சென்ற வாரத்தில் ஆனந்தவிகடனுக்கு நான் பகிரங்க கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே!
அதற்கு மின்னல் வேகத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இந்த வாரம் விகடன் வாங்க காசு கொடுத்தவுடன் அவர்கள் புத்தகதிற்கு முன் 14 ருபாய் மதிப்புள்ள 150 கிராம் எடையுள்ள விவெல் ஆயுர்வேதிக் சோப்பு ஒன்றை கொடுத்தார்கள்,
அப்போதே தெரிந்துவிட்டது, நமது குரல் விகடன் வரை ஒலித்துவிட்டது என்று, அந்த அதிர்ச்சியிலிருந்தே வெளி வராத எனக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி.
சனிக்கிழமை காலை, தெரியாத ஒரு புதிய எண்ணிலிருந்து போன்,
யாரென்று கேட்டால் விகடன் குழுமம் என்றார்கள், முதலில் நம் வலையுலகில் யாரோ செய்யும் குறும்பு என சிறிது நேரம் குழம்பி விட்டேன். ஆனாலும் அவர் சீரியசாக பேசிய விதம் இது கண்டிப்பாக விகடனிலிருந்து தான் என ஊர்ஜிதம் செய்தது.
ஈரோடு மாவட்ட நிருபர் தான் என்னிடம் பேசினார். நேரில் வந்திக்க வருவதாகவும் கூறினார்.
நானும் அந்த நேரத்தில் வெளியே செல்ல இருந்ததால் ஒரு பொது இடத்தில் சந்திப்பதாக கூறினேன். அவரும் ஒரு இடத்தை சொல்லி வர சொல்லிவிட்டார்.
மிக அன்பாக உபசரித்தார்.
நான் எழுதிய கடிதம் அவருக்கு அப்படியே மின்அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் போல,
நான் எழுதியிருந்ததில் சில நியாயமான கருத்துகள் இருந்ததாக கூறினார்.
சென்ற முறை சோப்பு இலவசமாக தரும் பொழுது சோப்பு கம்பெனியை சேர்ந்தவர்கள் செய்த குளறுபடியே யாருக்கும் சோப்பு சென்றடையாத காரணம் என விளக்கினார்.
விகடன் குழுமம், வாசகர்களுக்கு முதல் மரியாதை தருவதாகவும், நடந்த தவறுக்கு மேல் தலைமை முதல் அனைவரும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். எனக்காக அங்கிருந்து கொரியர் மூலம் வரவழைத்த ஆனந்தவிகடனை என்னிடம் கொடுத்தார். நான் காசு கொடுக்க பர்ஸை எடுக்கும் போது, இது உங்களுக்காக இலவசமாக அனுப்பப்பட்டது என்று காசு வாங்க மறுத்து விட்டார்.
இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்த விகடன் குழுமதிற்கு நன்றி,
ப்ளாக் என்னும் ஊடகம் இந்த அளவுக்கு பயன் தரும் வகையில் அமைந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது, நண்பர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், பெரு ஊடகங்கள் நம்மை கவனித்து கொண்டே தான் இருக்கிறது, கவரும் எழுத்துகள் அச்சில் ஏற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது, சிறிதும் களைப்படையாமல் நண்பர்கள் உங்கள் படைப்புகளை எழுதி கொண்டே இருங்கள்.
65 வாங்கிகட்டி கொண்டது:
Awesome!!!
அருமை நண்பரே ...
பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் எடுத்த நடவடிக்கை பலன் அளித்தது குறித்து மெத்த மகிழ்ச்சி.
நாம் எடுக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு நீங்கள்
வாழ்த்துக்கள்
கலக்கிட்டீங்க அருண்! பாராட்டுக்கள்!
