அன்றைய அரசியலும்! இன்றைய அரசியலும்!

பிரபஞ்சனின் சித்தன் போக்கு சிறுகதை தொகுப்பு படித்தவர்களுக்கு, மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வராது ஒருவித பரிதாப உணர்வே ஏற்படும்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே தவறு செய்ய பிறக்கவில்லை. சூழ்நிலையும் இயலாமையுமோ அவனை தவறு செய்ய தூண்டுகிறது என்று அருமையாக விவரித்திருப்பார். அதில் இருபது கதைகள் இருந்தாலும் அதில் ஒன்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



தியாகி என்ற தலைப்பில் இருக்கும் சிறுகதை அது. ஒரு சுதந்திர போராட்ட தியாகி தனது பென்ஷன் பணத்தை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக வந்திருப்பார். அதிகாரிக்கோ பெரும்குழப்பம். ஒருவேளை பைத்தியமாக இருக்குமோ என்று நினைத்து காரணத்தை விசாரிக்கிறார். அவருடைய பதில்.

ஒருவன் பணத்தை நான்கு வழிகளில் பெறலாம். ஒன்று உழைத்து சம்பாரிப்பது. என்னால் உழைக்க முடியாது, முதுமை காரணமாக வேலை செய்யும் திறனை இழந்து விட்டேன். இரண்டு திருடலாம், நான் காந்தியவாதி திருடமாட்டேன். மூன்றாவது கடன் வாங்கலாம், என்னால் கடனை திருப்பி தர முடியாது அதனால் கடன் வாங்க மாட்டேன். நான்காவது வழி தானம் பெறுதல் ஆகவே பென்ஷனை தானமாக நினைத்து பெற்றேன். இப்போது என் மகன் படிப்பை முடித்து வேலைக்கு செல்கிறான். அவன் எனக்கு ஒரு பிடி சோறு போடுவான். வாழ்வதற்குண்டான தகுதி படைத்து தானம் பெறுபவன் சண்டாளன். ஆகவே எனக்கு பென்ஷன் வேண்டாம் என்பார்.

சுதந்திர போராட்டத்திற்கு முன் என்ன தொழில் செய்தீர்கள் என்று கேட்பார்.
லட்ச லட்சமாக சம்பாரித்து கொண்டிருந்த நான் தாய் நாட்டின் மீது ஆர்வம் கொண்டு பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டு போராட்டத்தில் இறங்கினேன் என்பார். ஏன் போராட்டத்தில் இருந்து கொண்டே வியாபாரத்தையும் பார்த்திருக்கலாமே என்ற அதிகாரியின் கேள்விக்கு அவரது பதில்

நீங்கள் இளைஞர், இந்த காலத்தவர். நிகழ்கால அரசியலும், அரசியல்வாதிகளும் உங்களை இப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள். எங்கள் காலத்து அரசியல் வேறு. அரசியலுக்கு எங்கள் அர்த்தம் வேறு. அரசியல் என்றாலே ஆட்சி மாற்றம் என்பதையே குறியாக வைத்து இன்றைய அரசியல் இயங்குகிறது. எங்களுக்கும் ஆட்சி,அதிகார மாற்றம் நோக்கமாக இருந்தது. ஆனால் அது பத்தாவது நோக்கம், எங்களை பூரணப்படுத்தி கொள்வதையும், பொதுமக்களை மனதளவில் முழுமைப்படுத்துவதுமே எங்கள் முதலான அரசியல் பணியாக நினைத்தோம். அரசியலை ஒரு புனிதமான பணியாக ,தொண்டாக நாங்கள் நினைத்தோம். ஒருநாளில் இருபத்திநான்கு மணி நேரத்தையும் தேசசேவைக்காக அர்ப்பணித்தோம். தேசசேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மனிதனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்காது. ஒரு மனிதன் ஏக காலத்தில் இரண்டு மனைவிகளுடன் இல்லறம் நடத்துவது எவ்வளவு இழிவோ, நீசத்தனமோ, அந்த அளவிலும் இழியது ஒரு அரசியல்வாதி வியாபாரியாக இருப்பது என்று நாங்கள் நினைத்தோம்.

இதுதான் அந்த கதையின் சாராம்சம் மட்டுமே, இதிலேயே தேவையான கருத்துக்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு நாட்டில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் நான் வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

31 வாங்கிகட்டி கொண்டது:

கார்க்கிபவா said...

மீ த ஃபர்ஸ்ட்

Tech Shankar said...

me the 2nd

வால்பையன் said...

பதிவ யாரும் படிக்கிறதில்ல

சிம்பா said...

நவீன அரசியல் என்பது ஒரு தொழில். பணம் கொழிக்கும் தொழில். அப்படியிருக்க ஆட்சி அதிகாரம், இதெல்லாம் விட்டுவிட்டு ஆண்டியாக சொன்ன வால்பையனை நான் கண்டிக்கிறேன்...

வாழ்க பணநாயகம்..:)))))

கார்க்கிபவா said...

//அந்த அளவிலும் இழியது ஒரு அரசியல்வாதி வியாபாரியாக இருப்பது என்று நாங்கள் நினைத்தோம்//

பிழை சகா.. இழிவானது..( நான் பதிவையும் படிச்சேன்ப்பா)

MADURAI NETBIRD said...

//பதிவ யாரும் படிக்கிறதில்ல//

ஆஹா கண்டுபிடிச்சிடிங்க போல

///
உங்க முடிவு உங்க கையில
என்ன உங்க முடிவ தெரிந்துக்க ரொம்ப ஆசையா இருக்க

http://madurainanpan.blogspot.com/2008/10/blog-post_22.html

சும்மா தைரியமா வாங்க

anujanya said...

மாறி வரும் சிந்தனைகளில் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஒரு அபாயம்; நெருக்கடி நிலை என்றால் உயர் இலட்சியம், தியாகம் என்று மானுடமும் வளரும். அமைதியான சூழல் என்றால் மனித இயல்பான சுயநலம் தலைதூக்கும். பணம் கிட்டாத அதிகாரம் ஊழலில் முடியும். இன்றைய சூழலில் ஆட்சியாளர்களை அரசு அதிகாரரிகளின் எஜமானர்களாக, அதாவது ஒரு மேலாண்மை ஆசாமிகளாக மட்டுமே கருத வேண்டியுள்ளது. ஒரு ஆயிரம் கோடி திட்டத்தை ஆக்குவதோ, அல்லது வேண்டாமென்று அழிக்கும் அதிகாரம் மட்டும் என்னிடம்; ஆனால் என் மாத சம்பளம் பிடித்தம் போக இருபதாயிரம் என்றால் நடைமுறையில் ஊழலில் தான் மிஞ்சும், இந்த உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும்.

ஆனால் இத்தகைய கதைகள், நாம் கடைப்பிடிக்கவேண்டிய மையபுள்ளியைக் காட்டி, நாம் எவ்வளவு தொலைவு விலகி வந்துவிட்டோம் என்பதையும் சொல்கிறது.

அனுஜன்யா

Anonymous said...

//மாறி வரும் சிந்தனைகளில் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஒரு அபாயம்; நெருக்கடி நிலை என்றால் உயர் இலட்சியம், தியாகம் என்று மானுடமும் வளரும். அமைதியான சூழல் என்றால் மனித இயல்பான சுயநலம் தலைதூக்கும். //

சரியாக சொல்லப்பட்ட வார்த்தைகள். இது மனித இயல்பு. அரசியலே இன்று ஒரு வியாபரமாகத்தான் போய் கொண்டு இருக்கின்றது. இதற்கு எந்த அரசியல்வாதியும் விலக்கல்ல. இராகவன், நைஜிரியா

வால்பையன் said...

முன்னிருக்கும் கருத்துகளில் முரண்படுகிறேன் அனுஜன்யா

//ஒரு அபாயம்; நெருக்கடி நிலை என்றால் உயர் இலட்சியம், தியாகம் என்று மானுடமும் வளரும்.//

மானுடம் என்ற வார்த்தை ஒரு இனத்தையோ, ஒரு குழுவையோ குறிக்காது. ஒரு மனிதனை கொள்வது இன்னொரு மனிதன் தான் என்று நினைக்கும் போது அதில் லட்சியமும், தியாகமும் துளியளவும் இல்லை என்பதே என் கருத்து.

