கேள்வி - பதில் (16.08.17)

//இந்தி எதிர்ப்பு" ஈழப்போராட்டம், ஜல்லிக்கட்டு, இந்த போராட்டங்களில் உங்களை மிகவும் ஈர்த்தது, பாதித்தது, நேர்மையானது எது ஏன்???.. பிரபாகரன் கலைஞர், ஒற்றுமை வேற்றும
//
இந்தி எதிர்ப்பின் போது நான் பொறக்கவேயில்ல
ஈழப்போராட்டம் உணர்வு பூர்வமானது ஆனால் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிக்கொள்ள மடை மாற்றியது போராட்டத்தை நீர்த்துப்போக செய்தது
ஜல்லிகட்டு போராட்டமும் தோல்வி தான். ஏன் ஜல்லிகட்டை ஆதரிக்கிறோம்னு தெரியாமலே நிறைய பேர் வந்து அரசியல் கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்
என் புரிதலில் பேசப்பட வேண்டிய நேர்மையான போராட்டம் நெடுவாசல் போராட்டம். யார் வந்தாலும் வாங்க, வராட்டி போங்கன்னு மக்களே அமர்ந்து போராடியது. ஆனால் அவரை பொறுத்தவரை நெடுவாசல், கதிராமங்கலம் போராட்ட மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள். ஏன்னா ஆட்சி நடத்தது அஹிம்சாவாதி
கருணாநிதி, பிரபாகரன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை. அரசியல் அனுபவமும் இல்லை. கருணாநிதியின் சினிமா மற்றும் இலக்கிய பங்களிப்பு தமிழுக்கு மிக முக்கியமானது. 90க்கு பிறகு அரசியலில் சுயநலம் ஏற்றுகொண்டார் என்பது என் புரிதல். பிரபாகரன் ஒரு தேசியத்தின் தலைவராக பல லட்சம் மக்களால் ஏற்றுக்கொள்ளபட்டவர். இருவர் மீதும் தனிபட்ட முறையில் விமர்சனம் இருந்தாலும் இருவருமே தமிழ் சமூகத்தின் மறுக்கமுடியாத ஆளுமைகள்

****

//காமராஜர் நெஜம்மாவே அவ்வளவு சூப்பரா ஆட்சி பண்ணினாராங்க?//
சூப்பரான்னு தெரியல. ஆனா நேர்மையாக இருந்தார் என்பது உண்மை. பிற மாநிலங்களை விட தமிழகம் கல்வியிலும், தொழிலிலும் முன்னோடியாக இருப்பதற்கு காமராஜர் ஒரு காரணம். ஏழைகளும் படிக்க வர வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை உருவாக்கியது அனைவருக்கும் தெரியும்
ஒரு கம்பெனி தமிழகத்தில் பத்து தொழிற்சாலைகள் அமைக்க விரும்பியது. ஒவ்வொரு கம்பெனியின் செலவிலும் 10% கமிசனாக கிடைக்கும் என சொல்லப்பட்டது. அதற்கு காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா? அந்த பத்து கம்பெனி கமிசனை வச்சு இன்னொரு கம்பெனி ஆரம்பிக்கச்சொல்லு என்றார்
இன்றைய அரசியல்வாதிகளோ தொழில் தொடங்க வரும் கம்பெனிகளிடம் 40% கமிசன் கேட்டு எல்லாரையும் வெளிமாநிலங்களுக்கு துரட்டிக்கொண்டு இருக்கின்றனர்.. அதிலும் குறிப்பாக 2011-2017 தொழில் வளர்ச்சியில் தமிழகம் வரலாறு காணாத மந்தம்



