இந்திய குடியரசான பிறகு அம்பேத்கார் சொல்றாரு
இன்னைக்கு அரசியல்
one man
one vote என்ற நிலையில் இருக்கு, அது அல்ல சமூக நீதி, அது அல்ல ஜனநாயகம்
one man
one value
என்று அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்
அதுவே சமூக நீதி, அதுவே ஜனநாயகம்
இடதுசாரிகளுக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்?
வலதுசாரி முதலாளிகளால் சமூகம் இயங்குதுன்னு நினைக்கிறேன். அதாவது தொழிலாளி நூறு பேரை விட முதலாளி ஒருத்தன் தான் அவனுக்கு முக்கியம். அந்த நூறு தொழிலாளி இல்லைன்னா நீ முதலாளியே இல்லடான்னு சொல்றான் இடதுசாரி
திராவிட சிந்தாத்தம் என்பது முற்றிலுமான ஆரிய கலப்பு அற்றது. தமிழில் ஜாதி என்ற சொல்லே கிடையாது. தற்கால ஓட்டரசியல் திராவிட பெயர் தாங்கி கட்சிகளை சாதி அரசியல் செய்ய வச்சிருக்கு., ஆனா அவன் குறைந்த பட்ச சமூக நீதியாவது கடைபிடிக்கிறான். ஒடுக்கப்பட்டவர்களை அமைச்சர்களா உட்கார வச்சு அவன் வேல்யூவை காட்றான்
தமிழ் தேசியம் நீ தமிழனான்னு கட்டுபிடிக்க சாதி வேணும்னு சொல்லுது. சாதி பிரிவினை தானேன்னு சொன்னா அதெல்லாம் தமிழ்சாதி என்ற ஒரு குடையில் கீழ் வருமாம். அப்படி தான் பார்ப்பானையும் தமிழ்சாதியில் சேர்த்து வச்சிருக்காங்க
ஆவணி அவிட்டம் இந்து பண்டிகை தானே?
தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்ளும் அனைவரும் அதை கொண்டாட முடியுமா? இல்ல அப்படின்னா என்னான்னே தெரியாதா?
என்னை சாதியில் கீழானவன்னு சொன்ன பார்ப்பானை தமிழ்சாதின்னு நீங்க தூக்கி வச்சி கொண்டாடுவ, இந்த பார்பன அடிவருடிதனத்தை தமிழ்தேசியம்னு நான் ஏத்துக்கனுமா? நீங்க சமூகநீதி காப்பிங்கன்னு நான் நம்பனுமா?
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment