இது தான் இறுதி போராட்டமா?

ஈழத்தில் பிரச்சனை ஆரம்பித்தது இன்று நேற்றல்ல! பல ஆண்டுகள் ஆகிவிட்டது!
அங்கே போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே தமிழகத்தின் ஆதரவும் அதற்கு ஆரம்பித்தது.
தமிழகத்தில் தமிழிழத்திற்க்கான ஆதரவு எம்.ஜி.ஆர் காலத்தில் வெகு ஆளமாகவே இருந்தது.
ஏன் ராசிவ்காந்தியின் படுகொலைக்கு முன்னர் வரை அதற்கு எந்த மாற்று கருத்தும் இருந்ததில்லை. வன்முறையில்லாமல் பேசி முடிவுக்கு வரலாம் என்ற சிலரின் வாதங்களை தவிர. ஆனாலும் எல்லோரும் தமிழ்ஈழத்தில் ஆதரவுடன் தான் இருந்தனர்.

ராஜிவின் மறைவுக்கு பின்னர் தமிழிழத்திற்க்காக போராடும் புலிகளின் மீது சர்வதேசதடை வந்தது, இந்தியாவும் புலிகள் அமைப்புக்கு தடை விதித்தது. அதற்கு பின்னர் தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பிளவு பட்டு நிற்கிறது. ஈழத்தமிழர்களின் தற்போதய துர்பாக்கிய நிலைக்கு இதுவே முக்கிய காரணம் என்பேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தாலே அது புலிகளுக்கான ஆதரவாக திரிக்கப்படுகிறது.

இன்னோரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். புலிகள் ஒன்றும் பொழுது போகாமல் சண்டை போடவில்லை. அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒட்டுமொத்த ஈழதமிழர்களின் சார்பாக போராடுகிறார்கள். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாத சர்வதேச அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்பது எள்ளலவும் பயன் தராது. சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை. அருகிலிருந்தே ஈழதமிழர்களை நாள்தோறும் அகதிகளாக சந்தித்தி கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்குமா தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழர்கள் கூண்டோடு கொல்லப்படுவது இன்றைய மூன்றாம் தலைமுறை ஊடகத்தில் நமக்கு தெரியாமல் இல்லை. நம்மால் என்ன செய்ய முடிந்தது.
மனித சங்கிலி,உண்ணாவிரதம்,மெளனவிரதம் என ந்ம் உணர்வுகளை காட்ட வருத்தி கொண்டோமே தவிர அதை கவனிக்கவேண்டிய அரசியல் சிறிதும் வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.

வரிசையாக நடந்த போராட்டங்களினால் அரசின் கவனத்தை திருப்ப முடியவில்லை.
அதனால் தான் சகோதரர் முத்துகுமார் இந்த போராட்டதை கையில் எடுத்தாரோ?

ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!

முத்துகுமாரின் முடிவையும், அதன் பின் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும்.

அவரின் உயிருக்கு விலை பேசிகொண்டிருப்பார்கள் அரசியல்வாதிகள், ஒவ்வோரு கட்சியும் தன் சார்பாக பணம் கொடுக்கும், இதற்காகவா உயிர் துறந்தான் முத்துகுமார்.

ஈழத்தில் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் முத்துகுமாரின் தற்கொலைக்காக திருப்தியடையப் போவதில்லை, அதிலும் முக்கியம் இது சர்வதேச அரசியலிலின் கவனதை திருப்புமா என்பதும்!
முத்துகுமாரின் ஒரு உயிர் அரசின் கவனத்தை கவருமேயானால், இத்தனை வருடமாக ஈழத்தில் செத்து கொண்டிருப்பது உயிரில்லையா? இந்த கல்நெஞ்ச கயவர்களிம் மனதை கரைக்க முத்துகுமார் இட்டு கொண்ட தீ போதுமானாதா? இல்லை இன்னும் தேவைப்படுமா?

ந்மக்கு தேவை தியாகமா? போராட்டமா?

இந்த போராட்டங்கள் பத்தாது! உடனே தமிழக அரசை திரும்ப கோறுவோம். ஈழதமிழர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்க தயாராக இருப்பவர்களுக்கே ஆதரவு என குரல் கொடுப்போம். ஒன்றுமே செய்யமுடியவில்லையா! குறைந்த பட்சம் இடைக்காலமாக போரை நிறுத்தி அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழகதிற்கு வரவழைக்க சொல்லுவோம். நம் சகோதரர்களுக்கு நாம் இருக்க இடமும், உணவும் தருவோம்.

தய்வுசெய்து முத்துகுமாரின் மரணத்தை தியாகம் என்று சொல்லி பாராட்டாதீர்கள். அது மற்றொரு தமிழனின் உயிரை பறிக்கலாம். முத்துகுமாருக்கு வேண்டுமானால் அது இறுதி போராட்டமாக தோன்றியிருகலாம், ஆனால் அது தான் இறுதி என்றால் இங்கே உயிர் விடவேண்டாம், வாருங்கள் போகலாம் ஈழத்திற்கு நம்மால் முடிந்த அளவு எதிரிகளை கொன்றுவிட்டு நாமும் உயிர்விடலாம்.

இதற்கும் தயாராக இல்லாதவர்கள் தயவுசெய்து கேடுகெட்ட அரசியல்வாதிகள் போல் விளம்பர அறிக்கை அரசியல் செய்து முத்துகுமாரின் மரணதை கேலி செய்யாதீர்கள். காரணம் எப்படியும் ஒரு வாரத்தில் முத்துகுமாரை நீங்கள் மறந்துவிட போகிறீர்கள்.

77 வாங்கிகட்டி கொண்டது:

SUBBU said...

Pls குறைந்த பட்சம் இடைக்காலமாக போரை நிறுத்தி அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழகதிற்கு வரவழைக்க சொல்லுவோம். நம் சகோதரர்களுக்கு நாம் இருக்க இடமும், உணவும் தருவோம். :(((((

நட்புடன் ஜமால் said...

\\ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!

முத்துகுமாரின் முடிவையும், அதன் பின் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும்\\

என்னாலும்.

Anonymous said...

wait for 2 or 3 days. all the mocks behind this muthukumaran stupidity will be exposed.

initial reports says that muthukumaran was trained as a suside fighter by LTTE. the tamil groups have paid 10 L ruppes to muthukumaran family.

the intention os very clear. to make confusions in tamilnadu and use the same for the selfish purposes of LTTE

Vidhya Chandrasekaran said...

\\ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!

முத்துகுமாரின் முடிவையும், அதன் பின் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும்\\

என்னாலும்:(

தாரணி பிரியா said...

இப்பொழுது தியாகங்கள் தேவை இல்லைதான். போராட்டங்கள்தான் தேவை.

KARTHIK said...

// காரணம் எப்படியும் ஒரு வாரத்தில் முத்துகுமாரை நீங்கள் மறந்துவிட போகிறீர்கள்.//

சரிதான்.

ராஜ நடராஜன் said...

வந்தேன்!

narsim said...

sb

ஜோசப் பால்ராஜ் said...

அட இங்க கூட ஒரு கதிரவன் வந்து ஒளி வீசிட்டுப் போயிருக்கே?

நாட்ல எது நடந்தாலும் புலிதான் காரணம்னு சொல்லுவீங்களாடா? சாவு வீட்லயுமா இவனுங்க சதி புத்திய காட்டுவானுங்க?

ராவணன் said...

முத்துக்குமார் தியாகம் எதுவும் செய்யவில்லை.

எங்கோ இந்திய நாட்டில்,கார்கில் பனியில்,தனது வேலை நேரத்தில், எதற்காகச் சாகின்றோம் எனத் தெரியாமல் செத்து அழிந்த சிலர்தான் பெரிய தியாகிகள்.

கிரி said...

//முத்துகுமாரின் ஒரு உயிர் அரசின் கவனத்தை கவருமேயானால், இத்தனை வருடமாக ஈழத்தில் செத்து கொண்டிருப்பது உயிரில்லையா? //

வழிமொழிகிறேன்

அரசியல்வாதிகள் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்வது எப்போது?

வால்பையன் said...

உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு நன்றி சுப்பு!

நன்றி ஜமால்

கதிரவன்!
எப்போதும் ஒரே கண்ணோட்டத்திலேயே பார்க்காதீர்கள், அதுவும் யூகத்தில்,
முத்துகுமாரின் மரணத்தை போற்றவேண்டாம் என்று தான் சொன்னேன், கேவலப்படுத்த சொல்லவில்லை.

நன்றி வித்யா

நன்றி தாரணிபிரியா
தனிதனியாக நடக்கும் போராட்டங்களை விட ஒரே நாள் அகில உலகே அதிரும் அளவுக்கு போராட்டம் இருக்கவேண்டும்

வால்பையன் said...

நன்றி கார்த்திக்

நன்றி ராஜநடராஜன்
என் கருத்துகளுடம் ஒத்து போகீரிர்கள் என்பது வந்ததிலிருந்தே தெரிகிறது

நன்றி நர்சிம்
உங்கள் பதிவை படித்த பின் தான் இந்த பதிவை எழிதவே தோன்றியது

நன்றி ஜோசப் பால்ராஜ்
குற்றம் கண்டே வாழ்ந்த நக்கிரன் பரம்பரையாக இருக்கும்

நன்றி ராவணன்
நீங்கள் சொல்வது சரிதான், நமது நாட்டு ராணுவ வீரர்களே உண்மையான வீரர்கள்.
ஆனால் வீரம் என்பது ஆயுதம் எந்துவதில் மட்டுமில்லையே!
எனது உரிமையை நான் ஏன் விட்டு கொடுக்கவேண்டும் என கடைசி வரை போராடுவதும் வீரமே!

அ.மு.செய்யது said...

"என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?"


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில்
முத்துக் குமரன் எழுதியிருந்தது...

அ.மு.செய்யது said...

கதிரவனுக்கு,

நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரியா ?? த‌வறா ?? என்ப‌தெல்லாம் யாருக்கும் வெளிச்ச‌ம் இல்லை.
ஆனால் அதை "stupidity" என்று சொல்லி கொச்சைப் ப‌டுத்துவ‌து
சுத்த‌ ".........." த‌ன‌ம்.

வாயிலேயே வ‌டை சுடுவ‌த‌ற்கு பெய‌ர் "initial reports" ஆஆ....

//the intention os very clear. to make confusions in tamilnadu and use the same for the selfish purposes of LTTE//

தமிழ்நாட்டில் குழப்பங்கள் ஏற்படுத்த அரசியல் வாதிகளும் உங்களைப் போன்ற‌
மொள்ளமாரி முடிச்சவிக்கிகளுமே போதும் என்ற உண்மை முத்துக்குமார‌னுக்கு
தெரிந்திருக்காது என்று சொல்கிறீர்க‌ளா ??

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒட்டுமொத்த ஈழதமிழர்களின் சார்பாக போராடுகிறார்கள்.//

எனக்கு தெரிந்து விடுதலைப்புலிகள் , பிரபாகரனை , ஒரு நாடு உருவாக்கி அதற்க்கு சர்வாதிகாரியாக ஆக்க போராடுகிறார்கள் !

இலங்கை தமிழரின் நலனுக்காக போராட்டம் என்றால் அவர்கள் இந்திய -இலங்கை அமைதி ஒப்பந்தம் நிறைவேற ஆதரவு தெரிவித்து இருப்பார்கள் !

வால்பையன் said...

நன்றி செய்யது!
நான் சொல்ல கூச்சப்பட்டேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

நன்றி பாஸ்கர்
சர்வாதிகாரி எந்த நாட்டுக்கு இலங்கைக்கா? அவர்கள் ஒட்டு மொத்த இலங்கையை குறி வைத்தது போல் தெரியவில்லையே! அவர்கள் கேட்பது தனீஈழம் தானே! அதற்கு யார் சர்வாதிகாரியாக இருந்தால் உங்களுக்கு என்ன?

இலங்கை இந்திய ஒப்பந்தம் இல்லாமலா இப்போது இந்திய ஆயுதம் அங்கே தமிழர்களை கொல்லுகிறது!
நீங்க என்ன சொல்ல வர்ரிங்கன்னு புரியலை, தயவுசெய்து விளக்கவும்

அ.மு.செய்யது said...

//முத்துகுமாரின் மரணத்தை போற்றவேண்டாம் என்று தான் சொன்னேன், கேவலப்படுத்த சொல்லவில்லை.
//

சரியாகச் சொன்னீர்கள்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அதற்கு யார் சர்வாதிகாரியாக இருந்தால் உங்களுக்கு என்ன?//

அப்புறம் ஏங்க இவ்வளவு கூப்பாடு இங்கே ?

இங்கே கூப்பாடு போடுரதாலே நாங்களும் எங்க கருத்தை சொல்லுறோம் !

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நாம் இதை பற்றி நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசலாம் !

Anonymous said...

who is world tamil"s guardian karunanithi no muththukkumaran

Anonymous said...

நிலமையை பார்த்தால் நீங்களே தமிழீழம் எடுத்து பிரபாகரனை சர்வாதிகாரியாக்கி இலங்கை தமிழர்களிடம் திணித்து விடுவீர்கள் போல் உள்ளது.

அரவிந்தன் said...

//எங்கோ இந்திய நாட்டில்,கார்கில் பனியில்,தனது வேலை நேரத்தில், எதற்காகச் சாகின்றோம் எனத் தெரியாமல் செத்து அழிந்த சிலர்தான் பெரிய தியாகிகள்//

கூலிக்கு இராணுவத்தில் வேலை செய்து உயிரழப்பவர்களுக்கும், உலக அளவில் மக்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்க்காகவும் வெந்து இறந்து போனவனும் ஒன்றா....

செத்தா இராணுவத்துல பதக்கம் மட்டும்தான், காசெல்லாம் கிடையாது என்று சொல்லிபாருங்க அப்புறம் தெரியும் உங்க கார்கில் தியாகிகள் நிலை

மணிகண்டன் said...

பிரச்சனை ஆரம்பித்தது இன்றோ நேற்றோ அல்ல...

ஆனால் இன்று தமிழகத்தில் முத்துகுமரன் தீயில் வெந்து சாகிறார். இதற்கு யார் காரணம் ? திடீரென்று உணர்ச்சி பொங்க எழுதும் பத்திரிகைகளும், உணர்ச்சிகளை தூண்டும் அரசியல் போராட்டங்களும்.

போரை நிறுத்துவோம், போரை நிறுத்துவோம் என்றால் என்ன அர்த்தம் ? இலங்கை ஆட்டி படைக்கும் சக்தி இந்திய அரசாங்கத்தின் கையில் இருக்கிறதா ? ஆயுதம் சப்ளை செய்வதை முழுவதும் நிறுத்தலாம். அதனால் ஒரு சிறுதுளி பாதிப்பாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுமா என்பது பெருத்த சந்தேகமே. இலங்கையில் இருந்து வரும் தமிழ் மக்களுக்கு இங்கு ஒரு நல்ல வாழ்வு அளிக்கலாம். இந்திய குடியுருமை உடனடியாக வழங்கலாம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். இவைகள் மட்டுமே இந்திய அரசாங்கத்தால் / தமிழக அரசால் இன்றைய சூழ்நிலையில் செய்ய முடிந்தவை.

2003 / 2004 சண்டை நிறுத்தத்தின் போது இந்த பிரச்சனை ஒரு கடைசி தீர்வை நோக்கி சென்றிருக்க வேண்டும். அதை தவற விட்டது ஒரு பிழை.

முத்துகுமரனின் இந்த செயல் தமிழக மக்களின் மெத்தன போக்கை ஒரு சிறிய அளவேனும் மாற்றி இருக்கிறது. இதை அரசியல் ஆக்காமல், கலைஞரை திட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக கருதாமல், மேலும் பல நாடுகளின் அரசாங்கத்திற்கும் உணர்த்தி ஐநா சபையின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

**** இந்த போராட்டங்கள் பத்தாது! உடனே தமிழக அரசை திரும்ப கோறுவோம். *****

இது போன்று எழுதுவதே மக்களின் மனதில் ஒருவித வெறுப்புணர்ச்சியை தூண்டுகிறது. யாரிடம் இருக்கிறது இந்த பலம் ? திரும்ப பெற்று என்ன செய்ய முடியும் ? அதற்கு பதிலாக யார் வருவார்கள் ? அவர்களால் என்ன செய்ய முடியும் ?

அனைத்து கட்சிகளும் ஒன்று கூடுவதற்கு உரிய மையபுள்ளியை நோக்கி நமது செயல்கள் இருக்க வேண்டும்.

முத்துகுமரனின் மரணம் நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய மரணத்திற்கான காரணம் "ஈழ தமிழரின் இன்றைய மோசமான நிலை". அதை மட்டும் முன்னிறுத்த வேண்டும். அவரது பிரசுரங்களை அல்ல. அவை கட்சிகள் ஒன்றுபடுவதை தடுக்கும். அவரும் உணர்ச்சி வேகத்தில் மக்கள் பேசுவது / எழுதவதை எல்லாம் நம்பிய நல்ல மனிதர். பான் கி மூன் சீனர் என்றும், ராஜீவ் காந்தியின் படுகொலை இன்டர்போல் விசாரணைக்கு செல்லவேண்டும் என்று அவர் சொல்லியதை ஒவ்வொருவரும் பிரசுரித்து வந்தால், ஒரே வாரத்தில் அவரது மைய கருத்தான "ஈழமக்களின் துயர் துடைப்போம்" பின்னுக்கு சென்றுவிடும். கதிரவன் போன்றவர்களின் கருத்து முன்னோக்கி நகரும்.

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பெரும்பான்மையான தமிழர்களின் உணர்வை நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

முன்னொரு காலத்தில் சோஷலிச கொள்கைகள் கொண்டிருந்த இந்தியா ஒரு ஏழை நாடாக இருந்தாலும் கூட உலகின் பல பகுதிகளில் இருந்த சுதந்திரப் போராட்டங்களுக்கு நேரடி மற்றும் மறைமுக ஆதரவு அளித்து வந்தது. உதாரணம், தென் ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம், கியூபா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ் போராட்டங்கள். ஆனால், இப்போது உலகின் பெரும் பணக்காரர்கள் வாழும் (ஆட்டிப் படைக்கும்) ஒரு காபிடளிச (ஆனால் இப்போதும் இந்தியா ஒரு பணக்கார நாடு அல்ல) மாறி விட்டதும், உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் பிரச்சினைகளை பொருளாதார கண்ணோடே பார்ப்பதாலேயே (அதுவும் சில தொழில் அதிபர்களின் தனிப் பட்ட லாபங்களுக்காக உதாரணம், கட்சா எண்ணெய், எரிவாயு, தொலைத் தொடர்பு போன்றவை) இப்போதெல்லாம், இந்தியாவின் பெயரை உலக அரசியல் அரங்கில் அதிகம் பார்க்க முடிவதில்லை.

இதே போல, முற்றிலும் வணிக மயமாக்கப் பட்டு விட்ட இந்தியாவின் தேசிய ஊடகங்களால், இலங்கைப் பிரச்சினை ஏதோ ஒரு நாட்டின் தீவிரவாதிகளுக்கும் அந்த நாட்டின் தேசிய அரசுக்கும் நடைபெறும் போராட்டமாகவே முன்வைக்கப் படுகிறது. மங்களூரில் நடைபெற்ற ஒரு அசம்பாவிதத்திற்கு பல மணி நேரம் ஒதுக்கிய இந்த ஊடகங்கள், முத்துக் குமார் உயிரிழப்பை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. இதுவும் இந்த பிரச்சினையில் காட்டப் படும் அலட்சியத்திற்கு ஒரு உதாரணம்.

வீணாபோனவன் said...

அருண்,
இந்த வாக்குவாதங்கள் தேவையற்றவை. பாஸ்கர் சொல்வதிலும் ஒர் நியாயம் உண்டு. எனக்கு தெரிந்து இலைங்கயிலே யாரும் தீக்கொண்றதாக இல்லை. ஓரே ஒருவன் அவன் பெயர் "திலீபன்" உண்ணா விரதம் இருந்து இறந்தான்." ஆனால் அவனது இறுதி மூச்சிக்கு நீங்க என்ன சொல்ல போறிங்க? இதே முத்துக்குமார், பத்திரிக்கையாளன்? இவனுக்கு தன்னை கஷ்ட்பட்டு வளர்த்து படிக்க வைத்த தனது தாய் தந்தயைரை எண்ணினானா? ஓரெ ஒரு கேள்வி அருண்,
நீங்க ஈழம்-ஈழம்நு அலையுரிங்க... அனா அங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா?. புலித்தோலை போர்த்திக்கின்னு தனது மனவி மக்கள் மட்டுமே நல்லா இருக்கனும்னு நினைக்கும் ஒரு நாதாரி..அந்த நாதாரியோட மகனும் மகளும் எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா? சும்மா பத்ரிக்கையை படித்துவிட்டு பதிவுகள் இட வேண்டாம் நண்பரே. இன்னும் ஒரு மாதம்...

Check here : http://thenee.com/

g said...

///புலித்தோலை போர்த்திக்கின்னு தனது மனவி மக்கள் மட்டுமே நல்லா இருக்கனும்னு நினைக்கும் ஒரு நாதாரி..அந்த நாதாரியோட மகனும் மகளும் எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா? சும்மா பத்ரிக்கையை படித்துவிட்டு பதிவுகள் இட வேண்டாம் நண்பரே. இன்னும் ஒரு மாதம்...///

சரியா விளங்கியிருக்கும்னு நம்பறேன்.

தேவன் மாயம் said...

இன்னோரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். புலிகள் ஒன்றும் பொழுது போகாமல் சண்டை போடவில்லை. அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒட்டுமொத்த ஈழதமிழர்களின் சார்பாக போராடுகிறார்கள். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாத சர்வதேச அரசியல்வாதிகளிடம் நியாயம் கேட்பது எள்ளலவும் பயன் தராது. சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை. அருகிலிருந்தே ஈழதமிழர்களை நாள்தோறும் அகதிகளாக சந்தித்தி கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்குமா தெரியவில்லை.///

அங்கு நன்றாக வாழ்ந்த தமிழர் இங்கு வந்து கஷ்டப்படுவதும் சகிக்க முடியவில்லை..

தேவா..

வெற்றி said...

//முத்துகுமாரின் ஒரு உயிர் அரசின் கவனத்தை கவருமேயானால், இத்தனை வருடமாக ஈழத்தில் செத்து கொண்டிருப்பது உயிரில்லையா?//

செவிட்டுல அடிச்சிட்டயே வால்(வளர்ந்த)பையா.

வெற்றி said...

//இந்த போராட்டங்கள் பத்தாது! உடனே தமிழக அரசை திரும்ப கோறுவோம். ஈழதமிழர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்க தயாராக இருப்பவர்களுக்கே ஆதரவு என குரல் கொடுப்போம். ஒன்றுமே செய்யமுடியவில்லையா! குறைந்த பட்சம் இடைக்காலமாக போரை நிறுத்தி அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழகதிற்கு வரவழைக்க சொல்லுவோம். நம் சகோதரர்களுக்கு நாம் இருக்க இடமும், உணவும் தருவோம்.//

உமக்கு இருக்கும் இந்த தீர்க்கமான எண்ணங்கள் நாம் ஓட்டளித்த தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது வெட்கக் கேடு.

வீணாபோனவன் said...

