ஊழலுக்கு ஆதரவளித்தலும் ஊழலே!..

பெட்ரோல், டீசல் வரி ஜி.எஸ்.டிக்குள் வரும் என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருட கால அவகாசம் இருக்கும் பொழுது அதை அமுல்படுத்தலாம் என எதிர்பார்க்கிறேன். இல்லைனா ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாதுன்னு பிஜேபிக்கு தெரியும்
பணமதிப்பை திரும்ப பெற்ற பொழுதே மீண்டும் ஒரு முறை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் பெரு முதலைகள் தற்சமயம் பணத்தை வெளிநாட்டு கரன்சிகளாக பதுக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது
இங்கிலாந்து நாட்டு ஒரு பவுண்டின் மதிப்பு தற்சமயம் 85 ரூபாய். 100 பவுண்ட் வாங்கனும்னா 8500 நம் பணம் கொடுக்க வேண்டும். ஆக இடத்தை குறைத்து வசதியாக பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது தெரிந்தே மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டு அடிப்பதை நிறுத்திக்கொண்டது. பதிலா 200 ரூபாய் நோட்டு அடித்து கொஞ்சம் கொஞ்சமாக 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டிக்கிறது

ஆக மொத்தம் கருப்பு பணத்தை ஒழிப்பேன்,பிடிப்பேன் என சவால் விட்ட மோடிக்கு 25 ஆயிரம் கோடி செலவானது தான் மிச்சம்.
பெட்ரோல் விலையை இவர்கள் தாறுமாறாக ஏற்றிக்கொண்டிருப்பது நம் அன்னிய செலவானி அதிகமாக உள்ளது. உள்நாட்டில் பெட்ரோல் உற்பத்தி செய்வது செலவை குறைக்கும் என மூளை சலவை செய்யவே. அதை பக்தாஸ் ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டார்கள். பெருமளவில் ஹைட்ரோ கார்ப்பன் எடுத்த சோமாலியா போன்ற நாடுகள் என்று பஞ்சத்தில் இருக்கும் உதாரணங்கள் இருந்தும் கேரளாவை சோமாலியா போல் உள்ளது என பொய் பேசும் மொக்கை வாதம் மட்டும் தான் பிஜேபியுடயது

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காமல் இருப்பது, ஆதாருடன் அசையா சொத்துகளை இணைக்காமல் இருப்பது, லோக்பால் சட்டம் கொண்டு வராமல் இருப்பது அனைத்துமே ஊழலுக்கு ஆதரவளிக்கும் செயல் தான். இருந்தும் பிஜேபி ஊழலை ஒழிக்கும் என நம்புவது மந்திரத்தால் மாங்காய் வரவைக்கும் கதை தான்.
அதற்கு தான் மதம் மனிதனை மடையனாக்கும்னு சொல்லி வச்சாங்க

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ரொம்ப சரி இதை எதிர்கட்சிகள் பேசுவதில்லை

!

Blog Widget by LinkWithin