சினிமாவும், நானும் கூடவே வாலும்

என்னை இந்த பதிவிற்கு அழைத்த லேகாவுக்கும் கார்க்கிக்கும் நன்றி!
இதில் என்ன காமெடிஎன்றால் எந்த தொடருக்கு நம்மை அலைபார்களா என்று ஏங்கி கொண்டிருக்கிறோமோ அதில் கழட்டி விட்டு விடுவார்கள். நமக்கு தெரியாத விசயத்தில் மாட்டி விடுவது நண்பர்களுக்கு பிடித்த விஷயம். சரி சினிமா கூட தெரியாதா என்று கேட்கிறீர்களா. கடந்த மூன்று வருடத்தில் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் ஒன்றே ஒன்று.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
ஆனாலும் திருப்பரங்குன்றம் ராஜா தியேட்டரில் விக்ரம் பார்த்ததாக ஞாபகம்.
அப்போது எதுவும் உணரவில்லை.

ஆனாலும் இன்னொரு சுவாரிசயமான சம்பவம் ஞாபகம் வருகிறது.
விடுமுறைக்கு சென்னையில் உள்ள மாமா வீட்டுக்கு போயிருந்தேன்.
சினிமாவுக்கு போகலாம் என்று மாமா பையனையும் அழைத்து கொண்டு சென்றேன். செங்குன்றம் லட்சுமி தியேட்டரில் "தென்றல் சுடும்" என்ற படம். ராதிகா நடித்தது.
படம் போடும் வரை அமைதியாக இருந்த மாமா பையன் திடீரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான். அப்போது சிறுவர்கள் என்பதால் திரைக்கு முன்வரிசையில் மிக அருகில் அமர்ந்திருந்தோம். எனக்கோ காரணம் ஒன்றும் புரியவில்லை. அவனோ வீட்டுக்கு போகலாம் என்று அழுதுகொண்டிருக்கிறான். வெளியே அழைத்து வந்து என்னவென்று கேட்டால், அப்போது தான் முதன் முதலில் தியேட்டருக்கு வருகிறானாம். திரையில் அவ்வளவு பெரிய மனிதர்களை அதற்கு முன் பார்த்ததில்லையாம். இப்போது அதை சொன்னால் அவன் பொண்டாட்டி(என் தங்கை) அடிக்கவருகிறாள்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடந்த மூன்று வருடத்தில் திரையரங்கில் நான் பார்த்த சினிமா "தசாவாதாரம்"
ஏற்கனவே இதை பற்றி பலரும் எழுதி விட்டதால் நான் விமர்சனம் எழுதவில்லை.
தற்போது வந்த தகவல்படி பில்லாவுடன் சேர்த்து மூன்று வருடத்தில் இரண்டு படம் பார்த்திரிக்கிறேன்.(தெளிவா போனா தானே ஞாபம் இருக்குறதுக்கு)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

