நண்பர் நர்சிம் குமுதத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவிட்டிருந்தார்.
கடவுள்,மத,சாதி மறுப்பு கொள்கையுடயவன் என்ற முறையில் அவருக்கு என் முழு ஆதரவு.
ஆனால் நர்சிம்மின் கொள்கைகளை குறை சொல்லும் வகையில் இளையநண்பர் டோண்டு அவர்கள் ஒரு பதிவிட்டிருக்கிறார். அங்கேயே நான் எனது கருத்துகளை வாதித்து கொண்டிருந்தாலும், பின்னூட்ட புயலில் எனது கருத்துகள் காணாமல் போக வாய்ப்புண்டு.
அதனால் தனிப்பதிவு. இனி வாதங்களை இங்கே தொடராலாம்.
தொடர்புடைய என்னுடய பழைய பதிவு
டோண்டுவின் கொள்கைகளில் அவர் உறுதியாக இருப்பது அவரது உரிமை, ஆனால் அவைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று விவாதிக்க வேண்டியது கட்டாயம். சரி டோண்டுவின் கொள்கைகள் என்ன?
சாதிகள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது!அதை அழிக்க முடியாது!
இரட்டைகுவளை முறை உள்ள கடையில் தலித்துகள் டீ குடிக்க வேண்டாம், தனியாக டீக்கடை வைக்கட்டும்.
சாதிகள் இல்லையென்றால் தலித்துகள் முன்னேற வாய்ப்பில்லாமல் போகும்.
சாதிகளை மறுப்புவன் என்ற முறையில் நான் இதற்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.
சாதிகள் பல நூற்றாண்டுகளாக இருந்தன,அதனால் தான் நாம் எப்போதும் பின் தங்கி இருக்கிறோம். மனிதர்களிடையே ஒற்றுமை வேண்டுமென்றால் அவர் சாதியினர் ஒற்றுமையை பற்றி பேசுகிறார்.
இரட்டை குவளை முறை:
சாதியால் என்ன நன்மை என்று கேட்டிருந்தேன், அதற்கு அவரது பதில் நாடார் என்ற சாதி ஒன்று சேர்ந்து போராடி முன்னேறியதாம். கொஞ்சம் நுண்ணரசியலோடு பாருங்கள் நண்பர்களே முன்னேறியது என்றால் அது பின்னால் இருந்து முன்னால் வந்திருக்கிறது, அதை பின்னால் தள்ளியது யார்? உயர்சாதியினர் என்று அழைக்கபடுபவர்கள். சரி அவர்கள் முன்னேறி விட்டதால் நாடார்சாதி உயர்சாதி ஆகிவிட்டதா? சரி தானும் கீழிருந்து தான் மேலேவந்தோம் என்பதற்க்காக நாடார் சாதி,தலித்துகளுக்கு சகமரியாதை தருகிறதா?
டோண்டு என்ன சொல்கிறார், தலித்துகள் தனியாக டீக்கடை வையுங்கள், நீங்களே முன்னேறுங்கள்,
இங்கேயுள்ள நுண்ணரசியலை கவனிப்போம்,அதாவது தலித்துகள் முன்னேறுங்கள் ஆனால் தலித்துகளாகவே இருங்கள்,நாங்கள் உயர்சாதினராகவே இருந்து கொள்கிறோம்.
என்ன தான் பொருளாதரத்தில் முன்னேறி இருந்தாலும் நீ தலித் தான், நான் கூலி வேலைக்கு சென்றாலும் உயர்சாதி தான் மனப்பான்மை தானே இது!
சாதிமுறை ஒழிந்தால் எப்படி தலித்துகளுக்கு முன்னேற்றம் கிடைக்காது.
சாதியால் தானே அவர்களை பின் தங்கியவர்களாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.
சாதி இல்லையென்றாலே அவர்களும் சமம் தானே!
பார்ப்பன ஏழையும் இருக்கிறான்,தலித் கோடீஸ்வரனும் இருக்கிறான்,நான் சொல்வது சமத்துவம், சாதியற்ற சமத்துவம்.
தலித்துகளுக்காக பேசுகிறேன் என்று எப்போதும் பார்பனர்களை தாக்கி கொண்டிருப்பதையும் கண்டிக்கிறேன். அவர்கள் சும்மா இருந்தாலும் நீங்களே அவர்களை உயர்சாதி என்று கட்டம் கட்டிவிடுகிறீர்கள்.
நான் உட்கார்ந்து கொண்டே தான் இருப்பேன்.நீ என்னை தேடிவந்து சலுகைகளை கொடு என்று சோம்பேறிகளாக இருக்கும் தலித்துகளையும் கண்டிக்கிறேன். உழைப்பு இல்லாமல் நிரந்தர உயர்வு எப்போதும் கிடைக்காது.
என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்,
சாதி வன்முறைகளையும்,கலவரத்தையும் மட்டுமே கொடுக்கும்.
கூடவே அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வாங்கி கொடுக்கும்.
வேண்டாம் நண்பர்களே சக மனிதனை சாதிமுறையில் பார்ப்பது கேவலமானது!
யாராக இருந்தாலும் அவர்களையும் மனிதர்களாக நேசிப்போம்.
சாதி இல்லையென்றால் மனிதம் தானாக உயரும்.
என் கொள்கையில் உடன்பாடு உள்ளவர்கள் உங்கள் வருகையை பதிவிட்டு செல்லுங்கள்!
உடன்பாடு இல்லாதவர்களும் உங்கள் கருத்துகளை பதிவிட்டு செல்லுங்கள்
70 வாங்கிகட்டி கொண்டது:
மீ த முதல்...
மிகவும் அருமையான பதிவு வால்'s. திறமையால் மட்டுமே முன்னுக்கு வரவேண்டும். சாதி ரீதியாக தொடுக்கப்படும் வன்முறைகளும், சாதி அடிப்படி வன்முறைகளையும் முற்றிலுமாக எதிர்ப்பவன் நான்...
இதில் என்னோட முழு சப்போர்ட் உங்களுக்கு தான் .. :)
// என் கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன்,
சாதி வன்முறைகளையும்,கலவரத்தையும் மட்டுமே கொடுக்கும்.
கூடவே அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வாங்கி கொடுக்கும்.//
சாதிகள் குறித்த உங்கள் கருத்து வரவேற்கப் படவேண்டியதே !!!!!
புரட்சிகரமான சாட்டையடி வார்த்தைகளுக்கு வாழ்த்துகள் !!!!
இதை நான் வழிமொழிகிறேன்.
(ஆனால் உங்களுடைய இறைமறுப்பு கொள்கைகளை வழிமொழிய மறுக்கிறேன்.)
பிரம்மனின் தலையில் பிறந்தவன் பிராமணன்...
மார்பில் பிறந்தவன் ஷத்திரியன்
தொடையில் பிறந்தவன் வைசியன்
பாதத்தில் பிறந்தவன் சூத்திரன்...
அடிப்படையிலே ஆரம்பித்து விட்டதப்பா..இந்த பிரிவினை...சாதிகளை எல்லாம் நம்மால ஒன்னும் பண்ண முடியாது.
அடிப்படை அறிவற்ற குழந்தைத்தனமான பதிவு...
பெய்ப்பெரெப்பே சாதி ஒழிக என்று கத்தினால் முற்போக்குவாதம் அல்ல...
உங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி முழுமையாக தெரியுமா ?
தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் சாதி அடையாளங்களை தாங்கவேண்டும் ??
அவர்களுக்கு என்ன தேவை ?
(அவர்கள் என்னவோ சோம்பேறிகளாக உட்கார்ந்துகொண்டு இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்பதாக சொல்கிறீர்கள்..எத்தனை தலித் வீட்டில் சென்று அவர்கள் உண்மையான பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறீர்கள் ?
பார்ப்பணீய சக்திகள் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்று முழங்குவதன் உண்மை காரணம் என்ன என்று தெரியுமா ??
100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?
இன்னும் எத்தனை கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கிறது என்று தெரியுமா ?
எல்லா கேள்விகளுக்கும் ஆன்ஸர் ப்ளீஸ்...
பல விஷயங்களை தெரிந்துகொண்டு பிறகு பதிவிடுதல் நலம்..
மிக்க நன்றி சிம்பா
நன்றி அ.மு.செய்யது.
சாதி,மதம்,கடவுள் அனைத்தும் ஒன்றுகொன்று தொடர்பில் இருப்பதால் நான் அத்தனையும் மறுக்க வேண்டியுள்ளது.
மனிதர்களை சமமாக பார்க்க சொல்லிதராத எந்த மதமும், வன்முறையை ஆதரிக்கும் எந்த கடவுளும் உண்மையில்லை,
துரதரிஷ்டவசமாக எந்த மதமும், கடவுளும் இவை இல்லாமல் இல்லை.
//மனிதர்களை சமமாக பார்க்க சொல்லிதராத எந்த மதமும், வன்முறையை ஆதரிக்கும் எந்த கடவுளும் உண்மையில்லை,
துரதரிஷ்டவசமாக எந்த மதமும், கடவுளும் இவை இல்லாமல் இல்லை.//
இதற்கு தக்க விளக்கமளிப்பீர்களா ???
"எல்லா மதங்களும் இப்படித் தான்" என்ற உங்கள் ஆராய்ச்சியின் ஆழத்தை வெளிக்
கொணர்வீர்களா ???
நாடார் சாதி,தலித்துகளுக்கு சகமரியாதை தருகிறதா?
நான் உட்கார்ந்து கொண்டே தான் இருப்பேன்.நீ என்னை தேடிவந்து சலுகைகளை கொடு என்று சோம்பேறிகளாக இருக்கும் தலித்துகளையும் கண்டிக்கிறேன்.
நல்ல கருத்துக்களை விதைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் நன்றியும். இது போன்ற கருத்துக்கள் ஒரு நல்ல சமூக மாற்றத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
(கேப்பில் வெட்டப்படும் கடா)
நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/
உங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி முழுமையாக தெரியுமா ?
தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் சாதி அடையாளங்களை தாங்கவேண்டும் ??
அவர்களுக்கு என்ன தேவை ?
(அவர்கள் என்னவோ சோம்பேறிகளாக உட்கார்ந்துகொண்டு இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்பதாக சொல்கிறீர்கள்..எத்தனை தலித் வீட்டில் சென்று அவர்கள் உண்மையான பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறீர்கள் ?
பார்ப்பணீய சக்திகள் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்று முழங்குவதன் உண்மை காரணம் என்ன என்று தெரியுமா ??
100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?
இன்னும் எத்தனை கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கிறது என்று தெரியுமா ?
}}}}}
என்ன கொடுமை செந்தழல்ரவி?
இவர் உண்மையை சொன்னால் தங்கள் ஏன் விசனப்படுகிறீர்கள்?
\\வேண்டாம் நண்பர்களே சக மனிதனை சாதிமுறையில் பார்ப்பது கேவலமானது!
யாராக இருந்தாலும் அவர்களையும் மனிதர்களாக நேசிப்போம்.\\
அருமை நண்பா ...
செந்தழல் ரவி said...
அடிப்படை அறிவற்ற குழந்தைத்தனமான பதிவு...//
நான் குழந்தை இல்லை என்று எப்போது சொன்னேன்!
//பெய்ப்பெரெப்பே சாதி ஒழிக என்று கத்தினால் முற்போக்குவாதம் அல்ல...//
ஓ, பெய்ப்பெரெப்பே பார்ப்பனன் ஒழிக என்று கத்துவது தான் முற்போக்கு வாதமா?
//உங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி முழுமையாக தெரியுமா ?//
தெரியாது தான். விளக்க பதிவு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!
போடவில்லை என்றால் மீண்டும் இதே போல் எழுதி கொண்டெதான் இருப்பேன்.
//தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் சாதி அடையாளங்களை தாங்கவேண்டும் ??
அவர்களுக்கு என்ன தேவை ?//
அரசியல்வாதிகள் பிழைக்கத்தான்.
இந்த பிரிவினை இருந்தால் தானே இவர்களால் அரசியல் நடத்தமுடிகிறது.
//அவர்கள் என்னவோ சோம்பேறிகளாக உட்கார்ந்துகொண்டு இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்பதாக சொல்கிறீர்கள்..எத்தனை தலித் வீட்டில் சென்று அவர்கள் உண்மையான பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறீர்கள் ?//
அவ்வாறு கேட்கும் சோம்பேறிகளை தான் சொல்லியுள்ளேனே தவிர, எல்லா தலித்துகளும் சோம்பேறி என்று சொல்லவில்லை.
//பார்ப்பணீய சக்திகள் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்று முழங்குவதன் உண்மை காரணம் என்ன என்று தெரியுமா ??//
திறமையை நம்புவதால்!
வேறு காரணம் இருந்தால் சொல்லவும்.
//100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?//
எனக்கும்,என் பொண்டாட்டிக்கும்,என் மகளுக்கும் தனித்தனி தட்டுகள் தான் வீட்டில், அது என்ன தீண்டாமையா!
இரட்டை குவளை டீக்கடை வைத்திருப்பது எல்லாம் பார்ப்பனர்களா?
பார்பனிய எதிர்ப்பு அரசியல்வாதிகளின் மூளைசலவை, படித்தவர்களே அதில் மாட்டிகொள்வது படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை அடிக்கடி நினைவூட்டுகிறது.
நான் மட்டும் என்ன இரட்டை குவளையை ஆதரிக்கிறேனா?
என் தந்தை சாதியை சொல்லிகொள்வார், நான் சொல்லமாட்டேன்.என்மகளுக்கு என்ன சாதியென்றே தெரியாது.
ஆக நான் சொல்லவருவது சாதியை முழுவதுமாக ஒழியுங்கள்!
இரட்டைகுவளை டீக்கடை வைத்திருக்கும் டீக்கடைகாரன் மகனும், ஒருதலித்தின் மகனும் ஒன்றாக தான் படிக்கிறார்கள்.அவர்களுக்கு சாதி தெரியாது. அதை அவர்களுக்கு சொல்லி தருவதே பெற்றோர்கள் தான்.அதை தான் வேண்டாமென்கிறேன்!
உயர்சாதிய எண்ணங்கள் கடுமையாக தண்டிக்கபட வேண்டியவை!
இட ஒதுக்கீட்டுக்காக போராடிய அரசு,உத்தபுர விசயத்தில் என்ன செய்தது. இவர்கள் அரசியலுக்கு சாதி வேண்டும்.
எனக்கு சாதியும் வேண்டாம்.
இவர்கள் அரசியலும் வேண்டாம்
\\அரசியல்வாதிகள் பிழைக்கத்தான்.
இந்த பிரிவினை இருந்தால் தானே இவர்களால் அரசியல் நடத்தமுடிகிறது.\\
சரியான சாட்டையடி ...
உண்மை உண்மை ...
//"எல்லா மதங்களும் இப்படித் தான்" என்ற உங்கள் ஆராய்ச்சியின் ஆழத்தை வெளிக்
கொணர்வீர்களா ???//
ஆழமாக சிந்திதோமானால் எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை! ஆனால் மதத்தை ஆதரிக்கும் மனிதர்கள் ஏன் பிரிவினையை தூண்டுகிறார்கள்.
நீங்கள் ஒரு நல்ல மனிதர், ஆனால் எல்லோரும் அப்படியல்ல!
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், உங்களை பொறுத்தவரை இஸ்லாத்தில் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் இஸ்லாத்தில் வன்முறை இல்லை என்று உங்களால் மறுக்கமுடியாது.
\\ஆனால் இஸ்லாத்தில் வன்முறை இல்லை என்று உங்களால் மறுக்கமுடியாது.\\
நண்பா இஸ்லாத்தில் வன்முறை இல்லை
இஸ்லாமியர்கள் என சொல்லி கொள்பவரிடம் தான் இருக்கிறது.
நன்றி நெல்லைதமிழ்!
40 வருடங்களுக்கு முன்னால் சாதிய கொடுமைகள் எல்லா இடங்களிலும் பரவி கிடந்தது! தற்சமயம் ஆங்காங்கே இருந்தாலும் அரசு இரம்பு கரம் கொண்டு அதை அடக்கமுடியும்.
ரவி அவர்கள் தலித் சமூகம் இன்னும் ஒடுக்கபடுகிறது என்கிறார், எனக்கு அதில் ஒரு முரண்பாடு தெரிகிறது.
அரசியல்வாதிகளின் தூண்டுதலில் அவர்கள் இடஒதுக்கீட்டுக்காக தம்மை தலித்தாகவே காட்ட நினைக்கிறார்கள்,
ஆனால் மனதளவில் அவர்களது தாழ்வுமனப்பான்மை அரசாலேயே மேலும் ஆழமாக ஊன்றப்படுகிறது.
தலித்துகளிலும் சரியாக போய் சேர வேண்டியவர்களுக்கு தான் அரசு சலுகைகள் போய் சேருகிறதா என்றால் முழுமையாக இல்லை என்பதை எனது ந்ண்பர்களே சொல்கிறார்கள்!
அங்கேயும் அரசியல் குறுக்கீடு!
சகமனிதனாக பார்க்காமல் தலித்தாக ஏன் அவர்களை பார்க்கவேண்டும்.
ஊழலற்ற அரசால் எல்லோருக்கும்கல்வி தர முடியும்,வேலை தர முடியும்.
ஆனால் அரசியல்வாதிகளால் ஊழலில்லாமல் ஆட்சி நடத்த முடியாது.
இம்மாதிரியான ஆட்களால் யாரையாவது தலைவனாக ஏற்று கொண்டாடாமல் இருக்கமுடியாது.
பார்ப்போம் அவர்கள் பக்கத்து விளக்கதையும், சரியான விளக்கம் இல்லாமல் நான் விடப்போவதில்லை.
Its a fashion in TN, to bash Brahmin and Hindu for everything. Right from our CM, this is the culture. So lets leave that alone while talking about caste.
Caste is practiced in every country, with a difference of not naming it, but in the form of layers in community. Not everyone chooses to become a plumber, carpenter, house cleaner. And they continue to do it generations after generation. But big difference is, if anyone in that family wants to do something different every other community gives them a chance to succeed in their wishes, and 2nd just because of their profession there is no untouchability.
This is what we should strive for. Give everyone a fair chance to succeed.
Reservations are justified upto a point, when one generation succeeds using those reservations they should not take advantage of it 2nd time, leaving that opportunity to others who are still behind.
But unfortunately, reservations start to fail, when a poor family has succeeded using those reservations, they use it for their sons/daughters also in the name of the caste, where they are no different between the developed community, thus denying an opportunity for others.
See this is where a healthy, fresh minded arguments should be welcome. Unfortunately we all just follow text books and our politicians thinking, and our mind is set in one way, leading to what I said in the beginning.
//நண்பா இஸ்லாத்தில் வன்முறை இல்லை
இஸ்லாமியர்கள் என சொல்லி கொள்பவரிடம் தான் இருக்கிறது. //
இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாததில் ஈடுபடுபவர்களை இஸ்லாமியர்களே இல்லை என்று வெளிப்படையான அறிக்கை விட முடியுமா?
தடை செய்யப்பட்ட அமைப்புகளை உடனே முற்றிலும் அழித்து விடலாமே!
நீங்கள் ஒரு நல்ல மனிதர்,
ஆனால் ஒரு இஸ்லாம் தீவிரவாதி உங்களை ஒரு நல்ல இஸ்லாமியன் இல்லை என்கிறான்.
நீங்கள் படிக்கும் குரானை தான் அவனும் காரணம் சொல்கிறான். அல்லாவின் ஆணையினாலே நான் இதை செய்தேன் என்கிறான்.
சொல்லிவிடலாம் அவனுக்கு அல்லா தண்டனை கொடுப்பார் என்று, ஆனால் இறந்த அப்பாவி மக்களுக்கு அல்லா உயிர் கொடுப்பாரா!
நண்பரே நான் கடவுள் மறுப்பு கொள்கையுடயவன்.கடவுள் என்ற ஒன்று எந்த வகையிலும் மனிதனுக்கு நன்மை தருவதில்லை என்பதை உணர்தவன்.
இது முடக்கு வாதமாக கூட இருக்கலாம்,ஆனால் எனக்கு இது தான் உண்மை.எனக்கு உண்மை என படுவதை கடைசி வரை நான் ஆதரிப்பேன்.
\\எனக்கு உண்மை என படுவதை கடைசி வரை நான் ஆதரிப்பேன்.\\
உங்களின் இந்த கொள்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது...
நண்பா உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
நன்கு தெரியும்
இங்கே விளக்கங்கள் கேட்டுக்கொண்டால்
பின்னால் வருபவர்களுக்கு புரியாமல் போகலாம்
உங்களுக்கு புரியவைக்க என்னால் முடியாது என்று தோன்றுகிறது...
பார்ப்பனர்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...
ஒரே விஷயம் மட்டும் சொல்கிறேன்..
ஏன் சாதி தேவை என்பதை பற்றி :
ஆயிரம் ஆண்டுகள் அடக்கி ஒடுக்கப்பட்டவனை வேறெப்படி அடையாளம் காண்பது ?
அதனால் தான் முழுமையாக அவர்கள் அனைவரும் முன்னேறி தகுந்த கல்வியும், பொருளாதாரமும் பெறும் வரை அவர்கள் சாதி அடையாளங்களை தாங்கி இருக்கவேண்டும்...
அதனால் தான் அரசு சாதி சான்றிதழ் இன்னும் கேட்கிறது...
நீங்கள் சாதி அடையாளத்தை பின்பற்ற விரும்பவில்லை என்றால் விட்டுத்தள்ளுங்கள்...
ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் முழுமையாக தங்கள் உரிமைகளை பெற்றுவிடவில்லை என்ற உண்மையை உணருங்கள்...
ஓவர் நைட்டில் சாதியை ஒழித்துவிட்டால் என்ன ஆகும், அவர்களுக்கு எப்படி நீதி செய்வது என்பதை ஒரு நிமிடம் கற்பனை செய்துபாருங்கள்...
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பார்ப்பணர்கள் கூவுவது அதி பயங்கர சூழ்ச்சி...!!! எப்படி விளக்குவதென்றே புரியவில்லை...
//இஸ்லாம் இஸ்லாமியர்கள் குறித்து நீங்கள் போடும் மதிப்பீடு:
ஒரு பிஎம்யூயூ காரை ஒரு ஓட்டத் தெரியாத ஓட்டுனர், பல்வேறு கீறல்களோடு அதை புளிய மரத்தில் இடித்தால்,நீங்கள் அந்த பிஎம்யூயூ காரைக் குறை சொல்வீர்களா..? இல்லை அந்த ஓட்டுனரைக் குறைசொல்வீர்களா ??
இஸ்லாம் மார்க்கமும் அந்த பிஎம்யூயூ காரைப் போன்று தான்.அதை சரியான முறையில் உபயோகிக்கத் தெரியாத ஓட்டுனர்களாகிய சில இஸ்லாமியர்களை வைத்து இஸ்லாத்தை மதிப்பிட வேண்டாம்.
இஸ்லாத்தில் நல்ல ஓட்டுனர்களும் உண்டு. //
நான் ஒரு நல்ல மனிதனாகவே வாழ ஆசைப்படுகிறேன்.
நல்ல இஸ்லாமியனாகவோ
நல்ல கிரிஸ்துவனாகவோ
நல்ல இந்துவாகவோ அல்ல
ஒரு இஸ்லாமியன் மற்றொரு இஸ்லாமியனுக்கும்,ஒரு இந்து மற்றொரு இந்துவுக்கும் முதலிடம் கொடுக்கலாம்,
ஒரு மனிதனாக நான் சக மனிதர்கள் அனைவருக்கும் முதலிடம் கொடுக்கிறேன். சாதி,மத சார்ந்த எந்த பூச்சுகளும் இல்லாமல் அனைவரும் எனது சகோதரர்களே!
\\ஒரு மனிதனாக நான் சக மனிதர்கள் அனைவருக்கும் முதலிடம் கொடுக்கிறேன். சாதி,மத சார்ந்த எந்த பூச்சுகளும் இல்லாமல் அனைவரும் எனது சகோதரர்களே!\\
வாழ்க நண்பா.
சாதி, மத பூச்சுகள் என்னிடமும் இல்லை
சகோதரத்துவம் என்பதே நான் கண்ட மார்க்கம்.
வா சகோதரா மனிதம் கொண்ட ஒரு உலகம் படைப்போம் ...
ஆர்வ மிகுதியில் லாகின் செய்யாமலே கருத்துரை வழங்கியதால் என் ப்ளாக் பெயர் வரவில்லை.
எனவே தான் என் நார்மல் லாகின் பெயரிட்ட கருத்தை டெலிட் செய்தேன்.
// ஒரு மனிதனாக நான் சக மனிதர்கள் அனைவருக்கும் முதலிடம் கொடுக்கிறேன். சாதி,மத சார்ந்த எந்த பூச்சுகளும் இல்லாமல் அனைவரும் எனது சகோதரர்களே! //
வாழ்த்துக்கள்...
( இது போன்ற விவாதங்கள் இன்றும் முற்றுப் பெறாதவைகள் தான்.)
நீங்கள் இறைகொள்கை இல்லாதவராகவே இருக்கலாம்.எந்த மதத்தையும் பின்பற்றாதவராகவே இருக்கலாம்.அது உங்கள் சுயவிருப்பத்தை பொறுத்தது.
ஆனால் ஒரு மதத்தைப் ( மார்க்கத்தை,வழியை) பற்றி கருத்து தெரிவிக்குமுன், பொத்தாம்பொதுவாக சிந்திக்காமல், அங்கே கூறப் பட்டதென்ன ?? அதன் வழிமுறைகள் என்ன ?
என்பதை கொஞ்சம் ஆராய்ந்து,பயின்று கருத்துரைகள் வழங்கினால் முற்றுப் பெறாத விவாதங்கள், கொஞ்சம் ஆராக்கியமானதாகவாவது இருக்கும்.
நன்றி அருண் !!!!!!!!!!!
///ரவி அவர்கள் தலித் சமூகம் இன்னும் ஒடுக்கபடுகிறது என்கிறார், எனக்கு அதில் ஒரு முரண்பாடு தெரிகிறது.
அரசியல்வாதிகளின் தூண்டுதலில் அவர்கள் இடஒதுக்கீட்டுக்காக தம்மை தலித்தாகவே காட்ட நினைக்கிறார்கள்,
ஆனால் மனதளவில் அவர்களது தாழ்வுமனப்பான்மை அரசாலேயே மேலும் ஆழமாக ஊன்றப்படுகிறது.//
எத்தனை தலித் சமூக பிள்ளைகள் பள்ளிக்கு செருப்பு போட்டுக்கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...?
எத்தனை ஏழை பார்ப்பணர்கள் மலம் அள்ளி அதில் கிடைக்கும் கூலியை வைத்து வயிற்றை கழுவுகிறார்கள் என்று சொல்லுங்கள்...?
உங்கள் கண்களை திறங்கள்...ம்ஹூம் முடியாது நான் நல்லா ரெண்டு கண்ணையும் மூடிக்கிட்டு தான் உலகத்தை பார்ப்பேன் என்றால் என்னால ஆவாது சாமி...
தமிழ் ஓவியா எப்பவாது ப்ரீயா இருந்தா அவரிடம் விவாதம் செய்து மேட்டர்களை உள்வாங்கிக்கொள்ளுங்கள்...
சாதி ஒழிக்கப் பட வேண்டும் என்ற உங்களுடைய சிந்தனை உயர்ந்த ஒன்று. பாராட்டப் பட வேண்டியது. நானும் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். சாதி மத மொழி வித்தியாசம் இல்லாத சமுதாயம் உருவானால் மிக நன்றாகவே இருக்கும்.
அதே சமயத்தில் உங்கள் பதிவு மிகவும் மேலோட்டமான ஒன்றாக இருப்பதாகவே கருதுகிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படை பற்றி தெரிந்து கொள்ள இந்திய அரசியல் சட்ட வடிவமைப்பின் போது நடைபெற்ற விவாதங்களையும் இந்திரா சானி வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினையும் நீங்கள் முழுமையாக படிக்க வேண்டும். சுரண்டப் பட்ட சமுதாயங்களைப் பற்றி இழிவாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். அடிப் பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும். அதே போலத்தான் சிறுபான்மை சமுதாயங்களும். ஒதுக்கப் பட்டவர்களுக்குத்தான் அதன் அவமானமும் வலியார் மத்தியில் எளியோராக வாழ்வதில் உள்ள பயங்களும் புரியும். (தமிழகத்தில் இருந்த வரை இதெல்லாம் புரியாத எனக்கு காவிரி பிரச்சினையின் போது வன்முறையில் இறங்கிய கன்னடர் மத்தியில் வாழ்ந்த போதுதான் என்னுடைய சிறுபான்மையினத்தினர்க்கு உள்ள கஷ்டங்கள் ஓரளவுக்கு புரிந்தது. அங்குள்ள என் கன்னட நண்பர்கள் வன்முறையாளர்களின் போக்கை ஆதரித்தும் அங்குள்ள சிறுபான்மையினரான தமிழர்கள் மீதே அனைத்து தவறும் இருப்பது போல பேசியது பெரும்பான்மையினரின் ஓர வஞ்சனை போக்கையும் புலப் படுத்தியது )
அதே சமயம் சாதி மதம் இனம் எல்லாமே ஒரு அடையாளம் மட்டுமே என்பது என் கருத்து. இவற்றில் எப்போதுமே பிரச்சினை இருந்ததில்லை. எங்கே பிரச்சினை இருக்கிறது என்றால், ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு உயரே செல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் அவர்கள் பிற்பாடு அந்த உயரிய நிலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை. உதாரணத்திற்கு பஸ்ஸில் நீண்ட தூர பயணம் செய்யும் இருவரில் ஒருவருக்கு (சற்று முன்கூட்டியே வந்ததால்) சீட்டு கிடைத்து விடுகிறது. பல மணி நேரம் உட்காந்தே வந்தாலும் அவருக்கு நின்று கொண்டே வரும் மற்றவருடன் இடத்தை பகிர்ந்து கொள்ளவோ விட்டுக் கொடுக்கவோ மனமில்லாமல் அவருடைய அந்த சுயநல கொள்கைக்கு ஆயிரம் நியாங்கள் கற்பிக்கிறார். இதன் அடிப்படையிலேயே பல சாதி அமைப்புகள் உருவாகி உள்ளன. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதங்கள் கற்பிக்கப் பட்டுள்ளன என்பது என் கருத்து.
உங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களில் முதல் குழந்தை பிறக்கும் போது உங்களுக்கு நல்ல வசதி. ஆரோக்கியமாகவும் சத்துள்ள குழந்தையாகவும் வளர்க்கிறீர்கள். நன்கு படிக்க வைக்கிறீர்கள். இரண்டாவது குழந்தை பிறக்கும் போது கொடிய வறுமை. குழந்தைக்கு சரியான உணவு கல்வி கொடுக்க முடிய வில்லை. முதல் குழந்தை நன்கு படித்து பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கிறான். இரண்டாவது குழந்தை கூலி வேலை பார்க்கிறான். இப்போது உங்களுடைய சொத்தை பிரித்துக் கொடுக்கிறீர்கள். உங்கள் சொத்து முதல் குழந்தைக்கு மிகச் சிறிய விஷயம் மற்றும் அது தேவையுமில்லை. அதே சமயம் இரண்டாவது குழந்தைக்கு அதுவே வாழ்வாதாரம். என்ன செய்வீர்கள்? இரண்டு குழந்தைகளும் சமம்தான் என்று சொத்தை பிரித்துக் கொடுப்பீர்களா? இல்லை, பெரியவனே சிறியவனுக்காக கொஞ்சம் விட்டுக் கொடு என்று கோரிக்கை வைப்பீர்களா? இருவரும் சமம்தான் என்று சொத்தை சரிபாதியாக கொடுப்பது தர்மம் என்றால், இரண்டாவது குழந்தையை சரியாக வளர்க்க முடியாத போது உங்கள் தர்மம் எங்கே போயிற்று? இப்போது உங்களுக்கு முடிவெடுக்க முடியாத தெளிவில்லாத சூழ்நிலையில் பெரியவனே முன்வந்து "அப்பா உங்கள் சொத்து முழுவதையும் தம்பிக்கே கொடுங்கள். மேலும் என்னால் முடிந்த உதவிகளையும் செய்கிறேன். அவனும் வாழ்வில் முன்னேறட்டும். இருவரும் சந்தோசமாக இணக்கமாக இருப்போம்" என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.
இதனால்தான் நமது பெரியவர்கள் சட்டத்தை உருவாக்கும் போது எல்லாருக்கும் equitable treatment கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு போனார்கள். நன்றாக கவனிக்கவும் equal treatment அல்ல. எனவே சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். அதே சமயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளோரை (அவர்களும் நம் சகோதரரே) நாமும் ஒரு கை கொடுத்து தூக்கி விடுவோம். ஒரு சிலர் மட்டுமல்ல இந்தியர் அனைவருமே உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என் கருத்து.
அதே போல இஸ்லாம் என்பது அன்பின் மார்க்கமே ஆகும். வன்முறையில் இறங்குவோர் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று இஸ்லாத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தெளிவாக கூறி இருக்கிறார்கள். இதற்கு வலுவான ஆதாரங்கள் உண்டு. வேற்று நாட்டு மன்னர்களை எதிர்த்ததிலும் விடுதலை போராட்ட வேள்வியிலும், சுதந்திர இந்தியாவிற்கான சேவையிலும் பல இஸ்லாமிய சகோதரர்களின் பங்கு இருந்ததை மற்றும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது கூட ஒரு உண்மை. யாரோ சில வெறி பிடித்த பகைநாட்டு பயங்கரவாதிகளின் செயல்களுக்கு நம்முடன் இணைந்து பல காலமாக சகோதரர்களாக வாழ்ந்து வரும் மக்களைப் பொறுப்பாக்க முடியாது என்பது என் கருத்து.
நன்றி
வாங்கன்னே....நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒழிப்போம் சாதியை...
( நம்மள யாரும் ஒழிக்காம இருந்தா சரிதான் )
//இது முடக்கு வாதமாக கூட இருக்கலாம்,ஆனால் எனக்கு இது தான் உண்மை.எனக்கு உண்மை என படுவதை கடைசி வரை நான் ஆதரிப்பேன்.//
உண்மை என படுவதை ஆதரிப்பதை விட நான் பெருமதிப்பும் பிரியமும் வைத்துள்ள வால்பையன் தெளிவான உண்மையைக் கண்டறிவதில் தீவிரமாக இறங்கினால் பெருமகிழ்ச்சி கொள்வேன்.
அற்புதமான பின்னூட்டம் மேக்ஸிம் இண்டியா...
நெஞ்சார வாழ்த்துகிறேன்...
"சாதி" என்ற ஒன்றை மனிதனே உருவாக்கிவிட்டு,உருவாக்கியதை வைத்து சண்டை போடுவது எந்த வகையில் சரி,நன்று சொன்னீர்கள் நல்ல பதிவு
//அரசு இரம்பு கரம் கொண்டு அதை அடக்கமுடியும்.//
நீங்கள் எழுதியுள்ளீர்கள் இங்கே பின்னூட்டப் பதிலில்.
இதற்கு என் கருத்து:
It is impossible in a democracy; but, possible in a dictatorship.
A dictator, with a strong military, can impose his will on society; and people, out of fear, will obey his command. If he, lets imagine, sees such caste divisions, which put some people down and others up, and give unfair and inequitable treatment, and which, in the long or short run, harm the welfare of the society, as a whole, and the dictator becomes sure that such practice should be rooted out tooth and branch so that the society can grow well, HE WILL DO IT by using his brutal power. Caste division will vanish the next morning magically: people will be arrested; and public hanging will be at every place, sending shivers down the spine of every one.
As a natural corollary, people will be treated equally; as someone here has pointed out, the people who had earlier suffered under the burden of a low caste, will be given an initial uplifting, which uplifting will be so swift and so effective that they will come on par with others sooner than later.
Finally, so soon, there will be an equal society, so far as castes are concerned, and that will lead to an equitable society. The end result will be to the liking of all in such a society. The dictator will be called a benevolent dictator.
This happens, or can happen only there, not in a democracy.
A democratic government is run by men and women chosen by people - and, today, people don’t choose their representatives based on their calibre or potential, but purely for selfish reasons just as his/her caste (they think their future is safe with their caste men; so, ‘let our caste men eat the public money, not other caste men’!). This consideration will also help them ensure that the other caste people wont dominate and deprive them of their social benefits. (The Brahmins did it in the ancient past)
Such narrow and selfish mindset brings forth in public only such representatives in a democracy, who go to form the so-called democractic government. No doubt, they won’t do anything at all to upset the ideal thinking of their electors. ‘They are our people; We are their representatives!’
Thus, we see caste politics flourishing happily and unquestionably.
அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க முடியாது.
One thing is possible, that can come from people themselves, as you have rightly observed in your another reply here, namely, the parents.
In other words, the elders. If they think God has created none different from me or you; and before God, all of us are equal, and to love God is to love man, to be kind, compassionate and considerate to the lesser and less privileged people, then their children also will pick up the same egalitarian values.
If Dondu Raagahvan believes that he is born in a caste that puts him above the dalits, and "let dalits live in their cheris, and I in my agrahaaram", and everyting will be hunky dory, and he writes all this in his blog, the younger generation, who is unfortunate to read him, will think he is right, just because he is an elder.
We heard in a நீயா-நானா programme in Vijay TV a girl announcing openly:
நான் ஐயங்காராக பிறந்ததற்காக பெருமையடைகிறேன்.
She is a college-going girl. She implied that to be born as a dalit is a shame' and also, she isnt aware a dalit cant announce herself like this girl has done.
If this girl (iyengaar) had been brought with egalitarian values by her parents, she would think many, many times or become conscience-stricken, before making such an adacious racist statement.
Recall Dondu Raagahavan in a recent blog entry wrote: He told the interviewer boldly "நான் ஒரு வட கலை ஐயங்கார்’. He tells the blog readers: He made this statement proudly looking straight into the eyes of the interviewer!! The implication is that all of us should be proud of our castes. He is annoyed with other brahmins who dont declare their castes proudly. He exhorts each and every brahmin to come out and decalre their caste produly as he had done! Please read his recent blogs posted this month. Is he conscience-stricken that a dalit cant announce his caste proudly?
Why did Parithy Ilamvazuthi complain to the speaker in a crying tone when a AIADMM MLA abused him in the assembly 'பறையா வாயை மூடுடா?”
At the same time, why could Jayalalitha openly announce in the same assembly in an earlier session, when some DMK MLA called her பாப்பாத்தி.
‘ஆமாம்...நான் பாப்பாத்திதான், என்ன செய்வே?”
ஏன், பரிதி இளம்வழுதி:
‘ஆமாம். பறையந்தான். என்ன செய்வே?’என்று சொல்லமுடியவில்லை?
Have the Brahmins like the above-mentioned girl and others ever pondered over the possibility that an upper caste can produly announce his or her caste in open society, whereas the lower caste people feel ashamed to say it out; and keep it secret from public view ?
How can we abolish castes if, we, the elders, are outselves rotten to the core? The pity is that these people quote and write about God very, very soulfully.
To sum up, let’s not put our hopes in a party or a government. Lets stop blaming politicians for all our social ills. They fish in troubled waters. And, you and me, have already troubled the waters!
//செந்தழல் ரவி said...
ஓவர் நைட்டில் சாதியை ஒழித்துவிட்டால் என்ன ஆகும், அவர்களுக்கு எப்படி நீதி செய்வது என்பதை ஒரு நிமிடம் கற்பனை செய்துபாருங்கள்...//
இதற்கு வால்பையனிடமிருந்து பதில் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி.
// செந்தழல் ரவி said...
அற்புதமான பின்னூட்டம் மேக்ஸிம் இண்டியா...
நெஞ்சார வாழ்த்துகிறேன்...
//
இது நீயா நானா கோபிநாத்தின் டயலாக் !!
இனிய நண்பா வால்பையன்...
உனது கடவுள் மறுப்பிலிருந்து நான் வேறுபடுகிறேன், ஆனால் சாதி பற்றிய எண்ணத்துடன் 100% ஒத்துப்போகிறேன். சாதியை முழுவதுமாக இவ்வுலகிலிருந்து ஒழிப்பது நலம் என நினைக்கிறேன்.
நான் பிராமண குடும்பத்தில் பிறந்ததினால் பிராமணன். அதில் பெருமைக்கோ சிறுமைக்கோ இடமில்லை. சாதியை ஒழித்து விட்டால், அவரவர் முயற்சி செய்து பெற்றவை மட்டுமே அவரவர் பெருமை / சிறுமையை நிர்ணயிக்கும்.
lets work towards caste free India.
இங்கு ஒன்று கூற விரும்புகிறேன், வலையுலகத்தில் காரணமற்ற / தேவையற்ற anti brahmin culture நிலவுகிறது, நான் இந்திய கோடியை நேசிக்கிறேன் என்று கூறினாலும் அதற்கும் "பாப்பான்" பட்டம், I hate it...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston USA
//Recall Dondu Raagahavan in a recent blog entry wrote: He told the interviewer boldly "நான் ஒரு வட கலை ஐயங்கார்’. He tells the blog readers: He made this statement proudly looking straight into the eyes of the interviewer!! The implication is that all of us should be proud of our castes. He is annoyed with other brahmins who dont declare their castes proudly. He exhorts each and every brahmin to come out and decalre their caste produly as he had done! Please read his recent blogs posted this month. Is he conscience-stricken that a dalit cant announce his caste proudly?
Why did Parithy Ilamvazuthi complain to the speaker in a crying tone when a AIADMM MLA abused him in the assembly 'பறையா வாயை மூடுடா?”
At the same time, why could Jayalalitha openly announce in the same assembly in an earlier session, when some DMK MLA called her பாப்பாத்தி.
‘ஆமாம்...நான் பாப்பாத்திதான், என்ன செய்வே?”
ஏன், பரிதி இளம்வழுதி:
‘ஆமாம். பறையந்தான். என்ன செய்வே?’என்று சொல்லமுடியவில்லை?”
உங்களுக்கு ஒரு புது தகவல். நான் தில்லியிலிருந்த போது ஒரு சமயம் மாயாவதி அவர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அதில் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்: “ஆம், நான் சமார் வகுப்பை (ஒரு தலித் பிரிவு) சேர்ந்தவள். இதை நான் கர்வத்துடன் கூறுகிறேன்.
நான் பரிதி இளம்வழுதியாக இருந்தால் இப்படி கூறியிருப்பேன். “ஆம் நான் தலித்துதான். எங்களவர்கள் இல்லாவிட்டால் உங்கள் கக்கூசெல்லாம் நாறிவிடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்”
@செந்தழல் ரவி
பார்ப்பனர் மலம் அள்ளுவதில்லையா? சுலப் சவுச்சாலய் உருவாக்கியது பார்ப்பனரே. அது சரி எத்தனை கிறித்துவர்கள், கவுண்டர்கள், முதலியார்கள் மலம் அள்ளுகிறார்கள் என்பதையும் கூறிவிட்டு போங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏற்கனவே நான் தீவரவாதத்தை அழிச்சுருக்கேன். இப்ப சாதியையும் அழிக்கனும்னா என்கிட்ட சொல்லவேண்டியது தானே...
அடிப்படை உண்மையை எல்லோரும் மறந்து பேசாதீர்கள்.
எப்படி சாதியை ஒழிப்பீர்கள்?
அப்படியே வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வைத்தால் என்னாகும்?
ஒரு பிராமின் ஏழையாக இருந்தாலும், அவனுக்கு தெரியும் படிப்பின் அருமையும்,உலகத்தின் ஒட்டமும்.
ஆனால் ஒரு ஏழை தலித்துக்கு இது தெரியுமா?
அவனுக்கு தான் இன்னும் சாக்கடையில் தான் இன்னும் இருக்கீறோம் என்றே தெரியாது ...
அவன் உலகம் மிகச் சிறியது.
ஒரு குழந்தைக்கு சாப்பாடு எல்லாம் போட்டு,ஜாம்பாவங்களுக்கு இடையே ஒட்ட பந்தயத்தில் ஒட செய்தால் என்னவாகும் ?
அதுதான் இங்கும் நடக்கும்.
இன்று மேல்மட்டத்தில் இருபவர்கள் எல்லாரும் உயர் சாதியை சேர்ந்தவர்கள்(அப்படினு அவர்கள் நம்புகிறார்கள்). அவ்ர்கள் இன்றும்,ஏப்போதும் திருந்தவே மாட்டர்கள்.
அவ்ர்கள் அவ்ர்களுடைய சாதியை சேர்ந்தவர்களையே உயர்த்துவார்கள்.