அருண்,
இந்த வாக்குவாதங்கள் தேவையற்றவை. பாஸ்கர் சொல்வதிலும் ஒர் நியாயம் உண்டு. எனக்கு தெரிந்து இலங்கையிலே யாரும் தீக்குளித்ததாக இல்லை (Please correct me if I'm wrong (with proof!)) ஓரே ஒருவன், அவன் பெயர் "திலீபன்" உண்ணா விரதம்" இருந்து இறந்தான். ஆனால் அவனது இறுதி மூச்சிக்கு நீங்க என்ன சொல்ல போறிங்க? இதே முத்துக்குமார், பத்திரிக்கையாளன்??? இவன், தன்னை கஷ்ட்பட்டு வளர்த்து படிக்க வைத்த தனது தாய் தந்தையரை சற்றும் நினைத்துப் பார்த்தானா?? 26 வயதே நிரம்பிய ஒருவன் ஏதோ 1965'ல் நடந்ததை, தான் கண்முன் நின்று பார்த்ததுபோல் வர்ண்ணம் காட்டிவிட்டான். அதைப் பார்த்து, முதுகெளும்பு இல்லாத 'பு...' நெடுமாரன், வைக்கோல் மற்றும் பல "சோ"மாரிகள் (நன்றி: கோவி.கண்ணன்) கை தட்டுறாங்க. இவ்வளவு தான்... பாருங்க:

http://www.hindu.com/2009/01/31/stories/2009013153920400.htm

இதில் இது வேற: http://www.sibernews.com/200901301508/

“We wish to convey our deepest condolence"

"condolence"-ல எப்படிங்க "wish"வரும்??? யாராச்சும் வேளக்குங்கப்பா...

இன்னும் இங்க: http://defence.lk/new.asp?fname=20090131_02

மேலும் இங்க: http://thenee.com/html/310109-2.html


1981 நான் முதல் முறையாக யாழ்ப்பாணம் சென்றேன், எனது தாய்மாமனாரின் திறுமணத்திற்காக... இடம்: ஈசெமோட(இன்னும் ஒரு "யன்" சேர்த்தால் சிங்களத்தில் வேரு பொருள்) அன்று அப்போதும் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. 1983, கலவரம்...பார்திருக்கிங்கலா?? நான் பார்திருக்கிறேன். யாரால் இந்த கலவரம்? சற்று யோசியும் சகோதரா... இதே வடக்கத்தையான் தான் அன்று என் மலைநாட்டவரை (இந்தியத் தமிழரை வடக்கதியான் என்று கூரியவன்) வேற்று நாட்டான் போல் பார்த்தவன் இந்த ஈழ் டமிலன். இன்று உங்களிடம் அகதியாய்...


ஒரே ஒரு கேள்வி அருண், நீங்க ஈழம்-ஈழம்னு பேசுறிங்க... ஆனால் அங்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா?. புலித்தோலை போர்த்திக்கின்னு தனது மனைவி பிள்ளைகள் மட்டுமே நல்லா இருக்கனும்னு நினைக்கும் ஒரு நாதாரி..அந்த நாதாரியோட மகனும் மகளும் எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா? சும்மா பத்ரிக்கையை படித்துவிட்டு பதிவுகள் இட வேண்டாம் நண்பரே. இன்னும் ஒரு மாதம் பொருத்திருபோமே... முடிவு தானாக வரும்.

நட்புடன்,
வீணாபோனவன்

வால்பையன் said...

நண்பர்களுக்கு,

ஈழம் பற்றிய பிரச்சனையில் எனது கருத்துகளை கூறியுள்ளேனே தவிர இது தான் முடிவு என்று சொல்லவரவில்லை.
மேலும் இழ்ழம் பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதியுண்டா என்றால் எனக்கே சந்தேகம் தான். காரணம் அவர்களின் சரித்திரம் எனக்கு முழுமையாக தெரியாது.

நான் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக சொல்லவரவில்லை. அவர்கள் தான் ஈழ மக்களின் சுதந்திரத்துக்கு காரணமாக இருப்பார்கள் என்பதிலும் நம்பிக்கை இல்லை.

பிரபாகரன் தனிப்பட்ட வாழ்வில் சுயநலவாதியாக இருக்கிறார் என்பதிலும் எனது கருத்து ஒன்றுமில்லை. ஆனால் சர்வாதிகராம் என்று வார்த்தை கொஞ்சம் மிகைபடுத்தபட்ட மாதிரி தெரிகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்பை பற்றி பேசினாலே கைது செய்யும் இந்திய அரசை வேண்டுமானால் சர்வாதிகராம் என்று சொல்லலாம்.

விவாதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஈழமக்கள் இனி கொல்லப்படாமல் இருந்தால் போதும்

Poornima Saravana kumar said...

முத்துகுமாரின் ஒரு உயிர் அரசின் கவனத்தை கவருமேயானால், இத்தனை வருடமாக ஈழத்தில் செத்து கொண்டிருப்பது உயிரில்லையா?

வால்பையன் said...

கருத்து மோதல் வாத தெளிவுக்கு தான் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள அல்ல!

தயவுசெய்து அனானிகள் அதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்!

உங்கள் கருத்துகளில் நியாயம் இருந்தாலும் அதை நீங்கள் சொல்லும் முறையில் அந்த நியாயம் செத்து போக வாய்ப்புண்டு!

Anonymous said...

முதலில் எழுத்துப் பிழைகளின்றி எழுதப் பழகுங்கள் வால்,பின்னர் கருத்துக்கள் சொல்லலாம்!

வால்பையன் said...

//முதலில் எழுத்துப் பிழைகளின்றி எழுதப் பழகுங்கள் வால்,பின்னர் கருத்துக்கள் சொல்லலாம்! //

எந்த இடத்தில் தவறு செய்கிறேன் என்றே தெரியாமல் எப்படி திருத்தி கொள்வது!
எனக்கும் ஆசை தான் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று!

நேரம் இருப்பின் கொஞ்சம் தவறுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்.

g said...

///இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க///


வரவர தவறே இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்து வருகிறீர்கள். வெகுவிரைவில் தவறில்லாமல் தட்டச்சு செய்தாலும் வியப்பதற்கில்லை.

Anonymous said...

>>எந்த இடத்தில் தவறு செய்கிறேன் என்றே தெரியாமல் எப்படி திருத்தி கொள்வது!
எனக்கும் ஆசை தான் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று!

நேரம் இருப்பின் கொஞ்சம் தவறுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்.>>

ஒன்றிரண்டா,சுட்ட முயற்சிக்க! இருப்பினும் முயற்சிக்கிறேன்.


தமிழிழத்திற்க்கான=தமிழீழத்திற்கான
வெகு ஆளமாகவே=வெகு ஆழமாகவே
தமிழிழத்திற்க்காக=

துர்பாக்கிய=துர்ப்பாக்கிய
எள்ளலவும்=எள்ளளவும்
ஈழதமிழர்களை=ஈழத்தமிழர்
சந்தித்தி=சந்தித்துக்
கவனதை திருப்புமா=கவனத்தைத் திருப்புமா
கயவர்களிம் மனதை=கயவர்களின் மனதை
தோன்றியிருகலாம்=தோன்றியிருக்கலாம்
முத்துகுமாரின் மரணதை=முத்துக்குமாரின் மரணத்தை
மறந்துவிட போகிறீர்கள்=மறந்துவிடப் போகிறீர்கள்...

எழுதியபின் மீண்டுமொரு முறை படித்துப் பாருங்கள்.

அல்லது டோண்டு உங்கள் நண்பர்தானே,எழுதியபின் ஒவ்வொரு முறையும் பிழைதிருத்தித் தரச்சொல்லுங்கள்!

அவ்வ்வ்வ்..

g said...

இதுதான் இறுதி போராட்டம். இதற்குமேல் இறுதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வேறு வார்த்தையே இல்லையே...!

Anonymous said...

It is wrong to say that international conutries banned LTTE
after the death of Rajiv Ghandi.
It was India which banned it first after his deathi 1991.
It was banned in USA in 1997.
it was banned in UK in 2001.
UK and USA bans came after intense lobbying by then foreign secretary Kathirkamar who had friends in high places.
kathirkamar was a tamil educated in UK.
sinhalese love him,but tamils hate him.
Then while the peace talk was still on Canada and European union banned LTTE in 2006.
Many countries in europe wasn't happy about this ban ,they thought it will jeopardize the peace talks,but pressure from Bush administration made the EU to ban it.people also say that sonia administration was behind it as well.
Anyway there are nearly 200 countries in the world.LTTE was banned by 30 countries.(EU has 27 members )
the reason behind these bans are purely political.
it is nothing to do with right or wrong or terrorism.

