முடிச்சுவுக்கி 1

மனித சிக்கலின் முடிச்சுகளை அவிழ்ப்பது என்னமோ சுலபம் தான். ஆனால் அதை உங்களுக்கு புரிய வைக்கத்தான் மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. பழமாக கொடுத்தால் பழரசமாக கொடு என கேட்கிறார்கள். மனிதத்தில் பல சிக்கல்கள் உண்டு, என்னால் முடிந்த வரை எளிமையாக விளக்குகிறேன். விரும்பமிருந்தால் அவிழ்த்துக்கொள்ளுங்கள்

ஒரு சித்தாந்தமும் அதன் கொள்கைகளும் ஒரு வட்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதன்பால் ஈர்ப்பு கொண்டு அதனை பற்றுவீர்களேயானல் நீங்கள் அந்த வட்டத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தம், மேலும் அந்த வட்டம் அதாவது அந்த சித்தாந்தம் உங்களை பாதுகாப்பதாக எண்ணுவீர்கள்.

இங்கே சித்தாந்தம் என்பது திராவிடமாக இருக்கலாம், தமிழ்தேசியமாக இருக்கலாம், முதலாளித்துவமாக இருக்கலாம், பொதுயுடமையாக இருக்கலாம், மதமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதனை பற்றிக்கொண்ட அடுத்த நொடி அந்த வட்டத்தின் உள்ளே இருப்பீர்கள்.

இப்பொழுது உங்களால் அந்த வட்டத்தின் பாதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில் நீங்கள் வட்டத்தின் உள்ளே நிற்கிறீர்கள். ஈர்ப்பினால் உங்களுக்கு அந்த வட்டத்தின் நல்ல பக்கங்கள் மட்டுமே காட்டப்படும். அதன் கொடிய பக்கங்கள் பிறர் தம் மீது சுமத்தும் பழியாக சமாதானம் செய்யப்படும். தன் பக்க நியாயங்களையும், பிறர் பக்க குறைகளை மட்டுமே யோசிக்கச்சொல்லும்.

ஏன் ஒரு மனிதன் தன் மற்றும் தன் சார்ந்த சித்தாந்தத்தின் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறான். ஏனெனில் தன்னை பாதுகாக்கும் என நம்பி அவன் ஏற்றுக்கொண்ட அந்த சிந்தாந்தம் என்ற வட்டத்தை இப்பொழுது இவன் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறான்.


இந்த உலகில் இயற்கையை தவிர வேறு எதுவும், நவீனத்துவமோ, சித்தாந்தமோ அவற்றை ஏற்றுக்கொண்ட மனிதர்களாலே வளர்க்கப்படுகிறது. தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தை சரி என நிறுவ துணைக்கு மனிதர்களை சேர்க்கிறான். உடன்படாத மனிதர்களை எதிரிகள் ஆக்குகிறான்.

மனிதனுக்கு வாழ்வில் சுவாரஸ்யம் தேவைப்படுகிறது எனபதை கண்டறிந்த வேளையில் எனக்கும் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. மனிதன் வாழ்வை சுவையுள்ளதாக்க போட்டியை விரும்புகிறான். எதிராளியை உருவாக்கிக்கொள்கிறான். தான் வாழ தகுதியுள்ளவன் என ஒவ்வொரு உயிரும் உடலால் செய்யும் தன்மையை மனிதன் அறிவால் செய்ய ஆரம்பித்துவிட்டான்

ஆக மனிதனுக்கு போட்டியோ எதிர்யோ இல்லையென்றால் வாழ்க்கை இயந்திரமயமாகி விடுகிறது. ஆக நான் என்னையே எனக்கு போட்டியாக எடுத்துக்கொண்டேன். என்னை மீண்டும் மீண்டும் வெல்ல என்னுடனே நான் சண்டையுட்டு கொள்கிறேன். என் மனம் உள்ளே இருவேறாக பிரிந்து மனித சிக்கல்களின் காரணத்தை விவாத்தித்துக் கொண்டுக்கிறது

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin