அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பட்டிதொட்டிஎங்கும் பேசப்படும் விசயமாக மாறி விட்டது. பொதுவாக வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் வரா கடன் என்றாலும், நிதி நிறுவனக்களின் வீழ்ச்சிக்கு காரணம் பங்களில் அவர்களின் முதலீடு தான் என்பது தெரிந்த விஷயம். அவர்களின் நட்டத்தில் அமெரிக்கா பங்கெடுத்து கொள்கிறது என்பது தெரிந்து விஷயம் தான். ஆனால் தெரியாத விஷயம் அவர்கள் நட்டப்பட்ட பணம் எங்கே சென்றது.
வியாபாரம் என்பதின் பொதுவான விதி. வாங்குபவர் ஒருத்தர் விற்பவர் ஒருத்தர், ஒருவருக்கு லாபம் என்றால் ஒருவருக்கு நஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே?
அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நிதி நிறுவனக்கள் எத்தனையோ லட்சம் பேர்களை தற்கொலைக்கு தூண்டின என்று தெரியுமா, அதை சொல்வதற்கு முன் பங்கு சந்தைகளை பற்றி சில முன்னுரையும் தேவை. ஏற்கனவே பங்கு சந்தையை பற்றி அறிந்தவர்கள் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டி காட்டலாம்.
பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தமது வளர்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு அவர்களையும் பங்குதாரர்களாக மற்ற பங்குகளை வெளியிடுகிறது, உதாரணமாக ஒரு நிறுவனத்தின் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்து கொள்வோம், அதில் பாதியை பங்குகளாக வெளியிடுகிறார்கள், மீதி ஐந்தாயிரத்தை ஒரு பங்கின் மதிப்பு ஐம்பது வீதம் நூறு பேர் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
அதாவது அவர்கள் பங்கு ஒன்றின் விலை ஐம்பது என்று தீர்மானித்திருப்பார்கள். ஆனால் பங்கு வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் அதனில் சூதாட்டம் ஆரம்பித்து விடுகிறது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டு அவர்கள் அதை வெளியீட்டு விலையை விட அதிக விலைக்கு கேட்பார்கள். சரி இது நம்பிக்கையின் அடிப்படையில் தானே இங்கெ சூதாட்டம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா,
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள், அந்த நிறுவனம் இன்னும் ஆரம்பிக்கவே படவில்லை என்பது தான் உண்மை, அந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிடும் போதே அது 2011-ல் தான் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியே ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் ரிலையன்ஸ் பவர் என்னும் குறியீடு வெறும் சூதாட்டத்திற்காக பயன்பட்டது.
வெளிநாடுகளை சேர்ந்த நிதி நிறுவனக்கள் லாபம் பார்க்க வேறொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி மாயை தோற்றத்தில் அந்த பங்குகளை விலை உயர செய்து பின் உயர்ந்த விலையில் விற்க தொடங்குவார்கள். அதிக விலையில்,வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மொத்த முதலையும் இழந்து நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான். இவைகளுக்கு காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான் என்று தெரிந்தும் அதனை மாற்ற நமது அரசாங்கம் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒரு நிறுவனத்தின் வளச்சியை பொறுத்து அதன் பங்குகளின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். வளரலாம் என்ற மாயை தோற்றத்தில் விலையுயர்ந்த பங்குகள், இன்று அந்த விலைகளை மீண்டும் தொடுமா என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!
பின்னாளில் விலைபொருள்கள்(கமாடிடி) பற்றியும் எழுதுகிறேன்
56 வாங்கிகட்டி கொண்டது:
பங்கு சந்தை நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதுதான்...
//தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!//
இப்படிக்கூறுவது தினசரி வணிகத்திற்கும் future option க்கு வேண்டுமானல் சரியாக இருக்கும்....
பங்கிற்கு சரியல்ல...
அப்படியே insider trading பற்றியும் எழுதுங்கள்.
ஒரு நிறுவனம் 10 முதல் 15 சத வீதம் வளர்கிறது. ஆனால் அவர்களது பங்குகள் 50% மேல் உயர்கிறது. இதெல்லாம் bubbles waiting to be burst :(
ஹர்ஷத் மேத்தா இந்தக் கதையைத்தானே செய்தார்?.
//பங்கு சந்தை நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதுதான்...//
சென்ற பங்கு சந்தை ஏற்றத்தில் நீண்ட கால முதலீட்டிற்கு பணம் போட்டவர்கள் நடுத்தெருவுக்கு வந்த கதை தெரியாதா
//தினசரி வணிகத்திற்கும் future option க்கு வேண்டுமானல் சரியாக இருக்கும்....
பங்கிற்கு சரியல்ல...//
தினசரி வணிகத்தில் அன்றைய நட்டத்தோடு முடிந்து விட்டது, ஆனால் நீண்ட கால முதலீட்டில் முதலை வாயில் போட்ட பணம் போல காத்து கிடக்க வேண்டியது தான்
// நல்லதந்தி said...
ஹர்ஷத் மேத்தா இந்தக் கதையைத்தானே செய்தார்?.//
ஆம், பினாமி பெயரில் பல கம்பெனிகளை ஆரம்பித்து, அதன் பங்குகள் விலையேறிய பின் அதை விற்று விட்டு கம்பி நீட்டினார்
இதில் அரசின் பங்கு என்ன? இந்திய அரசே சூதாட்டத்திற்க்கு துனை போகின்றதா?
பங்கு சந்தை பற்றி இன்னமும் விரிவாக எழுதலாமே....
//இதில் அரசின் பங்கு என்ன? இந்திய அரசே சூதாட்டத்திற்க்கு துனை போகின்றதா? //
அந்நிய முதலீடுகள் வரைமுறை இல்லாமல் இருந்தது, அதில் தீவிரவாதிகளின் பணமும் இருக்கலாம் என்ற குற்றசாட்டு எழுந்த பிறகே, அதை பற்றி யோசிக்கவே ஆரம்பித்தது அரசு
//தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!//
அண்ணே காமெடி பண்ணாதீங்க!!
//
வால்பையன் said...
சென்ற பங்கு சந்தை ஏற்றத்தில் நீண்ட கால முதலீட்டிற்கு பணம் போட்டவர்கள் நடுத்தெருவுக்கு வந்த கதை தெரியாதா
//
ஏன் ஏற்றத்தில் பணம் போட்டார்கள்??
சரி போட்டுட்டாங்க அப்படின்னா பொறுமையா இருக்க வேண்டியதுதானே இல்ல நல்ல கம்பெனியா இருந்தா ஆவரேஜ் செய்ய வேண்டியதுதானே??
//பங்கு சந்தை பற்றி இன்னமும் விரிவாக எழுதலாமே.... //
நான் விலைபொருள்கள் (கமாடிடி) துறையை சார்ந்தவன், பங்கு சந்தையை பற்றி மேலோட்டமாக பார்க்கு போதே இவ்வளவு ஓட்டைகள் தெரிகிறது.
பங்கு சந்தையை விட விலை பொருள்களில் முதலீடு செய்வதே சிறந்தது, அதை விரிவாக எழுதுகிறேன், பங்கு சந்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை
//ஏன் ஏற்றத்தில் பணம் போட்டார்கள்??
சரி போட்டுட்டாங்க அப்படின்னா பொறுமையா இருக்க வேண்டியதுதானே இல்ல நல்ல கம்பெனியா இருந்தா ஆவரேஜ் செய்ய வேண்டியதுதானே?? //
இது தான் கடைசி இறக்கம் என்றோ, இது தான் கடைசி ஏற்றம் என்றோ யாராலும் கணிக்க முடியாது,
1500-ல் வாங்கியவர் மீண்டும் 1200-ல் ஆவரேஜ் செய்தார் மீண்டும் இறங்கியது மீண்டும் 990-ல் ஆவரேஜ் செய்தார் கடைசியாக 700-ல் வந்து நின்றது. அவருடைய மொத்த பணமும் முடிந்தது, இதற்கு மேல் பங்கு வணிகமே வேண்டாம் என்று மூட்டை கட்டி விட்டார்
//
வால்பையன் said...
இது தான் கடைசி இறக்கம் என்றோ, இது தான் கடைசி ஏற்றம் என்றோ யாராலும் கணிக்க முடியாது,
1500-ல் வாங்கியவர் மீண்டும் 1200-ல் ஆவரேஜ் செய்தார் மீண்டும் இறங்கியது மீண்டும் 990-ல் ஆவரேஜ் செய்தார் கடைசியாக 700-ல் வந்து நின்றது. அவருடைய மொத்த பணமும் முடிந்தது, இதற்கு மேல் பங்கு வணிகமே வேண்டாம் என்று மூட்டை கட்டி விட்டார்
//
Investment is not a one time activity it is a continuous process.
ஏழுநூறு ஐநூறாகி முன்னூறாகி ஜீரோவில் நிற்கும் என நினைத்திருப்பார் போல.
:((
நான் பார்த்த ஒரு புரோக்கர் ஆபீஸில், பங்குகளின் விலைகளை ஃபேன்சி நண்பர்களாகவே பார்த்தார்கள். அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடையுமா என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு கிடையாது.
ஆறு மாதத்திற்கு முன் ஒரு முதியவர் ஒரு லட்சம் பங்கில் முதலீடு செய்திருந்தால் நேற்று அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.
நீண்ட கால முதலீடு என்பது பிரித்து முதலீடு செய்வது.
ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.
அதில் மாதம் ஐநூறை முதலீடு செய்யுங்கள். அதன் விலை இறங்கினாலும் அதே ஐநூறை மாதம் முதலீடு செய்யுங்கள். நீண்ட கால முதலீடாக பத்திலிருந்து இருபது வருடங்கள் வரை இதை தொடரலாம். உங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.
ஒரே நேரத்தில் அதிகமாக முதலீடு செய்தால் பங்கு வணிகம் உங்களுக்கு ஹல்வா தான் கொடுக்கும்
//Investment is not a one time activity it is a continuous process.
ஏழுநூறு ஐநூறாகி முன்னூறாகி ஜீரோவில் நிற்கும் என நினைத்திருப்பார் போல. //
ஆன்லைன் வர்த்தகம் ஒரு போதை,
வெறும் நம்பர்களை நம்பி விளையாடும் சித்து விளையாட்டு.
லிஸ்டிங்கிலிருந்தே காணாமல் போன பங்குகளை உங்களுக்கு தெரியாதா,
மனிதனின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு
//
வால்பையன் said...
நான் பார்த்த ஒரு புரோக்கர் ஆபீஸில், பங்குகளின் விலைகளை ஃபேன்சி நண்பர்களாகவே பார்த்தார்கள். அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடையுமா என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு கிடையாது.
//
கட்டிட வேலை செய்யறவன் போய் சாஃப்ட்வேர் கோட் எழுத முடியுமா அதுமாதிரி தான் இது
:))
//
ஆறு மாதத்திற்கு முன் ஒரு முதியவர் ஒரு லட்சம் பங்கில் முதலீடு செய்திருந்தால் நேற்று அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.
//
சர்க்கஸ் பாக்கிற எல்லாரும் சர்க்கஸ் செய்ய முயற்சிக்க கூடாது
:))
//
நீண்ட கால முதலீடு என்பது பிரித்து முதலீடு செய்வது.
ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.
அதில் மாதம் ஐநூறை முதலீடு செய்யுங்கள். அதன் விலை இறங்கினாலும் அதே ஐநூறை மாதம் முதலீடு செய்யுங்கள். நீண்ட கால முதலீடாக பத்திலிருந்து இருபது வருடங்கள் வரை இதை தொடரலாம். உங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.
//
இதையும் நீங்கதான் சொல்லுறீங்க
//தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!//
இதையும் நீங்கதான் சொல்லுறீங்க
முடிஞ்சா இதை ஒரு எட்டு பாருங்க
//
வால்பையன் said...
லிஸ்டிங்கிலிருந்தே காணாமல் போன பங்குகளை உங்களுக்கு தெரியாதா,
//
மன்னார் அண்ட் கம்பெனியின் பங்கை வாங்குவதற்கு பெயர்தான் முதலீடா??????
20
கமாடிடியை விட பங்கு வணிகமே சிறந்தது என்ற மாயையை போக்கி கமாடிடியே சிறந்தது என்று விளக்கவே இந்த பதிவு. (ஏன்னா இது என்னோட டிபார்ட்மென்ட்)
ஆனாலும் ரிஸ்கே வேண்டாம் எனக்கு லாபம் வராவிட்டாலும் போட்ட பணமாவது திரும்பி வந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு அந்த நீண்ட கால முதலீடு.
(பாத்துகோங்க போட்ட பணம் திரும்பி வர இருபது வருடம்)
//
வால்பையன் said...
கமாடிடியை விட பங்கு வணிகமே சிறந்தது என்ற மாயையை போக்கி கமாடிடியே சிறந்தது என்று விளக்கவே இந்த பதிவு. (ஏன்னா இது என்னோட டிபார்ட்மென்ட்)
//
உங்க டிபார்ட்மெண்ட் பத்தி நமக்கு அவ்வளவா ஐடியா லேது
மீ தி எஸ்க்கேப்பு
//உங்க டிபார்ட்மெண்ட் பத்தி நமக்கு அவ்வளவா ஐடியா லேது
மீ தி எஸ்க்கேப்பு //
அப்படியெல்லாம் போக கூடாது.
நான் உங்க டிபார்ட்மென்ட்டை வறுக்கும் பொது நீங்களும் என்னை வறுக்கணும்
இல்லைனா உங்க டிபார்ட்மென்ட்டை தப்பா நினைப்பாங்க
தலைவர் மங்களூர் சிவா வாழ்க...
வாலை நிமிர்த்த முடியாது என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்...
நீங்கள் ஓரளவு முயற்சி செய்து சற்றே பின் வாங்க வைத்துவிட்டீர்கள்...
நன்றி....
நன்றி....
நன்றி....
//கமாடிடியை விட பங்கு வணிகமே சிறந்தது என்ற மாயையை போக்கி கமாடிடியே சிறந்தது என்று விளக்கவே இந்த பதிவு. (ஏன்னா இது என்னோட டிபார்ட்மென்ட்)//
உங்க டிபார்ட்மேண்ட் என்பதால் மட்டுமே சிறந்தது ஆகிவிட முடியாது...
வெறும் 3மாத 6 மாத காண்ட்ராக்ட்தான் பங்குவோ ஆயுள் முழுக்க இருப்பது.. (எப்பவும் டூபாக்குகுர் கம்பெனிகள் கம்பெனிகள் இதில் சேர்க்ககூடாது)
//நீங்கள் ஓரளவு முயற்சி செய்து சற்றே பின் வாங்க வைத்துவிட்டீர்கள்.//
பின் வாங்கியது அவர் நானல்ல
மற்றெந்த வர்த்தகத்தினைப் போலவே திட்டமிட்டு, நேர்த்தியாக, சமயோசிதமாய் உழைத்தால், வேறெந்த வர்த்தகத்தினை விடவும் அதிகம் பொருளீட்டக்கூடிய வாய்ப்புள்ளது பங்கு வணிகம்.
இது எனது அனுபவம்..மட்டுமே.
பங்கு சந்தையே சூதாட்டம் என்று சொல்ல முடியாது. குறைந்த பட்சம் 3 வருடங்கள், சராசரியாக 5 வருடங்கள் என்று நினைத்து முதலீடு செய்வது நல்லது. பங்கு வாங்குவதற்கு பதில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தால், கொஞ்சம் ரிஸ்க் குறையும்.
ஏற்கனவே பலரும் ‘பங்கு சந்தையே சூதாட்டம்' என்று தவறாக நினைக்கும்பொழுது, நீங்களுமா! எனக்கு என்னவோ கமோடிடிதான் இன்னமும் ரிஸ்க்குன்னு தோணுது.
பங்கு அல்லது பரஸ்பர நிதி வாங்குவதை, வீடு வாங்குவதைப் போல யோசித்து முதலீடு செய்து பொறுமை காத்தால் நிச்சயம் நல்ல வருமானம் வரும். வீடு வாங்க பல லட்சங்கள் தேவை, பரஸ்பர நிதி வாங்க ஆயிரம் போதும். ஆனால், ”இன்னிக்கி போட்ட பணத்த நாளைக்கி எடுக்கனும்”னு நெனச்சா வீடு, பங்கு, கம்மோடிடி, பரஸ்பர நிதி எதுவுமே சரி வராது. பாங்க் தான் சரி.
பங்கு சந்தைக்கும் சூதாட்ட கிளப்புக்கும் ஒரு வித்தியாசம் உண்டு தெரியுமா?
அது, பங்கு சந்தையில் பங்கு பெறுபவர்களில் பலர் டை அணிந்திருப்பார்கள்
:-)
வேற ஒண்ணும் இந்த விஷயங்களைப் பத்தி தெரியாதுப்பா!
வால்"ஸ் இந்த பின்னூட்டம் நான் ஒரு முழு நேர பங்கு வணிகன் என்பதால். எனவே மாற்றுக்கருத்துக்கு மன்னிக்கவும்.
முதலீடு என்றுமே சூதாட்டம் ஆகாது. தமது தேவைக்கு மேல் உள்ள பணத்தை தான் முதலீடாக சந்தையில் இடுகின்றனர். இது வரை இனிதுக்கொண்டிருந்த வர்த்தகம் இப்பொழுது சூறாவளியில் சிக்கியுள்ளது என்பது உண்மை. ஆனால் ஒரு வேலை சரியான பங்குகளில் முதலீடு செய்திருந்தால் கண்டிப்பாக அது நம்மை கை விடாது. ஆனால் லாபம் வரும் நாட்கள் அதிகமாகி உள்ளன. இருந்தாலும் வங்கிகள் தரும் வட்டியை காட்டிலும் இது அதிகமானதாகவே இருக்கும்.
முதலீடு என்பதை தாண்டி இப்பொழுது நடைபெறுவது தினவர்த்தகம். சரியான முறையில் தினவர்த்தகம் செய்பவர்கள் ஈட்டும் லாபம் கோடிக்கணக்கில் தொழில் முதலீடு செய்து வரும் லாபத்தை காட்டிலும் அதிகம். அதற்கு நடமாடும் உதாரணம் வாரன் பப்பாட். இத்தகைய தினவர்த்தகம் கண்டிப்பாக ஆபத்தானது தான். ஆனால் கடந்த மாதம் தினவர்த்தகம் செய்தவர்கள் ஒன்றை உணர்ந்திருப்பார். அது லாபம். ஆம் கடந்த ஒரு வருடத்தில் ஆனா மொத்த நஷ்டத்தையும் ஒரே மாதத்தில் சந்தைகள் திருப்பி கொடுத்தன கொள்ளை லாபத்துடன்.
இதை ஒரு தொழிலாக கருதும் என்னை போன்றவர்களுக்கு, பங்குச்சந்தை என்பது சூதாட்டம் என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை.
மேலும் கமாடிட்டி வணிகம் பற்றி தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. விரைவில் அதனை பதிவாக இடவும்.
நன்றி.
பவானி கூடுதுறைக்கு போனாலே ஆத்தோட போயிருவோம்னு நினைக்கிறது எந்த அளவு முட்டாள் தனமோ அந்த அளவு நான் நீங்க சொல்லறத நினைக்கிறேன்.
//அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே?
//
if a bank lend 1,00,000 dollar for a house.
After one or 2 year the borrower can't repay the installment for some reason.
Now the bank take the house and try to sell it in the market. If no body want to buy it even for 10,000 dollar and remain in the market for years who is profited out in this deal where is the money? No one is gained in this deal. Ultimately the bank lost 1 lakh dollars. this is the case
Subbu
முன் குறிப்பு: எனக்கு இ ந்திய பங்கு ச ந்தை பற்றி அதிகம் தெரியாது. எனவே நான் சொல்வது அமெரிக்க, பிரிட்டிஷ் ச ந்தைகளைப் பற்றி!
வால்பையன்,
பங்கு ச ந்தை ஒரு சூதாட்டம் என்ற கருத்து ஒப்புக்கொள்ள கூடியதே. நீங்கள் ஆடாவிட்டாலும், வேறு யாராவது ஆடுவார்கள். ஹர்ஷத் மேதா செய்தது போல்!
அதற்கு முன், பங்கு வாங்குவதன் நோக்கம் என்ன, அவர்களின் நிதி நிலை என்ன என்பது முக்கியம். டே டிரேடிங்கில் இருப்பவர்களுக்கு ( நான் உட்பட) ஒரு பங்கின் உண்மையான மதிப்பு பற்றி எந்த கவலையும் இல்லை. அ ந்த பங்கு பத்து வருடத்தில் லாபமா, நஷ்டமா என்று யாருக்கு தேவை? அடுத்த பத்து நிமிடங்கள் முக்கியம், அவ்வளவே.
நீண்ட கால முதலீடாக செய்பவர்கள், அதிக பணத்தை முதலீடு செய்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக செய்கிறார்கள். முக்கிய காரணம், 10 வருடம் கழித்து, வங்கி வட்டியை விட லாபமாக இருக்கலாம் என்பது தான்.
மாட்டிக்கொள்பவர்கள், மிட் டெர்ம் எனும் நடு நிலையில் செய்பவர்கள். இவர்கள் ஒரு மாதமோ இரண்டு மாதமோ பார்ப்பார்கள். ஒன்றும் ஆகாவிட்டால் அப்புறம் புலம்பல் தான்... உண்மையில் இவர்கள் செய்வது தான் சூதாட்டம்!
கமாடிட்டி ஒரு விதத்தில் சேஃப் பெட். ஆனால், அதுவும் உங்களின் நோக்கத்தை பொறுத்ததே. அதிகமாக டிரேட் ஆகும் காப்பர், ஸ்வீட் க்ரூட் போன்றவை ஒரே நாளில் அதிக மாற்றத்துக்கு உள்ளாகும். குறிப்பாக க்ரூடும், கோல்டும் அரசியல், ஃபெட் ரிசர்வ் அறிக்கைகள் பொறுத்து அதிக அளவு மாறுகிறது.
இதைவிட வேகமான ச ந்தை FX. அது இன்னும் சூப்பர் கேம். வெளையாடி பாருங்க!
ஓவர் நைட்டில் எந்த பொசிஷனையும் வைக்காமல் இருப்பது சேஃப் என்பது எனது கருத்து. ஆனால், அது அவரவர் டிரேடிங்க் ஸ்டைல், மற்றும் ரிஸ்க் எடுக்கும் மன நிலை பொறுத்தது. சிலருக்கு ரிஸ்க் எடுக்கிறதுன்னா ரஸ்க் சாப்ட்றது மாதிரி. எல்லாருக்கும் அப்பிடி இல்லியே!
பங்கு சந்தை ஒரு நவீனகால சூதாட்ட கலமாக மாறிவிட்டது.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் பங்கு சந்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகே முதலீடு செய்யவேண்டும், மேலும் முதலீடு செய்யும் நிறுவனத்தின் நம்பக தன்மையை பற்றியும் (goodwill) தெரிந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு நாமே நாமம் போட்டுக்கொள்ள வேண்டியது தான்.
பங்கு சந்தை ஒரு நவீனகால சூதாட்ட கலமாக மாறிவிட்டது.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் பங்கு சந்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகே முதலீடு செய்யவேண்டும், மேலும் முதலீடு செய்யும் நிறுவனத்தின் நம்பக தன்மையை பற்றியும் (goodwill) தெரிந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு நாமே நாமம் போட்டுக்கொள்ள வேண்டியது தான்.
//தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!//
வால் பதிவில் இப்படி சொன்ன உங்களை
//
நீண்ட கால முதலீடு என்பது பிரித்து முதலீடு செய்வது.
ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்.
அதில் மாதம் ஐநூறை முதலீடு செய்யுங்கள். அதன் விலை இறங்கினாலும் அதே ஐநூறை மாதம் முதலீடு செய்யுங்கள். நீண்ட கால முதலீடாக பத்திலிருந்து இருபது வருடங்கள் வரை இதை தொடரலாம். உங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் வட்டியை விட அதிகமாக கிடைக்கும்.
//
பின்னூட்டத்தில் இப்படி சொல்லவைத்திருக்கிறேன் அதே வெற்றிதான்.
//
கூடுதுறை said...
வாலை நிமிர்த்த முடியாது என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்...
நீங்கள் ஓரளவு முயற்சி செய்து சற்றே பின் வாங்க வைத்துவிட்டீர்கள்...
//
//
வால்பையன் said...
பின் வாங்கியது அவர் நானல்ல
//
இது என்ன புதுக்கதை??
கமாடிடி பெஸ்ட்டா ஷேர்ஸ் பெஸ்ட்டா அப்படிங்கிறது பதிவு இல்லை பங்குச்சந்தை - சூதாட்டம்னு சொல்லியிருக்கீங்க பதிவுல அதுதான் மேட்டர் அதுக்கு பதில் சொல்லுங்க!!
//இது என்ன புதுக்கதை??
கமாடிடி பெஸ்ட்டா ஷேர்ஸ் பெஸ்ட்டா அப்படிங்கிறது பதிவு இல்லை பங்குச்சந்தை - சூதாட்டம்னு சொல்லியிருக்கீங்க பதிவுல அதுதான் மேட்டர் அதுக்கு பதில் சொல்லுங்க!!//
ம்ம்... இப்ப பதில் சொல்லுங்க வால்... பின் வாங்கியது வாங்கியதுதான்... சும்மா சப்பைக்கட்டு கட்டவேண்டாம்...
கூடுதுறை மற்றும் சிவா,
விடுங்க அவரை, போகட்டும்...
அவசர கோலத்தில் எழுதி விட்டார்..
கமாடிட்டி எங்கிருந்து வந்ததாம்.. இது தவறு இது தான் சரி என்று எந்த துறை சார்ந்த வல்லுனரும் சொல்ல மாட்டார்கள்... இவர் இப்படி எழுதியதில் இருந்தே இவரின் கமாடிடி அறிவும் சந்தேகத்திற்கு உறியதாகிறது.
இந்த லட்சணத்தில் பங்கு முதலீட்டை
கமாடிடி யுடன் ஒப்பிடுகிறார்.
கமாடிடியில் டெலிவரி எடுக்க சொல்லுங்கள்.. டெலிவரி எடுக்காமல் / கொடுக்காமல் செய்யும் வியாபாரத்தை எப்படி ஒரு முத்லீட்டுடன் ஒப்பிட முடியும்..
எந்த தொழிலும் சரியான அனுகுமுறை / பயிற்சி / ஆலோசனை இல்லாமல் / பேராசையுடன் செய்தால் சூதாட்டமே..
//ரிலையன்ஸ் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள்,//
தம்பி ஆகயத்துக்கு எப்ப சென்றது என்ற விவரம் சொல்ல முடியுமா?
கச்சா எண்னை $142 என்ற விலையில் இருந்து 94$ என்று வந்துள்ளதே.. இங்கு யாரும் நஷ்டம் அடைய வில்லையா?
//பங்கு சந்தையை விட விலை பொருள்களில் முதலீடு செய்வதே சிறந்தது, அதை விரிவாக எழுதுகிறேன், பங்கு சந்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை//
விலை பொருடகளில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது அதில் வணிகம் செய்வது சிறந்ததா?
விலை பொருட்களில் எவனும் முதலீடு செய்ய வில்லை, தினவர்த்தகம் மற்றும் முன்பேர வர்த்தகம் தான் செய்கிறான்.. அதைதான் சூதாட்டம் என்றும் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ளது, ஆனால் அதையும் வியாபார முறை என்று தான் நானும் ஏற்று கொள்கிறேன்.. சூதாட்டம் என்று எந்த பங்கு வணிகனும் சொல்லவில்லை..
//நான் பார்த்த ஒரு புரோக்கர் ஆபீஸில், பங்குகளின் விலைகளை ஃபேன்சி நண்பர்களாகவே பார்த்தார்கள். அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடையுமா என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு கிடையாது//
என்ன பைத்தியகாரத்தனமான் உலறல்... இவர் கமாடிடி டிபார்ட்மெண்டாம் காசு கொடுத்தா டிப்ஸ் கொடுப்பாராம்.. ஆனால் யாரோ ஒரு புரோக்கர் அலுவலகத்தில் நடந்ததை அடுத்த தொழிலுக்கு உதாரணம் சொல்வாராம்.. என்னய்யா நியாயம்.. இப்படி செய்யாதீர்கள் ஒரு ஆலோசகரிடம் கேட்டு செய்யுங்கள் என்று செல்லி இருந்தால் பாரட்டியிருக்கலாம்..
காமடிடியில் 1 கிலோ தங்கத்திற்கு மார்ஜின் தொகை 1.25 முதல் 1.50 லட்சம் தேவை படும், அதில் ஒருவர் எதுவும் தெரியாமல் வாங்கியோ / விற்றோ விட்டார் (தொழில் முறை ஆலோகரின் சப்போர்ட் இல்லாமல்) அவரின் நிலைக்கு எதிராக கிராம் ஒன்றுக்கு ஒரு 25/- ரூபாய் இறங்கினாலோ ஏறினாலோ ஏற்படகூடிய நஷ்டம் 25000/- தங்கத்தை பொறுத்த அளவில் 25/- முதல் 50/- ஏற்ற இறக்கம் என்பது சர்வ சாதரணம். அப்படி இருக்கை யில் பங்கு முதலீட்டை விட கமாடிடி
சிறந்தது என்று ஏன் எதற்காக சொல்ல வருகிறார்.
காமடிடி முத்லீடு அல்ல, அது முதலீடு என்றால் எத்தனை பேரல் கச்சா எண்னை, எத்தனை கிலோ தங்கம், வெள்ளி, காப்பர், லீட் இதுவரை வாங்கியுள்ளார், கையிருப்பு
எவ்வளவு என்ற விவரம் சொல்லட்டும். தம்பி யாரையும் இது தான் சிறந்தது இதை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது சொல்லவும் கூடாது. எந்த தொழிலும் யாருக்கும் கட்டாயம் கிடையாது, அவரவர் விருப்பம் அது. அதே போல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிய கூடாது. இதில் அடுத்தவர்கள் பதிவை பற்றி கிண்டல் வேறு கேட்டா சும்மான்னு சமாளிப்பு. நான் பங்கு வணிகமும் செய்கிறேன். கமாடிடி யும் செய்கிறேன். இரண்டிலும் பல சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன.
@சித்தன்
கலக்குறீங்க போங்க!!
நானே குரூட் ஆயில் $140ல இருந்து $90க்கு வந்தது பத்தி கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்.
//if a bank lend 1,00,000 dollar for a house.
After one or 2 year the borrower can't repay the installment for some reason.
Now the bank take the house and try to sell it in the market. If no body want to buy it even for 10,000 dollar and remain in the market for years who is profited out in this deal where is the money? No one is gained in this deal. Ultimately the bank lost 1 lakh dollars. this is the case//
10,000 டாலர் வீட்டி காட்டி 1,00,000 டாலர் கடன் வாங்கியவனுக்கு லாபம்
அந்த கடன் வாங்கி கொடுக்க கமிஷன் வாங்கியவனுக்கு லாபம்
தினமும் 100 டாலர் வருமானம் வரும் தொழிலில் தினமும் 10000 டாலர் செலவழித்து ஆடம்பரமாக இருந்தவனுக்கு லாபம்
Dr.Bruno,
Sorry for typing in English. The value of the house (inflated by all) is more at the time of purchase but he can't gain any thing (only living there for 1 or 2 year). The guy who purchased the house also lost (his down payment etc). Who profited in this deal??? is questionable. This is like share market who increase the prize of a company share with out scruitnizing its balance sheet... A mere speculation. So here there is an imaginary profit only. NO true profit.
subu
//அப்படியெல்லாம் போக கூடாது.
நான் உங்க டிபார்ட்மென்ட்டை வறுக்கும் பொது நீங்களும் என்னை வறுக்கணும்//
நான் ஆரம்பத்திலேயே இதை சொல்லிவிட்டதால், என்னை வருத்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
//
Anonymous said...
Dr.Bruno,
Sorry for typing in English. The value of the house (inflated by all) is more at the time of purchase but he can't gain any thing (only living there for 1 or 2 year). The guy who purchased the house also lost (his down payment etc). Who profited in this deal??? is questionable. This is like share market who increase the prize of a company share with out scruitnizing its balance sheet... A mere speculation. So here there is an imaginary profit only. NO true profit.
subu
//
அந்த வீட்டை விற்றவனுக்கு / பில்டர்க்கு லாபம் இல்லையா????
பேங்க்கில் வீட்டுக்கடன் கொடுக்கும்போது யாரிடம் வாங்குகிறோமோ அவருக்குதானே பணம் கொடுக்கிறார்கள்??
ஒருவேளை அமெரிக்காவில் அப்படி இல்லையா??
நன்றி யட்சன்
நன்றி ராமநாதன்.
திட்டமிடாமல் செய்யப்படும் முதலீடுகள் சூதாட்ட கணக்கிலேயே சேர்க்கப்படும்
வருகைக்கு நன்றி மேக்சிமம் இந்தியா
நன்றி பரிசல்
நன்றி சிம்பா!
மாற்று கருத்துகளை நான் வரவேற்கிறேன்.
இங்கே முழுமையாக கற்றவன் எவனுமில்லை.
எதிரில் நிற்கையில் என் வலம் உங்களுக்கு இடமாக தான் இருக்கும்.
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது
//மேலும் கமாடிட்டி வணிகம் பற்றி தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. விரைவில் அதனை பதிவாக இடவும்.//
கண்டிப்பாக இடுகிறேன்
// balakee said...
பவானி கூடுதுறைக்கு போனாலே ஆத்தோட போயிருவோம்னு நினைக்கிறது எந்த அளவு முட்டாள் தனமோ அந்த அளவு நான் நீங்க சொல்லறத நினைக்கிறேன்.//
நல்ல உவமை தான், உங்களுக்கு மார்கெட் பற்றி தெரியும் அதனால் சொல்கிறீர்கள். தெரியாமல் காலை விடுபவர்கள் கதி என்னாவது. இன்னைக்கு கூட அதுதான் நடந்தது
விரிவான கருத்துகளுக்கு நன்றி சித்தன்
அமெரிக்காவின் பங்கு சந்தை சூதாட்டத்தினால் தான் நமது பங்குசந்தையும் சரிந்தது என்று சொல்லவந்தேன். பங்கு சந்தையை சரியாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
எந்த தொழிலிலும் லாபம் மட்டுமே வரும் என்று சொல்லமுடியாது.
//கமாடிடியில் டெலிவரி எடுக்க சொல்லுங்கள்.. டெலிவரி எடுக்காமல் / கொடுக்காமல் செய்யும் வியாபாரத்தை எப்படி ஒரு முத்லீட்டுடன் ஒப்பிட முடியும்..//
காமாடிடியில் டெலிவிரி உண்டு. காண்ட்ராக்ட் முடியும் போது தேவையென்றால் டெலிவிரி எடுத்து கொள்ளலாம், அச்சமயத்தில் மீதி பணத்தை கட்டவேண்டும்
//எந்த தொழிலும் சரியான அனுகுமுறை / பயிற்சி / ஆலோசனை இல்லாமல் / பேராசையுடன் செய்தால் சூதாட்டமே..//
சரியான சொல், பயிற்சி கூட பிற்ப்பாடு கிடைக்கலாம், ஆனால் பேராசையே பேரு நஷ்டத்திற்கு காரணம்
//சித்தன் said...
//ரிலையன்ஸ் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள்,//
தம்பி ஆகயத்துக்கு எப்ப சென்றது என்ற விவரம் சொல்ல முடியுமா?//
இதோ லிங்க் ஒரு வருட உயர்வாக 565.65 வரை மேலே சென்று விட்டு பின் அதல பாதாளத்தில்(147.50) வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது
//சித்தன் said...
கச்சா எண்னை $142 என்ற விலையில் இருந்து 94$ என்று வந்துள்ளதே.. இங்கு யாரும் நஷ்டம் அடைய வில்லையா?//
கச்சா எண்ணெய் சூதாட்டத்தின் மூலக்காரணம் என்பதை ஒத்து கொள்கிறேன். அதை டெலிவிரியும் எடுக்க முடியாது. கச்சா எண்ணையை கமாடிடியில் இருந்து எடுத்தாலும் எனக்கு சந்தோசமே
//சூதாட்டம் என்று எந்த பங்கு வணிகனும் சொல்லவில்லை..//
தெளிவான அறிவு இல்லாமல் செய்யும் கமாடிடி வணிகம் கூட சூதாட்டம் தான்.
//இப்படி செய்யாதீர்கள் ஒரு ஆலோசகரிடம் கேட்டு செய்யுங்கள் என்று செல்லி இருந்தால் பாரட்டியிருக்கலாம்..//
அது தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே, பாராட்டுகளை நீங்கள் பெற்று செல்லுங்கள்
//தங்கத்தை பொறுத்த அளவில் 25/- முதல் 50/- ஏற்ற இறக்கம் என்பது சர்வ சாதரணம். அப்படி இருக்கை யில் பங்கு முதலீட்டை விட கமாடிடி
சிறந்தது என்று ஏன் எதற்காக சொல்ல வருகிறார். //
உண்மை தான் நான் நமது வலையுலக நண்பர்களுக்கு கூட பத்தாயிரத்துக்கு மேல் முதலீட்டு செய்யவேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறேன்.
சிறிய அளவு முதலீட்டு நீண்ட நாட்கள் வணிகத்தில் இருக்க செய்யும் முயற்சி.
கமாடிடி விலை இறங்கினாலும் மீண்டும் ஏறும் என நம்பலாம், ஆனால் பங்குகளில் அந்த நம்பிக்கை சுலபமாக வருவதில்லை.
//எத்தனை பேரல் கச்சா எண்னை, எத்தனை கிலோ தங்கம், வெள்ளி, காப்பர், லீட் இதுவரை வாங்கியுள்ளார், கையிருப்பு எவ்வளவு என்ற விவரம் சொல்லட்டும். //
கமாடிடியில் டெலிவரி எடுக்கலாம். கோடு கொன்னியா என்று புதிதாக ஒன்று வந்திருக்கிறது, பாருங்கள் நீங்கள் கூட டெலிவரி எடுக்கமுடியும்
//தம்பி யாரையும் இது தான் சிறந்தது இதை செய்யுங்கள் என்று சொல்ல முடியாது சொல்லவும் கூடாது.//
சொல்லலாம், செய்யசொல்லி கட்டாயப் படுத்தமுடியாது
//நான் பங்கு வணிகமும் செய்கிறேன். கமாடிடி யும் செய்கிறேன். இரண்டிலும் பல சாதகங்களும் பாதகங்களும் இருக்கின்றன.//
நானும் அப்படி தான் செய்து வருகிறேன்
//மங்களூர் சிவா said...
@சித்தன்
கலக்குறீங்க போங்க!!
நானே குரூட் ஆயில் $140ல இருந்து $90க்கு வந்தது பத்தி கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்.//
கச்சா எண்ணெய் சூதாட்டத்தின் பிறப்பிடம்
நன்றி டாக்டர் புருனோ!
நீங்கள் சொல்வது சரிதான் ஆடம்பரமே அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணம்
மிகவும் கவனமாக பங்குகளை ஆராய்வது மிகவும் முக்கியம். சும்மா பத்திரிக்கைகளை பார்த்துவிட்டு பங்குகளை வாங்கிவிட்டு அய்யோ போச்சே என புலம்புவதில் no use. ஓடி ஜெயிக்கிற குதிரையா பார்த்து பணம் கட்றது நம்ம சாமார்த்தியம்.
பங்கு சந்தையை பொறுத்தவரை நிலையானவைகள் என்பது மிக சிலவையே, அவைகளை தேர்ந்தெடுப்பது சுலபம் தான், ஆனாலும் முதலீடு செய்யும் பொழுது அதை பிரித்து முதலீடு செய்வதே நலம். இந்த இடம் முதலீடு செய்ய சரியான இடம் என்று நான் நினைக்கிறேன். பங்கு சந்தையில் இறங்க நினைப்பவர்கள் இப்பொழுது இறங்கலாம்,
உங்கள் முதலீட்டை பிரித்து முதலீடு செய்யுங்கள்
I have a doubt. I have invested in a share. Somebody has commented about that share like "Insiders are playing with that share and thus SEBI will block the share soon". I want to know,
1. What is mean by Blocking?
2. If SEBI blocks a share where I have invested 2 Lakhs, What will happen to my money?
3. Will I get my money back? Who will give?
Post a Comment