அவ்ர்கள் மனதை மாத்த முடியது.ஆனால் அவர்களையே மாற்ற வேண்டும்.
சாதி ரீதியான இடஒதுக்கீட்டினால் 1% மக்கள் பாதிக்கபடலாம். ஆனால் 99% மக்கள் பயன் அடைவர்கள்.
நான் சாதியை ஏற்க்கவில்லை. ஆனால் சாதி ரீதியான இடஒதுக்கீட்டனை ஏற்க்கிறேன்
\\அரசியல்வாதிகள் பிழைக்கத்தான்.
இந்த பிரிவினை இருந்தால் தானே இவர்களால் அரசியல் நடத்தமுடிகிறது.\\
சாதிகள் இந்து சமயத்தில்(மதத்தை, மதம் என்னும் சொல்லையே நான் எதிர்க்கின்றேன் ) தோன்றி மற்ற சமயங்களிள் அடைக்கலம் புகுந்து கொண்டன.
அரசியல்வாதிகள் கடந்த 50 ஆண்டுகளாகத்தான் உள்ளனர். ஆனால் சாதிகள் 3000 ஆண்டுகளுக்கு மேல் உள்ளன. அப்ப இதற்க்கு காரணம் என்ன?
கடந்த 50 ஆண்டுகளில் தான் கீழ் சாதீகாரர்கள் என்று சொல்ல படுபவர்கள் , உயர்ந்து வருகிறார்கள். இதற்க்கு யார் காரணம் ?
ஒரு சில அரசியல்வாதிகளினால் தான் இது சாத்தியமனது என்றை மறந்து பேசாதீர்கள்
நர்சிம் எழுதிய பதிவையும் படித்தேன்...டோண்டு சார் எழுதிய பதிவையும் படித்தேன்...
நர்சிம் சொல்வது போல குமுதம் வேண்டாத வேலையை செய்து வருவதாகத் தான் தோன்றுகிறது... இப்பொழுது தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக (ஓரளவு) ஜாதி சண்டைகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது...ஆனால் குமுதம் விடாது கருப்பு ரேஞ்சில் விடாது போலிருக்கிறது... ஒரு வேளை அவர்கள் ஜாதிகளின் போராட்டத்தை பதிவு செய்கிறோம், பெருமைப்படுத்துகிறோம் என்று காரணம் சொன்னாலும் பலருடைய ஜாதி திமிரை வளர்க்கவே அந்த கட்டுரைகள் உதவக்கூடும்...தேவர் மகனில் வரும் போற்றிப்பாடடி பொண்ணே பாடல் சில எதிர்பாராத விளைவுகளை இன்றைக்கும் ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது!
ஜாதி இருக்கிறது என்பது உண்மையே...ஏன் பூமியில் பல கிருமிகள், நோய் பரப்பும் வைரஸ் கூட இருக்கிறது...அதற்காக இருக்கிறது...ஒன்றும் செய்ய முடியாது என்று விடமுடியுமா??
ஜாதி வேண்டாம் என்பது இன்றைக்கு வெறும் முற்போக்கு கருத்தாகவும், ஏட்டுச் சுரைக்காயாகவும் தோன்றலாம்....ஆனால், சரித்திரத்தை திரும்பி பார்த்தால் ஒரு காலத்தில் ஜாதியை போட்டுக் கொள்வது பெருமையாக இருந்திருக்கிறது...இன்றைக்கு பலரும் ஜாதியை போட்டுக் கொள்வதில்லை...
மிக வெளிப்படையாக இருந்த ஜாதி அடையாளங்கள் தவறு என்று புரிய வைக்கவே இத்தனை வருடம் ஆகியிருக்கிறது....அது போல் என்றாவது ஒரு நாள் ஜாதி என்ற அமைப்பே தவறு என்று எல்லாருக்கும் புரியலாம்...
ஜாதி ஒழிய வேண்டும் என்ற உங்கள் கருத்துடன் எனக்கு முழு ஒப்புதல்..
இந்த பின்னூட்டத்தையே டோண்டு சாரின் பதிவிலும் இடுகிறேன்.
//ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி....சிலர் அதை தாங்கள் நடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய பாதை என்று எடுத்துக் கொள்ளலாம்...ஆனால் பலர் அதை மற்ற ஜாதிகளை விட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று சொல்ல உபயோகிக்கலாம்..உண்மையா இல்லையா??//
சரித்திரத்தில் அபூர்வமாக நிகழும் ஒரு நிகழ்ச்சி, இம்மாதிரி ஒரு சாதியினர் தமது சொந்த முயற்சி மூலமே தம்மை உயர்த்தி கொண்டது. அது கண்டிப்பாக அவதானிக்க வேண்டியது. அவரது பழைய நிலையில் இன்னும் இருக்கும் தலித்துகளுக்கு முன்மாதிரியாக அதை கூறுவதும் இப்பதிவின் நோக்கமாகும். இதற்கு நீங்கள் சொன்ன விளைவுகளும் இருக்கலாம்.
அதற்காக இதை கூறக்கூடாது என்றால் இப்படியும் கூறலாம்.
மின்சாரத்தால் ஷாக் அடித்து பலர் இருக்கின்றனர் ஆகவே மின்சாரமே வேண்டாம் என கூறலாம்.
ரயில்களில் செல்வதால் ஆபத்து ஆகவே ரயில் பயணங்களே வேண்டாம் என நினைக்கலாம். சில நாட்கள் குண்டு வெடிக்கும் என ரயில் பயணங்களையே தவிர்க்கலாம் (டிசம்பர் 6-ஆம் தேதி போல).
கால்பந்து விளையாட்டினால் இரு லத்தீன அமெரிக்க நாடுகளிடையே யுத்தமே வந்ததாக ஒரு முறை படித்துள்ளேன். ஆகவே விளையாட்டு போட்டிகளே வேண்டாம். ஆளுக்கு ஒரு கால்பந்து வாங்கி தந்து விடுங்கள் என்ற ரேஞ்சில் பேசலாம்.
கிரிக்கெட்டால் சூதாட்டம் வளர்கிறது. பாக்ஸிங்கில் முன்னமேயே வெற்றி பெற வேண்டியவர்களை தீர்மானிக்கிறார்கள். ஆகவே அவை எல்லாம் வேண்டாமே. எதற்கு அவை? டெண்டுல்கர் போன்றவர்கள் விளம்பரம் மூலம் கோடிக் கோடியாக சம்பாதிப்பதுதானே நடக்கிறது?
விளம்பரம் என்பது பொய்களால் உருவானது. இன்ன பொருள் இந்த விடத்தில் விற்பனையாகிறது என வெறும் தகவல் அளித்தால் போதாதா?
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தான் மெமரி ப்ளஸ் போன்ற மருந்தை உபயோகிப்பதாக கூறுவது எவ்வளவு அபத்தமான விளம்பரம், ஆகவே விளம்பரங்களியே தடை செய்து விடலாமா?
நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?
//இப்பொழுது ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் ஜாதியை முற்றிலும் ஒழித்து விட முடியாதா என்ற நம்பிக்கை தான்....//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?//
100-ல் 99 அபார்ப்பனர்கள் நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் (அவற்றில் பல அவரவர் சாதியினராலேயே நடத்தப்படுவை) பார்ப்பனரே பொறுப்பு என் நீட்டி முழக்குகின்றனரே ஏன்? யார் தவறை மறைக்க இந்த நாடகங்கள்? உயர்சாதீயம் என ஒரு வார்த்தை இருக்கும்போதே வேண்டுமென்றே பார்ப்பனீயம் என எழுதுகின்றனரே அது ஏன்? தமது சாதியினர் செய்யும் சாதிக் கொடுமைக்கும் அதே பெயர் என்னும் போங்கு ஏன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்னூட்டங்கள் சூடாகப் போய்க்கொண்டு இருக்கின்றன!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!
தேவா...
வால்பையனும் - நானும் (ஒரு சிறிய chat)
me : கண்டிப்பா சாதியை ஒழிக்கப்போறேன்
வால்: :)
என் மகள் : "அழி ரப்பரால அழிச்சா சாதி அழிஞ்சுடும்".
me : "அடியே ஏன் செல்லம் உனக்குத் தெரிஞ்சது கூட இங்கே இருக்கிற வால்பையன் மாமாக்குத் தெரியலயே"
வால்: :) அழி ரப்பரால அழிச்சா சாதி அழிஞ்சுருமா?
:P
ஒரு சிறு குறிப்பு : பின்னூட்டங்கள் ரொம்ப சூடா இருந்தது.
அதுதான் இடையிலே எனது மகளின் வாக்குமூலத்தை நுழைத்து கொஞ்சம் கூல் பண்ணினேன்.. கூல்..
Cool.. Kool..
//உங்களுக்கு ஒரு புது தகவல். நான் தில்லியிலிருந்த போது ஒரு சமயம் மாயாவதி அவர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அதில் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்: “ஆம், நான் சமார் வகுப்பை (ஒரு தலித் பிரிவு) சேர்ந்தவள். இதை நான் கர்வத்துடன் கூறுகிறேன்.
நான் பரிதி இளம்வழுதியாக இருந்தால் இப்படி கூறியிருப்பேன். “ஆம் நான் தலித்துதான். எங்களவர்கள் இல்லாவிட்டால் உங்கள் கக்கூசெல்லாம் நாறிவிடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்”
- தொண்டு இராகவன்.
தமிழ்நாடும் தமிழ்பார்ப்பனர்களும் வேறு. வடநாடு வேறு. வடநாட்டுப்பார்ப்பனர்கள் வேறு.
இங்கு இன்று, ”’நான் வடகலை ஐயங்கார்’ எனசொல்வதில் பெருமைப்படுகிறேன்’ என டி.வியிலும் வலைபதிவுளிலும் எழுத முடிகிறது. ஆனால், அங்கு எவரும் செய்வதில்லை. விரும்புவ்துமில்லை. அவர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள் மாறவில்லை.
மதிப்பிற்குரிய செட்டியார் சமூகத்திற்கு
மதிப்பிற்குரிய நாடார் சமூகத்திற்கு
என்றெல்லாம் சாதிவாரியாக பேசல் அங்கு மறந்து விட்டது. ஆனால், மானில வாரியாக ஒன்று சேரல் மட்டுமே உண்டு. பன்ச்ஞாபிகள், பீகாரிகள் வங்காலிகள் என்று.
இங்கு வாழ் பறையர் தன்னை பறைய என்ற் வெளி சொல்லி பெருமைப் படுவதில்லை. சொல்வதில்லை.
நான் பறையனாக இருந்தால் சொல்வேன் என்பது, நான் கட்வுளாக இருந்தால், சூரியனுக்குப் பறப்பேன் என்பதாகும்.
நிற்க. அங்கும் அரசியல் வாதிதான் இப்படிப் (மாயாவதியைப்போல்) பேச முடியும். மற்ற தலித்துகளால் முடியவதில்லை.
நான், 40 வருடங்களாக தில்லியில் வசித்தவன்.
தொண்டு இராகவன்!
உங்கள் அப்பா மலம் அள்ளும் தொழிலைச் செய்தார். நீங்களும் அப்படியே. என்று வைத்துக்கொள்வோம்.
‘என் அப்பா மலம் அள்ளினார்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
‘நானும் மலம் அள்ளுகிறேன்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்’
என்று வலைபதிவிலோ, டி.வி.நேருக்கு நேர் நிகழ்ச்சியிலோ சொல்லமுடியுமா?
விதண்டவாதத்திற்காக நான் அதைச்செய்வேன் என்று சொல்வீர்கள். அஃதாவது, இன்றும் இழிதொழில்களான, சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தல் (இருநாட்களுக்கு முன் ஒருவர் அத்தொழில் பண்ணும்போது இறந்துவிட்டார். அவர் உடலை வெளிக்க்கொணரும் படம் தினமலரின் வெளியானது)
இவர்கள் பெருமைப்பட வேண்டுமா? முடியுமா இராகவன்?
Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com
உங்களின் வாதம்-தர்க்கம் அனைத்தும் படிப்பதற்கும் கேட்பதற்கும் அருமை.
கண்கள் பனிக்கிறது
நெஞ்சம் இனிக்கிறது.
ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது.
பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!
பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!
சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!
சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!
வலையுலகிலும் ஜாதி சண்டையுங்கோ!
வால்பையன் போராடுவது நல்லதுக்குங்கோ!
அரசியலிலும் ஜாதி கணக்கிடப் படுகிறது
ஆன்மீகத்திலும் ஜாதி பேசப் படுகிறது
இசையுலகிலும் ஜாதி போற்றப் படுகிறது
ஈசனை தரிசிக்கவும் ஜாதி பார்க்கப் படுகிறது
உதவி செய்யும் போதும் ஜாதிதான்
ஊடகத்திலும் மோதல்கள் ஜாதியின் பேரால்
என்று மறையும் இந்த ஜாதி மோகம்
ஏங்கும் நல்ல ஜாதி மறுப்பாளர்கள்
ஐயமில்லாமல் சொன்னானே தேசியக்கவி பாரதியும்
ஒற்றுமை காப்போம் ஒன்றாய் உழைப்போம்
ஓங்கு புகழ் தமிழர் திருநாளில்
ஓளவையின் தெய்வ வாக்கை காப்போமே!
அன்பான வால்பையன்...
நானும் வருகிறேன்.
0
குப்பை கூட்டுகிற மனிதரை இன்னும் ஒருமையில் மட்டுமே கூப்பிடமுடிகிறது.
ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரை, அவரது ஊர் ஆடுமேய்க்கிற இளைஞன் என்னப்பா என்று அழைத்தானாம்.
உத்தப்புரத்து பேருந்தில் உயர் சாதி மாணவனை தலித்தொருவன் அண்ணே என்று சொன்னதற்கு கட்டிவைத்து.
உதைத்தார்களாம். நீ என்ன எங்கப்பனுக்கா பொறந்தே என்று சொல்லியபடி.
இன்னும் உயர்சாதிக் கிராமங்களின் தெருக்களுக்கும், அருகிருக்கும் தலித் தெருக்களுக்கும் இடையில் கொடூரமான தடுப்பு சுவர்களிருக்கிறது. செங்கற்களாலும், சிமெண்டாலுமல்ல அதைவிட இறுக்கமான மேலாதிக்கத்தால்.
ஆரம்பப்பாட சாலையில் தலித் மாணவர்களை கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற தெய்வத்துக்கு முந்திய ஆசிரியக் 'குரு' க்கள் இன்னும் இருக்கிறார்கள்.
தன் மலத்தையே இடதுகையால் தொடுகிற நாம் தான், ஊர்க்கழிவைத் தலையில் சுமக்கிற பொறுமைச்சாலிகளை கண்டும் காணாமல் கடந்து போகிறோம்.
கயர்லாஞ்சியில் தலித் குடும்பம், படித்ததாலும், சொந்த நிலம் வைத்திருந்ததாலும் தானே வெறி தாண்டவமாடியது.
ஜன்ம விருத்தி ஸ்தானத்தில்,.... சொல்லக்குலை பதறுகிறது.
இந்தியப்பரப்பில் எங்காவது எப்போதாவது தலித்தல்லாதாருக்கு இதுபோன்றொரு கொடுமை நடந்ததாக சுட்டிக்காட்டடும்.
"மலம் அள்ளுகிற தோழனுக்கு
எந்தக்கை பீச்சாங்கை".
"உன்னை அறியாத ஊரில்
பறையென்று சொல்லிப்பார்..
அப்போது தெரியும் ஜாதியின் வலியும் ரணமும்".
இவையெல்லாம் கவிதைகளல்ல நிஜம்.
லட்சக் கணக்கான தொழிற்சாலைகளில் எத்தனை நிறுவனங்கள் தலித்துக்குச் சொந்தம் ?.
ஒரு சாயாக்கடை நடத்த முடியுமா ? எவன் வந்து கை நனைப்பான்...?
இட ஒதுக்கீடு.. அது மட்டும் இல்லாமல் போயிருந்தால் பழய சோத்துக்கும், கிழிஞ்ச துணிக்கும் உழைக்கலாம்.
உழைத்து, உழைத்து கிழியாத பழய துணிக்கு உயரலாம்.
பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டுமே இலகுவானது.
வால்பையன் இன்னும் உரத்த குரலில் சொல்லுங்கள்...
வெடிப்புறப்பேசுங்கள்.....
பேசாப் பொருளைப் பேசுங்கள்.. துணிச்சலுடன்.
Well said Vaal paiyan..
all the best
//அ.மு.செய்யது said...
நீங்கள் இறைகொள்கை இல்லாதவராகவே இருக்கலாம்.எந்த மதத்தையும் பின்பற்றாதவராகவே இருக்கலாம்.அது உங்கள் சுயவிருப்பத்தை பொறுத்தது.
ஆனால் ஒரு மதத்தைப் ( மார்க்கத்தை,வழியை) பற்றி கருத்து தெரிவிக்குமுன், பொத்தாம்பொதுவாக சிந்திக்காமல், அங்கே கூறப் பட்டதென்ன ?? அதன் வழிமுறைகள் என்ன ?
என்பதை கொஞ்சம் ஆராய்ந்து,பயின்று கருத்துரைகள் வழங்கினால் முற்றுப் பெறாத விவாதங்கள், கொஞ்சம் ஆராக்கியமானதாகவாவது இருக்கும்.//
யாரையும், யாருடைய நம்பிக்கையையும் குறை சொல்லும் நோக்கத்தில் சொல்லவில்லை நண்பரே!
மதமாக இல்லாமல். இந்து,இஸ்லாம் மற்றும் கிரிஸ்துவம் கடவுளை சென்றடைய ஒரு வழியாக பார்க்கிறது அதாவது மார்க்கம், ஆனால் பாருங்கள் ஒரே கடவுள், அதற்குள்ளும் ஏகப்பட்ட பிரிவினைகள்.
இந்துவில் சாதி ரீதியாக,
இஸ்லாத்தில் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, ஷியா, சன்னி அதுவல்லாது, தமிழகத்தில் உருது பேசுபவர் பட்டானி, பேசாதவர் ராவுத்தர்,
கிரிஸ்துவத்திலும் நாங்கள் தான் உண்மையான கிரிஸ்துவர்கள் என்று சொல்லி கொண்டு ஒவ்வோரு கூட்டமும்.
அதை எப்படி அனுமதிக்கிறது மார்க்கம்,
கடவுள் என்றொருவர் இருந்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை தான், ஏனென்றால் இங்கே வன்முறைகளோ, கடவுள் பெயரால் ஏமாற்றுவதோ நடக்காது, இல்லையென்பதால் எல்லாம் நடக்கிறது, ரத்தம் சிந்தாத பூமியாக மாறட்டும் நானும் ஆத்திகனாக மாறுகிறேன்.
//செந்தழல் ரவி said...
எத்தனை தலித் சமூக பிள்ளைகள் பள்ளிக்கு செருப்பு போட்டுக்கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...?//
சத்தியமாக எனக்கு தெரியாது,
நான் படிக்கும் காலத்திலேயே பள்ளியில் இலவச செருப்பு கொடுதார்களே, இப்போது கொடுப்பதில்லையா?
கொடுக்கவில்லை என்றாலும் செருப்பு வாங்க அவர்களின் பெற்றோர்களிடம் காசு இல்லையா,
இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுக்கும் அரசு செருப்பு கொடுத்தால் நட்டத்தில் ஓடுமா?
ஒருவேளை உயர்சாதியினர் செருப்பு போட அனுமதிக்கவில்லையென்றால் அதை தட்டி கேட்க வேண்டிய அரசு வேறு எதையாவது புடுங்கி கொண்டிருக்கிறதா?
நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, தன்னை உயர்சாதியாக நினைப்பவர்களுக்கு காயடிக்க வேண்டுமென்று.
//எத்தனை ஏழை பார்ப்பணர்கள் மலம் அள்ளி அதில் கிடைக்கும் கூலியை வைத்து வயிற்றை கழுவுகிறார்கள் என்று சொல்லுங்கள்...?//
இதற்கு டோண்டு பதில் சொல்லிவிட்டார், இருந்தாலும் என் பங்கிற்கு,
ஜட்கா வண்டியில் இருக்குமே குதிரை அதற்கு கண்ணை இரு பக்கமும் மறைத்திருப்பார்கள், சாலையின் ஓரங்களை பார்க்ககூடாது, இருக்கும் ஓட்டையில் பாதை மட்டுமே தெரிய வேண்டுமென்று, இது மனிதனின் சுயநலம்.
எதற்கெடுத்தாலும் பார்ப்பான் செய்கிறானா என்று கேட்க சொல்லி உங்கள் கண்ணை கட்டிவிட்டது யார்?
ஆதிக்கசாதிகளில் பார்பனியமும் ஒன்றாக் இருக்கலாம், ஆனால் சமீபகாலமாக நடந்த சாதி வன்முறைகளில் பார்பானின் பங்கு என்ன? இப்படி பார்பனனையே நோண்டி கொண்டிருந்தால் உண்மையிலேயே சாதி வன்முறைகள் செய்யும் ஆதிக்கசாதிகளை யார் கேட்பது,
//உங்கள் கண்களை திறங்கள்...ம்ஹூம் முடியாது நான் நல்லா ரெண்டு கண்ணையும் மூடிக்கிட்டு தான் உலகத்தை பார்ப்பேன் என்றால் என்னால ஆவாது சாமி...//
புரிதல்கள் ஆளுக்கு ஆள் மாறுபடலாம், ஆனால் நீங்கள் புரிந்து கொண்டது தான் சரியென்பது எந்த வகையில் நியாயம். ஒன்று புரிகிறது நான் கண்களை மூடி கொண்டிருக்கிறேன், உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது.
//தமிழ் ஓவியா எப்பவாது ப்ரீயா இருந்தா அவரிடம் விவாதம் செய்து மேட்டர்களை உள்வாங்கிக்கொள்ளுங்கள்...//
தாராளமாக பேசுகிறேன்.
என் சுய புத்தியோடு!
விரிவான பின்னூட்டதிற்கு மிக்க நன்றி மோகன்பிரபு(Maximum India)
//சுரண்டப் பட்ட சமுதாயங்களைப் பற்றி இழிவாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். //
கண்டிப்பாக இதை நானும் ஒத்து கொள்கிறேன், எனது கேள்வி அவர்கள் எதன் அடிப்படையில் சுரண்டப்பட்டார்கள், யாரால் சுரண்டப்பட்டார்கள், அனைத்துமே சாதியினால், உயர்சாதியினரால்.
