கேள்வி - பதில் (கடவுள் நம்பிக்கை)

//பூமி தட்டைன்னு எல்லோரும் நம்பிக்கிட்டு இருந்தபோது விஞ்ஞானிகள் அப்படி இல்லைன்னு 'நிரூபித்துக்' காட்டினாங்க. இப்படி ஒரு கூற்றை மறுத்தவர்கள்தான் ஆதாரம் காட்டியிருக்காங்க. ஆனா கடவுள் விஷயத்துல மட்டும் ஏன் சார் மறுக்கறவங்க நிரூபிக்காம நம்புறவங்கள நிரூபிக்கச் சொல்லுறாங்க?//

அறியாமை வேறு, மூடநம்பிக்கை வேறு
அறியாமையால் பெரிதாக ஆபத்தில், மூடநம்பிக்கை ஆளையே கொல்லும்.
ஆதியில் இயற்கை சீற்றங்களின் காரணம் தெரியாத மனிதன் தனக்கு மேலே எதோ சக்தி இருப்பதாக நம்பினான். அதை வணங்கினால் அது நம்மை துன்புறுத்தாது என நினைத்து வணங்க தொடங்கினான். இந்த மரண பயமே கடவுளின் ஆரம்பம்.

பூமி தட்டை என நம்பியதை நிலவில் விழும் நிழலை வைத்து பூமி உருண்டை என்று நிரூபித்தது அறிவியல். சூரியன், பூமியை சுற்றிவருகிறது என்கிறது மாற்றி பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என நிரூபித்தது அறிவியல், 23.5 டிகிரி சாய்ந்துள்ளதை பருவமாற்றங்கள் மூலம் நிரூபித்தது அறிவியல், நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு அனைத்துக்கும் காரணம் விளக்கி நிரூப்பித்தது அறிவியல்

இன்னும் எத்தனை முறை இல்லாத கடவுளை அறிவியல் கொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல,. சாதி, மத அடிப்படைகள் கூட அது உங்களை பற்றிக்கொண்டிருக்கவில்லை. அதை தான் நீங்கள் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். சாதி,மதம் நமது அடையாளம், அதுவே ஒழுக்கம், அதனால் தான் நாம் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில் உங்கள் மண்டைய கழுவி மூளை செய்யப்பட்டுள்ளீர்கள்.

உலகில் எதோ ஒரு மனிதன் கூட சாதி,மத உணர்வற்று வாழ முடியுமென்றால் சாதியும், மதமும் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசமான ஒன்றல்ல, அது திணிக்கப்பட்டது என்பது தெரியாது. உலகில் யாராவது ஒரே ஒரு மனிதனை பசியில்லாமல் வாழச்சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது ஏனென்றால் அது தான் இயற்கை. நீங்கள் பற்றிக்கொண்டிருப்பதை எல்லாமே நம்பிக்கை மட்டுமே. உண்மையல்ல



பெரியார் கடைசி காலத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார், கருணாநிதி போடும் மஞ்சதுண்டு கடவுள் நம்பிக்கை தான், ரிச்சர்ட் டாக்கின்ஸ் கடவுள் இருக்கலாம் என்று சொன்னார். பரிணாமம் ஏற்றுகொள்வதில் சிக்கல் உள்ளது போன்று மத வியாபாரிகள் கிளப்பிவிடும் பொய்யையும், புரட்டையும், வதந்திகளையும் ஆயுதமாக ஏந்திக்கொண்டு அறிவியலுக்கு எதிராக சண்டையிட்டு கொண்டிருக்கீறீர்கள்.

எதை நிறுவ? உங்கள் மதமே நிறுந்தது, உங்கள் கடவுளே சக்தி வாய்ந்தவர் என காட்டவா?
உண்மையில அது சக்தி வாய்ந்த கடவுளாக இருந்தால் உலகில் இத்தனை கடவுளும், மதமும் உருவாகியிருக்க முடியுமா? உலகில் ஒரே கடவுளும், ஒரே மதமும் மட்டும் இருந்தால் கடவுள் மறுப்பாளன் உருவாகியிருக்க முடியுமா?
இந்த சிம்பிள் லாஜிக்கை கூட யோசிக்க மறுக்கும் நீங்கள் கடவுள் இல்லை என்பதை எங்களை நிரூபிக்கச்சொல்வது எவ்வகையில் நியாயம்?

valpaiyan.Sarahah.com

3 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ஆத்திகர்களால் கடவுள் உண்டுன்னு நிரூபிக்க முடியாததால்தான் ,இல்லைன்னு நிரூபிக்கச் சொல்கிறார்கள் !ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பும் ,கடவுள் இல்லை என்பதை சொல்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை :)

Mohan said...

100% true sir

Admin said...

கடவுள் இருக்கான். நீண்ட நாட்களின்பின் விவாத்தை தொடருவமா நட்பு

!

Blog Widget by LinkWithin