****

//சைகோ தனத்தின் உச்சம் எது?? சைகோகளை எப்படி கண்டுபிடிப்பது..
//
அந்த அளவுக்கு டீப்பா தெரியல‌
என்னை பொறுத்தவரை நமக்கு வலிப்பது போல் பிறருக்கும் வலிக்கும்னு புரியாதவர்கள் எல்லாருமே சைக்கோக்கள் தான்.
என் புரிதலில் ஒருவர் செய்த தப்புக்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் அல்லது வேறு ஒரு தனிநபரை பழிவாங்கும் மனபான்மையை சைக்கோதனம் என்று உணர்கிறேன். யோசித்து பாருங்க, நான் சொல்றது சரின்னு தெரியும்
அதில் உச்சம் பற்றி யோசிக்கவே முடியல

*****

பணத்தை வைத்து சாதியை ஒழிக்க முடியாதா?//
வளர்ந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் பெற்றதால் சாதி ஒழியவில்லை
அவர்கள் பிரிவினைகளை ஒழித்ததால் தான் பொருளாதார முன்னேற்றம் பெற்றார்கள்
சாதி பொருளாதாரத்தையும் தாண்டி மேட்டிமைதனம் பேசுவது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்ததால் மட்டுமே இன்னைக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் சங்கராச்சாரி ஆகிவிட முடியுமா? கோவில் கருவறைக்குள் செல்லமுடியுமா? முற்றிலுமாக சாதி போன்ற பிரிவினைகள் ஒழியும் வரை நாடும் முன்னேறாது, மனிதமும் முன்னேறாது

*****

//சசிகலா தான் வரணும்ன்னு தைரியமா பேசுற சுப்ரமணியசாமிய யாரும் BJP ல கேக்காதது அவங்க இயலாமையா? இல்ல இவரோட ஆளுமையா? இல்ல BJP la எவ்வளவு கருத்து சுதந்திரம்ன்னு பாருங்கன்னு சொல்றதுக்கா//
ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அதுவும் சிறை சென்று திரும்ப பிறகு பொன்னார் சொன்னபொழுது பாஜக எதுவும் கேட்கவில்லை. அதே பொன்னார் இப்போ சசிகலாவுக்கு ஆதரவா பேசினா பதவியே பறிக்கப்படலாம்
பாஜகவில் சுதந்திரம் பார்ப்பனியத்திற்கும், பார்ப்பனியத்தின் ஆதரவாளருக்கு மட்டும் தான்
ஜனாதிபதி வேட்பாளர் தலித் தான் ஆனாலும் நல்லவர் என்றால் என்ன அர்த்தம்
மற்ற தலித்துகள் மேல் என்ன அடையாளம் சுமத்த நினைக்கிறார்கள்
இது தான் பார்பனீயம்
வேறு யாருக்கும் இந்த யோசிக்கக்கூட தோணாது

****

//NEET க்கு எதிரா பேசும்போதே current system la management quota la சாப்ட்ற கல்விதந்தைகள் மறைமுகமா இன்னும் ஒரு 3 வருசம் சம்பாதிக்கட்டும்ன்னு சொல்றோமா?//
நீட் என்பது வரைமுறை படுத்திகிறோம் என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சி, மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு இல்லை என்பது பக்தாஸ்க்கும் தெரியும், ஆனாலும் முட்டு கொடுப்பாங்க‌
கல்வி களவாணிகளை வரைமுறை படுத்த வேண்டிய சட்டம் வேற. அதை சரி செய்யத்தான் நீட் என்பது காய்ச்சல் என்ற வியாதிக்கு சூடு வைக்கும் முட்டாள்தனம். கல்வி களவாணிகள் மட்டுமல்ல. தமிழகத்தில் இயற்கை வளங்கை சுரட்டும், காருண்யா, ஜக்கி மற்றும் தாது மணல் கொள்ளைகள் மீதும் கடுமையான நடவடிக்கை வேண்டும்.
அதை செய்யாத அரசு உண்மையில மக்கள் நலனில் தான் நீட் கொண்டு வந்துருக்குன்னு நம்புறிங்களா/ ஒரு பக்கம் கல்வி களவாணிகளுக்கு ஆதரவளிக்கும் படி இருக்குன்னு சொல்லிட்டு இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கும் களவாணிகளும் கல்வி களவாணிகள் தான். அது ஏன் உங்களுக்கு தெரியல‌

*****

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin