பெரியாருக்கு ஆங்லிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதில் உடன்பாடில்லை, அவர் அதை கறுப்பு தினம் என்றார் என்ற கருத்து இன்று எந்த குழந்தைக்கும் சொல்லி கொடுக்கப்படுவதில்லை, ஒருவேளை சொல்லிக்கொடுக்க பட்டிருந்தால், ஏன் பெரியார் அவ்வாறு சொன்னார் என்று இப்போதிருக்கும் தலைமுறை கொஞ்சமேனும் யோசித்து பார்த்திருக்கும். பெரியார் ஏன் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை? ஏன் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கும்.
1938 ஆம் ஆண்டே குடியரசு இதழில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெறும் தகுதி வந்துவிட்டதா? என எழுதியிருந்தார் பெரியார். அன்று மட்டுமல்ல இன்றும் அதே கேள்வி பலர் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சுதந்திரம் பல தியாங்களுக்கு மத்தியில் பெறப்பட்டது, அதை கொச்சை படுத்தாதீர்கள் என்று சிலர் சொல்கிறார்கள், அவர்கள் தியாகங்களை நினைவு கூறவாவது சுதந்திர தினம் கொண்டாட படவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
போராட்டங்களின் நியாயம் கருதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா? இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் வாங்கிய பேரடி சுதந்திரம் கொடுக்க வைத்ததா? இனி இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல ஒன்றும் இல்லை என்பதால் சுதந்திரம் கிடைத்ததா? என்ற பல கேள்விகள் சுதந்திரம் குறித்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. காந்திவாதிகள் ஒருபக்கம் அஹிம்சை பேசிகொண்டு இந்து ஞானமரபுக்கு உப்புதண்ணி ஊத்தி வளர்க்கிறார்கள், சுபாஸ் சந்திரபோஸ் தான் காரணம் தான் என புரட்சி போராளிகள் கையை உயர்த்திய போஸ்டருடன் நாங்கள்லாம் அப்பவே ராணுவ பயிற்சி எடுத்தவிக என பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
காந்தி செய்தது அரசியல் ரீதியான போராட்டங்கள், இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே இந்தியாவில் பல இந்தியர்கள் தலைமை பதவியில் இருந்துருக்கிறார்கள், தமிழகத்தின் முதல்வராக கூட தமிழர் இருந்திருக்கிறார். ஆகினும் சுதந்திரம் என்பது அன்றைய பொழுதில் மற்ற நாடுகளிடம் நம்மை மார்தட்டிக்கொள்ள பயன்பட்டதால் மிக உறுதியாக இருந்து பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
போஸ் எல்லை பகுதியில் தனி ராணுவம் அமைத்து ஒருபக்கம் அண்டைநாடுகள் துணையுடன் ஆங்கிலேயருக்கு குடைச்சல் கொடுத்து வந்தாலும் உள்நாட்டில் சில போராளிகள் சுதந்திரத்திற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையிலேயே இந்தியாவின் சுதந்திரத்திற்காக காரணமாக வைத்திருந்த கொள்கை யாருக்கும் தெரியவில்லை, வாஞ்சிநாதன் என்ற ஆஷ்துரையை கொன்று தற்கொலை செய்து கொண்ட தியாகி இன்று வரலாற்றில் இருக்கிறார், ஆனால் அவரது கொள்கை........
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
R. வாஞ்சி அய்யர்”
இது வாஞ்சிநாதன் சட்டை பையிலிருந்த கடிதம், பெரியாரும் 1938 ல் கேட்டது இதை தான். பெண்ணடிமையும், தீண்டாமையும் இருக்கும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா என்றார். இன்றளவும் பெண்னடிமை, தீண்டாமை, இரட்டை குவளை, சாதிவெறி, கெளரவகொலை இருக்கும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா? சக மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சில ஜந்துக்கள் வாழும் சமூகத்தில் சுதந்திரம் வாங்கிய நாடு இந்தியா என்று சொல்ல வெட்கமாக இல்லை நமக்கு!

10 வாங்கிகட்டி கொண்டது:
அருமை வாலு
//சக மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சில ஜந்துக்கள்// பல ஜந்துக்கள்னு போடுய்யா.
Arumai Erodu kaararE.
"பெரியாரும் 1938 ல் கேட்டது இதை தான். பெண்ணடிமையும், தீண்டாமையும் இருக்கும் இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா என்றார். "
பெரியாரை பற்றி குறிப்பிட்டபடியால் நான் எனது சந்தேகத்தை கேட்கின்றேன்.
பெண்களுக்கு கற்பு தேவையில்லை கற்பு பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்று வெளியே சொல்லிக் கொண்டு சீதாவின் கற்பை ஐயுற்று சீதா கற்பிழந்தவள் என்று விமர்சனம் செய்த பெரியாரின் முரண்பாடுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ???
சீதைக்கு கற்பு இருக்கின்றதா இல்லையா என்ற பெரியாரின் ஆராய்ச்சி சாதாரண ஆராச்சி அல்ல அருவருக்கத்தக்க ஆராய்ச்சி
"இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல ஒன்றும் இல்லை" என்பதற்கல்ல "இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல விடவில்லை" என்றவொரு காரணமும் உண்டு.
சமூகக் கேடுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் திருத்த வேண்டும் என்பது இலகுவான வாதமாகத் தெரியவில்லை. ஒன்றைத் திருத்தாமல் மற்றொன்று வேண்டாம் என்பது தானே நம்மிடையே உள்ள ஒரே பிரச்சனை
நியாயமான கோபம்...
நியாயமான கோபம்...
ராமாயணம் என்ற ஒன்று உண்மையில் நடந்ததாக நான் நம்பவில்லை. பெரியார் சொல்லிட்டா அப்படியே ஏத்துக்கனும்னு கட்டாயமுமில்லை.
நான் பெரியாரிஸ்ட் அல்ல
பெரியாருக்கு விளக்கம் சொல்வது (டிக்ஸனரிக்கு)’அகராதி”க்கு விளக்கம் சொல்வது போலாகும்.அதில் எல்லா வார்த்தைகளும் இருக்கும்.ஆனால் வாக்கியங்கள் இருக்காது. கம்பராமாயணத்தில் உள்ள வார்த்தைகள் எல்லாம் அகராதியில் இருப்பதால் அகராதி கம்பராமாயணம் ஆகிவிடாது,அல்லது இலக்கியமாகி விடாது.யார் வேண்டுமென்றாலும் அகராதி தயாரிக்கலாம்.
பெரியாருக்கு விளக்கம் சொல்வது (டிக்ஸனரிக்கு)அகராதிக்கு விளக்கம் சொல்வது போலாகும்.அதில் எல்லா வார்த்தைகளும் இருக்கும்.ஆனால் வாக்கியங்கள் இருக்காது. கம்பராமாயணத்தில் உள்ள வார்த்தைகள் எல்லாம் அகராதியில் இருப்பதால் அகராதி கம்பராமாயணம் ஆகிவிடாது,அல்லது இலக்கியமாகி விடாது.யார் வேண்டுமென்றாலும் அகராதி தயாரிக்கலாம்
Post a Comment