கடவுளும், டெர்மிநேட்டரும்
மதுரையில் வாழ்ந்தவர்களுக்கு ஆங்கில திரைப்படம் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அதிக படங்கள் திரையிட திரையரங்குகள் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கவுண்டரில் நிற்கும் பொழுது சக ரசிகனின் ஞானம் நம்மை ஆச்சரிய படுத்தும், சில அதிர்ச்சியை தரும், சிலவைகள் கோபத்தை வரவழைக்கும்.
நமது மக்கள் திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்பது உண்மையே, சில வருடங்களாக திரைப்பட அனைத்து துறை கலைஞர்களையும் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது, நடிகர்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலகம், இன்று அந்த இயக்குனர் படமென்றால் தவறாமல் பார்ப்பேன் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இது சினிமா பற்றிய பதிவு தான். ஹாலிவுட்டில் ஆரம்ப நாட்களில் நாடக பாணி படங்களே வெளிவந்தன, ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ஃபிக்சன் தொற்று வியாதியை போல் எல்லோருக்கும் பத்தியது. ஆனாலும் நிலைத்தது சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஜேம்ஸ் கேமரூன், இவரை தெரியாதவர்களுக்கும் இவரை அடையாளம் காட்ட ஒரே படம் போதும், அது டைட்டானிக்.
ஸ்பீல்பெர்க் ஏலியன்கள்(ஈ.டி, க்ளோஸ் என்கவுண்டர்) படங்களில் அவைகளை நல்ல விதமாக காட்டி அவைகளின் மேல் ஒரு மரியாதையை காட்டியிருந்தாலும். கேமரூன் தனது ஏலியன் படத்தில் அவைகளை கொடுரமாக காட்டி முரட்டியிருப்பார். அவருக்கு முதல் படம் இது இல்லை என்றாலும் ஏலியன்(ALIEN) தான் அவருக்கு பெயர் பெற்று தந்த படம். அதில் நடித்த சிக்யூரணி வீவரும் அந்த படத்தின் மூலமே புகழ் பெற்றார்.
மேலுள்ளவைகள் அவரைப் பற்றிய அறிமுகம் மட்டுமே. இந்த பதிவு டெர்மினேட்டர் என்ற படத்தை பற்றி, அதன் முதல் பாகத்தை வி்ட இரண்டாம் பாகமே பரபரப்பாக பேசப் பட்டது. காரணம் அதிலிருந்த கிராபிக்ஸ் காட்சிகளும் சிறு வயது ஜான் கானராக நடித்த சிறுவனும் தான். முதல் பாகம் , இரண்டாம் பாகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் திரையிடப்பட்டது. தொடர்ச்சி விடப்படக்கூடாது என்ற எண்ணத்தில் வெளியிட்டாலும், அவர்கள் சொன்ன காரணம் படத்தில் அதி பயங்கர வன்முறை காட்சிகள் என்று. தன் கண்ணை தானே அர்னால்டு புடுங்கம் காட்சியை தவிர வேறொன்றும் அதில் பெரிதாக வன்முறை இல்லை.
படத்தின் கதை, இன்னும் சில வருடங்கள் கழித்து பூமி முழுவதும் இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் வரப்போகிறது. அப்போது அவர்களின் ஒரே எதிரி மனிதர்கள் மட்டுமே.
அப்போதும் அந்த இயந்திரங்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது நாயகன் ஜான் கானர். மனிதர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமையேற்று இரக்கமற்ற இயந்திரங்களுக்கு எதிராக போர் நடத்தி கொண்டிருப்பான். சரி இது கதை தானே இங்கே கடவுள் எங்கிருந்து வருகிறான் என்று கேட்கிறீர்களா, அது பற்றிய உரையாடலை கீழே பாருங்கள்
நண்பன்: ஒரு குழுவுக்கு தலைவனாக இருப்பதால் அவனை கடவுள் என்கிறாயா?
நான்:கடவுள் தோன்றியது அப்படி தான் என்றாலும் நான் அதை சொல்லவில்லை
நண்பன்:வேறு எப்படி?
நான்:பைபிள் படித்திருக்கிறாயா
நண்பன்:ஆம்
நான்:அதில் இறைதூதராக வரும் இயேசுவுக்கு தந்தை இல்லை தானே.