Anonymous said...

\ஆனால் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை!

முத்துகுமாரின் முடிவையும், அதன் பின் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும்\\

நியாயமான வாதம்......

Anonymous said...

அவன் உண்ம யாகவே இலங்கை தமிழருக்க செத்தான் எண்டால் அவன் உயரோடு இருக்க வண்டிய அவசியமே இல்லை, அப்படி பட கிறுக்கன் இந்த ந டுக்கு தேவை இல்லை

Anonymous said...

Dear Friends I am posting this for your comments.
Thanks
Nanpan

“On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message, emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He [Rajiv Gandhi] has given those instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’ - Intervention in Sri Lanka: The IPKF Experience Retold
Major General Harkirat Singh (Retd.)

Anonymous said...

இந்த போராட்டங்கள் பத்தாது! உடனே தமிழக அரசை திரும்ப கோறுவோம். ஈழதமிழர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்க தயாராக இருப்பவர்களுக்கே ஆதரவு என குரல் கொடுப்போம். ஒன்றுமே செய்யமுடியவில்லையா! குறைந்த பட்சம் இடைக்காலமாக போரை நிறுத்தி அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழகதிற்கு வரவழைக்க சொல்லுவோம். நம் சகோதரர்களுக்கு நாம் இருக்க இடமும், உணவும் தருவோம்.//
தெளிவான சிந்தனை ...சரியான முடிவு.ஆனா இதெல்லாம் நடக்குமா ன்னு தெரியல ...

Anonymous said...

விவாதம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஈழமக்கள் இனி கொல்லப்படாமல் இருந்தால் போதும்//
correctu

Anonymous said...

Dear friends
I am submitting more background info on why Indo Lanka accord failed & what actually happened based on true event & statements that were made by people involved.
Nanpan


Somewhere around August 15, 1987, in one of my meetings with Prabakaran in Jaffna, he mentioned that the LTTE had positive information that the Research and Analysis Wing [RAW] was inciting the other Tamil militant groups, especially the recently created Tri-Star Group [through the merger of TELO, EPRLF and ENDLF] to attack LTTE cadres as the latter became progressively weaker following handing over their weapons. This was a serious allegation and was conveyed to army headquarters that evening for investigation and an early reply. The next day brought a categorical denial which, in turn, was conveyed to Prabakaran, who told me politely that since I was denying it, he believed me, but what Delhi had reported to me was incorrect and therefore he stood by his allegation." The IPKF in Sri Lanka by Lieutenant-General Depinder Singh, page 56

Source -
Intervention in Sri Lanka: The IPKF Experience Retold.
By Major General Harkirat Singh (Retd.)

Anonymous said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

Anonymous said...

இலங்கை தமிழருக்கு இந்திய மக்கள் அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது. அதேநேரம் ஒரு சில அதிகாரிகளின் பிழைகளினால் சொல்லான துயரங்கள் நேர்ந்தது. அன்னை இந்திரா அல்லது தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் இருந்திருந்தால் சரித்திரம் மாறி அமைந்திருக்கும்

அண்ணன் வினபோனவன் கெட்ட கேள்வி "புலித்தோல் போர்த்தி ஒருத்தர் தன் பிள்ளை மனைவி சந்தோசம் தான் முக்கியம்" அதுக்கு இதோ பதில்
நான் சொல்ல இல்லை சொல்லுவது இந்தியன் ராணுவ தளபதி ஹரிகிட் சிங்

"When the accord was signed between Rajiv & Jayawardane, Prabhakaran was under house arrest guarded by black cats and RAW. Due to increasing pressure from people in north & east of sri lanka we had to bring him to Jaffna .
When Prabhakaran's aircraft landed in Jaffna with Prabhakaran and his bodyguards, his wife and children, Kitu, whose leg was blown up, who was his right hand then. The air force pilot wanted a receipt from me saying that I received these souls safely. Then I was told that you will ensure that he reaches safely to Jaffna town and handed over to his people. I said, Fine. We ensured that. We put him and the others in various APCs [armoured personnel carriers] so that if one is blown off, the other is alive. We took them through the Sri Lankan lines to Jaffna.
I told my staff, take a receipt from Mahathiah that he has received Prabhakaran. These are normal formalities. After all, Prabhakaran is not a small man. He is the leader, a charismatic leader of the LTTE. His life is very precious. And a very simple man. No bullshit about him. His wife lived with three saris -- one she wore, one she washed and one was ready to wear. That is all. They never drank Coca-Cola. They offered us Coca-Cola, but never drank it themselves. They drank that goliwala soda."

Anonymous said...

//நன்றி செய்யது!
நான் சொல்ல கூச்சப்பட்டேன்//
நல்லா கூச்சப்பட்டீங்கண்ணா ! ஆனா பிழையா தமிழ் எழுதும் போது மட்டும் எதுவுமே வராது போலிருக்கு. ஊருக்கு உபதேசம் செய்றதுக்கு முன்னால அதுவும் தமிழ், தமிழான்னு உருகுவதற்கு முன்னால தவறின்றி தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். ஆங்காங்கே தவறு இருந்தால் பரவாயில்லை, தடுக்கி விழுந்தால் தவறு தான் இருக்கிறது. ஒற்று எழுத்தில் ஒரு வாக்கியம் தொடங்குவதை எப்படி பொறுத்துக் கொள்வது. ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாய் தமிழ் மென்பொருள், விசைப் பலகை என்று கூறி ஒதுங்கக் கூடாது. சொந்த தாய் மொழியின் மீது மதிப்போ மரியாதையோ இல்லை என்ற நிலை அசிங்கம், முதலில் நீங்கள் தமிழனுக்கு செய்ய வேண்டிய உதவி தப்பில்லாமல் எழுதப் படிப்பதே. வருகிற மறு மொழிகளுக்கெல்லாம் பதில் எழுத நேரம் இருக்கிறது ஆனால் எழுதிய பதிவை திருப்பி பார்க்கக் கூட நேரம் இல்லை. (பார்த்தாலும் என்ன பெரிதாய் தெரிந்துவிடப் போகிறது.)
தப்பும் தவறுமாக சொன்னாலும் கருத்திலும் தெளிவு இல்லை. பதிவுல ஒன்னு பின்னூட்டத்தில் வேற.

விதியை நொந்தவன்

வால்பையன் said...

பிழைகளை திருத்தி கொடுத்த அனானி நண்பருக்கு நன்றி!

இனி கண்டிப்பாக ஒருமுறைக்கு இருமுறை படித்த பின்னே வெளியிடுகிறேன்.

தமிழில் ல,ள,ர,ற போன்ற எழுத்துகள் வரும் இடங்களில் எனக்கு அதிக தகராறு ஏற்படுகிறது.

திருத்திக்கொள்கிறேன்

வால்பையன் said...

நன்றி ஜிம்ஷா

நன்றி அனானி
தமிழே எனக்கு தகராறு, நீங்க ஆங்கிலத்துல இம்மாம் பெருசா பின்னூட்டம் போட்டுருக்கிங்க!
யாராவது மொழிபெயர்த்து சொல்லங்கப்பு

நன்றி கவின்

வால்பையன் said...

//Anonymous said...

அவன் உண்ம யாகவே இலங்கை தமிழருக்க செத்தான் எண்டால் அவன் உயரோடு இருக்க வண்டிய அவசியமே இல்லை, அப்படி பட கிறுக்கன் இந்த ந டுக்கு தேவை இல்லை//

உங்கள் பக்க கருத்துகளை கொஞ்சம் விரிவாக, விளக்கமாக கூறினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!

வால்பையன் said...

நன்றி சதீஷ்குமார்

வால்பையன் said...

கடைசியாக பின்னூட்டம் இட்ட அனானிக்கு!

நான் தமிழில் எழுதவே லாயக்கற்றவன்!
பள்ளி வகுப்பறையில் கடைசி இருக்கை மாணவன் நான், சரியாக படிப்பு வராததால் ஒன்பதாம் வகுப்போடு நிறுத்தி கொண்டேன்.
மாறி வரும் கணிணி உலகில் கடிதம் எழுதும் முறை அழிந்து வருகிறது, அதனால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். படிக்கும் காலத்திலேயே ஒழுங்காக படித்திருந்தால் குறைந்தபட்சம் பிழை இல்லாமல் எழுதவாவது தெரிந்திருக்கும். ஆனால் பாருங்கள் எனது அப்பாவுக்கு படிக்ககூட தெரியாது,
அவருக்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டமெல்லாம் தெரிந்திருக்கிறது.
ந்மக்காக தான் எதோ செய்கிறார்கள் என்று இன்று வரை கழக ஆதரவாளராக இருக்கிறார். அந்த மட்டில் பிழையாக எழுதுவதால் தமிழின உணர்வு அற்று இருக்கவேண்டும் என்ற உங்களின் கருத்தில் இருந்து விலகி நிற்கிறேன்.

//தப்பும் தவறுமாக சொன்னாலும் கருத்திலும் தெளிவு இல்லை. பதிவுல ஒன்னு பின்னூட்டத்தில் வேற.//

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று சொல்லும் மூட கருத்துகள் உடயவனல்ல நான்,
எனது கருத்து தவறென்று யாராவது ஆதரத்துடன் நிறுபித்தால் எனது தோல்வியை ஒப்புகொண்டு சமரசம் செய்து கொள்வது எனக்கு பழக்கம்.
இது போல் நிறைய தடவை எனது வலைப்பூவில் நடந்திருக்கிறது.

ஒன்றை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகு தான் பதிவெழுத வேண்டுமென்றால் என்னால் முடியாது.
காரணம் அந்த ஒன்றை நான் தெரிந்து கொள்வதே தவறான பதிவில் வரும் பின்னூட்டத்தில் தான்.

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

என்னால் நொந்துபோனதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்

வீணாபோனவன் said...

///
அண்ணன் வினபோனவன் கெட்ட கேள்வி "புலித்தோல் போர்த்தி ஒருத்தர் தன் பிள்ளை மனைவி சந்தோசம் தான் முக்கியம்" //

டேய் நாயே... அது வினபோனவன் அல்ல "வீணாபோனவன்"


"கெட்ட கேள்வி" அல்ல கேட்ட கேள்வி நீ எல்லாம் ஒரு ஈழத்-தமிழனா? தூ... நாயே... உனக்கும் உன்ன்னோட...

அதுக்கு இதோ பதில்
நான் சொல்ல இல்லை சொல்லுவது இந்தியன் ராணுவ தளபதி ஹரிகிட் சிங் //


My response here:
First learn English. After that earn Thamil.

நான் கேட்ட கேள்விற்கு ஒரு பாமர பணங்காய் சொல்லுது "மதிவதனி" மூனு (3) சேலை தான் வட்சிரிந்தனமாம் (பணங்கொட்டை) அதை நாமும் நம்பனுமாம். அந்த மூனில் ஒன்றை இவர் தான் சொறிகி விட்டார் போல...
அடே அனானி, Ceylon-il எங்கு உள்ளது goliwala soda??

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...

///
அண்ணன் வினபோனவன் கெட்ட கேள்வி "புலித்தோல் போர்த்தி ஒருத்தர் தன் பிள்ளை மனைவி சந்தோசம் தான் முக்கியம்" //

டேய் நாயே... அது வினபோனவன் அல்ல "வீணாபோனவன்"


"கெட்ட கேள்வி" அல்ல கேட்ட கேள்வி நீ எல்லாம் ஒரு ஈழத்-தமிழனா? தூ... நாயே... உனக்கும் உன்ன்னோட...

அதுக்கு இதோ பதில்
நான் சொல்ல இல்லை சொல்லுவது இந்தியன் ராணுவ தளபதி ஹரிகிட் சிங் //


My response here:
First learn English. After that earn Thamil.

நான் கேட்ட கேள்விற்கு ஒரு பாமர பணங்காய் சொல்லுது "மதிவதனி" மூனு (3) சேலை தான் வட்சிரிந்தனமாம் (பணங்கொட்டை) அதை நாமும் நம்பனுமாம். அந்த மூனில் ஒன்றை இவர் தான் சொறிகி விட்டார் போல...
அடே அனானி, Ceylon-il எங்கு உள்ளது goliwala soda??

-வீணாபோனவன்.

Anonymous said...

வால்,
உங்கள் பதிலை டோண்டுவின் பதிவில்
தான் பார்த்தேன்.
கருத்துக்களை மாற்றிக் கொள்வதை பற்றி எழுதியதற்கு நன்றி. ஏற்புடையதே.

ஆனால் தமிழ் தகராறாய் எழுதுவதற்கு சொன்னவை வெறும் காரணங்களே.
தன்னைத் தானே பார்த்துப் பரிதாபப் படுவதை முதலில் விடுங்கள்.
கடைசி பெஞ்ச் நடு பெஞ்ச் எல்லாம் கணக்கே இல்லை. முதல் ராங்க் வாங்கிய பெரும்பாலானோர் வாழ்வில் பிரகாசிக்கவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் 11 வயதில் இருந்து பனிபுரிகிறார். எனக்கு முறைப்படி பள்ளி செல்ல முடியலை என்று சொல்லிக் கொண்டிருந்தால் இப்போதும் கூட சராசரி கீ போர்ட் ஆர்டிஸ்டாக இருந்திருப்பார்.
நானும் உங்களைப் போல தான். ஆனால் +2 வரைப் படித்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை எனக்கு வாய்ப்பாடே தெரியாது. வங்கி வட்டி எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தொழில் தொடங்கும் வரை தெரியாது. தொழில் தொடங்கிய பிறகும் கற்றுக் கொள்ளாவிட்டால் ஆப்பு கிடைத்திருக்கும்.
பூக்களில் இருந்து எக்ஸ்டாராக்ட் எடுத்து பிரான்ஸ், நெதர்லாந்து, சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்பவது என் தொழில். ஒரளவுக்கே ஆங்கிலம். ஆனாலும் குறையொன்றுமில்லை.
மனிதர்கள் உலகின் பல பாகங்களில் கஷ்டப்படுகிறார்கள். திபேத், பாலஸ்தீன் என பல இடங்களில் துயரம் தொடர்கதை தான். அதைப் பற்றி யாரும் இங்கே பேசுவதில்லை. ஆனால் சிலோன் விஷயத்தில் உங்களை ஈர்ப்பது அந்த so called தகவல் தொடர்பு சாதனம் தானே . அதை கொஞ்சம் சிரத்தை எடுத்து கற்றுக் கொள்வது தானே முறை.
வள்ளுவர் சொல்லியது போல, உங்களுடைய தவறைத் தவறு என்று சுட்டுபவனே நல்ல நண்பன். தவறு செய்யும் போது உங்களை ஆதரிப்பவன், உங்களின் முன்னேற்றத்தில் சிறிதும் அக்கறை இல்லாதவன்.
நன்றி.

விதியை நொந்தவன்.

வால்பையன் said...

//தன்னைத் தானே பார்த்துப் பரிதாபப் படுவதை முதலில் விடுங்கள்.//

இந்த உலகிலேயே நான் அதிகம் விரும்புவது என்னைத்தான்.

பரிதாபமெல்லாம் கிடையாது,
கற்றது குறைவு என்று நினைக்கும் போது தான் கற்ற ஆர்வம் கூடும். மற்றபடி என்னை விட சிறந்தவனுமில்லை, என்னை விட தாழ்ந்தவனுமில்லை

நன்றி

Anonymous said...