தினமும் தொலைகாட்சியில் பிட்டு பிட்டாக பார்க்கும் வழக்கமுண்டு. நகைச்சுவை படமென்றால் மட்டுமே முழுதாக பார்ப்பேன். கடைசியில் திரையரங்கு தவிர்த்து முழுதாக பார்த்த தமிழ்படம். சுப்பிரமணியபுரம். மதுரையிலிருந்து ஈரோடு வரும் போது பேருந்தில்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய உண்டு பராசக்தியிலிருந்து சுப்பிரமணியபுரம் வரை.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சினிமா நடிகர்கள் மட்டும் தான் அரசியலுக்கு தகுதியானவர்கள் என்ற மனப்போக்கு.
திரையில் செய்யும் சாகசத்தை எல்லாம் நேரிலும் செய்வார்கள் என்று நினைக்கும் மக்களின் அறியாமை. அதை வைத்து அவர்கள் செய்யும் அரசியல்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒலி அமைப்பையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் உணர்கிறேன். மிக நுட்பமாக தொழில் நுட்பத்தை பார்க்கும் நுண்ணறிவு எனக்கில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு. ஆனந்தவிகடன், குமுதம் படிப்பேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இது தலைமுறை வித்தியாசத்தில் மாறுகிறது.
முதலில் எம்.எஸ்.வியில் ஆரம்பித்து இளையராவின் ஆட்சிக்கு பிறகு நிலையான ஆட்சியை யாரும் பிடிக்கவில்லை என்பதே உண்மை. ரகுமானின் இசையில் மயங்கினாலும் ஆங்காங்கே வரும் புதிய இசையமைப்பாளர்கள் அட போட வைப்பார்கள். நல்லது தான் போட்டியில் தான் தரமான சரக்கு நமக்கு கிடைக்கும்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனது பாஸ் கார்த்திக்கின் உதவியால் பல்வேறு மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாரபட்சமின்றி எல்லா மொழி படங்களையும் பார்க்கிறேன். முக்கியமாக பிரான்ஸ்(அங்கே சென்சார் இல்லை) குறிப்பாக தாக்குபவை என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இன்னமும் என்னை தாக்குகின்றன.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் படப்பிடிப்பில் இருந்த சமயம் ஒரு நண்பரின் உதவியுடன் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக வேலை கேட்டு போயிருந்தேன். பார்த்திபன் என்ற அவரது உதவியாளர் நேர்முக தேர்வு செய்து அடுத்த படத்திற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின் ராஜிவ்மேனன் படமே எடுக்கவில்லை.
அதன் பின் சினிமா துறையில் சேர பெரிதாக சிரத்தை எடுத்து கொள்ளவில்லை. மீண்டும் செய்யும் வாய்ப்பும் இல்லை. ஆனால் குறும்படம் எடுக்கும் ஆவல் உண்டு.
தமிழ்சினிமாவில் நான் இல்லாததே அது மேம்பட நான் செய்யும் உதவி

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆட்டுமந்தை ரசிகர் கூட்டம் இருக்கும் வரை அதன் எதிர்காலத்திற்கு எந்த குறையுமில்லை. ஒருவேளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்பட்டால் கொஞ்சம் சறுக்கலாம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் இப்போதும் எனக்கு அப்படி தான் இருக்கிறது. பல தமிழ் மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும் வாய்புண்டு என்று தெரிகிறது.


இப்பதிவை தொடர நான் யாரையாவது அழைக்கவேண்டும்.
கிட்டத்தட்ட அனைவரும் எழுதி விட்டனர். அப்படி எழுத வில்லைஎன்றால் தயவு செய்து எழுதி என் மானத்தை காப்பாற்றுங்கள்.

1.தருமி

2.ஜாலிஜம்பர்

3.நல்லதந்தி

4.ஆர்.கே.சதீஷ்குமார்

5.ஜ்யோவ்ராம் சுந்தர்

மீண்டும் ஒருமுறை என் ஞாபங்களை நினைவுகூற வைத்த சகா கார்க்கிக்கும் தோழி லேகாவுக்கும் நன்றி




24 வாங்கிகட்டி கொண்டது:

MADURAI NETBIRD said...

ME THE FIRST

தியாகு said...

பிட்டு பார்க்கும் வழக்கமுண்da,illa
பிட்டு பிட்டாக பார்க்கும் வழக்கமுண்டு

Anonymous said...

//தமிழ்சினிமாவில் நான் இல்லாததே அது மேம்பட நான் செய்யும் உதவி//

உங்களுக்கென்ன குறை. நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள்.

கூடுதுறை said...

நான் a for apple எழுத அழைத்து அது எனக்கு தெரியாது என டபாய்த்து விட்டு சினிமா தொடர்பதிவு என்றவுடன் விழுந்து விழுந்து பதிவு எழுதி இருப்பதற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்...

உடனடியாக இதற்கு ஒரு பதிவுட்டு சரியான விளக்கம் தெரிவிக்கவிடில் குட்டிவால்பையனை விட்ட தொரத்தச் செய்வேன்....

அதுவும் சனி ஞாயிறு அன்று...

கார்க்கிபவா said...

//நினைவில் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
ஆனாலும் திருப்பரங்குன்றம் ராஜா தியேட்டரில் விக்ரம் பார்த்ததாக ஞாபகம்.
அப்போது எதுவும் உணரவில்லை.
//

விக்ரம் யார் உங்கள் நண்பரா?

கார்க்கிபவா said...

//தற்போது வந்த தகவல்படி பில்லாவுடன் சேர்த்து மூன்று வருடத்தில் இரண்டு படம் பார்த்திரிக்கிறேன்//

பில்லாவா? என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

கார்க்கிபவா said...

//தினமும் தொலைகாட்சியில் பிட்டு பிட்டாக பார்க்கும் வழக்கமுண்டு. //

சி.டியிலா? சேனல் என்றால் அந்த சேனல் என்று சொல்லவும்.

கார்க்கிபவா said...

//ஒலி அமைப்பையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் உணர்கிறேன். மிக நுட்பமாக தொழில் நுட்பத்தை பார்க்கும் நுண்ணறிவு எனக்கில்லை.//

நுண்ணரசியல் செய்வதோடு சரியா?

கார்க்கிபவா said...

/நல்லது தான் போட்டியில் தான் தரமான சரக்கு நமக்கு கிடைக்கும்//

இதலயும் சரக்கா?

கார்க்கிபவா said...

/
கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் படப்பிடிப்பில் இருந்த சமயம் ஒரு நண்பரின் உதவியுடன் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக வேலை கேட்டு போயிருந்தேன். பார்த்திபன் என்ற அவரது உதவியாளர் நேர்முக தேர்வு செய்து அடுத்த படத்திற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின் ராஜிவ்மேனன் படமே எடுக்கவில்லை.//

ராசிக்காரான்ப்பா...

கார்க்கிபவா said...

//
ஆட்டுமந்தை ரசிகர் கூட்டம் இருக்கும் வரை அதன் எதிர்காலத்திற்கு எந்த குறையுமில்லை.//

என்னை திட்ட வேண்டாம்.

கார்க்கிபவா said...

//
மீண்டும் ஒருமுறை என் ஞாபங்களை நினைவுகூற வைத்த சகா கார்க்கிக்கும் தோழி லேகாவுக்கும் நன்றி//

அப்போ ஏற்கனவே ஒரு முறை சொல்லிட்டிங்களா? இல்லை நன்றியை மீண்டும் ஒரு முறை சொல்றீங்களா? தெளிவாத்தானே இருக்கிங்க?

வீணாபோனவன் said...

3 வருஷத்துல 2 படம் தானா?. உங்களுக்கு இத சொல்ல கூசலயா?. :-)

//
தற்போது வந்த தகவல்படி பில்லாவுடன் சேர்த்து மூன்று வருடத்தில் இரண்டு படம் பார்த்திரிக்கிறேன்.(தெளிவா போனா தானே ஞாபம் இருக்குறதுக்கு) //
ம்ம்ம்.. நேத்து ராத்திரி DVD-ல ஒரு படம் பார்த்தேன்... என்ன படம்னு ஞாபகம் இல்லை (தெளிவா!!! இருந்தாதானே :-) ஆனா அது ஒரு ஆங்கிலப் படம்னு மட்டும் ஞாபகம் இருக்கு :-)

-வீணாபோனவன்.

Anonymous said...

//வனோ வீட்டுக்கு போகலாம் என்று அழுதுகொண்டிருக்கிறான். வெளியே அழைத்து வந்து என்னவென்று கேட்டால், அப்போது தான் முதன் முதலில் தியேட்டருக்கு வருகிறானாம். திரையில் அவ்வளவு பெரிய மனிதர்களை அதற்கு முன் பார்த்ததில்லையாம்...//

கூட இம்மாம் பெரிய வால வச்சுகிட்டு தெரைல வர்ற தம்மாதுண்டு ஆளுக்கு போய் பயன்த்துருக்கு பாரு புள்ள அத நெனச்சாதான் எனக்கு சிப்பு சிப்பா வருது...;-)000

Anonymous said...

//வனோ வீட்டுக்கு போகலாம் என்று அழுதுகொண்டிருக்கிறான். வெளியே அழைத்து வந்து என்னவென்று கேட்டால், அப்போது தான் முதன் முதலில் தியேட்டருக்கு வருகிறானாம். திரையில் அவ்வளவு பெரிய மனிதர்களை அதற்கு முன் பார்த்ததில்லையாம்...//

கூட இம்மாம் பெரிய வால வச்சுகிட்டு தெரைல வர்ற தம்மாதுண்டு ஆளுக்கு போய் பயன்த்துருக்கு பாரு புள்ள அத நெனச்சாதான் எனக்கு சிப்பு சிப்பா வருது...;-)000

சின்னப் பையன் said...

//பார்த்திபன் என்ற அவரது உதவியாளர் நேர்முக தேர்வு செய்து அடுத்த படத்திற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின் ராஜிவ்மேனன் படமே எடுக்கவில்லை//

நீங்க வேணா - சரி, நான் உங்ககிட்டே வேலைக்கு வரலை - ந்னு சொல்லிப்பாருங்க. மறுபடி படம் எடுப்பாரு...

rapp said...

சூப்பரா இருக்கு:):):)

rapp said...

////
ஆட்டுமந்தை ரசிகர் கூட்டம் இருக்கும் வரை அதன் எதிர்காலத்திற்கு எந்த குறையுமில்லை.//

என்னை திட்ட வேண்டாம்//

ரிப்பீட்டு:):):)

rapp said...

//நீங்க வேணா - சரி, நான் உங்ககிட்டே வேலைக்கு வரலை - ந்னு சொல்லிப்பாருங்க. மறுபடி படம் எடுப்பாரு...//

:):):)

rapp said...

me the 20th

வால்பையன் said...

நன்றி மதுரை நண்பன்

நன்றி தியாகு!
உன்னை போல தான் உன் நண்பனும் இருப்பான்

நன்றி வடகரைவேலன்
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

நன்றி கூடுதுறை
சீக்கிரம் எழுதி விடுகிறேன்
யார் அது குட்டி வால்பையன்

நன்றி கார்க்கி
விக்ரம் கமல் படம்!
முத்தம் முதலாக நான் கட்டு அடித்து பார்த்த படம்
ரஜினியின் பில்லா

நன்றி வீணாப்போனவன்
நல்ல படம் வந்தால் பார்ப்பதற்கு எனக்கு வெட்கமில்லை

நன்றி அனானி
பயந்தது நானல்ல என் மாமா பையன்

வால்பையன் said...

நீங்களா பாலச்சந்தர் அனானியாக வந்தது

நன்றி ச்சின்னப்பையன்
என் அறிவுக்கு தீனி போடமுடியாதுன்னு படம் எடுக்கலையாம்
ஹீ ஹீ ஹீ


நன்றி ராப்

கூடுதுறை said...

//நன்றி கூடுதுறை
சீக்கிரம் எழுதி விடுகிறேன்
யார் அது குட்டி வால்பையன்//

என்னது குட்டிவால்பையனைத் தெரியதா?

உங்களுக்கு ஆதரவாக கண்டனக்குரல் கொடுத்தவர் ஆயீற்றே...இங்கே பாருங்கள்

http://scssundar.blogspot.com/2008/09/blog-post_30.html

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எழுதிட்டேன் :)

!

Blog Widget by LinkWithin