கடன் வாங்கி கழித்தல்!...

ஜெனரல் மோட்டார்ஸ்க்கும், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்னு பா சதிஷ் கேட்ருக்கார்..
அவர் சொல்றது ஒரு விசயம் சரி. அமெரிக்க வங்கிகள் கடன் அள்ளி கொடுத்ததே பொருளாதார சரிவுக்கு காரணம். ஆனால் அந்த ஆடம்பர போக்கு ஆரம்பம் ஆனது ஜெனரல் மோட்டர்ஸ் போட்ட திட்டத்தால் தான்.

அமெரிக்கா தனி மனித சுதந்திரம் உள்ள நாடு, சீரியல் கில்லராக இருந்தாலும் தம்மு கொடுத்து ஜெயிலுக்குள்ள வசதியெல்லாம் ஒகே தானன்னு கேட்கும் நாடு. இங்கே மாதிரி விசாரனை கைதிகள் மரணமெல்லாம் அங்க நடந்தா கூட்டோட சஸ்பெண்ட் ஆவாங்க

நம்ம நாட்டில் ட்ராக்டருக்கு வாங்கின கடனை அடைக்க முடியலைன்னு வங்கி வாசலில் ஒரு விவசாயி தற்கொலை பண்ணிகிறார். பல கோடி கொடுக்க வேண்டிய மல்லையா இங்கிலாந்தில் கிரிக்கெட் பார்க்கிறார்.


அமெரிக்காவுக்கு ஜெனரல் மோட்டார்ஸ்னா இந்தியாவுக்கு அதானியும், அம்பானியும். ட்ராய்க்குன்னு சில விதிமுறைகள் இருக்கு. ஆனால் ஜியோக்காக இலவச திட்டம் நீட்டிக்கப்பட்டது. அம்பானிக்கு நட்டம் மாதிரி தோணும். தூண்டில் புழுக்கள் ஆபத்துன்னு மீனுக்கு தெரிவதில்லை.
பண மதிப்பு இழப்பிற்கு பிறகு வட்டி குறைக்கப்பட்டு கடன் வழங்குதல் அதிகமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் கடன் வாங்க தயாராக இல்லை. நீங்கள் என்ன வேலை செய்தாலும் நூறு பெரு முதலாளிகளுக்கு தான் சம்பாரித்து கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். அந்த நூறு பேர் தான் அரசை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களாகவே இந்தியா தனியாருக்கு விற்கப்படுகிறது

2 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்....
நிதர்சனம் சொல்லும் பகிர்வு.

Vathiyar Paiyan said...

Illuminati...correct.a annae..

!

Blog Widget by LinkWithin