சரி சரி
நீங்கள் அண்ணன் "வீணாபோனவன்" தான்.
சந்தோசமா ?
:-)
நீங்கள் யாழ்ப்பாணம் பற்றி தெரிந்த மாதிரி கதைத்தால் நான் மேலதிக விளக்கம் தரவில்லை.
புலிகள் உள்நாட்டு உற்பத்தியான பொருட்களை முலம் நெல்லி பழச்சாறு, மாம் பழச்சாறு goliwala சோடா தயாரித்தனர். அவர்களின் பல் பொருளங்கடிஇன்
பெயர் சுரபி.

By you saying things like this show that you have no substance. Further its a known fact that she has been living in the war zone since 1984. His son Charles Anthony (Named after a freedom fighter) is one of the LTTE air force pilot.
I am sure you have no political or historical knowledge of the sri lankan civil war. Talking further will expose your intellectual and moral bankruptcy.
Please respect the Others who are on the blog.

Anonymous said...

Dear Veenaponavan
By The way are you referring Major General Harkirat Singh (Retd.) as a பாமரன் ?
Do you know what it takes to be a major General ?
I Guess not.
Most of the major general, have a minimum of 22-25 years of active service as a officer. They are in most cases qualified them self in defence studies equalant to a PHD. Commanding an army is no joke.
Army structure
Major General - Brigadier – Colonel - Lieutenant Colonel - Major - Captain - Lieutenant Second lieutenant - Officer Cadet
Your words should paint a picture of who you are and what you believe in, You knowledge should be used to share them. - Mahathma Gandhi
So my friend chose your words carefully as they will expose you.

வீணாபோனவன் said...

Muhil said...

//சரி சரி
நீங்கள் அண்ணன் "வீணாபோனவன்" தான். சந்தோசமா ? //

நான் உங்களை போல் வீண்வருடியாய் இருப்பதை விட வீணாபோனவனாகவே இருந்துவிட்டு போகிறேன். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

//நீங்கள் யாழ்ப்பாணம் பற்றி தெரிந்த மாதிரி கதைத்தால் நான் மேலதிக விளக்கம் தரவில்லை //

ஏன் பயமா???

//புலிகள் உள்நாட்டு உற்பத்தியான பொருட்களை முலம் நெல்லி பழச்சாறு, மாம் பழச்சாறு goliwala சோடா தயாரித்தனர். அவர்களின் பல் பொருளங்கடிஇன்
பெயர் சுரபி. //

அது முலம் அல்ல "மூலம்"!!!

அவர்களின் பல் அல்ல "பல" :-)

பொருளங்கடிஇன் அல்ல பொருள்ளங்காடி


நெல்லி பழச்சாறு => Nelli-Crush??? நீ பிறக்கும் முன்பே அதை குடித்து வளர்ந்தவன் நான்... ஆக மொத்தமாக நீர் இந்த மூன்று கலைவைகள் தான் goliwala சோடான்னு??? இருப்பினும், அதே அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் மற்றும் அநியாயமாக போகவேண்டிய அடேல் பரதேசியும் இதை தான் குடிட்ச்சாங்களா? சகோதரா சகோதரா என்று வாரி அனைச்சிங்களே.. இப்ப அதே கர்ணா உங்களுக்கு எதிரியா?. இன்றோ நாளையோ உனது தலைக்கு ஆப்பு இருக்கு.. உன் போல் விரல் சூப்பிகினு இருப்பவன் நான் அல்ல...
இங்கே பார்: http://defence.lk/new.asp?fname=20090206_09

//By you saying//
முடியல...ரொம்ப கஷ்டமா இருக்கு.. இவன் தன் தாய் மொழியை தான் கொல்கிறான் என்றால் வேற்று மொழியையும் வேறு கொல்கிறான்.

//
By you saying things like this show that you have no substance. Further its a known fact that she has been living in the war zone since 1984. His son Charles Anthony (Named after a freedom fighter) is one of the LTTE air force pilot.
I am sure you have no political or historical knowledge of the sri lankan civil war. Talking further will expose your intellectual and moral bankruptcy.
Please respect the Others who are on the blog.//

First of all why don't you go back to UKG and study some English as well as some basic தமிழ்? Then we can discuss further. You are such a nuisance values. Oops! some one calling you for a Pizza delivery. Take care of that, if not, having said that, you may end-up in பட்சை.

-வீணாபோனவன்

வீணாபோனவன் said...

Muhil said...
Dear Veenaponavan
By The way are you referring Major General Harkirat Singh (Retd.) as a பாமரன் ? Do you know what it takes to be a major General ?
I Guess not.
Most of the major general, have a minimum of 22-25 years of active service as a officer. They are in most cases qualified them self in defence studies equalant to a PHD. Commanding an army is no joke. Army structure Major General - Brigadier – Colonel - Lieutenant Colonel - Major - Captain - lieutenant Second lieutenant - Officer Cadet Your words should paint a picture of who you are and what you believe in, You knowledge should be used to share them. - Mahathma Gandhi So my friend chose your words carefully as they will expose you. //

இதெல்லாம் பொறுப்பற்ற கேள்விகள்.. சரித்திரங்களை ஆராய்ந்து பார்.. பின் வாதாடலாம்.

-வீணாபோனவன்.

வீணாபோனவன் said...

விதியை நொந்தவன்... please wait next day or two... I will post my views... வால் பையன் ungalukum thaan :-)

-வீணாபோனவன்

Anonymous said...

அன்புள்ள வீணாபோனவன்
உங்கள் வார்த்தைகள் வெட்டு வெடி மாத்திரம் தானா ?
உங்கள் பதிலை நீங்களே வசித்து பாருங்கள், அதில் சும்மா அந்தோணி பாலசிங்கம் பற்றி எழுதி உங்கள் அறிவின்மையை கட்டதிர். எழுத்து பிழை கண்டு பிடிக்கும் உங்களால் ஏன் பொருட் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை.
யாழ்ப்பாணம் பற்றி தெரிந்த யாவும் எழுத காலம் உள்ளது.

கலவரம் நடக்கும் பொது நீங்கள் அண்ணா செய்தீர் ?
தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர் ?
கருணா பற்றி என்ன தெரியும் ?
போராட்ட வரலாறு தெரியாமல் போனால் யன் என்ன செய்ய ?

Anonymous said...

some one calling you for a Pizza delivery. Take care of that, if not, having said that, you may end-up in பட்சை.
Not sure what பட்சை is ?
But i am sure you are doing a worse job pretending to be a consultant, what can some one consult you on may be on Kothurotti making? :-)

isthat you fathers company who gave the job?

Anonymous said...

யுத்தம் என்று வந்தால் முன் வரிசையில் தமிழன், ஆனால் அவன் உரிமைக்கு அவன் நாய் பாடு படவேண்டும் - தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று பட்டால் தமிழனக்கு வெற்றி நிச்சயம்.

வீணாபோனவன் said...

Anonymous said...
// ஆனால் தமிழ் தகராறாய் எழுதுவதற்கு சொன்னவை வெறும் காரணங்களே.
தன்னைத் தானே பார்த்துப் பரிதாபப் படுவதை முதலில் விடுங்கள்.//

மன்னிக்கவும் அனானி. பிழைகளை யாரும் விடலாம். ஏன் நீங்கள் மட்டும் பிழைவிடவில்லையா?

"தமிழ் தகராறாய்" => இது சொற்குற்றம் ஆகாதா?

1989-இல் மிகத்தீவிரமாக ஒரு தமிழ் தட்டச்சி தயார்செய்தேன். இலங்கையில் அன்று கணனிகள் மிகவும் குறைவாக இருந்த காலமது.ஆகவே அது எடுபடவில்லை. இருப்பினும், விடாமுயற்சியால் மீண்டும் ஒரு தமிழ் மென்பொருளை (using Pascal 5.0 / MASM 8086) 1991-இல் அமீரகத்தில் பணிபுரியும்போது BBS ஊடாக வெளியிட்டேன். நல்ல பின்னூட்டங்கள் கிடைத்தன, இருப்பினும் எனக்கு அது மகிழ்ச்சி தரவில்லை. இன்று,Unicode (http://unicode.org) மூலமாக எம்மால் கருத்துப்பரிமாற முடிகின்றது.ஏன் இதை சொல்கிறேன் என்றால், தமிழில் பிழையின்றி தட்டச்சி பண்ணுவது சற்று கடினம் நண்பா... மன்னிக்கவும். இதுபோன்ற சாதரண எழுத்துப்பிழைகளால் எமது தமிழ் ஒன்றும் அழிந்துவிடப்போவதில்லை. வால் பையன் எனது நண்பர் மட்டுமல்ல, என் கூடபிறவா சகோதரன். அவர் கறுத்தில் எனக்கு என்றுமே உடன்பாடுதான்.


