பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை அளித்திருக்கும் ஒரே கட்டளை தங்களது மரபணுக்களை பரப்பி எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்பதே. தாவரங்களும், சில மீன் இனங்களும் தவிர மற்ற விலங்குகள் உடலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இயற்கையாகவே நம் உடலில் இனப்பெருக்கதிற்கான உந்திசக்தி உள்ளது.
விலங்குகளை பொறுத்தவரை பெரும்பான்மைகளுக்கு துணையை தேர்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் தங்களை கம்பீரமாகவும்/அழகாகவும் காட்டிக்கொள்ளுவதன் மூலம் பெண்களை கவர பார்க்கின்றது. ஆண்களின் வீரத்தை வைத்து பெண்கள் தேர்வு செய்ய காரணம். தங்கள் குட்டிகளை எதிர்களிடம் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பு.
சில வேட்டை விலங்குகள் பருவமடைந்தவுடன் புது துணையை தேடும்போது அவர்களுக்கு ஏற்கனவே குட்டிகள் இருந்தால் கொன்றுவிடும். தனது மரபணுக்களை பரப்பவேண்டும் என்பதே இயற்கை அதற்கு அளித்திருக்கும் கட்டளை. சில புத்திசாலி விலங்குகள் பாலியல் தாராள கொள்கையின் மூலம் குட்டிகளை பராமரிக்க பல துணைகளை உருவாக்கிக்கொள்கிறது. முக்கியமாக குரங்கினங்கள்..
மனிதனின் ஆதியும் அவ்வாறே இருந்தது. பாலியல் தூண்டலே பல வன்முறைகளுக்கு காரணம். ரெட்பெல்லி ஃப்ராக் என்னும் தவளையினம் இணை சேரும் பருவத்தில் கண்ணில் படும் எதையும் புணர நினைக்கும். மனித கால்விரல்களில் கூட. சிக்கும் பெண் தவளைக்காக சண்டையிட்டு இறுதியில் பெண்ணையே கொன்று விடும். சிறு தவளை முதல் மதம் பிடிக்கும் யானை வரை காரணம் பாலியல் தூண்டலாகவே இருக்கின்றது.
பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் தானே உணவை உற்பத்தி செய்துக்கொள்ள ஆரம்பித்தான். அதனை நான் விவசாயம் என்கிறோம். நாடோடியாக திரிந்த மனிதன் ஒரே இடத்தில் காலணி சமூகத்தை நிறுவினான். தன் உடமை, தன் நிலம், தன் கால்நடைகள் என்ற பொருள்முதல் வாத சமூகம் உருவாகியது. அவற்றோட பெண்ணையும் தனது உடமை என அறிவித்துக்கொண்டான்..
நிலபிரபுத்துவம் உருவானது. தன்னிசையாக இயங்கும் ஆட்களை கட்டுபடுத்த ஒழுங்குவிதி கோட்பாடுகள் உருவானது. வலிமையான ஆண் பல பெண்களை விரும்பிய போது பெண்ணை கற்பு என்னும் கட்டுக்குள் நிறுத்திக்கொண்டான். இன்றும் நாடோடிகள் சமூகத்தில் பெண்ணுக்கு இந்த பாலியல் விதிமுறைகள் இல்லை. தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் ஒரு நாடோடி குழுவினர் அந்த குடும்பத்தில் இருக்கும் மொத்த சகோதர்களையும் திருமணம்(உறவு) செய்துக்கொள்ள முடியும்.
சமூக அமைப்பில் கணவன், மனைவி முறை இனத்திற்கு செய்த நன்மை தனது சந்ததினயினரை ஆபத்திற்றியும், திறனுடனும் வளர்க்க முடிந்தது என்பதை சொல்லலாம். ஆதியில் இருந்தே அனைத்து பெண் விலங்குகளின் கோட்பாடும் அதுவே தான்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலியல் தேவையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண் ஒருமுறை கருவுற்றால் குட்டி ஈனும் வரை உடலறவு என்பது இயற்கையில் தேவையற்றாகிவிடுகிறது ஆனால் ஆண் வரிசையாக பல பெண்களுக்கு கர்ப்பம் ஊட்டமுடியும். இன்று அனைத்து விலங்குகளின் இயல்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.
சுருக்கமா சொல்லனும்னா ஆண் எப்பல்லாம் முடியுமோ அப்பல்லாம் புணர தயாரா இருப்பான், பெண் எப்பல்லாம் தேவை என நினைக்கிறாளோ அப்பல்லாம் தயாரா இருப்பாள்.
ஆண் தான் பார்க்கும் அனைத்து பெண்களையும் காதலியாக்கிக்கொள்ள நினைப்பேன். பெண் இவனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பார்ப்பாள். மரியாதைகுரிய பெண்ணை சந்திக்க நேர்ந்தாலும் ஆணுக்கு 10 சதமாவது பாலியல் உணர்வு தூண்டப்படும் என அறிவியல் சொல்கிறது. சிக்மண்ட் ப்ராய்டின் ”ஈடிபஸ் காம்ப்ளஸ்” கோட்பாட்டை நினைவு கூறுகிறேன்.
இது பொதுவான உணர்வும் கூட, இதே போல் உணர்வு பெண்களுக்கும் ஏற்படும். சமூக கட்டமைப்பு, ஒழுங்கவிதி இவைகளுக்குள் ஒழிந்துக்கொண்டாலும் அவர்களை ஏமாற்றிக்கொண்டோ அல்லது சமூகத்தை ஏமாற்றிக்கொண்டோ தங்கள் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறார்கள். crush is natural
ஆயினும் இந்த சமூக கட்டமைப்பை பாதுகாப்பதில் காதலுக்கு முக்கிய பங்குண்டு. காதல் என்பது இருபாலனரின் புரிதல் பொறுத்தது. ஒருவனுக்கு ஒருத்தி போல, ஒரே காதல் மட்டுமே என்ற புனித பட்டமெல்லாம் காதலுக்கு தேவையில்லாதது. தன் துணை தான் விரும்பும் காதலை அளிக்காத பட்சத்தில் காதல் கிடைக்கும் இடத்தில் மனித சமூகம் மாறிக்கொண்டே தான் இருக்கின்றது.
பாலியல் என்பது மற்ற விலங்குகளுக்கு இனபெருக்க தேவைக்காக மட்டும் இருக்க, மனிதனுக்கு அது ஒரு அங்கிகாரமாகவும். தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கின்றது. காதல் என்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புரிதல் இருக்கின்றது. காதல் சமூகத்தில் ஒரு மதம். தன் துணையே கடவுள். தன் காதலே உலகத்தில் சிறந்தது.
காதல் மனித இனத்தின் வரமும், சாபமும்.
ஆம் இரண்டுமே!

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment