எழுத்தாளர் வா.மு.கோமு வின் தந்தை முத்துபெருநன் அவர்கள் எழுதிய கவிதை!
சக்கிலிச்சி காதல்
சந்தையிலே விக்குதா ?
சலிசு வெலைக்குச்
சரஞ் சரமாத் தொங்குதா ?
கனு கனுப்பை பார்த்தா
கை வைக்கத் தோணுதா ?
கீழ் சாதி மேல் சாதி
காத்திலே பறக்குதா ?
கொஞ்சம் பெருசுதான்
கண்ணை உறுத்துதா ?
கொழந்தைக்குத் தாட்டோனும்
புருஷனுக்குக் காட்டோணும்
நட்டறது நாங்க
அறுக்கறது நாங்க
கொண்டு போறோந் தவசம்
பண்ணாடி வீட்டுக்கு
கூலிக்கு மடி விரிச்சா
குடிசைக்குள் இழுப்பதா ?
வெக்கங் கெட்ட ஆம்பளைக்கு
வாழையிலை கேட்குதா ?
சக்கிலிச்சி காதல்
சக்கரையா இனிக்குதா ?
சத்தியமாச் சொல்லறோம்
சாட்டையினி எங்க கையில்
சக்கிலிச்சி காதல்
சந்தையிலே விக்குதா ?
சலிசு வெலைக்குச்
சரஞ் சரமாத் தொங்குதா ?
கனு கனுப்பை பார்த்தா
கை வைக்கத் தோணுதா ?
கீழ் சாதி மேல் சாதி
காத்திலே பறக்குதா ?
கொஞ்சம் பெருசுதான்
கண்ணை உறுத்துதா ?
கொழந்தைக்குத் தாட்டோனும்
புருஷனுக்குக் காட்டோணும்
நட்டறது நாங்க
அறுக்கறது நாங்க
கொண்டு போறோந் தவசம்
பண்ணாடி வீட்டுக்கு
கூலிக்கு மடி விரிச்சா
குடிசைக்குள் இழுப்பதா ?
வெக்கங் கெட்ட ஆம்பளைக்கு
வாழையிலை கேட்குதா ?
சக்கிலிச்சி காதல்
சக்கரையா இனிக்குதா ?
சத்தியமாச் சொல்லறோம்
சாட்டையினி எங்க கையில்
1 வாங்கிகட்டி கொண்டது:
இந்த போட்டோவில் நீல சட்டையில் சால்ட் & பேப்பர் அஜித்துக்கு மீசை வச்ச மாதிரி இருக்கும் அங்கிள் யாருங்க? அவரை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?
Post a Comment