பேரிழப்பும், பெருங்குழப்பமும்!!



முதலில் மத்திய அரசுக்கு கண்டங்கள் என்று தான் தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். நமது பதிவுலக அரசியலில் ஒன்றை பிடிக்கவில்லை என்றால் மற்றொன்று பிடித்தே ஆகவேண்டிய கட்டாய சூழல். நான் இந்த,அந்த கட்சிக்கு தொண்டன் என்ற முத்திரை பிடிக்காததால் அந்த தலைப்பை தவிர்க்கிறேன்

இந்த பதிவு வாழ்வியல் மூலஆதாரங்களை பற்றியது.
என் வணிகமும் சம்பந்த பட்டிருந்தாலும் குற்றம் குற்றம் தானே.
இத்துடன் ஒரு வருட கச்சா எண்ணையின் வார சார்ட்டை இணைத்திருக்கிறேன்.



சென்ற வருட மே மாதம் விற்ற விலையில் இப்போது கச்சா எண்ணெய் வியாபாரம் ஆகிகொண்டிருக்கிறது. இந்திய பண மதிப்பில் ஒரு பீப்பாயின் விலை மூவாயிரத்து ஐநூறுக்கும் கீழே. இதே விலையில் இருந்து தான் கச்சா எண்ணெய் ஆறாயிரத்துக்கு உயர்ந்தது. நஷ்டம் பொறுக்க முடியாமல் விலையேற்றிய அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விலையேற்றியது.

தற்பொழுது கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சிக்கு பின்னும் பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? இரண்டு காரணங்கள் இருக்கலாம், ஒன்று பெட்ரோலிய நிறுவனக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாரிக்க அரசாங்கத்தை தன் வசப்படுத்தி விலையை குறைக்காமல் வைத்திருக்கலாம். இரண்டு வரவிருக்கும் மத்திய அரசு தேர்தலில் மக்கள் தொண்டன் வேடம் போட தன் கை காசை கொடுப்பது போல் தேர்தல் நேரத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது.

அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மேல் அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மைனஸில் போய் கொண்டிருக்கிறது.

பணவீக்கத்தின் மூல காரணம் பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் என்பது பள்ளி மாணவனுக்கும் தெரியும். இவர்களுக்கு தெரியாமலா இருக்கும். வங்கியின் கையிருப்பை குறைப்பதால் பணப்புழக்கம் அதிகமாகலாம் ஆனால் பணவீக்கம் குறையுமா. பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றமே பணவீக்கத்திற்கு காரணம் என்பதை சிறு உதாரணத்துடன் சொல்ல விருப்புகிறேன்.

தக்காளியை எடுத்து கொள்வோம். ஆண்கள் தங்கமணியிடம் கேட்டு பாருங்கள் என்ன விலை இப்போது என்று. ஈரோட்டில் எடையை தவிர்த்து ஒரு தக்காளி இன்ன விலை என்று விற்று கொண்டிருக்கிறார்கள். சாமான்யனும் வாங்கி கொண்டிருந்த தக்காளிக்கு என்ன வந்தது. அதே நிலம் அதே விவசாயி ஆனால் விலை மட்டும் உயருகிறது. காரணங்கள் அகரத்தில் இருந்து பார்ப்போம்

பயிரிட விவசாயி நிலத்தை உழவேண்டும். டீசல் விலை உயர்வால் ட்ராக்டர் கூலி அதிகம். அடுத்த விதைகள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாகி விட்டதால் விதையும் விலையுயர்வு. அடுத்து உரம், தயாரிக்க ஆகும் மூலப்பொருள்கள் விலையுயர்வு. காரணம் போக்குவரத்து கட்டணம். தயாரித்த உரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கட்டணம் உயர்வு. எல்லாம் ஆகிவிட்டது, அறுவடை முடித்து மார்கெட் கொண்டுவர மீண்டும் கட்டணம் அதிகம் காரணம் அனைத்திற்கும் ஒன்று தான் பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வு.

பிரச்சனைகளை திசை திருப்பி விடுவது அரசாங்கத்திற்கு கை வந்த கலை. எனக்கு விபரம் தெரிந்த வரையில் அதில் எப்போதும் அவர்கள் தோற்றதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் பூனைக்கு யார் மணிக்கட்டுவது. அடிமட்டத்தில் இருப்பவனுக்கு பெட்ரோல் நேரடி தேவையில்லை, ஆனாலும் விலையுயர்வுக்கு காரணம் பெட்ரோல் தான் என்பதும் தெரியாது, நடுத்தர வர்க்கம் நாளை என்ற நாளில் நானும் இருக்க வேண்டும் என்ற வெறியிலே ஓடிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. பெட்ரோல் விலையேறி விட்டதா பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில் போகலாம் என்பான். மேல் தட்டுக்கு என்ன விலை விற்றாலும் கவலை இல்லை.

ஆகமொத்தம் அரசாங்கம் என்னும் அதிகாரமையத்திடம் வாழ்நாள் முழுவதும் கையேந்தி நிற்கும் விளிம்பு நிலை பிச்சைகாரர்கள்(மக்கள்) தான் நாம் போல

42 வாங்கிகட்டி கொண்டது:

கபீஷ் said...

மீ த ஃபர்ஸ்ட்!

குசும்பன் said...

பதிவில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள்!



//தக்காளியை எடுத்து கொள்வோம். ஆண்கள் தங்கமணியிடம் கேட்டு பாருங்கள் என்ன விலை இப்போது என்று. //

விஜய் ஆனந்த் said...

மீ த ஃபர்ஸ்ட்டூ!!!

(பதிவ படிச்சிட்டுதான் கமெண்ட்டு போட்ருக்கேன்!!!)

குசும்பன் said...

//பிரச்சனைகளை திசை திருப்பி விடுவது அரசாங்கத்திற்கு கை வந்த கலை. எனக்கு விபரம் தெரிந்த வரையில் அதில் எப்போதும் அவர்கள் தோற்றதில்லை. //

ஹி ஹி ரெடிமேட் சட்டையாவது அளவு அப்ப அப்ப மாறும் ஆனா இவுங்க ஸ்டேட் மெண்ட் மாறவே மாறாது..

அது “ கடந்த ஆட்சியின் விளைவே இது” என்று சொல்வது.

ஆட்சிக்கு வந்து 4 வருடம் ஆனாலும் இதையே சொல்லுவாங்க. 4 வருடம் என்னத்தை கிழிச்சாங்கன்னு தெரியாது!

குசும்பன் said...

//இத்துடன் ஒரு வருட கச்சா எண்ணையின் வார சார்ட்டை இணைத்திருக்கிறேன்//

இதைதானே தமிழ்படத்தில் ஹீரோ, அல்லது ஹீரோயின் சீரியஸா இருக்கும் பொழுது காட்டுவார்கள். சரியா இல்லையா?

SK said...

நீங்க சொன்ன உடனே விலை பெட்ரோல், டீசல் விலை குறைவுன்னு சொல்லி இருகாங்க. இன்னைக்கு தான் தினமலர்ல படிச்சேன் ?? பாக்கலாம் குறைகரங்களா இல்லை குறைக்கர மாதிரி நடிக்கராங்கள சொல்லி ..

MADURAI NETBIRD said...

அஹா ஒஹோ பிரமாதம்.......... கிளப்பிடிங்க தல .................... சரி
இப்ப போய் பதிவ படிபோம்.. என்ன பண்றது எங்களுக்கு அட்டெண்டன்ஸ் குடுத்துட்டு பட்டிருக்கிறது சின்ன வயசுல இருந்து ஒரு பழக்கமா மாறிவிட்டது...

MADURAI NETBIRD said...

என்ன தல பரிசல் அவர்களின் அவியல் பதிவு படிக்கலாம் என்று பார்த்தால் அது இப்படி The page cannot be found வருகிறது யாராவதும் தகவல் குடுங்கப்பா.........

சார் எங்க கொஞ்சம் அவியல்.......

கார்க்கிபவா said...

தெரிஞ்ச ஒன்ன புரியுர மாதிரி சொல்லியிருக்கிங்க.. நான் சொல்றது புரியுதா?

ஆ! இதழ்கள் said...

