தோல்வியும் கொஞ்சம் வேணுமடி!

5 வயசுல என்னை பெத்தவங்க பிரிஞ்சிட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணதும் சுயமா வாழ ஆரம்பிச்சிட்டேன்.
என் அப்பத்தா என்னை வழந்தாங்கன்னு சொல்லலாம்.
அவங்க மரகடை வச்சிருந்தாங்க.
சிலேட்டில் கூட்டல், பெருக்கல் கணக்கு போட சொல்லிட்டே இருப்பாங்க. என் நுண்ணறிவை வளர்த்தது அது
ரெண்டாவது படிக்கும் போது ஸ்கூலுக்கு கட் அடிச்சேன்னு என் கண்ணை கட்டி ரோட்டில் விட்டப்ப நான் பயப்படாம நடந்திருக்கேன்.
நாலாவது பசுமலை சி எஸ் ஐ ஹாஸ்டலில் படிக்கும் போது அங்க காணிக்கையா வரும் பணத்துட்டு அல்லது திருடிட்டு அப்ப இருந்த ஜெகதா தியேட்டரில் பில்லா பார்த்திருக்கேன். அப்ப தான் முதன் முதலா தம் அடிச்சிருக்கேன்.
எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அப்பாவிடம் இருந்து வந்துருக்கலாம். அஞ்சாவது படிக்கும் போது டீச்சரால் முடியாத புதிரை விடிவிச்சு கொடுத்தேன்.
ஆறிலிருந்து ஈரோடு. எனக்கு புது உலகமாகவே தெரியல. மனிதர்களுடன் முதல் சந்திப்பிலேயே சகஜமாக பழகும் இயல்பு இருந்தது. என் செட் பசங்க எல்லாமே என்னை விட நாலு வயசு மூத்தவர்களாக இருந்தார்கள்.
ஆறாவது படிக்கும் போதே பார்ட் டைம் வேலைக்கு போனேன். தீபாவளிக்கு பட்டாசு கடை போடுவேன். ஏழாவது படிக்கும் போது லெண்டிங் லைப்ரேரி நடத்தினேன்.
நான் சாம்பாரிச்சதை காமிக்ஸில் இருந்து சரோஜா தேவி வரை படித்தேன். ஒன்பாதவதுக்கு மேல் படிக்க பிடிக்காமல் விட்டிட்டேன். இத்தனைக்கும் நான் படிக்கும் வரை ரெண்டாவது ரேங்க் கீழ் வாங்கியதில்லை. கணக்கில் 95 வாங்கினாலே வாத்தியார் என்னடா பிரச்சனைன்னு கேட்பார்.
14 வயசிலயே செக்ஸ்னா என்னான்னு தெரிஞ்சு போச்சு. அதிக தன்னம்பிக்கை காரணமா தெரியல. அப்ப இருந்தே நான் இப்படி தான். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது ரகம்.
தோல்வியா அப்படின்னா எப்படி இருக்கும்னு கேட்கும் மனநிலை தான் அப்பெல்லாம். ஹோட்டல் வச்சு லாஸ் ஆகியும் சென்னையில் 28000 சம்பளத்தில் வேலை பார்த்தேன்.
குடும்பம் பிரிந்த போது கூட அவள் உரிமை, அவள் காதல்ன்னு வெளிய வந்துட்டேன். ஆனா முதல் முறையா தோல்வியை உணர்ந்த சமயம் மறக்க முடியாதது. என் தன்னம்பிக்கையை உடைத்து நொறுக்கியது அந்த ஈகோ
அப்பொழுது முதன் முறையா தோல்வியை பார்த்ததால் கிட்டதட்ட பைத்திய மனநிலைக்கே போயிட்டேன்.
அவ்ளோ பலவீனமா நான் உணர்ந்ததில்லை. திரும்ப உணரவும் விரும்பல
உளவியல் சிறு வயதிலேயே தோல்வியை கற்றுக்கொடுக்க சொல்லுது. என் குழந்தை பெஸ்ட் என நீங்கள் வளர்ப்பது எதேனும் தோல்வியில் பெரும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம்.
சிறு வயதில் நான் என் சூழலையோ, இழுப்புகளையோ தோல்வியா நினைக்கவில்லை அல்லது யாரும் சொல்லி தராமல் போயிருக்கலாம். ஈரோடு வந்ததில் இருந்தே அப்பத்தா நெருக்கமும் இல்லை.
தோல்வியின் வலி மோசமானது. முதன் முறை அனுபவிக்கும் போது கொல்லும். பின் வரும் தோல்விகள் மனதை மரத்து போக செய்யும். என் அனுபவத்தில் பார்த்தேன் அப்படி ஒருத்தியை.
சிலரால் தோல்விகளை கடக்க முடிவது மரத்து போனதால் மட்டுமல்ல. கன்ணிர் வற்றி போனதாலும் இருக்கலாம்.
இன்னும் எத்தனை தூக்கம் தொலைக்கும் நினைவுகளோ!

1 வாங்கிகட்டி கொண்டது:

சீனிவாசன் said...

வாழ்க்கையில் சில மனிதர்களுக்குத்தான் நிறைவான வாழ்க்கை கிடைக்கிறது, பலருக்கு சாதரணமான வாழ்க்கையும், இன்னும் சிலருக்கோ மோசமானதாகவோ அமைந்து விடுகிறது. வாழ்க்கையின் வெற்றி, தோல்வியென்பது அவரவர் அந்த வாழ்க்கையை எப்படி எடுத்துகொள்கின்றனர் என்பதே. கல்வி, விளையாட்டு, வாழ்க்கை, காதல், வேலை என்பதில் நம் தமிழ்ச்சூழலில் ஆக பெரும்பான்மையோருக்கு தோல்விதான்.

உங்கள் வாழ்க்கையை பற்றி மேலோட்டமான சித்திரமே உங்கள் பதிவிலிருந்து கிடைக்கிறது, இருப்பினும் தோல்விகளை ஜீரணித்து அல்லது மறந்துவிட்டு முன்னோக்கி செல்ல வாழ்த்துகிறேன். இன்னும் எவ்வளவோ பாக்க இருக்கு :) .....

!

Blog Widget by LinkWithin