விலைவாசி உயர்வின் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வே என ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். வேறு காரணங்கள் மற்றவர்கள் குறிப்பிட வந்தாலும் அதற்கும் பெட்ரோலிய பொருள்களே காரணம் என தெரிந்த போது அமைதியடைந்தார்கள். தற்பொழுதும் பெட்ரோலிய பொருள்கள் விலை பெரிதாக குறையாத நிலையிலும் நமது நாட்டின் பணவீக்கம் தவறாமல் குறைவது, கடைசியில் பூஜ்யத்தில் தான் போய் நிற்கும் போல.
கச்சா எண்ணையின் விலை 40 டாலருக்கும் குறைந்து வந்த போதும், பெட்ரோல் விலையை ஏற்றிய போது அரசுக்கு இருந்த ஆர்வம், குறைக்க ஏன் இல்லை என்பது தெரியவில்லை.
எனது அலுவலகம் அருகிலிருக்கும் டீக்கடைகாரர்(இவர் தி.மு.க காரர்)சொல்கிறார், கச்சா எண்ணையின் உற்பத்தியை குறைத்துவிட்டார்கள் தெரியாதா? அது மீண்டும் விலை உயரும், அப்போது மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த முடியாது. அதனால் அரசு விலையை குறைக்க யோசிக்கிறது என்கிறார். அவருக்கு புரிய வைப்பதை விட இதே மனநிலையில் இருக்கும் வேறு சில நண்பர்களுக்கு புரியவைத்தால் போதும் என்பதால் இந்த பதிவு.
காரணம் செக்கு மாடுகளுக்கு ரோட்டில் போக தெரியாது.
பெரும்பாலோனர் நினைத்து கொண்டிருப்பது அமெரிக்கா மற்றும் உலகநாடுகளின் பொருளாதார சரிவே கச்சா எண்ணை விலை சரிவுக்கு காரணம் என்று, அதுவும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணமல்ல! தீடிரென ஏற்பட்ட பொருளாதார சரிவை முன்கூட்டியே கணிக்கமுடியாதா என கொஞ்சம் யோசித்து பாருங்கள், பொருளாதார சரிவின் அடிப்படை காரணமே வராகடன்கள் தான். அது முன் கூட்டியே தெரியாதா?. அந்த அளவுக்கு வங்கியை நடத்துபவர்கள் கூமுட்டைகளா?. மளிகைகடை அண்ணாச்சி கூட ஒரு பில் வரவில்லையென்றால் அடுத்து பொருள் தரமாட்டார். இந்த பொருளாதார சரிவை பயன்படுத்தி பல கோடிகள் சம்பாரித்த முதலைகள் பற்றி ஏன் ஒரு தகவலும் இல்லை. அந்த முதலைகளில் ஒன்று தான் ஒபெக் என அழைக்கப்படும் கச்சா எண்ணை தயாரிக்கும் நாடுகளின் அமைப்பு.
கச்சாஎண்ணை 150 டாலர் வரை சென்றதிற்கு காரணமும் அமெரிக்கா தான். இன்று, இருந்த இடம் தெரியாமல் இருக்கும் லெஹ்மன், மோர்கன் ஸ்டேன்லி நிறுவனங்களின் யூக முதலீடே கச்சாஎண்ணையின் விலை உயர்வுக்கு காரணம், அதை பயன்படுத்தி ஒபெக் அமைப்பு உற்பத்தியை பெருக்கி நன்றாக காசு பார்த்து கொண்டது. பொருளாதார சரிவு ஏற்ப்பட்டவுடன் விலை சரிவை எதிர்பார்த்த நிறுவனங்கள் தனது முதலீட்டை பணமாக்கி கொண்டன.(அந்த பணம் எங்கே?) இரண்டே மாதத்தில் 150 டாலரிலிருந்து 50 டாலருக்கு வந்து விட்டது கச்சாஎண்னை. உண்மையில் இப்போது அதன் விலை வெறும் 36 டாலர்கள் மட்டுமே! கிட்டதட்ட 5 வருடங்களுக்கு முன் இருந்த விலை! அதே ஐந்து வருடதிற்கு முன் பெட்ரோல்,டீசலின் விலை என்ன?
விலை சரிய ஆரம்பித்தவுடன் சர்வதேச யூகவணிக அமைப்பு கச்சாஎண்ணை வியாபாரம் செய்ய குறைந்த பட்சம் 50 சதவிகதம் பணம் தேவை என்று அறிக்கை விட்டது. அத்ற்கு முன் ஒருலட்சம் பெருமானமுள்ள பொருளுக்கு வெறும் பத்தாயிரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள், இனி 50000 தேவை என்றவுடன் கச்சாஎண்ணை முதலீட்டை திரும்பபெற்றனர். பின் அந்த முதலீடு தங்கம் மற்றும் வெள்ளிக்கு திரும்பியது. இதுவும் கச்சாஎண்ணையின் விலை சரிவிற்கு ஒரு காரணம்.
கச்சாஎண்ணையின் உற்பத்தியை குறைத்து விட்டார்களே, அதனால் விலைஉயருமே என்று நினைப்பவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள், அது விலை உச்சத்தில் இருந்த போது அவர்கள் உற்பத்தியை பெருக்கியது, இப்போது அவர்கள் குறைத்துள்ளது அதிகப்படுத்திய உற்பத்தியை மட்டுமே! மேலும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரசரிவினால் மோட்டார் வாகனங்களின் பயன்பாடு பாதிக்கு மேல் குறைந்து விட்டது. தேவை அதிகமில்லாத போது விலை எப்படி உயரும்?
முக்கியமாக இந்த பதிவு எழுத காரணம் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம். அவர்கள் மீண்டும் லாரிகளை இயக்க ஆரம்பித்த பிறகும் பெட்ரோலிய பொருள்கள் விலை இறங்கவில்லை. காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. உரிமை பறிக்கப்படும் என நமது ஜனநாயக!? நாட்டில் சொல்லிய வேண்டுகோளே அதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது.
அவர்களது கோரிக்கையில் டீசல் விலை குறைப்பு மட்டும் இல்லை, அதனுடன் சேர்த்து வரியையும் குறைக்கசொல்லி கோரிக்கை வைத்தனர். எனது நண்பரின் டாரஸில்(10 சக்கர லாரி)கிளினராக ஒரு வருடம் சென்றவன் என்ற முறையில் அதில் நடக்கும் முறைகேடுகளும் எனது அத்துப்படி. அது பற்றி பத்து பதிவு எழுதலாம்
லாரி ஸ்ட்ரைக்கால் காய்கறிகளின் விலை உயர்ந்தது. அத்யாவிசய பொருள்கள் கிடைக்கவில்லை. முக்கியமாக போக்குவரத்துக்கு தேவையான பெட்ரோல்,டீசல். ஆனால் ஒரே ஒரு வண்டி மட்டும் எங்கும் நிற்க்காமல் ஓடியது, அதன் முன் கன்ணாடியில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்தவுடன் அனைவரும் ஒதுங்கி நின்றனர். அந்த வண்டி எது என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.
வழக்கம் போல பெட்ரோலிய பொருள்களின் விலை குறைப்பை தடை செய்து கொண்டிருக்கும் முதலாளி(ரிலையன்ஸ்)வர்க்கத்தின் ஆதரவாளர்கள் வந்து திட்டிவிட்டு போங்கள்
53 வாங்கிகட்டி கொண்டது:
கச்சா எண்ணையின் விலை 40 டாலருக்கும் குறைந்து வந்த போதும், பெட்ரோல் விலையை ஏற்றிய போது அரசுக்கு இருந்த ஆர்வம், குறைக்க ஏன் இல்லை என்பது தெரியவில்லை.//
கோடிக்கணக்கான பணம் கை மாறி இருக்கும்பா...
பால்வண்டி
தீயணைப்பு வண்டி
ஆம்புலன்சு வண்டி
டாங்கர் லாரியா
அமரர் ஊர்தியா பாஸ்
இந்த ஊழலை பற்றி எந்த கட்சியும் பேசவில்லை.oil marketing company அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை பற்றி பேசும் போது கத்தி கூப்பாடு போட்ட ப.சி-யோ அல்லது முரளி தியோரா-வோ,எண்ணெய் விலை குறைப்பு பற்றி பேசாமல் இப்போது மவுன விரதத்தில் உள்ளார்களோ.......?
பாத்து......மக்களும் தேர்தல் நேரத்தில் மவுன விரதத்தில் இருந்து விட போகிறார்கள்.....
”மாற்றம் என்ற சொல்லை தவிர எல்லாம் மாறும்”
புரிஞ்சுக்கங்க ஆட்சியாளர்களெ...
உனக்கு அரிச்ச சொறிய நாங்க தான் கிடைசோமா?
பெட்ரோல், டீசலில் வரும் லாபம் மக்களே கொடுக்கப்படுகிறது
எலெக்ஷனுக்கு முன் குறைக்க திட்டம் போல!
ஆனால் அது ஓட்டு வாங்கி கொடுக்குமா?
nalla pathivu
//அரசின் மெத்தனம்,முதுகில் மொத்தனும்//
அரசு வடிவேலு ரேஞ்சுக்குப் போவுதுங்களா:)
சும்மா, எடுத்தமா கவுத்தமான்னு எழுதக் கூடாது!
அரசு என்பது உங்க வீட்டு அடுப்படி இல்லை.
ஒரு திட்டம் பல பேரின் ஒப்புதலுக்கு பின் தான் நிறைவேற்ற முடியும்.
//கச்சா எண்ணையின் விலை 40 டாலருக்கும் குறைந்து வந்த போதும், பெட்ரோல் விலையை ஏற்றிய போது அரசுக்கு இருந்த ஆர்வம், குறைக்க ஏன் இல்லை என்பது தெரியவில்லை.//
எண்ணை நிறுவனங்களைக் காப்பாற்றும் ஆர்வம்,மற்றும் சில்லறையா மக்கள் பாரத்தை சுமக்கட்டுமே.
//நிறுவனங்களின் யூக முதலீடே கச்சாஎண்ணையின் விலை உயர்வுக்கு காரணம்//
முக்கிய காரணமே இதுதான்.
டாஸ்மாக்குக்கு சரக்கு கொண்டு வரும் வண்டி நம்ம தெய்வ வாகனம்யா. அத போய் நிப்பாட்ட முடியுமா?
வர வர வாலு கலக்கறார்.. :)
கச்சா எண்ணெய் விலைக் குறைவு பற்றி நீங்கள் சொன்னக் காரணங்கள் சரி தான் வாலு.. அந்த துறையை தினமும் பார்ப்பவர் நீங்க. அதனால ரொம்பவே தெளிவா எழுதி இருக்கிங்க. ஆனா விலை வீழ்ச்சி அடைய ஆரம்பிச்சது அமெரிக்க வங்கிகளின் வீழிச்சியின் போது இல்லை. அதற்கு முன்னரே என நினைக்க்கிறேன். காரணம், அமெரிக்காவிடம் தேவைக்கு அதிகமாக எண்ணெய் கையிருப்பு உள்ளதாக அறிவித்த அடுத்த நாளே விலை குறையத் தொடங்கியது. மேலும் பிரேசில் போன்ற நாடுகள் கரும்பிலிருந்து கிடைக்கும் எத்தனாலைக் கொண்ட்டே தன் எரிசக்த்தி தேவையை பூர்த்தி செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் ப்ரேசிலில் 95% எத்தனாலே உபயோகிக்கப் படும் என தெரிகிறது. சில தேவை இல்லாமல் திணிக்கப் பட்ட போர்களால் அமெரிக்காவின் பொருளாதாரமும் ( வங்கிகளின் வீழ்ச்சிக்கு முன்பே ) சரியத் தொடங்கி இருந்தது. அதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.. இதனால் அமெரிக்காவின் எண்ணெய்த் தேவையும் குறைந்தது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் உபயோகிக்கும் நாடான அமெரிக்கா, ஈராக்கிலிருந்து திருடிக் கொண்டு வந்த எண்ணெய் கையிருப்பையும் அதிகமாக்கி இருந்தது. இது போன்ற பல விவகாரங்களும் கச்சா எண்ணெய் வில வீழ்ச்சிக்கு காரணம்.
லாரி முதளாலிகளின் ஸ்ட்ரைக் ஒரு மொள்ளமாறி தனம். டீசல் விலை உயர்வதாக அறிவிக்கப் பட்டவுடனே இவர்கள் வாடகையை உயர்த்திவிடுகிறார்கள். அதனால் தானே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வே ஏற்படுகிறது. இவர்கள் எதோ சேவை செய்வது போல் டீசல் விலை குறைக்க வேலை நிறுத்தம் செய்தார்கள். டீசல் விலை குறைத்தால் வாடகையும் குறைப்போம் என்று யாராவது வாக்குறுதி அளித்தார்களா? இவர்கள் யோக்கியவான்களாக இருக்கும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப் படும் என அரசாங்கம் அறிவிக்க முடியாது. இதை எல்லாம் ஜனனாயகத்தின் பெயரில் கிண்டல் பண்ண முடியாது வால். இவர்களும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் செய்த வேலை நிறுத்தம் சரியா அய்யோக்கியத் தனம்.
//SanJaiGan:-Dhi said...
லாரி முதளாலிகளின் ஸ்ட்ரைக் ஒரு மொள்ளமாறி தனம். டீசல் விலை உயர்வதாக அறிவிக்கப் பட்டவுடனே இவர்கள் வாடகையை உயர்த்திவிடுகிறார்கள். அதனால் தானே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வே ஏற்படுகிறது.//
:-)))
//அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்//
:-)))
//
அந்த வண்டி எது என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு
//
சிறப்புப் பரிசாக அந்த வண்டியில் லோடு ஏற்றப்பட்ட ஐட்டமே கிடைக்கும் என்பது தனிச்சிறப்பு. அது கால், அரை அல்லது முழு இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன :)))
பொருளாதார பெருமந்தத்திற்கு நாந்தாம்பா காரணம்...இப்ப என்னான்ற ??
புஷ் ஏ பின்னூட்டம் போடும்போது நாம் போடக்கூடாதா ???
ஐய்...நானும் வந்துட்டேன்....
சரி ஃப்ரீயா வுடு..அதுக்கு போய் ஏன் ஷீ வெல்லாம் கழட்ற....
//SanJaiGan:-Dhi said...
லாரி முதளாலிகளின் ஸ்ட்ரைக் ஒரு மொள்ளமாறி தனம்.
athavathu ungala mathirinu solluga
//கச்சாஎண்ணை 150 டாலர் வரை சென்றதிற்கு காரணமும் அமெரிக்கா தான்.//
இந்த ஒரு வரியில் பதிவை முடித்திருந்தால் உங்கள் கைகளுக்கு மோதிரம் வாங்கிப் போட்டிருப்பேன்.
//நமது நாட்டின் பணவீக்கம் தவறாமல் குறைவது, கடைசியில் பூஜ்யத்தில் தான் போய் நிற்கும் போல.//
பணவீக்கம் எவ்வாறு கணக்கு போடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும் .
அதாவது போன வருடம் இந்த வாரத்தில் ஒரு இருபத்து வகையான பொருள்கள் என்ன விலைக்கு விற்றன . அதன் வித்தியாசமே பணவீக்கம் என்று சொல்ல படுகிறது. பணவீக்கம் குறைந்ததற்கு பாதி காரணம் ஸ்டீல் விலைமற்றும் யூக வணிகத்தில் இருந்த சில பொருள்களின் விலை மிகவும் குறைந்ததே ஆகும் .
இன்னும் ஐந்து மாதங்களில் பணவீக்கம் மிகவும் குறையும். அப்படியென்றால் பொருள்களின் விலை குறைந்ததாக அர்த்தம் ஆகாது . மாறாக போன வருடம் இந்த வாரத்தில் அந்த பொருளின் விலை அதுவே என்று அறியவும் .
வெள்ளை பெட்ரோலின் விலை முப்பது ரூபைககும் உள்ளே என்பதை அறியவும்
நல்ல பதிவு வால்..எல்லா சாமான்யருக்கும் உள்ள ஒரே கேள்வி விலை விலை உயர்த்தும்போதுமட்டும் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் அதிகரித்துவிட்டது என்று எல்லா அமைச்சர்களும் கூப்பாடு போடுகிறார்களே...ஒரே இரவில் விலை உயர்த்தி அதை இந்தியாவெங்கும் அமல்படுத்தியும்விடுகிறார்களே.....
குறையும்போது மட்டும் சத்தத்தையே காணோம்.
ஒரே இடத்தில் அடிச்சா கொள்ளை..
ஊர் பூரா அடிச்சா அதுக்கு பேர் வேற..
ஷேர் மார்க்கட்லயும் இப்படித்தான் எல்லா மகாசனங்களுக்கும் ஆசைய தூண்டிவுட்டு காசு பறிச்சாங்க..எதிர் கேள்வி கேட்டோம்னா ஏம்ப்பா அதுல இன்வெஸ்ட பண்ணின என்று ஈஸியா தப்பிச்சுடறாங்க.
இதே ப.சி..உலகமே கவுந்தாலும் நம்ம மார்க்கெட் ஒன்னுமே ஆகாதுன்னு சொல்லி அவனவன் சுருட்டற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு நைசா கழண்டுகிட்டாரு..தற்கொலை பண்ணியவன் கதிய யார் நெனச்சு பாக்கறா..
போட்ட பணமெல்லாம் எங்க போச்சுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டாங்க அந்தம்மா...மத்தவிஷயம் வேண்டாம்...கேட்ட கேள்விக்கு பெப்ப்பரப்பே தான் பதில்.
உண்மையில் இது ஜனநாயக நாடெல்லாம் கிடையாது..அதன் பெயரால் பணம் பண்ணிக்கொள்ளும் பணநாயக நாடுதான்.
நாட்டினுடைய நிர்வாகம்லாம் தனியார் பெரு முதலாளிகள் கிட்ட போய் ரொம்ப நாளாச்சு...ஹூம்..என்றைக்கு விடிவுகாலம் வரபோகிறதோ..
நீங்கள் சொல்லும் வாகனம் RPL ரிலையன்ஸ் பெட்ரோல் நிறுவன லாரிகள் ...என்று எண்ணுகிறேன் ...பாஸ்கரன்
5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த விலைக்கு பெட்ரோல் மொத்த கொள்முதல் இருந்தாலும் சரி பத்து வருடத்துக்கு பின்னோக்கி விலை சரிந்தாலும் சரி.....
இந்த சரிவை வைத்து, எப்படி சம்பாதிக்கலாம்(!) என்று சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்வர்தகர்களுடன் விவாதிப்பார்.
அதுசரி கொஞ்சம் டீசல் விலை குறைந்தது என்பதற்காக மினிபஸ், தனியார் பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை குறைத்தார்களா?
(பி.கு)
டீசல் விலை உயர்த்தப்பட்ட போது தானாகவே சில மினிபஸ்களின் கட்டணம் உயர்த்தினார்களே... இப்போது குறைப்பார்களா?
அருண்,
நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.
//எனது அலுவலகம் அருகிலிருக்கும் டீக்கடைகாரர்(இவர் தி.மு.க காரர்)சொல்கிறார்,
//
இதுல கட்சி வேறுபாடெல்லாம் கிடையாது... அனைத்து கட்சியினரும் ஒற்றுமையா இருப்பாங்க.
தீடிரென ஏற்பட்ட பொருளாதார சரிவை முன்கூட்டியே கணிக்கமுடியாதா என கொஞ்சம் யோசித்து பாருங்கள், பொருளாதார சரிவின் அடிப்படை காரணமே வராகடன்கள் தான்.
//
அமெரிக்க பொருளாதாரம் எவ்வளவு சரிந்தாலும்..பாதுகாப்பாகவே இருக்கும்
எதுவரை என்றால்...
1) அமெரிக்க டாலர்-ஐ பொதுவான வியாபார ஊடகமாக உலக நாடுகள் தொடர்ந்து அங்கீகரிக்கும் வரை.
2) அரசுகள் அவர்களின் வீணாய்ப்போன டாலரை சேமிப்பதை நிறுத்தும் வரை.
3) கச்சா என்னை, தங்கம், Commodity போன்ற சந்தைகள் டாலரை ஆதரிக்கும் வரை.
இவையெல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை...அமெரிக்க மக்களின் எதிர்காலம் பாதுகாப்பாகவே இருக்கும்.
//ஆனால் ஒரே ஒரு வண்டி மட்டும் எங்கும் நிற்க்காமல் ஓடியது, அதன் முன் கன்ணாடியில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்தவுடன் அனைவரும் ஒதுங்கி நின்றனர். அந்த வண்டி எது என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.//
புதிர்போட வேண்டிய அவசியமே இல்லை.
அந்த வண்டி..."தமிழ்நாடு அரசு" என்ற வாசகத்துடன் சோமபானம் ஏற்றிச்செல்லும் வண்டி தான். நம்மதான் சாப்பிட விட்டாலும் சரக்கடிக்க தவறுவதில்லையே..
"அரசின் மெத்தனம், முதுகில் மொத்தனும்"
//
அவுங்கள தொடர்ந்து நம்புரோமே..நமக்கு நாமே மொத்திக்க வேண்டியதுதான்.
மொத்தத்துல...நல்ல பதிவு. :-(((
//முதலாளி(ரிலையன்ஸ்)வர்க்கத்தின் ஆதரவாளர்கள் வந்து திட்டிவிட்டு போங்கள்//
சரியா திட்டலை போல.. உங்க கருத்தை ஏத்துக்கிட்டாங்களோ என்னவோ.
:-)))
சரி டீசல் விலையை குறைத்தால் லாரி உரிமையாளர்கள் வாடகையை குறைப்பார்களா?
ஏற்கனவே சென்றமாதம் டீசல் விலை 3 ரூபாய் குறைந்த போதும்..
டீசல் விலை ஏறிய போது அதிகமான காய்கறி மளிகை பொருட்க்கள் என எந்த பொருள் விலையும் குறையவில்லை.
மீண்டும் ஒரு முறை விலை குறைப்பு செய்தால் விலைவாசி குறையுமா?
ஆயில் நிறுவனங்கள் அதிகமாக நட்டம் அடைந்து இருக்கின்றன. அவர்களும் நட்டத்தை சரி செய்ய சில காலம் கொடுக்கலாமே.
பெட்ரோல் உண்மையான விலை 26 ரூபா இருக்கலாம் ஆனால் மார்கேட் விலை இதை விட இரு மடங்கு வரை செல்கிறது. இதில் வரும் வரிகளே எரிவாயு விற்பனையில் ஏற்படும் நட்டத்தை ஈடு கட்டுகிறது..
நீண்ட கால பயன் தரும் முயர்ச்சி என்றால்..
10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தனி நபர் வாகனங்களுகான பெட்ரோல் டீசலை மான்யம் இல்லாமல் கொடுக்க வேண்டும்.
பொது வாகனங்களுக்கு டீசல் பெட்ரோலை விலை குறைத்து தரலாம்.
தலைப்பு அருமை நண்பா.
உள்ளே உள்ள விஷயங்கள் எனக்கு இன்னும் சரியாக விளங்கிடவில்லை.
அந்த விளையாட்டு அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் விளங்கிவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
நாம் அறிய முடியாத மாயை இன்னும் இதன் பின்னே இருக்கின்றது.
இந்த விளையாட்டுக்குப் பின்னால உள்ள அரசியலும் தெரியல, பொருளாதாரமும் புரியல. அரசை மொத்தலாம்... ஆனா உண்மை வெளிய வராது போல இருக்கே..
அதை பயன்படுத்தி ஒபெக் அமைப்பு உற்பத்தியை பெருக்கி நன்றாக காசு பார்த்து கொண்டது. //
உற்பத்தியை அதிகப்படுத்தியது தவறா? அதிகப்படுத்தவில்லையென்றால் இன்னும் விலை கூடியிருக்காதா? தற்பொழுது டிமாண்ட் குறைவதனால் உற்பத்தியை குறைப்பது தவறா.
இது வியாபாரம். பொருள் விலை கட்டவில்லையென்றால் இடத்தை காலி பண்ணு என்பார்கள்.
///இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க///
சொல்ல நிறைய இருக்கு வாலு. லாரி ஸ்டிரைக் முடிந்துபோச்சானு பார்த்துட்டு வரேன்.
எல்லா கருத்துகளையும்
அலசிவிட்டீர்கள்!
பின்னூட்டங்களே
பெரிய பதிவா இருக்கு...
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
காலைவணக்கம்!
காலகாலமாய் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தான் இருக்கிறது. ஆனால் சந்தை நிலவரம் அரசு தலையீடு இன்றி உடன் பிரதிபளிக்கப்படுகிறது.அது போல பெட்ரோலையும் விட்டால் என்ன கெட்டுப் போய்விடும். இப்பொது எக்ஸைஸ் டூட்டி ad valorem basis-ல் கணக்கிடப் படுகிறது அதாவது பொருளின் விலையில் 10% டுட்டி என்று வைத்துக் கொண்டால் விலை 50ரூபாயாக இருக்கும் போது டூட்டி ரூ.5 ஆகவும் விலை ரூ.100 ஆக உயரும் போது டூட்டி 10 ஆகவும் உயரும். அது போலில்லாமல் Specific Rate basis-முறையில் ஒரு லிட்டருக்கு ரூ.5 என்று நிர்னயித்து விட்டால் விலை ஏறும் போது டூட்டியும் ஏறித் தொலைக்காது. எத்தனையோ கோடிகளை ஊழலில் இழப்பவர்கள் மக்களுக்காக இந்த அத்தியாவசியப் பொருளின் விலையில் கொஞ்சம் கருனை காட்டலாம்.
me they 50
நல்ல பதிவு.
ஹூம்..என்றைக்கு விடிவுகாலம் வரபோகிறதோ..
நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.
naan thaan romba late ah vanthirukkena!!
அருமையான் பதிவு. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி
Post a Comment