நண்பன்:ஆம்
நான்:அதனால் தான் அவரையும் கடவுளாக கிறிஸ்துவ மதம் பார்க்கிறது இல்லையா
நண்பன்:ஆம்
நான்:இந்த கதையிலும் நாயகனுக்கு தந்தை இல்லை, அப்படியானால் அவனும் கடவுள் தானே
நண்பன்:தந்தை இல்லையா? என்ன கதை விடுகிறாய்
நான்:கதையே அப்படி தான். கேள்
ஜான் கானரை அழிக்கமுடியாமல் திணறும் இயந்திரங்கள், அவன் பிறப்பதற்கு முன்னாள் சென்று அவனது அம்மாவை அழித்துவிட்டால் அவன் பிறக்க மாட்டான் என்று அவனை அளிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது, (அந்த பாத்திரத்தில் தான் அர்னால்டு நடித்திருப்பார்) இதை தெரிந்து கொண்ட ஜான் கானர் தானும் அவ்வழியே முற்காலத்திற்கு சென்று தன் தாயை காப்பாற்றுகிறார். முன்னரே குறிப்பிட்ட படி அப்போது அவர் பிறக்கவே இல்லை. அவருடைய அம்மாவுக்கும் திருமணம் ஆகவில்லை. கதையின் ஒரு கட்டத்தில் தான் எப்படியும் இறப்பது உறுதி என்று தெரிந்ததும் தன் அம்மாவுடனேயே கூடுகிறார். இறுதியில் அந்த இயந்திரத்தை அழித்து தானும் இறக்கிறார்.
நண்பன்:இதில் கடவுள் எங்கே
நான்:மடையா! ஜான் கானர் கூடியதால் அவர் அம்மாவுக்கு உருவாகும் சிசு தான் ஜான் கானர்.
நண்பன்;அவர் தான் இறந்து விடுகிறார்
நான்:பத்து மாதம் கழித்து மீண்டும் தன் தாயின் மூலமாக பிறக்கிராரே
நண்பன்:அப்படியானால்
நான்:ஜான்கானர் ஒரு சுயம்பு, தன்னை தானே உருவாக்கி கொண்டவர், அப்படியானால் கடவுள் தானே
டிஸ்கி:இந்த பதிவு கிறிஸ்தவர்களை புண்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டது அல்ல
டிஸ்கி:கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான்
டிஸ்கி:வழக்கம் போல் நான் அவனில்லை
Subscribe to:
Post Comments (Atom)
70 வாங்கிகட்டி கொண்டது:
முதலில் இருக்கும் திரைப்படம் விமர்சனம் எல்லாம் சரி...
மற்றபடி ஏதும் வம்பை பதிவிட்டு வாங்கிக்கொள்ளாமல் இருந்தால் சரி...
i think you add more info about it.
i think you add more info about it.
//கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான்//
பகுத்தறிவாளன் என்று தன்னை கூறிக்கொள்பவன் இந்து கடவுள்களை மட்டும் மறுக்கிறான் !
sure, why not!
very nice! hahahahaha
wow, very special, i like it.
what happened to the other one?
லூசாடா நீ ..திருந்தவே மாட்டியா....
//வால் பொண்ணு said...
லூசாடா நீ ..திருந்தவே மாட்டியா....//
எனக்கு கூட ஒரு ஜோடியா
என்னது.... வால்பொண்ணு....
ஒரு வால் தொந்தரவு தாங்க முடியல .... பொண்ணு வேறயா???
122.164.145.124
117.193.37.67
இந்த ரெண்டு அட்ரஸ்ல எதோ ஒண்ணு தான் வால் பொண்ணு.
நம்ம ஜோடிய நாம கண்டுபுடிக்காம வேற யாரு கண்டு புடிப்பா
//நம்ம ஜோடிய நாம கண்டுபுடிக்காம வேற யாரு கண்டு புடிப்பா//
இது இன்னும் ரொம்ப சூப்பர்.....
கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு உண்டு....
//இதை தெரிந்து கொண்ட ஜான் கானர் தானும் அவ்வழியே முற்காலத்திற்கு சென்று தன் தாயை காப்பாற்றுகிறார்//
ரொம்ப ரொம்ப தவறான தகவல் வால்.
எதிர்காலத்தில் இருந்து வருபவர் ஜான் கான்னர் அல்ல. அவரது நண்பர். படம் முழுதும் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் ஜான் கான்னர் பற்றி பேசிக் கொள்வது புரியும்.
ஜான் கான்னரின் தந்தையாக (நண்பனாக) வரும் கேரக்டர் பெயர் Kyle Reese.
http://en.wikipedia.org/wiki/The_Terminator
பட விமர்சனம் நல்லா இருக்கு! ஆனா அடுத்த வந்த டாப்பிக்..... பயமுறுத்தாதீங்கப்பா
நீங்கள் அளித்த சுட்டியில் கீழே cast என்று ஒன்று இருக்கிறது அதில் ஜான் கானர் என்ற கதாபாத்திரத்தையே காணோம் பாருங்கள், ஜான் கானர் தான் தன்னை இந்த பெயரில் அறிமுக படுத்தி கொள்கிறார். படத்தில் ஒரு பிளாஸ்பேக் காட்சியில் தன் அம்மாவின் புகைபடத்தை பார்த்து கொண்டிருப்பார் அப்போது அங்கு வரும் ஒரு டெர்மினேட்டர் அனைவரையும் சுடும், அந்த சமயத்தில் அந்த புகைபடம் எரிவதாக காட்டுவார்கள்
எப்படி இப்படி, உக்காந்து யோசிப்பீங்களா இல்ல நின்னுட்டா.
பதிவுல மூனுல இரண்டு பங்கு விமர்சனம். சரி மேட்டர் எங்க வருதுன்னு தேடுனா கெடச்சிருச்சு.
//நண்பன்: ஒரு குழுவுக்கு தலைவனாக இருப்பதால் அவனை கடவுள் என்கிறாயா?
நான்:கடவுள் தோன்றியது அப்படி தான் என்றாலும் நான் அதை சொல்லவில்லை //
ஆனால் நான் தான் இந்த பதிலை அடித்தேன்.:-)))
//கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான் //
மனசாட்சியே கடவுளா நெனச்சா இத்தனை பிரச்சனை இல்ல பாருங்க.
ஒரு வேலை இன்செஸ்ட் என்ற வார்த்தை வந்துவிடும் என்று பிற்பாடு தனது நண்பனை அனுப்பியது போல் காட்டியிருக்கலாம். நான் பார்த்த போது நாயகன் யாரையும் அனுப்புவது போல் இல்லை.
அதில் போடபட்டுல கதை சுருக்கத்தில் ஜான் அந்த புகைபடத்தை ரீசின் கையில் கொடுப்பார் என்று உள்ளது, அப்படி ஒரு காட்சியை நான் பார்க்கவே இல்லை.
அதனால் நான் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.
அப்படியே இருந்தாலும் அந்த கதையில் ஜான் வந்து தன் தாயை காப்பாற்ற எண்ணியிருந்தால் என்று மாற்றி யோசித்து பாருங்கள்
me the 20th
//கவுண்டரில் நிற்கும் பொழுது சக ரசிகனின் ஞானம் நம்மை ஆச்சரிய படுத்தும், சில அதிர்ச்சியை தரும், சிலவைகள் கோபத்தை வரவழைக்கும்//
அப்போ நீங்க கதகளி ஆடுராமாதிரி போஸ்ல கற்பனை பண்ணிக்கறேன்
அய்யோ.....அய்யோ..... நல்லவேளை ஜான் கேமரூன் தமிழ் பதிவெல்லாம் படிக்க மாட்டார். தப்பிச்சிட்டார்.
வெண்பூ சொன்னது கரெக்ட். கொஞ்சம் விக்கிபீடியாவில் போய் கதையை பத்தி படிங்க.
கைல் ரீஸ்ஸி-யை அனுப்பறது ஜான் கானர். அவர்தான் சாரா கான்னரோட கனவன்.
//Mexican boy takes a picture of her, the same picture John will give to Reese in the futurஎ.//
நான் இந்த காட்சியை பார்த்திருக்கிறேன். மேலும் எதிர்காலத்தில் காட்டப்படும் ஜான் கான்னரும், நிகழ்கால ரீஸிம் வேறு வேறு ஆட்கள். எப்படி நீங்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்று தெரியவில்லை.
