கேள்வி - பதில் 27-09-17 (பொருளாதாரம்)

கேள்வி: இந்தியா சுயசார்பு உள்ள நாடுன்னு சொல்றிங்க, ஆனாலும் 2019 ஆம் ஆண்டு ஒரு பொருளாதார வீழ்ச்சி இந்தியாவுக்கு இருக்குன்னு சொல்றிங்க. வழக்கம் போல பாஜக எதிர்ப்பா?
பதில்:
பாஜகவின் மதவாத கருத்துகளை எதிர்க்க நான் அதிகம் மெனக்கெட தேவையில்ல. கட்சி ஆட்களின் முட்டாள்தனமான அறிக்கைகளே போதுமானது. ஆனாலும் பாஜகவின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்க நிறைய புரிதல் வேண்டும். பொய்யான புள்ளிவிபரங்கள் பத்தாது
கடந்த மூணு வருசமா பாஜக தரும் ஜிடிபி புள்ளிகள் பொய்யானவை. உண்மையில் மூணு வருசமா நாம் வளர வில்லை. மாறாக வீழ்ச்சியடைந்து கொண்டுருக்கிறோம். 1991 ல் இருந்து ஜிடிபி தான் தற்போதைய நிலை
வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்துவேன்னு மோடி சொன்னார். கடந்த மூணு வருடத்தில் அதில் 1% கூட மோடி உருவாக்கவில்லை. மாறாக பணமதிப்பு இழப்பு மூலம் லட்சகணக்கானோர் வேலை இழக்க செய்தார். இப்போதும் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக தான் இருக்கு. குடும்பத்தில் யாரோ ஒருவர் சம்பாத்தியம் உணவுக்கு உதவுது
2014க்கு பிறகு கார்ப்ரேட்கள் பெற்ற வரிசலுகை, மானியம், கடன் தள்ளுபடி போன்ற்வற்றில் அரசுக்கு இழப்பு 8 லட்சம் கோடி. 2009/2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் மொத்த இழப்பு 2 லட்சம் கோடி. நம்மிடம் இருந்து பெறப்படும் வரிகள் மீண்டும் மக்களுக்கே பயன்படாமல் சிவாஜி சிலையாகவும், பட்டேல் சிலையாகும், கார்ப்ரேட் வரிசலுகையாகவும் தான் செல்கிறது
ஒரு பொருள் அப்படியே இருக்கு, ஆனால் நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டே செல்வது. பணம் தன் மதிப்பை இழக்கிறது என அர்த்தம். அதை தான் பணவீக்கம் என்பார்கள். ஜிஎஸ்டி மூலம் சொகுசு கார்களுக்கு வரிகள் குறைந்துள்ளது. அத்தியாவிச்ய பொருள்களுக்கு வரி ஏறியுள்ளது. பணவீக்கம் இருந்தால் பணபுழக்கம் இருக்க வேண்டும் என்பது பொருளாதார விதி. ஆனால் கேஸ்லெஸ் எக்கனாமி என்ற தவறான கொள்கை பணபுழக்கம் இல்லாமல் பொருளாதரத்தை சறித்துக்கொண்டு இருக்கிறது. புது 200 ரூபாய் நோட்டுக்கு அதான் காரணம்

பணபுழக்கம் இல்லாததால் சிறு தொழில்கள் நசித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது, வங்கிகளின் வட்டி வரவு குறைந்துள்ளது. சில வங்கிகள் திவால் ஆகலாம் என எதிர்பார்த்தேன், அதற்குள் வங்கி இணைப்பு வேலை நடந்தது. அது முக்கியமான பொருளாதர கொள்கை தான்.
உங்களுக்கு ஒரு விசயம் தெரியமாட்டிங்குது. விலை ஏறியதை உணராமல் இருக்கிறீக்ர்கள். ஒரு ரூபாய் கொடுத்து அன்னைக்கு வாங்கிய திப்பெட்டியில் 50 குச்சிகள் இருந்தது. இப்பொழுது 40 குச்சிகள் மட்டுமே உள்ளன. பத்து ரூபாய் கொடுத்து வாங்கிய பேஸ்ட் 25 கிராம் இருந்தது. இப்பொழுது 20 தான் உள்ளது. இதெல்லாம் மாசத்துக்கு கணக்கு போட்டா நடத்தர வர்க்கத்துக்கு 3000 ரூபாய் வரை செலவை அதிகபடுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்காக தான் மூளை சலவை செய்யப்படுவதால் இதன் உண்மை நிலையை பேசுபவர்களை பாகிஸ்தான் போ, கடல்ல விழு, ஆண்ட்டி இந்தியன் என விமர்சிக்கிறார்கள். தானும் பாதிக்கபடுகிறோம் என்பதை அறியாத பக்தாஸ்.
ரொம்ப வேண்டாம். 2014 கச்சா எண்ணைய் விலை 160 டாலர். அப்ப பெட்ரோல் விலை 67 ரூபாய். இப்ப கச்சா எண்ணெய் 52 டாலர் ஆனால் பெட்ரோல் விலை 74 ரூபாய். தனியார் விலை நிர்ணயக்கும் முறை வாபஸ் பெறப்படாதுன்னு மத்திய அரசு கை விரித்து விட்டது. உலகில் வடகொரியா, அமெரிக்கா போர் பதட்டம் நிலவிக்கொண்டு இருக்கிறது. இப்ப கச்சா எண்ணைய் விலை 100 டாலருக்கு உயர்ந்தால் நிலமை என்னாகும் என யோசித்து பாருங்கள்.
ஏழ்மையை ஒழிப்பது தான் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி, ஏழைகளை ஒழிப்பது அல்ல. பாஜகவின் எந்த கொள்கைகள் பற்றியும் உங்களுக்கு அக்கறையில்ல. நீங்கள் அவர்கள் அடிமைகளாக இருப்பது இந்து என்ற மாயையில். அதை பயன்படுத்தி மோடியின் பொருளாதார கொள்கை நாட்டை மோசமான நிலைக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது. அதுக்கு நாங்கெல்லாம் விரும்பமில்லாமே வெட்டப்படுகிறோம், நீங்கல்லாம் விரும்பி பலியாகிறிங்க என்பது தான் வருத்தம்

1 வாங்கிகட்டி கொண்டது:

syedabthayar721 said...

அருமையான அலசல் . இத சொன்னா ஆண்டி இந்தியன் அங்கிள் இந்தியன் என்று சொல்லுவானுவ .

மருதநாயகம்

!

Blog Widget by LinkWithin