அருண், நீங்களும் பதிவுகள் + பின்னூட்டம் இடும் முன் ஒரு Draft பாருங்க...in that way இப்படிப்பட்ட தண்டனைகளை தவிர்க்கலாம் :-)

-வீணாபோனவன்.

Anonymous said...

வீணாபோனவன் சொல்லறத பாத்த கத புதுசா இருக்கே
சரி ...
நீங்க சொன்ன கதை படி பார்த்தால் ஸ்ரீ லங்கவில் புலிகள் அழிந்தால் சமாதனம் என்றால்
புலிகள் ஏன் உருவானார்கள் ?
புன்னகை மன்னன்

வீணாபோனவன் said...

பெயரிகளே பெயருடன் வாரும் அதன்பின் உம்முடன் பேசத்தயார்.. பெயர் அற்றவருக்கு வேரு பெயர்... சொல்ல்லனுமா???

-வீணாபோவன்.

Anonymous said...

தட்டச்சி கதை வீடுரர், அரசியல் கத விடுறார் கேள்வி கேட்ட சத்தமில்லை.
"மௌனமான நேரம் உங்கள் மனதில் என்ன பாரம் ?"
பெயர வச்சி என்ன செய்ய போறீங்க ?
மஹிந்தா வுக்கு சொல்லி என்ன துக்க போரிங்கள?
கொத்து ரொட்டி மாமா சும்மா பதில் சொல்லுங்க

Anonymous said...

சாப்பிட்டு பலநாள், உம்மில் நீரும் உணவாகிறது,
உடம்பில் உள்ள காயத்தை விட மனதில் உள்ளகாயம் வலிக்கிறது
என் குருதியின் வாடை என் நாசியை துளைக்கிறது
நாளை வரை என் உயிர் தங்குமா தெரியாது,
ஆனாலும் சோர்வில்லை தோழா
எங்களுக்காக நீ என்னுயிர் நீத்து
சவினிலும் தமிழ் மணக்க சாக வேண்டும்
என்று கட்டியது புத்துயிர் தருகிறது
உன் மனித நேயம் மெய் சிலிர்கிறது
என் கண்களில் கண்ணீர் உனக்காக
நன்றிஉடன் . . . . .

சந்திப்போம்

-

Anonymous said...

வீணாபோனவரே உங்கள் கருத்து ஒரு தலை பட்சமாக உள்ளது. பிரபகரன், பாலசிங்கம் பற்றி நீங்க சொன்னதுக்கு ஆதாரம் தராத சொன்னிங்க ஆன பதில தராம பெயர் வேணும் ஊர் வேணும் இன்னு அடம்பிடிகிரிங்களே.
(ஒங்களுக்காக எழுத்து விட்டு இருக்கு)

take it easy ya

வீணாபோனவன் said...

Muhil said...
//வீணாபோனவரே உங்கள் கருத்து ஒரு தலை பட்சமாக உள்ளது.//

என் கறுத்துக்கள் என்றும் பாரபட்ச்சம் அற்றவை. நாங்கு பிரிவினருடன் நங்கு வாழ்ந்த அனுபவம்.

//பிரபகரன், பாலசிங்கம் பற்றி நீங்க சொன்னதுக்கு ஆதாரம் தராத சொன்னிங்க ஆன பதில தராம பெயர் வேணும் ஊர் வேணும் இன்னு அடம்பிடிகிரிங்களே.//

நண்பா, நான் என்று கூறினேன் ஆதாரம் தரப்போவதாக? இருப்பினும், உமக்கு ஆதாரம் வேண்டுமெனில் என்னிடம் ஆதாரம் உண்டு... அந்த ஆதாரத்தை வைத்து உன்னை சேதாரம் பண்ணமுடியும். இறந்த ஒரு பன்னிய பற்றி பேசுவதில் எந்த இலாபமும் இல்லை. இறக்க போகும் ஒரு முடிச்சவிக்கையை பற்றி சொல்ல்லத்தேவையில்லை...

//(ஒங்களுக்காக எழுத்து விட்டு இருக்கு)//

ஏங்க???

நீங்க உங்க சனியன் புடிச்ச அந்த பரதேசிக்கு அனுதாபபடுங்க... நமக்கு வேண்டாம் உமது அனுதாபங்கள்.

-வீணாபோனவன்.

Anonymous said...

Dear veenapona kothuroti consultant.

still no solid proof.
Anyway you are the one who started talking about anton balasingham.
Now you are saying that you don’t talk about dead people. Your duplicity show that you not be even a sri lankan. Just talking about some thing you don’t know about.
Ha ha ha

Anonymous said...

///என் கறுத்துக்கள் என்றும் பாரபட்ச்சம் அற்றவை. நாங்கு பிரிவினருடன் நங்கு வாழ்ந்த அனுபவம்.//

தமிழ் கொலை !!!
மற்றவரின் பிழை திருத்த முன் உம் தமிழை திருத்தும்

Baski said...

என் கணிப்பில் , கண்டிப்பா இலங்கை (இந்திய) அரசு பிரபாகரனை விட போவது இல்லை.
அப்படியே போர் நிறுத்தபட்டலும் புலிகள் இலங்கையை சும்மா விட போவதில்லை.

ஆனால், இந்த போர் பல லட்சம் அப்பாவிகளை தான் இதுவரை கொன்றுள்ளது. இதற்கு தியாகம் / தர்மம் என நம்மை நாம் சமாதான படுத்தி கொள்ளவேண்டியது தான்.

எனக்குள்ள சில கேள்விகள்.,

1. அந்த பிரபாகரன் சரண் அடைத்து விட்டால் தான் என்ன.?? இத்தனை உயிர்கள் பலியிட தான் வேண்டுமா ???

2. ராஜீவை ஏன் பிரபாகரன் கொல்ல வேண்டும்???
-- இதனால் இந்தியாவின் ஒத்துழைப்பை புலிகள் இழந்தது தான் மிச்சம்.

3. புலிகள் ஈழத்தை காப்பாற்ற முனைகிறதா..?? அல்லது "ஈழம்" என்று சொல்லிக்கொண்டு புலிகள் தப்பித்து கொள்கிறார்களா ???

4. ஒரு படத்தில் வரும் வசனம், அனால் இதற்கு மிக நுட்பமான பொருள் உண்டு.

"எதற்கும் வன்முறை தீர்வாகாது. ஒரு வன்முறை போராட்டத்தை ஆரம்பிப்பது சுலபம். முடிப்பது கடினம்."

"உலகில் ஆயுத வியாபாரம் செய்யும் நாடுகளுக்கு எங்காவது போர் நடப்பதில் ஆர்வம்/ஆதாயம் உண்டு"


வன்முறையின் மூலம் தீர்வு காணும் நூற்றாண்டுகள் எல்லாம் எப்பொவோ போய் விட்டன.
அது மட்டுமின்றி, புலிகள் உலக ஆதரவை பெற தவறி விட்டன.
ஈழத்தின் படுகொலை புலிகளின் வேட்டையாகவே இலங்கை அரசால் முன்னிறுத்த படும்.

தோழர் வால் சொல்லியது போல்,
அவர்களுக்கு சில காலம் தமிழகம் அடைக்கலம் தந்து, அவர்கள் வாழ்வு மலர உதவினால் நன்று.

Anonymous said...

aWnt to tell you..
Eeer

No matter

!

Blog Widget by LinkWithin