\\ப்ளாக் என்னும் ஊடகம் இந்த அளவுக்கு பயன் தரும் வகையில் அமைந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது, நண்பர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், பெரு ஊடகங்கள் நம்மை கவனித்து கொண்டே தான் இருக்கிறது, கவரும் எழுத்துகள் அச்சில் ஏற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது, சிறிதும் களைப்படையாமல் நண்பர்கள் உங்கள் படைப்புகளை எழுதி கொண்டே இருங்கள்.\\
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே ...
ஜீவன் அண்ணா வந்தாட்ச்சா
கலக்குங்க தல....
அடுத்த குறி குமுதமா?
வலைப்பூக்களை வலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பததே இதற்க்கு காரணம்.
:))))
நீங்க தில்லான ஆளுங்கோ !! அப்படியே Maintain பண்ணுங்கோ...
உடனடியாக நடவடிக்கை எடுத்த விகடன் குழுமத்திற்கு.... பலமா ஒரு ஓ!!
ஹையா! சோப்பு கிடைச்சிருச்சா? நல்லவேளை.
\\ப்ளாக் என்னும் ஊடகம் இந்த அளவுக்கு பயன் தரும் வகையில் அமைந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது, நண்பர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், பெரு ஊடகங்கள் நம்மை கவனித்து கொண்டே தான் இருக்கிறது, கவரும் எழுத்துகள் அச்சில் ஏற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது, சிறிதும் களைப்படையாமல் நண்பர்கள் உங்கள் படைப்புகளை எழுதி கொண்டே இருங்கள்.\\
கலக்கல் செய்தி.
வாவ்! நான்கூட ஏதோ மொக்கை போடறீங்களோன்னு பயந்துட்டேன்.
விகடன் இணைய எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குமுதத்தில் ஒரு ஆசாமி ப்ளாக்கிலிருந்து காபி அடித்து எழுதுவதையே முழுநேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார். கேட்கத்தான் ஆளில்லை!
அப்பாடா!
சோப்பு கிடைச்சிடுச்சு!
இனி பயமில்லாம சந்திப்புக்கு வரலாம்!
நாளைய சிறப்பு பதிவு..(என் பதிவுங்க)
ஹிந்து நாளிதழ்க்கு பகிரங்க கடிதம்
//Blogger கார்க்கி said...
நாளைய சிறப்பு பதிவு..(என் பதிவுங்க)
ஹிந்து நாளிதழ்க்கு பகிரங்க கடிதம்//
நான் New york times க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதலாம்ன்னு இருக்கேன்
அட.. சூப்பர் மேட்டர்மா... :)
அந்த பதிவில் சுந்தர் கேட்டார் என நினைக்கிறேன்.. இங்க எழுதினா மட்டும் விகடன் தலைமைக்கு போகுமா என்று? போய்டிச்சே.. :)
எது எபப்டியோ.. சோப்பு கொடுத்து வால்பையனை குளிக்க செய்து ( தல, குளிச்சிங்க தானே ) ஈரோட்டை காத்த விகனுக்கு ரொம்ப நன்றி.. :))
வாழ்த்துக்கள் அருண்.
இதத்தான் நான் ஆரம்பத்துல இதத்தான் நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். பரவலா எல்லாத்தரப்பும் படிக்கிறதால வார்த்தைகளைல் கவனமும், வாகியங்களில் நாகரீகமும் இருக்க வேண்டும் என்று.
//
விகடன் இணைய எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறது. குமுதத்தில் ஒரு ஆசாமி ப்ளாக்கிலிருந்து காபி அடித்து எழுதுவதையே முழுநேரத் தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறார். கேட்கத்தான் ஆளில்லை!//
பரிசல் இந்த வாரக் குமுதத்திலும் உருவியிருகிறார்கள். எத்தனை முறை “மணி” அடிச்சும் யாரும் கேட்பார் இல்லை.
ஐய், புது வருஷத்துல எங்க வால்பையன் குளிக்க போறாரு ...
எல்லாத்துக்குமா சேர்த்து வாழ்த்துக்கள் :)
தொடர்ந்து கலக்குங்க.
சஞ்சய் :எது எபப்டியோ.. சோப்பு கொடுத்து வால்பையனை குளிக்க செய்து ( தல, குளிச்சிங்க தானே ) ஈரோட்டை காத்த விகனுக்கு ரொம்ப நன்றி.. /// ரிப்பீட்டேய்..
ஆயிரம் குறைகள் இருந்தாலும் விகடனின் ரெஸ்பான்ஸைப்பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். ஒரு முறை மதன் இருக்கும்போது சுதந்திரதின வாழ்த்துகள் அனுப்பியதற்கு பதில் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
முயற்சி திருவினையாக்கியுள்ளது. பாராட்டுக்கள் வால்
கடைசி வரைக்கும் குளிச்சீங்களா இல்லையான்னே சொல்லலியே!!!!!
ஆனாலும், எல்லா பத்திரிக்கைகளாலும் கூர்ந்து கவனிக்கப்படற ஆளாயிட்டீங்க!!!
விகடனிடம் ஓரளவிற்க்கு எதிர்பார்க்கலாம்...ரெஸ்பான்ஸை.
(அமாரா தோஸ்த் மே டேக் ஆக்ஸன்..?)
That was excellent!!
Well done vaal.
anbudan aruna
வாழ்த்துக்கள் வால் பையன் அவர்களே..
விகடன் நிச்சயமாக கவனித்திருப்பார்கள். இல்லை யென்றாலும், அவர்கள் வாசகர்கள் அதை தெரிவித்து இருப்பார்கள். அதனால் தான் உடனிடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
எனக்கும் விகடனாருக்கும் நடந்த ஒரு விஷயத்தை விரைவில் என் பதிவில் போடுகின்றேன்
அருண் கில்லாடியா இருக்கீங்க..வாழ்த்துக்கள்
உங்கள் எழுத்தின் வீச்சு மிகச் சரியாக இருந்தது. அதன் நோக்கத்தை நிறைவேற்றியது உங்கள் எழுத்தின் வெற்றியே.
நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்.
உங்களை பதிவுலகம் பாராட்டுகிறது.
ஆ.வி.க்கு இதை எழுதி இருந்தால் இவ்வளவு விரைவான முயற்சி நிகழ்ந்திருக்காது.
வாழ்த்துக்கள்.
Vikatan and Kumudham Reporters are always friendly with Tamil Bloggers! Many reads them and a few are writing too! But they dont disclose openly due to some constraints!
இந்த வெற்றியில் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்.
அருமை அண்ணன் அருண் அவர்களே !!!!
( வருங்கால ஜனாதிபதி அண்ணன் அருண் !!! வாழ்க !!!! )
சூப்பரு...
கலக்கிட்டிங்க தலை
பார்த்தது உண்மையிலேயே விகடன் நிருபரா இல்லை எதாவது சோப்பு கம்பெனி அதிபரா ?
உண்மையை உள்ளபடி உரைக்கவும்
இந்த வாரம் விகடன் வாங்க காசு கொடுத்தவுடன் அவர்கள் புத்தகதிற்கு முன் 14 ருபாய் மதிப்புள்ள 150 கிராம் எடையுள்ள விவெல் ஆயுர்வேதிக் சோப்பு ஒன்றை கொடுத்தார்கள், //
உடனடியாக உபயோகப்படுத்துங்கள்
என்னத்தை சொல்றது போங்க !
நல்ல தகவல்...நல்ல பதிவு...
Test..Test
வாழ்த்துக்கள்!
நச்
check your G mail Valu @ arun
வேலன் சொல்வதுபோல் நாம் நினைப்பதைவிட நிறைய பேர் பதிவுலகைப் பார்க்கிறார்கள் போலும். அதே சமயம் பதிவுலகம் இன்னும் நாகரீகமாக கருத்துப் பரிமாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள் வால்.
அனுஜன்யா
ஏம்பா... வாலு... ஏதாவது ... போடறீங்களா... உமக்கு மட்டும் ஓசையார்... செந்தழலார் எல்லாம் வந்து பின்னூட்டம் எழுதறாங்க...
அருண்,
உங்க வால் விகடன் வரை போயிருச்சா? அருமை. அருமை.
/// Beemboy-Erode said...
Test..Test///
வால்பையனுக்குத்தான் இந்த மாதிரியான பின்னூட்டமெல்லாம் வரும்.
தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது.
//விகடன் குழுமம், வாசகர்களுக்கு முதல் மரியாதை தருவதாகவும், நடந்த தவறுக்கு மேல் தலைமை முதல் அனைவரும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். எனக்காக அங்கிருந்து கொரியர் மூலம் வரவழைத்த ஆனந்தவிகடனை என்னிடம் கொடுத்தார். நான் காசு கொடுக்க பர்ஸை எடுக்கும் போது, இது உங்களுக்காக இலவசமாக அனுப்பப்பட்டது என்று காசு வாங்க மறுத்து விட்டார்.//
என்ன தல இப்படி ஆயிடுச்சு.
பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.
விகடன் அதுக்கு உதவிருக்கு.
பதிலுக்கு நீங்களும் குளிச்சுடுங்க.
பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.
விகடன் அதுக்கு உதவிருக்கு.
பதிலுக்கு நீங்களும் குளிச்சுடுங்க.
கலக்குங்க தல....
அடுத்த குறி குமுதமா?
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி நண்பரே!
http://kavidhai-puyal.blogspot.com/
ரொம்ப நல்ல விஷயம்.
:)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வால்பையன் !!!
நாம் எடுத்துரைக்கும் ஒவ்வொன்றும்
அருமையான அரங்கேற்றத்திற்கு
வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி
நமக்கும் பொறுப்பும், கவனுமும்
கூடுகிறது அல்லவா?
வாழ்த்துக்கள் நண்பா!!!!
நானும் இந்த வார விகடன் வாங்கியிருந்தேன்.
ஆனால் அதில் இணைப்பாக வந்த சோப்பு பற்றி உங்கள் பதிவைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
இப்ப புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்
அட உண்மையிலேயே சோப்பு கேட்டு வாங்கவும் என உள்ளது.
55 பின்னூட்டங்கள் வந்த பிறகு நான் என்ட்ரி ஆகியிருக்கிறேன். இதற்கு ஒரு வகையில் காரணமானவன் என்பதால். வால் பையன் உங்களுக்கு சிம் கார்டு கிடைக்க ஒரு வகையில் காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். அதில் ஒருவர் ரமேஷ் வைத்த்யா அண்ணன்.இன்னொருவர் நாந்தானுங்கோ.தமிழ்மணத்துல உங்க பதிவை படிச்சதுமே விஷயத்தை ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு போனோம். அவர்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொன்னார். ரமேஷ் வைத்யா அண்ணணிடம்தான் உங்கள் போன் நம்பரை வாங்கி எங்கள் ஈரோடு மாவட்ட நிருபர் முகம்மது ரஃபியிடம் கொடுத்தேன்.அதன்பிறகு நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும்தானே...
இதுதான் வலை பவரோ..??
வாழ்த்துக்கள்..
மாங்கு மாங்கென்று இடுகையிட்டு சோப்பை வென்ற 'சோப்பு சிங்கம்' வால்பையனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ராம் சுரேஷ்
நன்றி அதிரை ஜமால்
நன்றி டோண்டு சார்
நன்றி ஜீவன்
நன்றி கூடுதுறை
அடுத்த குறி ப்ளேபாய்
நன்றி கணீணி தேசம்
நன்றி ஆ!இதழ்கள்
ஆமாம் சோப்பும் கிடைச்சிருச்சு!
நன்றி பரிசல்
குமுதம் அவரை வேலையை விட்டு தூக்கி விட்டதாம்
நன்றி சிபி
சந்திப்புக்கு வரும்போது மட்டும் நான் குளிப்பதில்லையே!