//
கதையின் ஒரு கட்டத்தில் தான் எப்படியும் இறப்பது உறுதி என்று தெரிந்ததும் தன் அம்மாவுடனேயே கூடுகிறார்
//
//
அப்படியே இருந்தாலும் அந்த கதையில் ஜான் வந்து தன் தாயை காப்பாற்ற எண்ணியிருந்தால் என்று மாற்றி யோசித்து பாருங்கள்
//
தியேட்டரில் ஆப்பரேட்டர் ஒரு காட்சியை கட் செய்ததால் இப்படி ஒரு தப்பான அர்த்தமா? :)))
யோசிச்சி பாக்கவே நாராசமா இருக்கு வால்...:(
//இது சினிமா பற்றிய பதிவு தான்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................மூணாவது பத்தியிலையா இத எழுதறது?
me the 25th
//யோசிச்சி பாக்கவே நாராசமா இருக்கு வால்...:( //
அப்படி நினைப்பார்கள் என்று கூட மாத்தியிருக்கலாம்
//வயது ஜான் கானராக நடித்த சிறுவனும் தான். முதல் பாகம் , இரண்டாம் பாகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் திரையிடப்பட்டது//
இதுவும் தப்பு வால்.. 1984லயே டெர்மினேட்டர் வந்து விட்டது. 7 வருசம் கழிச்சிதான் இரண்டாவது பார்ட் வந்தது. நான் உட்பட எல்லோருமே ரெண்டாவது பாகம் பாத்தப்புறம்தான் தேடிப்பிடித்து முதல் பாகம் பார்த்தோம். இந்தியாவில் நீங்கள் சொன்னதுபோல் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை.
//யோசிச்சி பாக்கவே நாராசமா இருக்கு வால்...:( //
கொச்சை படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை
நான் புரிந்து கொண்டது அப்படி தான்
நான் ரொம்ப ரசித்த சீரிஸ் இது வால். அதனால்தான் அதுகுறித்த தவறான தகவல்கள் வந்ததால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. :)))
//இந்தியாவில் நீங்கள் சொன்னதுபோல் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. //
இரண்டாவது பாகத்துக்கு சில மாதங்கள் முன் தான் ரிலீஸ் செய்தார்கள்
மதுரை தங்க ரீகலில் பார்த்தேன்
//அதுகுறித்த தவறான தகவல்கள் வந்ததால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. :))) //
சுட்டி காட்டியதற்கு நன்றி
என் சிற்றறிவுக்கு எட்டியது அவ்வளவு தான் என்று புரிந்து கொண்டேன்
நீங்க எதைப் பத்தி எழுதினாலும் சீரியஸாயிடுதே வாலு..
ஏன் இப்டி?
வால்பையன்
படித்தவுடன் நான் எழுத வேண்டியதை வெண்பூ, ஸ்ரீதட் நாராயணன் போன்றவர்களே குறிப்பிட்டுவிட்டார்கள்.
அனைவரும் நினைப்பதை விட அமர்க்கர்கள் ரொம்ப கன்செர்வேட்டிவ், ஸ்டெம் செல் ஆராய்ச்சியை தடை செய்தவர்கள். அதுமட்டுமல்ல, அடுத்த ஜனாதிபதியாக ஜான் மெக்கெயின் வந்தால் கருக்கலைப்பை கூட தடை செய்வார்களாம். ஏன் இதை எழுதுகிறேன் என்றால், நீங்கள் எழுதிய பதிவைப்போல படம் எடுத்தால் ஹாலிவுட்டில் அந்த படம் படுதோல்வியடைவது உறுதி. அதுமட்டுமல்ல, கடுமையான எதிர்ப்பும் கிளம்பும்.
ராப் :கவுண்டரில் நிற்கும் பொழுது சக ரசிகனின் ஞானம் நம்மை ஆச்சரிய படுத்தும், சில அதிர்ச்சியை தரும், சிலவைகள் கோபத்தை வரவழைக்கும்//
அப்போ நீங்க கதகளி ஆடுராமாதிரி போஸ்ல கற்பனை பண்ணிக்கறேன்//
நானும்.!
என்ன சகா.. என்னென்னவோ சொல்றீங்க. இன்னொரு தடவ படத்த ஒழுங்க பார்த்துட்டு பின்னூட்டமிடறேன்
/பகுத்தறிவாளன் என்று தன்னை கூறிக்கொள்பவன் இந்து கடவுள்களை மட்டும் மறுக்கிறான் !//
அவனுக்கு தெரிந்த ஒரே மதம் அதுதான்..
//வால் பொண்ணு said...
லூசாடா நீ ..திருந்தவே மாட்டியா....
//
பரிசல் வாட அடிக்குது.. செக் பண்ணுங்க சகா..
வால்பையன்,
வெண்பூ சொல்வது சரி. ஜான் கார்னரின் தந்தை Kyle Reese. ஜான் கார்னர் யார் என்பதை முதல் பாகத்தில் காட்டியிருக்க மாட்டார்கள். வசனங்கள் மூலம் மட்டுமே அந்த பாத்திரம் முதல் பாகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். அப்புறம் முதல் பாகம் ரிலீஸ் ஆனது 1984ல். இந்த மாதிரி சீரியல் படங்கள் வரும்பொழுது முந்தைய பாகங்களை சிறிது நாட்களுக்கு முன் ரீ-ரிலீஸ்(Re release) செய்வது ஹாலிவுட்டில் வழக்கம். சமீபத்தில் ஸ்பைடர் மேனுக்கு கூட இது போல் ரீ-ரிலீஸ் செய்தார்கள்.
//ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ஃபிக்சன் தொற்று வியாதியை போல் எல்லோருக்கும் பத்தியது. //
அதே போல் ஸ்பீல் பெர்க்கு முன்பே ஹாலிவுட்டில் பல ஃபிக்ஷன்(சைன்ஸ்) படங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இலக்கியத்திலேயே சைன்ஸ் ஃபிக்ஷனை தனி இடம் கொடுப்பதால், அவர்களுக்கு இது முன்பே சாத்தியம் ஆகியது(அதற்கான ரசனை ஏற்கனவே இருந்ததால்)
எப்போதோ பார்த்த படம் சரியாக நினைவுக்கு வர மறுக்கிறது.
நம்ம பதிவுக்கு நாமளே பின்னூட்டம் போடறதா
//எப்போதோ பார்த்த படம் சரியாக நினைவுக்கு வர மறுக்கிறது.//
என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. ஹாலிவுட் சினிமாவுல இது ஒரு பெரிய பாராங்கல்லுங்க.உடனே போய் ஒரு நல்ல டாரண்டா டவுன்லோட் பண்ணி பாருங்க
அன்புடன்
வால்பையன்
//அதே போல் ஸ்பீல் பெர்க்கு முன்பே ஹாலிவுட்டில் பல ஃபிக்ஷன்(சைன்ஸ்) படங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இலக்கியத்திலேயே சைன்ஸ் ஃபிக்ஷனை தனி இடம் கொடுப்பதால், அவர்களுக்கு இது முன்பே சாத்தியம் ஆகியது//
ரொம்ப சரியா சொன்னீங்க யோசிப்பவர். அங்கே டெர்மினேட்டர் 2 வெளியான போது இங்கே, கரகாட்டகாரன் படத்தின் இறுதியில் வரும் பாடலை பார்க்கும் போது சாமி வந்தால் புடவையும், குடமும் இலவசம் விளம்பரம் குடுத்திட்டு இருந்தோம்.
சரி வுடுங்க டெர்மினேட்டர் 2, மேட்ரிக்ஸ் சீரிஸ்ல பணிபுரிந்த தொழில் நுட்ப வல்லுனர்கள்தான் ரோபோவிலும் பணி புரிகிறார்களாம். 2010தில் நம்மளும் தூள் கிளப்புவோம்
என்ன கொடும சார் இது :(
நல்லவேளை ஸ்ரீதர், வெண்பூ சுட்டி காட்டிட்டாங்க..
ஆக்சுவலா ரெண்டாவது பாகத்துல கொஞ்சம் அதிகம் கிராபிக்ஸ் உத்தி அதிகம். ஆனா மொதல் பாகத்துல உணர்வுப்பூர்வமா எடுத்துருப்பாங்க.