பீப்பாய் $64ல் போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது குறைத்துவிட்டு மீண்டும் 2 வாரத்தில் கச்சா எண்ணெய் கூடினால் அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் விலை நிலையானவுடன் செய்யலாம் என்றிருக்கலாம். ஆனால் நம்ம நாட்டில் ஒரு முறை விலை கூட்னால் அது இறங்கும் என்பதற்கு no history no geography :)

MADURAI NETBIRD said...

//நன்றி மதுரை நண்பன்
உங்கள் பதிவில் எப்படி பின்னூட்டம் இடுவது?
எனக்கு துப்பாக்கியே பெட்டராக தோன்றுகிறது//

//உங்கள் பதிவில் எப்படி பின்னூட்டம் இடுவது?//

நண்பரே ஒரு சிறு தவறு நிகழ்ந்து விட்டது சரி செய்து விட்டேன். நன்றி நண்பரே ...............

பாபு said...

நீங்கதான் சரியா சொல்லியிருக்கீங்களே
வேற என்ன சொல்றது ?

சிம்பா said...

வால்'ஸ் உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

இந்திய கச்சா எண்ணை விலை 61 டாலரை தொட்டுள்ளது. இருந்தாலும் டாலருக்கு நிகராக இந்திய ருபாய் மதிப்பு மேலும் சரிந்ததுள்ளது. இருந்தாலும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்க்களில் விலை குறைப்பு நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்.

நல்லதந்தி said...

//இருந்தாலும் டாலருக்கு நிகராக இந்திய ருபாய் மதிப்பு மேலும் சரிந்ததுள்ளது. //
டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் வேண்டுமென்றே எக்கசக்க டாலரை இந்திய அரசு வாங்கி வைத்திருப்பது தானே?

Thamira said...

இன்பர்மேட்டிவ்.. தொடர்க சேவை.!

வெண்பூ said...

அருமையான பதிவு வால். ஏற்கனவே இருக்குற பெட்ரோல், டீசல் விலையில பாதி வரிதான். இதுல கச்சா எண்ணெய் விலை ஏறிடுச்சின்னு ஏத்துன பெட்ரோல் விலைய அது குறைஞ்சப்புறமும் குறைக்காம இருக்கானுங்க.. இப்படி பதிவு போடுறத தவிர நாம வேற என்னா செய்ய முடியும்..

g said...

தக்காளியை எடுத்து கொள்வோம். ஆண்கள் தங்கமணியிடம் கேட்டு பாருங்கள் என்ன விலை இப்போது என்று. //


50 rupees

கூடுதுறை said...

உங்கள் பதிவை பார்த்த மத்திய அரசு பயந்து போய் நாளை பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறது...

இப்பொது தான் டீவியில் பார்த்தேன்..

நன்றி

rapp said...

:(:(:(

rapp said...

me the 20th

Vidhya Chandrasekaran said...

இப்ப குறைச்சா தேர்தலுக்குள்ள சனங்க மறந்துடமாட்டாங்களா? அப்புறம் தியோரா இப்ப சம்பாரிச்சா தான் உண்டு. எல்லாம் தலையெழுத்து:(

Kumky said...

வெளையெல்லாம் குறைக்க முடியாது...இப்ப இல்ல..எப்பயுமே..
உங்களால என்ன பன்ன முடியுமோ பன்னிக்குங்க...யாருப்பா அங்க பூலிஸ்க்கு போன போடு.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் வேண்டுமென்றே எக்கசக்க டாலரை இந்திய அரசு வாங்கி வைத்திருப்பது தானே?//

இதுவும் ஒரு காரணம் .
இப்போது டாலரை யூக வணிகத்தில் சேர்த்து விட்டார்கள் .
இன்றைய ரூபாயின் வீழ்ச்சி க்கு அதுதான் முக்கிய காரணம் !

MADURAI NETBIRD said...

தக்காளியை எடுத்து கொள்வோம்.
யாரு வேணம்னா
தக்காளி ஊத்தப்பம் ஒரு பார்சல்.....................

/visit
காப்பி பேஸ்ட் கலாச்சாரம்


http://madurainanpan.blogspot.com/2008/10/blog-post_4376.html
"

வால்பையன் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் அழிக்கப்பட்டன
சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்

Anonymous said...

நல்ல கட்டுரை. தக்காளி தவறான எடுத்துக்காட்டு.

தக்காளி விலையேற்றத்திற்கு சமீபத்திய மழைதான் காரணம். பூக்கள் காய் பிடிக்காமல் உதிர்ந்து விட்டன. காய்கள் மேல் விழுந்த மழை அதப் பழுக்க விடாமல் சூம்ப்பிப் போக வைத்து விட்டது.

போட்டால் எல்லோரும் தக்காளி, இல்லன்னா வேற என்ற தவறான விவசாய முறையும் தக்காளி ஒரே சீரான விலையில் இல்லததற்குக் காரணம்.

Tech Shankar said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போனால் இவர்களுக்கு என்ன வந்தது?

தானுண்டு தனது நாற்காலி உண்டு..

புதுகை.அப்துல்லா said...

பெட்ரோல் பயன்பாட்டை பல பகுதிகளாகப் பிரித்து அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்தால் யாருகும் எந்த பாதிப்புமின்றி செய்யலாம். உதாரணமாக காருக்கான பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய். டூவீலருக்கு 30 ரூபாய். சரக்கு வாகனங்களூக்கு( வால்பையன் அல்ல) லிட்டர் 25 ரூபாய். தனியார் சரக்கு வாகனங்களுக்கு 50 ரூபாய்...இதுபோல. ஆனா யாரு செய்வா? இந்த நாட்டை எந்த ஆட்சியாளனும் காப்பாத்த மாட்டான். நம்மதான் காப்பாத்திக்கனும்....பெட்ரோல்,டீசல் பயன்பாட்டை நம் அளவில் குறைத்து

வால்பையன் said...

இலங்கை தொடர்பாக பின்னூட்டமிட்ட அனானி நண்பருக்கு

ஈழம் குறித்து நான் எந்த கருத்தையும் வெளியிடவில்லை
கருத்து சொல்லும் அளவுக்கு நான் பழுத்த அனுபவசாலியும் அல்ல!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும் அல்ல.

என்னை பொறுத்தவரை உயிர்களை கொல்லுவது குற்றம்.
அது எந்த உயிராக இருந்தாலும்.

அவ்வளவே

தயவுசெய்து என்னை இதில் கோர்த்து விடவேண்டாம்

வால்பையன் said...

நன்றி கபீஷ்

நன்றி குசும்பன்
மக்களே இனிமேல் விலையை குசும்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

நன்றி விஜய் ஆனந்த்
நம்பிட்டேன்

நன்றி எஸ்.கே
நல்லது நடந்தால் சரி

நன்றி மதுரை நண்பன்

நன்றி கார்க்கி

நன்றி ஆ! இதழ்கள்
விலையேறும் போது நட்டத்திற்கு மானியம் கேட்கிறார்களே
இப்போது லாபத்தில் பங்கு தருவார்களா

நன்றி பாபு

நன்றி சிம்பா
ரூபாயின் மதிப்பு உயர்ந்தாலும் பிப்பாயின் விலை பெரிதாக உயரவில்லை

நன்றி நல்லதந்தி
நீங்கள் சொல்வதும் சரிதான்

நன்றி தாமிரா
தமிழில் சொல்லமுடியுமா

நன்றி வெண்பூ
ஆமாம், என்ன செய்யமுடியும்

நன்றி ஜிம்ஷா
கேட்டிங்களா

நன்றி கூடுதுறை
சந்தோசம் தானே

நன்றி ராப்

நன்றி வித்யா

நன்றி கும்கி
எந்த பூலிஸ்

வால்பையன் said...

நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்
ரூபாயின் மதிப்பு இறங்கியதற்கு அது மட்டும் காரணமல்ல
ஜப்பானின் யென் இன்று வரை வர்த்தகத்தில் இருக்கிறது. ஆனால் அதன் மதிப்பு குறையவில்லையே. நமது மதிப்பு குறைந்த காரணம். இரு பெரும் பொருளாதார நிபுணர்களின் மட்டமான பொருளாதார கொள்கை மட்டுமே

வால்பையன் said...

நன்றி வடகரை வேலன்
தக்காளி ஒரு உதாரணத்திற்கு மட்டுமே
எல்லா உணவு பொருள்களும் விலையுரந்துள்ளது அறிந்தது தானே.

