கேள்வி - பதில் (இடதுசாரிகள்)

//Cpi & cpim difference ?? கொள்கை ரீதியாக என்ன என்ன?//

அதிகாரபகிர்வுக்காக பாகம் பிரிந்துக்கொண்ட பங்காளிகள்னு நான் நினைச்சிகிட்டு இருக்கேன். ஏன்னா எனக்கு தெரிந்து பொதுவுடமை சிந்தாத்தத்தில் உனக்கு ஒரு கொள்கை, எனக்கு ஒரு கொள்கைன்னு இருக்க வாய்ப்பில்ல.

கம்யூனிஸம் என்பது உணர்வு, அது மார்க்ஸ்க்கு முன்னாடி இருந்தே இருக்கு. நான், எனது - சுயநலம்.  நாம், நமது -பொதுநலம் = பொதுவுடமை = கம்யூனிஸம் என்று பெயரிட்டுள்ளோம். அப்படி பார்த்தா மனிதம் சிந்தித்த சாக்ரடீஸ், புத்தர், பெரியார், அம்பேத்கார் எல்லாருமே கம்யூனிஸ்டுகள் தான்


கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு உறுப்பினர் சேர்க்கவே மூணு வருசம் பயிற்சி கொடுப்பாங்க. ஆனால் ஏனோ தெரியல கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களை எனக்கு பிடிப்பதில்லை. பேராசிரியர் அருணன் போன்ற தோழர்கள் கூட கம்யூனிஸ நாடுகள் செய்யும் தவறுக்கு முட்டுக்கொடுக்கும் போது எரிச்சலா வரும்.

தமிழகத்தை பொறுத்த வரை இடதுசாரிகள் திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செஞ்சே காலத்தை ஓட்டிட்டாங்க. ஆரம்பகால திராவிட கட்சிகளின் கொள்கைகள் பொதுவுடமை கருத்தியலுக்கு ஒத்து போனதே காரணம். ஆனால் இடதுசாரி தலைவர்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டதை கூட கவனிக்காமல் தமிழகத்தில் அரசியல் செய்த்துள்ளனர்



நல்லவர்களோ, கெட்டவர்களோ/. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் சென்று ஒரு சர்வே நடந்துங்கள். பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  போன்ற திரவிட தலைவர்கள் எத்தனை பேருக்கு தெரியவில்லை என்று பாருங்கள். அவர்களிடமே தோழர் ஜீவா, தோழர் சம்பத், தோழர் நல்லகண்ணு அவ்ளோ ஏன் தோழர் பாலபாரதி கூட சமீபத்திய ஊடக கவனிப்பால் தான் பெரும்பான்மை கவனம் பெறுகிறார்

இடதுசாரிகளின் கொள்கை ஒருங்கிணைந்த தேசியவாதம். இலங்கை போரின் போது தமிழர்களை கொன்றது தவறு ஆனால் போர் அவர்களது உள்நாட்டு பிரச்சனை என்றார்கள். இங்கேயும் சீமானின் தமிழ்தேசியவாதத்தை கடுமையாக எதிர்க்ககாரணம் அவர்களுது ஒருங்கிணைந்த தேசிய கொள்கை தான். நக்ஸல்கள் பொதுவுடமை கருத்தியல் கொண்டிருந்தாலும் இவர்களுடன் முரண்படுவது இந்த இடத்தில் தான்.

இடதுசாரிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். நிறைய படிப்பவர்கள். ஆனால் ஏன் மார்க்ஸின் முதலீட்டை முதலாளித்துவம் என்று மொழிபெயர்க்கிறார்கள் என்பது புரியவில்லை. பொருள்முதல்வாத கருத்தியல் தொடக்கத்தில் இருந்தே ஹோஹெல் கூறீய வினை * எதிர்வினை = விளைவு என்ற தத்துவம் மட்டுமே ஜனநாயக பண்பாக உள்ளது. தேவதையே ஆட்சி புரிந்தாலும் மக்கள் சலிப்புற்று சாத்தானை தேர்தெடுப்பார்கள் என்பது தான் சோசலிச ஜனநாயக சாயம். இப்ப வரைக்கும் இடதுசாரிகளுக்கு இது தெரியாமல் இருப்பது வெட்கக்கேடு



மார்க்ஸ் நிலம் சார்ந்த பொருளாதார கருத்தியல் சிந்தனைகளை தான் முன்வைத்தார். காஷ்மீரில் கம்பளி உற்பத்தி பண்ணு, கேரளாவில் தேங்காய் உற்பத்தி பண்ணு. தஞ்சாவூரில் நெல் உற்பத்தி பண்ணு. அதான் இயற்கை. அது தான் நிலைக்கும். காஷ்மீரில் நெல் உற்பத்தி செய்வது, கேரளாவில் கம்பளி உற்பத்தி செய்வது எப்படி கேனதனமோ அப்படி தான் நெடுவாசம், கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுப்பதும். துரதிர்ஷ்டவசமாக இடதுசாரிகள் ஆரம்பத்தில் அதற்கு ஆதரவு அளித்தார்கள். நியீட்ரினோ திட்டம் வரை இடதுசாரிகள் ஆதரவு அளித்தார்கள். இது தானா இவர்கள் மார்க்ஸை புரிந்துக்கொண்டது. இது தானா அவரது கொள்கைகளை காப்பாற்றுவது


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin