லக்ஷ்மி - குறும்பட விமர்சனம்

முதல் விசயம்

தன் கணவணுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என தெரிந்த பிறகே லக்ஷ்மிக்கு தப்பு பண்ணலாம் என தோன்றுகிறது என்பதே பொது புத்தி கட்டமைத்துள்ள கிளிஷே தனம்

ஏன்னா உயிர்கள் அனைத்துகுமே தனக்கு பிடித்த தோற்றத்தையோ, ஆளுமையையோ பார்க்கும் போதே உடலில் பெரோமோன் சுரந்து உறவுக்கு தயாராகிவிடும். அதாவது உங்கள் மனம் அறியாமலயே உடல் தயாராகி விடும்.

அடுத்து கதிர் செய்யும் பாராட்டுகள், நீங்க ஒரு இண்ட்ஸ்ட்ரிங் கேரக்டர் என்பது இரு பாலரும் விரும்பும் ஒரு வார்த்தை. தன்னை தனியாக காட்டி கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு உயிருக்குள் இருக்கும் ஈகோ விரும்பும்.

கணவனுக்காக காத்திருக்கிறேன் என்பது பெண்களுக்கு இருக்கும் இயற்கை பாதுகாப்பு உணர்வு. தெரியாத ஆளை சட்டுன்னு நம்ப மாட்டார்கள். ஏன்னா பெண்கள் உறவு கொள்ள நம்பிக்கை தேவை, ஆண்கள் உறவு கொள்ள இடம் மட்டுமே தேவை.

12 நிமிசம் வரைக்கும் தான் பார்த்தேன். பொது புத்தி கட்டமைத்துள்ள சமூக விதிகளான இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறு என்ற விதிக்குள்ளேயே பலர் இந்த குறும்படத்தை பார்த்திருப்பது தெரியுது. அதை கொண்டே ஒரு கதாபாத்திரத்தை அவ ஆள் இல்லடா ஐட்டம் என விமிர்சிக்க முடிகிறது.

லக்ஷ்மியின் கணவன் இதை விட ஆயிரம் தேர்வுகள் செய்தாலும் அதை இந்த சமூகம் பொருட்படுத்துவதில்லை. ஏன்னா ஆண் அப்படி தான் என ஏற்றுக்கொள்கிறது. அதுவே ஒரு பெண் செய்யும் பொழுது அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறது.

இந்த குறும்படத்தில் ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது. உங்கள் துணைக்கான நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் நட்புடன் இருங்கள்.

அம்புட்டு தான் என் ரெண்டணா

#லக்ஷ்மி

https://www.youtube.com/watch?v=vP5dOY42DKI&t=2s

4 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

வேறு கோணம்

https://www.facebook.com/prabhunicas/posts/1599704850092327


உண்மையில் லக்ஷ்மி கொண்டாடப்பட வேண்டிய படம். தவறு செய்யக் கற்பனை செய்துவிட்டு , அந்தக் கற்பனையை வெறும் கற்பனையாகவே கடந்து சென்று , தமிழ்ப் பெண்களின் இலக்கணத்தைக் காத்தவள் லக்ஷ்மி என்று சொல்லலாம்


கருப்பு வெள்ளைக் காட்சிகள் நிஜம் , வர்ணக் காட்சிகள் பொய் அல்லது லக்ஷ்மியின் கற்பனை. இதுதான் இயக்குனர் கதை சொன்ன விதம். இதுதான் அவருடைய பாணி அல்லது கோணம்.

PV said...

//இந்த குறும்படத்தில் ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது. உங்கள் துணைக்கான நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் நட்புடன் இருங்கள்.//

இல்லாவிட்டால் உங்க பொண்டாட்டி வேறொருவனுடன் ஓடிப்போய்விடுவாள் என்று கடைசி வரியாகச் சேர்த்துச்சொல்லலாமே? ஏன் சொல்லவில்லை?

வால்பையன் said...

அவ தான் ஓடி போகலையே

PV said...

மெல்ல ஆளை செலக்ட் பண்ணி புருஷனுக்குத் தெரியாம போய்க்கொள்ளலாமென மாற்றிக்கொள்ளுங்கள். போத்திக்கிட்டு படுத்தாலென்ன? படுத்துக்கிட்ட போத்திக்கிட்டாலென்ன? ஓடினாலென்ன? நடந்து போனாலென்ன? சேருமிடம் ஒன்னுதானே?

!

Blog Widget by LinkWithin