணாமம் என்றார் டார்வின்
ஆனால் மேலே ஒருவன் அமர்ந்து கொண்டு அவன் எல்லாவற்றைவும் செய்கிறான் என்கிறது மதங்கள் இதில் எது சரி என நீங்கள் சொல்லுகிறீர்கள்..? மதங்கள் சொல்லுவது சரி எனில் அறிவியல் ஆதாரங்கள் கொடுங்கள்? நம்பும்படி
அட்டகாசமான பதிவு தல.. :-)) தொடர்ந்து எழுதுங்கள்..
//முற்றிலும் தவறான புரிதல். தமிழ் மரபின் படி படைக்கும் சக்தி (பிரம்மா), காக்கும் சக்தி (திருமால்), மறு உருவாக்கும் சக்தி (சிவம்) ஆகிய யாவும் பரிணாமத்தின் ஒரு பகுதியே.//
எப்படி? கற்பனையாக யார் எதை சொன்னாலும் ஒப்புக்கொள்ள முடியுமா? புஸ்பக விமானதில் பறந்தார் என புரணங்களில் சொல்வதை வைத்து விமானத்தையே அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என சொல்லுவீர்களா?
//ஆனால் மேலே ஒருவன் அமர்ந்து கொண்டு அவன் எல்லாவற்றைவும் செய்கிறான் என்கிறது மதங்கள் //
ஆஹா மறுபடியுமா ??
எல்லா மதமும் அப்படி சொல்லவில்லை என்கிறேன்.
பின்னூட்டத்தையும் கொஞ்சம் படிங்கப்பா கண்ணை கட்டுது
//எல்லா மதமும் அப்படி சொல்லவில்லை என்கிறேன்.//
திருமந்திரத்தில் பராபரமே என்பது யாரை குறிக்குது தல!?
//உலகில் மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது என்பதை அறிவேன்! அறிவில் கூட நாம் பயனிக்க வேண்டிய தூரம், ஆம் தூரமே அதிகமாயிருக்கிறது! நிச்சயமாக பூமி போன்று ஒரு கிரகத்தில் கால் வைப்பான் மனிதன் என கருதுகிறேன்!//
படித்ததில் பிடித்தது.
////ஆனால் மேலே ஒருவன் அமர்ந்து கொண்டு அவன் எல்லாவற்றைவும் செய்கிறான் என்கிறது மதங்கள் //
ஆஹா மறுபடியுமா ??
எல்லா மதமும் அப்படி சொல்லவில்லை என்கிறேன்.//
அவனின் தூதுவர் ,பிரதிநிதி,ஏஜண்டுகள்,இங்கு அப்படி அப்படி சொல்லித்தானே பிரச்சாரம் செய்கிறார்கள்,மத நூல்களும் அப்படித்தானே சொல்லுகின்றன..!
வால்ஸ்!
எழுதியதைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது!
இந்தப் பதிவாகட்டும், இதற்கு முன் எழுதிய பரிணாமம் ஒரு முன்னுரை, அப்புறம் அதற்கு விளக்கவுரை ஆகட்டும், பரிணாமக் கோட்பாட்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பேசிய அனுபவம் மறந்து போய்விட்டது போல் இருக்கிறது!
இப்போது எழுதியிருப்பதிலும் கூட, பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி தலையும் இல்லாமல், வாலுமில்லாமல், என்னமோ நான் குறிப்புக்களைக் கொடுக்கிறேன், எது பிடிக்கிறதோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராலாமான அறிவிப்பு வேறு!
பின்னூட்டங்கள் இப்போது பரிநாமத்தைப் பற்றிப் பேசாமல் பராபரம், அது இது என்று ட்ராக் வேறெங்கோ ஓடுகிறது!
சேக்காளி ராஜன் வேறு, தனி ட்ராக் ஒட்ட ஆரம்பித்து விட்டார்!
ஆக ஆரம்பமாகி இருப்பது பரிணாமம் பற்றிய உரையாடல் இல்லை!
//அவனின் தூதுவர் ,பிரதிநிதி,ஏஜண்டுகள்,இங்கு அப்படி அப்படி சொல்லித்தானே பிரச்சாரம் செய்கிறார்கள்,மத நூல்களும் அப்படித்தானே சொல்லுகின்றன..! //
சக்தி, பிரம்மம், பரம்பொருள், அல்லா, கர்த்தர் இப்படி ஆளாளுக்கு ஒரு பெயர் நிச்சயமா இருக்கும் தல!
//பின்னூட்டங்கள் இப்போது பரிநாமத்தைப் பற்றிப் பேசாமல் பராபரம், அது இது என்று ட்ராக் வேறெங்கோ ஓடுகிறது!//
அவர் பரிணாமத்தை வேறு பரிமாணத்தில் அலசுகிறார் போல! இது ஆரம்பம் தானே இன்னும் பெருவெடிப்பு பற்றியெல்லாம் வரும்! எனக்கு தோணும்போதெல்லாம் குறிப்பு எடுத்து எழுதுகிறேன், அதனால் கோர்வையில்லாமல் இருக்கலாம், கடைச்யா சேர்த்துகிட்டா போச்சு!
//ஆக ஆரம்பமாகி இருப்பது பரிணாமம் பற்றிய உரையாடல் இல்லை!//
ஆரம்பிப்பது அங்கே தான், வர்ற வழியில் தான் பலபக்கமா பிச்சிகிது! பரிணாமத்தின் எதிர்ப்புவாதிகளான படைப்பு வாத கொள்கையுடயவர்கள் விவாதத்திற்கு வர மறுப்பதே இதன் காரணம்! அதற்காக நம் வேலையை செய்யாமல் இருக்க முடியுமா?
//ஆக ஆரம்பமாகி இருப்பது பரிணாமம் பற்றிய உரையாடல் இல்லை!//
பரிணாமம் பற்றி பாமரனுக்கும் புரியும் படி நச்சென ரெண்டு வரியில் சொல்லுங்க..
//ஆக ஆரம்பமாகி இருப்பது பரிணாமம் பற்றிய உரையாடல் இல்லை!//
பரிணாமம் பற்றி பாமரனுக்கும் புரியும் படி நச்சென ரெண்டு வரியில் சொல்லுங்க.. //
பதிவு தான் முக்கியம் சார்! ஏன் பின்னுட்டத்தையே குறி வைக்கிறிங்க, நண்பர் கேட்ட மாதிரி நீங்க ஆரம்பிச்சு வையுங்க தொடருவோம்!
//ஆரம்பிப்பது அங்கே தான், வர்ற வழியில் தான் பலபக்கமா பிச்சிகிது! பரிணாமத்தின் எதிர்ப்புவாதிகளான படைப்பு வாத கொள்கையுடயவர்கள் விவாதத்திற்கு வர மறுப்பதே இதன் காரணம்! அதற்காக நம் வேலையை செய்யாமல் இருக்க முடியுமா?//
அட வந்தது எல்லாம் நம்ம ஆளுங்களா?
எதிர் பார்ட்டி யாரும் வரலையா..?
ஜீனில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் பரிணாமம்.இப்போது சில மனிதர்களுக்கு 6 விரல்கள் உள்ளன சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மனிதர்களின் விரல் அமைப்பு எப்படி இருக்கும்....?
திருமந்திரத்தின் முதல் பாடலில் பிரபஞ்சத்தை தான் குறிக்கிறது.
பரிணாமத்தை பேசும் போது, பிரபஞ்ச தோற்றத்தை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஏனெனில் உயிரிகளின் தோற்றம், அணுக்களின் தோற்றத்தோடு நெருங்கிய சம்பந்தமுடையது அல்லவா ?
@வால், @NO
பொத்தாம் பொதுவாக தேவன் உலகை 6 நாட்களில் படைத்தார் என்பதற்கும், ஒரு பொருள் தன் உள்ளார்ந்த சக்தியுடன் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு அடிப்படை செயல்கள் , நிலம், நீர், காற்று, வெளி, பூமி, 5 விதமான மன நிலைகள், பொருள்கள், மனிதர்கள், விலங்குகள் என எல்லாமாக மாறி நின்றது என 1000 வருடங்களுக்கு முன் தெளிவாக குறிப்பிட பட்டிருந்தது என்பதை சொல்வதும் ஒன்றா ?
இதை குறிப்பிட காரணம் பரிணாம கருத்துடன் நம் தமிழ் மரபு ஒத்து போகிறது என்பதை குறிப்பிட மட்டும் தான்.
தமிழ் மரபு ஒவ்வொரு முறை புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த போதும் அதை ஆர்வமாக வரவேற்றது. பழையதேயே கட்டி அழுது கொண்டிருக்காது. [திருமூலர் ஒன்றும் கடவுள் அல்ல அவர் சொன்னதையே பிடித்து தொங்கி கொண்டிருக்க]
ஆனால் நம் முன்னோர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் தாழ்வு மனப்பான்மை தான் வேண்டாம் என்கிறேன்.
எனவே புது அறிவியல் கருத்துக்களையும் தமிழ் படுத்த முனைவோம்.
முடியுமானால் பிக் பேங் தியரி பற்றி தமிழாக்கம் செய்ய முய்ற்சிக்கிறேன்.
[வால்பையனுடன் ஒத்து போய் பரிணாமத்திற்கு ஆதரவளிக்கிறேன் என்று பின்னூட்டம் போட்டே ஓய்ஞ்சு போயாச்சு. அது யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேங்குது.
இதற்கு மேல் அரைச்ச மாவையே அரைக்க முடியாது. புது கேள்விகளுக்கு மட்டும் தான் விளக்கம்.]
//சாத்தியகூறுகளை சிந்தக்க மாட்டேன் என்பவர்களை என்ன தான் சொல்வது!//
சாத்தியக்கூறுகளை சிந்தித்தால் கட்டி வளர்த்த நம்பிக்கைகள் வீணாகிப் போய் விடுமே?விட்டுருவோமா என்ன?
200
201
:)
//திருமந்திரத்தின் முதல் பாடலில் பிரபஞ்சத்தை தான் குறிக்கிறது. //
யாமறியோம் பராபரமே!
//பரிணாமத்தை பேசும் போது, பிரபஞ்ச தோற்றத்தை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.//
பிரபஞ்சம் என்பது பொருளா, சக்தியா, அங்கே தான் சிக்கல் நிற்கிறது!
//ஏனெனில் உயிரிகளின் தோற்றம், அணுக்களின் தோற்றத்தோடு நெருங்கிய சம்பந்தமுடையது அல்லவா ?//
அணுக்கள் அடிப்படையில் உயிரற்றவை, அதனுடன் இன்னொரு அணு சேரும் போது அதன் மூல தன்மையிலிருந்து மாறுகிறது, அணுக்களின் கூட்டு சேர்ப்பு புரிந்த வேதியல் வினை தான் முதல் ஆர்கானிக் உயிர்! அவைகள் தன்னை தானே பெருக்கி கொள்ளும் தன்மை பெற்றது!
//பொத்தாம் பொதுவாக தேவன் உலகை 6 நாட்களில் படைத்தார் என்பதற்கும், ஒரு பொருள் தன் உள்ளார்ந்த சக்தியுடன் பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு அடிப்படை செயல்கள் , நிலம், நீர், காற்று, வெளி, பூமி, 5 விதமான மன நிலைகள், பொருள்கள், மனிதர்கள், விலங்குகள் என எல்லாமாக மாறி நின்றது என 1000 வருடங்களுக்கு முன் தெளிவாக குறிப்பிட பட்டிருந்தது //
இன்றைக்கு இறுதி கண்டுபிடிப்பாக இருக்கும் டார்க் மேட்டரை விட இன்னும் 2000 வருடங்கள் கழித்து அதைவிட சிறந்த கண்டுபிடிப்புகள் நிகழலாம், இரண்டாயிரம் வருசத்துகே முன்னாடியே சொல்லிட்டானுங்கன்னு இதையே கட்டிகிட்டி அழுதா, அங்கேயே நிக்க வேண்டியது தான்!
//இதை குறிப்பிட காரணம் பரிணாம கருத்துடன் நம் தமிழ் மரபு ஒத்து போகிறது என்பதை குறிப்பிட மட்டும் தான்.//
தமிழ் ஒரு மொழி மட்டுமே, அதை பயன்படுத்திய மக்களை போல் பல மொழிகளில் மக்கள் சொன்ன கருத்துகள் தடம் இல்லாமல் அழிந்து போயின!, தமிழ் மரபு என்பது கொஞ்சம் ஓவர் டோஸ்!, ஜெயமோகன் மாதிரி இந்தியஞானமரபுன்னு வேணும்னா பீலா விடலாம்!
//தமிழ் மரபு ஒவ்வொரு முறை புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த போதும் அதை ஆர்வமாக வரவேற்றது. பழையதேயே கட்டி அழுது கொண்டிருக்காது. //
400 வருசத்துக்கு முன்னாடி தமிழர் வீட்டில் மட்டும் கரண்டு இருந்து விசிடி பார்த்தான்னு சொல்லுவிங்க போல, என்னாத்தைங்க கண்டுபிடிச்சானுங்க அப்போ!
//நம் முன்னோர்களை முட்டாள்களாக சித்தரிக்கும் தாழ்வு மனப்பான்மை தான் வேண்டாம் என்கிறேன்.//
அறிவியல் என்பது ஒன்றிலிருந்து அடுத்த தொடர்ச்சியை பிடிப்பது, எந்த மொழியானாலும் அங்கிருந்து அறிவியலுக்கு தொடக்க புள்ளி வைத்தவர்கள் முட்டாள்கள் இல்லை, அதன் பின் நகர மாட்டேன் என்று அங்கேயே நிற்பவர்கள் வேண்டுமானால் அந்த பட்டத்தை பரிசாக பெற்று கொள்ளலாம்!
//புது அறிவியல் கருத்துக்களையும் தமிழ் படுத்த முனைவோம்.//
கலை சொற்கள் உருவாக்க சொல்றிங்களா!?, நமக்கும் அறிவியலுக்கும் நெருங்கி தொடர்பு இருக்குன்னு நிறுபிக்க என்ன கண்டுபிடிச்சிருக்கோம் சொல்லுங்க! ஜி.டி.நாயுடு போன்று ஒன்றிரண்டு கமர்சியல் கண்டுபிடிப்பாளர்கள் தவிர மற்றவர்கள் உலக பொது ஆகிவிட்டார்கள்! தமிழ் படுத்துவதை விட நான்கு பேரிடம் கொண்டு செல்வோம்னு சொல்லுங்க, அதுவே தமிழ் படுத்திக்கும்!
//பிக் பேங் தியரி பற்றி தமிழாக்கம் செய்ய முய்ற்சிக்கிறேன்.//
அதான் வந்ததிலிருந்து திருமந்திரம் படிச்சிகிட்டு இருக்கிங்களே!
//வால்பையனுடன் ஒத்து போய் பரிணாமத்திற்கு ஆதரவளிக்கிறேன் என்று பின்னூட்டம் போட்டே ஓய்ஞ்சு போயாச்சு. அது யார் கண்ணுக்கும் தெரிய மாட்டேங்குது.//
அப்படியெல்லாம் ஒத்துபோயிட்டா புதுசா யாரு கண்டுபிடிக்கிறது, எதையும் கேள்வி கேட்டு கொண்டே இருப்பது தான் பகுத்தறிவு!, அது தான் அறிவியலின் மூலதனம்!
201
:)//
இம்புட்டு சூட்லயும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுதா!
Post a Comment