முதல் பாகத்துல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு படுக்கையறை காட்சி இருக்கறதால தமிழ்நாட்டுல அத கட் செஞ்சிருக்கலாம். ஆனா அப்பக்கூட தெளிவா ஹீரோ தன்னைப்பத்தின கதைய சொல்லியிருப்பாரு. அவர் ஜான் கானரின் தாயை அடையாளம் கண்டு கொள்வதற்காக ஜான் கானரிடமிருந்து அவரது தாயின் புகைப்படத்தை வாங்கி வந்திருப்பார். பெரும்பாலும் ஜான் கானரை வீரமுள்ளவராக வளர்த்த தாயின் சுபாவத்தை பாராட்டுவதாகவே அவரது வசனங்கள் அமைந்திருக்கும். குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் அப்போது அந்த பெண் மணமாகாத கன்னிப்பெண்.
எதிர்பாராத சூழலிலேயே நாயகனும் நாயகியும் இணைவார்கள். நாயகன் இறந்த பிறகு அவனது நினைவாக வாழப்போவதாக நாயகி முடிவெடுப்பாள். அந்த இறுதிக்காட்சியில் அவளை புகைப்படம் எடுப்பதுதான் ஜான் கானரின் வசம் இருக்கும் படம் :)
இயந்திரங்களுக்கு எதிரான மனிதர்களின் போராட்டத்திற்கு தலைமையேற்கும் ஜான் கானரின் புரட்சிப்படையில் இருப்பவர்தான் கைல் ரீஸ். ஜான் கானர் மனிதர்களுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பிப்பது மூன்றாம் பாகத்தின் இறுதி காட்சியாக அமையும்.
இன்னும் தெளிவாக கதையை பார்த்தோமானால் இரண்டாம் பாகத்தில் சற்று நவீனப்படுத்தப்பட்ட இயந்திரமாக வருகின்ற அர்னால்டு இறுதிப்பாகத்தில் ஜான் கானரை கொல்லப்போவதாக சொல்லும் செய்தியும் வரும். அப்படின்னா ஏன் இரண்டாம் பாகத்துல அவரை காப்பாத்துனாருன்னு கேட்டுடாதீங்க :)
நிர்ணய விதிகள் என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும் இதை விட சிறந்த படங்கள் நிறைய்ய இருக்கிறது. :)
:(
இயேசுவுக்கு தந்தை இல்லையென்று யாருங்க உங்ககிட்ட சொன்னாங்க.
பேசாம நீங்க பொதுவாகவே கடவுள் மறுப்புங்கற வார்த்தைய உபயோகிச்சுருக்கலாம். நார்மலாவாச்சும் இருந்திருக்கும்.
உங்க இஷ்டத்துக்கு கதைய வுட்டுருக்கீங்க போல :)
உங்ககிட்ட மாட்டிக்கிட்ட அவ்ளோ நல்லவரு யாருங்க :)
I added this post in Tamilish.com
//கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான்//
பகுத்தறிவாளன் என்று தன்னை கூறிக்கொள்பவன் இந்து கடவுள்களை மட்டும் மறுக்கிறான் !
October 9, 2008 8:09 PM
Anonymous hydraulic excavator said...
sure, why not!
October 9, 2008 8:21 PM
Anonymous kobelco excavator said...
very nice! hahahahaha
October 9, 2008 8:24 PM
Anonymous excavator attachments said...
wow, very special, i like it.
October 9, 2008 8:25 PM
Anonymous compact excavator said...
what happened to the other one?
/// all above are SPAM man
////பகுத்தறிவாளன் என்று தன்னை கூறிக்கொள்பவன் இந்து கடவுள்களை மட்டும் மறுக்கிறான் ! //////
ஆம், 100% இது உண்மை.. இதை நானும் ஒப்புக்கொள்கிறேன்..........
ALIEN படத்துல கிளைமாக்ஸ் சூப்ப்பரா இருக்கும். அதுவும் அந்த ALIEN நீச்சல் குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ர சீன் சூப்பர். (LOL)
வன்முறைய பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு விஜய் படத்துல (மணிவன்னன் அப்பாவா வருவாருன்னு நெனைக்கிறேன்) பாலத்துல இருந்து வில்லனுகள துரத்திக்கிட்டே போய் தலையை சீவுவாரு. அதை விடவா பெரிய வன்முறை. மேலும் டெர்மினேட்டர் ஒரு மெஷின் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நன்றி கூடுதுறை
நன்றி அருப்புகோட்டை பாஸ்கர்
எல்லா மதத்திலும் கடவுள் மறுப்பாளர்கள் உண்டு.
பகுத்தறிவு மூட நம்பிக்கைகளை சாடுவதற்கு பயன்படும் வார்த்தை.
மூட நம்பிக்கைகளை சாடுபவர்களும் கடவுள் நம்பிக்கையோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு
வரிசையாக வந்து கும்மி குத்திய ஸ்பெம்கலுக்கு நன்றி
//நான்:கடவுள் தோன்றியது அப்படி தான் என்றாலும் நான் அதை சொல்லவில்லை //
ஆனால் நான் தான் இந்த பதிலை அடித்தேன்.:-)))//
யார் சொன்னால் என்ன!
உண்மை உண்மை தானே
நன்றி ராப்
நன்றி ஸ்ரீதர் நாராயணன்
பார்த்தேன் தெரிந்து கொண்டேன்.
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் வந்த வினை இது
நன்றி வெண்பூ
நன்றி பரிசல்
சீரியசாக்கிவிடுவதே நீங்க தானே
//நீங்கள் எழுதிய பதிவைப்போல படம் எடுத்தால் ஹாலிவுட்டில் அந்த படம் படுதோல்வியடைவது உறுதி. அதுமட்டுமல்ல, கடுமையான எதிர்ப்பும் கிளம்பும்.//
நன்றி கயல்
back to the future படத்தில் எதிர்காலத்தில் இருந்து வரும் தன் மகனையே அவனது அம்மா காதலிக்கும் காட்சி வரும் பார்த்தீர்களா. ஒருவேளை அப்படி நடந்தால் அவன் பிறக்காமலேயே போய் விடுவான் என்பதால் பல தகிடுதத்தங்கள் செய்து அவனது தந்தையுடன் தாயை சேர்த்து வைப்பான். ஸ்பீல்பெர்க் படமது.
நன்றி தாமிரா
நன்றி கார்க்கி
நன்றி யோசிப்பவர்
நன்றி கோவி.கண்ணன்
நன்றி ப்ளீச்சிங் பவுடர்
(நமக்கு நாமே நன்றி சொல்லும் திட்டம்)
நன்றி சென்ஷி
நன்றி தமிழ்நெஞ்சம்
இரண்டுக்கும்
நன்றி மாதேஷ்
நன்றி அமரபாரதி
ஏலியன் முதல் பாகம் விண்கலத்தில் நடக்கும்.
நீச்சல் குளம் வாய்ப்பில்லை.இரண்டாம் பாகம் வேறொரு கிரகத்தில் நடக்கும்.
மூன்றாம் பாகம் திசை மாறி அதே போல் வேறொரு கிரகத்தில் இந்த பாகத்தில் நாயகி இறந்து விடுவார். மீண்டும் நான்காம் பாகத்தில் அவரை க்ளோன் செய்து ஏலியன் அணுக்களை உடம்பில் ஏற்றி விடுவார்கள். இந்த பாகத்தில் தான் தண்ணீரையே காட்டுவார்கள்.
இன்றும் இந்த ஏலியன்னுக்கு மவுசு இருக்கிறது
அடுத்த வாரத்தில் ஒரு சிறப்பு பணி காத்திருப்பதால் உங்களது மேலான ஆதரவை அங்கேயும் தருமாறு கேட்டு கொள்கிறேன்
//நன்றி பரிசல்
சீரியசாக்கிவிடுவதே நீங்க தானே//
க க க போ
Better late than never :-)
//back to the future படத்தில் எதிர்காலத்தில் இருந்து வரும் தன் மகனையே அவனது அம்மா காதலிக்கும் காட்சி வரும் பார்த்தீர்களா. ஒருவேளை அப்படி நடந்தால் அவன் பிறக்காமலேயே போய் விடுவான் என்பதால் பல தகிடுதத்தங்கள் செய்து அவனது தந்தையுடன் தாயை சேர்த்து வைப்பான். ஸ்பீல்பெர்க் படமது.
//
நீங்கள் குறிப்பிடும் Back to the future படத்தில் ஹீரோவுடைய அம்மாவுக்கு ஹீரோ மேல் ஒரு விதமான ஈர்ப்பு தான் வரும். அப்போது அவர் டீனேஜர் என்பதால் அது தாய்மை உணர்வு என்று புரிந்துக்கொள்ளமுடியாமல் இனக்கவர்ச்சி என்று நினைப்பார். பின் ஒரு முறை காரில் ஹீரோ மேல் இருப்பது ஒரு வகை பாசம்(You feel like my brother) என்று உணருவார். இதற்கே சில கன்சர்வேட்டிவ் சர்சுகள் இந்த படத்தை பார்க்கக்கூடாது என்று மக்களுக்கு பிரச்சாரம் பண்ணினார்களாம். நீங்கள் குறிப்பிடுவது மாதிரி காதல் இல்லை.