பின் தங்கிய மக்களுக்கு கண்டிப்பாக அரசு உதவ வேண்டும், அதே நேரம் மேலும் சாதிய கொடுமைகள் நடக்காமலிருக்க சாதிய முறைகளை ஒழிக்க வேண்டும்
//கன்னடர் மத்தியில் வாழ்ந்த போதுதான் என்னுடைய சிறுபான்மையினத்தினர்க்கு உள்ள கஷ்டங்கள் ஓரளவுக்கு புரிந்தது.//
அந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை அடிப்படையில்,
இங்கே தமிழகத்தில் பத்து தலித்துகள் என்றாலும் உயர்சாதிகாரன் முன்னாள் கைகட்டி தானே நிற்க வேண்டியிறுக்கிறது. தன்னுள் ஒற்றுமையற்ற தமிழன் எங்கிருந்து கர்நாடகத்தையோ, ஈழத்தையோ கேள்வி கேட்க போகிறான்.
அப்படியே குரல் கொடுத்தாலும் அதை அமுல் படுத்தவேண்டியது யார், அதை செய்ய வேண்டியவர்கள், அதை செய்யாமல் கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாவேன், சாலையில் தூக்கி போட்டால் சாரட் வண்டியாவேன் என்னும் டயலாக் மட்டும் விடுகிறார்களே இதனால் சிறுபான்மையினருக்கு விடிவு காலம் பிறக்குமா?
//அதே சமயம் சாதி மதம் இனம் எல்லாமே ஒரு அடையாளம் மட்டுமே என்பது என் கருத்து. //
அந்த அடையாளம் ஒருவனை, நீ தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என அடையாளப் படுத்துமாயின் அவை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே என் வாதம்.
//ஒருவருக்கு அல்லது ஒரு சிலருக்கு உயரே செல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் அவர்கள் பிற்பாடு அந்த உயரிய நிலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வருவதில்லை.//
நீங்கள் தற்காலிகமாக முன்னேறிய நாடர்கள் போன்ற சாதிகளை குறிப்பிடுகிறீர்கள். பேருந்தை விட்டு தள்ளுங்கள் சமதளத்திலேயே உயர்சாதினர் அமரலாம், தலித்துகள் நிற்கவேண்டும்.
//அப்பா உங்கள் சொத்து முழுவதையும் தம்பிக்கே கொடுங்கள். மேலும் என்னால் முடிந்த உதவிகளையும் செய்கிறேன். அவனும் வாழ்வில் முன்னேறட்டும். இருவரும் சந்தோசமாக இணக்கமாக இருப்போம்"//
முழுமையாக ஒத்து கொள்கிறேன்!
சாதிய முறைகளை ஆதரிப்போர் பெரும்பாலும் கடவுள் நம்பிகையுள்ளவர்கள், அவர்களுடய பாணியில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது, ஆக அனைவருமே சகோதரர்கள் தான், இதை கடவுள் நம்பிக்கையற்ற நான் சொல்கிறேன் அவர்கள் ஒத்து கொள்ளமாட்டார்கள்.
அந்த சகோதர உணர்வை அவர்களுக்கு தராமல் விட்டது எது?
உயர்சாதி என்ற முறை தானே!
அவனுக்கு உயர்சாதி என்னும் பதவியை எடுத்து விட்டால் தானாக தனது சகோதரனை தேடி வருவானில்லையா!
//எனவே சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். அதே சமயத்தில் நலிவுற்ற நிலையில் உள்ளோரை (அவர்களும் நம் சகோதரரே) நாமும் ஒரு கை கொடுத்து தூக்கி விடுவோம். //
இதை தான் நானும் சொல்கிறேன்,
தாழ்த்தபட்ட சாதியாக கருத்தப்படுபவர்களை இன்றளவும் வளரவிடாமல் செய்ததற்கு அரசின் பொறுப்பும் இருக்கிறது, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை தர வேண்டும்.
ஆனால் சாதியினை முதலில் ஒழித்து F.C/B.C/M.B.C./S.C-S.T என்ற நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வரலாம்,
நாளடைவில் அவற்றையும் எடுத்துவிட்டு அனைவரும் இந்தியர்கள் என்னும் ஒரே அடையாளத்துடன் வாழலாம்.
//பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது கூட ஒரு உண்மை. //
எந்த சூழ்நிலையிலும் நான் இஸ்லாம் மதம் ஒரு தீவிரவாதமதம் என்று குறிப்பிட மாட்டேன், அடிப்படையில் நான் அனைத்து மதங்களுமே தனது சீரிய பணியிலிருந்து விலகி விட்டதாக கருதுகிறேன்.
இந்துக்களுக்கு பாவமன்னிப்பு உண்டியல், கிரிஸ்தவர்களுக்கு நேரடியாகவே பாதரியார் பாவமன்னிப்பு வழங்குகிறார்.
மன்னிப்பு இல்லையென தவறு செய்ய அஞ்சுபவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள். அவர்களை இந்த வகையில் நான் பாராட்டிகிறேன்.
பாகிஸ்தானை விட இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் எனினும் அவர்கள் ஒருமுறை கூட காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதராவாக குரல் கொடுத்ததில்லை.
இந்த சாகொதரர்களை நான் எப்படி குறை சொல்லமுடியும்.
டோண்டு சார்,
//
நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?
//
மிக நல்ல வாதம்....ஆனால்....
எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கிறது என்பதற்காக கலவரங்கள் வந்ததில்லை...க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை...அப்படி செய்தால் அந்த விளையாட்டை நிறுத்தி வைக்கும்படி கோர வேண்டியது தான்...இதே போல் தான் பெப்சியும் கோக்கும்....பெப்சி குடிப்பவர்கள் கோக் குடிப்பவர்களை தொட மறுப்பதில்லை...அவர்களை குத்தியும் கொல்வதில்லை...நீங்கள் சொல்வது, ஜாதிக் கலவரங்களும், இந்த சண்டைகளும் ஒன்று தான் என்று சொல்வது போல் இருக்கிறது (இல்லை எனக்கு அப்படி புரிகிறது).
//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?
//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன்...உண்மையே...சமூகம் என்ற கட்டமைப்பே இந்த குழு மனப்பான்மையால் உருவான ஒன்றே...
ஆனால் சில குழு மனப்பான்மைகளால் பெரிய ஆபத்து இல்லை..உதாரணம் மதுரைக்காரன், திருச்சிக்காரன், சென்னைவாசி போன்ற குழு மனப்பான்மைகள்...மதுரைக்காரன் சென்னையில் வாழ்ந்தால் அவன் சென்னைவாசி ஆகிவிடுவான்...திருச்சிக்காரன் அமெரிக்கா போனால் அடுத்து வரும் அவன் பிள்ளைகள் அமெரிக்காகாரனே தவிர, திருச்சிக்காரன் அல்ல... ஏழை என்ற குழுவில் இருப்பவன் உழைப்பின் பேரில் பணக்கார குழுவில் இடம் பிடிக்கலாம்...இப்படி ஒரே தலைமுறையில் சில குழு மனப்பான்மைகளை ஒழித்து விடலாம்....ஆனால் ஜாதி அப்படியா?? எத்தனை தலைமுறை ஆனாலும் மாற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது???
உங்கள் பதிவின் நோக்கம் பற்றி எனக்கு சந்தேகமில்லை...நீங்கள் மிகுந்த கஷ்டமான நிலையில் இருந்த நாடார் சமூகம் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை காட்டும் நல்ல எண்ணத்துடன் தான் பதிவிட்டிருக்கிறீர்கள்...ஆனால் அந்த சமூகம், இன்னும் பல சமூகங்கள் கொடுமைப்படுத்தப்பட அடிப்படையான காரணம் ஜாதி அமைப்பல்லவா??
//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?
//
அரசு என்பது கலவரத்தை தூண்டும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை தீண்டத்தகாதவர்களாக, அடிமைகளாக ஆக்கும் அமைப்பு என்றால் அந்த அரசு ஒழிக்கப்பட வேண்டும்...இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை..
சாதி ஒழிப்பு என்பது இயற்கைக்கு புறம்பான விஷயம் அல்ல..உலகில் எத்தனை நாடுகளில் சாதி அமைப்பு இருக்கிறது??
எந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் மதம், ஜாதி, இனம் என்று பிரிந்து கிடக்கிறார்களோ அந்த நாடு நாசமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது...ஆனால் முடிந்த அளவு எல்லாரையும் சமமாக நடத்த முயற்சிக்கும் நாடு மற்ற நாடுகளை விட முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது...
//
dondu(#11168674346665545885) said...
//100 ல் 99 பார்ப்பணர்கள் தன் வீட்டுக்கு வரும் பிறசாதியினருக்கு இன்னும் தனி தட்டு தான் வைக்கிறார்கள், தனி டம்ளரில் தான் காபி தருகிறார்கள்...அது ஏன் ?//
100-ல் 99 அபார்ப்பனர்கள் நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் (அவற்றில் பல அவரவர் சாதியினராலேயே நடத்தப்படுவை) பார்ப்பனரே பொறுப்பு என் நீட்டி முழக்குகின்றனரே ஏன்? யார் தவறை மறைக்க இந்த நாடகங்கள்? உயர்சாதீயம் என ஒரு வார்த்தை இருக்கும்போதே வேண்டுமென்றே பார்ப்பனீயம் என எழுதுகின்றனரே அது ஏன்? தமது சாதியினர் செய்யும் சாதிக் கொடுமைக்கும் அதே பெயர் என்னும் போங்கு ஏன்?
//
தனித்தட்டு வைப்பதை பார்ப்பணர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது...எல்லா ஜாதியினரும் தங்களை விட தாழ்த்தப்பட்ட ஜாதி என்று நினைப்பவர்களுக்கு தனித்தட்டு, தனி டம்ளர் வைப்பது உண்டு.. எல்லா ஜாதிக் கொடுமைக்கும் பார்ப்பனீயம் என்று பெயர் சூட்டுவது மோசடியே..
//
இந்துவில் சாதி ரீதியாக,
இஸ்லாத்தில் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, ஷியா, சன்னி அதுவல்லாது, தமிழகத்தில் உருது பேசுபவர் பட்டானி, பேசாதவர் ராவுத்தர்,
கிரிஸ்துவத்திலும் நாங்கள் தான் உண்மையான கிரிஸ்துவர்கள் என்று சொல்லி கொண்டு ஒவ்வோரு கூட்டமும்.
அதை எப்படி அனுமதிக்கிறது மார்க்கம்,
கடவுள் என்றொருவர் இருந்தால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை தான், ஏனென்றால் இங்கே வன்முறைகளோ, கடவுள் பெயரால் ஏமாற்றுவதோ நடக்காது, இல்லையென்பதால் எல்லாம் நடக்கிறது, ரத்தம் சிந்தாத பூமியாக மாறட்டும் நானும் ஆத்திகனாக மாறுகிறேன்.
January 13, 2009 10:24 PM
//
சூப்பர்!
நாத்திகர்களால் ஏற்பட்ட கலவரங்களை விட கடவுள் இருக்கிறார் என்று சொல்லும் ஆத்திகர்களால் நடந்த கலவரங்களும், உயிர் இழப்பும் அதிகம்...
கடவுளால் உலகிற்கு ஒட்டு மொத்த நஷ்டமே தவிர எந்த லாபமும் கிடையாது...கடவுள் என்பதே சிலர் வயிறு வளர்க்க செய்யும் மோசடி என்பது என் கருத்து....எந்த குறிப்பிட்ட மதத்தையும் சொல்லவில்லை...ஆனால் இது வரை எந்த மதத்து கடவுளும் சுனாமியை நிறுத்தியதாக தெரியவில்லை....கடவுள் அன்னிக்கி லீவுல போயிட்டாரா??
சாத்தான் எனும் தீமைகளின் கடவுள் மனித குலம் நிம்மதியாய் வாழ்ந்து விட்டால் எங்கே நிம்மதி என்ற சுவர்க்க நிலயை அடந்து விடுவார்களோ என்ற தீய எண்ணத்தில் மனித குலத்திற்கு கொடுத்த நன்கொடைகள் தீய பழக்கங்களான மது,மாது மற்றும் சூதாட்டம்.மனிதனை இந்த ஆபத்திலிருந்து தடுத்தாண்டு ,காப்பாற்றி கரை சேர்த்து நல் வழி படுத்த பெரியவர்களால் ஏற்படுத்தப் பட்ட குழுக்கள் அமைப்பு பின்னாளில் கொஞ்சம் காசு வசதி வந்ததும் ,பிற குழுக்களை அடிமைப் படுத்தி ,சிறுமைகள் செய்து கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் திளைத்திட உருவாக்கப் பட்டதே இந்த சாதி எனும் கொடும் அரக்கன்.செய்யும் தொழிலால் அழைக்கப் பட்ட குழுக்கள் பின்னாளில் தனித்தனியாக பெயர் தாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பிற் சாதியினரை அடிமைப் படுத்துவது, மீறினால் மிகக் கடுமையாய் தண்டிப்பது.அரசர்களும் ஆட்சி செய்பவர்களும் இந்த ஜாதிப் பிரிவுகளில் சிறுபான்மையுள்ள குழுக்களை சேர்ந்தவர்கள்,ஆனால் நிலபுலன்களும்,பிற சொத்துக்களும் அவர்கள் கைவசம் இருந்த்தது என்பதாலயே,வாழவேண்டும்,வயிற்றை கழுவ வேண்டும் எனும் இயற்கை நிலையால் இருந்த பெரும் பான்மையுள்ள பிற ஜாதிக் குழுக்கள் , அந்த ஆளும் சிறு குழுக்காலால் நடத்தப் பட்ட கொடுமைகளை தாங்கி வறிதே வாழந்தனர்.இந்த சிறு கூட்டம் ஆண்டே எனவே வணங்கப் பட்டது.
ஆதிக்க மன்ப்பான்மை சமுகத்தில் பிறந்திருந்தாலும் ஞானம் பெற்ற ஒரு சில தலைவர்கள் அவர்கள் சமுகத்தில் எழுந்த எதிர்ப்பை எல்லாம் மீறி ,துன்பத்திலும் அறியாமையாலும் அடிமை பட்டுக் கிடந்த மக்களை தங்களின் பேச்சாலும்,பாட்டாலும்,எழுத்தாலும் ,துணிச்சால செய்கை யாலும் இன்று அவ்ர்கள் உள்ள ஒரளவு தெளிந்த நிலைக்கு உயர்த்தி உள்ளனர்.அவர்களி வணங்கி போற்றி மகிழுவோம்.
அவர்களில் சிலர்.
(ஜாதிப் பிரிவை சொல்வது கருத்துக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்கு மட்டும் எடுத்துக் கொள்ளவும்)
1.அய்யங்கார் வகுப்பை சேர்ந்த ராமனுஜர்
2.ஐயர் வகுப்பை சேர்ந்த பாரதியார்
3.உயர் பிராமண வகுப்பை சேர்ந்த காந்திஜி,நேருஜீ
4.முதலியார் வகுப்பை சேர்ந்த அண்ணா
5.பிள்ளைமார் வகுப்பை சேர்ந்த .வ.உ.சி
6.நாயக்கர் வகுப்பை சேர்ந்த தந்தை பெரியார்.
அரசியல் கட்சிகளால் உருவாக்கப் பட்ட இலவசக் கல்வி,இலவச மதிய உணவு,இட ஒதுக்கீடுக் கொள்கை ஆகியவற்றால் ஒடுக்கப் பட்ட ஜாதிகளிடையே ஒரு முன்னேற்றம் ஏற்படுள்ளது.
இனி அடுத்து என்ன செய்யவேண்டும் வால் பையன் சொல்லும் சாதிகளற்ற சமுதாயம் மாற நாம் என்ன செய்ய வேண்டும் ?
பிற்படுத்த பட்ட ஜாதிகள் பல இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்கள் அரசின் அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்து வருவது இன்றும் வாடிக்கையாய் உள்ளது.
( இதனால் பாதிக்கப் பட்ட அருந்ததியர் சமூகம்( சாத்தூர் காமராஜ்,தனது பின்னூட்டத்தில் சொல்லும் அவலங்களை இன்றும் அனுபவித்து வரும் சமூகம் ) தாழத்தப் பட்ட இட ஒதுக்கீட்டில் 6 % உள் ஒதுக்கீடு கேட்டு போராடி வருவது இதற்கு சான்று)
அரசும் வரும் தேர்தலில் விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இதைக் கண்டு கொள்வது கிடையாது.தேர்தலுக்கு நிறுத்தப் படும் வேட்பாளர்கள் அந்தத் தொகுதியின் சாதி எண்ணிக்கை பர்த்துத்தான் நிறுத்தப் படுகிறனர்.நடந்து முடிந்த திருமங்கல இடைதேர்தலே சாட்சி.ஆட்சி அமைத்ததும் அமைச்சக பொறுப்புகளும் இந்த ஜாதி விகிதாச் சாரத்திலே
கொடுக்கப் படுகிறது.அதன் பிறகு நீதிபதிகள், அரசு வக்கீல்கள்,பல்கலை துணை வேந்தர்கள், அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள்,அரசு உயர் பதவிகள்,அரசு மருத்துவர்களில் உயர் பதவிகள்,அரசு காண்டிராக்டுகள்,ஏலங்கள்,டெண்டர்கள் இவை எல்லாவாறிற்கும் தன்னை,தன் ஜாதியை சார்ந்தவற்கே சலுகை கொடுக்க ஜாதி எனும் பூதக் கண்ணாடிவழியாய் பார்க்கும் போக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறதே?
அரசின் இட ஒதுக்கீட்டுச் சலுகையால் இன்று பயனடந்தவர்களில் ஒரு குறிபிட்ட சமுகத்தினர் போன தலைமுறையில் ஒரளவுக்கு வசதி படைத்தோர். தற்சமயம் அவர்களில் சிலரின் பொருளாதார நிலை முன்னேறிய சமுகத்தை விட அதிகமாய் இருந்தாலும் இட ஒதுக்கீடுச் சலுகையை தன் ஜாதியை சேர்ந்த ஏழைகளுக்கும்,பிற பிற்பட்ட ஜாதி சகோதரர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை இல்லாதது கொடுமையிலும் கொடுமை.மேலும் தான் முன்னேறியதும் தன் இன சகோதர்களை இரண்டாம் குடிமக்களாய் கருதும் பார்ப்பணீயம் அல்லது உயர் சாதீயம் தலைவிரித்து ஆடுவதை சொல்லித் திருத்த எந்த மகான் வருவரோ தெரியவில்லை.
முற்பட்ட ஜாதிகாளாய் கருதப் படும் பிள்ளைமார்,முதலியார்,செட்டியார் எல்லோரும் எங்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசிடம் தூது போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பிற்படுத்தப் பட்ட ஜாதிகள் என்று சொல்லப் படும் நாடார் சமூதாயம் போன்றோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் ,அரசிடம் இடம் கேட்கின்றனர்.
நல்ல வேளை யாரும் தாழ்த்தப் பட்டோர் பட்டியல் பக்கம் பார்வையை செலுத்தவில்லை.
கதை இப்படியே போனால்
சாதி ஒழியனும்
ஆனால் ஒழியுமா?
இந்த சுயநல மக்களும்,
ஆதிக்க மனப் பான்மைகளும்
அரசியல் சக்திகளும்
அதை ஒழிய விடுவார்களா?
இருந்த போதிலும்
தொடர்ந்து வலிமையாய் ஒற்றுமையாய் போராடுவோம்
அடுத்த தலைமுறையாவது
ஒரே பூமி
ஒரே காற்று
ஒரே தண்ணிர்
ஒரே ஆகாயம்
ஒரே உணர்வு
இயற்கை அன்னையாம் பூமித் தாயின் ஒரு வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்வாங்கு வாழட்டும்.
அண்ணே.. பின்னூட்டம் போட்டு கட்டுபடியாகாதுன்னு பதிவு போட்டுட்டேன்.
http://thuklak.blogspot.com/2009/01/blog-post_1876.html
தற்போதய தகவல்!
பாகிஸ்தானில் ஷீயா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் நடந்த சண்டையில் 47 பேர் பலி
என்ன கொடும சார் இது?
வால்பையனுக்கு ஒரு நல்ல தகவல்
என்ன அருமை சார்!
http://sowmyatheatres.blogspot.com/2009/01/blog-post.html
pl.visit
http://tvrk.blogspot.com/2008/11/blog-post_24.html
http://idhueppadiirukku.blogspot.com/2008/10/blog-post_21.html
///"சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!"///
உங்களுக்கு ஆபீஸ்ல வேலைனு நினைக்கிறேன். ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க...
உங்கள் பதிவுக்கு ஒரு அவாட்டே தரலம்.சிறந்த பதிவு
நண்பா நீ சாதிய ஒழிக்கணும்னு பேசற, ஆனா இங்க எல்லாரும் அவங்களோட சாதி தப்பு செய்யல, எங்க சாதி காரங்க எல்லாரும் நல்லவாங்கனு தன் பேசறாங்க. நீ விடு தலைவா அவங்கல, நாம சாதி அற்ற சமுதாயம் படைப்போம்.
எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகிரன் - "மனிதனை மனிதனாக மட்டும் பாருங்கள்"
நம்ம தாத்தா பாட்டி காலத்துல வேணும்னா இந்த சாதி வேறுபாடு முழுமையாக இருந்துச்சு, ஆனா இப்போ அவ்வளவா இல்லன்னு நான் பீல் பண்றேன். எங்க ஆபீஸ்ல யாரும் என்ன சாதி என்னக்கு தெரியாது, அத தெரிஞ்சுக்கவும் நாங்க விரும்பல, தயவு செய்து இந்த நாடர், தலித், பாப்பான், கிருத்துவன், இஸ்லாமியன் என்ற வார்த்தைகளை மறந்துவிடுங்கள்.
வால் பையா, இந்த ரவி பேசலாம் மதிக்காத ... இவரை போன்ற மனிதர்கள் தான் இந்த வேற்றுமைய உருவாக்கறாங்க ... ரவி இத மாதிரி இனி எழுதாதிங்க ....
நன்றி சுந்தர்!
ரவி சொல்வதில் அவரது சில அனுபவங்கள் நிறைந்திருக்கலாம்,
ஆனால் அதை அவரால் விளக்கமுடியவில்லை.
என்னை பொறுத்தவரை எதுவும் மாற்றக்கூடியதே!
சமதர்ம சமுதாயம் கண்டிப்பாக உருவாகும்!
Post a Comment