நன்றி தமிழ்நெஞ்சம்
நாற்காலியில் நாலு காலும் முக்கியம்

நன்றி புதுகை அப்துல்லா
நீங்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை.
அதற்கு பதில் சாலைவரிகளை உயர்த்தலாம்.
புரியும் என்று நினைக்கிறேன்

வால்பையன் said...

எனதருமை நண்பர்களுக்கு!
நான் வரும் சனி முதல் திங்கள் வரை சென்னையில் இருப்பேன்.
சென்னையில் இருக்கும் நண்பர்கள் என்னை அழைக்கலாம்
அலைபேசி எண் 9994500540

Sanjai Gandhi said...

//பிட்சைகாரர்கள்//

தவறு.. இதை பிச்சைக்காரர்கள் என்று சொல்ல வேண்டும். :)

நன்றி... வருகிறேன்.. :)

Kumky said...

சரக்கு வாகனங்களூக்கு( வால்பையன் அல்ல) லிட்டர் 25 ரூபாய்.
வாவ்.. தேர் இஸ் அப்துல்லா.

Maximum India said...

There is one act called FRBM Act according to which the government has to keep its fiscal deficit within certain target level. Government is getting a lot of revenues through the taxes collected on Petroleum products which comes under the scope of FRBM. At the same time, the subsidies given to the Petrol Companies are kept out side FRBM purview in order achieve its FRBM targets. Thus whatever government says about the losses suffered by the Oil Companies and the subsidies to support them are not justifiable.

The fall in oil prices in the international market has been offset to some extent by the fall in Rupee against USD. Even then, the actual cost of refined Petrol/Diesel should be somewhere around Rs.25-30. The extra amount we pay goes to companies' profit and government taxes.

Government may reduce the oil prices before elections. But I have lot of doubts whether such move can bring down inflation by large extent.

குப்பன்.யாஹூ said...

வால் பையன் என்ன நீங்க விவரம் தெரியாம குற்றம் சாட்டுகிறீர்கள்.

இந்திய அரசாங்கமும் முரளி தேயோராவும், கிங்க்பிஷேர்க்கும் ஜெட் ஏற்வய்ஸ் க்கும் 6 மாசம் கடன் கொடுத்து இருக்கிறார்கள், விஜய் மல்லைய் என்ற ஏழை வறுமையில் தவிப்பதை கண்டு மனம் இறங்க வில்லையா எங்கள் மன்மோகன் சிங் அரசு.

தக்காளி விலை அதிகம் ஏழை மக்கள் அதிகம் அவதி படுவர் என்று உணர்ந்துதான் மன்மோகன் ஜப்பான், சீன சென்ற விமானத்தில் 62 வகை குருமா, 72 வகை இனிப்புகள் மட்டுமே தயார் செய்து உள்ளனர்.

குப்பன்_யாஹூ

Anonymous said...

//சனி முதல் திங்கள் வரை சென்னையில் இருப்பேன்.
சென்னையில் இருக்கும் நண்பர்கள் என்னை அழைக்கலாம் //

சனிய பாக்கப் போயிடாதிங்க!

Anonymous said...

//இருந்தாலும் டாலருக்கு நிகராக இந்திய ருபாய் மதிப்பு மேலும் சரிந்ததுள்ளது. //
டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் வேண்டுமென்றே எக்கசக்க டாலரை இந்திய அரசு வாங்கி வைத்திருப்பது தானே?

//

Sorry to type in English. If the Indian Govt has more dollar on hand then the value of indian rupee has to go up not down.

Dollar is up for all currencies even for euro except Yen.

Every body need to dollar to pay their trade deficit. But dollar is not available in the market now. So it is going up. Economist predict that it will go up in future too.

Ambi

ரமணா said...

வால்பையனின் மிக அருமையான பதிவு.

பொதுவாக வணிகர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

ஒரு பொருளுக்கு ஆண்டு நிதிஅறிக்கையில் வரி கூடிவிட்டால்
உடனே பொருளின் விலையை ஏற்றி விடுவர்.
பொருள் மீது ( தேர்தலை கணக்கு வைத்து)வரி குறைக்கப்பட்டால் "சார் இது பழைய ஸ்டாக்" என்று சிரித்து பேசி அதே விலையில் விற்று விடுவர்.

அதனால் தான் இதை வியாபாரத் தந்திரம் என்று சொல்லடி பாப்பா என்று பாரதி இருந்தால் பாடி இருப்பார்.

இதே தந்திரத்தை வைத்துதான் 20 வருடங்களுக்கு முன்னால் எந்த மூலதனமும் இல்லாமல் வியபாரம் தொடங்கிய பலர் இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும் நகரங்களில் பெரும் செல்வந்திரர்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார்கள்.

(அவர்களது நேரம் காலம் பார்க்காத கடின உழைப்புக்கு தலை வணங்குவோம்)
.

வணிகம் என்றாலே வஞ்சித்து கொள்ளையடி
அரசியல் என்றால் அனைத்தையும் சூறையாடு

சிங்கில் டீக்கு லாட்டரி அடித்த பலர் இன்று கோடீஸ்வரர்கள்

வாழ்க கோஷம் போடும் வாலிபக்கூட்டமோ
வறுமையில்

மறதி மன்னர்களை மாக்கன் ஆக்கும் வித்தை தெரிந்த அரசியல் வாதிகளுக்கு ஒரு "ஓ" போட்டு
சினிமாநடிகளின் கட்அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடும்
பாமரர்கள் இருக்கும் வரை

அரசியல் கோமான்களின் சித்து விளையாட்டின் வியாபாரம்
கொழித்து செழிப்பதை தடுப்பது யார்?


புரண காலத்தில் ஒரு நரகா சூரனை அழிக்க "ஸ்ரீக்ருஷ்ண பகவான்" அவதாரம் எடுத்து அருளியது போல

இன்றய உலகில் கொட்டமடிக்கும் நரகாசூரனின் வாரிசுகளை( அவனது உதிரத்துளிகளிடமிருந்து ஜெனித்தவர்கள் போலுள்ள உன்மத்தர்கள்)அழிக்க "கலி அவதாரம் எடுத்து வருவாரா?

இல்லை மக்கள் மனதில் விழிப்புணர்வு புரட்சியை ஏற்படுத்தும் வால்பையன் பதிவுகளைபோல் பதிவுகளை வரச் செய்வாரா?

வால் பையன் அவர்களுக்கு நன்றி
தொடர்ந்து மக்கள் சேவையில்
புரட்சி செய்யவேண்டும்

Arun Kumar said...

நல்ல பதிவு.
மத்திய அரசிடம் இருந்து உடனடி விலை குறைப்பை எதிர் பார்க்க முடியாது. 142 $ இருந்த போது மத்திய அரசு விலை ஏற்றம் செய்தது. ஆனால் விலை ஏற்றம் 67$ சமன் செய்தே கொடுக்கபட்டது.

தற்போது 60 $க்கு ஆயில் வந்தாலும் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு வீழ்ச்சி. என்ன ஆயில் கம்பெனிகள் கடந்த ஒரு வாரமாக தான் நட்டம் இல்லாமல் இருந்திருப்பார்கள்.

கச்சா எண்ணெய்க்கு மாற்று திட்டங்கள் பல இருந்தாலும் இன்னமும் கச்சா எண்ணெய்யை நம்பி இருப்பது நம் அரசின் சாதனை என்றே சொல்ல வேண்டும்..

குறைந்த செலவில் எத்தனால் நம்மால் தயாரிக்க முடியும். அதை வைத்து அத்யாவசிய சேவைகளான பஸ் லாரிகளுக்கு சாதாரண டீசலை விட விலை குறைவாகவே எத்தனால் டீசல் கொடுக்க முடியும். மக்களையும் பாதிக்காது

புகழன் said...

அப்பப்ப சீரியஸான பதிவும் போடுறீங்களே!

உங்களோட சமூக அக்கறைக்கு வாழ்த்துகள்.
ஆனா இதுக்காக எல்லாம் மக்கள் உங்கள நம்பி ஓட்டுப் போட்டுருவாங்கன்னு கனவு கான வேண்டாம்.

!

Blog Widget by LinkWithin