//அமைதியான சூழல் என்றால் மனித இயல்பான சுயநலம் தலைதூக்கும்.//

அது அமைதியை குலைப்பதற்கு தான். சுயநலம் என்ற வார்த்தை எப்படி வந்திருக்கும். ஆதியில் எல்லாம் எல்லோருக்கும் கிடைத்தது. பஞ்ச காலத்தில் அது கிடைக்காத போது கிடைக்கும் காலத்தில் அதிகமாக சேர்த்து வைக்கவேண்டும் என்று தோன்றியது. அதுவே பின்னாளில் சுயநலம் ஆனது. தன்னையும், தன் வாழ்க்கையை பற்றியுமே எல்லோரும் எல்லா நேரமும் சிந்தித்து கொண்டிருக்கமாட்டார்கள்.

//பணம் கிட்டாத அதிகாரம் ஊழலில் முடியும்.//

பணம் என்பது தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே. நம் தேவை நம் கட்டுக்குள் தான் இருக்கிறது. அதிகாரம் என்பது எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கிறது. ஆனால் எல்லா பக்கமும் பணத்தேவை பிடித்து ஆட்டவில்லை.

//இன்றைய சூழலில் ஆட்சியாளர்களை அரசு அதிகாரரிகளின் எஜமானர்களாக, அதாவது ஒரு மேலாண்மை ஆசாமிகளாக மட்டுமே கருத வேண்டியுள்ளது. //

அதுவே அதிகாரமையம் என்று அழைக்கபடுகிறது.
மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

//ஆயிரம் கோடி திட்டத்தை ஆக்குவதோ, அல்லது வேண்டாமென்று அழிக்கும் அதிகாரம் மட்டும் என்னிடம்; ஆனால் என் மாத சம்பளம் பிடித்தம் போக இருபதாயிரம் என்றால் நடைமுறையில் ஊழலில் தான் மிஞ்சும்,//

அவர்களாவது திட்டத்தை பேப்பரில் பார்பதோடு சரி. வங்கியில் பணிபுரிபவர் நான் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பணத்தோடு புழங்குகிறேன், ஆனால் சம்பளம் குறைவு அதனால் இதிலிருந்து எடுத்து கொள்கிறேன் என்று சொன்னால் சரியா.
மக்கள் பணம் எல்லா விதத்திலும் மக்கள் பணமே

மற்றபடி நீங்கள் நடைமுறையை தான் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
அதிகாரம் யார் கைக்கு போனாலும் அவர்களுக்கு திருடும் ஆசை வந்துவிடுகிறது.

rapp said...

me the 10th:):):)

rapp said...

//மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வராது ஒருவித பரிதாப உணர்வே ஏற்படும்.
//

// இன்றைக்கு நாட்டில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் நான் வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்//


ரெண்டும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருக்கே, மேலும் விரிவாக சொல்ல இயலுமா?

வால்பையன் said...

//ரெண்டும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருக்கே, மேலும் விரிவாக சொல்ல இயலுமா? //

கோபத்தை வெளிக்காட்ட முடியும்.

வெறுப்பு வந்தால் துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு போய்கிட்டே இருக்கவேண்டியது தான்

cheena (சீனா) said...

அருமை அருண்
கதை அருமை
சிந்தனை அருமை
அதன் விளவு உன்னைப் பாதித்ததும் அருமை

நல்லதந்தி said...

கதை நன்றாக இருக்கிறது.மற்றபடி இது கதைதான் நிகழ்வினில் நடக்க சாத்தியம் இல்லாதது!.எப்படிங்க! நான் சொன்னது சரியா?

வால்பையன் said...

//கதை நன்றாக இருக்கிறது.மற்றபடி இது கதைதான் நிகழ்வினில் நடக்க சாத்தியம் இல்லாதது!.எப்படிங்க! நான் சொன்னது சரியா? //


நடக்காதுன்னா சொன்னேன்
நடந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன்

g said...

நல்ல கதை. நானும் எழுத்தாளர் பிரசஞ்சனின் புத்தகங்கள் படித்துள்ளேன். முதியவரின் நேர்மையைப் பாராட்டவேண்டும். ஆனால் பிழைக்கத்தெரியாதவர் என ஊர் பேசுமே? எனக்கு ஒரு காங்கிரஸ் தியாகியைத் தெரியும். சாகும்வரை காந்தியைப் போன்றே வாழ்ந்தார். அதாவது அவருக்கான வேலைகளை சாகும் வரையில் அவரே செய்து கொண்டார். செருப்பு தைப்பது, குள்ளா தைப்பது, தானே முடிவெட்டிக்கொள்வது இன்னபிற... அவரும் பென்ஷன் வாங்காமல்தான் இருந்தார் அவருடைய இறுதிநாள்வரையில்... ஆனால் ஒன்று அவருக்கு ஏகப்பட்ட சொத்து இருந்தது. எனக்குக்கூட ஒரு பத்தாயிரம் அன்பளிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன் கொடுத்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்களேன். பதிவைப் படித்துவிட்டு சொந்தமாக எழுதியது. நான் முதலில் என வரவில்லை. லேட்டானாலும் லேட்டஸ்ட். மீண்டும் சந்திப்போம்.

சின்னப் பையன் said...

////கதை நன்றாக இருக்கிறது.மற்றபடி இது கதைதான் நிகழ்வினில் நடக்க சாத்தியம் இல்லாதது!.எப்படிங்க! நான் சொன்னது சரியா? //


நடக்காதுன்னா சொன்னேன்
நடந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன்//

:-))))))))))))))

பரிசல்காரன் said...

//
நடக்காதுன்னா சொன்னேன்
நடந்தா நல்லாயிருக்கும்னு சொன்னேன்////

REPEATTEYYYYYYYYYY

வால்பையன் said...

நன்றி கார்க்கி

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி சிம்பா
புரிதலுக்கு நன்றி

நன்றி மதுரை நண்பன்
உங்கள் பதிவில் எப்படி பின்னூட்டம் இடுவது?
எனக்கு துப்பாக்கியே பெட்டராக தோன்றுகிறது

நன்றி அனுஜன்யா

நன்றி ராப்

நன்றி சீனா ஐயா

நன்றி நல்லதந்தி
ப்ளீச்சிங் பவுடர் எங்கே ஆளைக்கனோம்.

நன்றி ஜிம்ஷா

நன்றி ச்சின்னப்பையன்

நன்றி பரிசல்

Anonymous said...

//ஒரு அபாயம்; நெருக்கடி நிலை என்றால் உயர் இலட்சியம், தியாகம் என்று மானுடமும் வளரும். அமைதியான சூழல் என்றால் மனித இயல்பான சுயநலம் தலைதூக்கும். //

இதுதான் உண்மை அருண்.

கார்கில் போருக்கு நிதி திரட்டும்போது இருந்த ஒற்றுமை அடுத்த சில நாட்களிலேயே மறைந்ததைக் காணலாம்.

மேலாண்மைப் பொன்னுச்சாமி என்பவர் எழுதிய மானுடம் வெல்லும் கதை படியுங்கள் (சிபிகள் என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ளது).


//இன்றைய சூழலில் ஆட்சியாளர்களை அரசு அதிகாரரிகளின் எஜமானர்களாக, அதாவது ஒரு மேலாண்மை ஆசாமிகளாக மட்டுமே கருத வேண்டியுள்ளது. ஒரு ஆயிரம் கோடி திட்டத்தை ஆக்குவதோ, அல்லது வேண்டாமென்று அழிக்கும் அதிகாரம் மட்டும் என்னிடம்; ஆனால் என் மாத சம்பளம் பிடித்தம் போக இருபதாயிரம் என்றால் நடைமுறையில் ஊழலில் தான் மிஞ்சும், இந்த உண்மை எவ்வளவு கசப்பாக இருந்தாலும். //

சரியாப் புடிச்சிருக்கார் பாருங்க பாயிண்ட்ட.

