பெரியார் புரிந்துகொண்ட ஆரிய தந்திரத்தையும், பார்ப்பனிய கருத்தியலையும் ஏன் அதன் பின் வந்தவர்கள் மேலும் சரியாக பரப்பவில்லை என்பதே இன்று பாஜக, இந்துத்துவா இங்கே கோலோச்சிக்கொண்டிருக்க காரணம். பெரியாரின் திராவிட கருத்தியலை மறந்துவிட்டீர்கள். ஆனாலும் அந்த ஐகான் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் தான் உங்களை பெரியார் பக்தர்கள் என அழைக்கவேண்டியுள்ளது.
ராமாயணத்தை பெரியார் மேற்கோள் காட்டியது ராமனை கேரக்டர் அஸாசிசேசன் பண்ணுவதற்காக. ராமாயணத்திலே உள்ளது விரும்பமில்லாத பெண்ணை தொட்டால் ராவணன் தலை வெடிக்குமென்று. ஆக அவளை தொடாமல் அனுப்பிய ராவணன் நல்லவா? மனைவியை சந்தேகப்பட்ட ராமன் நல்லவா என்றார்?
ராமாயணம் சீனா, இந்தோனிஷியாவில் இன்றும் சில வித்தியாசயங்களுடன் கதைகளாக உள்ளது. அது செவிவழியாக வந்து, அந்த கால அரசர்களால் பலமுறை மாற்றி புனையப்பட்ட பேண்டஸி நாவல். அக்காலத்தில் மின்னலை கடவுளின் ஆயுதம் என நம்பினார்கள், மேகத்தை கடவுளின் வாகனம் என நம்பினார்கள். கற்பனையில் புனையப்பட்டதை அந்த கிறுக்கர்கள் தான் நாங்க அப்பவே விமானம் கண்டுபிடிச்சிட்டோம்னு உளரிகிட்டு இருக்கானுங்க, நீங்க ராவணம் தமிழன்னு விழா எடுக்குறிங்க, பிறப்பால் பார்ப்பனனான ராவணனுக்கு பெரியார் விழா எடுக்க சொல்லிருப்பாருன்னு எப்படி நம்புறிங்க பெரியார் பக்தர்களே.
மகாபாரதம் என்பது பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் நடந்த போர் வரலாறு, இதுவும் இலியட், ஒடிஸி போன்ற கிரேக்க இதிகாசங்களின் செவிவழி தழுவலே. இதுவும் பலமுறை மாற்றி புனையப்பட்ட பொழுது தான் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரம் புகுத்தப்பட்டது. கிருஷ்ணனின் தனி சேப்டரில் மட்டுமே அவதார புருடாக்கள் வரும்.
கிருஷ்ணன் முதலில் கொன்ற கம்சன் அவனுக்கு சொந்த தாய்மாமா சத்தியபாமா கிருஷ்ணனின் முன்னால் அவதாரத்தில் மனைவி, அதே கிருஷ்ணனுக்கும் சத்தியபாமாவுக்கும் முன்னால் அவதாரத்தில் பிறந்தவன் தான் நரகாசுரன். பெண் கையால் தான் சாக வேண்டும் என வரம் வாங்கியதால் மீண்டும் பிறவி எடுத்து கொன்றதாகவும், அதனை கொண்டாடவேண்டும் என கேட்டுகொண்டதால் தீபாவளி என்பதும் மகாபாரத புருடா வரலாறு
ஆனால் வடநாட்டில் கூட இந்த கதையை நம்ப மாட்டான், அங்கே இது லஷ்மிபூஜை. மகாவீரர் மறைந்ததினம் என ஏகப்பட்ட கதைகள் உண்டு. இங்கெ இருக்கும் பாஜககாரன் எவனுக்கும் மூளை இல்லைன்னா உங்களுக்குமா இல்ல.கிருஷ்ணனின் அம்மா தேவகி, எடுத்து வளர்ந்த யசோதா தான் யாதவர். கோனார் வம்சத்தின் முப்பாட்டனேன்னு போஸ்டர் அடிக்கிறானுங்க.
ராமாயணமோ, மகாபாரதமோ அதில் இருக்கும் கதாபாத்திரங்களை நம்மவர்கள் என ஏற்றுக்கொள்வதும், அந்த புருடா புராணங்களை உண்மை என நம்புவதும் ஒன்று தான். நாம் இன்றும் படிக்கும் புறநானூறில் ஒரு அரசன் விட்ட அம்பு ஒரு மரத்தை, ஒரு மானை, ஒரு புலியை துழைத்து சென்றதாக பாடல் உண்டு, தமிழன் பொய் சொல்ல மாட்டான், அது உண்மையா தான் இருக்கும்னு நம்ப போறிங்களா? சீன யாத்திரிகர் யுவான் சுவாங் இந்தியா வந்து திரும்பிய பொழுது நெருப்பை கக்கும் ட்ராகனை பார்த்தாக பயண குறீப்பில் எழுதியுள்ளார். அதையும் நம்புவீர்களா?
எதை வேண்டுமானாலும் படிக்கலாம், எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் அதில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்த்து உண்மை அறிவதே உண்மையான பகுத்தறிவு. இன்னைக்கும் 1929ல் பெரியார் சொன்னார்னு காப்பி பேஸ்ட் உங்களிடம் இனி பகுத்தறிவு பற்றி பேசலாமானு யோசிக்கனும் போல. பெரியார் பேசிய திராவிட கருத்தியலும் மாற்றம் அடைய வேண்டியதே. மாற்றம் விரும்பாத யாவரும் பிற்போக்குவாதிகளே. நீங்கள்ளாம் உங்களை முற்போக்குவாதின்னு சொல்லாதிங்க
1 வாங்கிகட்டி கொண்டது:
நல்ல பகிர்வு.
Post a Comment