வார்ம் ஹோல் - என் தியரி

வார்ம் ஹோல் சாத்தியமா? அதன் லாஜிக் என்ன? அதன் தியரி என்ன? அப்படின்னு நானே யோசிச்சேன். இதை பற்றி டெக்னிக்கலா தெரிந்தவர்கள் முற்றிலும் மறுக்கலாம். ஆனாலும் என்ன சாத்தியகூறு இருக்குன்னு யோசிச்சிகிறது என் இயல்பா ஆகிருச்சு

பிரபஞ்ச தொடக்கத்தின் முதல் மின் அணு, அதன் கூட்டு இப்படி குவார்க், எலக்ட்ரான், புரோட்டான் ஒருவாகி, அது கூட்டு சேர்ந்து தனிமம் உருவாகி, உலோகம் உருவாகி, உலகம் உருவாகி.. இப்படி ஆகி ஆகின்னு நிறைய இருக்கு

ஈர்ப்பால் நிறைந்த கோள்கள் சுற்றியே வாயுகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட அஸ்ட்மோபியர்க்கு மேலே சென்ற பிறகு அதை வெற்றிடம் எங்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. இதற்கு மேல் இந்த அணுவை பிரிக்கமுடியல, அதனால இதுக்கு டார்க் மேட்டர்னு பேர் வச்சிருவோம்னு சொல்லி விட்டாங்க, ஆனால் அதுவும் மின் அணு தான்.



மின் அணுக்கள் ஒற்றினைவதும், பின் அழிவதும் பெரு வெடிப்பின் ஒரு ஆதாரம். அந்த டார்க் மேட்டர் மீது காமா கதிர்கள் போன்றவை மோதும் போது மிக வேகமாக ஒன்றினைய வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில் ஒன்றை ஒன்றை இணைத்து கொள்ளும் டார்க் மேட்டர் அதை சுற்றி உண்மையிலயே வெற்றிடத்தை உருவாக்கும் இல்லையா

இதற்கு உதாரணம், பூமியில் வெயில் நேரத்தில் திடீரென்று காற்று சுழல் பார்த்ததுண்டா? அதன் காரணம் அதிக வெயிலின் காரணமாக காற்று மூலகூறுகள் உடைந்து(எடை குறைந்து) வேகமாக மேலே செல்லும். அந்த இடத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பு அருகில் இருந்து வரும் காற்றே சுழலை உருவாக்குகிறது.

சரி டார்க் மேட்டர் இணையும் போது சுழலை தானே உருவாக்க முடியும் என்பது தானே லாஜிக். நான் வெற்றிடம் என சொன்னது இங்கே தான். பிரபஞ்சத்தில் வெற்றிடம் என ஒன்று உருவாக முடியாது. டார்க் மேட்டர் வேகமாக இணையும் போது இடத்தையும் சேர்த்தே சுருக்கும். சாதாரணமாக 100 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய இடத்தை சுருக்கி 1 கிலோ மீட்டர் ஆக்கும்.

அப்படி உருவான வார்ம் ஹோல் வழியாக பயணிக்கும் பொழுது நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத தூரத்தை வெகு சீக்கிரமாக அடைய முடியும். இது முழுக்க முழுக்க இதற்கு சாத்தியகூறுகள் உள்ளன என நானே உருவாக்கிய தியரி. சரியா தப்பான்னு தெரியல. விவாதிக்கலாம் வாங்க

1 வாங்கிகட்டி கொண்டது:

vels-erode said...

அந்த வேகத்தில் நாம் உயிரோடொருப்பது சாத்தியமா?

!

Blog Widget by LinkWithin