//ஆனால் இத்தகைய கதைகள், நாம் கடைப்பிடிக்கவேண்டிய மையபுள்ளியைக் காட்டி, நாம் எவ்வளவு தொலைவு விலகி வந்துவிட்டோம் என்பதையும் சொல்கிறது.//

உண்மை. சுயபரிசோதனை செய்ய வசதியாக மறந்து/மறுத்து விட்டோம்.

வீணாபோனவன் said...

//பதிவ யாரும் படிக்கிறதில்ல//

சரியான பின்னூட்டம் வுடலைனா இப்படி முடிவெடுப்பதா வால்பையன்????

-வீணாபோனவன்.

ஆ! இதழ்கள் said...

மிக அருமையான கதை. காமராஜரை பற்றி படித்தாலும் சில முரண்பாடுகள் தோன்றும், அப்படி நம்மை ஆக்கிவிட்டார்கள் இன்றைய "அரசியல் வியாபாரிகள்".

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சரி, வால், இப்ப சொல்லுங்க பிரபஞ்சனோட இந்தக் கதை மாஜிக்கல் ரியலிசத்துல வருமா ?

(தப்பா எடுத்துகாதீங்க, சும்மா ஜாலிக்குக் கேட்டேன்)

Anonymous said...

நேற்று ஈரோட்டுல மழை பெயஞ்சதுக்கும் காரணம் மன்மோகன் சிங் அரசாங்கம்தான் காரணமுங்களா?

Anonymous said...

//ஒருநாளில் இருபத்திநான்கு மணி நேரத்தையும் தேசசேவைக்காக அர்ப்பணித்தோம். தேசசேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மனிதனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்காது. ஒரு மனிதன் ஏக காலத்தில் இரண்டு மனைவிகளுடன் இல்லறம் நடத்துவது எவ்வளவு இழிவோ, நீசத்தனமோ, அந்த அளவிலும் இழியது ஒரு அரசியல்வாதி வியாபாரியாக இருப்பது என்று நாங்கள் நினைத்தோம்//


நீங்கள் தலைவர் குடுபத்தை பற்றி சொல்லவில்லையே!

அரசியலே வியபாரமாய் இருக்கையில்
நீங்க வேறு
போங்க சார்
இல்லையென்றால் 1000 கோடிக்கு அதிபதி ஆகமுடியுமா
மகன்களோ( செட் 1,2,3) கோடீஸ்வரன்
மகள்களோ (செட் 1,2,3)கோடீஸ்வரி
மருமகன்களோ
பேரன்களோ



இன உனர்வு அற்றுப் போய் வசைபாடும்
தமிழினத் துரோகிகளே(என்ன பாக்கீறிங்க நீங்களும் நானும் தான்)

பிடி சாபம்

Tech Shankar said...

அரசியல் எப்போதுமே இப்படித்தான்.

முன்னால் போனால் கடிக்கும்,
பின்னால் போனால் உதைக்கும்.

பதிவின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு வருகிறது உங்களுக்கு.
அருமை. நன்றிகள்

Deepan Mahendran said...

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை (பாதித்த என்றும் சொல்லலாம்) 'மேரி என்கிற ஆட்டுக்குட்டி' - படித்தவுடனேயே ஒரு மெல்லிய சோகம் தாக்கிவிடும்...."சிக்கன் பிரியாணியும் சீதேவி படமும்" (தலைப்பு கரக்டுன்னு நெனைக்குறேன்) கதையும் ரொம்ப பிடிச்சது....

வால்பையன் said...

நன்றி வடகரைவேலன்
நன்றி வீணாப்போனவன்
நன்றி ஆ!இதழ்கள்
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி அனானி
நன்றி தமிழ் நெஞ்சம்
நன்றி சிவன்!

Unknown said...

அருண் நீ எழுதியதை நீயே எடுத்துப் படித்துப் பார். காலம் மாறியதை அறிவாய்

Unknown said...

அருண் நீ எழுதியதை நீயே எடுத்துப் படித்துப் பார். காலம் மாறியதை அறிவாய்

Unknown said...

அருண் நீ எழுதியதை நீயே எடுத்துப் படித்துப் பார். காலம் மாறியதை அறிவாய்

!

Blog Widget by LinkWithin