கேள்வி - பதில் (காஷ்மீர்)

தம்பி வால் பையா மூளை இருக்கு ஆனா அது யூஸ் பண்ண உனக்கு விருப்பம் இல்ல செத்த மரத்துக்கு தண்ணி ஊத்துர வாடும் மரத்துக்கும் வெண்ணி ஊத்துர பார்ப்பனன் வெளிய இல்ல உனக்குள் இருக்கான் ஜெய் காளி//

இவரு சொல்றதை நான் என்னான்னு புரிஞ்சிகறது?

மூளை இருக்கு ஆனா யூஸ் இல்ல, ஏன்னா பார்ப்பான் உள்ள இருக்கான்னா இல்ல
பாப்பானுக்கு மூளை வேலை செய்யாதுன்னா..

அதை விடுவோம். மூளை என்பதை நான் அறிவுடன் சம்பந்தபடுத்தி பார்க்கிறோம். மூளை இருக்கான்னு கேட்டா அறிவிருக்கான்னு தான் அர்த்தம். ஆனா அறிவு என்பதை பொதுபுத்தியில் ஞாபகத்துடன் சம்பந்தபடுத்தி வைத்திருக்கிறோம். ஞாபகசக்தியால் ஒருவன் அதிக மதிபெண் பெற்றால் அவனுக்கு அதிக அறிவு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனா அறிவு என்பது அதுவல்ல. எந்த ஒரு விசயத்தையும் அதன் சாத்தியகூறுகள் ஆராய்ந்து அறிவது. நம்பிக்கை என்பது அறிவாகாது. அதுக்கு உங்க ஜெய் காளி ஒரு உதாரணம்.

ஒரு சம்பவம் சொல்றேன்
ஒரு நண்பருடன் காஷ்மீர் பற்றி ஒரு விவாதம் எழுந்தது. காஷ்மீருக்கு ஏன் சிறப்பு சலுகைன்னு. அவருக்கு நான் விளக்கினேன்

1947 சுதந்திரம் பெற்றபோது அன்றைய இந்தியாவில் பிரிட்டீஷ் அரசுக்கு கப்பம் கட்டிகொண்டு சில சிற்றரசர்கள் இருந்தனர். அதில் காஷ்மீரும் ஒன்று. சிற்றரசர்களை இந்தியாவில் இணைக்க சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடன் பேசி மானியம் வழங்குவாத கன்வின்ஸ் பண்ணி இந்தியாவுடன் இணைத்தார். அதனால் தான் அவருக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் கிடைந்தது.

1947ல் காஷ்மீரை ஆண்டுகொண்டிருந்தது ஹரிசிங் என்ற இந்து மன்னர். அவர் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடன் சேராது தன்னிச்சையாக செயல்பட விரும்பினார். ஆனால் சுதந்திரம் பெற்ற அந்த ஆண்டே பாகிஸ்தான் காஷ்மீர் நிலத்தை ஆக்கிரமிக்க போர் தொடத்தது. அதற்கு இந்தியா உதவியானலும் ஹரிசிங் இந்தியாவுடன் இணைக்க விரும்பவில்லை.



நேரு தலைமையில் ஹரிசிங்குடன் நடந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து 1952 ஆம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிறப்பு சலுகை சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக முடிவெடுத்து சட்டமாக இயற்றபட்டது

இதை சொன்னதுக்கு அவர் சொல்றார். நீ வரலாறு தெரியாம பேசுற, அவர்களாக தான் இணைய வந்தார்கள் என்று

ஒரு கம்பெனிக்கு வலிய சென்ற வேலை கேட்பவனுக்கு யாராவது சிறப்பு சலுகை தருவார்களா? தீர்மானம் கோரலாம். சட்டமாக இயற்ற நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும். நேருவா முடிவெடுத்து சிறப்பு சலுகை அளிக்க முடியுமா?

நான் 1947ல பிறக்கவேயில்ல. ஆனாலும் அதிகபட்ச சாத்தியகூறுகள் எதற்கு இருக்கு என்பதை சிந்திப்பது தான் அறிவு. காஷ்மீர் இஸ்லாமிய தேசமாகவும். அங்கே வாழ்வது முழுக்க இஸ்லாமிய மக்களாகவும் நம்பிக்கொண்டிருப்பது மதவாதிகள் உங்க மண்டைய கழுவி செய்யப்பட்ட மூளை சலவை.

ஜெய் காளியும் மூளை சலவை தான் 

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin