குழந்தைகள் உலகம் முற்றிலும் வேறு, அவர்களுக்கு பக்கம் பக்கமான போதனையோ, சலீப்பூட்டும் வசனங்களோ பிடிப்பதில்லை. ஒரு விசயத்தை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும், குழந்தை பருவத்தை தாண்டி வந்த நான் மட்டும் அதில் விதிவிலக்காக இருப்பேனா என்ன?
பாடபுத்தகம் தவிர்த்து நான் படித்த முதல் புத்தகம் காமிக்ஸ் தான், ஆறாவது படிக்கும் பொழுது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில் கார் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு வேலைக்கு போவேன், தினம் இரண்டு ரூபாய் பேட்டா, வாரம் இருபது ரூபாய் சம்பளம். சுயமாக சம்பாரிக்க ஆரம்பித்ததின் திமிர் என்னை வேறெதிலும் கவனம் செலுத்த வைக்க வில்லை, நான் எனது முதல் வருமானத்தில் வாங்கியது புத்தகங்களே ஆம் காமிக்ஸ் புத்தகங்கள் தான்.
படித்து கொண்டே அதனுடன் சினிமா பார்ப்பது போல் பயணிக்க உதவும் படம் அவ்வயது சிறார், சிறுமிகளுக்கு கிரியேட்டிவ் மைண்ட் வளர நிச்சயம் உதவியாக இருக்கும். தாமாக கற்பனை செய்து கொள்ள நாம் அவ்வயதில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கவில்லை, அவ்வயதில் சரியானது காமிக்ஸ் புத்தகங்களே என்பது என் கருத்து, மேலும் படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய காமிக்ஸ் புத்தகம் தான் இன்று தலையணை அளவு உள்ள புத்தகங்களை பார்த்தும் கூட பயப்படாமல் இருக்க உதவுகிறது.
மனப்பாட செய்யுளை மண்டையில் கொட்டி கொண்டே படித்தாலும் கூட இன்றைய சிறார், சிறுமிகளால் அதை மறுநாள் ஞாபகமாக சொல்ல முடிவதில்லை, அதே சிறார், சிறுமிகள் தொலைகாட்சியில் ஓடும் சினிமா பாடல்களை அதன் கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், காரணம் என்ன என்று என்றேனும் யோசித்ததுண்டா? நமது கல்விமுறை குழந்தைகள் கற்கும் முறைக்கு ஏற்றதாக இல்லை என்பதே சரியான காரணம். இன்று ஸ்மார்க் கிளாஸ் என்று வருட பள்ளி கட்டணத்தில் சேர்த்து வாங்கி கொண்டாலும் பல பள்ளிங்களில் அது வெளியே இருக்கும் போர்டு அளவு தான் இன்றளவும் இருக்கிறது.
இதற்காக நாம் தனிப்பள்ளியா தொடங்கி நடத்த முடியும், ஏன் நம் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை நாமே தூண்டக்கூடாது? குழந்தைகள் உலகத்தை அறிந்து கொள்ள எத்தனை பேர் அந்த உலகத்திற்குள் பயணிக்க தயார உள்ளீர்கள். ஈரோடு மக்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடந்து கொண்டிருக்கும் ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் எண் 78 முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே விற்கும் அரங்கு. ஒருமுறை கூட படிக்காதவர்களால் அதன் பெருமை புரியாது.
லக்கிலுக்
டெக்ஸ் வில்லர்
ஸ்பைடர்
கேப்டன் டைகர்
லார்கோ
டிடெக்டிவ் ராபின்
விங் கமாண்டெர் ஜார்ஜ்
வேய்ன் ஷெல்டன்
டேஞ்சர் டயாபாலிக்
இந்த கதாபாத்திரங்கள் உருவாகி ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கலாம், ஆனாலும் இன்று படிக்கும் பொழுதும் சலிப்பூட்டாது கொண்டு செல்கிறது படக்கதை. புத்தக திருவிழாவின் சிறப்பு தள்ளுபடியாக 23 புத்தகங்கள் கொண்ட தொகுப்பு 200 ரூபாய்க்கு கிடைக்கிறது, புத்தகங்கள் பழையதாக இருக்கலாம், அந்த கால ஓட்டை காலணா இன்று நூறு ரூபாய் தெரியுமா?
நான் வாங்கிய காலத்தில் ராணி காமிக்ஸ் 2 ரூபாய்க்கு கிடைத்தது. லயன், முத்து காமிக்ஸ் ஐந்து ரூபாய்க்கும், சிறப்பு மலர் 20 ரூபாய் வரைக்கும் பெரிய கதைகளுடன் வரும், ஆனால் அப்பொழுது வந்ததெல்லாம் ப்ளாக் அண்ட் ஒயிட் புத்தகங்கள் இன்று புத்தகத்தின் விலை 50, 100 என்று இருந்தாலும் கண்ணை கவரும் வகையில் நல்ல படக்கதைகள் கலரில் வெளியிடப்படுகிறது. இதன் ஒரிஜினல் ஆங்கில வெர்ஷன் புத்தக விலையுடன் (10 டாலர் = 600 ரூபாய்) ஒப்பிடும் பொழுது நிச்சயம் இது பெரிய தொகையில்லை, நமது குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை கூட்ட நாம் அதை கூட செலவு செய்ய தயராக இல்லை என்றால் எப்படி!
ஈரோட்டில் இருக்கும் நண்பர்கள் புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஸ்டாலின்
236/27 முதல் மாடி
டாக்டர் பாரி காம்ப்ளக்ஸ்
காவேரி ரோடு
கருங்கல் பாளையம்
ஈரோடு - 638003
தொடர்பு எண் 0424-2222298
வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கு
லயன் காமிக்ஸ் - சிவகாசி:
தொலைபேசி: 04562 - 262749
மின் அஞ்சல்: lioncomics@yahoo.com

8 வாங்கிகட்டி கொண்டது:
அண்ணே,
நீங்க காமிக்ஸ் படிப்பீங்கன்னு தெரியாம போச்சே?
உங்கள் பதிவில் லயன் காமிக்ஸ் அலுவலக முகவரியை கொடுத்தால் உங்களின் லட்சோப லட்ச ரத்தத்தின் ரத்தங்கள் தெரிந்து கொள்வார்கள் அல்லவா?
இந்தாருங்கள் லயன் காமிக்ஸ் தொடர்பு விவரங்கள்:
லயன் காமிக்ஸ் - சிவகாசி:
தொலைபேசி: 04562 - 262749
மின் அஞ்சல்: lioncomics@yahoo.com
//ஸ்பைடர் மேன்//
இதை ஸ்பைடர் என்று திருத்தி விடுங்களேன்?
காமிக்ஸ்களின் சிறப்புகளைக் உரக்கக் கூறும் இந்த அவசியப் பதிவுக்கு நன்றிகள் பல!
எடிட்டர் வருகைபுரியும் நாளைய தினத்தில்(11th) நீங்களும் வந்தால் மகிழ்வோம்!
மிக்க நன்றி வால்.
மிக்க நன்றி வால்
நல்லதொரு காமிக்ஸ் அறிமுகப் பதிவு!
//ஒருமுறை கூட படிக்காதவர்களால் அதன் பெருமை புரியாது.//
100ல் 1 வார்த்தை!
//படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய காமிக்ஸ் புத்தகம் தான் இன்று தலையணை அளவு உள்ள புத்தகங்களை பார்த்தும் கூட பயப்படாமல் இருக்க உதவுகிறது.//
:) தலையணை சைஸில் இவ்வருடம் ஒரு காமிக்ஸ் கூட வெளியானது - Never Before Special!
ஆன்லைனில் வாங்க விரும்புபவர்களுக்கு!
காமிக்ஸை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே! வெளியூர் நண்பர்கள் காமிக்ஸ் வாங்கவேண்டியது எனது முகவரியில் அல்ல நண்பரே விஸ்வா கூறியது போல சிவகாசி முகவரி, தயவு செய்து மாற்றிவிடுங்கள் :)
சிவகாசி தொடர்பு எண்ணை பதிவில் சேர்ஹ்ட்துட்டேன் விஸ்வா!
நன்றி நண்பர்களே!
Post a Comment