நன்றி கார்க்கி
உங்க ரேஞ்சுக்கு ப்ளேபாய்க்கு தான் எழுதனும்
நன்றி நான் ஆதவன்
எழுதுங்க! அவுங்களும் எதாவது தருவாங்க!
நன்றி சஞ்சய்
அந்த சோப்பு போட்டு குளித்தால் கரைந்து விடுமே என பயத்தில் இன்னும் குளிக்கவில்லை
நன்றி வடகரை வேலன்
உண்மை தான், நாம் கவனிக்க படுகிறோம், பொறுப்புணர்சியுடன் எழுதவேண்டும்
நன்றி ரவீ!
தப்பு கணக்கு போட்டுடிங்களே!
நாம எப்போவுமே தமிழ் வருச பிறப்புக்கு தான் குளிக்கிறது!
நன்றி தாமிரா!
நீங்க பெரிய ஆளுதான் போங்க!
(அது மதன் கையெழுத்து தானே)
நன்றி கோவிஜி
நன்றி ச்சின்னபையன்
நீங்க தான் சரியா கண்டுபுடிச்சிங்க
நன்றி கும்க்கி
துமாரா தோஸ்த்?
நன்றி அன்புடன் அருணா!
நன்றி ராகவன்
உங்கள் பதிவையும் பார்த்தேன்
நன்றி கிரி
நன்றி தமிழ் நெஞ்சம்
எல்லா பாராட்டும் உங்களை தான் சேரும், உங்கள் ஊக்கமே எனது பலம்
நன்றி ஓசை செல்லா
நல்லாயிருக்கிங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு
நன்றி செய்யது
//வருங்கால ஜனாதிபதி அண்ணன் அருண் !!! வாழ்க !!!!//
என்ன வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே
அவ்வ்வ்வ்வ்வ்
நன்றி சரவணகுமரன்
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி செந்தழல் ரவி
விகடன் நிருபர் ஒரு புது ஆனந்தவிகடனும் ஒரு ஏர்செல் சிம்மும் கொடுத்தார்
நன்றி குடுகுடுப்பை
உபயோகப்படுத்தலாம், ஆனால் கரைந்து விடுமே!
நன்றி சைடு ஹீரோ
எப்படியெல்லாம் பேரு வைக்கிறாங்க பாருங்க
நன்றி புதியவன்
நன்றி பீம்பாய்
எதுக்கு டெஸ்ட்
நன்றி மு.வேலன்
நன்றி அனுஜன்யா
உண்மை தான்
நன்றி ஜிம்ஷா
அவுங்களுக்கு நாம மரியாதை செலுத்தினால் அவர்கள் நமக்கு மரியாதை செலுத்துவார்கள்!
நன்றி வெயிலான்
ஆமா! அடுத்த குறி ப்ளேபாய்
நன்றி செல்வி
ஹா ஹா
நன்றி தமிழ் ப்ளாக்கர்ஸ் யூனிட்
இணைந்து விட்டேன்
நன்றி மதுரை நண்பன்
நல்லது தானே!
நன்றி கார்த்திக் த பாஸ்
நீங்களே சொன்ன பிறகு குளிக்கலைன்னா எப்படி!
நன்றி ஷாஜி
இல்லை ப்ளேபாய்
கலக்குங்க கூட்ஸ் வண்டி
நன்றி கார்த்திக்
நன்றி மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ரம்யா
புகழன் உங்களுக்கு சோப்பு கிடைக்கலையா! உடனே ஒரு பகிரங்க கடிதம் எழுதிருங்க!
நன்றி பரகத் அலி
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!
ஆமாம் வண்ணத்து பூச்சியார் நன்றி
நன்றி ஊர்சுற்றி
சோப்பு சிங்கமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
விகட தாத்தாவுக்கு MONEY வெறி வந்து ரொம்ப நாளாச்சி
Post a Comment