//ஒருவேளை அப்படி நடந்தால் அவன் பிறக்காமலேயே போய் விடுவான்//
கயல்விழி சொன்னது மிகச் சரி.
இதே போல்தான் ஒரு நண்பர் Blue Lagoon படம் பார்த்துவிட்டு அதுவும் Incest Love என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
Incest love பத்தி எல்லாம் படம் எடுத்தால் நிச்சயம் வரவேற்பு இருக்காது. இந்திய சென்சாரில் வெளியிடவே மாட்டார்கள் உறுதியாக.
இப்பத்தான் Gay / Lesbianism பற்றி கொஞ்சம் தைரியமாக படமெடுக்கிறார்கள்.
Back to the future முழு சீரியஸ்-ஸும் பாருங்கள். Marty-ன் பல்வேறு காலப் பயனங்களில் ஒரு pattern தெரியும் :-)
படத்தை முழுசா பார்த்துட்டு எழுதுங்கப்பா
ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா எழுதி “இப்படி இருந்தா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று கற்பனையாகவே கதையை மாற்றி அதில் தேவையில்லாமல் அய்யோ பாவம் அந்தக் கடவுளையும் சேர்த்து .....
ஸ்ஸ்ஸ் அப்பப்பா முடியல...
யோவ் வால் பதிவை பரபரப்பாக்குவதில் கடவுள் துணை உமக்கு ரெம்பவே இருக்கிறது.
கதை புரியற மாதிரி இருக்கு ஆனா புரியல இருங்க படத்த பாத்துட்டு வந்துறேன் ...
//வெண்பூ said...
//இதை தெரிந்து கொண்ட ஜான் கானர் தானும் அவ்வழியே முற்காலத்திற்கு சென்று தன் தாயை காப்பாற்றுகிறார்//
ரொம்ப ரொம்ப தவறான தகவல் வால்.
எதிர்காலத்தில் இருந்து வருபவர் ஜான் கான்னர் அல்ல. அவரது நண்பர். படம் முழுதும் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் ஜான் கான்னர் பற்றி பேசிக் கொள்வது புரியும்.
//
ஓ அப்ப இங்கிலீஸ் படத்தை எல்லாம் புரிஞ்சு பார்க்கனும் என்று சொல்ல வருகிறீர்களா?
ம்... எல்லாத்தையும்விட வால்பையன் வாங்கி கட்டிக்கிறதுதான் அதிகமாக கீது...
ஆட்ட கடிச்சி..மாட்டகடிச்சி..அப்புறம் அர்னால்ட்ட கடிக்கிற அளவுக்கு வந்துருக்கீங்க.....ஆராச்சும் கேள்வி கேட்டா மத்தும் "எனக்கு இங்லிபீஷ்லாம் தெரியாது"ன்னு சமாலிபிகேஷன் வேற...ஹூம்..
வாலை யாரோ நிமுத்தறம்னு சொன்னாங்க.,சீக்கிறம் செஞ்ஞா நல்லாருக்கும்.
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் வந்த வினை இது ........................
If ur Half boil why the hell ur pulling other relegious beleving?
where is itching for you moron, if he blogs something about what he knows?
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் வந்த வினை இது ........................
ஆசை தான் யானை போடுவதற்கு என்ன செய்வது மேட்டர் எட்டனுமே ...............
அனானி, தவறு செய்கிறீர்கள். பதிவுலகில் எழுதும் எல்லோரும் (நான் உட்பட) எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. அதனால் இது போன்ற சிறு சிறு தவறுகள் சகஜமே. அவரே அதை ஒப்புக்கொண்ட பிறகு அவரை வறுப்பதும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் ஆரோக்கியமான அரசியலாக இருக்காது.
நன்றி வெண்பூ
அந்த அனானி சொன்னதுல ஆஃப்பாயில் மட்டும் புரிஞ்சது
மத்தெதேல்லாம் கெட்ட வார்த்தையா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment