டிஸ்கி:டுவிட்டரில் ஏற்பட்ட விவாதத்தின் பொருட்டு இந்த பதிவு, பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்வது எனக்கு பிடிக்காது, அதற்கு பலர் இருக்கிறார்கள், நான் என்ன உணர்ந்தேன் என்பதே என்மையை(என் தனிதன்மையை) காட்டும், மன்னிக்க இந்த நீண்ட பதிவுக்கு!
*******************
stanly kubrick ன் திரைபடங்கள் வித்தியாசமான குறியீடுகள் அடங்கியவை என வேற்றுமொழி திரைப்பட ரசிகர்களுக்கு தெரியும், உண்மையில் அவைகளெல்லாம் நாவலில் சாத்தியபடுத்தபட்டு மீண்டும் திரைக்கு கொண்டுவரப்பட்டது, பெரும்பாலானவை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதையில், கதையில் ஒன்ற வைத்தாலும் நிமிட முள்ளைப்போல் வெகு மெதுவாக காட்சியை நகர்த்துவார் என்பதும் அனைவருக்கும் தெரியும், அதுவே என்னை போன்ற மாற்று(கோண)பார்வையாளர்களுக்கு வசதியாக அமைகிறது!
eyes wide shut என்ற படம் 1999 இல் டாம்குரூஸ் மற்றும் நிக்கோல் கிட்மேன் நடித்து குப்ரிக் இயக்கத்தில் வெளிவந்த படம்(டாம்குருஸும், நிக்கோலும் சில ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்ததாக நினைவு), அதன் ஆதாரக்கதை Arthur Schnitzler எழுதிய "Traumnovelle" என்ற நாவலிலிருந்து எடுக்கபட்டது!, நாவலில் பல விசயங்கள் சாத்தியமாகும் வர்ணனை என்ற பெயரில் நம்மை சுற்றி இருக்கும் குறியீடுகளை வார்த்தை வடிவத்தில் விளக்கிவிடலாம்! ஆனால் காட்சியமைப்பு அதை முழுமையாக சாத்தியபடுத்த முடியாது. இந்த படத்தின் கதையை பொறுத்தவரை அது நிஜமா அல்லது கனவா என்ற மாயதோற்றத்தை கதையின் ஆசிரியர் நிறுவ முயன்றிருக்கிறார்!, அது நாவலினாலே சாத்தியபட்டது, அது திரையில் முடியவில்லை, சான்றாக நண்பர் ஜெய் எழுதிய ஸ்டேன்லி குப்ரிக்கின் புதிர்கள் என்ற பதிவை காண தருகிறேன்!
அடுத்து இந்த படத்தில் என்னை பாதித்தது காட்சியமைப்பு, ஒரு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் பகீர் திருப்பங்கள் திரைக்கு சிறிதும் ஒத்துவரவில்லை, டுவாண்டினின் பல்ப் பிக்ஷன் போன்ற படங்கள் இந்த விசயத்தில் மார்தட்டி கொள்ளலாம்!, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் டுவிஸ்ட் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்க போகின்றதோ என்ற ஆர்வத்தை தூண்டலாம், ஆனால் காட்சியமைப்பில் ஏன் இந்த தேவையில்லாத கேரக்டர் என்ற எரிச்சலே வருகிறது., கதையின் போக்கை மாற்றக்கூடிய கேரக்டர் என்றால் ஏற்றுகொள்ளலாம், ஒரு பாட்டுக்கு ஆடும் மார்கெட் போன நடிகையை போல் வரும் கேரக்டர் யாருக்கு தான் எரிச்சல் தராது!
இது படத்தின் முழுக்கதை, நான் அத்தியாயம் அத்தியாயமாக பிரிக்கிறேன்!
வீட்டில் பேசி கிளம்பி பார்ட்டிக்கு செல்வதோட முதல் அத்தியாயம் முடியும்!
பார்டியில் சிலருடன் பேசி கொண்டே பழைய நண்பனை சந்திப்பது, அதே நேரம் மாற்றான் ஒருவன் நாயகியை நடனமாட அழைப்பதோட இரண்டாம் அத்தியாயம்
மாற்றானுக்கும், நாயகிக்கும் நடக்கும் உரையாடல் இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது(இந்த காட்சியில்), ஆகவே இதுவே முழுமையாக வரும், இரண்டு மாடல்களுடன் பேசும் நாயகனை பார்ட்டி அமைப்பாளர் அழைத்துவர சொல்லி அங்கே ஒரு பெண் மயக்க நிலையில் கிடப்பதோடு மூன்றாம் அத்தியாயம் முடியும்(இங்கே தான் நாவல் சூடு பிடிக்கும்)
நாயகி-மாற்றான் உரையடல் மற்றும் பிரிவு, நாயகனின் மருத்துவம் மற்றும் அறிவுறை ஒரு பக்கத்தில் முடிந்து இரவு இருவருக்கும் நடக்கும் படத்தின் முக்கியமான உரையாடல் நடக்கும்!, அவை முழுக்க முழுக்க கதையாசிரியரின் திறமையை வெளிபடுத்தும் வசனம்
Alice Harford: Millions of years of evolution, right? Right? Men have to stick it in every place they can, but for women... women it is just about security and commitment and whatever the fuck else!
Dr. Bill Harford: A little oversimplified, Alice, but yes, something like that.
Alice Harford: If you men only knew...
இது சாம்பிள் தான், மணமானவர்கள் மாற்றானுடன் செக்ஸ் ஏன் வைத்து கொள்வதில்லை என்ற உளவியல் பிரச்சனையை இருவரும் ஐந்து நிமிடம் பேசுவார்கள்!
முடிவில் நாயகிக்கு வேறொருவனிடம் ஏற்பட்ட crush ஐ சொல்வதுடன் நான்காம் அத்தியாயம்!
அப்போது வரும் போன், தனது நோயாளியின் வீட்டுக்கு பயணம், அவளுக்கு சொல்லும் ஆறுதல், அவள் தன்னை பற்றி சொல்லுதல் தீடிரென்று நாயகனை காதலிப்பதாக சொல்லி முத்தமிடல் நாவலுக்கே உரிய திருப்பத்தை தர இணைக்கபெற்றது, படிப்பவன் penthouse புத்தக ரேஞ்சுக்கு உடலுறவை ஆசிரியர் விளக்கக்கூடும் என எதிர்பார்க்க வைக்கும் டுவிஸ்டுகள்! இத்துடன் ஐந்தாம் அத்தியாயம்
திரும்பும் நாயகனுக்கு நாயகி சொன்னதே திரும்ப திரும்ப ஞாபகம் வருவது போன்றவை காட்சியமைப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று, அது நாவலில் ஒரே வரியில் முடிந்து விடும்!, தனியாக நடந்து வருதல் வழியில் ஒரு விலைமாது குறிக்கிடுதல், அறைக்கு அழைத்து செல்லுதல் முக்கியமான கட்டத்தில் நாயகன் அலைபேசி அடித்தல், ஆறாம் அத்தியாயம்
நாயகன் கிளம்பி மீண்டும் நடத்தல், வழியில் நண்பன் வேலை செய்யும் உணவகத்தை அடைதல், அவனுடன் பேசுதல் அவனுக்கு வரும் போனில் இவன் பாஸ்வேர்டு அறிதல் ஏழாம் அத்தியாயம்
படத்தில் இடம் சொல்லும் வசனம் வரவில்லையென்றாலும், அங்கே வராதே என்று இடம் சொல்லும் வசனம் நாவலில் வரும், நாயகன் உடை வாங்க இரவு ஒரு கடையை அடைதல் அங்கே ஒரு சின்ன பெண் செக்ஸில் ஈடுபடுவதை அவளது தந்தை கண்டித்தல், அவள் இவன் பின்னால் வந்து ஒளிதல், மற்றும் அவனுக்கு இந்த உடை போடு என்று காதில் கிசுகிசுத்தல் எட்டாம் அத்தியாயம்
நண்பன் குறிபிட்ட இடத்தை அடைதல், பாஸ்வேர்டு சொல்லுதல் உள்ளே சென்று அதிர்ச்சியடைதல், சடங்கு முடிந்து ஒவ்வொரு பெண்ணும் ஆட்களை தேர்வு செய்து செல்லும் பொழுது ஒருத்தி நாயகனை தேர்வு செய்து, இங்கிருந்து போய்விடு என எச்சரிக்கை செய்தல் ஒன்பதாம் அத்தியாயம்!
சலுப்பா இருக்கு, இப்படி நாவலில் கொடுத்த தேவையில்லாத டுவிஸ்டுகளை திரையில் காட்டி எரிச்சலடய செய்தது குப்ரிக்குக்கு இது தான் முதன் முறை! நாவலை அப்படியே காட்சியாக மாற்றுதல் 100% சாத்தியபடாது என்பதை அனைவரும் அறிவோம், பின் ஏன் குப்ரிக் இந்த விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை!, நான் இதுவரை குறிப்பிட்ட அத்தியாயத்தில் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து ஒரு டுவிஸ்டுடன் முடியும் விதம் காட்சி அமைந்திருக்கிறது, இதுதான் நாவலா என பார்க்கும் போது நான் கூட எழுதலாம் போலயே என அதே விபரீத ஆசை தோன்றுகிறது!
பெருசா போச்சு, ஸாரி!
25 வாங்கிகட்டி கொண்டது:
First....
நானும் கண்களை கொஞ்சம் அகலத்திறந்து பின் மூடித் தூங்கப்போறேன் ...
:)
2nd..
//நான் கூட எழுதலாம் போலயே என அதே விபரீத ஆசை தோன்றுகிறது!///
பீ கேர்புல் வால்ஸ்
இப்படி நாவலில் கொடுத்த தேவையில்லாத டுவிஸ்டுகளை திரையில் காட்டி எரிச்சலடய செய்தது குப்ரிக்குக்கு இது தான் முதன் முறை! நாவலை அப்படியே காட்சியாக மாற்றுதல் 100% சாத்தியபடாது என்பதை அனைவரும் அறிவோம்,
...... நல்லா துவைச்சு காயப் போட்டுட்டீங்க..... வித்தியாசமான விமர்சனம்....!
இது மாதிரி நாலஞ்சி தடவை ஒரே விஷயத்தை பல தரப்பட்ட மக்களிடம் படிக்கசொல்லோ... நெறைய டைரடக்கரு பேரு, படம் பேரு... எல்லாம் உள்ள போகும்... அம்புட்டு ஞாபக சத்தி நமக்கு..
பாஸ்... நீங்க இங்கிலீஷ் நாவல், இங்கிலீஷ் படமெல்லாம் பார்ப்பீங்களா..?!
//சென்ஷி said...
பாஸ்... நீங்க இங்கிலீஷ் நாவல், இங்கிலீஷ் படமெல்லாம் பார்ப்பீங்களா..?!//
ரெண்டுமே பார்ப்பதோடு சரி!
//
ரெண்டுமே பார்ப்பதோடு சரி!//
இல்லை.. முன்னே ஒரு தடவை டெர்மினேட்டர் கதை விமர்சனம் எழுதியிருந்ததைப் படிச்சுட்டு தெறிச்சவன் நானு.. அதான் ஆச்சரியமாகிட்டேன்..
ரைட்டு ... த்தோ வந்துட்டேன். வெயிட்..
//இல்லை.. முன்னே ஒரு தடவை டெர்மினேட்டர் கதை விமர்சனம் எழுதியிருந்ததைப் படிச்சுட்டு தெறிச்சவன் நானு.. அதான் ஆச்சரியமாகிட்டேன்..//
வெண்பூ அதில் என்னை ஓடவிட்டதை மறந்துட்டிங்களா!?
இன்னும் பதிவு அப்படியே தான் இருக்கு!, அதிலிருந்து சரியாக உள்வாங்காமல் சினிமா பற்றி எழுதுவதே இல்லை, முக்கிய படத்தின் கதை பக்கம் போவதேயில்லை!
எல்லோருக்கும் ஒரு உண்மையை சொல்ல விழைகிறேன்...
உலகம் சுற்றுகிறது..............
தம்பீ - இன்னும் டீ வரலை...
Be Careful ..
நான் என்னை சொல்லிக்கிட்டேன்.
http://www.aboutfilm.com/movies/e/eyeswideshut.htm
வாலு இது நம்ம ஏரியா இல்ல - வரட்டா - நல்வாழ்த்துகள் வாலு -நட்புடன் சீனா
இந்த நாவல் படிக்கிற / படம் பாக்குற வயசு இன்னும் எனக்கு ஆகல.. ஸோ, ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு வந்து கமெண்ட் போடுறேன்.. ஹிஹி..
//இல்லை.. முன்னே ஒரு தடவை டெர்மினேட்டர் கதை விமர்சனம் எழுதியிருந்ததைப் படிச்சுட்டு தெறிச்சவன் நானு.. அதான் ஆச்சரியமாகிட்டேன்//
ஓ!.. அதுக்கு நானும் பின்னூட்டம் போட்டிருந்தேன் :)
அதுக்கப்புறமும் வந்து ப்ளூ லகூன்ல இன்செஸ்ட் லவ்னு எழுதினதைப் பாத்திட்டு ஓடிட்டேன் (பின்னூட்டமெல்லாம் போட்டுட்டுத்தான்) :)
Eyes Wide Shut குறிப்பிடதகுந்த படம். ஜெயமோகனின் ‘இரவு’ படிக்கும்போது அடிக்கடி நினைவுபடுத்திய படம்.
தேவையில்லாத திருப்பங்கள் நாவலுக்கும் வலிமை சேர்க்காது. ஆனால் இந்த நாவல் விறுவிறுப்பானது. மேலும் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததால் (anti-semitic வசனங்கள் anti-gay ஆக மாற்றப்பட்டிருக்கும்) கொஞ்சம் வலுவிழந்து போய்விட்டது.
எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
விரிவாக விவரித்தற்கு நன்றி.
சினிமாவில் பெண்களை வேலப்படுத்தி வரும்போது அதை ஆதரிக்கும் நீ, வேறு ஒரு தலத்தில் இஸ்லாத்தில் பெண்ணடிமை என்று சொல்லுகிறாயே உனக்கு வெட்கமில்லை.
ஆடு நனையிதிண்டு ஓனாய் அழுததாம், இந்த கதையா இருக்கு உன் போக்கு, ஏதோ செய்தியை போட்டமாண்டு போகமா, இவரு ஏதோ எவனுக்கும் இல்லாத அக்கரை வந்துடுச்சு இஸ்லாமியர்கள் மேல.
பொலப்ப பாப்பியா... மே.. மே..
நல்ல பதிவு வால்பையன். :-)
//ஆனால் காட்சியமைப்பில் ஏன் இந்த தேவையில்லாத கேரக்டர் என்ற எரிச்சலே வருகிறது., கதையின் போக்கை மாற்றக்கூடிய கேரக்டர் என்றால் ஏற்றுகொள்ளலாம், ஒரு பாட்டுக்கு ஆடும் மார்கெட் போன நடிகையை போல் வரும் கேரக்டர் யாருக்கு தான் எரிச்சல் தராது!//
கதை, கதாபாத்திரங்கள், திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு கோணங்கள், லைட்டிங், பொருட்கள், உடையமைப்புகள், வானிலை, செட்டிங் என எல்லாமே ஒரு திரைப்படத்தின் அம்சங்கள்.. பார்வையாளனின் கண்ணுக்கு இவை எல்லாமே புலப்படும்போது, ஏன் கதை, திரைக்கதை, கதாபாத்திரம், வசனம் இந்த நான்கை மட்டும் வைத்து திரைப்படத்தை புரிய வைக்கவேண்டும்? சில படங்களில் வசனமே பேசாமல் இசையை மட்டும் வைத்தும் காட்சியை புரிய வைக்கிறார்கள் இல்லையா? உண்மையில் நம் வாழ்க்கையின் சோக தருணங்களில் யாரும் வயலின் வாசிப்பதில்லை.. ஆனால், படங்களில் வயலின் பின்னணி படத்தின் ஒரு element-ஆக சேர்க்கப்படும்போது, அதை நாம் தேவையில்லாதது என சொல்வதில்லை.. இசை, பாடல், வானிலை போன்ற அம்சங்கள் ஏற்கனெவே பல படங்களில் திரைப்படத்தை உணர்த்த பயன்படுத்தப்பட்டுவிட்டன.. அப்படி பயன்படுத்தும்போது ஏன் தேவையில்லாமல் இசை வருகிறது, பாடல் வருகிறது, ஏன் திடீரென மழை வருகிறது என நாம் கேட்பதில்லை.. பழகிவிட்டோம்.. அதுபோல திரைப்படத்தின் element-களான பொருட்களையும், ஒப்பீடுகளையும் குப்ரிக் பயன்படுத்தி உள்ளார்.. அதற்காக தேவையில்லாமல் கேரக்டர்களும், காட்சிகளும் வரவே செய்யலாம்.. அந்த கேரக்டர்கள் முக்கியமில்லை.. அங்கே பொருட்களும், ஒப்பீடுகளுமே முக்கியம்..
// சலுப்பா இருக்கு, இப்படி நாவலில் கொடுத்த தேவையில்லாத டுவிஸ்டுகளை திரையில் காட்டி எரிச்சலடய செய்தது குப்ரிக்குக்கு இது தான் முதன் முறை! நாவலை அப்படியே காட்சியாக மாற்றுதல் 100% சாத்தியபடாது என்பதை அனைவரும் அறிவோம், பின் ஏன் குப்ரிக் இந்த விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை! //
தெரியவில்லை என்ற வார்த்தையை நான் வரவேற்கிறேன்.. :-) இதற்கான பதில்கள் எனக்குப் புரிந்தவரை ஓரளவு என் பதிவில் இருக்கிறது.. பல விஷயங்கள் இன்னும் நமக்கு தெரியவில்லைதான்.. மார்ட்டின் ஸ்கார்செஸ் போன்ற குப்ரிக் காலகட்டத்திலேயே சாதித்த ஜாம்பவான் இயக்குனரே, குப்ரிக் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து கற்றுக்கொள்கிறேன் என்கிறார்.. நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது எனவே நினைக்கிறேன்..
அடிக்கடி சினிமா பத்தி எழுதுங்க..
// Chitra said...
நல்லா துவைச்சு காயப் போட்டுட்டீங்க.... //
@ Chitra, அதுல என்ன அப்படி ஒரு சந்தோஷம்? :-)
அன்புடன்,
ஜெய்.
//சினிமாவில் பெண்களை வேலப்படுத்தி வரும்போது அதை ஆதரிக்கும் நீ, வேறு ஒரு தலத்தில் இஸ்லாத்தில் பெண்ணடிமை என்று சொல்லுகிறாயே உனக்கு வெட்கமில்லை.//
லூசுபயலே!
அந்த படத்தில் என்ன இருக்கோ அதை தான் சொல்லியிருக்கேன், இத்தனைக்கும் அந்த படம் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கேன், ஆதரிக்கிறேனா!
குரானை படிச்சு படிச்சு மூளை மழுங்கி போச்சா உனக்கு!
படத்தின் இடையே ஒரு தமிழ் பாட்டு வருகிறதே அது என்ன பாட்டு, யார் பாடியது?
//படத்தின் இடையே ஒரு தமிழ் பாட்டு வருகிறதே அது என்ன பாட்டு, யார் பாடியது? //
இது நரகமா!
இல்லை பூமியே நரகமா!
என்ற இரண்டே வரிகள் தான் வரும், ஏற்கனவே இருந்த பாடலை பின்னணியில் சேர்த்திருப்பார்கள் என்பது நண்பனின் கருத்து!, ஆனாலும் நல்ல ரைமிங்!
அந்த பாடலைப் பத்தின விவரம் இங்க இருக்குதுங்க..
http://en.wikipedia.org/wiki/Eyes_Wide_Shut#Usage_of_Hindu_prayers
நீங்கள் பெரிய பகுத்தறிவுவாதி. சரி சமயங்கள் தான் தெய்வகுற்றம் என்று சொல்லி பரிகாரம் தேடிச்சு, ஆனால் மெத்தப்படித்த இந்த பகுத்தறிவுவாத குரங்குகள் (தப்பில்லைதானே -அங்கெ இருந்து வந்ததாக தானே சொல்கிறீர்கள் ) மனவியல் நிபுணர்கள் என்ற போர்வையில் உளப்பாதிப்பு அடைந்தோரை செய்யும் கொடுமைகளை இங்கே பார்க்கவும்.http://www.youtube.com/watch?v=ExPxawBa2Ao&feature=related விஞ்ஞானம் கடைசியில் எமக்கு ஆப்பு வைக்காமல் போகாது. என்னை பொறுத்தவரையில் இந்த பகுத்தறிவுவாதிகளை விட இயற்கைக்கும் கடவுளுக்கும் பயப்படுவதில் தப்பே இல்லை.
//prem said...
படத்தின் இடையே ஒரு தமிழ் பாட்டு வருகிறதே அது என்ன பாட்டு, யார் பாடியது?
//
அது மாணிக்கம் யோகேஸ்வரன் என்னும் இலங்கை தமிழர் பாடியது. இங்க பாருங்க மேல் விவரங்களுக்கு
Post a Comment